Tuesday, 17 March 2015

பனிரெண்டாம் வகுப்பு சமசீர்க்கல்வி தமிழ் வினா விடைகள்


பனிரெண்டாம் வகுப்பு சமசீர்க்கல்வி தமிழ் வினா விடைகள் 

கடவுள் வாழ்த்து


ஆசிரியர் குறிப்பு:

  • கம்பர் சோழ நாட்டுத் திருவழுந்தூரில் பிறந்தவர்.
  • இவரின் காலம் கி.பி. பனிரெண்டாம் நூற்றாண்டு.
  • கம்பரைத் திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளல் என்பார் ஆதரித்து வந்தார்.
  • “கவிச்சக்ரவர்த்தி” எனப் போற்றப்படுபவர் கம்பர்.
  • “கல்வியில் பெரியவன் கம்பன், கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும், விருத்தமென்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்” என்னும் தொடர்கள் அவர்தம் பெருமையை விளக்குகின்றன.
  • நூல்கள் = சடகோபர் அந்தாதி, ஏரெழுபது, சிலை எழுபது, திருக்கை வழக்கம், சரஸ்வதி அந்தாதி.

நூற் குறிப்பு:

  • வடமொழியில் வான்மீகி முனிவர் இயற்றிய இராமாயணத்தை தழுவி, தமிழில் கவிப் பேரரசர் கம்பர் இயற்றியது கம்பராமாயணம்.
  • கம்பரால் இயற்றப்பட்டதால் “கம்பராமாயணம்” என வழங்கப்படுகின்றது.
  • கம்பர் தம்நூலுக்கு இட்ட பெயர் “இராமாவதாரம்”

சொற்பொருள்:

  • ஒன்றேயென்னின் – ஒன்றே என்று கூறின்
  • நம்பி – இறைவன்

இலக்கணக்குறிப்பு:

  • வாழ்க்கை – தொழிற்பெயர்
  • அம்மா – வியப்பிடைச்சொல்

மொழி வாழ்த்து


நூல் குறிப்பு:

  • தோரமங்கலம் திரு.அ.வரதநஞ்சையப் பிள்ளை இயற்றியது “தமிழரசி குறவஞ்சி”.
  • 96வகை சிற்றிலக்கியங்களுள் குறவஞ்சியும் ஒன்று.
  • தமிழரசி குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவன் = சுவாமிமலை முருகப்பெருமான்.
  • தமிழன்னையையே பாட்டுடைத் தலைவியாக்கி இந்நூல் இயற்றப்பட்டுள்ளது.

ஆசிரியர் குறிப்பு:

  • தமிழரசி குறவஞ்சியை இயற்றியவர் தோரமங்கலம் திரு.அ.வரதநஞ்சையப் பிள்ளை.
  • பெற்றோர் = அப்பசாமிப் பிள்ளை, வரதாயி அம்மையார்.
  • இவர் விரைந்து கவி பாடுவதில் வல்லவர்.
  • கரந்தை தமிழ் சங்கத்தில் “ஆசிரியர்” என்னும் சிறப்புப்பட்டம் பெற்றவர்.
  • “புலவரேறு” எனச் சிறப்பிக்கபடுவார்.
  • கரந்தை தமிழ் சங்கத்தில் நமச்சிவாய முதலியார் தலைமையில் “தங்கத் தோடா” பரிசு பெற்றுள்ளார்.
  • தமிழவேள் உமாமகேசுவரனார் இவரிடம் கேட்டு கொண்டதற்கு இணங்க இந்நூலை இயற்றினார்.
  • இந்நூலை கரந்தை தமிழ் சங்கத்தின் வெள்ளி விழாவின் பொது ஞானியரடிகள் தலைமையில் அரங்கேற்றினர்.

சொல்பொருள்:

  • நண்ணும் – கிட்டிய
  • இசைத்த – பொருந்தச் செய்த
  • வண்ணம் – ஓசை
  • பிறமொழி – வேற்றுமொழி
  • வண்மை – வளமை

இலக்கணக்குறிப்பு:

  • அசைத்த, இசைத்த – பெயரெச்சம்
  • உலகம் – இடவாகுபெயர்
  • திருந்துமொழி – வினைத்தொகை
  • வாழிய – வியங்கோள் வினைமுற்று
  • அடிவாழ்த்துவம் – இரண்டாம் வேற்றுமைத்தொகை
  • வாழ்த்துவம் – தன்மைப் பன்மை வினைமுற்று

நாட்டு வாழ்த்து


நூல் குறிப்பு:

  • “நாமக்கல் கவிஞர் பாடல்கள்” என்னும் நூலில் கவிஞரின் பாடல்கள் பல தொகுக்கப்பட்டுள்ளது.
  • கவிஞர் சத்தியாகிரகத் தொண்டர்கள் பாடுவதற்கென இயற்றிய சில பாடல்கள் “என்னுடைய நாடு” என்னும் தலைப்பில் தேசிய மலரில் இடம் பெற்றுள்ளன.

ஆசிரியர் குறிப்பு:

  • இயற் பெயர் = இராமலிங்கனார்
  • பெற்றோர் = வெங்கடராமன், அம்மணியம்மாள்
  • இவற் முத்தமிழிலும், ஓவியக்கலையிலும் சிறந்தவர்.
  • இவர் தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தார்.
  • தமிழக அரசு இவரை சட்ட மேலவை உறுபினராக நியமித்தது.
  • நடுவண் அரசு இவருக்கு “பத்மபூஷன்” விருது வழங்கி சிறப்பித்துள்ளது.

சொற்பொருள்:

  • வாடின – தளர்ந்த
  • ஓடின – மறைந்தன

இலக்கணக்குறிப்பு:

  • தினந்தினம் – அடுக்குத்தொடர்
  • வந்தவர் – வினையாலணையும் பெயர்
  • போனவர் – வினையாலணையும் பெயர்
  • இல்லாதவர் – எதிர்மறை வினையாலணையும் பெயர்
  • யாரையும் – முற்றும்மை

புறநானூறு


நூல் குறிப்பு;

  • புறம் + நான்கு + நூறு = புறநானூறு
  • இந்நூலை புறப்பாட்டு, புறம் எனவும் அழைப்பர்.
  • நானூறு பாடல்கள் உள்ளன.
  • இதனை தொகுத்தவர், தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை.
  • இந்நூலின் 11 புறத்திணைகளும், 65 துறைகளும் எடுத்தாளப்பட்டுள்ளன.
  • ஜி.யு.போப் இந்நூலின் சில பாடல்களை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.

ஆசிரியர் குறிப்பு:

  • நரிவெரூஉத் தலையார்.
  • இவரால் பாடப்பட்டவன் சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரலிரும் பொறை ஆவான்.
  • இவர் இயற்றிய பாடல்கள் குறுந்தொகையிலும், திருவள்ளுவமாலையிலும் உள்ளன.

சொற்பொருள்:

  • கயன்முள் – மீன்முள்
  • திரைகவுள் – சுருக்கங்களை உடைய கன்னம்
  • கணிச்சி – மழுவாயுதம்
  • திறல் – வலிமை
  • ஒருவன் – எமன்
  • ஆறு – நெறி

இலக்கணக்குறிப்பு:

  • கயன்முள் – ஆறாம் வேற்றுமைத்தொகை
  • திரைகவுள் – வினைத்தொகை
  • கூர்ம்படை – பண்புத்தொகை
  • ஆற்றீர் – முன்னிலை பன்மை எதிர்மறை வினைமுற்று
  • படூஉம் – இசைநிறை அளபெடை

அகநானூறு


நூல் குறிப்பு:

  • அகம் + நான்கு + நூறு = அகநானூறு
  • அடி எல்லை = 13 முதல் 31
  • நானூறு பாடல்கள் உள்ளன.
  • தொகுத்தவர் = மதுரை உப்பூரி குடிகிழார் மகன் உருதிரசன்மனார்
  • தொகுபித்தவர் = பாண்டியன் உக்கிரப் பெருவழுதி
  • வேறுபெயர்கள் = அகம், நெடுந்தொகை
  • இந்நூலில் மூன்று பகுதிகள் உள்ளன.
  • முதல் 120 பாடல்கள், “களிற்றியானை நிறை” எனப்படும்.
  • அடுத்த 180 பாடல்கள், “மணிமிடை பவளம்” எனப்படும்.
  • கடைசி 100 பாடல்கள் “நித்திலக்கோவை” எனப்படும்.
  • 1,3,5 என ஒற்றைப்படை எண்கள் அமைந்த பாடல்கள் = பாலைத்திணை பாடல்கள்
  • 2,8 என வரும் பாடல்கள் = குறிஞ்சித்திணை பாடல்கள்
  • 4,14 என வரும் பாடல்கள் = முல்லைதினைப் பாடல்கள்
  • 6,16 என வரும் பாடல்கள் = மருதத்திணை பாடல்கள்
  • 10,20 என வரும் பாடல்கள் = நெய்தல் திணை பாடல்கள்.

சொற்பொருள்:

  • பசை – ஓட்டும் பசை(ஈரம்)
  • பச்சை – தோல்
  • மாச்சிறைப் பறவை – கரிய சிறகுகள் உடைய வௌவால்
  • முதுமரம் – பழையமரம்
  • முகை – மொட்டு
  • கடிமகள் – மணமகள்
  • கதப்பு – கூந்தல்
  • தண்பதம் – குளிர்பதம்

இலக்கணக்குறிப்பு:

  • உயர்சினை – வினைத்தொகை
  • சிறைப்பறவை – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
  • பகலுறை – ஏழாம் வேற்றுமைத்தொகை
  • முதுமரம் – பண்புத்தொகை
  • கடிமகள் – உரிச்சொற்றொடர்
  • புல்லார் – இரண்டாம் வேற்றுமைத் தொகை
  • வல்விரைந்து – ஒருபொருட்பன்மொழி

நற்றிணை


நூல் குறிப்பு:

  • நன்மை + திணை = நல் + திணை = நற்றிணை
  • எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக அமையப்பெற்றது நற்றிணை.
  • நானூறு பாடல்கள் உள்ளன.
  • அடி எல்லை = 9 முதல் 12
  • இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.
  • தொகுத்தவர் = பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி

ஆசிரியர் குறிப்பு:

  • நக்கண்ணையார் பெண்பாற் புலவர் ஆவார்.
  • இவர் “பெருங்கோழி நாயக்கன் மகள் நக்கண்ணை” என் கூறப்படுபவர்.
  • உறையூர் வீரை வேண்மான் வெளியன் தித்தன் என்னும் சோழ மன்னனின் மகன் போரவைக் கோப்பெருநற்கிள்ளி ஆவான்.
  • அவன் தன் தந்தையோடு பகைத்துக் கொண்டு நாடிழந்து, வறுமையில் புல்லரிசிக் கூழுண்டு வாழ்ந்து வந்தான்.
  • அந்நிலையிலும் ஆமூர் மல்லன் என்பவனை போரில் வெற்றி கொண்டான்.
  • அவன் வீரத்தைக் கண்ட நக்கண்ணையார் அவ்வரசனைத் தாம் மணந்து கொள்ள விரும்பியதாக அவர் பாடிய புறநானூற்று 83,84,85 ஆம் பாடல்கள் மூலம் அறியலாம்.

சொற்பொருள்:

  • இறவு – இறாமீன்
  • முதல் – அடி
  • பிணர் – சருச்சரை(சொர சொரப்பு)
  • தடவு – பெருமை
  • சுறவு – சுறாமீன்
  • கொடு – கொம்பு
  • மருப்பு – தந்தம்
  • உழை – பெண்மான்
  • உரவு – வலிமை

இலக்கணக்குறிப்பு:

  • இறவுப்புறம் – ஆறாம் வேற்றுமைத்தொகை
  • களிற்று மருப்பு – ஆறாம் வேற்றுமைத்தொகை
  • முள்ளிலை – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க்க தொகை
  • நன்மான், நெடுந்தேர் – பண்புத்தொகை
  • செலீஇய – சொல்லிசை அளபெடை

குறுந்தொகை


நூல் குறிப்பு:

  • குறுமை + தொகை = குறுந்தொகை
  • அடி எல்லை = 4 முதல் 8
  • இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.
  • நானூற்றி ஒரு பாடல் உள்ளன.

ஆசிரியர் குறிப்பு:

  • கபிலர் பாண்டி நாட்டிலுள்ள திருவாதவூரில், அந்தணர் மரபில் பிறந்தவர்.
  • கடையெழு வள்ளல்களுள் ஒருவனான பாரியை உயிர்த் தோழராக கொண்டவர்.
  • பாரியின் அவைகளப் புலவராக விளங்கியவர்.
  • இவர் குருஞ்சித் திணை பாடல்கள் பாடுவதில் வல்லவர்.

கபிலரை பற்றிய புகழுரைகள்:

  • நக்கீரர் = வாய்மொழிக் கபிலன்
  • பெருங்குன்றூர்க் கிழார் = நல்லிசைக் கபிலன்
  • பொருந்தில் இளம்பூரனார் = வெறுத்த கேள்வி விளங்கு புகழ் கபிலன்
  • மாறோக்கத்து நப்பசலையார் = புலனழுக்கற்ற அந்தணாளன், பொய்யா நாவிற் கபிலன்

சொற்பொருள்:

  • ஒழுகுநீர் – ஓடுகின்ற நீர்
  • ஆரல் – ஆரல் மீன்
  • குருகு – நாரை

இலக்கணக்குறிப்பு:

  • யாரும் – முற்றும்மை
  • ஒழுகுநீர் – வினைத்தொகை
  • குருகும் – இழிவு சிறப்பும்மை

ஐங்குறுநூறு


நூல் குறிப்பு:

  • ஐந்து + குறுமை + நூறு = ஐங்குறுநூறு
  • அடி எல்லை = 3 முதல் 6
  • ஐநூறு பாடல்கள் உள்ளன.
  • ஒவ்வொரு தினைக்கும் நூறு பாடல்கள் உள்ளன.
  • குருஞ்சித் திணை பாடல்கள் பாடியவர் = கபிலர்
  • முல்லைத் திணை பாடல்கள் பாடியவர் = பேயன்
  • மருதத் திணை பாடல்கள் பாடியவர் = ஓரம்போகி
  • நெய்தல் திணை பாடல்கள் பாடியவர் = அம்மூவன்
  • பாலை திணை பாடல்கள் பாடியவர் = ஓதலாந்தை
  • இந்நூலில் கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.
  • தொகுத்தவர் = புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்
  • தொகுபிதவர் = சேரமான் யானைக் கட்சேய்மாந்தரஞ் சேரலிரும்பொறை

ஆசிரியர் குறிப்பு:

  • ஆந்தையார் என்பது இயற்பெயர்.
  • ஓதலூர் என்னும் ஊர்.
  • ஓதலூர் மேலைக் கடற்கரைக் பகுதியில் குட்டநாட்டில் உள்ளது.
  • ஆந்தை என்பது ஆதன் தந்தை என்பதன் மரூஉ.

சொற்பொருள்:

  • மறு – குற்றம்
  • தூவி – இறகு
  • மரபு – முறைமை
  • ஓதி – கூந்தல்
  • கிளை – சுற்றம்
  • ஊன் – தசை
  • நிணம் – கொழுப்பு
  • வல்சி – உணவு
  • போலாம் – பொன்
  • விறல் – வலிமை

இலக்கணக்குறிப்பு:

  • பச்சூன், பைந்நிணம் – பண்புத்தொகை
  • பொலம்புனை – மூன்றாம் வேற்றுமைத்தொகை
  • புனைகலம் – வினைத்தொகை
  • வேற்காளை – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
  • காளை – உவமையாகுபெயர்

திருக்குறள்


நூல் குறிப்பு:

  • திருக்குறள் என்பது அடையடுத்த கருவியாகுபெயர்
  • இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று பெரும்பிரிவுகளை கொண்டது.
  • அறத்துப்பால் = பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என நான்கு இயல்களும் 38 அதிகாரங்களையும் கொண்டது.
  • பொருட்பால் = அரசியல், அங்கவியல், ஒழிபியல் என் 3 இயல்களும், 70 அதிகாரங்களையும் கொண்டது.
  • இன்பத்துப்பால் = களவியல், கற்பியல் என் 2 இயல்களும், 25அதிகாரங்களையும் உடையது.
  • திருக்குறளின் வேறு பெயர்கள் = முப்பால், பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, உத்தரவேதம், தெய்வநூல், திருவள்ளுவம், தமிழ்மறை, பொதுமறை, திருவள்ளுவப்பயன், பொருளுரை, முதுமொழி.
  • திருவள்ளுவரின் வேறு பெயர்கள் = நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப்புலவர், நான்முகனார், மாதானுபாங்கி, செந்நாப்போதார், பெருநாவலர், பொய்யில் புலவர்.

சொற்பொருள்:

வையகம் – உலகம் நன்றி – நன்மை
தினை – மிகச் சிறிய அளவு பனை – ஒரு பேரளவு
சால்பு – நிறைபண்பு கேண்மை – நட்பு
மாசு – குற்றம் விழுமம் – துன்பம்
அகழ்வாரை – தோண்டுபவரை தலை – சிறந்த அறமாகும்
பொறுத்தல் – மன்னிக்க இன்மை – வறுமை
ஓரால் – நீக்குதல் வன்மை – வலிமை
மடவார் – அறிவிலிகள் பொறை – பொறுத்தல்
விருந்து – புதியராய் வந்தவர் நிறை – சால்பு
பொன்றும் – அழியும் அற்றம் – அழிவு
அரண் – கோட்டை ஓரீஇ – நீக்கி
ஒட்பம் – அறிவுடைமை கூம்பல் – குவிதல்
அதிர – நடுங்கும் படி நோய் – துன்பம்
திட்பம் – வலிமை ஊறு – பழுதுபடும் வினை
ஒரால் – செய்யாமை ஆறு – நெறி
கோள் – துணிபு கொட்க – புலப்படும் படி
வீறு – செய்தல் திண்ணியர் – வலியர்

இலக்கணக்குறிப்பு:

செய்யாமல் – எதிர்மறை வினையெச்சம் செய்த – இறந்தகால பெயரெச்சம்
வையகமும் வானகமும் – எண்ணும்மை தூக்கார் – முற்றெச்சம்
தூக்கின் – எதிர்கால பெயரெச்சம் செயின் – வினையெச்சம்
தெரிவார் – வினையாலணையும் பெயர் சால்பு – பண்புப்பெயர்
மறவற்க – எதிர்மறை வியங்கோள் வினைமுற்று எழுபிறப்பும் – முற்றும்மை
துடைத்தவர் – வினையாலணையும் பெயர் உள்ள – வினையெச்சம்
கொன்றார் - வினையாலணையும் பெயர் அகழ்வார் - வினையாலணையும் பெயர்
பொறுத்தல் – தொழிற்பெயர் விருந்து – பண்பாகு பெயர்
ஒரால், பொறை – தொழிற்பெயர் நீங்காமை – எதிர்மறை தொழிற்பெயர்
போற்றி – வினையெச்சம் ஒருத்தார் - வினையாலணையும் பெயர்
செய்தாரை - வினையாலணையும் பெயர் துறந்தார் - வினையாலணையும் பெயர்
இன்னா சொல் – ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் உண்ணாது – எதிர்மறை வினையாலணையும் பெயர்
அற்றம் – தொழிற்பெயர் ஓரீஇ – சொல்லிசை அளபெடை
உய்ப்பது - வினையாலணையும் பெயர் எண்பொருள் – பண்புத்தொகை
கூம்பல் – தொழிற்பெயர் அறிகல்லாதவர் – வினையாலணையும் பெயர்
அஞ்சுவது - வினையாலணையும் பெயர் அஞ்சல் – தொழிற்பெயர்
அதிர – வினையெச்சம் உடையார் – குறிப்பு வினைமுற்று
மனத்திட்பம் – ஆறாம் வேற்றுமைத்தொகை ஒல்காமை – தொழிற்பெயர்
ஏற்றா – ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் சொல்லுதல் – தொழிற்பெயர்
யார்க்கும் – முற்றும்மை எளிய – குறிப்பு வினைமுற்று
எய்தி – வினையெச்சம் மாண்டார் - வினையாலணையும் பெயர்

சிலப்பதிகாரம்


நூல் குறிப்பு:

  • இக்காப்பியம், “முத்தமிழ்க் காப்பியம், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள், நாடகக் காப்பியம்” என்று பல்வேறு சிறப்புப் பெயர்களால் பாராட்டப்படுகிறது.
  • கண்ணகியின் காற்சிலம்பு காரணமாக வளர்ந்த கதையாதலினால் சிலப்பதிகாரம் எனப் பெயர்பெற்றது.
  • இதுவே தமிழின் முதல் காப்பியம்.
  • புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் என மூன்று காண்டங்களையும், மங்கள வாழ்த்துப் பாடல் முதலாக வரந்தருகாதை ஈறாக முப்பது காதைகளையும் உடையது.
  • நூல் கூறும் மூன்று உண்மை = அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும், உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்துவர், ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்.

ஆசிரியர் குறிப்பு:

  • இந்நூலை இயற்றியவர் இளங்கோவடிகள்
  • பெற்றோர் = இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், நற்சோனை
  • தமையன் = சேரன் செங்குட்டுவன்
  • காலம் கி.பி.இரண்டாம் நூற்றாண்டு
  • இந்நூலுக்கு உரையெழுதிய பழைய உரையாசிரியர்கள் இருவர். ஒருவர் அரும்பதங்களுக்கு மட்டும் உரை எழுதிய அரும்பத உரைகாரர். மற்றொருவர் விளக்கமாக உரை எழுதிய அடியார்க்கு நல்லார்(இவர் உரை முழுவதுமாக கிடைக்கவில்லை)
  • இக்காலத்தே வாழ்ந்த ந.மு.வேங்கடசாமி நாட்டார் உரை நூல் முழுமைக்கும் உள்ளது.

நூல் சிறப்பு:

  • பாரதியார் இந்நூலின் அருமை பெருமைகளை உணர்ந்து, “நெஞ்சையள்ளும் சிலம்பு” எனப் புகழ்ந்துள்ளார்.
  • கவிமணி இந்நூலை, “தேனிலே ஊறிய செந்தமிழின் சுவை தோறும் சிலப்பதிகாரம்” எனப் பாராட்டியுள்ளார்.

சொற்பொருள்:

  • வெய்யோன் – கதிரவன்
  • ஈர்வளை – அறுத்து செய்யப்பட்ட வளையல்
  • இலங்கு – ஒளிருகின்ற
  • தோளி – கண்ணகி
  • முறை – நீதி
  • நிறை – கற்பு
  • படுகாலை – மாலைக்காலம்
  • மாதர் – காதல்
  • மல்லல் – வளம்
  • கொற்றம் – அரசியல்
  • வைவாள் – கூரியவாள்
  • பழுது – உடல்

இலக்கணக்குறிப்பு:

  • ஈர்வளை – வினைத்தொகை
  • கையேந்தி – ஏழாம் வேற்றுமைத்தொகை
  • காற்சிலம்பு – ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
  • நல்லுரை – பண்புத்தொகை
  • தண்குடை – பண்புத்தொகை
  • பொற்சிலம்பு – மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
  • மாமதுரை – உரிச்சொற்றொடர்
  • வைவாள் – உரிச்சொற்றொடர்
  • வளைக்கை – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

கம்பராமாயணம்


நூல் குறிப்பு:

  • கம்பர் தாம் இயற்றிய இந்நூலுக்கு இராமாவதாரம் என்றே பெயரிட்டார். அதுவே கம்பராமாயணம் என்று வழங்கப்படுகிறது.
  • இராம காதைக்கு ஆதிகாவியம் என்றும் அக்காதையை வடமொழியில் இயற்றிய வான்மீகிக்கு ஆதிகவி என்றும் பெயர் உண்டு.
  • கம்பராமாயணம் வழி நூல் எனப்படுகிறது.
  • கம்பரின் இராமாயணத்தைக் கம்ப நாடகம் எனவும் கம்பசித்திரம் எனவும் அழைப்பர்.
  • கம்பரின் யாப்பு வண்ணங்கள் நூல் முழுவதும் மிளிர்கிறது. “வரமிகு கம்பன் சொன்ன வண்ணமும் தொண்ணுற்றாறே” என்று ஒரு கணக்கீடும் உள்ளது.
  • தமிழ் இலக்கியத்தில் தொடங்கிய காப்பிய வளர்ச்சி கம்பர் படைப்பில் உச்ச நிலையை அடைந்தது.
  • கம்பராமாயணம் 6 காண்டங்களை உடையது. அவை பாலகாண்டம், அயோத்தியாகாண்டம், ஆரண்யகாண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தரகாண்டம், யுத்தகாண்டம்.
  • ஏழாவது காண்டமாகிய உத்தர காண்டம் ஒட்டக்க்கூத்தர் எழுதினார்.

சுந்தரகாண்டம்:

  • இக்காண்டாமே “காப்பியத்தின் மணிமகுடமாக” விளங்குகிறது.
  • சிறிய திருவடி = அனுமன்
  • அனுமனுக்கு “சுந்தரன்” என்னும் பெயரும் உண்டு.
  • இராமனின் அடையாளமாக சீதையிடம் அனுமன் கொடுத்தது = கணையாழி
  • சீதை அனுமனிடம் கொடுத்தது = சூடாமணி

சொற்பொருள்:

கழல் – திருவடி முளரி – தாமரை
தையல் – திருமகளாகிய சீதாப்பிராட்டி இறைஞ்சி – வணங்கி
திண்டிறல் – பேராற்றல் மிக்க இராமன் ஓதி – கூந்தல்
மற்று – மேலும் துறத்தி – கைவிடுக
திரை – அலை மருகி – மருமகள்
தனயை – மகள் தடந்தோள் – அகன்ற தோள்
உம்பி – உன் தம்பி வேலை – கடல்
கனகம் – பொன் சாலை – பர்ணசாலை
அலங்கல் – மாலை கோரல் – கொல்லுதல்
திருக்கம் – வஞ்சனை முறிவு – வேறுபாடு
வீங்கினள் – பூரித்தாள் ஆழி – மோதிரம்
தோகை – மயில் மாமணிக்கரசு – சூடாமணி

இலக்கணக்குறிப்பு:

மொய்கழல் – வினைத்தொகை கழல் – தானியாகு பெயர்
தழீஇ – சொல்லிசை அளபெடை தெண்டிரை – பண்புத்தொகை
அலைகடல் – வினைத்தொகை துறத்தி – ஏவல் வினைமுற்று
தடந்தோள் – உரிச்சொற்றொடர் பெருந்தவம் – பண்புத்தொகை
இற்பிறப்பு – ஏழாம் வேற்றுமைத்தொகை களிநடம் – வினைத்தொகை
கண்ணின் நீர்க்கடல் – உருவகம் கோறல் – தொழிற்பெயர்
ஆருயிர் – பண்புத்தொகை பொன்னடி – உவமத்தொகை
பேர்அடையாளம் – உம்மைத்தொகை மலரடி – உவமத்தொகை
மாமணி – உரிச்சொற்றொடர் கைத்தலம் – இருபெயரொட்டுப் பண்புத்தொகை

தேம்பாவணி


நூல் குறிப்பு;

  • வீரமாமுனிவர் இயற்றியது தேம்பாவணி.
  • இந்நூலில் மூன்று காண்டங்கள், முப்பத்தாறு படலங்கள், 3615 பாடல்கள் உள்ளன.
  • தேம்பா + அணி = தேம்பாவணி. வாடாத மாலை எனப் பொருள்.
  • தேன் + பா + அணி = தேம்பாவணி. தேன் போன்ற பாக்களை அணியாக உடைய நூல் எனப் பொருள் கொள்வர்.
  • நூலின் தலைவன் = இயேசு பெருமானின் வளர்ப்புத் தந்தை சூசை மாமுனிவர்.
  • இந்நூலை “கிறித்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம்” என்பர்.

வீரமாமுனிவர்:

  • இயற் பெயர் = கொன்ஸ்டான் ஜோசப்பெஸ்கி
  • கொன்ஸ்டான் என்னும் இத்தாலி மொழி சொல்லுக்கு அஞ்சாமை எனப் பொருள்.
  • இவர் தம் பெயரை “தைரியநாதசாமி” என மாற்றிக்கொண்டார்.
  • தமிழ்ச் சான்றோர் இவரை “வீரமாமுனிவர்” என அழைத்தனர்.
  • 1710ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு வந்த இப்பெரியார் 37 ஆண்டுகள் சமயப் பணியும் தமிழ்ப்பணியும் புரிந்து 1747ஆம் ஆண்டில் அம்பலக்காடு என்னும் இடத்தில இயற்கை எய்தினார்.
  • படைப்புகள் = திருக்காவலூர் கலம்பகம், கித்தேரியம்மாள் அம்மானை, வேதியர் ஒழுக்கம், பரமார்ர்த்த குரு கதை, செந்தமிழ் இலக்கணம், கொடுந்தமிழ் இலக்கணம், தொன்னூல் விளக்கம், சதுரகராதி போன்ற பல நூல்களை இயற்றியுள்ளார்.
  • திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் இரண்டையும் இலத்தீன் மொழியில் மொழி பெயர்த்துள்ளார்.

வளன் செனித்த படலம்:

  • காப்பியத் தலைவனான வளன் என்னும் சூசை மாமுனிவர் தாவீது மன்னனின் அரச மரபில் தோன்றிய வரலாற்றை கூறுவதே வளன் செனித்த படலம் ஆகும்.
  • யோசேப்பு என்றும் சூசை என்றும் ஒலிபெயர்க்கப்பட்ட ஜோசப் என்னும் பெயரை வீரமாமுனிவர் வளன் என்று தமிழ்ப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
  • வளங்களை வளரச் செய்பவன் என்னும் பொருளுடைய எபிரேய மொழியில் சூசை என்னும் பெயர் வழங்கி வருகிறது.
  • அதன் நேரிய மொழி பெயர்பே தமிழில் வளன் ஆகும்.

கதை சுருக்கம்:

  • யூதேயா நாட்டு மன்னன் சவுல்.
  • பிலித்தையர் என்பார் திருமறையை பழித்தும் கடுவுளை இகழ்ந்தும் வந்தனர்.
  • அரக்கன் கோலியாத் இச்ரேயால் மக்களை இகழ்ந்து, அவர்களுள் ஒருவனை போருக்கு அழைத்தான்.
  • தாவீதன் என்னும் சிறுவன் அவனிடம் போர் புரிந்து அவனை கொன்றான்.

சொற்பொருள்:

மாலி – சூரியன் ஆலி – மலை நீர்
கரிந்து – கருகி புடை – இடையின் ஒருபக்கம்
வியன்வட்டம் – அகன்ற கேடயம் கீண்டு – கிழித்து
கிளர்ப – நிறைய தொழும்பர் – அடிமைகள்
ஓகையால் – களிப்பினால் வெருவி – அஞ்சி
கதத்த – சினமிக்க கல்நெடுங்குவடு – மலைச்சிகரம்
நிரூபன் – அரசன் விளி – சாவு
கைவயம் – தோள்வலிமை மெய்வயம் – உடல் வலிமை
ஐஞ்சிலை – ஐந்து கற்கள் ஓதை – ஓசை
மருகி – சுழன்று மிடல் – வலிமை
செல் – மேகம் நுதல் – நெற்றி
உருமு – இடி மருங்கு – இடுப்பு
சிரம் – தலை அசனி – இடி

இலக்கணக்குறிப்பு:

கதுவிடா – ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் அகல்முகில் – வினைத்தொகை
கருமுகில் – பண்புத்தொகை கூடினர் – வினையாலணையும் பெயர்
கதத்த – குறிப்பு பெயரெச்சம் கேட்டனர் – வினையாலணையும் பெயர்
தொடர்ந்தனன் நகைப்பான் – முற்றெச்சம் அஞ்சினர் - வினையாலணையும் பெயர்
கேட்ட வாசகம் – பெயரெச்சம் கைவயம் – ஆறாம் வேற்றுமைத் தொகை
அறிய ஆண்மை – குறிப்புப் பெயரெச்சம் இருந்த பாலன் – பெயரெச்சம்
கருமுகில் – பண்புத்தொகை வைவேல் – உரிச்சொற்றொடர்
காண்கிலர் – எதிர்மறை வினைமுற்று நாமவேல் – உரிச்சொற்றொடர்

பாண்டியன் பரிசு


ஆசிரியர் குறிப்பு:

  • பாவேந்தர் பாரதிதாசன் புதுவையில் பிறந்தவர்.
  • இயற்பெயர் = சுப்புரத்தினம்
  • பெற்றோர் = கனகசபை, இலக்குமியம்மாள்
  • தமிழாசிரியராக பணிபுரிந்தவர்.
  • இவர் புரட்சிக் கவிஞர் என்றும், தமிழ்நாட்டு இரசூல் கம்சதேவ் என்றும் அழைக்கப்படுபவர்.
  • இவரின் பிசிராந்தையார் நாடகம் சாகித்ய அகாடமி பரிசு பெற்றது.
  • இவரின் “வாழ்வினில் செம்மையை செய்பவள் நீயே” என்னும் பாடல் தற்பொழுது புதுவை அரசின் தமிழ் தாய் வாழ்த்தாக உள்ளது.

கதை:

  • கதிர் நாட்டு மன்னன் கதிரைவேலன்.
  • அவன் மனைவி கண்ணுக்கிணியாள், இவர்களின் ஒரே மகள் அன்னம்.
  • கண்ணுக்கிணியாள் அண்ணனும் படைத்தளபதியும் ஆன நரிக்கண்ணன் சூழ்ச்சியால் நிகழ்ந்த வேழ நாட்டு படையெடுப்பில் அரசனும் அரசியும் இறந்தனர்.
  • பாண்டிய மன்னன் பரிசாக வழங்கிய உடைவாளும் மணிமுடியும் கொள்ளை அடிக்க விரும்பினான் நரிக்கண்ணன்.
  • பேழையை தவறுதலாக வீரப்பனிடம் கொடுத்துவிடுகிறான் நரிக்கண்ணன்.
  • பேழையை கொண்டு வந்து தருபவர்களுக்கு அன்னம் மாலையிடுவாள் என் அறிவிக்கப்பட்டது.
  • அரசியின் தோழி ஆத்தாக்கிழவி. இவள் அன்னத்தின் செவிலித்தாய்.
  • ஆத்தாக்கிழவியின் மகன் வேலன்.
  • ஆத்தாக்கிழவியின் கணவன் வீரப்பன்.
  • அன்னத்தின் தோழி நீலி

சொற்பொருள்:

  • மின் – மின்னல்
  • குறடு – அரண்மனை முற்றம்
  • பதடி – பதர்
  • பேழை – பெட்டி

இலக்கணக்குறிப்பு:

  • என்மகள் – நான்காம் வேற்றுமைத்தொகை
  • காத்தார் – வினையாலணையும் பெயர்
  • விலகாத – எதிர்மறை பெயரெச்சம்
  • ஈன்ற தந்தை – பெயரெச்சம்
  • இழந்த பரிசு – பெயரெச்சம்

சிற்றிலக்கியங்கள்

சிற்றிலக்கியம்:

  • பிரபந்தம் என்ற வடசொல்லுக்கு “நன்கு கட்டப்பட்டது” என்பது பொருள்.
  • சிற்றிலக்கியங்களின் இலக்கணம் கூறுவது பாட்டியல் நூல்கள்.
  • பாட்டியல் நூல்களுள் வச்சணந்திமாலை குறிப்பிட்ட நூலாகும்.
  • வீரமாமுனிவர் இயற்றிய சதுரகராதியில் பிரபந்தம் 96 வகை எனக் கூறப்பட்டுள்ளது.

இராசராச சோழன் உலா


உலா:

  • உலா என்பது சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று.
  • உலா என்பதற்கு “பவனி வருதல்” என்பது பொருள்.
  • தலைவன் வீதியில் உலா வர அவனைப் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்னும் ஏழு வகைப் பருவ மகளிரும் காதல் கொள்வதாக அமைத்து பாடுவது உலா ஆகும்.
  • இது கலிவென்பாவால் இயற்றப்படும்.
  • இதில் பாட்டுடைத் தலைவனின் சிறப்பு, நீராடல், ஒப்பனை செய்தல், பரிவாரங்கள் புடைசூழத் தன் ஊர்தியில் ஏறி வரல் ஆகியவற்றை உலாவின் முன்னிலை என்பர்.
  • உலாவரும் தலைவனைக் கண்டு காதல் கொண்ட ஏழு பருவ மகளிர் தனித்தனியாக கூறுவன உலாவின் பின்னிலை எனப்படும்.
  • ஏழு பருவப் பெண்களின் வயது = பேதை(5-7), பெதும்பை(8-11), மங்கை(12-13), மடந்தை(14-19), அரிவை(20-25), தெரிவை(26-32), பேரிளம்பெண்(33-40).

ஒட்டக்கூத்தர்:

  • இராசராசசோழன் உலாவை பாடியவர் ஒட்டக்கூத்தர்.
  • இவர், “கவிச்சக்ரவர்த்தி, கவிராட்சசன்” என்றெல்லாம் புகழப்படுவார்.
  • இவர், விக்ரமசோழன், இரண்டாம் குலோத்துங்கச் சோழன், இரண்டாம் ராசராசன் ஆகிய மூன்று மன்னர்களின் அவையிலும் செல்வாக்கோடு இருந்தவர்.
  • இம்மூவரைப் பற்றி ஒட்டக்க்கூத்தர் பாடியதே, “மூவருலா”
  • இவரின் இயற் பெயர் = கூத்தர்
  • ஓட்டம்(பந்தயம்) வைத்துப் பாடுவதில் வல்லவர் ஆதலால் இவர் ஒட்டக்க்கூத்தர் எனப்பட்டார்.

சொற்பொருள்:

சூளிகை – நிலாமுற்றம் சாளரம் – பலகணி
தெற்றி – திண்ணை பாங்கரும் – பக்கத்தில் உள்ள இடங்கள்
பிணங்கி – நெருங்கி மறுகு – தெரு
கோடி – வளைந்து சதகோடி – நூறுகோடி
மகோததி – கடல் உதியர் – சேரர்
சரதம் – வாய்மை பவித்ரம் – தூய்மை
மூவெழுகால் – 21 தலைமுறை அவனி – நாடு
பெருமாள் – அரசர் கூடல் – காவிரிப்பூம்பட்டினம்

இலக்கணக்குறிப்பு:

வாயிலும் மாளிகையும் – எண்ணும்மை எம்மருங்கும் – முற்றும்மை
மாடமும் ஆடரங்கும் – எண்ணும்மை செய்குன்று – வினைத்தொகை
ஆடரங்கு – வினைத்தொகை சுற்றிய பாங்கர் – பெயரெச்சம்
மயங்கி, வணங்கி – வினையெச்சம் செற்ற சிலை – பெயரெச்சம்
காணீர் – ஏவல் வினைமுற்று விட்டவள் – பெயரெச்சம்
மதயெறிது - இரண்டாம் வேற்றுமைத்தொகை முத்து முரசம் – பண்புத்தொகை
ஓங்கியுயர் – ஒருபொருட்பன்மொழி உயரண்டம் – வினைத்தொகை

திருவேங்கடத்தந்தாதி


அந்தாதி:

  • அந்தாதி 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
  • அந்தம் = இறுதி, ஆதி = முதல்
  • ஒவ்வொரு பாடலிலும் உள்ள இறுதி எழுத்தோ, அசையா, சீரோ அடியோ அதற்கு அடுத்து வரும் பாடலின் முதலாக வரும்படி அமைத்துப் பாடுவது அந்தாதி எனப்படும்.
  • இதனை “சொற்றொடர்நிலை” எனவும் கூறுவர்.

பிள்ளை பெருமாள் ஐயங்கார்:

  • இவர், “அழகிய மணவாளதாசர், திவ்வியக்கவி” எனவும் அழைக்கப்படுவார்.
  • இவர் இயற்றிய எட்டு நூல்களின் தொகுதியை “அஷ்டப்பிரபந்தம்” என்று அழைப்பர்.
  • “அஷ்டப்பிரபந்தம் கற்றவன் அரைப் பண்டிதன்” என்னும் பழமொழி இந்நூலின் உயர்வைப் வெளிப்படுத்தும்.
  • இவர் 1623 முதல் 1659 வரை மதுரையை ஆண்ட திருமலை நாயக்க மன்னரின் அவையில் ஓர் அலுவலராய் அமர்ந்து வாழ்க்கை நடத்தி வந்தார்.

சொற்பொருள்:

  • கழல் – திருவடி
  • பத்தி – ஊர்
  • குஞ்சி – தலைமயிர்
  • போதன் – பிரமன்
  • வாசவன் – இந்திரன்
  • அந்தி – மாலை
  • வேலை – கடல்
  • இருக்கு ஆரணம் – இருக்கு வேதம்
  • கஞ்சம் – தாமரை மலர்
  • அணங்கு – திருமகள்
  • பொழில் – சோலை

இலக்கணக்குறிப்பு:

  • சிற்றன்னை – பண்புத்தொகை
  • தாழ்பிறப்பு – வினைத்தொகை
  • மால் கழல் – ஆறாம் வேற்றுமைத்தொகை
  • கழல் – தானியாகு பெயர்
  • அந்தி காளை – உம்மைத்தொகை
  • வேங்கடம் – வினைத்தொகை
  • மதிவிளக்கு – உருவகம்
  • சேவடி – பண்புத்தொகை
  • இருக்கு ஆரணம் – இருபெயரொட்டுப் பண்புத்தொகை
  • நற்றாய் – பண்புத்தொகை

மதுரைக் கலம்பகம்


கலம்பகம்:

  • பலவகை உறுப்பும் பலவகைப் பாவும் பாவினங்களும் பலவகைப் பொருளும் கலந்து செய்யப்பெறும் சிற்றிலக்கிய வகையை கலம்பகம் என்பர்.
  • கதம்பம் என்பது கலம்பகம் எனத் திரிந்ததாக உ.வே.சா கூறுவார்.
  • கலம்பகம் 18 உறுப்புகளை உடையது.
  • தமிழின் முதல் கலம்பகம் = நந்திக் கலம்பகம்

குமரகுருபரர்:

  • இவரின் காலம் பதினேழாம் நூற்றாண்டு.
  • பிறந்தது முதல் ஐந்தாண்டு வரை பேசாத குழந்தையாக இருந்த இவர் பின்னர் திருச்செந்தூர் முருகப் பெருமானின் அருளால் பேசினார்.
  • படைப்புகள் = மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், கந்தர்கலிவெண்பா, காசிக்கலம்பகம், முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் போன்ற பல நூல்களை இயற்றி உள்ளார்.
  • இவரது செய்யுட்களின் தனிச்சிறப்பு அவற்றின் “இன்னோசை” ஆகும்.

சொற்பொருள்:

  • ஏமவெற்பு – மேருமலை
  • ஏமம் – பொன்
  • மலயாசலம் – பொதிகை மலை

இலக்கணக்குறிப்பு:

  • கயிலாய வெற்பு – இருபெயரொட்டுப் பண்புத்தொகை
  • அசலம் – காரணப்பெயர்
  • முச்சங்கம் – பண்புத்தொகை
  • வளர்கூடல் – வினைத்தொகை
  • மதிப்பிஞ்சு – ஆறாம் வேற்றுமைத்தொகை
  • இரைதேர் – இரண்டாம் வேற்றுமைத்தொகை

முக்கூடற்பள்ளு


பள்ளு:

  • “பள்” என்பது பள்ளமான நன்செய் நிலங்களையும் அங்குச் செய்யப்படும் உழவினையும் குறிக்கும்.
  • பள்ளு 96 வகை சிற்றிலக்கிய வகையுள் ஒன்று.
  • தொல்காப்பியர் குறிப்பிடும் எட்டு வகைப்பிரிவில் ஒன்றான “புலன்” என்னும் இலக்கிய வகை “பள்ளு வகை” இலக்கியத்திற்கு பொருந்தும்.

முக்கூடற்பள்ளு:

  • திருநெல்வேலிக்குச் சிறிது வடகிழக்கில் தண்பொருநை, சிற்றாறு, கோதண்டராம ஆறு ஆகிய மூன்று ஆறுகளும் கலக்கும் இடத்திற்கு வடக்கே உள்ள சிற்றூர் முக்கூடல்.
  • அங்குள்ள இறைவனாகிய அழகர் மீது பாடப்பட்டது இந்நூல்.
  • சைவ வைணவங்களை ஒருங்கிணைக்கும் இலட்சியங் கொண்ட நூல், “முக்கூடற்பள்ளு” ஆகும்.
  • இந்நூலை இயற்றியவர் பெயர் தெரியவில்லை.
  • இது சிந்தும் விருத்தமும் பரவிவர பாடப்பெறும்.

இலக்கணக்குறிப்பு:

  • வெண்தயிர் – பண்புத்தொகை
  • காய, மாய – பெயரெச்சம்
  • நாழிகை வாரம் – உம்மைத்தொகை
  • தாபதர் உள்ளம் – ஆறாம் வேற்றுமைத்தொகை
  • செந்நெல் – பண்புத்தொகை
  • சுழி வெள்ளம் – வினைத்தொகை

மறுமலர்ச்சிப் பாடல்கள் - மாலைக்கால வருணனை

z

நூல் குறிப்பு:

  • வடமொழியில், வியாசர் இயற்றிய மகாபாரததக் கதையில் வரும் பாஞ்சாலி, துரியோதனன் சபையில் செய்த சூளுரையை மையமாகக் கொண்டு, பாரதியார் இக்குறுங்காவியத்தைப் படைத்தார்.
  • பாஞ்சாலிசபதம் என்னும் இந்நூலில் அழைப்புச் சருக்கம் ,சூதாட்டச் சருக்கம், அடிமைச் சுருக்கம், துகிலுரிதற்சருக்கம், சபதச் சருக்கம் ஆகிய ஐந்து சருக்கங்கள் உள்ளன.

பாரதியார்:

  • இவர் 1882ஆம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் 11ஆம் நாள் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பிறந்தார்.
  • பெற்றோர் = சின்னசாமி, இலக்குமி அம்மையார்.
  • இளமையிலேய கலைமகள் என்னும் பொருள் தரும்,”பாரதி” என்னும் பட்டதை பெற்றார்.
  • இவர் இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்.
  • இவரின் முப்பெரும் படைப்புகள் = கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு.

சொற்பொருள்:

  • பரிதி – சூரியன்
  • வண்ணம் – அழகு
  • முகில் – மேகம்
  • பொய்கை – நீர்நிலை
  • இருட்கடல் – நீலக்கடல்
  • களஞ்சியம் – தொகுப்பு

இலக்கணக்குறிப்பு;

  • படர்முகில் – வினைத்தொகை
  • செழும்பொன் – பண்புத்தொகை
  • தங்கத்தீவு – உருவகம்
  • பொற்கரை – உருவகம்
  • சுடரொளி – வினைத்தொகை

புத்தக சாலை


ஆசிரியர் குறிப்பு:

  • பாரதிதாசன் புதுவையில் 1891ஆம் ஆண்டு பிறந்தார்.
  • பெற்றோர் = கனகசபை, இலக்குமி அம்மாள்
  • இயற்பெயர் = சுப்புரத்தினம்
  • படைப்புகள் = குடும்ப விளக்கு, இருண்ட வீடு, தமிழியக்கம், பாண்டியன் பரிசு, இசையமுது, அழகின் சிரிப்பு, கண்ணகி புரட்சிக் காப்பியம், பிசிராந்தையார் போன்ற பல நூல்களை படைத்துள்ளார்.

சொற்பொருள்:

  • மனோபாவம் – உளப்பாங்கு
  • சகமக்கள் – உடன் வாழும் மக்கள்
  • ஒன்று – ஓரினம்
  • இலகுவது – விளங்குவது
  • சுவடி – நூல்
  • சுவடிச்சாலை – நூலகம்
  • சர்வகலாசாலை – பல்கலைக்கழகம்

இலக்கணக்குறிப்பு;

  • அன்புநெறி – இருபெயரொட்டு பண்புத்தொகை
  • உயர்எண்ணம் – வினைத்தொகை
  • செந்தமிழ் – பண்புத்தொகை
  • தருதல், வைத்தல் – தொழிற்பெயர்

காடு


ஆசிரியர் குறிப்பு;

  • வாணிதாசன் புதுவையை அடுத்த வில்லியனூரில் பிறந்தவர்.
  • பெற்றோர் = அரங்க திருக்காமு, துளசியம்மாள்
  • இயற்பெயர் = அரங்கசாமி என்ற எத்திராசலு
  • இவர் பாவேந்தர் பாரதிதாசனிடம் தொடக்கக்கல்வி பயின்றவர்.
  • இவரின் பாடல்கள் சாகித்திய அகாதெமி வெளியிட்ட “தமிழ்க் கவிதைக் களஞ்சியம்” என்ற நூலிலும், தென்மொழிகள் புத்தக வெளியீட்டுக் கழகம் வெளியிட்ட “புதுதமிழ்க் கவிமலர்கள்” என்ற நூலிலும் மற்றும் பற்பல தொகுப்பு நூல்களிலும் இடம் பெற்றுள்ளன.
  • இவர், “தமிழ்-பிரெஞ்ச் கையகர முதலி” என்ற நூலை வெளியிட்டார்.
  • பிரெஞ்ச் குடியரசு தலைவர் இவருக்கு “செவாலியர்” என்ற விருதினை வழங்கி உள்ளார்.
  • இவர், “கவிஞரேறு, பாவலர் மணி, தமிழகத்தின் வோர்ட்ஸ்வொர்த்” என்று அழைக்கப்படுவார்.

சொற்பொருள்:

  • வெய்யோன் – கதிரவன்
  • புரையோடி – உள்ளுக்குள் அரிக்கப்பட்டு
  • முதல் – வேர்
  • செல் – ஒருவகை கரையான்
  • சோங்கி – வாட்டமுற்று

சிக்கனம்


ஆசிரியர் குறிப்பு;

  • இவமை கவிஞர் எனப்போற்றப்படுபவர் கவிஞர் சுரதா
  • இவர் திருவாரூர் மாவட்டம் பழையனூரில் பிறந்தவர்.
  • இயற்பெயர் = இராசகோபாலன்
  • படைப்புகள் = தேன்மழை, துறைமுகம், சுவரும் சுண்ணாம்பும்.
  • இவர் தமிழக இயலிசை நாடகமன்றம் வழங்கிய கலைமாமணி பட்டம் பெற்றவர்.
  • இவருடைய “தேன்மழை” நூல் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை பரிசு பெற்றுள்ளது.
  • பாவேந்தர் நினைவு பரிசினை பெற்ற முதல் கவிஞர் இவரே.

சொற்பொருள்;

  • பகட்டு வாழ்க்கை – ஆடம்பரமான வாழ்க்கை
  • செட்டு – சிக்கனம்

இலக்கணக்குறிப்பு:

  • சட்டதிட்டம் – உம்மைத்தொகை
  • நீதிநூல் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
  • நீரூற்று – ஆறாம் வேற்றுமைத்தொகை
  • தீராத – எதிர்மறைப் பெயரெச்சம்

மனித நேயம்


ஆசிரியர் குறிப்பு;

  • கவிஞர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் 01.06.1942 இல் சென்னையை அடுத்த ஆலந்தூரில் பிறந்தவர்.
  • பெற்றோர் = கோபால், மீனாம்பாள்
  • இவரின்”இமயம் எங்கள் காலடியில்” என்னும் கவிதைத் தொகுப்பு நூல் தமிழக அரசின் பரிசினை பெற்றுள்ளது.

சொற்பொருள்:

  • சிந்தை – உள்ளம்
  • குன்றி – குறைந்து
  • சாந்தி – தெருக்கள் கூடுமிடம்
  • சிறுமை – இழிவு

இலக்கணக்குறிப்பு:

  • சிந்தித்தேன் – தன்மை ஒருமை வினைமுற்று
  • கன்றுகுரல் – ஆறாம் வேற்றுமைத் தொகை
  • தலைகுனிந்து – இரண்டாம் வேற்றுமைத் தொகை

வேலைகளல்ல வேல்விகளே!


ஆசிரியர் குறிப்பு:

  • கவிஞர் தாராபாரதி 26.02.1947இல் திருவண்ணாமலை மாவட்டம் குவளை என்னும் ஊரில் பிறந்தார்.
  • பெற்றோர் = துரைசாமி, புஷ்பம் அம்மாள்
  • இவர் 34 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றி, நல்லாசிரியருக்கான டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருது பெற்றுள்ளார்.
  • படைப்புகள் = புதிய விடியல்கள், விரல்நுனி வெளிச்சங்கள், பூமியைத் திறக்கும் பொன்சாவி, இன்னொரு சிகரம்.

சொற்பொருள்:

  • மூடத்தனம் – அறியாமை
  • மூலதனம் – முதலீடு

இலக்கணக்குறிப்பு;

  • வெறுங்கை – பண்புத்தொகை
  • விரல்கள் பத்தும் – முற்றும்மை
  • பாறையும் – உயர்வு சிறப்பும்மை
  • மலர்ச்சோலை – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை
  • கங்கையும் சிந்துவும் – எண்ணும்மை
  • தெற்கு வடக்காய் – முரண்தொடை
  • மாவிலி – உரிச்சொற்றொடர்

தீக்குச்சிகள்


ஆசிரியர் குறிப்பு:

  • கவிஞர் அப்துல் ரகுமான் 1937இல் மதுரையில் பிறந்தவர்.
  • இவர், “மரபுக் கவிதையின் வேர் பார்த்தவர்; புதுக்கவிதையில் மலர் பார்த்தவர்” எனப் பாராட்டப்படுபவர்.
  • படைப்புகள் = பால்வீதி, நேயர் விருப்பம், சொந்தச் சிறைகள், கரைகளே நதியாவதில்லை, விலங்குகள் இல்லாத கவிதை.
  • தமிழக அரசின் “பாரதிதாசன் விருது”, தமிழ்ப்பல்கலைக்கழகம் வழங்கிய, “தமிழ் அன்னை விருது” போன்ற பல பரிசினை பெற்றுள்ளார்.

இலக்கணக்குறிப்பு:

  • புல்நுனி – ஆறாம் வேற்றுமைத்தொகை
  • கண்ணீர் வெள்ளம், பசிக்கயிறு – உருவகம்
  • மெல்லிய காம்பு – உருவகம்

வழிப்பாட்டுப் பாடல்கள் - சிவபெருமான்


சுந்தரர்:

  • சுந்தரர் தேவாரம் பன்னிருதிருமுறை வைப்பில் ஏழாந் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது.
  • சுந்தரர் திருமுனைப்பாடி நாட்டில் பிறந்தவர்.
  • பெற்றோர் = சடையனார், இசை ஞானியார்.
  • இயற்பெயர் = நம்பிஆரூரர்
  • இவர் திருமுனைப்பாடி நாட்டை ஆண்ட நரசிங்க முனையரையர் என்ற சிற்றரசர் மகன்மை கொண்டு வளர்க்கப்பட்டார்.
  • சிவபெருமான் இவரைத் தம் தோழராகத் கொண்டமையால் “தம்பிரான் தோழர்” என அழைக்கப்பட்டார்.
  • இவர் எழுதிய திருதொண்டதொகை என்னும் நூலையே முதனூலாக கொண்டு சேக்கிழார் எழுதிய திருத்தொண்டர் புராணம் எழுந்தது.

சொற்பொருள்:

  • காமகோபன் – காமனைக் காய்ந்தவன்
  • ஆவணம் – அடிமையோலை

இலக்கணக்குறிப்பு:

  • கண்ணுதல் – இலக்கணப் போலி
  • பழ ஆவணம் – பண்புத்தொகை
  • சொற்பதம் – ஒருபொருட் பன்மொழி

திருமால்


குலசேகர ஆழ்வார்:

  • ஆழ்வார் என்னும் சொல்லுக்கு ஆழ்ந்தறியும் அறிவைக் கருவியாக உடையவர் என்றும் எம்பெருமானுடைய மங்கலக் குணங்களில் ஆழங்காற்பட்டவர் என்றும் பொருள் கூறுவர்.
  • குலசேகர ஆழ்வார் சேரநாட்டுத் திருவஞ்சிக் களத்தில் தோன்றியவர்.
  • இவர் எழுதிய பாடல்கள் பெருமாள் திருமொழி எனப்படும்.
  • அவை மொத்தம் 105 பாடல்கள் ஆகும்.
  • ஆழ்வார்களின் அருளிச் செயலுக்குப் பெரிய வாச்சான் பிள்ளை என்பார் உரை எழுதியுள்ளார்.
  • திருவாய்மொழிக்கு வடக்குத் திருவீதிப் பிள்ளை என்பார் எழுதிய ஈடு என்னும் பேருரை ஆழமும் அகலமும் உடையதாகும்.

சொற்பொருள்:

  • ஆனாத – குறைவு படாத
  • அரம்பையர்கள் – தேவமாதர்கள்

புத்தர் பிரான்


ஆசிரியர் குறிப்பு:

  • மணிமேகலை நூலின் ஆசிரியர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் ஆவார்.
  • இவரைத் “தண்டமிழ் ஆசான்” எனப் புகழ்வர்.
  • இவரின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.
  • மணிமேகலை புத்த சமய காப்பியம்.
  • இந்நூலுக்கு “மணிமேகலைத் துறவு” என்னும் வேறு பெயரும் உண்டு.
  • இந்நூல் இந்திர விழவூரெடுத்த காதை முதலாகப் பவதிரம் அறுகெனப்பாவை நோற்ற காதை ஈறாக முப்பது காதைகளை உடையது.

சொற்பொருள்:

  • தீர்த்தன் – தூயன்
  • புராணன் – மிகப்பழையன்
  • ஏமம் – பாதுகாப்பு
  • ஆரம் – சக்கரக்கால்
  • கடிந்தேன் – துறந்தேன்

இலக்கணக்குறிப்பு:

  • தீநெறி – பண்புத்தொகை
  • கடும்பகை – பண்புத்தொகை
  • உணர்ந்த முதல்வன் – பெயரெச்சம்

அருகன்


நூல் குறிப்பு:

  • அருகதேவனை பற்றி கூறியுள்ள இந்நூல் நீலகேசியாகும்.
  • சீவக சிந்தாமணிக்கு நிகராக கவிதைச் சுவைமிக்க இந்நூலை எழுதியவர் விவரம் தெரியவில்லை.
  • இந்நூல் “நீலகேசித் தெருட்டு” என்றும் அழைக்கப்படும்.

சொற்பொருள்:

  • சாமரை – சாமரம் ஆகிய வெண்கவரி
  • புடைபுடை – இருமருங்கினும்
  • இயக்கர் – கந்தருவர்
  • இரட்ட – அசைக்க
  • சிங்காசனம் – அரியணை
  • ஆசனம் – இருக்கை
  • ஒளிமண்டிலம் – ஆலோகம்
  • நிழற்ற – ஒளிர
  • சந்திராதித்தம் – முத்துக்குடை
  • சகலபாசனம் – பொற்குடை
  • நித்தவிநோதம் – மணிக்குடை

இயேசு பெருமான்


ஆசிரியர் குறிப்பு:

  • இரட்சணியம் என்பதற்கு ஆன்ம ஈடேற்றம் என்பது பொருளாம்.
  • ஆன்ம ஈடேற்றம் விரும்புவார் செல்லும் சிந்தனை யாத்திரை என்பதுவே இரட்சணிய யாத்திரிகம் என்பதன் பொருள்.
  • ஜான் பனியன் என்பார் எழுதிய பில்க்ரிம்ஸ் பிராகிரஸ் என்ற நூலினையே இரட்சணிய யாத்திரிகம் என படைத்துள்ளார்.
  • எச்.ஏ.கிருடினப்பிள்ளை திருநெல்வேலி மாவட்டம் கரையிருப்பு என்னும் ஊரினர்.
  • பெற்றோர் = சங்கர நாராயணபிள்ளை, தெய்வநாயகி அம்மை
  • படைப்புகள் = இரட்சணிய யாத்திரிகம், இரட்சணிய மனோகரம், போற்றித் திருவகவல்.
  • இவரை “கிறித்துவ கம்பர்” என்பர்.

சொற்பொருள்:

  • கண்ணி – மரியன்னை
  • காசினி – உலகம்
  • வான்கதி – துறக்கம்
  • மருவ – அடைய

இலக்கணக்குறிப்பு:

  • கண்ணிபாலன் – நான்காம் வேற்றுமைத்தொகை

நபிகள் நாயகம்


உமறுப்புலவர்:

  • உமறுப்புலவர் தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் என்னும் ஊரினர்.
  • தந்தை = செய்கு முகமது அலியார் என்னும் சேகு முதலியார்
  • கடிகை முத்துப் புலவரின் மாணவர் இவர்.
  • இவரின் காலம் பதினேழாம் நூற்றாண்டு.
  • சீறாப்புராணம் வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளுக்கு இணங்க எழுதினார்.
  • நூல் நூற்றும் முன்னரே சீதக்காதி இறந்ததால் அபுல் காசிம் என்பார் உதவியுடன் எழுதி முடிக்கப்பட்டது.
  • பானு அஹமது மரைக்காயர் என்பவரே நூலை முழுவதும் எழுதி முடித்தார். அது “சின்னச் சீறா” எனப்பட்டது.
  • உமறுப்புலவர் முதுமொழிமாலை, சீதக்காதி நொண்டி நாடகம் முதலிய நூல்களையும் எழுதியுள்ளார்.

சொற்பொருள்:

  • பொறி – ஒளிப்பிழம்பு
  • வடிவார் – வடிவினையுடையார்
  • நவியார் – நபிகள் நாயகம்

இலக்கணக்குறிப்பு:

  • மெய்ப்பொருள் – இருபெயரொட்டு பண்புத்தொகை
  • சுவர்க்கபதி - இருபெயரொட்டு பண்புத்தொகை

No comments:

Post a Comment