Saturday 28 March 2015

ஏலாதி

ஏலாதி

ஏலாதியின் உருவம்:

  • ஆசிரியர் = கணிமேதாவியார்
  • பாடல்கள் = பாயிரம் 1, தற்சிறப்பாயிரம் 1, பாடல்கள் 80
  • பாவகை = வெண்பா

பெயர்க்காரணம்:

  • ஏலம், இலவங்கம், நாககேசரம், சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய ஆறு மருந்து பொருட்கள் சேர்ந்து உடல் நோயை தீர்ப்பது போன்று இந்நூலின் உள்ள ஒவ்வொரு பாடல் கூறும் ஆறு கருத்துக்களும் மனிதனின் உள்ளத்திற்கு உறுதி சேர்க்கும்.

பொதுவான குறிப்புகள்:

  • இவர் எழுதிய மற்றொரு நூல் = திணைமாலை நூற்றைம்பது
  • உணவு கொடுத்து ஆதரிப்போர் பெருவாழ்வு பெறுவார் என்பதை 21 பாடல்களில் கூறும் நூல்.
  • நூல் கூறும் உடலின் அறுவகைத் தொழில் = எடுத்தல், முடக்கல், நிமிர்தல், நிலைத்தல், படுத்தல், ஆடல்

மேற்கோள்:

  • தாய்இழந்த பிள்ளை தலைஇழந்த பெண்டாட்டி
    வாய்இழந்த வாழ்வினர், வணிகம் போய்இழந்தார்
    கைத்தூண்பொருள் இழந்தார் கண்இலவர்க்குஈந்தார்
    வைத்து வழங்கிவாழ் வார்
  • சாவது எளிது; அரிது சான்றாண்மை; நல்லது
    மேவல் எளிது; அரிது மெய்போற்றல்

கைந்நிலை

கைந்நிலையின் உருவம்:

  • ஆசிரியர் = மாறோக்கத்து முள்ளி நாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லாங்காடனார்
  • பாடல்கள் = 60(5*12=60)
  • திணை = ஐந்து அகத்திணைகளும்
  • பாவகை = வெண்பா

பெயர்க்காரணம்:

  • கை = ஒழுக்கம்
  • ஐந்திணை ஒழுக்க நிலை கூறும் நூல் என்னும் பொருளில் “கைந்நிலை” எனப் பெயர் பெற்றது.

பொதுவான குறிப்புகள்:

  • இந்நூலின் சில பாடல்கள் சிதைந்து விட்டன
  • தற்போது உள்ளவை 43 வெண்பாக்களே
  • வடசொல் கலப்பு மிகுந்த நூல்
  • ஆசிரியர் பாண்டியனை “தென்னவன் கொற்கை” என்னும் தொடரால் குறிப்பிடுகிறார்

மேற்கோள்:

  • ஒத்த உரிமையளா ஊடற்கு இனியளாக்
  • குற்றம் ஒரூஉம குணத்தளாக் – கற்றறிஞர்ப்
    பேணும் தகையாளாக் கொண்கன் குறிப்பறிந்து
    நாணும் தகையளாம் பெண்
 

No comments:

Post a Comment