Tuesday 31 March 2015

பன்னிருதிருமுறைகள்

பன்னிருதிருமுறைகள்

  • தமிழைப் பக்திமொழி (இரக்கத்தின் மொழி) என்று கூறியவர் தனிநாயகம் அடிகளார்.
  • சமய மறுமலர்ச்சிக் காலம், பக்தி இயக்கக் காலம் = பல்லவர் காலம்
  • சைவப் பெரியோர்கள் பாடிய பாக்கள் திருமுறைகள் எனப்படும்.
  • திருமுறைகளைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி
  • நம்பியாண்டார் நம்பி தொகுத்தவை 11 திருமுறைகள் மட்டுமே
  • நம்பியாண்டார் நம்பிக்குப்பின் சேர்த்தது பெரியபுராணம்
  • திருமுறைகளைத் தொகுத்தவன் முதலாம் இராசராசன் ஆவார். இவர் “திருமுறை கண்ட சோழன்” என அழைக்கப்படுகிறான்
  • முதல் ஏழு திருமுறைகள் தேவாரம் எனப்படுகிறது.
  • தேவாரப் பாக்கள் “பழம் மரபிசைக் களஞ்சியம்” எனப்படுகிறது.
  • தேவாரம் என்பதை “தே+வாரம்” எனப் பிரித்து கடவுளுக்கு உரிய பாடல்கள் என்றும், “தே+ஆரம்” எனப் பிரித்து கடவுளுக்கு சூட்டப்படும் பா மாலை என்றும் பொருள் கொள்வர்.
  • முதல் ஏழு திருமுறைகளுக்கு “மூவர் தமிழ்” என்ற பெயரும் உண்டு.
  • மூவர் முதலிகள் = திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்
  • சைவசமய குரவர்கள் = திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்
  • சைவ சமய குரவர்கள் நால்வர் பாடியதை “சைவ நான்மறைகள்” என்று புகழப்படும்.
  • திருமுறைகளைப் பாடியவர்கள் மொத்தம் 27 பேர்
  • “இவ்வளவு பழமையான இசைச் செல்வம் உலகில் வேறு எங்கும் இந்த அளவிற்கு கிடைக்கவில்லை” என்பார் மு.வரதராசனார்

பன்னிருதிருமுறை அட்டவணை:

திருமுறைஆசிரியர்நூல்கள்பாடல்கள்
1,2,3திருஞானசம்பந்தர்தேவாரம்(385 பதிகம்)1213
4,5,6திருநாவுக்கரசர்தேவாரம்(32 பதிகம்)3066
7சுந்தரர்தேவாரம்(100 பதிகம்)1026
8மாணிக்கவாசகர்திருவாசகம், திருக்கோவையார்1056
9திருமாளிகைத்தேவர்சிதம்பர மகேந்திர மாலை பற்றி மூன்று பதிகம், புறச் சமயங்கள் பற்றி ஒரு பதிகம்45
கருவூத் தேவர்10 பதிகங்கள்105
சேந்தனார்2 பதிகங்கள்47
பூந்துருத்தி காடவா நம்பி1 பதிகங்கள்12
கண்டராதித்தர்1 பதிகங்கள்10
வேணாத்டடிகள்1 பதிகங்கள்10
திருவாலியமுதனார்4 பதிகங்கள்42
புருடோத்தமா நம்பி2 பதிகங்கள்22
சேதிராயர்1 பதிகங்கள்10
10திருமூலர்திருமந்திரம்3000
111.திருவாலவுடையார்திருமுகப்பாசுரம் 
2.காரைக்கால் அம்மையார்1.திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம்11
2.அற்புதத் திருவந்தாதி10
3.திருவிரட்டை மணிமாலை20
3.ஐயடிகள் காடவர்கோன்ஷேத்திரத் திருவெண்பா24
4.சேரமான் பெருமாள் நாயனார்1.பொன்வண்ணத் தந்தாதி100
2.திருவாரூர் மும்மணிக்கோவை30
3.திருக்கயிலாய ஞானவுலா1
5.நக்கீரத் தேவர்1.கயிலைபாதி காளத்திபாதி100
2.திருஈங்கோய் மாலை55
3.திருவலஞ்ச்சுழி மும்மணிக்கோவை15
4.திருவெழு கூற்றிருக்கை1
5.பெருந்தேவபாணி1
6.கோபப் பிரசாதம்1
7.காரெட்டு8
8.போற்றித் திருக்கலி வெண்பா 
9.திருமுருகாற்றுப்படை1
10. திருக்கண்ணப்ப தேவர் திருமறம்1
6.கல்லாட தேவர்திருக்கண்ணப்ப தேவர் மறம்1
7.கபிலதேவர்1.மூத்தநாயனார் திருவிரட்டை மணிமாலை20
2.சிவபெருமான் திருவிரட்டை மணிமாலை37
3.சிவபெருமான் திருவந்தாதி100
8.பரணதேவர்சிவபெருமான் திருவந்தாதி100
9.இளம் பெருமான் அடிகள்சிவபெருமான் திருமும் மணிக்கோவை30
1௦0.அதிரா அடிகள்மூத்தபிள்ளையார் திருமும் மணிக்கோவை20
11.பட்டினத்து அடிகள்1.கோவில் நான்மணிமாலை42
2.திருக்கழுமல மும்மணிக்கோவை13
3.திருவிடைமருதூர் மும்மணிக்கோவை30
4.திருவேகம்புடையார் திருவந்தாதி100
5.திருவெற்றியூர் ஒருபா ஒருபது10
12.நம்பியாண்டார் நம்பி1.திருநாகையூர் விநாயகர் மாலை20
 2.கோயில் திருபண்ணியர் விருத்தம்70
3.திருத்தொண்டர் திருவந்தாதி89
4.ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி100
5.ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம்11
6.ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை30
7.ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை1
8.ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்49
9.ஆளுடைய பிள்ளையார் திருதொழுகை1
10.திருநாவுக்கரசு தேவர் திருவேகதச மாலை11
12சேக்கிழார்பெரியபுராணம்4250
 

No comments:

Post a Comment