Saturday 28 March 2015

குறுந்தொகை

குறுந்தொகை

குறுந்தொகையின் உருவம்:

  • திணை = அகத்திணை
  • பாவகை = ஆசிரியப்பா
  • பாடல்கள் = 400
  • புலவர்கள் = 205
  • அடி எல்லை = 4-8

பெயர்க்காரணம்:

  • குறுமை+தொகை = குறுந்தொகை
  • குறுகிய அடிகளை உடையதால் குறுந்தொகை எனப்பட்டது.

வேறு பெயர்கள்:

  • நல்ல குறுந்தொகை
  • குறுந்தொகை நானூறு(இறையனார் களவியல் உரை கூறுகிறது)

தொகுப்பு:

  • தொகுத்தவர் = பூரிக்கோ
  • தொகுப்பிதவர் = தெரியவில்லை

உரை, பதிப்பு:

  • இந்நூலின் 380 பாடல்களுக்கு பேராசிரியர் உரை எழுதியுள்ளார். 20 பாடல்களுக்கு நச்சினார்கினியர் உரை எழுதியுள்ளார். இத் தகவலை சீவக சிந்தாமணி சிறப்பாயிரத்தில் நச்சினார்கினியர் கூறியுள்ளார். ஆனால் இவை தற்போது கிடைக்கவில்லை.
  • நூலை முதலில் வெளியிட்டவர் = சௌரிபெருமாள் அரங்கனார்
  • நூலை முதலில் பதிப்பித்தவர் = சி.வை.தாமோதரம் பிள்ளை

கடவுள் வாழ்த்து:

  • இந்நூலின் கடவுள் வாழ்த்து பாடியவர் = பாரதம் பாடிய பெருந்தேவனார்
  • இந்நூலில் குறிக்கப்படும் கடவுள் = முருகன்

குறுந்தொகையில் தொடரால் பெயர் பெற்றோர் = 18 பேர்:

அணிலோடு முன்றிலார்விட்ட குதிரையார்
குப்பைக் கோழியார்மீனெறி தூண்டிலார்
காக்கைப்பாடினியார்வெள்ளிவீதியார்

குறுந்தொகையில் வடமொழிப் பெயர்கள்:

உருத்திரன்சாண்டிலியன்
உலோச்சணன்பௌத்திரன்

குறுந்தொகை குறிப்பிடும் அரசர்கள்:

சோழன் கரிகாலன்குட்டுவன்
பசும்பூண் பாண்டியன்பாரி
ஓரிநள்ளி

குறுந்தொகை பாடிய பெண்பாற் புலவர்கள் = 13 பேர்:

ஔவையார்வெள்ளிவீதியார்
வெண்பூதியார்ஆதிமந்தி

பொதுவான குறிப்புகள்:

  • எட்டுத்தொகை நூல்களுள் முதன் முதலில் தொகுக்கப்பட்ட நூல் இதுவே.
  • பரணர் பாடல்களில் வரலாற்று குறிப்புகள் அதிகம் காணப்படும்.
  • வரலாற்று புலவர்கள் எனப்படுபவர்கள் = பரணர், மாமூலனார்
  • உரை ஆசிரியர்களால் மிகுதியாக மேற்கோள் காட்டப்பட்ட நூல் குறுந்தொகையே.
  • குறுந்தொகையின் 236 பாடல்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன
  • திருவிளையாடல் புராணத்தில் தருமி வரலாற்றுக்கு ஊற்றாக விளங்கியது “கொங்குதேர் வாழ்க்கை’ என்னும் குறுந்தொகை பாடலே.
  • இந்நூலில் 307, 391ஆம் பாடல்கள் மட்டும் ஒன்பது அடிகள் கொண்டவை.

முக்கிய அடிகள்:

  • நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று
    நீரினும் ஆரளவின்றே  - (தேவகுலத்தார்)
  • வினையே ஆடவர்க்கு உயிரே; வாணுதல்
    மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே  - (பாலை பாடிய பெருங்கடுங்கோ)
  • யாயும் ஞாயும் யாராகியரோ
    எந்தையும் நுந்தையும் எம்முறைகேளிர்
    நீயும் யானும் எவ்வழி அறிதும்
    செம்புலப் பெயல்நீர் போல
    அன்புடை நெஞ்சம் தாம்கலந்தனவே – (செம்புலப்பெயல் நீரார்)
  • கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
    காமம் செப்பாது கண்டது மொழிமோ
    பயலியது கெழீஇய நட்பின் மயிலியல்
    செறியெயிற் றரிவை கூந்தலின்
    நறியவும் உளவோ நீ அறியும் பூவே
 

No comments:

Post a Comment