Friday, 20 March 2015

ஓரெழுத்து சொல்

ஓரெழுத்து சொல்

தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 46 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 46 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம்

  1. அ -----> எட்டு
  2. ஆ -----> பசு
  3. ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி
  4. உ -----> சிவன்
  5. ஊ -----> தசை, இறைச்சி
  6. ஏ -----> அம்பு
  7. ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
  8. ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை
  9. கா -----> சோலை, காத்தல்
  10. கூ -----> பூமி, கூவுதல்
  11. கை -----> கரம், உறுப்பு
  12. கோ -----> அரசன், தலைவன், இறைவன்
  13. சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல்
  14. சீ -----> இகழ்ச்சி, திருமகள்
  15. சே -----> எருது, அழிஞ்சில் மரம்
  16. சோ -----> மதில்
  17. தா -----> கொடு, கேட்பது
  18. தீ -----> நெருப்பு
  19. து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு
  20. தூ -----> வெண்மை, தூய்மை
  21. தே -----> நாயகன், தெய்வம்
  22. தை -----> மாதம்
  23. நா -----> நாக்கு
  24. நீ -----> நின்னை
  25. நே -----> அன்பு, நேயம்
  26. நை -----> வருந்து, நைதல்
  27. நொ -----> நொண்டி, துன்பம்
  28. நோ -----> நோவு, வருத்தம்
  29. நௌ -----> மரக்கலம்
  30. பா -----> பாட்டு, நிழல், அழகு
  31. பூ -----> மலர்
  32. பே -----> மேகம், நுரை, அழகு
  33. பை -----> பாம்புப் படம், பசுமை, உறை
  34. போ -----> செல்
  35. மா -----> மாமரம், பெரிய, விலங்கு
  36. மீ -----> ஆகாயம், மேலே, உயரம்
  37. மு -----> மூப்பு
  38. மூ -----> மூன்று
  39. மே -----> மேன்மை, மேல்
  40. மை -----> அஞ்சனம், கண்மை, இருள்
  41. மோ -----> முகர்தல், மோதல்
  42. யா -----> அகலம், மரம்
  43. வா -----> அழைத்தல்
  44. வீ -----> பறவை, பூ, அழகு
  45. வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்
  46. வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்தல்

No comments:

Post a Comment