ஒலிவேறுபாடு:
ஒலிவேறுபாடு:
- அரம் = அராவும் கருவி
- அறம் = தருமம்
- அரி = துண்டாக்கு, திருமால்
- அறி = தெரிந்துக்கொள்
- அருகு = பக்கம்
- அறுகு = ஒருவகைப்புல்
- அரை = பாதி
- அறை = கூறு
- இரத்தல் = யாசித்தல்
- இறத்தல் = சாதல்
- இரை = தீனி
- இறை = கடவுள்
- உரவு = வலிமை
- உறவு = சொந்தம்
- உரி = தோலை உரி
- உறி = பால், தயிர் வைக்கும் கயிற்றுத் தொங்கல்
- உரை = சொல்,
- உறை = வாசி, மேல் உறை
- துரவு = கிணறு
- துறவு = சந்நியாசம்
- கருத்து = எண்ணம்
- கறுத்து = கருமை நிறம்
- நரை = வெண்மயிர்
- நறை = தேன்
- எரி = நெருப்பு
- ஏறி = வீசுதல்
- ஏரி = பெரிய நீர்நிலை
- ஏறி = மேலே ஏறி
- கரி = அடுப்புக்கரி, யானை
- கறி = காய்கறி, மிளகு
- கீரி = ஒரு விலங்கு
- கீறி = பிளந்து
- சுனை = ஊற்று
- சுணை = சிறுமுள்
- குனி = வளை
- குணி = ஆலோசனை செய்
- தின் = சாப்பிடு
- திண் = உறுதி
- கன்னி = இளம்பெண்
- கண்ணி = மாலை
- பனி = குளிர்ச்சி, பனித்துளி
- பணி = வேலை, தொண்டு
- தினை = ஒருவகை தானியம்
- திணை = குளம், ஒழுக்கம்
- பனை = ஒருவகை மரம்
- பனண = மூங்கில்
- கனம் = பளு
- கணம் = கூட்டம், நொடிப்பொழுது
- மன் = அரசன்
- மண் = பூமி
- வன்மை = வலிமை
- வண்மை = கொடுக்கும் குணம்
- அரன் = சிவன்
- அரண் = மதில், கோட்டை
- தின்மை = தீமை
- திண்மை = வலிமை
- இனை = வருந்து
- இணை = சேர், இரட்டை
- மான் = ஒருவகை விலங்கு
- மாண் = பெருமை
- பொருப்பு = மலை
- பொறுப்பு = கடமை
- தரி = அணி
- தறி = வெட்டு, நெசவு
- பரி = குதிரை
- பறி = பறித்தல்
- சூல் = கருப்பம்
- சூள் = சபதம்
- சூழ் = நெருங்கு, வளை
- தால் = நாக்கு
- தாள் = பாதம், முயற்சி
- தாழ் = பணி, தாழ்ப்பாள்
- மூலை = கோணத்தின் ஓரம்
- மூளை = உறுப்பு
- மூழை = அகப்பை
- அலகு = பறவை மூக்கு, அளவைக்கூறு
- அளகு = பெண் பறவை, காட்டுக்கோழி
- அழகு = வனப்பு, அணி
- தலை = சிரம், உடல் உறுப்பு
- தளை = கட்டு, அடிமைத்தளை
- தழை = இலை
- வலி = நோய், வலிமை
- வளி = காற்று
- வழி = பாதை
- வால் = விலங்கின் வால்
- வாள் = கத்தி, ஒளி
- வாழ் = வாழ்தல்
- வலை = மீன்பிடி வலை
- வளை = பொந்து, வளையல் வளைவு
- வழை = ஒருவகை மரம்
- பொலி = விளங்கு
- பொழி = ஊற்று
- பொளி = கொத்து
- அலை = கடல் அலை
- அளை = வெண்ணை, புற்று
- அழை = கூப்பிடு
- இலை = தழை
- இளை = உடல் மெலிவு
- இழை = நூல் இழை, அணிகலன்
- உலை = நீர் உலை, வருந்து
- உளை = பிடரிமயிர்
- உழை = உழைத்தல், மான்
No comments:
Post a Comment