Tuesday, 31 March 2015

உரைநடை- மறைமலையடிகள்-ரா.பி.சேதுப்பிள்ளை-திரு.வி.க

உரைநடை - மறைமலையடிகள்

குறிப்பு:

  • இயற் பெயர் = சாமி வேதாசலம்
  • ஊர் = நாகை மாவட்டம் காடம்பாடி
  • பெற்றோர் = சொக்கநாதப் பிள்ளை, சின்னம்மா அம்மையார்
  • மகள் = நீலாம்பிகை அம்மையார்

வேறு பெயர்கள்:

  • தனித்தமிழ் மலை
  • தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை
  • தனித்தமிழ்த் இலக்கியத்தின் தந்தை
  • தன்மான இயக்கத்தின் முன்னோடி
  • தமிழ் கால ஆராய்ச்சியின் முன்னோடி

புனைப்பெயர்:

  • முருகவேள்

உரைநடை நூல்கள்:

  • பண்டைத் தமிழரும் ஆரியரும்
  • மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்
  • வேளாளர் யாவர்
  • சைவ சமயம்
  • தமிழர் மதம்
  • அம்பலவாணர் கூத்து
  • தமிழ்த்தாய்
  • தமிழ்நாட்டவரும் மேல்நாட்டவரும்
  • அறிவுரைக் கொத்து
  • மக்கள் 100 ஆண்டுகள் வாழ்வது எப்படி?
  • மரணத்தின் பின் மனிதனின் நிலை
  • சோமசுந்தரக் காஞ்சியாக்கம்
  • தென்புலத்தார் யார்?
  • சாதி வேற்றுமையும் போலிச் சைவமும்
  • தொலைவில் உணர்த்தல்
  • Ancient and modern tamil poets

செய்யுள் நூல்கள்:

  • திருவெற்றியூர் முருகர் மும்மணிக்கோவை
  • சோமசுந்தரக் காஞ்சி

ஆய்வு நூல்கள்:

  • முல்லைப்பாட்டு ஆராய்ச்சி
  • பட்டினப்பாலை ஆராய்ச்சி
  • சிவஞான போத ஆராய்ச்சி
  • குறிஞ்சிப்பாட்டு ஆராய்ச்சி
  • திருக்குறள் ஆராய்ச்சி

நாடகம்:

  • சாகுந்தலம்(மொழிப்பெயர்ப்பு)
  • குமுதவல்லி
  • அம்பிகாபதி அமராவதி

நாவல்:

  • கோகிலாம்பாள் கடிதங்கள்
  • குமுதினி அல்லது நாகநாட்டு இளவரசி

இதழ்:

  • அறிவுக்கடல்(ஞானசாகரம்)
  • The ocean of wisdom

குறிப்பு:

  • தமிழ், ஆங்கிலம், வடமொழி என மும்மொழியிலும் வல்லவர்
  • சைவத்தையும் தமிழையும் தம் உயிராக கொண்டவர்
  • சென்னை கிறித்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியவர்
  • சாமி வேதாசலம் என்ற தன் வடமொழி பெயரை மறைமலை அடிகள் என தமிழில் மாற்றிக் கொண்டார்
  • “ஞானசாகரம்” என்ற இதழுக்கு “அறிவுக்கடல்” என்று பெயர் மாற்றம் செய்து நடத்தினார்
  • “சிறுவர்க்கான செந்தமிழ்” என்ற தலைப்பில் பாடநூல்களையும் வரைந்துள்ளார்.
  • அடிகளின் “அறிவுரைக் கொத்து” என்ற நூலே “கட்டுரை” என்ற தமிழ்ச் சொல்லையும், கட்டுரை எழுதும் முறைகளையும் மாணவர்களிடையே பரப்பிற்று
  • இவர் சைவ சித்தாந்த மகா சமாஜம், சமரச சன்மார்க்க சங்கம் போன்றவற்றை ஏற்படுத்தினார்

சிறப்பு:

  • “தனித்தமிழ் இயக்கம்” தோற்றுவித்தவர்
  • திரு.வி.க = மறைமலை ஒரு பெரும் அறிவுச் சுடர்; தமிழ் நிலவு; சைவ வான்; தென்னாடு பன்னெடுங்காலம் தன்னை மறந்து உறங்கியது. அவ்வுறக்கம் போக்கிய பெருமை அடிகளாருக்கே சேரும்
  • சங்க இலக்கியங்களை மக்களிடையே பரப்பியவர்

பரிதிமாற்கலைஞர்

வாழ்க்கைக்குறிப்பு:

  • இயற் பெயர் = சூரிய நாராயண சாஸ்திரி.
  • ஊர் = மதுரை அடுத்துள்ள விளாச்சேரி
  • பெற்றோர் = கோவிந்தசிவனார், இலட்சுமி அம்மையார்.
  • தம் பெற்றோருக்கு மூன்றாவது மகனாக,1870ஆம் ஆண்டு சூலைத் திங்கள் ஆறாம் நாள் பிறந்தார்..

சிறப்பு பெயர்கள்:

  • தமிழ் நாடக பேராசிரியர்
  • திராவிட சாஸ்திரி(சி.வை.தாமோதரம்பிள்ளை)
  • தனித் தமிழ் நடைக்கு வித்திட்டவர்

படைப்புகள்:

  • ரூபாவதி அல்லது காணாமல் போன மகள்(நாடக நூல்)
  • கலாவதி(நாடக நூல்)
  • மானவிசயம்(நாடக நூல், களவழி நாற்பது தழுவல்)
  • பாவலர் விருந்து
  • தனிப்பாசுரத் தொகை
  • தமிழ் மொழி வரலாறு
  • நாடகவியல்(நாடக இலக்கண நூல்)
  • சித்திரக்கவி
  • மதிவாணன்(புதினம்)
  • உயர்தனிச் செம்மொழி(கட்டுரை)
  • சூர்பநகை(புராண நாடகம்)
  • முத்ராராட்சசம் என்ற வடமொழி நூலை தமிழில் மொழிப்பெயர்த்துள்ளார்
  • தமிழ் புலவர் சரித்திரம்
  • தமிழ் வியாசகங்கள்(கட்டுரை தொகுப்பு)

இதழ்:

  • ஞானபோதினி
  • விவேக சிந்தாமணி

குறிப்பு:

  • சென்னை கிறித்துவக் கல்லோர்ரியில் தமிழ் பேராசிரியராகப் பணி புரிந்தவர்
  • மறைமலை அடிகளின் ஆசிரியர்
  • சோனட் என்ற 14 அடி ஆங்கிலப் பாட்டைப் போன்று பல பாடல்கள் எழுதி “தனிப்பாசுரத்தொகை” என்னும் நூலை வெளியிட்டார்
  • “அங்கம்” என்ற நாடக வகைக்கு மானவிசயம் என்ற நாடக நூலை படைத்தார்
  • சி.வை.தாமோதரப் பிள்ளையின் வேண்டுகோளுக்கு இணங்க “மதிவாணன்” என்ற புதினம் படைத்தார்

சிறப்பு:

  • சூரிய நாராயண சாஸ்திரி என்ற தம் பெயரை தனிப்ப்பசுரத் தொகை என்னும் நூலை வெளியிடும் போது பரிதிமாற் கலைஞர் என மாற்றிக் கொண்டார்
  • இவரின் தனிப்பாசுரத் தொகை என்னும் நூலினை ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்
  • இவரின் தமிழ்ப்புலமையும் கவிபாடும் திறனையும் கண்டு சி.வை.தாமோதரம்பிள்ளை இவருக்கு “திராவிட சாஸ்திரி” என்ற பட்டம் வழங்கினார்.
  • உயர்தனிச் செம்மொழி(classical language), தகுந்தவை தங்கி நிற்றல்(survival of the fittest) என்ற கலைச் சொற்களைப் படைத்தவர்
  • முதன் முதலில் தமிழை உயர்தனிச் செம்மொழி என அறிவித்தவர்

ந.மு.வேங்கடசாமி நாட்டார்

வாழ்க்கைக் குறிப்பு:

  • ஊர்            = தஞ்சாவூர் நடுக்காவிரி
  • பெற்றோர்      = முத்துசாமி நாட்டார், தைலம்மாள்
  • முதலில் வைத்த பெயர் சிவப்பிரகாசம், பின் வேண்டுதலால் வைத்த பெயர் வேங்கடசாமி

படைப்புகள்:

  • வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சி
  • கபிலர்
  • நக்கீரர்
  • கள்ளர் சரித்திரம்
  • கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும்
  • சோழர் சரித்திரம்
  • கட்டுரைத் திரட்டு

உரைகள்:

  • ஆத்திசூடி
  • கொன்றைவேந்தன்
  • பரஞ்சோதியாரின் திருவிளையாடற்புராணம்
  • சிலப்பதிகாரம்
  • மணிமேகலை
  • அகநானூறு
  • தண்டியலங்காரம்

குறிப்பு:

  • பகலில் வேளாண்மையும் செய்தும்,  இரவில் தமிழ்க் கல்வியும் கற்றார்
  • இவருக்கு “நநாவலர்” பட்டம் வழங்கப்பட்டுள்ளது
  • இவருக்கு கற்கோயில் எடுக்கப்பட்டது
  • பிறமொழிச் சொற்களுக்கு நேரான தமிழ்ச் சொற்களை வழக்கத்தில் கொண்டு வந்த முதல் அறிஞர் இவரே
  • மதுரைத் தமிழ் சங்கத்தில் முதன் முதலில் தங்கத் தோடா பரிசை பெற்றவர்

ரா.பி.சேதுப்பிள்ளை

வாழ்க்கைக்குறிப்பு:

  • ஊர்            = நெல்லை மாவட்டம் ராசவல்லிபுரம்
  • பெற்றோர்      = பெருமாள் பிள்ளை, சொர்ணத்தம்மாள்

சிறப்புபெயர்கள்:

  • சொல்லின் செல்வர்
  • செந்தமிழுக்கு சேதுபிள்ளை

படைப்புகள்:

  • தமிழின்பம்(சாகித்ய அகாடமி விருது பெற்ற முதல் தமிழ் நூல்)
  • ஊரும் பேரும்
  • செந்தமிழும் கொடுந்தமிழும்
  • வீரமாநகர்
  • வேலும் வில்லும்
  • திருவள்ளுவர் நூல் நயம்
  • சிலப்பதிகார நூல் நயம்
  • தமிழ் விருந்து
  • தமிழர் வீரம்
  • கடற்கரையிலே
  • தமிழ்நாட்டு நவமணிகள்
  • வாழ்கையும் வைராக்கியமும்
  • இயற்கை இன்பம்
  • கால்டுவெல் ஐயர் சரிதம்
  • Tamil words and their significance

பதிப்பித்தவை:

  • திருக்குறள் எல்லீஸ் உரை
  • தமிழ் கவிதைக் களஞ்சியம்
  • பாரதி இன்கவித் திரட்டு

குறிப்பு:

  • இவர் அடிப்படையில் வழக்கறிஞர்
  • சென்னை பல்கலைகழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியர்
  • எதுகை மோனை அமையப் பேசவும் ஏலதவும் வல்லவர்

திரு.வி.க

வாழ்க்கைக்குறிப்பு:

  • திரு.வி.கலியாணசுந்தரனார்(திருவாரூர் விருதச்சல்னார் மகனார் சுருக்கமே திரு.வி.க என்பது)
  • பெற்றோர் = விருதச்சலனார் – சின்னம்மையார்
  • பிறந்த ஊர் = காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள துள்ளம்.
  • இவ்வூர், தற்போது தண்டலம் என அழைகப்படுகிறது. இவ்வூர் சன்னியை அடுத்துள்ள போரூருக்கு மேற்கே உள்ளது.

சிறப்பு பெயர்கள்:

  • தமிழ்த்தென்றல்
  • தமிழ் முனிவர்
  • தமிழ் பெரியார்
  • தமிழ்ச்சோலை
  • தமிழ் புதிய உரைநடையின் தந்தை
  • தமிழ் மேடைப்பேச்சின் தந்தை
  • தொழிலாளர் தந்தை
  • பேனா மன்னருக்கு மன்னன்(பி.ஸ்ரீ.ஆச்சாரியார்)
  • இக்காலத் தமிழ்மொழி நடையாளர்
  • தமிழ் வாழ்வினர்

கற்றல்:

  • தமிழ் கற்றது = யாழ்ப்பாணம் கதிரைவேற் பிள்ளையிடம்
  • சித்தாந்த சாத்திரம் கற்றது = மகாவித்துவான் தணிகாசல முதலியாரிடம்
  • இலக்கியம் கற்றது = மறைமலை அடிகளிடம்
  • சமய அறிவு பெற்றது = பாம்பன் சுவாமிகளிடம்

உரைநடை நூல்கள்:

  • முருகன் அல்லது அழகு
  • தமிழ்ச்சோலை
  • உள்ளொளி
  • மேடைத்தமிழ்
  • சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து
  • மனித வாழ்கையும் காந்தியடிகளும்
  • பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணைநலம்
  • தமிழ்த் தென்றல்
  • சைவத்திறவு
  • இந்தியாவும் விடுதலையும்
  • சைவத்தின் சமரசம்
  • கடவுட் காட்சியும் தாயுமானவரும்
  • நாயன்மார்கள்தமிழ்நாடும் நம்மாழ்வாரும்
  • இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம்
  • தமிழ் ந்நோல்களில் பௌத்தம்
  • காதலா? முடியா?சீர்திருத்தமா?
  • என் கடன் பணி செய்து கிடப்பதே
  • இமயமலை அல்லது தியானம்
  • இளமை விருந்து
  • பொருளும் அருளும் அல்லது மார்க்சியமும் காந்தியும்
  • வளர்ச்சியும் வாழ்வும் அல்லது படுக்கை பிதற்றல்

செய்யுள்:

  • முருகன் அருள் வேட்டல்
  • கிறித்துவின் அருள் வேட்டல்
  • உரிமை வேட்கை
  • திருமால் அருள் வேட்டல்
  • சிவன் அருள் வேட்டல்
  • புதுமை வேட்டல்
  • பொதுமை வேட்டல்
  • அருகன் அருகே
  • கிறித்து மொழிக்குறள்
  • இருளில் ஒளி
  • இருமையும் ஒருமையும்
  • முதுமை உளறல்

பயண நூல்:

  • எனது இலங்கை செலவு

இதழ்:

  • நவசக்தி
  • தேசபக்தன்

குறிப்பு:

  • பெரியபுராணத்திற்கு குறிப்புரை எழுதியுள்ளார்
  • திருக்குறளின் முதல் 10 அதிகாரங்களுக்கு விரிவுரை அளித்துள்ளார்
  • சென்னை வெஸ்லி பள்ளியில் தமிழாசிரியராகப் பனிப் புரிந்தார்
  • இவரின் சொற்பொழிவுகள் எல்லாம் “தமிழ்த்தென்றல்” என்ற தலைப்பில் தொகுத்து வெளியிடப்பட்டது
  • இவரின் பத்திரிக்கைத் தலையங்கம் எல்லாம் தொகுத்து “தமிழ்ச்சோலை” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது
  • இவரின் மேடைபேச்சுகள் எல்லாம் “மேடைத்தமிழ்” என்ற தளிப்பில் வெளியிடப்பட்டது
  • இவரின் செய்யுள் நூல்கள் எல்லாம் “அருள் வேட்டல்” என்ற தலைப்பில் தொகுத்து வெளியிடப்பட்டது

சிறப்பு:

  • இந்தியாவிலிலேயே முதன் முதலாக சென்னையில் தொழிலாளர் சங்கத்தைத் தொடங்கினார்
  • திரு.வி.க நடை என்று கூறும் அளவிற்கு தனி நடையை உரைநடையில் கொண்டவர்
  • அடுக்குத் தொடர்கள், வியங்கோள் அமைப்பு, வியப்புத் தொடர்கள், மரபுச் சொற்கள், கவிதை வரிகள், வினாவிடைப் பாங்கு, மேடைப் பேச்சுநடை, புதிய சொல்லாக்கம் ஆகியன இவர் தம் உரைநடையின் தனித்தன்மையாகும்
  • பி.ஸ்ரீ.ஆச்சார்யா = பேனா மன்னருக்கு மன்னன். அவர் சிறந்த பக்தன். அவர் சாகவில்லை. ஏனெனில் பக்தனைக் கண்டு சாவுதான் செத்துப் போகிறது. அவர் வாழ்ந்து வந்த புதுப்பேட்டை விலாசம் தான் மாறியிருக்கிறது. புது விலாசம் மக்கள் உள்ளம்
  • “பிரயாணம்” என்ற சொலுக்கு பதிலாக “செலவு” என்ற சொல்லை பயன்படுத்தியவர்
  • எத்துறை பற்றியும் இன்தமிழில் பேசவும் எழுதவும் முடியும் என நிறுவியவர் இவரே
  • திரு.வி.காவின் இலக்கிய வாரிசுகள் = மு.வ, கல்கி

வையாபுரிப்பிள்ளை

வாழ்க்கைக்குறிப்பு:

  • ஊர் = திருநெல்வேலி சிக்கநரசையன் என்னும் சிற்றூர்
  • பெற்றோர் = சரவணப் பெருமாள் பிள்ளை, பாப்பம்மாள்
  • ஆசிரியர் = கணபதி ஆசிரியர்
  • தமிழ் கற்றது = மறைமலை அடிகளிடம்

நூல்கள்:

  • கம்பன் திருநாள்
  • மாணிக்கவாசகர் காலம்
  • பத்துப்பாட்டின் காலநிலை
  • பவணந்தி காலம்
  • வள்ளுவர் காலம்
  • கம்பர் காலம்
  • அகராதி நினைவுகள்
  • அகராதி வேலையில் சில நினைவுகள்
  • இலக்கிய மண்டபக் கட்டுரைகள்

நாவல்:

  • ராசி

கவிதை நூல்கள்:

  • என் செல்வங்கள்
  • என் செய்வேன்
  • மெலிவு ஏன்
  • விளையுமிடம்
  • என்ன வாழ்க்கை
  • பிரிவு
  • என்ன உறவு

உரைகள்:

  • திருமுருகாற்றுப்படை
  • சிறுகதை மஞ்சரி
  • இலக்கிய மஞ்சரி
  • திராவிட மொழிகளின் ஆராய்ச்சி
  • இலக்கிய சிந்தனை
  • தமிழின் மறு மலர்ச்சி
  • இலக்கிய உதயம்
  • இலக்கிய தீபம்
  • இஅல்க்கிய மணிமாலை
  • கம்பன் காவியம்
  • இலக்கணச் சிந்தனைகள்
  • சொற்கலை விருந்து
  • சொற்களின் சரிதம்

பதிப்பித்த நூல்கள்:

  • திருமந்திரம்
  • கம்பராமாயணம்
  • நாமதீப நிகண்டு
  • அரும்பொருள் விளக்க நிகண்டு
  • தொல்க்காப்பியம் இளம்பூரனார் உரை
  • தொல்காப்பியம் நச்சினார்க்கினியர் உரை
  • தினகர வெண்பா
  • பூகோள விலாசம்
  • புறத்திரட்டு
  • எட்டுத்தொகை
  • பத்துப்பாட்டு
  • சீவக சிந்தாமணி
  • சீறாப்புராணம்
  • விரலி விடு தூது

ஆங்கில நூல்கள்:

  • History and tamil lexicography
  • Life in the Ancient City of Kaverippumpattinam
  • Manikkavacakar
  • History of Tamil Language and Literature

குறிப்பு:

  • திருவனந்தபுரம் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்
  • சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதியின் பதிப்பாசிரியராக நியமிக்கப்பட்டார்
  • இவருக்கு அகராதிப் பணிக்காக “ராவ் சாகிப்” பட்டம் வழங்கப்பட்டது

1 comment: