சிறுப்பாணாற்றுப்படை
சிறுப்பாணாற்றுப்படையின் உருவம்:
- பொருள் = ஆற்றுப்படை
- தினை = புறத்திணை
- பாவகை = ஆசிரியப்பா
- அடி எல்லை = 269
சிறப்புப் பெயர்:
- சிறப்புடைத்தான சிறுபாணாற்றுப்படை(தக்கயாகப்பரணி உரையாசிரியர்)
பாணர்:
- பாணர்கள் மூன்று வகைப்படுவர் = இசைப்பாணர், யாழ்ப்பாணர், மண்டைப்பாணர்
- சிறிய யாழைக் கையில் வைத்திருப்போர் சீறியாழ்பாணர் என்பர்
புலவர், தலைவன்:
- பாடிய புலவர் = நல்லூர் நத்தத்தனார்
- பாட்டுடைத் தலைவன் = ஒய்மா நாட்டு நல்லியக்கோடன்
கடை ஏழு வள்ளல்கள்:
பேகன் | மயிலுக்கு போர்வை அளித்தவன் |
பாரி | முல்லைக்கு தேர் தந்தவன் |
காரி | இரவலர்க்கு குதிரைகள் நல்கியவன் |
ஆய் | நீலமணியையும், நாகம் தந்த கலிங்கத்தையும் சிவனுக்கு அளித்தவன் |
அதியமான் | ஒளவைக்கு நெல்லிக்கனி அளித்தவன் |
நள்ளி | நடைப்பரரிகாரம் முட்டாது கொடுத்தவன் |
ஓரி | இரவலர்க்கு நாடுகளை பரிசாக நல்கியவன் |
உரை;
- நச்சினார்க்கினியர் உரை உள்ளது
- மு.வை.அரவிந்தன் உரை
பொதுவான குறிப்புகள்:
- தக்கயாகப் பரணியின் உரையாசிரியர் இந்நூலை “சிறப்புடைத்தான சிறுபாணாற்றுப்படை” என்கிறார்.
- திண்டிவனப் பகுதி ஒய்மா நாடு ஆகும்.
- நல்லியக்கோடனின் தலைநகரம் “கிடங்கில்”
- இந்நூல் கடை ஏழு வள்ளல்கள் பற்றி கூறுகிறது.
- வேளாளர் வீடுகளில் நாய் வளர்த்ததைப் போல, உமணர்கள் வீட்டில் குரங்குகளை வளர்த்தனர்.
முக்கிய அடிகள்:
- பன்மீன் நடுவே பால்மதிபோல
இன்நடை ஆயமொடு இருந்தோன் - முல்லை சான்ற கற்பின் மெல்லியல்
மடமா நோக்கின் வாணுதல் விறலியர் - தமிழ்நிலை பெற்ற தாங்கறு மரபின்
மகிழ்நனை மறுகின் மதுரை - எழுவர் பூண்ட ஈகைச் செந்துகம்
No comments:
Post a Comment