Saturday, 28 March 2015

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்

  • சங்கம் மருவிய கால இலக்கியங்கள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் எனப்படும்.
  • இதனை நீதிநூல்கள் அல்லது அற நூல்கள் அல்லது இருண்ட கால இலக்கியங்கள் எனவும் அழைக்கப்படுகிறது.
  • பதினெண்கீழ்க்கணக்கு என்ற வழக்கை கொண்டுவந்தவர்கள் = மயிலைநாதர், பேராசிரியர்
  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் இலக்கணம் கூறுவது = பன்னிரு பாட்டியல்
அடிநிமிர் பில்லாச் செய்யுட் டொகுதி
அறம்பொருள் இன்பம் அடுக்கி யவ்வத்
திறம்பட உரைப்பது கீழ்க் கணக்காகும்
- பன்னிரு பாட்டியல்
  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் இன்னின்ன என்பதை கூறும் பாட்டு
நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுகங் கோவை பழமொழி மாமூலம்
இந்நிலைய காஞ்சியோ டேலாதி என்பவே
கைந்நிலைய வாங் கீழ்க் கணக்கு
  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அறநூல்கள் = 11 (நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, முப்பால், திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம், முதுமொழிக் காஞ்சி, ஏலாதி)
  •  பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அக நூல்கள் = 6 (கார் நாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை)
  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் புறநூல் = 1 (களவழி நாற்பது)
  • நீதி நூல்களுள் சிறியது = இன்னா நாற்பது
  • நீதி நூல்களுள் பெரியது = திருக்குறள்
  • அகநூல்களுள் சிறியது = கார் நாற்பது
  • அகநூல்களுள் பெரியது = திணைமாலை நூற்றைம்பது
  • இரட்டை அறநூல்கள் = இன்னா நாற்பது, இனியவை நாற்பது

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் அட்டவணை:

எண்நூல்
பொருள்
பாடல்
ஆசிரியர்
1
நாலடியார்
அறம்
400
சமண முனிவர்கள்
2
நான்மணிக்கடிகை
அறம்
106
விளம்பிநாகனார்
3
இன்னா நாற்பது
அறம்
40
கபிலர்
4
இனியவை நாற்பது
அறம்
40
பூதஞ்சேந்தனார்
5
திருக்குறள்
அறம்
1330
திருவள்ளுவர்
6
திரிகடுகம்
அறம்
100
நல்லாதனார்
7
ஆசாரக்கோவை
அறம்
100
பெருவாயில் முள்ளியார்
8
பழமொழி நானூறு
அறம்
400
முன்றுறை அரையனார்
9
சிறுபஞ்சமூலம்
அறம்
102
காரியாசான்
10
முதுமொழிக் காஞ்சி
அறம்
100
கூடலூர் கிழார்
11
ஏலாதி
அறம்
80
கணிமேதாவியார்
12
கார் நாற்பது
அகம்
40
கண்ணன் கூத்தனார்
13
ஐந்திணை ஐம்பது
அகம்
50
மாறன் பொறையனார்
14
ஐந்திணை எழுபது
அகம்
70
மூவாதியார்
15
திணைமொழி ஐம்பது
அகம்
50
கண்ணன் சேந்தனார்
16
திணைமாலை நூற்றைம்பது
அகம்
150
கணிமேதாவியார்
17
கைந்நிலை
அகம்
60
புல்லாங்காடனார்
18
களவழி நாற்பது
புறம்
40
பொய்கையார்
18
இன்னிலை
புரம்
45
பொய்கையார்

No comments:

Post a Comment