Tuesday, 31 March 2015

தூது

தூது

  • தன் கருத்தைப் பிறிதொருவருக்கு தெரிவிக்குமாறு இடையில் ஒருவரைத் தன் சார்பாக அனுப்புவதே தூது.
  • தூது இரு வகைப்படும் = அகத்தூது, புறத்தூது
  • “காமம் மிக்க கழிபடர் கிளவி” என்ற தொல்காப்பிய அடியின் அடிப்படையில் தோன்றிய இலக்கியம் தூது
  • “தொடை(மாலை) வாங்கி வா” என்று கூறும் இலக்கியம் தூது
  • தூது கலிவென்பாவால் பாடப்படுவது
  • முதல் தூது நூல் = நெஞ்சு விடு தூது(உமாபதி சிவம்)
  • தூதின் இலக்கணம் கூறும் நூல் = இலக்கண விளக்கப் பாட்டியல்
  • தூதாக அனுப்பப்படுபவை = அன்னம், மயில், கிலி, குயில், வண்டு, நெஞ்சம், முகில், தென்றல், மான், தமிழ்
  • இப்பத்தும் தூதாக அனுப்பி பாடியவர் = மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை(தச விடு தூது)

தூது நூல்கள்:

உமாபதி சிவம்நெஞ்சு விடு தூது(முதல் தூது நூல்)
பலபட்டடை சொக்கநாதப் புலவர்அழகர் கிள்ளை விடு தூது
சுப்ரதீபக் கவிராயர்விறலி விடு தூது
வெள்ளைவாரணர்காக்கை விடு தூது
ஆசிரியர் பெயர் தெரியவில்லைதமிழ் விடு தூது
அமிர்தம் பிள்ளைதமிழ் விடு தூது
மீனாட்சிசுந்தரம் பிள்ளைதச விடு தூது

நெஞ்சு விடு தூது:

  • இந்நூலின் ஆசிரியர் உமாபதி சிவம்
  • ஆசிரியர் தம்மை தலைவியாகவும், தம் குருநாதர் மறைஞான சம்பந்தரைத் தலைவனாகவும் வைத்துப் பாடியுள்ளார்.
  • இந்நூலில் 129 கண்ணிகள் உள்ளன.

தமிழ் விடு தூது:

  • ஆசிரியர் பெயர் தெரியாத இத்தூது நூல் மிக சிறப்பான நூல் ஆகும்.
  • மதுரை சொக்கநாதரிடம் தலைவி ஒருத்தி தமிழை தூது அனுப்புகின்றாள்.
  • இந்நூலில் 268 கண்ணிகள் உள்ளன.

அழகர் கிள்ளை விடு தூது:

  • திருமாலிருஞ்சோலை மலையில் கோவில் கொண்டிருக்கும் அழகரிடத்து பலபட்டடைச் சொக்கநாத பிள்ளை என்ற புலவர் கிளியைத் தூது விடுவதாக அமைத்துப் பாடியிருப்பது அழகர் கிள்ளை விடு தூது ஆகும்.
  • இந்நூல் 250 ஆண்டுகளுக்கு முந்தைய நூலாகும்.
  • இந்நூல் காப்பு வெண்பா ஒன்றையும் 239 கண்ணிகளையும் உடையது.
  • பாட்டின் இரண்டு அடி கண்ணி எனப்படும்.
  • சொக்கநாதப் பிள்ளை மரபினர் பலபட்டடைக்கணக்கு என்னும் ஒருவகைப் பணியைச் செய்து வந்தனர்.
  • இவர் தந்தையார் பெயர் சொக்கலிங்கம் பிள்ளை.
  • நூல்கள் = மதுரை மும்மணிக்கோவை, தென்றல் விடு தூது போன்றவை

No comments:

Post a Comment