இன்னா நாற்பது
இன்னா நாற்பது
இன்னா நாற்பதின் உருவம்:
- ஆசிரியர் = கபிலர்
- பாடல்கள் = 1 + 40
- பாவகை = வெண்பா
பெயர்க்காரணம்:
- இன்னா = துன்பம். இன்னது இன்னது இன்னா என நாற்பது பாடல்களில் கூறுவதால் இன்னா நாற்பது எனப்படுகிறது.
கடவுள் வாழ்த்து:
- கடவுள் வாழ்த்தில் சிவன், பலராமன், திருமால், முருகன் என்னும் நான்கு கடவுளரையும் வணங்காமை துன்பம் எனக் கூறுகிறார்.
பொதுவான குறிப்புகள்:
- இந்நூல் துன்பம் கொடுக்கும் செயல்களை தொகுத்துக் கூறும் நூல்.
- இந்நூல் அம்மை என்ற வனப்பிற்கு உரியது.
- கபிலரிடம் சைவவைணவ பேதம் இல்லை.
- சங்க கால கபிலரும், இவரும் வேறு வேறு.
- இந்நூலில் 164 இன்னாத செயல்கள் கூறப்பட்டுள்ளன.
ஐந்து கபிலர்:
- பாரி மன்னனை பாடிய சங்கக் கபிலர்
- இன்னா நாற்பது பாடிய கபிலர்
- பதினொன்றாம் திருமுறையில் கூறப்படும் கபிலதேவநாயனார்
- பன்னிரு பாட்டிலில் சில பாடல்களை பாடிய கபிலர்
- அகவற்பா பாடிய கபிலர்.
முக்கிய அடிகள்:
- உண்ணாது வைக்கும் பெரும்பொருள் வைப்புஇன்னா
- தீமையுடையார் அருகில் இருத்தல் இன்னா
- ஊனைத் தின்று ஊனைப்பெருக்கல் முன்னின்னா
- குழவிகள் உற்றபிணி இன்னா
- இன்னா பொருள் இல்லார் வண்மை புரிவு
No comments:
Post a Comment