வரலாறு | பிளஸ்டூ சாதனையாளர்கள்
டாக்டர் பீம்ராவ் அம்பேத்கார்
• தனது வாழ்நாள் முழுவதையும் தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகவே அர்பணித்தார்.
• 1924-ல் பம்பாயில் “பகிஷ்கிரிட் ஹிட்காரினி சபை” என்ற அமைப்பையும் தொடங்கினார்.
• ஜாதி கொடுமையை எதிர்த்து “அகில பாரதிய தத்வர்க்க சபை” என்ற அமைப்பையும் தோற்றுவித்தார்.
மெக்காலே பிரபு
• 1835-ல் கல்வி வளர்ச்சி குறித்து பரிந்துரைகளை அறிவிக்க மெக்காலே பிரபு தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
• மெக்காலே பிரபு ஆங்கில மொழி வழிக்கல்வியை ஆதரித்த தனது புகழ்மிக்க அறிவிப்பை பெண்டிங் பிரபுவிடம் அறிவித்தார்.
• இதன்மூலம் 1835-மார்ச் 7-ல் இருந்து ஆங்கில மொழி பயிற்சி மொழியானது.
• ஐரோப்பிய இலக்கியம், அறிவியல் ஆகியவை இந்திய மக்களுக்கு ஆங்கில வழியில் கற்பிக்க வேண்டும் என மெக்காலே வயுறுத்தினார்.
பானர்மேன்
• கட்டபொம்மனுக்கு எதிராக பிரிட்டிஷ் படைகளுக்கு தலைமை வகித்தவர் “பானர் மேன்”
• 1799-ல் கட்டபொம்மனுக்கு இறுதி எச்சரிக்கைவிட்டு பாளையங்கோட்டையில் வந்து சந்திக்குமாறுகூறினார்.
• “களப்பூர்” காட்டில் கட்டபொம்மனை பிடித்து புதுக்கோட்டை ஆட்சியாளர், பிரிட்டிஷாரிடம் ஒப்படைத்தார்.
• பானர்மேன் கயத்தாறில் விசாரணை நடத்தி கட்டபொம்மனுக்கு தூக்கு தண்டனை விதித்தார்.
சர் ஜான் கிரடாக்
• 1806-ல் வேலூர் கலகத்திற்கு முக்கியகாரணமாக விளங்கியது “சர் ஜான் கிரடாக்” என்ற படைதளபதி அறிமுகப்படுத்திய சீருடையாகும்.
• இந்த புதிய தலைப்பாகையுடன் கூடிய சீருடை “ஐரோப்பிய தொப்பியை” போலவே இருந்தது.
• மேலும் காதணிகளை அணிவதும், சமய சின்னங்களை இட்டுக்கொள்வதும் தடை செய்யப்பட்டன
• இதனால் இந்திய சிப்பாய்கள் “தங்களை கிறிஸ்துவ சமயத்திற்கு” மாற்றும் முயற்சிக்கு இது முன்னோடி என கருதி கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
ஜான்சிராணி “லட்சுமிபாய்”
• ஜான்சி நாட்டின் அரசர் கங்காதரராவின் மனைவி “ராணி லட்சுமிபாய்”
• 1857-பெரும் கலகத்தில் பெரும் பங்கு வகித்தவர்.
• டல்ஹவுசியின் வாரிசு இழப்புக் கொள்கையால் நேரடியாக பாதிக்கப்பட்டு ஜான்சி ஆட்சியை இழந்தவர்
• தாந்தியா தோபே-வுடன் இணைந்து குவாயரை கைப்பற்றினார்.
• 1858-ல் “சர்ஹோரோஸ்” என்ற ஆங்கில படை தளபதியால் ராணி லட்சுமி பாய் கொல்லப்பட்டார்.
சர் வில்லியம்ஹண்டர் குழு
• 1882-ல் சர் வில்லியம் ஹண்டர் தலைமையில் கல்வியை மேம்படுத்த ரிப்பன் பிரபு குழு ஒன்றை ஏற்படுத்தினார்.
• தொடக்க கல்வியை மேம்படுத்தி விரிவுபடுத்த வேண்டும் என இக்குழு பரிந்துரைத்தது.
• இலக்கியக் கல்வி, தொழிற்கல்வி என இரண்டு கல்வி நிலையை இக்குழு கூறியது.
சுய மரியாதை இயக்கம் (அல்லது) ஈ.வே.ரா.பெரியார்.
• ஈ.வே.ரா.பெரியார் 1925-ல் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார்.
• ஜாதிமுறை, குழந்தைகள் திருமணம், பிராமணிய ஆதிக்கம் போன்றவற்றை எதிர்த்துபோராடினார்.
• விதவை திருமணம், கலப்பு திருமணம், சுயமரியாதை திருமணம் ஆகியவற்றை ஆதரித்தார்.
• குடியரசு, புரட்சி, விடுதலை போன்ற தமிழ் ஏடுகள் நடத்தினார்.
• 1938-ல் தமிழ்நாடு பெண்கள் மாநாட்டில் ஈ.வே.ராவுக்கு “பெரியார்” பட்டம் வழங்கப்பட்டது.
• ஐ.நா.வின் யுனெஸ்கோ நிறுவனம் தந்தை பெரியாரை “தெற்கு ஆசியாவின் சாக்ரடிஸ்”என பாராட்டி போற்றியது.
லியானார்டோ டாவின்சி
• பிளாரன்ஸ் நகரில் பிறந்தவர், மறுமலர்ச்சி காலத்தில் இத்தாலிய ஓவியங்களில் சிறந்தவர்.
• கலைஞர், கவிஞர், இசைவாணர், பொறியியல் வல்லுநர், ஓவியர்
• மறுமலர்ச்சி கால மனிதர் என போற்றப்பட்டவர்.
• மிலான் நகரத்து கோமகனால் ஆதரிக்கப்பட்டவர்.
• மோனலிசா இறுதி விருந்து ஆகியன அவரது புகர் பெற்ற ஓவியங்கள்.
No comments:
Post a Comment