Friday, 20 March 2015

வரலாறு | பிளஸ் டூ |

வரலாறு | பிளஸ் டூ | வில்லியம் பெண்டிங் பிரபு சீர்திருத்தங்கள்

• பெண்டிங் பிரிவு 1828-ல் தலைமை ஆளுநராக பதவியேற்றார்.

• பெண்டிங் ஒரு முற்போக்கு சீர்திருத்த சகாப்தத்தையே தொடங்கி வைத்தார் எனலாம்.

• இந்திய மக்களின் நலனை பேணுவது இந்தியாவில் ஆளும் பிரிட்டிஷரின் தலையாய கடமை என பெண்டிங் நம்பினார்.

• கணவர்இறந்தவுடன் அவரின் சிதையிலேயே மனைவியை தள்ளி கொன்றுவிடும் பண்டைய முறை சதி என்று அழைக்கப்பட்டது.

• மனிதாபமற்ற இக்கொடுஞ்செயல் வட இந்தியாவில், கல்கத்தாவில் அதிகமாக காணப்பட்டது.

• வங்காளத்தில் ஒரே ஆண்டில் 800 நிகழ்வுகள் நடைபெற்றன என்ற செய்தி கேட்டு பெண்டிங் அதிர்ச்சியடைந்தார்.

• 1829-ல் டிசம்பர் 4-ல் விதிமுறை 17-ன்படி இவ்வழக்கத்தை பெண்டிங் தடை செய்தார்.

• இதன் மூலம் சதி எனும் உடன்கட்டை ஏறும் வழக்கம் சட்டப்படி ஒழிக்கப்பட்டது.

• இச்சட்டம் 1830-ல் சென்னை பம்பாய் மாகணங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

• தக்கர்கள் என்பவர்கள் மத்திய மற்றும் வட இந்தியாவில் இருந்த வழிப்பறி கொள்ளையர்கள் ஆவார்கள்.

• இவர்கள் 50 அல்லது 100 பேர் கொண்ட குழுக்களாக செயல்பட்டனர்.

• வணிகர்களாகவோ அல்லது யாத்ரீகர்களாகவோ மாறுவேடம் அணிந்து பயணிகளின் கழுத்தை நெரித்து கொன்று வழிபறியில் ஈடுபடுவது வழக்கம்.

• 1830-ல் தக்கர்களுக்கு எதிரான நடவடிக்கையை கர்னல் சீலீமேன் தொடங்கினார்.

• 5 ஆண்டுகளில் 2000 பேர் பிடிபட்டனர் பெரும்பாலனோர் கொல்லப்பட்டனர்.

• எஞ்சியவர்கள் அந்தமான நிக்கோபார் தீவுகளுக்கு அனுப்பப்பட்டனர்.

• இதனால் சர் வில்யம் சீமேன் தக்கீ சீமேன் என அழைக்கப்பட்டார்.

• ராஜபுதனம், பஞ்சாப், மாளவளம், கட்ச் போன்ற பகுதிகளில்பெண் குழந்தைகளை கொல்லும் இந்த வழக்கம் பரவியிருந்தது.

• வங்காளத்தில் சவுகர் தீவில் குழந்தை பசடங்கு நடைபெற்று வந்தது.

• பெண்டிங் பிரபு பெண் சிசுக்கொலை, குழந்தை பபழக்கங்களை ஒழிக்க சட்டங்களை கொண்டு வந்து அது தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்தார்.

• இந்தியாவில் கல்வி வளர்ச்சி குறித்து பரிந்துரைகள் செய்வதற்கு மெக்காலே பிரவு தலைமையில் அவர் குழுவை நியமித்தார்.

• மெக்காலே பிரபு தனது அறிக்கையில் ஐரோப்பிய இலக்கியம், அறிவியலை இந்திய மக்களுக்கு ஆங்கில வழியில் தான் கற்பிக்க வேண்டும் என வயுறுத்தினார்.

• இதனை ஏற்று பெண்டிங் பிரபு 1835-ல் ஆங்கிலத்தை இந்தியாவின் ஆட்சிமொழியாகவும் இலக்கிய மொழியாகவும் அறிவித்தார்.

• பெண்டிங் பிரபு கல்கத்தா மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார்.

No comments:

Post a Comment