அகநானூறு
அகநானூற்றின் உருவம்:
- திணை = அகத்திணை
- பாவகை = ஆசிரியப்பா
- பாடல்கள் = 400
- பாடியோர் = 145
- அடி எல்லை = 13-31
பெயர்க்காரணம்:
- அகம் + நான்கு + நூறு = அகநானூறு
- அகத்திணை பற்றிய நானூறு பாடல்கள் கொண்டுள்ளதால் அகநானூறு எனப் பெயர் பெற்றது.
வேறு பெயர்கள்:
- அகம்
- அகப்பாட்டு
- நெடுந்தொகை
- நெடுந்தொகை நானூறு
- நெடும்பாட்டு
- பெருந்தொகை நானூறு
தொகுப்பு:
- தொகுத்தவர் = உப்பூரி குடிகிழார் மகனார் உருத்திரசன்மனார்
- தொகுப்பித்தவர் = பாண்டியன் உக்கிர பெருவழுதி
உரை, பதிப்பு:
- நூலிற்கு முதலில் உரை எழுதியவர் = நா.மு.வேங்கடசாமி நாட்டார்
- நூலை முதலில் பதிப்பித்தவர் = வே. இராசகோபால் ஐயர்
நூலின் மூவகை பாகுபாடுகள்:
- 1-120 = களிற்றியானை நிரை
- 121-300 = மனிமிடைப்பவளம்
- 301-400 = நித்திலக்கோவை
தினைப் பாகுபாடு:
- 1,3,5,7,9 என வருவன = பாலைத்திணை( 200 பாடல்கள்)
- 2,8,12,18 என வருவன = குறிஞ்சித்திணை( 80 பாடல்கள்)
- 4,14,24 என வருவன = முல்லைத்திணை( 40 பாடல்கள்)
- 6,16,26 என வருவன = மருதத்திணை( 40 பாடல்கள்)
- 10,20,30 என வருவன = நெய்தல் திணை( 40 பாடல்கள்)
ஒன்றுமூன்று ஐந்துஏழ்ஒன் பான்பாலை; ஓதாது நின்றவற்றில் நான்கு நெறிமுல்லை; அன்றியே ஆறாம் மருதம்; அணிநெய்தல் ஐயிரண்டு கூறாதவை குறிஞ்சிக் கூற்று பாலைவியம் எல்லாம்; பத்தாம் பனிநெய்தல் நாலு நளிமுல்லை; நாடுங்கால் மேலையோர் தேரும் இரண்டொட்டு இவைகுறிஞ்சி; செந்தமிழின் ஆறு மருதம் அகம் |
அகநானூறு குறிப்பிடும் அரசர்கள்:
அதியமான் | எழினி |
சோழன் கரிகாலன் | பாண்டியன் நெடுஞ்செழியன் |
உதியஞ் சேரலாதன் | ஆதிமந்தி |
கடவுள் வாழ்த்து:
- இந்நூலின் கடவுள் வாழ்த்து பாடியவர் = பாரதம் பாடிய பெருந்தேவனார்
- இந்நூலில் கடவுள் வாழ்த்து குறிப்பிடும் கடவுள் = சிவபெருமான்
பொதுவான குறிப்புகள்:
- சோழர்களின் குடவோலைத் தேர்தல் முறையை பற்றி கூறுகிறது.
- சங்க இலக்கியங்களுள் வரலாற்று செய்திகளை அதிகமாக கூறும் நூல் அகநானூறு.
- பண்டைய தமிழ் மக்களின் திருமண விழ நடைபெறும் விதம் பற்றி கூறுகிறது.
- அலெக்சாண்டரின் படையெடுப்புக்கு அஞ்சி நந்தர்கள் தமது செல்வங்களை எல்லாம் கங்கையாற்றின் அடியில் புதைத்து வைத்த செய்தி 20,25ஆம் பாடல்களில் கூறப்பட்டுள்ளது.
பாடல் அடிகள்:
- இம்மை உலகத்து இசையோடும் விளங்கி
மறுமை யுலகமும் மறுவின்றி எய்துப
செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச்
சிறுவர்ப் பயந்த செம்ம - நாவோடு நவிலா நகைபடு தீஞ்சசொல்
யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வன் - யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னோடு வந்து கறியோடு பெயரும் - செந்தார்ப் பைங்கிளி முன்கை ஏந்தி
இன்றுவரல் உரைமோ சென்றிசினோர் திறத்தென
இல்லவர் அறிதல் அஞ்சி மெல்லென
மழலை இன்சொல் பயிற்றும்
No comments:
Post a Comment