பரணி
- பரணி நூல்களின் இலக்கணம் கூறுவது = இலக்கண விளக்கப் பாட்டியல்
ஆணை ஆயிரம் அமரிடை வென்ற மாணவனுக்கு வகுப்பது பரணி |
- பரணி 13 உறுப்புகளைக் கொண்டது
- தோற்றவர் பெயரால் இந்நூல் அமையும்
- பரணி என்பது ஒரு நட்சத்திரம்(நாள்)
- இரண்டடித் தாழிசையால் பாடப்படுவது பரணியாகும்
- பரணியின் பாவகை = கலித்தாழிசை
- “பரணி என்ற நாள்மீன் காளியையும், யமனையும் தன் தெய்வமாக பெற்றது என்றும் அந்த நாள்மீனால் வந்த பெயரே நூலுக்கு பெயராகி வந்தது என்றும்” கூறுகிறார் உ.வே.சா
- போர்க்கடவுளாகிய கொற்றவைக்கு உரிய நாள் = பரணி
- முதல் பரணி நூல் = கலிங்கத்துப்பரணி
- பரணி பாடுவதில் வல்லவர் செயங்கொண்டார்
பரணி நூல்கள்:
கலிங்கத்துப்பரணி | செயங்கொண்டார் |
தக்கயாகப் பரணி | ஒட்டக்கூத்தர் |
அஞ்ஞவதைப் பரணி | தத்துவராயர் |
பாசவதைப் பரணி | வைத்திய நாத தேசிகர் |
கலிங்கத்துப்பரணி:
- முதல் பரணி நூல் இதுவே
- இந்நூலின் ஆசிரியர் = செயங்கொண்டார்
- இவர் தீபங்குடி என்னும் ஊரினர்
- முதல் குலோத்துங்க சோழனின் படைத்தளபதி கருணாகரத் தொண்டைமானை அனுப்பி கலிங்க மன்னன் ஆனந்தவர்மனை வென்றதை பற்றி கூறுகிறது இந்நூல்.
- இவரின் படைப்புகள் = தீபங்குடி பத்து, இசையாயிரம், மடல், உலா
- இந்நூலை “தென்தமிழ் தெய்வபரணி” என ஒட்டக்கூத்தர் பாராட்டுகிறார்.
- செயங்கொண்டாரை “பரணிக்கோர் செயங்கொண்டார்” என பலபட்டடை சொக்கநாதர் பாராட்டுகிறார்.
- இந்நூலில் 599 தாழிசைகள் உள்ளன.
- கருணாகரத் தொண்டைமானை “வாண்டையார் கோன்” என்கிறார் செயங்கொண்டார்
- இவர் “கவிச்சக்ரவர்த்தி” என்ற பட்டம் பெற்றவர்.
தக்கயாகப்பரணி:
- இதன் ஆசிரியர் = ஒட்டக்கூத்தர்
- தட்சன் சிவபெருமானை மதிக்காது யாகம் செய்ய அதனால் சினங்கொண்ட சிவனின் மைந்தன் வீரபத்திரன் யாகத்தை அழித்து, உதவிக்கு வந்தோரை வென்று தட்சனின் தலையைத் துண்டித்த புராண வரலாற்றை கூறுவது. தோற்ற தக்கனின் பெயரால் மரபுப்படி பெயர் பெற்றது.
- இவர் மலரி என்னும் ஊரினர்.
- இவரின் இயற்பெயர் = கூத்தன்
- இவரின் சிறப்புப்பெயர்கள் = கவிராட்சசன், கவிச்சக்ரவர்த்தி,காளக்கவி, சர்வஞ்சக் கவி, கௌடப் புலவர்
- இவரின் படைப்புகள் = மூவருலா, ஈட்டி எழுபது, குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ், அரும்பைத் தொள்ளாயிரம், காங்கேயன் நாலாயிரக்கோவை
- “கோவை உலா அந்தாதிக்கு ஒட்டக்கூத்தன்” என்ற சிறப்பு இவருக்கு உண்டு.
- தக்கயாகப்பரணியின் வேறு பெயர் = வீரபத்திர பரணி
- இவர் கலைமகளுக்கு என்று கூத்தனூரில் தனி கோயில் கட்டினார்
முத்தொள்ளாயிரம்
- முத்தொள்ளாயிரம் மூவேந்தர்களைப் பற்றிய 900 பாடல்களைக் கொண்டது.
- ஆயினும் இந்நூல் முழுமையாக கிடைக்கவில்லை.
- “புறத்திரட்டு” என்னும் நூல் வழியாக 108 வெண்பாக்களும், பழைய உரை நூல்களில் மேற்கோளாக 22 வெண்பாக்களும் கிடைத்துள்ளன.
- மூவேந்தர்களின் ஆட்சிச்சிறப்பு, படைச்சிறப்பு, போர்த்திறன், கொடை முதலிய செய்திகளை இப்பாடல்கள் விளக்குகின்றன.
- இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
- சேரர் பற்றி 23 பாடல்களும், சோழர் பற்றி 46 பாடல்களும், பாண்டியர் பற்றி 61 பாடைகளும் என மொத்தம் 130 பாடல்கள் கிடைத்துள்ளன.
- இதில் அகப்பாடல்கள் 75, புறப்பாடல்கள் 55 உள்ளன
No comments:
Post a Comment