கலித்தொகை
கலித்தொகையின் உருவம்:
- திணை = அகத்திணை
- பாவகை = கலிப்பா
- பாடல்கள் = 150
- அடி எல்லை = 11-80
- பாடியோர் = 5
பெயர்க்காரணம்:
- கலிப்பா வகையால் பாடப்பெற்ற ஒரே தொகை நூல் இதுவே.
கலிதொகையின் சிறப்பு:
திருத்தகு மாமுனி சிந்தாமணி கம்பன் விருத்தத் கவி வளமும் வேண்டோம் – திருக்குறளோ கொங்குவேள் மாக்கதையும் கொள்ளோம், நனி ஆர்வேம் பொங்கு கலி இன்பப் பொருள் |
என்றும் பழம் பெரும் புலவர்களால் பாராட்டப் பெற்றது.
வேறு பெயர்கள்:
- கலி
- குறுங்கலி
- கற்றறிந்தோர் ஏத்தும் கலி
- கல்விவலார் கண்ட கலி
- அகப்பாடல் இலக்கியம்
உரை, பதிப்பு:
- நூல் முழுமைக்கும் நச்சினார்கினியர் உரை உள்ளது.
- நூலை முதலில் பதிப்பித்தவர் = சி.வை.தாமோதரம்பிள்ளை
கடவுள் வாழ்த்து:
- இந்நூலின் கடவுள் வாழ்த்து பாடியவர் = பாரதம் பாடிய பெருந்தேவனார்
- இந்நூலில் கடவுள் வாழ்த்து குறிப்பிடும் கடவுள் = சிவபெருமான்
பாடியோர்:
பெருங்கடுங்கோன் பாலை; கபிலன் குறிஞ்சி; மருதனிள நாகன் மருதம்; - அருஞ்சோழன் நல்லுருந்திரன் முல்லை; நல்லந்துவன் நெய்தல் கல்விவலார் கண்ட கலி |
- பாலை திணை பாடல்கள் பாடியவர் = பெருங்கடுங்கோ (36 பாடல்கள்)
- மருதம் திணை பாடல்கள் பாடியவர் = மருதன் இளநாகனார் (36 பாடல்கள்)
- நெய்தல் திணை பாடல்கள் பாடியவர் = நல்லந்துவனார் (33 பாடல்கள்)
- குறிஞ்சி திணை பாடல்கள் பாடியவர் = கபிலர் (29 பாடல்கள்)
- முல்லை திணை பாடல்கள் பாடியவர் = சோழன் நல்லுருந்திரன் (17 பாடல்கள்)
தொகுப்பு:
- இந்நூலை தொகுத்தவர் நல்லந்துவனார்.
- தொகுப்பிதவர் பெயர் தெரியவில்லை.
- நூலின் முதலில் உள்ள கடவுள் வாழ்த்தையும் இறுதியில் உள்ள நெய்தற் களியையும் நல்லந்துவனாரே பாடி நூல் முழுவதையும் தொகுத்தார் என்பார் நச்சினார்கினியர்.
பொதுவான குறிப்புகள்:
- தொல்காப்பிய விதிப்படி கலிப்பாவால் அகத்திணையை பாடும் ஒரே எட்டுத்தொகை நூல் கலித்தொகை மட்டுமே.
- பா வகையால் பெயர் பெற்ற நூல்கள் = கலித்தொகை, பரிபாடல்
- கலித்தொகையின் பாடல்கள் ஓரங்க நாடக அமைப்பை பெற்றுள்ளது.
- பெண்கள் பிறந்த வீட்டுக்கு உரியவர் அல்லர் என கலித்தொகை கூறுகிறது.
- பாலை தினையை முதலாவதாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது
- நூல் முழுவதுமே பாண்டியர்களை பற்றிய குறிப்பே உள்ளது.
- பிற சங்க நூல்களில் கூறப்படாத, “கைக்கிளை, பெருந்திணை, மடலேறுதல்” போன்றவற்றை கூறியுள்ளது.
- கலித்தொகையை நல்லந்துவனார் மட்டுமே பாடினார் எனக்கூரியவர் சி.வை.தாமோதரம்பிள்ளை
- ஏறு தழுவுதல் பற்றி கூறும் ஒரே சங்க நூல் கலித்தொகை மட்டுமே
- பெருந்திணை, கைக்கிளை பாடல்கள் இடம்பெற்றுள்ள ஒரே சங்க நூல் கலித்தொகை மட்டுமே.
- காமக் கிழத்தி பேசுவதாக அமைந்த ஒரே சங்க நூல் கலித்தொகை.
- மகாபாரத கதையை மிகுதியாக கூறும் நூல் இதுவே.
முக்கிய அடிகள்:
- ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்
போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை
பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்
அன்பெனப்படுவது தன்கிளை செறா அமை
அறிவேனப்படுவது பேதையர் சொல் நோன்றல்
செரிவேனப்படுவது கூறியது மறா அமை - காழ்வரை நில்லாக் கடுங்களிற்று ஒருத்தல்
யாழ்வரைத் தங்கியாங்கு - பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை
மலையுளே பிறப்பினும் மலைக்கவைதாம் என்செய்யும்
No comments:
Post a Comment