நாட்டுப்புறப்பாடல்கள்
நாட்டுப்புறப்பாடல்கள்
- தமிழ் நாட்டுப்புறப் பாடலின் தந்தை = வானமாமலை
- நாட்டுப்புறப் பாடலுக்கு “நாட்டார் வழக்காற்றியல்” என்ற வேறு பெயரும் உண்டு
- நாட்டுப்புற பாடல்கள் நிலைத்த அமைப்பு உடையன இல்லை
- நிலைத்த அமைப்புடைய நாட்டுப்புறப் பாடல் வகை பிசி
- விடுகதையை தொல்காப்பியர் பிசி என்று கூறுகிறார்
- தொல்காப்பியர் கூறும் பண்ணத்தி என்பது நாட்டுப்புறப் பாடல்களைக் குறிக்கும் என்கிறார் பேராசிரயர்
- தொல்காப்பியர் கூறும் புலன் என்ற வனப்பு நாட்டுப்புறப் பாடலைக் குறிக்கும் என்கிறார் அழகப்பன்
- வள்ளைப்பாட்டு என்பது உலக்கைப் பாட்டு
- வள்ளைப் பாட்டைத் திருப்பொற்சுண்ணம் என்கிறார் மாணிக்கவாசகர்
- தோழியர் இருவர் விளையாட்டாகப் பாடுவது திருச்சாழல்
- தாலாட்டுப் பாடல் நீலாம்பரி ராகத்தில் பாடப்படும்
- ஒப்பாரிப் பாடலின் வேறு பெயர்கள் = பிலாக்கணம், கையறுநிலை, இரங்கற்பா
- காதல் சுவை மிகுந்த பாடல் தெம்மாங்கு(தேன்+பாங்கு)
- பழமொழிப் பதிகம் பாடியவர் திருநாவுக்கரசர்
- ஏறு தழுவுதல் பற்றி கூறும் ஒரே சங்க நூல் = கலித்தொகை
- முதல் நாட்டுப்புறப் பாடல் தொகுப்பு = காற்றிலே மிதந்த கவிதை(மு.அருணாசலம்)
- முதல் நாட்டுப்புறக் கதைப்பாட்டு = பவளக்கொடி மாலை(கருணானந்த சாமி)
No comments:
Post a Comment