Tuesday, 31 March 2015

கடித இலக்கியம்- நேரு-காந்தி கடிதம்-மு.வ-அண்ணா

கடித இலக்கியம் - நேரு

  • நேரு இந்திர காந்திக்கு 1922 முதல் 1964 வரை, மொத்தம் 42 ஆண்டுகள் கடிதம் எழுதினார்.
  • இந்திர காந்தி, மேற்கு வங்காளத்தில், சாந்தி நிகேதன் என்னுமிடத்தில் உள்ள தாகூரின் விஸ்வபாரதி கல்லூரியில் படித்தார்.
  • நேரு கடிதம் எழுதியது உத்திராஞ்சல் மாநில அல்மோரா மாவட்ட சிறையில் இருந்து. நாள்: 22.02.0935
  • நேரு படித்தது இங்கிலாந்தில் உள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்தில்.
  • புத்தகம் வாசிப்பதை கடமையாகவோ, கட்டயப்படுதவோ கூடாது என்கிறார் நேரு.
  • மேலும் நேரு, பிளோட்டோவின் புத்தகங்கள் சுவையானவை, சிந்தனையை தூண்டுபவை என்றும் கூறுகிறார். சுருக்கமாகவும், வாசிக்க எளிதாகவும் இருக்கும் கிரேக்க நாடகங்கள் நம் ஆர்வத்தை தூண்டும் என்றும் கூறுகிறார். காளிதாசரின் சாகுந்தலம் நாடகம் படிக்க வேண்டிய நூல் என்றும் கூறுகிறார்.
  • டால்ஸ்டாயின் “போரும் அமைதியும்” என்ற நாவல், உலகில் மிகச் சிறந்த நூல்களில் ஒன்று எனவும், பெர்னார்ட்ஷாவின் நூல்கள் வாசிக்க தகுந்தவை என்றும் கூறுகிறார்.
  • நேருக்கு மிகவும் பிடிதமானவார் ஆங்கில சிந்தனையாளரும் கல்வியாளருமான பிட்ராந்து ரஸ்ஸல்.
  • புத்தக படிப்பு என்பது 1000 முகங்கள் கொண்ட வாழ்கையை புரிந்து கொள்ள பயன்படும் என்கிறார்.
  • கேம்ப்ரிட்ஜ் – இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழகம்
  • சேக்ஸ்பியர் – ஆங்கில நாடக ஆசிரியர்
  • மில்டன் – ஆங்கில கவிஞர்
  • பிளேட்டோ –கிரேக்கச் சிந்தனையாளர்
  • காளிதாசர் – வடமொழி நாடக ஆசிரியர்
  • டால்ஸ்டாய் – ரஷ்ய நாடு எழுத்தாளர்
  • பெர்னார்ட் ஷா – ஆங்கில நாடக ஆசிரியர்
  • பெட்ரண்ட ரஸ்ஸல் – சிந்தனையாளர், கல்வியாளர்
  • அல்மோரா சிறை – உத்தராஞ்சல் மாநிலத்தில் உள்ளது
  • கிருபளானி – விஸ்வபாரதியில் பணிபுரிந்த ஒரு பேராசிரியர்

காந்தி கடிதம்

  • 1917ஆம் ஆண்டு புரோச் நகரில் நடைபெற்ற இரண்டாவது  கல்வி மாநாட்டில் காந்தியடிகள் நிகழ்த்திய தலைமை உரை, மாணவர்களக்கு ஏற்ற வானம் கடித வடிவில் அமைகப்பட்டுள்ளது.
  • பயிற்று மொழி பற்றிய நிறைவான முடிவிற்கு வருவதை பற்றிய நோக்கம்.
  • பயிற்றுமொழி குறித்து சிந்திக்காமல் கல்வி கற்பிப்பது, அடித்தளம் இல்லாமல் கட்டடத்தை எழுப்புவதை போன்றது என்கிறார்.
  • கவி இரவிந்த்ரநாத் தாகூரின் இர்பான இலக்கிய நடையின் உயர்விற்குக் காரணம் ஆங்கிலத்தில் அவருக்கு உள்ள அறிவு மட்டுமன்று, தம்முடைய தாய்மொழியில் அவருக்கு இருந்த பற்றும் தான்.
  • முன்சிராம் பேசும் பொது குழந்தைகள், ஆண்கள், பெண்கள் அனைவரும் மிகுந்த ஈடுபாட்டுடன் கேட்பதற்கு காரணம் அவர்தம் தாய்மொழி அறிவே.
  • மதன்மோகன் மாளவியாவின் ஆங்கில பேச்சு வெள்ளியைப்போல் ஒளிவிட்டாலும், அவரின் தாய்மொழிப் பேச்சு தங்கதிப் போன்று ஒழி வீசுகின்றது.
  • தாய்மொழியை வளமுறச் செய்வதற்கு தேவையானது, தங்கள் தாய்மொழியில் உள்ள அன்பும் மதிப்பும்தான்.
  • மக்கள் அறிவுள்ளவர்களாக இருந்தால், அவர்தம் மொழியும் அவ்வாறே அமையும்.
  • தாய்மொழியில் மூலம் நமக்குத் கல்வி அளிக்கப்பட்டிருந்தால் நம்மிடையே பல போஸ்களும் இராய்களும் தோன்றிஇருப்பார்கள்.
  • பள்ளிக்கூடம் வீட்டைப் போன்று இருக்க வேண்டும். குழந்தைக்கு வீட்டில் தோன்றும் எண்ணங்களுக்கும் பள்ளியில் ஏற்படும் எண்ணங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும்.
  • தாய்மொழியைக் கற்பித்தல் மொழியாக வைத்துக்கொண்டால், ஆங்கிலத்தில் அறிவைப் பெறுவது பாதிக்கப்படுமா, இல்லையா என்பதை பற்றி சிந்தனை செய்ய வேண்டியது இல்லை என்கிறார்.
  • தாய்மொழியில் அறிவை பெறுவதே சிறந்தது என்கிறார்.

மு.வ

  • அன்னைக்கு, தம்பிக்கு, தங்கைக்கு, நண்பர்க்கு என நான்கு கடித இல்லக்கிய நூல்களை எழுதியுள்ளார்
  • மு.வ.வின் பிற நூல்களுக்கான திறவுகோல் அவர்தம் கடித இலக்கியங்களே என்பர்
  • தம்பிக்கு எழுதிய கடிதத்தில் அவர் கூறியுள்ளது
  • தமிழரின் ஒற்றுமை
  • தனி ஒருவரின் உயர்வு இன உயர்வு ஆகாது
  • தமிழ்மொழி ஒன்றே தமிழரைப் பிணைத்து ஒற்றுமைப்படுத்தும்
  • ஆட்சி மொழி என்றால் எவ்வகை கல்லூரிகளிலும் எல்லாப் பாடங்களையும் தமிழிலேயே கற்பிக்க வேண்டும்
  • கடிதம், பணவிடை, விளம்பரப் பலகை, விற்பனைச்சீட்டு முதலியவை எல்லாம் தமிழில் எழுத வேண்டும்
  • சாதிசமய வேறுபாடுகளை மறக்கக் கற்றுக்கொள்; மறக்க முடியாவிட்டால் புறக்கணிக்கக் கற்றுக்கொள்
  • வெளிநாட்டுத் துணியை மறுப்பதுபோல் தமிழ்நாட்டுக்கும் தமிழ்மொழிக்கும் நன்மை செய்யாத செய்தித்தாளைகளை விலக்கு
  • தமிழர் நடத்தும் கடைகளையும் தொழிற்கூடங்களை போற்று
  • தமிழர் கடை தொலைவில் இருந்தாலும், விலை கூடுதலாக இருந்தாலும், ஏதேனும் குறை இருந்தாலும் அங்கேயே சென்று வாங்கு
  • கூடிய வரையில் தமிழ்நாட்டில் தமிழ்த் தொழிலாளர்களால் செய்யப்பட்ட பொருள்களையே வாங்கு
  • தமிழரிடையே பகையையும் பிரிவையும் வளர்க்கும் எந்தச் செயலையும் செய்யாதே, பேசாதே எண்ணாதே
  • கொள்கைகள், கட்சிகள், இயக்கங்களைவிட நாட்டு மக்களின் நன்மையே பெரிது
  • தலைமை உன்னைத் தேடி வந்தால் வரட்டும்; நீ அதைத் தேடி அலையாதே
  • தொண்டுக்கு முந்து; தலைமைக்குப் பிந்து
  • ஒவ்வொருவரும் ஆணையிடுவதற்கு விரும்புகிறார். அடங்கி ஒழுகுவதற்கு யாரும் இல்லை. அதனால் தான் வீழ்ச்சி நேர்ந்தது

அண்ணா

  • “திராவிட நாடு” என்ற இதழில் கடிதங்களை எழுதினார்
  • “தம்பிக்கு” என எழுதினார்
  • இவர் கடிதங்கள் சிந்தனையைத் தூண்டின
  • பிற தலைவர்கள் செய்யாத வகையில் தம் கட்சியினரை எல்லாம் குடும்ப உறுப்பினராக்கி, அண்ணன், தம்பி உறவில் பினைதுக்கொண்டார்
  • இவர் தம் கடிதத்தில் தமிழ், தமிழர், தமிழ்ப்பண்பாடு, தமிழர் தாழ்வும் உயர்வும் தமிழர் செய்யவேண்டியது, பகுத்தறிவு, ஆரிய எதிர்ப்பு போன்ற கருத்துகள் மிளிர்கின்றன

ஆனந்தரங்கர் நாட்குறிப்பு

வரலாற்று ஆவணம்:

  • ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு ஓர் இலக்கியமாகவும், வரலாற்று ஆவணமாகவும் மதிக்கப் பெற்றது.

இளமைக்காலம்:

  • ஆனந்தரங்கர் சென்னை பெரம்பூரில் பிறந்தவர்.
  • இவரின் தந்தை = திருவேங்கடம்
  • இவர் தன் மூன்றாம் வயதில் தன் தாயை இழந்தார்.
  • இவர் “எம்பார்” என்பவரிடம் கல்வி கற்றார்.

புதுவைக்கு செல்லுதல்:

  • இவரின் தந்தை திருவேங்கடம், மைத்துனர் நைனியப்பரின் வேண்டுகோளுக்கு இணங்க புதுவையில் குடியேறினார்.
  • அங்கு அரசுப்பணியில் உதவியாளராகச் சேர்ந்து, நாளடைவில் திவானாகப் பதவி உயர்வு பெற்றார்.

துபாசி:

  • ஆனந்தரங்கர் கல்வி கற்றபின்னர், பாக்குக் கிடங்கு நடத்தி வந்தார்.
  • “துய்ப்ளே” என்னும் ஆளுநரின் மொழிபெயர்ப்பாளர்(துபாசி) இறந்ததால், ஆனந்தரங்கர் அப்பணிக்கு அமர்த்தப்பட்டார்.

ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு:

  • ஆனந்தரங்கர் துபாசியாகப் பணியாற்றிய காலத்தில், 1736ஆம் ஆண்டு முதல் 1761ஆம் ஆண்டு வரை ஏறத்தாழ 25 ஆண்டுகள் நாட்குறிப்பு எழுதியுள்ளார்.
  • தம் நாட்குறிப்புக்கு “தினப்படிச் செய்திக்குறிப்பு”, “சொஸ்த லிகிதம்” எனப் பெயரிட்டார்.

வரலாற்றுச் செய்திகள்:

  • பிரெஞ்சுப்படை காரைக்காலைப் பிடிக்கச் சென்று தோல்வியடைந்தது, தில்லியின் மீது பாரசீகப் படையெடுப்பு, குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கிய செய்திகள், இலபூர்தொனோ கப்பல் பிரெஞ்சு நாட்டில்லிருந்து சென்றது, வெளிநாட்டுப் பயணிகள் வந்து சென்ற நிகழ்வுகள் முதலிய முக்கிய வரலாற்றுச் செய்திகள் இடம் பெற்றுள்ளது.
  • ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு வரலாற்றுக் கருவூலமாகத் திகழ்கிறது.

வணிகச் செய்தி:

  • துறைமுக நகரங்களில் உள்ள மக்களின் வருவாய்க்கு அடிப்படையாய் அமைவது அங்கு வரும் கப்பல்களின் போக்குவரத்தே ஆகும்.
  • புதுச்சேரிக்கு கப்பல்கள் வந்த செய்தி கேட்டதும் மக்கள் மகிழ்தனர்.
  • அது குறித்து, “நாட்பட்ட திரவியம் மீண்டும் கிடைத்தாற் போலவும், மரணமுற்ற உறவினர்கள் உயிர்பெற்று எழுந்து வந்தது போலவும், அவரவர் வளவிலே கலியாணம் நடப்து போலவும், நீண்டநாள் தவங்கிடந்து புத்திர பாக்கியம் கிட்டினாற் ஒளவும், தேவாமிர்த்ததைச் சுவைத்துபோலவும் சந்தோஷித்தார்கள்; அதைக் காகிதத்தில் எழுத முடியாது” என்று குறிப்பிட்டுளார்.

தண்டனைச் செய்தி:

  • நீதி வளங்கள், தண்டனை அழித்தல் முதலிய செய்திகளும் நாட்குறிப்பில் இடம் பெற்றுள்ளன.
  • திருட்டு கும்பலின் தலைவனுக்கு கடைத் தெருவில் தூக்கில் இடப்பட்டது என்ற செய்தி குறிகப்படுள்ளது.

பண்பாட்டு நிலை:

  • ஆனந்தரங்கர், தம் நாட்குறிப்பில் தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான உறவு, பெரியவர்களை மதிக்கும் பண்பு, பெரியவர்களுக்கு வணக்கம் செய்தல், கோவில் திருவிழாக்கள், பலகை வழக்கங்கள், சடங்குகள் போன்றவற்றை குறித்துள்ளார்.

ஆனந்தரங்கர் பெற்ற சிறப்புகள்:

  • முசபர்சங், ஆனந்தரங்கருக்கு மூவாயிரம் குதிரைகளை வழங்கி, அவருக்கு “மண்சுபேதார்” என்னும் பட்டம் வழங்கினார்.
  • பின்பு செங்கல்பட்டு கோட்டைக்கு தளபதியாகவும், பின்பு அம்மாவட்டம் முழுமைக்கும் ஜாகிர்தாராகவும் நியமித்தார்.
  • ஆளுநர் மாளிகைக்குள் பல்லகில் செல்லும் உரிமை அவருக்கு வழங்கப்பட்டது.
  • அவர் தங்கப் பிடி போட்ட கைத்தடி வைத்துக்கொள்ளவும் செருப்பணிந்து ஆளுநர் மாளிகைக்குள் செல்லவும் உரிமை பெற்றிருந்தார்.

பெப்பிசு:

  • உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் முன்னோடி = பெப்பிசு
  • இந்தியாவின் பெப்பிசு = ஆனந்தரங்கர்
  • நாட்குறிப்பு வேந்தர் = ஆனந்தரங்கர்

பிறமொழி சொற்கள்:

  • சொஸ்த = தெளிந்த அல்லது உரிமையுடைய
  • லிகிதம் = கடிதம் அல்லது ஆவணம்
  • வளவு = வீடு
  • துபாசி = இருமொழிப்புலமை உடையவர்(மொழிப்பெயர்ப்பாளர்)
  • டைஸ் என்னும் இலத்தின் சொல்லுக்கு நாள் என்பது பொருள்.
  • இச்சொல்லில் இருந்து டைரியம் என்னும் இலத்தின் சொல் உருவானது.
  • இச்சொல்லுக்கு நாட்குறிப்பு என்பது பொருள். இதிலிருந்து டைரி என்னும் ஆங்கிலச் சொல் உருவானது.

பிற குறிப்புகள்:

  • அருணாச்சலக் கவிராயர் தம் இராமநாடகத்தைத் திருவரங்கத்தில் அரங்கேற்றிய பின்னர், மீண்டும் ஒருமுறை ஆனந்தரங்கர் முன்னிலையில் அரங்கேற்றினார்.
  • கே.கே.பிள்ளை, “ஆனந்தரங்கருடைய நாட்குறிப்புகள் அவரது காலத்தில் யாருமே புரிந்திராத அரியதொரு இலக்கியப் பணி” என்றார்.
  • “தான் நேரில் கண்டும் கேட்டும் அறிந்துள்ள செய்திகளைச் சித்திரகுப்தனைப் போல் ஒன்றுவிடாமல் குறித்து வைத்துள்ளார்” – வ.வே.சு

ஆனந்தரங்கர் குறித்து வெளிவந்த இலக்கியங்கள்:

  • ஆனந்தரங்கர் கோவை = தியாகராச தேசிகர்
  • கள்வன் நொண்டிச் சிந்து
  • ஆனந்தரங்கர் பிள்ளைத்தமிழ் = அறிமதி தென்னகன்
  • ஆனந்தரங்கர் விஜயசம்பு = சீனிவாசக்கவி(வடமொழி)
  • ஆனந்தரங்கர் ராட்சந்தமு = கச்தூரிரங்கக்கவி(தெலுங்கு)

1 comment:

  1. அருமையான பதிவு..... வாழ்த்துக்கள்

    ReplyDelete