பரிபாடல்
பரிபாடலின் உருவம்:
- திணை = அகமும் புறமும்
- பாவகை = பரிபாட்டு
- பாடல்கள் = 70( கிடைத்தவை 22 )
- புலவர் = 13
- அடி எல்லை = 25-400
பெயர்க்காரணம்;
- பரிந்து வரும் இசையால் ஆன பாடல்கள்.
- வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நால்வகைப் பாக்களுக்கும் பலவகையான் அடிகளுக்கும் பரிந்து இடம் கொடுக்கும் தன்மை உடையது பரிபாட்டு ஆகும்.
- தொல்காப்பியர் காலம் வரை கலிப்பாவும், பரிபட்டும் வழக்கில் இருந்தது.
நாடக வழக்கிலும் உலகியல் வழக்கிலும் பாடல் சான்ற புலன்நெறி வழக்கம் கலியே பரிபாட்டு ஆயிரு பாவினும் உரிய தாகும் என்மனார் புலவர். |
வேறு பெயர்கள்:
- பரிபாட்டு
- ஓங்கு பரிபாடல்
- இசைப்பாட்டு
- பொருட்கலவை நூல்
- தமிழின் முதல் இசைபாடல் நூல்
தொகுப்பு:
- இந்நூலை தொகுத்தவர் தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை.
உரை, பதிப்பு:
- பரிமேலழகர் உரை உள்ளது.
- நூலை முதலில் பதிப்பித்தவர் = உ.வே.சா
பாடல் பகிர்வு முறை:
திருமாற்கு இருநான்கு; செவ்வேட்கு முப்பத் தொருபாட்டு காடுகாட்கு ஒன்று; - மருவினிய வையை இரு பத்தாறு; மாமதுரை நான்கென்ப செய்ய பரிபாடல் திறம் |
தெய்வம்
|
பழம்பாடலின் படி
|
தற்போது இருப்பவை
|
திருமாலுக்கு
|
8
|
6
|
செவ்வேள்(முருகன்)
|
31
|
8
|
காடுகாள்(காளி)
|
1
|
0
|
வையை
|
26
|
8
|
மதுரை
|
4
|
0
|
மொத்தம்
|
70
|
22
|
பரிப்பாடல் கூறும் என்னுப்பெயர்கள்:
எண் | என்னுப்பெயர்கள் |
0 | பாழ் |
1/2 | பாகு |
9 | தொண்டு |
பொதுவான குறிப்புகள்;
- தொல்காப்பிய விதிப்பை பரிபாட்டு வகையில் அமைந்த ஒரே தொகை நூல் பரிபாடல் மட்டுமே.
- தெய்வங்கள் அடிப்படையில் பகுப்பு முறை அமைந்த ஒரே தொகை நூல் இதுவே.
- பாண்டிய நாட்டை மட்டுமே கூறுகிறது.
- பாண்டிய நாட்டை மட்டும் கூறும் நூல்கள் = பரிபாடல், கலித்தொகை
- இந்நூல் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கினையும் கூறுகிறது.
- “கின்று” என்னும் காலம் காட்டும் இடைநிலை முதலில் பரிபாடலில் தான் வருகிறது.
- இந்நூல் உலகின் தோற்றம் குறித்து கூறுகிறது.
- இந்நூல் இசையோடு பாடப்பட்டது.
மு.வ கூற்று:
- சங்க காலத்திற்குப் பிறகு பரிபாடல் என்ற செய்யுள் வடிவம் போற்றப்படாமல் போயிற்று.
- விருதப்பாட்டு வளர்ந்த பிறகு கலிப்பாவும், பரிபாட்டும் போற்றப்படவில்லை
முக்கிய அடிகள்:
- மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவொடு புரையுந் சீறார் பூவின்
இதழகத்து அனைய தெருவம், இதழகத்து
அரும் பொகுட்டு அனைத்தே அண்ணல் கோயில் - தீயினுள் தெறல் நீ! பூவினுள் நாற்றம் நீ!
கல்லினுள் மணியும் நீ! சொல்லினுள் வாய்மை நீ!
No comments:
Post a Comment