ஓரெழுத்து ஒருமொழி:
ஓரெழுத்து ஒருமொழி |
பொருள்
|
அ
| அழகு, சிவன், திருமால், எட்டு, சுட்டு, அசை, திப்பிலி |
ஆ
| ஆசாரம், அற்பம், மறுப்பு, நிந்தை, துன்பம், வியப்பு, இரக்கம், ஓர் இனம், சொல், வினா, விட சொல், பசு, ஆன்மா, வரை, நினைவு, உடன்பாடு |
இ
| அன்மைச்சுட்டு, இங்கே, இவன் |
ஈ
| அம்பு, அழிவு, இந்திரவில், சிறுபறவை, குகை, தாமரை, இதழ், திருமகள், நாமகள், தேன், வண்டு, தேனீ, நரி, பாம்பு, பார்வதி, கொடு |
உ
| சிவபிரான், நான்முகன், உமையாள், ஒரு சாரியை, ஓர் இடைச்சொல், சுட்டெழுத்து |
ஊ
| உணவு, இறைச்சி, திங்கள், சிவன், ஊன், தசை |
எ
| குறி, வினா எழுத்து |
ஏ
| ஓர் இடைச்சொல், சிவன், திருமால், இறுமாப்பு, அம்பு, விளிக்குறிப்பு, செலுத்துதல் |
ஐ
| அசைநிலை, அரசன், அழகு, இருமல், கடவுள், கடுகு, குரு, கோழை, சர்க்கரை, கண்ணி, சிவன், கிழங்கு, தலைவன், தும்பை, துர்க்கை, பருந்து, தந்தை |
ஓ
| ஒழிவு, மதகு, உயர்வு, இழிவு, கழிவு, இரக்கம், மகிழ்ச்சி, வியப்பு, நினைவு, அழைத்தல், ஐயம், நான்முகன் |
ஓள
| பாம்பு, நிலம், விளித்தல், அழைத்தல், வியப்பு, தடை, கடிதல் |
க
| அரசன், நான்முகன், தீ, ஆன்மா, உடல், காமன், காற்று, கதிரவன், செல்வன், திருமால், தொனி, நமன், மயில், மனம், மணி, இயமன், திங்கள், உடல், நலம், தலை, திரவியம், நீர், பறவை, ஒளி, முகில் |
கா
| அசைச்சொல், காத்தல், காவடி, சோலை, துலை, தோட்சுமை, பூந்தோட்டம், பூங்காவனம், பூ, கலைமகள், நிறை, காவல், செய், வருத்தம், பாதுகாப்பு, வலி |
கீ
| கிளிக்குரல், தடை, தொனி, நிந்தை, பாவம், பூமி |
கு
| குற்றம், சிறுமை, தடை, தொடை, நிந்தை, பாவம், பூமி, இகழ்ச்சி, நீக்குதல், இன்மை, நிறம், நீக்கம் |
கூ
| பூமி, நிலம், பிசாசு, அழுக்கு, கூகை, கூக்குரல் |
கை
| இடம், ஒப்பனை, ஒழுக்கம், உடன், காம்பு, கிரணம், செங்கல், கட்சி, கைமரம், விசிறிக்காம்பு, படை உறுப்பு, கைப்பொருள், ஆற்றல், ஆள், உலகு, திங்கள், வரிசை, செய்கை, செயல், பகுதி, பிடிப்பு, முறை, வரிசை, கரம், சாயம், தோள், பாணி, வழக்கம், தங்கை, ஊட்டு |
கோ
| அம்பு, அரசன், வானம், ஆண்மகன், உரோமம், எழுத்து, கண், ஓரெழுத்து, கிரணம், சந்திரன், சூரியன், திசை, நீர், பசு, தாய், வாணி, மேன்மை, வெளிச்சம், தந்தை, தலைமை |
கௌ
| கொள்ளு, தீங்கு |
சா
| பேய், இறப்பு, சோர்தல், சாதல் |
சீ
| அடக்கம், அலட்சியம், காந்தி, கலைமகள், உறக்கம், பார்வதி, பெண், ஒளி, விடம், விந்து, கீழ் |
சு
| ஓசை, நன்மை, சுகம் |
சே
| மரம், உயர்வு, எதிர்மறை, எருது, ஒலிக்குறிப்பு, சிவப்பு, மரம், காளை, சேரான் |
சோ
| அரண், உமை, நகர், வியப்புசொல் |
ஞா
| கட்டு, பொருந்து |
த
| குபேரன், நான்முகன் |
தா
| அழிவு, குற்றம், கேடு, கொடியான், தாண்டுதல், பாய்தல், பகை, நான்முகம், வலி, வருத்தம், வியாழன், நாசம் |
தீ
| அறிவு, இனிமை, தீமை, நரகம், நெருப்பு, சினம், நஞ்சு, ஞானம், கொடுமை |
து
| அசைத்தல், அனுபவம், எரித்தல், கொடுத்தல், சேர்மானம், நடத்தல் |
தூ
| சீ, சுத்தம், தசை, வகை, வெண்மை, தூய்மை, வலிமை |
தே
| கடவுள், அருள், கொள்கை, தெய்வம், நாயகன், மாடு |
தை
| ஒரு திங்கள், அலங்காரம், மரக்கன்று |
நா
| அயல், சுவாலை, மணி, நாக்கு, வளைவு |
நீ
| இன்மை, அதிகம், சமிபம், நிறைவு, உறுதி, ஐயம், வன்மை, விருப்பம், உபயம் |
நு
| தியானம், தோணி, நிந்தை, நேசம், புகழ் |
நூ
| எள், யானை, ஆபரணம் |
நெ
| கனிதல், நெகிழ்தல், வளர்தல், மெலிதல், பிளத்தல் |
நே
| அன்பு, அருள், நேயம் |
நொ
| துன்பம், நோய், வருத்தம் |
நோ
| இன்மை, சிதைவு, துக்கம், துன்பம், பலவீனம், நோய், இன்பம் |
ப
| காற்று, சாபம், பெருங்காற்று |
பா
| அழகு, நிழல், பரப்பு, பரவுதல், பாட்டு, தூய்மை, காப்பு, கைமரம், பாம்பு, பஞ்சு, நூல் |
பி
| அழகு |
பூ
| அழகு, இடம், இருக்குதல், இலை, கூர்மை, தாமரை, தீப்பொறி, பிறப்பு, புட்பம், பூமி, பொலிவு, மலர், நிறம், புகர், மென்மை |
பே
| ஏவல் |
பை
| அழகு, குடர், சாக்கு, நிறம், பசுமை, பச்சை, நிறம், மெத்தனம், இளமை, உடல், வில், உடல் |
போ
| ஏவல் |
ம
| இயமன், மந்திரம், காலம், சந்திரன், சிவன், நஞ்சு, நேரம் |
மா
| அசைச்சொல், அழகு, அழைத்தல், அளவு, அறிவு, ஆணி, இடை, மரம், கட்டு, கருப்பு, குதிரை, பன்றி, யானை, சரஸ்வதி, சீலை, செல்வம், தாய், துகள், நிறம், வயல், வலி |
மீ
| ஆகாயம், உயர்ச்சி, மகிமை, மேற்புறம், மேலிடம் |
மூ
| மூப்பு, மூன்று |
மே
| அன்பு, மேம்பாடு |
மை
| இருள், எழு, கறுப்பு, குற்றம், செம்மறியாடு, நீர், மலடி, மேகம், வெள்ளாடு, தீவினை, மதி, கருநிறம் |
மோ
| மோத்தல் |
யா
| ஐயம், இல்லை, யாவை, கட்டுதல், அகலம் |
வா
| ஏவல் |
வி
| நிச்சயம், பிரிவு, வித்தியாசம், ஆகாயம், கண், காற்று, திசை, பறவை, அழகு, விசை, விசும்பு |
வீ
| சாவு, கொல்லுதல், நீக்கம், பறவை, பூ, மோதல், மகரந்தம், விரும்புதல் |
வே
| வேவு, ஒற்று |
வை
| கூர்மை, புள், வைக்கோல், வையகம் |
No comments:
Post a Comment