கம்பராமாயணம்
கம்பராமாயணம்
ஆசிரியர் குறிப்பு:
- பெயர் = கம்பர்
- ஊர் = சோழநாட்டு திருவழுந்தூர்
- தந்தை = காளி கோவில் பூசாரியான ஆதித்தன்
- மகன் = அம்பிகாபதி
- மகள் = காவிரி
ஆசிரியரின் சிறப்பு பெயர்:
- கவிச்சக்ரவர்த்தி
- கவிப்பேரரசர்
- கவிக்கோமான்
- கம்பநாடுடைய வள்ளல்
இவரின் படைப்புகள்:
- ஏர் எழுபது
- சிலை எழுபது
- திருக்கை வழக்கம்
- சரஸ்வதி அந்தாதி
- சடகோபர் அந்தாதி(நம்மாழ்வார் பற்றியது)
கம்பராமாயணத்தின் சிறப்பு பெயர்கள்:
- கம்பசித்திரம்
- கம்பநாடகம்
- தோமறுமாக்கதை
- இயற்கை பரிணாமம்
நூல் அமைப்பு:
- காண்டம் = 6
- படலம் = 113
- மொத்த பாடல்கள் = 10569
- முதல் படலம் = ஆற்றுப்படலம்
- இறுதிப்படலம் = விடை கொடுத்த படலம்
காண்டங்கள்:
- பால காண்டம்
- அயோத்தியாகாண்டம்
- ஆரண்யகாண்டம்
- கிட்கிந்தா காண்டம்
- சுந்தர காண்டம்
- யுத்தகாண்டம்
- ஏழாவது காண்டம் ஒட்டக்கூத்தர் பாடிய “உத்தர காண்டம்”
சிறப்பு:
- மு.இராகவையங்கார் = “வடமொழி தென்மொழிக் காப்பிய நயங்களாகிய பொன் மையில் தம் சித்திரக்கோலைத் தோய்த்துத் தம் கப்பிய ஓவியத்தைக் கம்பநாடார் வரைந்தார்".
- வ.வே.சு.ஐயர் = “கம்பயராமாயணம் தனக்கு முதல் நூலான வான்மீகி இராமாயணத்தையே விஞ்சும் சுவையுடைய காப்பியமாகும்”
- எஸ்.மகாராஜன் = “உலகத்திலேயே வேறொரு நாட்டில், இவ்வளவு பழமையான கவிஞன் இருபதாம் நூற்றாண்டு மக்களுடைய மனதை இப்படி ஆட்கொண்டதில்லை”
- பாரதியார் = “கல்வி சிறந்த தமிழ்நாடு – புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு” என்கிறார்.
- பாரதியார் = “கம்பனைப் போல் வள்ளுவன் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை” என்கிறார்.
- கவிமணி = “வீசும் தென்றல் காற்றுண்டு – கையில் கம்பன் கவியுண்டு” என்கிறார்.
- “கல்வியிற் பெரியவர் கம்பர்”
- “கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்”
- “கம்ப நாடன் கவிதையிற்போல் கற்றோருக்கு இதயம் களியாதே”
- “விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்”
- தமிழுக்கு கதி = கம்பர், திருவள்ளுவர்
- 96 வகை ஓசை வகைகளை கம்பர் கையாண்டுள்ளார்.
பொதுவான குறிப்புகள்:
- கம்பராமாயணத்திற்குக் கம்பர் இட்ட பெயர் = இராமாவதாரம்
- கம்பர் இறந்த இடம் = நாட்டரசன் கோட்டை
- கம்பரின் சமாதி உள்ள இடம் = நாட்டரசன் கோட்டை
- வான்மீகி எழுதாத “இரணியன் வதைப் படலம்” கம்பராமாயணத்தின் மிக சிறந்த பகுதியாக கருதப்படுகிறது.
- கமபராமாயணம் ஒரு வழி நூல்
- கம்பர் தம்மை ஆதரித்த சடையப்ப வள்ளலை 1000 பாடல்களுக்கு ஒருமுறை பாடியுள்ளார்.
- கம்பார் தன் காப்பியத்தை அரங்கேற்றிய இடம் = திருவரங்கம்
- கம்பருக்கு தமிழக அரசு திருவழுந்தூரில் மணி மண்டபம் அமைத்து சிறப்பித்துள்ளது.
- இவர் மூன்றாம் குலோத்துங்கனின் அவை களப் புலவர் ஆவார்.
- இவரின் மகன் அம்பிகாபதி சோழன் மகளை காதலித்ததில் ஏற்பட்ட பிரச்சனையில் அம்பிகாபதி, அமராவதி இருவரின் உயிர் நீங்க, இவர் சோழ நாட்டை விட்டு வெளியேறினார்.
- 15 நாட்களில் கம்பராமாயாணம் முழுவதும் எழுதி முடித்தார்(10569 பாடல்கள்)
மேற்கோள்:
- தாதகு சோலை தோறும் செண்பகக் காடு தோறும்
- எல்லோரும் எல்லாப் பெருஞ்செல்வமும் எய்தாலே
- இல்லாரும் இல்லை உடையாரும்
- இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினர்
- அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினால்
- இன்று போய் நாளை வா
- வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்
- வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்
- உயிரெலாம் உறைவதோர் உடம்பும் ஆயினான்
- கை வண்ணம் அங்குக் கண்டேன்
கால் வண்ணம் இங்குக் கண்டேன்
- அன்றலர்ந்த செந்தாமரையை வென்றதம்மா
No comments:
Post a Comment