Friday, 20 March 2015

கடவுள் வாழ்த்து

கடவுள் வாழ்த்து

அருள்பழுத்த பழச்சுவையே கரும்பே தேனே 
ஆரமிர்தே என்கண்ணே அறிய வான 
பொருளனைத்தும் தரும்பொருளே கருணை நீங்காப் 
பூரணமாய் நின்றவொன்றே புனித வாழ்வே 
கருதரிய கருத்ததனுட் கருத்தாய் மேவிக் 
காலமும்தே சமும்வகுத்துக் கருவி ஆதி 
விரிவினையும் கூட்டிஉயிர்த் திரளை ஆட்டும் 
விழுப்பொருளே யான்சொலும்விண் ணப்பங் கேளே 
- தாயுமானவர்

குறிப்பு:

  • தாயுமானவர் பாடல்கள் என்னும் தொகைநூலில் 1452 பாடல்கள் உள்ளன.
  • இந்நூல்தமிழ் மொழியின் உபநிடதம்எனப் போற்றப்படுகிறது.
  • இவர் வேதாரண்யம் என்னும் திருமறைக்காட்டில் கேடிலியப்ப பிள்ளைக்கும், கெசவல்லி அம்மைக்கும் மகனாகப் பிறந்தார்.
  • திருச்சியில் உள்ள தாயுமானவர் அருளால் பிறந்தமையால் இவருக்கு தாயுமானவர் எனப் பெயரிடப்பட்டது.
  • கேடிலியப்ப பிள்ளை திருச்சிராப்பள்ளியை ஆண்ட விசயரங்க சொக்கநாத நாயக்கர் என்ற அரசரிடம் கணக்கராகப் பணிபுரிந்து வந்தார்.
  • அவர் மறைவுக்குப் பின்னர்த் தாயுமானவர் அப்பணியை ஏற்றார்.
  • இவரின் மனைவி மட்டுவார்குழலி.
  • திருமூலர் மரபில் வந்த மௌனகுருவிடம் ஆசி பெற்றவர்.
  • இவர் முக்தி அடைந்த இடம் இராமநாதபுரம் மாவட்டம் இலட்சுமிபுரம்.
  • காலம் பதினெட்டாம் நூற்றாண்டு.

சொற்பொருள்:

  • ஆரமிர்தேஅரிய அமிழ்தே
  • பூரணமாய்முழுமையாய்
  • புனிதம்தூய்மை
  • விழுப்பொருள்மேலானப்பொருள்

இலக்கணக்குறிப்பு:

  • பழச்சுவைஆறாம் வேற்றுமைத் தொகை
  • தரும் பொருளேசெய்யும் என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சம்
  • காலமும் தேசமும்எண்ணும்மை
  • உயிர்த்திரள்ஆறாம் வேற்றுமைத் தொகை
  • விழுப்பொருள்உரிச்சொற்றொடர்

மொழி வாழ்த்து

வைய மீன்றதொன் மக்க ளுளத்தினைக் 
கையி னாலுரை கால மிரிந்திடப் 
பைய நாவைய சைத்த பழந்தமிழ் 
ஐயை தாடலை கொண்டு பணிகுவாம் 
- பள்ளியகரம் நீ.கந்தசாமிப் புலவர்

குறிப்பு:

  • பள்ளியகரம் நீ.கந்தசாமிப் புலவர் தஞ்சை மாவட்டம் பள்ளியகரத்தில் பிறந்தவர்.
  • பெற்றோர் = நீலமேகம் பிள்ளை, சௌந்தரவல்லி அம்மையார்.
  • இவர் ஒரு பன்மொழிப் புலவர்.
  • கரந்தைத் தமிழ் சங்கத்தில் பல ஆண்டுகள் அமைச்சராகத் விளங்கினார்.
  • தாமஸ்கிரே என்பார் எழுதிய ஆங்கிலக் கவிதை ஒன்றைத் தமிழில் செய்யுள் வடிவில்இரங்கற்பாஎன்னும் தலைப்பில் மொழி பெயர்த்தார்.

சொற்பொருள்:

  • வையம்உலகம்
  • இரிந்திடவிலகிட
  • பையமெல்ல
  • தாள்திருவடி
  • ஐயைதாய்

இலக்கணக்குறிப்பு:

  • தொன்மக்கள்பண்புத்தொகை
  • உள்ளம்ஆகுபெயர்
  • உரைகாலம்வினைத்தொகை
  • ஐயைதாள்ஆறாம் வேற்றுமைத் தொகை
  • தாள் தலைஇரண்டாம் வேற்றுமைத்தொகை

நாட்டு வாழ்த்து

திருநி றைந்தனை தன்னிக ரொன்றிலை 
தீது தீர்ந்தனை நீர்வளஞ் சார்ந்தனை 
மருவு செய்களின் நற்பயன் மல்குவை 
வளனின் வந்ததோர் பைந்நிறம் வாய்ந்தனை 
பெருகு மின்ப முடையை குறுநகை 
பெற்றொ ளிர்ந்தனை பல்பணி பூண்டனை 
இருநி லத்துவந் தெம்முயிர் தாங்குவை 
எங்கள் தாய்நின் பதங்கள் இறைஞ்சுவாம் 
- பாரதியார்

குறிப்புகள்:

  • வங்கமொழியில் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயர்  எழுதியவந்தே மாதரம்என்னும் பாடலின் மொழிப்பெயர்பே இப்பாடல்.
  • தேசியக்கவி எனப் போற்றப்படும் பாரதியார் எட்டயபுரத்தில் 11.12.1882இல் பிறந்தார்.
  • பாரதியார் மதுரையில் உள்ள சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகவும், பின்னர்ச் சென்னையில் இருந்து வெளிவந்தசுதேசமித்திரன்இதழின் உதவி ஆசிரியராகவும் பணியாற்றினார்.
  • மேலும்சக்கரவர்த்தினிஎன்ற பத்திரிகைக்கு ஆசிரியராகவும், “இந்தியாஎன்ற வாரப்பத்திரிகைக்கு ஆசிரியராகவும் திகழ்ந்தார்.
  • இவர் கீதையை மொழிபெயர்த்தார்.
  • 11.09.1921 அன்று மறைந்தார்.

சொற்பொருள்:

  • திருசெல்வம்
  • மருவுபொருந்திய
  • செய்வயல்
  • மல்குதல்நிறைதல்
  • இருநிலம்பெரிய பூவுலகு

இலக்கணக்குறிப்பு:

  • மருவு செய்வினைத்தொகை
  • பெருகும் இன்பம்செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம்
  • நற்பயன்பண்புத்தொகை

புறநானூறு

நூல் குறிப்பு:

  • புறம் + நான்கு + நூறு = புறநானூறு
  • இதனை புறப்பாட்டு, புறம் எனவும் வழங்குவர்.
  • இந்நூலில் 400 பாடல்கள் உள்ளன.
  • இந்நூலின் கடவுள் வாழ்த்து பாடியவர் = பாரதம் பாடிய பெருந்தேவனார்.
  • இந்நூலின் சில பாடல்களை ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

பரணர்:

  • இவர் வரலாற்றுக் குறிப்புகளை பாடல்களுள் பொதிந்து வைத்துப் பாடுவதில் வல்லவர்.
  • கபிலர் போல மிக்க புகழுடன் வாழ்ந்தவர்.
  • கபிலபரணர் என்னும் தொடரால் இது விளங்கும்.
  • இவர் பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்து பாடிக் கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவனிடம் உம்பற்காட்டு வாரியையும், அவன் மகன் குட்டுவன் சேரலையும் பரிசாகப் பெற்றவர்.

பேகன்:

  • பேகன் கடையெழு வள்ளல்களுள் ஒருவன்.
  • கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கியவன்.
  • மலைநாட்டை ஆண்டவன்.
  • இவனது ஊர் நல்லூர்.
  • இவனது குடி ஆவியர் குடி.

சொற்பொருள்:

  • அறுகுளம்நீர் வற்றிய குளம்.
  • உகுத்தும்பெய்தும்
  • உவர்நிலம்களர்நிலம்
  • ஊட்டியும்சாலப் பெய்தும்
  • கடாஅயானைமதக்களிறு
  • மாரிமழை

இலக்கணக்குறிப்பு:

  • அறுகுளம், அகல்வயல்வினைத்தொகை
  • வரையா மரபுஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  • கடாஅஇசைநிறை அளபெடை

அகநானூறு

நூல் குறிப்பு:

  • அகம் + நான்கு + நூறு = அகநானூறு
  • இந்நூலில் நானூறு பாடல்கள் உள்ளன.
  • நூலில் உள்ள 3 பிரிவுகள் = களிற்றியானைநிரை, மணிமிடைபவளம், நித்திலக்கோவை
  • களிற்றியானைநிரையில் 120 பாடல்களும், மணிமிடைபவலத்தில் 180 பாடல்களும், நித்திலக்கோவையில் 100 பாடல்களும் உள்ளன.
  • நூலின் அடிஎல்லை = 13 – 31
  • இந்நூலினைநெடுந்தொகைஎன்றும் வழங்குவர்.
  • 1,3,5 என ஒற்றைப்படை எண்கள் அமைந்த பாடல்கள் = பாலைத்திணை பாடல்கள்
  • 2,8 என வருவன = குறிஞ்சித்திணை பாடல்கள்
  • 4,14 என வருவன = முல்லைதினைப் பாடல்கள்
  • 6,16 என வருவன = மருதத்திணை பாடல்கள்
  • 10,20 என வருவன = நெய்தல் திணை பாடல்கள்.
  • நூலை தொகுத்தவர் = மதுரை உப்பூரிகுடிகிழார் மகனார் உருதிரசன்மனார்
  • நூலை தொகுப்பித்தவர் = பாண்டியன் உக்கிரப்பெருவழுதி

சொற்பொருள்:

  • ஓங்குமலைஉயர்ந்த மலை
  • சிலம்புமலைச்சாரல்
  • வேங்கை பிடவுமலைநிலத்தே வளரும் மரங்கள்
  • உகிர்நகம்
  • உழுவைஆண்புலி
  • கவலைகிளைவழி
  • சாஅய்மெலிவுற்று

இலக்கணக்குறிப்பு:

  • ஓங்குமலைவினைத்தொகை
  • அவிழாக் கோட்டுகிர்ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  • நிரம்பா நீளிடைஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  • நீளிடைவினைத்தொகை
  • உண்ணா உயக்கம்ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  • சாஅய்இசைநிறைஅளபெடை
  • தொல்கவின்பண்புத்தொகை
  • பிரிந்தோர்வினையாலணையும் பெயர்.

ஐங்குறுநூறு

நூல் குறிப்பு:

  • ஐந்து + குறுமை + நூறு = ஐங்குறுநூறு
  • அடி எல்லை = 3 முதல் 6
  • ஒவ்வொரு தினைக்கும் நூறு பாடல்கள் என மொத்தம் 500 பாடல்கள் உள்ளன.
  • மருதத்திணை பாடல்கள் பாடியவர் = ஓரம்போகி
  • நெய்தல் திணை பாடல்கள் பாடியவர் = அம்மூவன்
  • குறிஞ்சி திணை பாடல்கள் பாடியவர் = கபிலர்
  • பாலை திணை பாடல்கள் பாடியவர் = ஓதலாந்தை
  • முல்லைதிணை பாடல்கள் பாடியவர் = பேயன்
  • இந்நூலை தொகுத்தவர் = புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்.
  • தொகுப்பித்தவர் = சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
  • கடவுள் வாழ்த்து பாடியவர் = பாரதம் பாடிய பெருந்தேவனார்.

கபிலர்:

  • இவர், “புலனழுக் கற்ற அந்தணாளன்எனப் புகழப்பட்டவர்.
  • வள்ளல் பாரியின் அவைகளப் புலவர்.
  • குறிஞ்சிப்பாட்டு, ஐங்குறு நூற்றில் குருஞ்சித்தினை பாடகள் நூறு, பதிற்றுபத்தில் ஏழாம் பத்து, கலித்தொகையில் குறுஞ்சி கலியில் உள்ள 29 பாடல்கள் முதலியன இவர் பாடியவை.

சொற்பொருள்:

  • தோகைமயில்
  • வதுவைதிருமணம்

இலக்கணக்குறிப்பு:

  • இருந்ததோகைபெயரெச்சம்
  • மருள்உவமவுருபு
  • இழையணிவினைத்தொகை
  • நாடஅண்மைவிளி
  • நுந்தைநும் தந்தை என்பதன் மரூஉ
  • வாழியர்வியங்கோள் வினைமுற்று
  • நன்மனைபண்புத்தொகை

திருக்குறள்

நூல்குறிப்பு:

  • தமிழ் மாதின் இனிய உயிர்நிலைஎன்று உலகோரால் பாராட்டப்படும் நூல் திருக்குறள்.
  • திருக்குறள்தமிழர் திருமறைஆகும்.
  • திருக்குறள் என்பது அடையடுத்த கருவியாகு பெயர்.
  • திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் மூன்று பெரும் பிரிவுகளை கொண்டது.
  • அறத்துப்பால் முப்பத்தி எட்டு அதிகாரங்களை உடையது. அது பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என்னும் நான்கு இயல்களை கொண்டுள்ளது.
  • பொருட்பால் எழுபது அதிகாரங்களையும், அரசியல், அங்கவியல், ஒழிபியல் என்னும் மூன்று இயல்களையும் கொண்டுள்ளது.
  • காமத்துப்பால் 25 அதிகாரங்களையும், களவியல், கற்பியல் என்ற இரன்டு இயல்களையும் உடையது.

சொற்பொருள்:

அமரருள்தேவர் உலகம்
உய்க்கும்செலுத்தும்
ஆரிருள்நரகம்
காக்ககடைப்பிடித்து ஒழுகுக
செறிவுஅடக்கம்
சீர்மைவிழுப்பம், சிறப்பு
தோற்றம்உயர்வு
மாணமிகவும்
பணிதல்அடங்குதல்
ஒருமைஒருபிறப்பு
எழுமைஏழு பிறப்பு
ஏமாப்புபாதுகாப்பு
சோகாப்பர்துன்புறுவர்
வடுதழும்பு
கதம்சினம்
செவ்விதகுந்த காலம்
தாளாற்றிமிக்க முயற்சி செய்து
தந்தஈட்டிய
வேளாண்மைஉதவி
புத்தேள் உலகம்தேவர் உலகம்
திருசெல்வம்
அற்றுபோலும்
இடம்செல்வம்
ஒல்கார்தளரார்
கடன்முறைமை
கேடுபொருள்கேடு
கூகைகோட்டான்
இகல்பகை
தகர்ஆட்டுக்கிடாய்
பொள்ளெனஉடனடியாக
செறுநர்பகைவர்
சுமக்கபணிக
மாற்றான்பகைவர்
பீலிமயில்தோகை
சாகாடுவண்டி
இறும்முரியும்

இலக்கணக்குறிப்பு:

அடங்காமைஎதிர்மறைத்தொழிற்பெயர்
ஆரிருள்பண்புத்தொகை
காக்கவியங்கோள் வினைமுற்று
அதனினூஉங்குஇன்னிசை அளபெடை
அடங்கியான்வினையாலணையும் பெயர்
மலையினும்உயர்வு சிறப்பும்மை
எல்லார்க்கும்முற்றும்மை
பணிதல்தொழிற்பெயர்
உடைத்துகுறிப்பு வினைமுற்று
எழுமை, ஐந்துஆகுபெயர்
காவாக்கால்எதிர்மறை வினையெச்சம்
நன்றுபண்புப்பெயர்
அடங்கல்தொழிற்பெயர்
ஆற்றுவான்வினையாலணையும் பெயர்
உலகுஇடவாகுபெயர்
தந்தபொருள்பெயரெச்சம்
பொருட்டுகுறிப்பு வினைமுற்று
பெறல்தொழிற்பெயர்
அறிவான்வினையாலணையும் பெயர்
வாழ்வான்வினையாலணையும் பெயர்
மற்றையான்குறிப்பு வினையாலணையும் பெயர்
பேரறிவுபண்புத்தொகை
தப்பாமரம்ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
பெருந்தகைபண்புத்தொகை
கடனறிகாட்சிவினைத்தொகை
ஒல்கார்வினையாலணையும் பெயர்
இல்பருவம்பண்புத்தொகை
ஆதல்தொழிற்பெயர்
கேடு, கோள்முதனிலை திரிந்த தொழிற்பெயர்
பகல்வெல்லும்ஏழாம் வேற்றுமைத்தொகை
இகல்வெல்லும்இரண்டாம் வேற்றுமைத்தொகை
ஒழுகல்தொழிற்பெயர்
அருவினைபண்புத்தொகை
செயின்வினையெச்சம்
கருதுபவர்வினையாலணையும் பெயர்
ஒடுக்கம்தொழிற்பெயர்
பொருதகர்வினைத்தொகை
ஒள்ளியவர்வினையாலணையும் பெயர்
சுமக்கவியங்கோள் வினைமுற்று
ஒக்கவியங்கோள் வினைமுற்று
வினைவலிஆறாம் வேற்றுமைத்தொகை
செயல்வியங்கோள் வினைமுற்று
செல்வார்வினையாலணையும் பெயர்
அறியார்எதிர்மறை வினையாலணையும் பெயர்
ஒழுகான்முற்றெச்சம்
பெய்சாகாடுவினைத்தொகை
சாலமிகுந்துஉரிச்சொற்றொடர்
கொம்பர்ஈற்றுப்போலி
ஈகவியங்கோள் வினைமுற்று
ஆகாறுவினைத்தொகை
கேடுமுதனிலை திரிந்த தொழிற்பெயர்
வாழ்க்கைதொழிற்பெயர்

சீவக சிந்தாமணி

நூல் குறிப்பு;

  • சிந்தாமணி என்பதற்கு ஒளிகுன்றாத மணி என்பது பொருள்.
  • இக்காப்பியத்தை இயற்றியவர் திருத்தக்கதேவர்.
  • இவர் சோழ நாட்டினர். சமணத் துறவி.
  • இவர் நரி விருத்தம் என்ற நூலையும் படைத்துள்ளார்.
  • சீவக சிந்தாமணிக்குமண நூல்என்ற பெயரும் உண்டு.
  • இது நாமகள் இலம்பகம் முதலாக முத்தி இலம்பகம் ஈறாகப் 13 இலம்பகம் கொண்டுள்ளது.
  • இந்நூல் விருத்தம் என்ற பாவினால் அமைந்த முதல் நூல்.
  • இந்நூலிற்கு உரை கண்டவர் = உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர்.
  • சீவகன் வரலாற்றை கூறுவதால் இந்நூல் சீவக சிந்தாமணி எனப் பெயர் வழங்கப்படுகிறது.

காந்தருவதத்தையார் இலம்பகம்:

  • வெள்ளி மலையின் வேந்தன் கலுழவேகன்.
  • அவன் மகள் காந்தருவதத்தை.
  • காந்தருவதத்தையின் தோழி வீணாபதி
  • யாழ்போர் நடந்த இடம் இராசமாபுரம்
  • காந்தருவதத்தை சீதத்தன் என்னும் வணிகனிடம் ஒப்படைக்கப்பட்டாள்.
  • சீவகனின் நண்பன் நபுலன்
  • போட்டியில் சீவகன் காந்தருவதத்தையை வென்று அவளை மணம் முடித்தான்.

சொற்பொருள்:

சிலைவில்
பொழில்சோலை
குரங்கினவளைந்தன
பறவைகின்னரமிதுனம் என்னும் பறவை
கருங்கொடிகரிய ஒழுங்கு
மிடறுகழுத்து
கொடிஒழுங்கு
கடிவிளக்கம்
எயிருபல்
விம்மாதுபுடைக்காது
எரிமலர்முருக்கமலர்
உளரதடவ
இவுளிகுதிரை
கால்காற்று
நுனைகூர்மை
கடம்காடு
பிணைபெண்மான்
மாழ்கிமயங்கி
இழுக்கிதப்பி
எழினிஉறை
மொய்ம்புவலிமை
மடங்கல்சிங்கம்
கணிகைபொதுமகள்
கொல்லைமுல்லைநிலம்
குரங்கிவளைந்து
தூமம்அகிற்புகை
நிலமடந்தைபெற்ற தாய்
இருவிசும்புசெவிலித்தாய்
கைத்தாய்செவிலித்தாய்
ஓதிசொல்லி
புரிமுறுக்கு
பத்தர்யாழின் ஓர் உறுப்பு

இலக்கணக்குறிப்பு:

எழீஇசொல்லிசை அளபெடை
சிறுநுதல்அன்மொழித்தொகை
பாவைஉவமை ஆகுபெயர்
சிலைத் தொழில்ஆறாம் வேற்றுமைத்தொகை
கருங்கொடிபண்புத்தொகை
இருங்கடல்பண்புத்தொகை
கடிமிடறுஉரிச்சொற்றொடர்
பவளச்செவ்வாய்உவமைத்தொகை
விரிமலர்வினைத்தொகை
கோதைஉவமை ஆகுபெயர்
எரிமலர்உவமத்தொகை
செவ்வாய்அன்மொழித்தொகை
ஒப்பஉவமஉருபு
இன்னரம்புபண்புத்தொகை
விடுகணைவினைத்தொகை
திண்டேர்பண்புத்தொகை
வடிநுனைவினைத்தொகை
அடுதிரைவினைத்தொகை
கழித்தவேல்பெயரெச்சம்
அன்னஉவமஉருபு
நீக்கிவினையெச்சம்
நெடுங்கண்பண்புத்தொகை
தடங்கண்உரிச்சொற்றொடர்
சுரந்து, முதிர்ந்துவினையெச்சம்
நின்றாள்வினையாலணையும் பெயர்
போக, நடக்கவியங்கோள் வினைமுற்று
கமழ் ஓதிஅன்மொழித்தொகை
காளைஉவம ஆகுபெயர்

சீறாப்புராணம்

நூல் குறிப்பு:

  • சீறா என்பதற்கு வாழ்க்கை என்பது பொருள், புராணம் என்பதற்கு வரலாறு என்பது பொருள்.
  • சீறாப்புராணம் என்பதற்கு நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாறு என்று பொருள்.
  • இந்நூல் விலாதத்துக் காண்டம்(பிறப்பியற் காண்டம்), நுபுவ் வத்துக் காண்டம்(செம்பொருட் காண்டம்), ஹிஜ்ரத்துக் காண்டம்(செலவியற் காண்டம்) என்ற மூன்று பெரும் பிரிவுகளை உடையது.
  • இந்நூலில் 5027 விருதப்பாக்கள் உள்ளன.
  • பெருமானார் பிறந்ததும் இளமை நிகழ்வுகளும் திருமணமும் விலாதத்துக் காண்டத்தில் கூறப்பட்டுள்ளது.
  • வானவர் ஜிப்றாயில் மூலம் திருமுறை நபிகள் பெருமானார்க்கு அருளப்பட்டதும் அதன்பின் மக்கத்தில் நடந்தவையும் நுபுவ்வத்துக் காண்டத்தில் பேசப்படுகின்றன.
  • மக்கத்தை விட்டுப் பெருமானார் மதீனம் சென்றதும் தீன் நிலை நிறுத்தற்காக நிகழ்ந்த போர்களும் பிறவும் ஹிஜ்றத்துக் காண்டத்தில் வரையப்பட்டுள்ளன.
  • சீறாப்புரானத்தில் நபிகளின் வாழ்வு முற்றிலுமாகப் பாடி நிறைவு செய்யப்படவில்லை.
  • பனூ அகமது மரைக்காயர் என்பவர் தாம் பெருமானாரின் தூய திருவாழ்வு முழுமையும் பாடி முடித்தார். அதுசின்ன சீறாஎன வழங்கப்படுகிறது.

ஆசிரியர் குறிப்பு:

  • உமறுப்புலவர் எட்டயபுரம் கடிகை முத்துப் புலவரின் மாணவர்.
  • செய்கு அப்துல் காதிர் மரைக்காயர் என்ற வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளின் வண்ணமே உமறுப்புலவர் சீறாப்புராணத்தை எழுதினார்.
  • நூல் முடிவுறும் முன்னரே சீதக்காதி மறைந்தார்.
  • பின் அபுல் காசிம் என்ற வள்ளலின் உதவியால் சீறாப்புராணம் நிறைவு பெற்றது.
  • உமறுப்புலவர் முதுமொழிமாலை என்ற எண்பது பாக்களால் ஆன நூலையும் படைத்துள்ளார்.

விடமீட்ட படலம்:

  • நபிகளின் நண்பர் = அபூபக்கர்
  • இருவரும் தங்கி இருந்த இடம், தௌர் மலைக்குகை.
  • குகையில் இருந்த ஒரு பொந்தின் வழியாக வந்த பாம்பு அபூபக்கரின் உள்ளங்காலை தீண்டியது.
  • அபூபக்கர் மயக்கம் அடையும் நிலையில் நபிகள் உறக்கம் களைந்து எழுந்து நடந்ததை அறிந்து கொண்டார்.
  • நபிகள் தனது எச்சில் தடவி அபூபக்கரை மீட்டார்.

சொற்பொருள்:

கான்காடு
நகம்மலை
சிரம்தலை
முழை  -  குகை
வளைபுற்று
பாந்தள்பாம்பு
பிடவைதுணி
வெருவிஅஞ்சி
பொறிபுள்ளிகள்
உரகம், பணிபாம்பு
பருவரல்துன்பம்
நித்திரைதூக்கம்
கடிமணம்
காந்திபேரொளி
நறைதேன்
பரல்கல்
கெந்தம்பற்கள்
வேகம்சினம்
சென்னிதலை
மரைமலர்தாமரை மலர்
கோடிகம்ஆடை
கால்காற்று
கான்றுஉமிழ்ந்து
பன்னகம்பாம்பு
வரைமலை
புடைவளை, பொந்து
முரணிமாறுபட்டு
புதியன்இறைவன்

இலக்கணகுறிப்பு:

செழுந்துயில்பண்புத்தொகை
இகலவர்வினையாலணையும் பெயர்
மலைமுழைஏழாம் வேற்றுமைத்தொகை
வெருவி, கிழித்துவினையெச்சம்
போர்த்த பிடவைபெயரெச்சம்
இலைஇல்லை என்பதன் இடைக்குறை விகாரம்
அறிகிலார்எதிர்மறை வினையாலணையும் பெயர்
மதிமுகம்உவமத்தொகை
கடிநறைஉரிச்சொற்றொடர்
மலர்ந்தாள்உவமைத்தொகை
மென்மலர்பண்புத்தொகை
வல்லுடல்பண்புத்தொகை
படுவிடம்வினைத்தொகை
பரந்து, தாக்கிவினையெச்சம்
என்னஉவமஉருபு
மதிஉவம ஆகுபெயர்
அருமறைபண்புத்தொகை
நின்றோன்வினையாலணையும் பெயர்
நினைத்தவர் - வினையாலணையும் பெயர்
வெவ்விடம்பண்புத்தொகை

மனோன்மணீயம்

நூல் குறிப்பு;

  • நாடகக் காப்பியங்களால் சிறப்புப் பெற்று விளங்கும் வடமொழிக்கு ஈடாக நடிப்புப் செவ்வியும் இலக்கியச் செவ்வியும் ஒருங்கே அமையப் பெற்றது இந்நாடகம்.
  • இந்நாடகம் லிட்டன் பிரபு என்பார் ஆங்கிலத்தில் எழுதியஇரகசிய வழிஎன்ற நூலைத் தழுவி அமைந்தது.
  • எனினும் இது வழிநூல் என்னாது முதல் நூல் எனவே கொள்ளப்பெறும் சீர்மையுடையது.
  • அங்கங்களையும் காட்சிகளையும் அமைத்து எழுதுவது நாடக நன்னூல் மரபு.
  • இந்நாடகம் 5 அங்கங்களையும் 20 காட்சிகளையும் கொண்டு விளங்குகிறது.
  • இடையே சிவகாமி சரிதம் என்னும் துணைக் கதை ஒன்றும் இடம் பெற்றுள்ளது.

ஆசிரியர் குறிப்பு:

  • பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை, கேரள மாநிலம் ஆலப்புழையில் பிறந்தவர்.
  • பெற்றோர் = பெருமாள் பிள்ளை, மாடத்தி அம்மையார்.
  • இவர் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
  • இவரின் ஞானாசிரியர் = கோடாக நல்லூர் சுந்தர சுவாமிகள்
  • இவர் இயற்றிய நூல்கள் = நூல் தொகை விளக்கம், திருஞானசம்பந்தர் கால ஆராய்ச்சி, திருவிதாங்கூர்ப் பண்டை மன்னர் கால ஆராய்ச்சி.
  • அந்நாளைய சென்னை மாகாண அரசு இவருக்கு ராவ்பகதூர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
  • இவரது நீராருங்கடலுடுத்த என்ற தமிழ் வாழ்த்துப்பாடலே தமிழக அரசின் தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்கப்பட்டுள்ளது.

கதை:

  • மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் ஜீவகன்.
  • அமைச்சர் குடிலன் வஞ்சகம் மிக்கவன்.
  • ஜீவகன் மதுரையை விட்டு திருநெல்வேலியில் கோட்டை அமைத்து அங்கு தங்கினான்.
  • சுந்தர முனிவர் கோட்டையில் தனக்கு ஒரு அறை பெற்று அதில் சுரங்க வழியை அமைத்தார்.
  • ஜீவகனின் மகள் மனோன்மணி. இவள் சேர நாட்டு அரசன் புருடோத்தமனை கனவில் கண்டு காதல் கொள்கிறாள்.
  • அமைச்சன் குடிலனின் மகன் பலதேவனை, சேர அரசனிடம் தூது அனுப்பினான் மன்னன்.
  • பலதேவனின் முறையற்ற பேச்சால் சினம் கொண்ட சேர அரசன் பாண்டிய நாடு மீது போர் தொடுத்தான்.

சொற்பொருள்:

  • செந்தழல்வேள்வியில் மூட்டுகிற நெருப்பு
  • வானோர்தேவர்கள்
  • இந்தனம்விறகு
  • உகம்யுகம்
  • திருந்தலீர்பகைவர்கள்
  • செயமாதுவெற்றித் திருமகள்(விசயலட்சுமி)
  • காயம்உடம்பு

இலக்கணக்குறிப்பு:

  • செந்தழல்பண்புத்தொகை
  • ஆகுகவியங்கோள் வினைமுற்று
  • போர்க்குறிஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
  • கனங்கணம்அடுக்குத்தொடர்

குயில் பாட்டு

ஆசிரியர் குறிப்பு;

  • பாரதியார் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் சின்னசாமி ஐயருக்கும், இலக்குமி அம்மையாருக்கும் மகனாகத் தோன்றினார்.
  • தேசியக்கவி, மகாகவி எனப் போற்றப்படுபவர்.
  • இந்தியா, விஜயா என்னும் இதழ்களை வெளியிட்டார்.
  • சுதேசமித்திரன் என்ற இதழின் உதவி ஆசிரியராகவும் பணியாற்றினார்.

சொற்பொருள்:

  • வாரிகடல்
  • கோற்றொடியார்பெண்கள்(உலக்கையைத் தொடியணிந்த கையில் கொண்ட பெண்கள்)
  • குக்குவெனநெல்லடிக்கும் பொது பெண்கள் ஏற்படுத்தும் ஒலிக்குறிப்பு
  • பண்ணைவயல்வெளி
  • வேய்மூங்கில்

இலக்கணக்குறிப்பு:

  • கானப்பறவைஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
  • நீரோசைஆறாம் வேற்றுமைத் தொகை
  • பெருங்கடல்பண்புத்தொகை
  • பழகு பாட்டுவினைத்தொகை

அழகர் கிள்ளைவிடு தூது

தூது:

  • தூது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
  • தலைவன் ஒருவனைக் கண்டு காதல் கொண்ட தலைவி ஒருத்தி தன் காதலையும் பிரிவாற்றாமையும் வெளிப்படுத்த விரும்பித் தலைவன்பால் தூது அனுப்புதல்.
  • தூதின் இலக்கணம் கூறும் நூல் = இலக்கண விளக்க நூற்பா
  • தூது வெண்டளை விரவிய கலிவென்பாவால் பாடப்படும்.
  • தூதாக செல்பவை = அன்னம், மயில், கிளி, குயில், வண்டு, நெஞ்சம், முகில், தென்றல், மான், தமிழ்.

அழகர் கிள்ளைவிடு தூது:

  • திருமாலிருஞ்சோலை மலையில் கோவில் கொண்டிருக்கும் அழகரிடத்து பலபட்டடைச் சொக்கநாத பிள்ளை என்ற புலவர் கிளியைத் தூது விடுவதாக அமைத்துப் பாடியிருப்பது அழகர் கிள்ளை விடு தூது ஆகும்.
  • இந்நூல் 250 ஆண்டுகளுக்கு முந்தைய நூலாகும்.
  • இந்நூல் காப்பு வெண்பா ஒன்றையும் 239 கண்ணிகளையும் உடையது.
  • பாட்டின் இரண்டு அடி கண்ணி எனப்படும்.

ஆசிரியர் குறிப்பு:

  • சொக்கநாதப் பிள்ளை மரபினர் பலபட்டடைக்கணக்கு என்னும் ஒருவகைப் பணியைச் செய்து வந்தனர்.
  • இவர் தந்தையார் பெயர் சொக்கலிங்கம் பிள்ளை.
  • நூல்கள் = மதுரை மும்மணிக்கோவை, தென்றல் விடு தூது போன்றவை.

சொற்பொருள்:

அரிசிங்கம்
அரன்சிவன்
அவுணன்இரணியன்
காயம்உடம்பு
சேனைசைனியம்
பண்ணும் தொழில்காத்தல் தொழில்
படிஉலகம்
பாதவம்மருத மரம்
பெண்அகலிகை
பாரம்பளு
நாரிசீதாப்பிராட்டி
வேலைகடல்

இலக்கணக்குறிப்பு:

  • வன்காயம்பண்புத்தொகை
  • அரைத்திடும் சேனைஎதிர்காலப் பெயரெச்சம்
  • மலர்க்கால்உவமைத்தொகை
  • வன்கானகம்பண்புத்தொகை

கலிங்கத்துப்பரணி

பரணி:

  • பரணி என்பது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
  • போர் முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றி கொண்ட வீரனைப் பாடுவதைப் பரணி என்றனர்.
ஆணை ஆயிரம் அமரிடை வென்ற 
மாண வனுக்கு வகுப்பது பரணி 
--- இலக்கண விளக்கப் பாட்டியல்
  • பரணி என்ற நாள்மீன் காளியையும் யமனையும் தன் தெய்வமாகப் பெற்றது என்றும் அந்நாள்மீனால் வந்த பெயரே நூலுக்கும் பெயராக வந்தது என்றார் .வே.சா
  • தோற்றவர் பெயரில் பரணி நூல் வழங்கப்பெறும்.

கலிங்கத்துப்பரணி:

  • தமிழின் முதல் பரணி நூல் இது.
  • இந்நூல் 509 தாழிசைகள் கொண்டது.
  • இந்நூலை ஒட்டக்கூத்தர், “ தென்தமிழ் தெய்வப்பரணிஎன்று சிறப்பித்துள்ளார்.
  • இன்றைய ஒரிசா மாநிலம் பண்டு கலிங்கம் என்று வழங்கப்பட்டது.
  • அந்நாட்டின் மீது போர் தொடுக்க முதல் குலோத்துங்கச்சோழன் தன் படைத்தளபதி கருணாகரத் தொண்டைமான் என்பவரை அனுப்பி வெற்றிபெற்றதை இந்நூல் கூறுகிறது.

செயங்கொண்டார்:

  • கலிங்கத்துப்பரணி பாடியவர் செயங்கொண்டார்.
  • இவர் முதல் குலோத்துங்கசோழனின் அவைப்புலவர்.
  • இவரின் காலம் 11ஆம் நூற்றாண்டு அல்லது 12ஆம் நூற்றாண்டின் முற்பகுதி.
  • பலபட்டடைச் சொக்கநாதர் இவரைப்பரணிக்கோர் செயங்கொண்டார்எனப் புகழ்ந்துள்ளார்.

சொற்பொருள்:

வரைமலை
சேரமுற்றும்
மாசைபழிப்பை
எற்றிஉண்டாக்கி
அரைஇடுப்பு
கலிங்கம்ஆடை
அமணர்சமணர்
முந்நூல்பூணூல்
சிலைவில்
அரிதனைபகை
மடிஇறந்த
சயத்தம்பம்வெற்றித்தூண்
கடகரிமத யானை
வயமாகுதிரை
அபயன்முதல் குலோத்துங்கச்சோழன்
வண்டையார் கோன்கருணாகரத் தொண்டைமான்

இலக்கணக்குறிப்பு:

மாசை எற்றிஇரண்டாம் வேற்றுமை விரி
வன்தூறுபண்புத்தொகை
போந்துவினையெச்சம்
களம் கண்டோம்இரண்டாம் வேற்றுமைத்தொகை
எரிந்து, நாட்டிவினையெச்சம்
பறித்தமயிர்பெயரெச்சம்

முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்

பிள்ளைத்தமிழ்:

  • கடவுளரையோ அரசரையோ பிறரையோ குழந்தையாகப் பாவித்து அவர் தம் குழந்தைப் பருவத்தைப் பத்துப் பருவங்களாகப் பகுத்துக் கொண்டு பருவத்துக்குப் பத்து ஆசிரிய விருத்தம் அமையப் பாடுவது பிள்ளைத்தமிழ் இலக்கியமாகும்.
  • பிள்ளைத்தமிழ் 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
  • இது ஆண்பால் பிள்ளைத்தமிழ், பெண்பால் பிள்ளைத்தமிழ் என இரு வகைப்படும்.
  • ஆண் பால் பிள்ளைத்தமிழ் பருவங்கள் = காப்பு, செங்கீரை, தாள், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்.
  • பெண்பால் பிள்ளைத்தமிழ் பருவங்கள் = காப்பு, செங்கீரை, தாள், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, அம்மானை, நீராடல், ஊசல்.

குமரகுருபரர்:

  • முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் பாடியவர் குமரகுருபரர்.
  • தாமிரபரணி நதிக்கரையில் உள்ள திருவைகுன்டத்தில் பிறந்தார்.
  • பெற்றோர் = சன்முகசிகாமணி கவிராயர், சிவகாமசுந்தரி.
  • பிறந்தது முதல் ஐந்து ஆண்டுகள் பேசாமல் இருந்தார்.
  • திருச்செந்தூர் முருகப்பெருமானின் அருளால் பேசும் திறம் பெற்றார்.
  • நூல்கள் = கந்தர் கலிவெண்பா, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக் கலம்பகம், நீதிநெறிவிளக்கம், காசிக் கலம்பகம் முதலான பல நூல்கள்.

சொற்பொருள்:

புலராமேவறண்டு விடாமல்
கம்முதல்குரல் தேய்ந்து மங்குதல்
விரல்பெருவிரல்
சிவவாமேசிவக்காமல்
அஞ்சனம்கண்மை
கலுழ்தல்அழுதல்
தாள்கால்
வயித்தியநாதபுரிபுள்ளிருக்குவேளூர்

இலக்கணக்குறிப்பு:

மெல்லிதழ்பண்புத்தொகை
மென்குரல்பண்புத்தொகை
நுண்டுளிபண்புத்தொகை
கண்மலர்உருவகம்
பொழி திருமுகம்வினைத்தொகை
ஆடுகவியங்கோள் வினைமுற்று

பெத்தலகேம் குறவஞ்சி

குறவஞ்சி:

  • குறவஞ்சி என்பது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
  • தொல்காப்பியர் கூறும் வனப்பு என்பதுள் குறவஞ்சி அடங்கும்.
  • உலாப் போகும் மன்னனையோ தெய்வத்தையோ கண்டு தலைவி காதல் கொண்டு, அதனால் மனம் நலிவதும், வீதியிலே குறத்தி வருகையும், தலைவி அவளை அழைத்து குறி கேட்பதும், குறத்தி தலைவியின் கையைப் பார்த்து கைக்குறி, முகக்குறி, பல்லிசொல் போன்றவற்றை கூறுவது போல் அமையப்பெறும்.
  • குறவஞ்சி நாடக வடிவில் அமையப்பெறும்.

நூல் குறிப்பு:

  • பெத்தலகேம் குறவஞ்சியில் உலாவரும் மன்னர் இயேசுவாகவும் தேவமோகினியாக தலைவி சீயோன் மகளாகவும், குறவஞ்சி விசுவாசமாகவும் குறி கூறுதல் தீர்க்க தரிசனமாகவும். சிங்கன் குருவாகவும், நூவன் உபதேசியாகவும், அவர்கள் பிடிக்கும் பறவைகளாக மக்களும் அதற்குப் பயன்படும் வலையாக இறைவாக்கு என்ற நற்செய்தியும் உருவாக்கப்பட்டது.
  • இந்நூல் முற்றுருவகமாகத் திகழ்வது தனிச்சிறப்பு ஆகும்.

ஆசிரியர் குறிப்பு:

  • இந்நூலின் ஆசிரியர் தஞ்சை வேதநாயக சாத்திரியார்.
  • பெற்றோர் = தேவசகாயம், ஞானப்பூ அம்மையார்
  • ஊர் = திருநெல்வேலி
  • தஞ்சையில் மதபோதராக விளங்கிய சுவார்ட்ஸ் பாதிரியார் இவரை தம் மாணவராக ஏற்றுக்கொண்டார்.
  • தஞ்சையை ஆண்ட சரபோசி மன்னரின் உற்ற தோழராக விளங்கினார்.
  • நூல்கள் = ஞானத்தச்சன், ஞானவுலா, ஆரணாதிந்தம்.

சொற்பொருள்:

  • ஏகன்இறைவன்
  • தற்பரன்இறைவன்

இலக்கணக்குறிப்பு;

  • அருந்தவம்பண்புத்தொகை
  • தானதர்மம்உம்மைத்தொகை
  • பேய்க்கணங்கள்ஆறாம் வேற்றுமைத்தொகை
  • அமைந்த, கொடுத்தபெயரெச்சம்

மறுமலர்ச்சிப் பாடல்கள் - எந்நாளோ?

ஆசிரியர் குறிப்பு:

  • பண்டைநலம் புதுப்புலமை பழம்பெருமை அத்தனையும் படைப்பாய் இந்நாள்! தொண்டு செய்வாய் தமிழுக்குத் துறைதோறுந் துடித்தெழுந்தேஎன்பார் பாவேந்தர்.
  • பெற்றோர் = கனகசபை, இலக்குமியம்மாள்
  • ஊர் = புதுச்சேரி
  • தமிழ்நாட்டு இரசூல் கம்சதோவ் எனப் பாராட்டப்பட்டவர்.
  • நூல்கள் = குடும்பவிளக்கு, பாண்டியன் பரிசு, இருண்டவீடு, தமிழச்சியின் கத்தி, சேரதாண்டவம், பிசிராந்தையார், அழகின் சிரிப்பு, குறிஞ்சித்திட்டு போன்ற பல.
  • வாழ்வினில் செம்மையை செய்பவள் நீயேஎன்ற அவரின் தமிழ் வாழ்த்துப் பாடல் புதுவை அரசின் தமிழ்த்தாய் வாழ்த்தாக பாடப்பட்டு வருகிறது.
  • குயில் என்ற இலக்கிய இதழை நடத்தினார்.
  • புதுவைக் குயில்என்றும் இவரை அழைப்பர்.

சொற்பொருள்:

  • உன்னதம்உயர்வு
  • இமமலைஇமயமலை
  • கீர்த்திபுகழ்
  • பண்பாடல்

இலக்கணக்குறிப்பு:

  • அருந்தமிழ்  - பண்புத்தொகை
  • புதுக்குநாள்வினைத்தொகை
  • பகர்வார்வினையாலணையும் பெயர்
  • தண்கடல்பண்புத்தொகை

பூக்கட்டும் புதுமை

முடியரசன்:

  • பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களுள் மூத்தவர் இவர்.
  • ஊர் = மதுரை
  • பெற்றோர் = சுப்புராயலு, சீதாலட்சுமி
  • இயற்பெயர் = துரைராசு
  • தந்தை பெரியாரிடமும், அறிஞர் அண்ணாவிடமும் நெருங்கிப் பழகியவர்.
  • சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்.
  • தமது மறைவின் பொழுதும் எச்சடங்குகளும் வேண்டாம் என்றே உரைத்து, அவ்வாறே நிறைவேறச் செய்தவர்.
  • காரைக்குடி மீனாட்சி சுந்தரம் உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றினார்.
  • நூல்கள் = பூங்கொடி, காவியப்பாவை.
  • பூங்கொடி என்னும் காவியம் தமிழக அரசின் பரிசை பெற்றது.
  • பறம்பு மலையில் நடந்த விழாவில் கவியரசு என்ற பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது.

சொற்பொருள்:

  • ஈர்க்கின்றகவர்கின்ற
  • புலம்அறிவு
  • புல்லடிமைஇழிவைச் சேர்க்கும் அடிமைத்தனம்

இலக்கணக்குறிப்பு:

  • பூக்கின்ற, ஈர்க்கின்றபெயரெச்சம்
  • செங்கதிர்பண்புத்தொகை
  • புல்லடிமைபண்புத்தொகை
  • காகிதப்பூமூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

விடுதலை விளைத்த உண்மை

கண்ணதாசன்;

  • மாற்றம் எனது மானிடத் தத்துவம்எனப் பாடியவர்.
  • பிறந்த ஊர் = சிறுகூடல்பட்டி
  • தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர்.
  • பெற்றோர் = சாத்தப்பன், விசாலாட்சி
  • இயற்பெயர் = முத்தையா
  • இதழ்கள் = தென்றல், தென்றல்திரை, சண்டமாருதம், முல்லை, கண்ணதாசன்

சொற்பொருள்:

  • தட்டின்றிகுறையின்றி
  • மூவாதமூப்படையாத
  • மீன்விண்மீன்
  • தளைவிலங்கு
  • வதிபவர்வாழ்பவர்
  • மிடிமைவறுமை

தளை

சிற்பி பாலசுப்பிரமணியம்:

  • இவரின் ஊர் = கோவை மாவட்டம் பொள்ளாச்சி
  • பெற்றோர் = பொன்னுசாமி, கண்டியம்மாள்
  • கருத்தோவியங்களை வடிவமைக்கும் சொல்லேருழவர்
  • பாரதியார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் தலைவராகப் பணியாற்றியவர்.
  • கவிதை நூல்கள் = சிரித்த முத்துக்கள், நிலவுப்பூ, ஒளிப்பறவை, சூரிய நிழல், ஆதிரை.
  • உரைநடை நூல்கள் = இலக்கியச் சிந்தனை, மலையாளக் கவிதை, அலையும் சுவடும், ஒரு கிராமத்து நதி.
  • ஒரு கிராமத்து நதிஎன்னும் நூலுக்குச் சாகித்திய அகாதமியின் பரிசு பெற்றார்.
  • தமிழக அரசின் பாவேந்தர் பரிசு, தஞ்சைப் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் ஆங்கில இலக்கிய நூல்பரிசு பெற்றுள்ளார்.

கண்

நா.காமராசன்:

  • பிறந்தது = மதுரை மாவட்டம் போடி-மீனாட்சிபுரம் கிராமம்.
  • பெற்றோ = நாச்சிமுத்து, இலட்சுமி அம்மாள்.
  • மறுமலர்ச்சி யுகந்தின் கவிஞராக திகழ்ந்தவர்.
  • கிராமிய சந்தங்களுடன் புதுப்பார்வை திகழப் படிமக் கவிதைகள் பலவற்றை எழுதியுள்ளார்.
  • இவரின்கருப்பு மலர்கள்என்னும் தொகுப்பு நூல், கவிதை உலகில் ஒரு திருப்பத்தை உருவாக்கியது.
  • படைப்புகள் = சூரியகாந்தி, சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள், தாஜ்மகாலும் ரொட்டித்துண்டும்.

இலக்கணக்குறிப்பு:

  • பகல்பூக்கள்ஏழாம் வேற்றுமைத்தொகை
  • புருவக்கொடிஉருவகம்
  • மனப்பறவைஉருவகம்

தண்ணீர் வங்கிகள்

.கருணாநிதி:

  • கவிஞர் .கருணாநிதி 28.03.1939இல் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிறந்தவர்.
  • பெற்றோர் = நடேசன், சிவகாமியம்மாள்
  • அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டத் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்.
  • பூவிருந்தவல்லி அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலை தமிழாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.
  • இவர் தொல்காப்பியம் முழுமைக்கும் உரை எழுதியுள்ளார்.
  • இவரின் கவிதை தொகுப்பு = நமக்குள்ளே மலரட்டும் நல்லிணக்கம்

இலக்கணக்குறிப்பு:

  • இணையிலாப் பசுமைஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  • இலாஇடைக்குறை
  • வான்மழைஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை

வழிபாட்டுப் பாடல்கள் - சிவபெருமான்

திருநாவுக்கரசர்:

  • சைவத் திருமுறைகளுள் முதல் ஏழு திருமுறைகள் தேவாரம் ஆகும்.
  • அவற்றுள் 4,5,6 ஆகிய திருமுறைகள் திருநாவுக்கரசர் பாடியது.
  • திருநாவுக்கரசர் தென்னார்காடு மாவட்டம், திருவாமூர் என்னும் ஊரில் பிறந்தார்.
  • பெற்றோர் = புகழனார், மாதினியார்,இவரின் தமக்கையார் = திலகவதியார்
  • இயற்பெயர் = மருள் நீக்கியார்
  • இவரின் வேறு பெயர்கள் = வாகீசர், அப்பர்
  • சைவநெறியில் தோய்ந்த இவர் சாதி வேற்றுமைகளைத் களைய முற்பட்ட சமுதாயப் பற்றாளர்.
  • இவர்என் கடன் பணி செய்து கிடப்பதேஎன்னும் திருவாக்கைத் தந்தவர்.
  • காலம் = கி.பி.ஏழாம் நூற்றாண்டு

சொற்பொருள்:

  • நமன்எமன்
  • நடலைஇறப்பு
  • பிணிநோய்
  • ஏமாப்புபாதுகாப்பு

திருமால்

ஆண்டாள்:

  • ஆண்டாள் அருளியது திருப்பாவை, நாச்சியார் திருமொழி.
  • திருப்பாவையைவேதம் அனைத்திற்கும் வித்துஎன்பர்.
  • நாலாயிர திவ்வியப் பிரபந்தத் தொகுப்பில் மூன்றாவது பிரபந்தமாக வைக்கப்பட்டிருப்பது திருப்பாவை.
  • பாவை என்பது சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று.
  • பாவை என்பது இருமடியாகு பெயர்.
  • திருப்பாவை பாக்கள் முப்பதும் வெண்டளையால் வந்த எட்டடி நாற்சீர் கொச்சகக் கலிப்பா வகையை சார்ந்தவை.
  • இவரின் காலம் எட்டாம் நூற்றாண்டு.
  • இவர் பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள்.

சொற்பொருள்:

  • ஆழிகடல், சக்கரம்
  • சார்ங்கம்வில்
  • பாழிவலிமை

இலக்கணக்குறிப்பு;

  • கரவேல்எதிர்மறை ஏவல் வினைமுற்று
  • உதைத்தபெயரெச்சம்

இயேசுபிரான்

எச்..கிருஷ்ணபிள்ளை:

  • இவர் திருநெல்வேலி மாவட்டம் கரையிருப்பு என்னும் பகுதியில் பிறந்தவர்.
  • பெற்றோர் = சங்கர நாராயண பிள்ளை, தெய்வநாயகி அம்மை
  • ஹென்றி அல்பிரடு என்பதன் சுருக்கமே எச். ஆகும்
  • படைப்புகள் = போற்றித் திருவகவல், இரட்சணியமனோகரம், இரட்சணிய யாத்திரிகம்.
  • இரட்சணியமனோகரம் கலி விருதப்பாவால் அமைந்த நூல்.
  • இவரைகிறித்துவக் கம்பர்என்பர்.

சொற்பொருள்:

  • துசங்கட்டுதல்விடாப்பிடியாக ஒரு செயலை முன்னின்று நடத்திக்காட்டுதலுக்கு வழங்கப்படும் வட்டார வழக்கு.

இலக்கணக்குறிப்பு:

  • பெருங்குணம்பண்புத்தொகை
  • கட்டும்செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம்

புத்தர்

புத்தமித்திரர்:

  • வீரசோழியம் ஒரு ஐந்திலக்கணம் கூறும் நூல்.
  • வீரராசேந்திர சோழன் விருப்பத்திற்கு ஏற்பப் புத்தமித்திரர் பாடியது.
  • இந்நூலுக்கு பெருந்தேவனார் உரை எழுதியுள்ளார்.

சொற்பொருள்:

  • இருவினைநல்வினை, தீவினை
  • பரவுதும்யாம் தொழுதும்
  • ஓங்குநீர்கடல்
  • முப்பகைகாமம், வெகுளி, மயக்கம்
  • முனிவர்துறவி

இலக்கணக்குறிப்பு:


  • பரவுதும்தன்மைப் பன்மை வினைமுற்று
  • நிழல் போதிஇரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
  • நீங்கா இன்பம்ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  • யாவரும்முற்றும்மை
  • வீற்றிருந்தபெயரெச்சம்
  • வினைப்பிணிஉருவகம்

No comments:

Post a Comment