Saturday, 28 March 2015

பிழை திருத்தம்

பிழை திருத்தம்


வலுஉச் சொல்திருத்தும்
அது அல்ல-அது அன்று
அடமழை-அடைமழை
அகண்ட-அகன்ற
அதுகள்-அவை
ஆத்துக்கு-அகத்துக்கு
இன்னிக்கி-இன்றைக்கு
இத்தினி-இத்தனை
ஈர்கலி-ஈர்கொல்லி
உருச்சி-உரித்து
உந்தன்-உன்றன்
கடக்கால்-கடைக்காள்
காத்து-காற்று
குளப்பாட்டி-குளிப்பாட்டி
கோர்த்து-கோத்து
கோடாலி-கோடரி
தாவாரம்-தாழ்வாரம்
நாகரீகம்-நாகரிகம்
விக்குறான்-விற்கிறான்
வெண்ணை-வெண்ணெய்
வென்னீர்-வெந்நீர்
அமக்களம்-அமர்க்களம்
நோம்பு-நோன்பு
பண்டகசாலை-பண்டசாலை
பேரன்-பெயரன்
முழுங்கு-விழுங்கு
மோர்ந்து-மோந்து
வெங்கலம்-வெண்கலம்
வேண்டாம்-வேண்டா
அதுகள்-அவை
அறுதலி-அறுதாலி
ஆத்துக்கு-அகத்துக்கு
ஆத்துக்காரி-அகத்துக்காரி
அனியாயம்-அநியாயம்
ஆவாரை-ஆவிரை
ஊர்ச்சந்து-உகிர்ச்சுற்று
ஒத்தடம்-ஒற்றடம்
கடப்பாறை-கடப்பாரை
கட்டிடம்-கட்டடம்
குடும்பி-குடுமி
குறித்து-குருத்து
சிலது-சில
தாவடம்-தாழ்வடம்
துளிர்-தளிர்
துலைத்தல்-தொலைத்தல்
துறக்க-திறக்க
தொவக்கம்-துவக்கம்
நாத்தம்-நாற்றம்
பட்டனம்-பட்டணம்
பாதம் பருப்பு-வாதுமைப் பருப்பு
பெறகு-பிறகு
பொடைத்தல்-புடைத்தல்
முகந்து-முகர்ந்து
விசிரி-விசிறி

பறவை விலங்குகளின் ஒலிகள்:

  • சேவல் கூவும்
  • கூகை குழறும்
  • மயில் அகவும்
  • கிளி பேசும்
  • வண்டு முரலும்
  • தேனி ரீங்காரமிடும்
  • குருவி கீச்சிடும்
  • ஆந்தை அலறும்
  • காகம் கரையும்
  • குயில் கூவும்
  • வானம்பாடி பாடும்
  • வாத்து கத்தும்
  • கோழி கொக்கரிக்கும்
  • குதிரை கணைக்கும்
  • எருது எக்காளமிடும்
  • அணில் கீச்சிடும்
  • கழுதை கத்தும்
  • பசு கதறும்
  • புலி உறுமும்
  • குரங்கு அலப்பும்

தாவரங்களின் உறுப்பு பெயர்கள்:

  • ஈச்சவோலை
  • கமுகங்கூந்தல்
  • தென்னை ஓலை
  • பலா இலை
  • தென்னங்கீற்று
  • நெல்தாள்
  • கேழ்வரகுத்தட்டை
  • சோளத்தட்டை
  • கம்பந்த்தட்டை
  • பனையோலை
  • மாவிலை
  • முருங்கைக்கீரை
  • மூங்கில் இலை
  • வாழையிலை
  • வேபந்த்தழை
  • தினைத்தாள்
  • வெங்காயத்தாள்
  • தாழை மடல்

செடி, கொடி, மரங்களின் தொகுப்பிடம்:

  • பூஞ்சோலை
  • பூந்தோட்டம்
  • வாழைத்தோட்டம்
  • தேயிலைத்தோட்டம்
  • வெற்றிலைத்தோட்டம்
  • கம்பங்கொல்லை
  • சோளக்கொல்லை
  • ஆலங்காடு
  • கொய்யாத்தோப்பு
  • நெல் வயல்
  • மாந்தோப்பு
  • தென்னந்தோப்பு
  • முந்திரித் தோப்பு
  • வேலங்காடு

பறவை விலங்குகளின் இளமைப் பெயர்கள்:

  • ஆட்டுக்குட்டி
  • கழுதைக்குட்டி
  • குதிரைக்குட்டி
  • புலிப்பரள்
  • குருவிக்குஞ்சு
  • சிங்கக்குருளை
  • மான்கன்று
  • நாய்க்குட்டி
  • பன்றிக்குட்டி
  • பூனைக்குட்டி
  • எலிக்குஞ்சு
  • கீரிப்பிள்ளை
  • பசுக்கன்று
  • யானைக்கன்று

பறவை விலங்குகளின் வாழ்விடம்:

  • ஆட்டுப்பட்டி
  • எலி வளை
  • குதிரைக் கொட்டில்
  • குருவிக் கூடு
  • கோழிக் கூண்டு
  • கோழிப் பண்ணை
  • மாட்டுத்தொழுவம்
  • யானைக்கூடம்

பொருள்களின் தொகுப்பு:

  • ஆட்டு மந்தை
  • மாட்டு மந்தை
  • பசு நிரை
  • கற்குவியல்
  • கள்ளிக்கற்றை
  • சாவிக்கொத்து
  • எறும்புச்சாரை
  • யானைக்கூட்டம்
  • மக்கள் கூட்டம்
  • வீரர் படை
  • விறகுக் கட்டு
  • வைக்கோற்போர்

விலங்குகளின் மலம்:

  • மாட்டுச்சாணம்
  • ஆட்டுப்பிழுக்கை
  • குதிரை இலத்தி
  • யானை இலண்டம்

No comments:

Post a Comment