Friday, 20 March 2015

விலங்குகளின் இளமைப் பெயர்கள்:

விலங்குகளின் இளமைப் பெயர்கள்:


விலங்குகளின் இளமைப் பெயர்கள்:
அணிற்பிள்ளை, ஆட்டுக்குட்டி, கழுதைக் குட்டி, குதிரைக்குட்டி, நாய்க்குட்டி, பன்றிக்குட்டி, எருமைக்கன்று, பசுங்கன்று, கீரிப்பிள்ளை, சிங்கக் குருளை, எலிக்குஞ்சு. புலிப் போத்து.

விலங்குகள், பறவைகள் தங்குமிடம்:
குதிரைக்கொட்டில், மாட்டுத்தொழுவம், வாத்துப்பண்ணை, கோழிப்பண்ணை, யானைக்கூடம்.

விலங்குகள், பறவைகள் ஒலி:
அணில் கீச்சிடும், ஆந்தை அலறும், கழுதை கத்தும், குதிரை கனைக்கும், சிங்கம் முழங்கும், புலி உறுமும், நரி ஊளையிடும், யானை பிளிறும், குயில் கூவும், காகம் கரையும்.

காய்களின் இளமைப் பெயர்கள்:
•    அவரைப்பிஞ்சு, முருங்கைப்பிஞ்சு, கத்தரிப்பிஞ்சு, வெள்ளரிப்பிஞ்சு, மாவடு.
•    சொல் பொருள் : களஞ்சியம் - தானியம் சேர்த்து வைக்கும் இடம், அகழி - கோட்டையைச் சுற்றியுள்ள நீர் நிறைந்த பகுதி, தரணி - உலகம்.
•    சதாவதானி - ஒரே நேரத்தில் நூறு செயல்களை நினைவில் வைத்துச் சொல்பவர்.
•    இறைவை - நீர் இறைக்கும் கருவி
•    பசுந்தாள் - பசுமையான இலை தழைகள்
•    மானாவாரி - மழை பெய்தால் மட்டுமே பயிர் விளையும் நிலம்.
•    தமிழக அடையாளங்கள்  - மரம் :  பனை மரம், மலர் - செங்காந்தள் மலர், விலங்கு - வரையாடு, பறவை - மணிப்புறா.
•   ஒன்பது மணிகள் - முத்து, பவளம், மரகதம், மாணிக்கம், புட்பராகம், ரத்தினம், வைரம், வைடூரியம், கோமேதகம்.
•   மூவேந்தர் - சேரர், சோழர், பாண்டியர்; சேரர்களின் மாலை - பனம்பூ மாலை, சோழர்களின் மாலை - அத்திப்பூ மாலை, பாண்டியர்களின் மாலை - வேப்பம்பூ மாலை.
•    நால்வகைப்படைகள் - காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை.

மதுரையில் வாழ்ந்த சங்கப்புலவர்கள்
நக்கீரனார், குமரனார், நல்லந்துவனார், மருதனிளநாகனார், இளந்திருமாறன், சீத்தலைச் சாத்தனார், பெருங்கொல்லனார், கண்ணகனார், கதங்கண்ணாகனார், சேந்தம்பூதனார்.இருபதாம் நூற்றாண்டில் நாடகக் கலைக்கு புத்துயிர் ஊட்டியவர்கள் - பரிதிமாற்கலைஞர், சங்கரதாசு சுவாமிகள், பம்மல் சம்பந்தனார்.

தாவரங்கள் : காய்களின் இளமை மரபு
•    அவரைப்பிஞ்சு, முருங்கைப் பிஞ்சு, கத்தரிப்பிஞ்சு, வாழைக்கச்சல், வெள்ளரிப்பிஞ்சு, கொய்யாப்பிஞ்சு, பலாமூசு, தென்னங்குரும்பை.

விலங்குகள் : இளமை மரபு
குருவிக்குஞ்சு, கோழிக்குஞ்சு, ஆட்டுக்குட்டி, கழுதைக்குட்டி, எருமைக்கன்று, குதிரைக்குட்டி, பன்றிக்குட்டி, குரங்குக்குட்டி, மான்கன்று, நாய்க்குட்டி, பூனைக்குட்டி, யானைக்கன்று, புலிப்பறழ், கீரிப்பிள்ளை.

சிந்தனையாளர்கள்; கவிஞர்கள்
•    ஷேக்ஸ்பியர் - ஆங்கில நாடக ஆசிரியர்
•    மில்டன் - ஆங்கிலக் கவிஞர்
•    பிளேட்டோ - கிரேக்கச் சிந்தனையாளர்
•    காளிதாசர் - வடமொழி நாடக ஆசிரியர்
•    டால்ஸ்டாய் - ரஷ்யநாட்டு எழுத்தாளர்
•    பெர்னார்ட்ஷா - ஆங்கில நாடக ஆசிரியர்

தமிழ் எழுத்துக்களின் மாத்திரை அளவு:
•    மெய்யெழுத்து - அரை மாத்திரை
•    உயிரெழுத்து (குறில்) - ஒரு மாத்திரை
•    உயிரெழுத்து (நெடில்) - இரு மாத்திரை
•    உயிர்மெய் (குறில்) - ஒரு மாத்திரை
•    உயிர்மெய் (நெடில்) - இரு மாத்திரை

1 comment: