Wednesday, 18 March 2015

தாவரவியல் | பிளஸ் டூ வினா விடை

தாவரவியல் | பிளஸ் டூ வினா விடை


பிளஸ் டூ | தாவரவியல்
♣செயற்கை வகைப்பாட்டை உருவாக்கியவர்-கரோலஸ் லின்னேயஸ்
♣கரோலஸ் லின்னேயஸ் சுவிடன் நாட்டை சேர்ந்தவர்.
♣ஸ்பீஸிஸ் பிளாந்தாரத்தில் 24 வகுப்புக்களும் 7300 சிற்றினங்களும் உள்ளன.
♣சார்லஸ் டார்வின் சிற்றினங்களின் தோற்றம் என்ற நூல் மரபுவழி வகைப்பாடு தோன்ற துண்டுதலாக அமைந்தது.
♣மரபுவழி வகைப்பாட்டை உருவாக்கியவர்கள் எங்ளர் மற்றும் பிராண்டல்
♣பரிசோதனை வகைப்பாட்டியல் என்ற சொற்களை வழக்கத்திற்கு கொண்டுவந்தவர்கள் கேம்ப் மற்றும் கில்லி
♣இருசொல் பெயரிடும் முறையை அறிமுகப்படுத்தியவர் காஸ்பர்டு பாஹின்
♣இரு சொல் பெயரிடும் முறையை சரியான முறையில் கையாண்டவர் கரோலஸ் லின்னேயஸ்
♣உலகின் மிகப்பெரிய தாவரவியல் தோட்ட ஹெர்பேரியம் கியூ - லண்டனில் உள்ளது.
♣இந்திய தாவரவியல் தோட்டம் கொல்கத்தா வில் காணப்படுகிறது.
♣இனப்பெருக்க வகைப்பாடு என அழைக்கப்படுவது செயற்கை முறை வகைப்பாடு
♣ஜெனிரா பிளாண்டாரம் என்ற நூலை வெளியிட்டவர் பெந்தம் மற்றும் ஹீக்கர்
♣சூலகமேல் மலர் மற்றும் இரண்டுக்கு மேற்பட்ட சூலிலைகள் உடைய மலர்களை கொண்ட வரிசை ஹெட்டிரோமிரே
♣இன்ப்பெரே வரிசையில் 3 துறைகள் மற்றும் 9 குடும்பங்கள் உள்ளன.
♣மூவங்க மலர்கள் காணப்படும் வகுப்பு மானோகாட்டிலிடனே
♣போடோஸ்டெம்மேசி இடம் பெற்றுள்ள வரிசை மானோகிளாமிடே
♣பெந்தம் மற்றும் ùஹுக்கர் வகைப்பாட்டில் தற்கால துறைகள் கோஹார்ட்டுகள் என அழைக்கப்பட்டன
♣சூல்கள் திறந்த நிலையிலுள்ள தாவரங்கள் ஜிம்னோஸ்பெர்ம்கள்
♣புறப்புல்லி வட்டம் காணப்படாத மால்வேசி தாவரம் அபுட்டிலான் இண்டிகம்
♣ஓரறை உடைய மகரந்தப்பை காணப்படும் குடும்பம் மால்வேசி
♣மால்வேசி குடும்பம் தலாமி*புனோரே வரிசையை சேர்ந்தது.
♣ஏபெல்மாஸ்கஸ் எஸ்குலண்டஸ்ஸின் கனி வகை சூலக அறை வெடிகனி
♣சிறுநீரக வடிவ மகரந்தப்பை காணப்படும் குடும்பம் மால்வேசி
♣சொலானேசி இடம்பெற்றுள்ள வரிசை பாலிமோனியேல்ஸ்
♣வெண்டையின் இருசொல் பெயர் ஏபல்மாஸ்கஸ் எஸ்குலண்டஸ்
♣நிலையான புல்லிவட்டம் காணப்படும் குடும்பம் சொலானேசி
♣சூலகத்தில் போலியான அறை குறுக்குச்சுவர் காணப்படுடும் தாவரம் டாட்டுரா மெட்டல்
♣அட்ரோபின் அட்ரோபா பெல்லடோனா தாவர வேர்களிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது.
♣டாட்ரா ஸ்ட்ராமோனியம் தாவர இலைகளிலிருந்து பெறப்படும் மருந்து ஸ்ட்ரமோனியம்
♣பெத்தம் என்ற ஹீக்கர் வகைப்பாட்டில் என்றும் குடும்பங்கள் துறைகள் என்று அழைக்கப்பட்டன.
♣நிகோட்டின் நிகோட்டியானா டொபாக்கம் தாவத்திலிருந்து பெறப்படுகிறது.
♣யூபோர்பியேசி குடும்பம் யூனிசெக்சுவேல்ஸ் வரிசையைச் சார்ந்தது.
♣யூபோரிபியேசி குடும்பத்தில் இடம்பெற்றுள்ள பேரினங்கள் எண்ணிக்கை 300
♣அக்காலிபா இன்டிகா தாவரத்தில் காட்கின் மஞ்சரி உள்ளது.
♣ரெஸினஸ் கம்யூனிஸ் தாவரத்தின் கனி வகை ரெக்மா
♣பால் புதர் என அழைக்கப்படும் தாவரம் யூப்போர்பியா திருக்கள்ளி
♣கிளாடோடுக்கு எடுத்துக்காட்டுகள் யூ.திருக்கள்ளி. யூ.ஆண்டிகோரம்
♣ரெஸினஸ் கம்யூனிஸ் ஒரு புதர்ச்செடி
♣ஹீவியா பிரேசிலியன்சிஸ் தாவரத்தின் இலை மூன்று சிற்றிலையுடைய கூட்டிலை
♣மியூசேசி குடும்பம் சார்ந்துள்ள வரிகை எபிகைனே
♣ராவனெல்லா மடகாஸ் கரியன்சிஸ் தாவரம் மியூசேசரி குடும்பத்தின் மரம் ஆகும்.
♣ராவனெலாத் தாவரத்தின் இலையமைவு இரு வரிசை
♣மியூசா தாவரத்தின் மஞ்சரி கிளைத்த ஸ்பேடிக்ஸ் ஆகும்.
♣மியூசா ஒரு பாலிகேமஸ் தாவரம்
♣மியூஸா தாரவத்தின் கனி விதைகளற்ற நீண்ட சதைப்பற்றுள்ள பெர்ரி ஆகும்.
♣மியூஸா டெக்ஸ்டைலிஸ் மணிலா நார்த்தாவரம் எனவும் அழைக்கப்படும்.
♣ராவனெல்லா மடகாஸ் கரியன்சிஸ் தாவரம் பயணிகளின் பனை எனவும் அழைக்கப்படுகிறது.
♣ஸ்டெரிலிட்சியா. ரெஜினே தாவரம் பறவைகளின் சொர்க்க மலர் என அழைக்கப்படுகிறது.
♣மியூசா தாரவத்தின் இலையமைவு சுழல் முறை
♣ராவனெலா மடகாஸ்கரியன்ஸில் தாவரத்தின் மஞ்சரி கூட்டு சைம்
♣ராவனெலா மடகாஸ்கரியன்ஸிஸ் தாவரத்தின் வளமான மகரந்த தாள்களின் எண்ணிக்கை 6
♣உயிர் உள்ள ஆஞ்சியோஸ்பெர்ம் தாவரங்களில் ரானேல்ஸ் துறை எளியவை தொன்மையனவை
♣நடு நரம்பு மற்றும் பக்க நரம்புகளின் மீது மஞ்சள் நிறம் காணப்படும் தாவரம் சொலானம் சாந்தோகார்பம்
♣தொடர்ந்து பகுப்படையும் தன்மைகொண்ட செல்களால் ஆன தொகுதி ஆக்குத்திசு
♣ஆக்குத் திசுவின் பகுதி நிலைத்த திசுவாக மாறும் நிகழ்ச்சி வேறுபாடு அடைதல்
♣தாவரத்தின் அனைத்து திசுக்களிலும் பொதுவாக காணப்படும் திசு பாரன்கைமா
♣வாஸ்குலார் கேம்பியம் பக்க ஆக்குத்திசுவாகும்.
♣கார்க்கர்ம்பியத்தின் வேறு பெயர் பெல்லோஜன்
♣காற்றறைகள் நிறைந்த பாரன்கைமா ஏரன்கைமா எனப்படுகின்றன.
♣ஸடார்ச் துகள்கள் நிறைந்த பாரன்கைமா சேமிப்பு பாரன்கைமா எனப்படும்
♣குளோரேன்கைமா திசுவின் பணி ஒளிச்சேர்க்கை ஆகும்.
♣இருவித்திலை தாவர தண்டின் ஹைபோடெர்மிஸ் கோலன்கைமா திசுக்களால் ஆனவை.
♣கோண கோலன்கைமாவிற்கு எடுத்துகாட்டு டாட்டுரா
♣இடைவெளி கோலன்கைமாவிற்கு எடுத்துக்காட்டு ஐப்போமியா
♣விதை உறையின் கடினத் தன்மைக்கு காரணமான செல் ஸ்கீளிரைடுகள்
♣பேரிக்கனியின் தளத்திசுவில் காணப்படும் செல் பிராக்கிஸ்கிளிரைடு (எ) கல் செல்
♣வேர் தூவிகள் டிரைக்கோபிளாஸ்ட் லிருந்து உருவாகின்றன.
♣எலும்பு செல்கள் எனப்படுவது ஆஸ்டியோ ஸ்கீளிரைடு அது காணப்படும் பகுதி பட்டாணி விதை உறை
♣தாவரத்தின் தாங்குதிசு எனப்படுவது நார்கள்
♣கல் செல்கள் எனப்படுவது பிராக்கிஸ்கீளிரைடு
♣ஹீலியாந்தஸ் தாவரத்தின் ஹைபோடெர்மிஸ் அடுக்கு கோலன்மைவால் ஆனது.
♣ஜிம்னோஸ்பெர்ம்களிலும். டெரிடோபைட்டுகளிலும் நீரை கடத்தும் முக்கிய கூறு ட்ரக்கீடுகள்
♣ஒற்றை துளை தட்டு காணப்படும் தாவரம் மாஞ்சிஃபெரா
♣பல துளை தட்டு காணப்படும் தாவரம் லிரியோடென்ட்ரான்
♣ஜிம்னோஸ்பெர்ம்களிலும். டெரிடோபைட்டுகளிலும் காணப்படாத சைலக்கூறு சைலக்குழாய்கள்
♣சைலக் குழாய் காணப்படும் ஜிம்னோஸ்பெர்ம் தாவரம் நீட்டம்
♣சைலம் நார்கள் லிபிரிஃபார்ம் என்றும் புளோயம் நார்கள் பாஸ்ட் நார்கள் என்றும் அழைக்கப்படுகிறது.
♣சைலம் பாரன்கைமா செல்சுவர்கள் செல்லுலோஸ் பொருளால் ஆனது.
♣ஆஞ்சியோஸ்பெர்ம்களில் மட்டும் காணப்படும் புளோயப்பகுதி துணை செல்கள்
♣புளோயம் திசுவில் காணப்படும் உயிரற்ற செல் புளோயம் நார்கள் சைலத்திóல் உள்ள உயிர் உள்ள செல் சைலம் பாரன்கைமா
♣புறத்தோல் துளையை சூழந்துள்ள சிறப்பு செல்கள் காப்பு செல்கள்
♣வேரின் புறத்தோலில் உள்ள குட்டை செல்கள் டிரைகோபினாஸ்ட் என்று அழைக்கப்படுகின்றன.
♣துணை செல்கள் காணப்படாத தாவரம் ஜிம்னோஸ்பெர்ம். டெரிடோஃபைட்
♣ஆரப்போக்கு அமைவு வாஸ்குலார் கற்றை வேர்களி ல் காணப்படுகிறது.
♣இருபக்க ஒருங்கமைந்த வாஸ்குலார் கற்றை குக்கர்பிட்டா தாவரத்தில் உள்ளது.
♣புளோயம் குழ் வாஸ்குலார் கற்றைக்கு எடுத்துக்காட்டு பாலிபோடியம்
♣சைலம் சூழ் வாஸ்குலார் கற்றைக்கு எடுத்துக்காட்டு அக்கோரஸ்
♣பக்கவேர்கள் பெரிசைக்கிள் பகுதியிலிருந்து தோன்றுகின்றன.
♣பித் பகுதியின் வேறு பெயர் மெடுல்லா (அ) அகணி
♣புறணியின் கடைசி அடுக்கு அகத்தோல்
♣காஸ்பாரின் பட்டைகள் காணப்படாத அகத்தோல் செல்கள் வழிச்செல்கள்
♣ஸடீலின் வெளிப்புற அடுக்கு பெரிசைக்கிள்
♣பல முனை சைலம் ஒரு வித்திலை வேரி ல் காணப்படுகின்றன.
♣மக்காச்சோளத்தின் இணைப்புதிசு ஸ்கீளிரென்கைமா செல்களால் ஆனது.
♣வேரின் வெளிப்புற அடுக்கு ரைசோடெர்மிஸ்
♣நான்கு முனை சைலம் இரு வித்திலை வேரி ல் காணப்படுகிறது.
♣ஒரு வித்திலை தாவரத்தண்டின் ஹைப்பேடெர்மிஸ் ஸ்கீளிரென்கைமா செல்களால் ஆனது.
♣சிதறிய வால்குலர் கற்றைகள் ஒரு வித்திலைத் தாவரத்தண்டு ல் காணப்படுகிறது.
♣புரோட்டோ சைல இடைவெளி ஒரு வித்திலைத் தாவரத்தண்டு ல் காணப்படுகிறது.
♣க்யூட்டிகிள் கியூட்டின் பொருளால் ஆனது.
♣கற்றைக் தொப்பிகள் ஸ்கிளிரென்கைமா செல்களால் ஆனது.
♣ஸ்டெல்லேட் பாரன்கைமா காணப்படும் தாவரம் வாழை-கல்வாழை
♣மேல் கீழ் வேறுபாடு கொண்ட இலைகள் இருவித்திலை தாவரத்தில் காணப்படுகிறது.
♣இரு பக்கமும் ஒத்த அமைப்புடைய இலைகள் ஒருவித்திலை தாவரத்தில் காணப்படுகிறது
♣இரு வித்திலை தாவர இலையின் வாஸ்குலார் கற்றையை சூழ்ந்துள்ள உறை கற்றை உறை எனப்படும்.
♣காஸ்பாரியன் பட்டைகள் சூபரின் பொருளால் ஆனது.
♣ஒரு வித்திலை தாவர தண்டின் வாஸ்குலார் கற்றை மண்டை ஓடு வடிவமானது.
♣பாரம்பரியத்தின் அடிப்படை அலகு எனப்படுவது ஜீன்கள்
♣குரோமோசாம்கள் என்ற பெயரை அறிமகப்படுத்தியவர் வால்டேயர்
♣குரோமோசோம்களில் ஜீன்கள் உள்ளதை முதன் முதலில் உறுதி செய்தவர் பிரிட்ஜஸ்
♣இரு சகோதரி குரோமேடிடுகள் இணைந்துள்ள மையப்பகுதி சென்ட்ரோமியர்
♣குரோமோசோமின் நுனிப்பகுதி டீலோமியர் என அழைக்கப்படும்.
♣பால் நிர்ணயத்தில் பங்கு கொள்ளும் குரோமோசோம்கள் இனகுரோமோசோம்
♣செனட்ரோமியரும் டீலோமியரும் காணப்படாத குரோமோசோம்கள் டபுள் மினிட்ஸ் எனப்படும்.
♣டபுள்மினிட் குரோமோசோம்கள் புற்றுநோய் செல்களில் காணப்படுகின்றன.
♣பாலிடீன் குரோமோசோம்களை முதன் முதலில் கண்டறிந்தவர் C.G.பால்பியானி
♣பாலிடீன் குரோமோசோம்கள் டிரோசோபிலா உயிரினத்தில் முதன் முதலில் கண்டறிந்தனர்.
♣விளக்கு தூரிகை குரோமோசோம்களை முதன் முதலில் கண்டறிந்தவர் பிளம்மிங்
♣விலங்கின ஊசைட்டுகளில் குன்றல் பகுப்பின் புரோபேஸ் -I. டிப்ளோடின் நிலையில் விளக்கு தூரிகை குரோமோசோம் காணப்படுகிறது.
♣ஜீன் என்ற சொல்லை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் ர. ஜோஹான்சன்
♣ஒரு ஜீன் ஒரு நொதி கோட்பாட்டை உருவாக்கியவர் பீடில் மற்றும் டாட்டம்
♣பீடில் மற்றும் டாட்டம் ஆய்வு செய்த உயிரினம் நியூரோஸ்போரா
♣இணைப்பும். விலகுதலும். பிணைப்பு நிகழ்ச்சியின் இரு கூறுகளாகும்.
♣இணைப்பின் சோதனை கலப்பு விகிதம் 7 : 1 : 1 : 7
♣விலகுதலின் விகிதம் 1 : 7 : 7 : 1
♣குரோமோசோமின் ஜீன்கள் இடம்பெற்றுள்ள பகுதி லோகஸ்
♣மரபு வரைபடத்தின் அலகு மார்கன்
♣குறுக்கேற்றம் புரோபேஸ் I- பாக்கைடீன் நிலையில் நடைபெறுகிறது.
♣திடீர் மாற்றத்தினை முதன் முதலில் கண்டறிந்தவர் ஹியூகே டிவ்ரிஸ்
♣ஹீகோ டிவரிஸ் திடீர் மாற்றத்தை முதன் முதலில் கண்டறிந்த தாவரம் ஈனோதிரா லாமார்க்கியானா
♣திடீர் மாற்றம் அடைந்த உயிரினம் மியூடன்ட் என்று அழைக்கப்படுகிறது.
♣உயிர் வேதிவினை திடீர் மாற்றத்திற்கு எடுத்துக்காட்டு நியூரோஸ்போரா
♣கொல்லி திடீர் மாற்றம் சோளம் தாவரத்தில் அறியப்பட்டது
♣திடீர் மாற்றத்தில் ஒரு பிரிமிடினுக்கு பதிலாக வேறு பியூரின் இணைவது பதிலீடு எனப்படும்.
♣நல்லி சோமின் குறியீடு 2n-2
♣பிரடரிக் கிரிஃபித் ஆய்வு செய்த பாக்டரியா டிப்ளோகாக்கஸ்
♣டி.என்.ஏ வின் இரட்டை சுருள் மாதிரியை உருவாக்கியவர் வாட்சன் மற்றும் கிரிக்
♣டி.என்.ஏ இரட்டிப்படைதலின் பாதி பழமை பேணும் முறையை உறுதிப்படுத்தியவர்கள் மீசில்சன்மற்றும்ஸ்டால்
♣டி.என்.ஏ இரட்டை சுருளினை பிரிக்கும் நொதி ஹெலிகேஸ்
♣டி.என்.ஏ வின் அதிக சுருள் பகுதியை தளர்க்க உதவும் நொதி டோபோஜசோமெரேஸ்
♣டி.என்.ஏ வின் துண்டுகளை இணைக்கப்பயன்படும் நொதி லைகேஸ்
♣டி.என்.ஏ வின் கார இணை விதிகளை உருவாக்கியவர் எர்வின் சார்காப்
♣கடத்து ஆர்.என்.ஏ வின் வேறுபெயர் கரையும் RNA (or) sRNA
♣நிலைப்புத்தன்மை கொண்ட ஆர்.என்.ஏ ரிபோசோமல் RNA(or) rRNA
♣குளோவர் இலை மாதிரி டி.ஆர்.ஏ வை வெளியிட்டவர் R.W ஹோலி
♣டி.என்.ஏ வின் மூலக்கூறின் விட்டம் 20AO
♣பெரும்பாலான தாவர வைரஸ்களில் RNA மரபு பொருள்.
♣ரெஸ்டரிக்சன் நொதியை உற்பத்தி செய்பவை பாக்டீரியா க்கள் ஆகும்.
♣ரெஸ்டரிக்சன் என்டோ நியூக்ளியேஸ் டி.என்.எ-வை ஒரு குறிப்பிட்ட இடத்தில் துண்டிக்கிறது.
♣எ.கோலையில் காணப்படும் சிறுவட்டவடிவ தூண்டுகள் பிளாஸ்மிட் எனப்படும்.
♣செல் சவ்வில் மின்புலத்தை ஏற்படுத்தி துளைகளை தோற்றுவிக்கும் முறைமின்துளையாக்கம் எனப்படும்.
♣தாவர செல்களின் அயல் ஜீனை புகுத்துவதற்கு பயன்படும் பாக்டீரியம் அக்ரோபேக்டீரியம் டியூமிபேசியன்ஸ்
♣பாஸ்டா எனப்படும் கலைக்கொல்லியை செயல்இழக்கபயன்படும் நொதி ஸ்ட்ரெப்டோமைசிஸ்,ஹைக்ரோஸ்கோபிகஸ்லிருந்து பெறப்படுகிறது.
♣பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் பாக்டீரியாத்திலிருந்து உருவாகும் நச்சுப்புரதம் எண்டோடக்சின்
♣அசகாயபூச்சி எனப்படும் பாக்டீரியம் சூடோமோனாஸ் பூடிடா
♣சூடோமோனாஸ் பூடிடா பாக்டீரியாத்தை உருவாக்கியவர் ஆனந்த மோகன் சக்கரவர்த்தி
♣சுற்றுசுழல் மாசுப்பட்டை தவிர்க்க நுண்ணுயிர்களை ஈடுப்படுத்தும்முறை உயிரிகளால் சீரமைக்கப்படுதல் எனப்படும்.
♣ஒழுங்கற்ற வேறுபாடு அடையாத திசு திரள் காலஸ் எனப்படும்.
♣கேலஸில் இருந்து தண்டு தோன்றுவது காலோஜெனிஸிஸ் என்று அழைக்கப்படுகின்றது.
♣கேலஸ் திசுவிலிருந்து வேர் தோன்றுவது ரைசோஜெனிஸிஸ் என்று அழைக்கப்படுகின்றது.
♣கேலஸ் திசுவிலிருந்து தோன்றும் கருக்கள் எம்பிரியாய்டுகள் என்று அழைக்கப்படுகிறது.
♣தனிமைப்படுத்தப்பட்ட புரோட்டோ பிளாஸ்ட்டுகளை இணைக்கும் காரணி PEG (அ) எத்திலீன்கிளைகால்
♣தனிசெல் புரதமாக (SCP) பயன்படும் பாசி ஸ்பைருவினா
♣மனிதன் உட்கொள்ள தகுந்த வைட்டமின் செரிந்த மாத்திரைகள் ஸ்பைருவினாலிருந்து பெறப்படுகிறது.
♣ஆதார டி.என்.ஏ யையும் ஒம்புயிரி டி.என்.ஏ வை இணைக்கும் செயல் மூலக்கூறு ஒட்டுதல் எனப்படும்.
♣மகுட கழலை நோயை உண்டாக்கும் பாக்டீரியா அக்ரோ பாக்டீரியம் டியூமிபேசியன்ஸ்
♣சைட்டோ கைனனின் மூலம் திசு வளர்ப்பின் மூலம் உருவாக்கப்படும் காலஸ்
♣அயல்ஜீனை செல்லினுள் அறிமுகப்படுத்த பயன்படும் முறை மின் துளையாக்கம்/நேரடி (அ) ஜீன் துப்பாக்கி
♣அயல்ஜீனை பெற்ற இருவித்திலை தாவரகளின் எண்ணிக்கை 50-க்கு மேல்
♣ஜீன் இடமாற்றம் அடைந்த சூடோமோனாஸ் ஹைடிரோகார்பன்களை சிதைக்கிறது.
♣மாண்டக்டா செக்ஸ்டா என்ற பூச்சியின் தாக்குதலுக்கு உள்ளாகும் தாவரம் புகையிலை /பாக்டீரியம்
♣எண்டோ டாக்சினை உண்டாக்குவது பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ்
♣ஒளிச்சேர்க்கை நடைபெறும் செல் உறுப்பு பசுங்கணிகம்
♣பசுங்கனிகத்தில் காணப்படும் தட்டுவடிவம் உடைய அமைப்புகள் தைலக்காய்டுகள்
♣சுழற்சி எலக்டரான் கடத்திலின் பொழுது உண்டாவது ATP மட்டும்
♣இருள் மறுவினையை கண்டறிந்தவர் மெல்வின் கால்வின்
♣C 4 வழிதடத்தை விவரித்தவர்கள் ஹேட்ச் மற்றும் ஸ்லாக்
♣C 4 வழிதடத்தில் முதலில் தோன்றும் சேர்மம் ஆக்ஸ்லோ அசிட்டிக் அமிலம் (OAA)4c
♣C 4 தாவரத்திற்கு எடுத்துக்காட்டு கரும்பு
♣C 4 தாவரங்களில் ஒளிச்சேர்க்கை நடைபெறும் செல்கள் இலை இடைத்திசு மற்றும் கற்றை உறை
♣ஒளிசுவாசம் நடைபெறும் செல் உறுப்புகள் பசுங்கணிகம். பெராக்ஸிஸோம் மற்றும் மைட்டோகாண்ட்ரியா
♣ஒளிசுவாசத்தின் வேறுபெயர்கள் C 2 சுழற்சி (அ)ஒனிச்சேர்க்கை கார்பன் ஆக்ஸிஜனேற்றசுழற்சி
♣ஒளிச்சேர்க்கை திறன்பட தூண்டவல்ல அலைநீளம் 400nm 700nm
♣இருவடிவ பசுங்கனிகம் கொண்ட தாவரம் கரும்பு
♣ஒளிச்சேர்க்கையின் இறுதி பொருள் DHAP
♣C 3 வழிதடத்தில் CO2 வை ஏற்கும் பொருள் RUBP
♣பச்சயம் உருவாக காரணமாகும் தனிமம் மெக்னீசியம் (Mg)
♣தொற்றுதாவர வேர்களில் காணப்படும் பஞ்சுபோன்ற திசு வெலாமன்
♣முழு ஒட்டுண்ணி தாவரத்திற்கு எடுத்துக்காட்டு கஸ்குட்டா
♣பகுதி ஒட்டுண்ணி தாவரத்திற்கு எடுத்துக்காட்டு விஸ்கம்
♣பூச்சி உண்ணும் தாவரம் நைட்ரஜன் பற்றாக்குறைக்காக உருமாற்றம்அடைந்துள்ளது.
♣சூரிய பனித்துளி எனப்படும் தாவரம் ட்ரஸீரா
♣இருள் சுவாசம் நடைபெறும் இடம் பசும்கணிகம்
♣சுவாசத்தில் பொதுவாக பயன்படும் தளப்பொருள் கார்போஹைட்ரேட்
♣செல்லின் ஆற்றல் நாணயம் எனப்படுவது ATP
♣கிளைக்காலிஸின் வேறுபெயர் EMP வழித்தடம் (அ) இனிப்பு பிளப்பு
♣கிளைக்காலிஸின் இறுதிபொருள் பைருவிக் அமிலம்
♣பென்டோஸ் பாஸ்பேட் வழிதடத்தை கண்டுபிடித்தவர் டிக்கன்ஸன்
♣காற்றில்லா சுவாசம் நடைபெறும் இடம் சைட்டோபிளாசம்
♣கொழுப்பு அமிலத்தின் சுவாச ஈவு 0.36. குளுகோஸ்சின் சுவாச ஈவு 1
♣முதன் முதலில் கண்டறியப்பட்ட தாவர ஹர்மோன் ஆக்ஸின்கள்
♣செயற்கை ஹார்மோன்களுக்கு எடுத்துக்காட்டு NAA
♣பக்கானே நோய் நெல் தாவரத்தில் கண்டறியப்பட்டது.
♣நெல்லின் கோமாளி தன நோயை உருவாக்குவது ஜிப்ரெலின்கள்
♣ஜிப்ரெலின்கள் பியுஜிகோரை தாவரத்திலிருந்து ஜிப்ரலின் பெறப்படுகிறது.
♣செல் பிரிதலை தூண்டும் ஹார்மோன் சைட்டோகைனின்
♣சைட்டோகைனினை முதன் முதலில் பிரித்தெடுத்தவர்கள் மில்லர் மற்றும் ஸ்கூஜ்
♣மக்காச்சோளத்தில் காணப்படும் சைட்டோகைனின் சியாட்டின் ஆகும்.
♣தாவரங்கள் முதுமை அடைவதை தாமதப்படுத்தும் ஹார்மோன் சைட்டோகைனின்
♣வாயு நிலையில் உள்ள ஹார்மோன் எத்திலின்
♣கனிகள் பழுப்பதலில் பங்காற்றும் ஹார்மேன் எத்திலின்
♣ஒளிகாலத்துவம் முதன் முதலில் அறியப்பட்ட தாவரம் மேரிலாண்ட் மாமூத்
♣பைட்டோ குரோமை கண்டறிந்தவர் பட்லர் மற்றும் குழுவினர்
♣வெர்னலைசேஷன் என்ற பெயரை அறிமுகப்படுத்தியர் T.D லை சென்கோ
♣நிலத்தில் உள்ள களைகளை நீக்கிட பயன்படும் ஹர்மோன் 2-4- D
♣குறும்பகல் தாவரத்திற்கு எடுத்துக்காட்டு புகையிலை மற்றும் கிரைசாந்தியம்
♣நீள் பகல் தாவரத்திற்கு எடுத்துக்காட்டு கோதுமை மற்றும் ஒட்ஸ்
♣இலைத்துளை மூடுதலை தூண்டும் ஹார்மோன் ABA
♣இலை உதிர்தலை தடைசெய்யும் ஹார்மோன் ஆக்ஸின்
♣முழுமையான ஆக்சிஜனைற்றம் அடையும் குளுக்கோஸ்ஸிலிருந்து கிடைப்பது 38 ATP
♣ATP -யின் மிகையாற்றல் பிணைப்புகளின் எண்ணிக்கை 2
♣செல்சுவரின் செல்லுலோஸ் சிதைக்கும் நொதி செல்லுலேஸ்
♣அசோலா என்ற நீர்பெரணியில் காணப்படும் பாக்டீரியம் அனாபினா அசோலே.
♣இந்திய வயல்வெளிகளில் அதிகம் பயன்படுத்தப்படும் உயிரி உரம் அசோலா பின்னேட்டா
♣தாவர வேர்களின் வெளிப்புறப் பரப்பில் காணப்படும் வேர் எக்டோட்ராபிக் மைக்கோ ரைசா
♣நெல்லின் வெப்பு நோயை உண்டாக்கும் நோய் உயிரி பைரிகுலேரியா ஒரைசே
♣நிலக்கடலையில் டிக்கா நோயை ஏற்படுத்தும் நோய் உயிரி செர்க்கோஸ் போரா பெர்சனேடா
♣எலுமிச்சை கேன்கர் நோயின் நோய் உயிரி சாந்தோமோனாஸ் சிட்ரி
♣நெல்லின் தூங்குரோ நோய் இலைப் பூச்சி மூலம் பரவுகிறது.
♣பைரித்திரம் கிரை சாந்திமம் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது.
♣வைரசுக்கு எதிராக பயன்படும் புரதப்பொருள் இன்டர் பெராண்கள்
♣சர்க்கரையைக் காட்டிலும் 100 மடங்கு இனிப்பு கொண்ட புரதம் பிரேசின்
♣தேநீரு பதிலாக பயன்படுத்தப்படும் தாவர இலை ஐலக்ஸ் பராகுவென்சிஸ்
♣காப்பிக்கு பதிலாக பயன்படுத்தப்படும் விதை தூள் கோலா நிட்டிடா
♣மார்ஃபின் பப்பாவர் சாம்னிஃபெரம் செடியிலிருந்து பெறப்படுகிறது.
♣குயினைன் சின்கோனா அஃபிசினாலிஸ் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது.
♣டிஜாக்ஷின் மருந்துப்பொருள் டிஜிடாலிஸ் பெறப்படுகிறது.
♣எஃபிட்ரா சைனிக்கா என்ற தாவரத்திலிருந்து பெறப்படும் மருந்து எஃபிட்ரின்
♣ஜின்ஜங்க் மருந்து ஜின் செங்கிலிருந்து பெறப்படுகிறது.
♣இந்திய அகாலிபா எனப்படும் தாவரம் அகாலிபா இன்டிகா
♣எலும்பு இணைவி எனப்படும் தாவரம் சிசஸ் குவாட்ராங்குலாரிஸ்(பிரண்டை)
♣பெனிசில்லின் கிடைக்கும் தாவரம் பெனிசிலியம் நொட்டேட்டம்
♣ஜப்பானில் நெல்லிலிருந்து பெறப்படும் போதை பொருள் சாகோ
♣சர்க்கரையை காட்டிலும் 100 மடங்கு இனிப்பு கொண்ட தாவரம் பென்டாடைப்ளான்ட்ரா பிரேசிலானா
♣வில்வம் தாவரத்தின் இருசொற்பெயர் ஏகில் மார்மிலாஸ்
♣அகாலிபைன் அகாலிபா இண்டிகா தாவரத்திலிருந்து எடுக்கப்படுகிறது.
♣பசுந்தாள் உரமாக பயன்படும் தாவரம் குரோட்டலேரியா ஜன்சியா
♣புற்றுநோய்க்கு எதிரான மருந்து காணப்படும் தாவரம் வின்கா ரோசியா
♣கால்சிசின் பன்மயங்களை யை தூண்டப்பயன்படுகிறது.
♣நைட்ரசோமோனஸ் பாக்டீரியா அமோனியாவை நைட்ரேட்டாக மாற்றுகிறது.
♣அபின் தரும் பாப்பி செடியிலிருந்து மார்பின் என்ற அதி வலிமை மிக்க வலி நீக்கி பெறப்படுகிறது.
♣பேபேசி குடும்பத்தின் நீர்வாழ் தாவரம் ஆஸ்கினோமினி ஆஸ்பெரா
♣ஃபேபேசி குடும்ப தாவர வேர் முண்டுகளில் காணப்படும் பாக்டீரியம் ரைசோபியம்
♣காட்டுத் தீ எனப்படும் தாவரம் ப்யூட்டியாஃபிராண்டோசா
♣அதப்புடைய இலைக்காம்பு கொண்ட குடும்பம் பேபேஸி
♣ஃபேபேசி குடும்பத்தின் அல்லி வட்டத்தில் காணப்படும் இதழமைவு இறங்கு தழுவு இதழ் அமைவு
♣ஃபேபேசி குடும்பத்தின் அல்லி வட்டம் வண்ணத்துப்பூச்சி வடிவ அல்லிவட்டம் என்று அழைக்கப்படுகிறது.
♣ஃபேபேசி குடும்ப தாவர சூலகத்தின் காணப்படும் சூல் ஒட்டுமுறை விளிம்பு சூல் ஒட்டுமுறை
♣5+5 இருகற்றை மகரந்தம் காணப்படும் தாவரம் ஆஸ்கினோமினி ஆஸ்பெரா
♣இக்ஸோரா காக்ஸினியாவில் குறுக்குமறுக்கு எதிரிலைமைவு இலையமைவு.முறை உள்ளது.
♣மொரிண்டாவில் கூட்டுகனி கனி உள்ளது.
♣பர்புரின் சாயம் ரூபியாடிங்டோரியா தாவர வேரிலிருந்து பெறப்படுகிறது.
♣வேர்க்கிழங்கு காணப்படும் ஆஸ்ட்ரேஸி தாவரம் டாலியா காக்ஸினியா
♣வட்ட இலையமைவு காணப்படும் ஆஸ்ட்ரேசி தாவரம் யுப்படோரியம்
♣ஆஸ்ட்ரேசி குடும்பத்தின் சிரமஞ்சரி மஞ்சரி எது.
♣சிர மஞ்சரியின் தனிமலராக குறுக்கம் அடைந்துள்ள தாவரம் எக்சினாப்ஸ்
♣ஆஸ்திரேசியின் புல்லி வட்டம் பேப்பஸ் தூவி உருமாற்றம் அடைந்துள்ளது.
♣சின்செனிஷியஸ் மகரந்தம் காணப்படும் குடும்பம் ஆஸ்ட்ரேசி
♣சான்டானின் என்ற மருந்து ஆர்டிமிசியா மாரிட்டிமா தாவரத்திலிருந்து பெறப்படுகிறது.
♣கொசு விரட்டியாக பயன்படும் பைரித்திரம் கிரைசாந்தியம் சினரிபோலியத்தில் பெறப்படுகிறது.
♣பாட்மாரிகோல்டு என்படுவது காலெண்டு அஃபிஸினாலிஸிஸ்
♣அரிகேசி குடும்பம் இடம்பெற்றுள்ள வரிசை காலிசினே
♣கோகாஸ் நியூசிஃபெராவில் உள்ள மஞ்சரி வகை கூட்டு ஸ்பாடிக்ஸ் மஞ்சுரி
♣பணை எண்ணெய் எந்த தாவரத்திலிருந்து எலாயிஸ் கைனென்சிஸ்
♣கல்ப விருட்சம் எனப்படும் தாவரம் கோகாஸ் நியுசிஃபெரா
♣என்சைம் என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் கூன்
♣புரதமும். புரதம் இல்லாத பகுதிகள் கொண்ட நொதிகள் முழுநொதிகள் அழைக்கப்படுகின்றன.
♣முழு நொதியின் புரதப்பகுதி அபோ என்சைம்
♣முழு நொதியின் புரதம் அல்லாத பகுதி இணை நொதிகள்
♣அப்போ என்சைமுடன் தளர்வாக இணைக்கப்பட்ட பகுதி இணைநொதிகள்
♣நொதியின் பூட்டு சாவி கோட்பாட்டை கூறியவர் ஃ பிஷ்ஷர்
♣நொதியின் தூண்டப்பட்ட பொருத்த கோட்பாட்டை கூறியவர் கோஷ்லாண்டு

No comments:

Post a Comment