Friday, 20 March 2015

தாவரவியல் | வகைப்பாடு

தாவரவியல் | வகைப்பாடு


தாவரங்களின் சிறப்பு பண்புகள்:
 Ø  பச்சையம் உண்டு. அதனால் தனக்குத் தேவையான உணவை தானே தயாரித்துக்கொள்கிறது. 
இவை சுயஜீவி ஊட்டமுறை உடையது.
Ø  கிளைகள் உடையவை.
Ø  தாவரங்களின் உடலமைப்பில் வேர், இலை, தண்டு, பூக்கள் போன்ற புறத்தோற்ற அமைப்பு உண்டு.
Ø  உணர் உறுப்புகள், நரம்பு மண்டலம் இல்லை.
Ø  கழிவு நீக்க மண்டலம் இல்லை.
Ø  தண்டு நுனி, வேர் நுனி என்ற வளர் நுனிகளைக் கொண்டவை.
Ø  தாவரச் செல், செல் சுவரைக் கொண்டது.
Ø  தாவரச் செல் கணிகங்களைக் கொண்டது. அதில் சில கணிகங்கள் பச்சைய நிறமிகளைக் கொண்டவை.
Ø  தாவர செல்லின் மையப் பகுதியில் பெரிய வாக்குவோல் இருக்கும்.
Ø  சென்ட்ரோசோம் கிடையாது.
Ø  தாவரங்கள் திரவ நிலையில் உணவை எடுத்துக் கொள்ளும். எனவே இது ஹோலோபைடிக் உணவு ஊட்டத்தைக் கொண்டது.
Ø  தாவரங்களின் பொதுவான உணவு - கார்பன் டை ஆக்ஸைடு, நீர் மற்றும் தாது உப்புகள்.
Ø  தாவரங்கள் இடம் விட்டு நகராது.
Ø  ஆனால், எளிய வகைத் தாவரங்கள் இடம் விட்டு இடம் நகரும். எ.கா. கிளாமிடாமோனஸ்.
Ø  இனப்பெருக்கமானது, உடல் இனப்பெருக்கம், பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பால் இனப்பெருக்கம் வகையைச் சார்ந்தது.
Ø  வளர்ச்சியானது மீண்டும் மீண்டும் நடைபெறுகிறது.
Ø  மொனிரா உலகம், புரோட்டிஸ்டா உலகம், பூஞ்சைகள் உலகம், தாவர உலகம், விலங்கு உலகம் என்று உயிரினங்களை வகைப்படுத்தியவர் - விக்டேக்கர்.
Ø  புரோகேரியோட்டுகள், யூகேரியோட்டுகள் என்று செல் அமைப்பை இரண்டு வகையாக பிரிக்கலாம்.

புரோகேரியோட்டுகள்
Ø  மேம்பாடு அற்ற செல் அமைப்பை பெற்றுள்ளன.
Ø  நியூக்ளியஸ் உறையும், நியூக்ளியோலசும் காணப்படுவது இல்லை.
Ø  எண்டோபிளாச வலை, கோல்கை உறுப்புகள், மைட்டோ காண்டிரியன்கள், பசுங்கணிகங்கள் மற்றும் வாக்குவோல்கள் காணப்படுவது இல்லை

யூகேரியோட்டுகள்
 Ø  மேம்பாடு அடைந்த செல் அமைப்பை கொண்டுள்ளன.
Ø  சைட்டோபிளாசா  சவ்வினால் சூழப்பட்ட எண்டோபிளாச வலை, கோல்கை உறுப்புகள், மைட்டோ காண்ட்ரியன்கள், பசுங்கணிகங்கள், வாக்குவோல்கள் காணப்படும்.
Ø  இவை புரோகேரியோட்டுகள் செல்களை விட அளவில் பெரியது.
Ø  செல்சுவர் பெப்டிடோகிளைக்கன் என்ற மியூக்கோ பெப்டைடால் ஆனது.
Ø  செல்லுலோஸ் கிடையாது.
Ø  ரைபோசோம்கள் சிறியன. டி.என்.ஏ. குட்டையானது. மைட்டாஸிஸ், மயோசிஸ் வகை செல் பகுப்புகள் காணப்படுவது இல்லை. மாறாக பிளத்தல் வகை செல் பகுப்பு நடைபெறுகின்றது.
Ø  கசையிழை ஓர் நுண்ணிழையினால் ஆனது.
Ø  5 மைக்ரானை விட பெரிய அளவு செல்களைக் கொண்டவை.
Ø  செல்சுவர் செல்லுலோஸினால் ஆனது.

கார்ல் லின்னேயஸ்
 Ø  நவீன தாவரவியலின் தந்தை
Ø  தாவரங்களுக்கு இரு பெயரிடும் முறையை அறிமுகப்படுத்தினார்.
Ø  லிஸ்டமாநேச்சுரே, ஜெனீரா ப்ளாண்டாரம், ஸ்பிஸிஸ் ப்ளாண்டாரம் ஆகியவை இவர் எழுதிய நூல்கள்
Ø  தாவர வகைப்பாடு என்பது தாவரவியலின் ஒரு பிரிவு என்று சொன்னவர்.

வகைப்பாடு
 Ø  செயற்கை வகைப்பாட்டுக்கு எடுத்துக்காட்டு - கரோலஸ் லின்னேயஸ் வகைப்பாடு
Ø  இயற்கை வகைப்பாட்டுக்கு எடுத்துக்காட்டு - பெந்தம் - ஹுக்கர் வகைப்பாடு.
Ø  பரிணாம அடிப்படையிலான வகைப்பாட்டுக்கு எடுத்துக்காட்டு- எங்களர், ப்ராண்ட்டல் வகைப்பாடுகள்.
Ø  அண்மைக்கால வகைப்பாட்டுக்கு எடுத்துக்காட்டு - ஆர்தர்க்ராங்க்விஸ்ட் வகைப்பாடு.
Ø  பெந்தம் ஹுக்கர் ஆகியோரின் வகைப்பாடு ஜெனீரா ப்ளாண்டாரம் எனும் நூலில் வெளியிடப்பட்டது.

வைரஸ்கள்
 Ø  செல்லினுள் மட்டும் வாழும் ஒட்டுண்ணி. இவை உயிருள்ள செல்களில் மட்டும் செயல்படக்கூடியவை.
Ø  ஒரு முழுமையான வைரஸ் வீரியான் என்று அழைக்கப்படுகிறது.
Ø  இது கேப்சிட் என்ற புரத உறையால் சூழப்பட்ட நியூக்ளிக் அமிலத்தைக் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment