Friday, 20 March 2015

தாவரவியல்


தாவரவியல் | ஜிம்னோஸ்பெர்ம்கள்


ஜிம்னோஸ்பெர்ம்கள்:
Ø  திறந்த விதைகள் கொண்ட தாவரங்கள் எனும் பொருள்படும்.
Ø  ஜிம்னோஸ்பெர்ம்களில் சூல்கள் சூல்பைக்குள் இல்லை.
Ø  டயானோசார்கள் காலத்தில் ஜிம்னோஸ்பெர்ம்கள் பூமி மீது மண்டிக்கிடந்தன.
Ø  ஜிம்னோஸ்பெர்ம்களின் வாழ்க்கைச் சுழலில் இரண்டு சிறப்பு நிலைகள் காணப்படுகின்றன. அவை இருமய ஸ்போராபைட்டு, ஒரு மய கேமிட்டோபைட்டு நிலைகளாகும்.
Ø  தாவர உடல் ஸ்போரோபைட் நிலையைச் சார்ந்தது ஆகும். ஸ்போராபைட்டுகள் பெரும்பாலும் வேர், தண்டு இலைகளைக் கொண்ட உயரமான மரங்கள் ஆகும்.
Ø  செக்கோயா என்னும் மரம் சுமார் 120 மீட்டர் உயரம் வரை வளரும்.
Ø  சில ஜிம்னோஸ்பெர்ம்களின் வேர்கள், வேர்ப் பூஞ்சைகளுடனும், நீலப் பசும்பாசிகளுடனும் தொடர்பு கொண்டுள்ளன.
Ø  முதல் நிலை வாஸ்குலார் திசுக்களுடன் இரண்டாம் வாஸ்குலார் திசுக்களும் உள்ளன.


ஆஞ்சியோஸ்பெர்ம்கள்:
Ø  ஜிம்னோஸ்பெர்ம்கள், ஆஞ்சியோஸ்பெர்ம்கள் விதையுள்ள தாவரங்களாகும்.
Ø  இவை ஸ்பெர்மாட்டோஃபைட்டுகள் எனப்படும்.
Ø  மலரும் தாவரங்கள் அனைத்தும் ஆஞ்சியோஸ்பெர்ம்கள் பிரிவைச் சேர்ந்தவை. ஆஞ்சியோஸ்பெர்ம்கள் தாவர வகைகளிலேயே மிக அதிக மேம்பாடற்ற தாவர வகையாகும்.
Ø  ஏனைய தாவர வகைகளைவிட மிக அதிக எண்ணிக்கையிலும், அன்றாட வாழ்வில் நாம் காணும் தாவரங்களும், ஆஞ்சியோஸ்பெர்ம் வகையை சார்ந்தவையாகும்.

தாவரவியல் | நெற்பயிர்



Ø  கார்காலம் - மே முதல் ஜூன் வரை
Ø  குறுவைகாலம் - ஜூன் முதல் ஜூலை வரை
Ø  தாளடி காலம் - செப்டம்பர் முதல் அக்டோபர் வரை.
Ø  சம்பா பருவம் - ஆகஸ்டு முதல் பிப்ரவரி வரை.
Ø  பயிர் வளர்ச்சிக்குத் தேவையான பயிர் உணவு பாஸ்பேட் ஆகும்.
Ø  பொட்டாசியம் குளோரைடு, பொட்டாசியம் சல்பேட் இரண்டும் சாம்பல் சத்துக்கள்.
Ø  நைட்ரஜன் நிலைப்படுத்தும் பாக்டீரியம் - ரைசோபியம், அஸடோபாக்டர், மற்றும் நீலப்பச்சைப்பாசி.
Ø  பாஸ்பேட்டை கரைக்கும் பாக்டீரியா - பேசில்லஸ், சர்குலன்ட்ஸ்.
Ø  ஊட்டப் பொருட்களை உறிஞ்ச உதவும் பூஞ்சைகள் - குளோமல், ஜிஜைகாஸ்போரா.
Ø  களைச்செடிகளாக உள்ள சப்பாத்திக் கள்ளியை காக்னியல் பூச்சிகள் மூலம் கட்டுப்படுத்தலாம்.
Ø  பசுமைப் புரட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பயிர்கள் - கோதுமை, உருளைக்கிழங்கு மற்றும் அரிசி.
Ø  ஐ.ஆர். 8 ரக நெல் பசுமைப் புரட்சியால் உருவாக்கப்பட்டது.
Ø  முதல் குட்டைரக நெல் ரகம் தைவான் நாட்டில் உருவாக்கப்பட்டது.
Ø  கரும்பு உத்தரப்பிரதேச மாநிலத்தில் மிக அதிக அளவிலும், அதற்கு அடுத்தப்படியாக மகராஷ்டிரத்திலும், தமிழகத்திலும் பயிரிடப்படுகிறது.
Ø  ஜூலை - ஆகஸ்ட் மாதங்கள் கரும்பு நடவுக்கு ஏற்ற காலமாகும்.

தாவரவியல் | பாக்டீரியா


பாக்டீரியாக்கள்
Ø  பாக்டீரியங்கள் யாவும் ஒரு செல் புரோகரியாடிக் உயிரிகளாகும்.
Ø  பாக்டீரிய செல்லில் முழுமையான நியூக்ளியஸ் இல்லை. இதன் மரபுப் பொருள் நியூகிளியாடய்ட் அல்லது குரோமட்டின் உடலம் எனப்படும். நியூக்ளியஸிற்கு சவ்வு கிடையாது.
Ø  பாக்டீரிய செல்லில் மறைமுக செல்பகுப்பு நடைபெறுவதில்லை.
Ø  பாக்டீரிய ரிபோசோம் சைட்டோபிளாசத்தில் விரவி காணப்படுகின்றன.
Ø  பாக்டீரியங்கள் பிளவுறுதல் மூலம் பெருக்கமடைகின்றன.
Ø  பாக்டீரியங்களில் தன் ஊட்டமுறை மற்றும் சார் ஊட்ட முறை என்ற இரண்டு வகையான ஊட்ட முறைகள் காணப்படுகின்றன.
Ø  பசும் கந்தக பாக்டீரியம், வெளிர் சிவப்பு கந்தக பாக்டீரியங்கள் ஆகியவை ஒளிச்சேர்க்கை செய்யும் பாக்டீரியங்களுக்கான எடுத்துக்காட்டுகள் ஆகும்.
Ø  ஒளிச்சேர்க்கை அல்லது வேதிசேர்க்கை மூலம் தன் உணவை தானே தயாரித்துக் கொள்பவை தன் ஊட்ட முறை பாக்டீரியங்கள் ஆகும். எடுத்துக்காட்டு குளோரோபியம்.
Ø  இறந்த அல்லது உயிருள்ளவற்றிலிருந்து ஊட்டப் பொருள்களை பெறும் பாக்டீரியங்கள் சார் ஊட்டமுறை பாக்டீரியங்கள் ஆகும்.
Ø  காக்கஸ் என்பது கோள வடிவ பாக்டீரியங்கள்
Ø  பேசில்லஸ் என்பது கோல் வடிவ அல்லது குச்சி வடிவ பாக்டீரியங்கள்.
Ø  ஸ்பைரில்லம் என்பது சுருள் வடிவம் கொண்ட பாக்டீரியங்கள்.
Ø  விப்ரியோ - கமா என்பது வளைந்த வடிவை கொண்ட பாக்டீரியங்கள்
Ø  மைக்ரோகாகஸ் என்பது தனித்தனி கோளவடிவ செல்களை உடையது.
Ø  டிப்ளோகாக்கஸ்  என்பது இரட்டையாக அமைந்த கோள வடிவ செல்களை கொண்டவை.
Ø  ஸ்ட்ரெப்டோகாகஸ் என்பது சங்கிலி வடிவில்அமைந்த கோள வடிவ செல்களை கொண்டவை.

கசையிழைகள்:
Ø  இவை நீண்ட ரோமம் போன்ற அமைப்புகளாகும். இவை பாக்டீரியங்களின் இயக்கத்தில் ஈடுபடுகின்றன. ப்ளாஜெல்லின் என்ற புரதத்தை கொண்டுள்ளது.
Ø  ஒற்றை கசையிழை பாக்டீரிய செல்லின் ஒரு முனையில் ஒரு கசையிழை இருக்கும். எடுத்துக்காட்டு: விப்ரியோ மெட்சினிகொலி.
Ø  பாக்டீரியங்கள் இயற்கையின் துப்புரவாளர்கள். நிலத்தில் சேகரமாகும் இறந்த தாவரங்கள்,விலங்குகள் மற்றும் பல வகை கரிம கழிவுப் பொருட்கள் ஆகியவற்றை அழுகச் செய்து சிதைக்கின்றன.
Ø  லேக்டோகாகஸ் லாக்டிஸ், லேக்டோபேசில்லஸ் மற்றும் லூகோநாஸ்டாக் கிரிமோரிஸ் ஆகிய லாக்டிக் அமில பாக்டீரியங்கள் பால் பண்ணைத் தொழிற்சாலையில் சுவையூட்டப்பட்ட பால் பொருள்கள் மோர், பல்கேரியன் யோகர்ட், கேஃபிர், குமிஸ் ஆகியவற்றை தயாரிக்கப் பயன்படுகிறது.

தாவரவியல் | பிரையோபைட்டா - ரிக்ஸியா


பிரையோபைட்டா:
Ø  இவை எளிய வகைத் தாவரங்கள். தாவர உலகத்தின் இரு வாழ்விகள் எனப்படும்.
Ø  இவை நிலத்திலும் நீரிலும் வாழ்பவை.
Ø  இவற்றில் வாஸ்குலார் திசுக்கள் இல்லை.
Ø  பிரையோபைட்டாவின் தாவர உடலம், தாலஸ் எனப்படும்.
Ø  கேமிட்டோஃபைட் தனித்து வாழும் தாவரம் ஆகும்.
Ø  நீர்வாழ் பிரையோபைட்டுகள் ரியல்லா ஃபுளுயிட்டன்ஸ் என்று அழைக்கப்படுகிறது.
Ø  சதுப்புநிலப் பகுதியில் வாழும் பிரையோபைட்டுகள் ஃபேக்னம் என்று அழைக்கப்படுகிறது.

ரிக்ஸியா:
Ø  இது ஒரு ஈரல் வடிவ பிரையோஃபைட் ஆகும்.
Ø  ஈரமான நிலத்தில் வாழும் நிழல் விரும்பி தாவரமாகும். இது பொதுவாக மழைக்காலங்களில் ஈரமான சுவர்களிலும், மண்ணிலும் ஆற்றங்கரையிலும் வளரும் தன்மை உடையது.
Ø  நீரில் வாழும் ரிக்ஸியா சிற்றினத்தின் பெயர் ரிக்ஸியா புளயிட்டன்ஸ்.
Ø  ரிக்ஸியாவின் கேமிட்டோஃபைட் கிடைமட்டமாக வளரும் தட்டையான தாலஸ் ஆகும்.
Ø  ரிக்ஸியாவில் நடைபெறும் இனப்பெருக்க வகைகள் உடல இனப்பெருக்கம், பாலினப் பெருக்கம் ஆகும்.
Ø  ரிக்ஸியாவில் ஊகேஸ் வகை பாலினப் பெருக்கம் நடைபெறுகிறது.
Ø  ரிக்ஸியாவில் ஆண் இனப்பெருக்க உறுப்புகளின் பெயர் - ஆந்தரிடியம்.
Ø  ரிக்ஸியாவில் பெண் இனப்பெருக்க உறுப்புகளின் பெயர் - அர்க்கிகோனியம்.
Ø  ரிக்ஸியா என்பது லிவர்வெர்ட் வகையைச் சார்ந்த ஒரு தாவரமாகும்.

தாவரவியல் | பூஞ்சைகள்


பூஞ்சைகள்:
Ø  பூஞ்சைகள் பச்சயமற்ற தாலோபைட்டு வகையைச் சார்ந்தவை.
Ø  பூஞ்சைகளைப் பற்றிய தாவரவியல் பிரிவிற்கு மைகாலஜிஎன்று பெயர்.
Ø  பொதுவாக பூஞ்சைகள் பல செல்களால் ஆன யூகேரியோட்டுகள் ஆகும்.
Ø  பூஞ்சைகள் மட்குண்ணிகள், ஒட்டுண்ணிகள் என இரண்டு வகையான வேறுபட்ட ஊட்ட முறைகளை கொண்டுள்ளது.
Ø  மட்குண்ணிகள் இறந்த மற்றும் அழுகிய அங்ககப் பொருள்களின் மீது வாழ்கின்றன. எடுத்துக்காட்டு; ரைசோபஸ், அகாரிகஸ்.
Ø  பூஞ்சையின் உடலம் மைசீலியம் என்று அழைக்கப்படுகின்றது.
Ø  மைசீலியங்கள் கிளைத்த, மெல்லிய இழைகளால் ஆனவை. இந்த இழைகளுக்கு ஹைபாக்கள் என்று பெயர். பூஞ்சைகளின் செல் சுவர் கைட்டின் மற்றும் பூஞ்சை செல்லுலோஸினால் ஆனது.
Ø  மைசீலியம் வளரக்கூடிய தளத்திற்கு வளர்தளம் என்று பெயர்.
Ø  வண்ணான் படை அல்லது தேமல் போன்றவை பூஞ்சைகளால் மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களாகும்.
Ø  சில பூஞ்சைகள் மரப்பட்டையில் வளர்கின்றன. மரக்கட்டையின் மீது வளர்வது சைலோபில்லஸ் அல்லது மரக்கட்டை பூஞ்சையாகும்.
Ø  முடி அல்லது மாட்டுக் கொம்பு போன்ற பொருளின் மீது வளர்பவை கெராட்டினோபில்லஸ் அல்லது கெரடின் பூஞ்சைகள் எனப்படும்.
Ø  சில பூஞ்சைகள் உயர்நிலைத் தாவரங்களின் வேர்களோடு கூட்டுயிரியாக வளர்கின்றன. இந்த வகை வேர்களுக்கு மைகோரைசா என்று பெயர்.
Ø  பூஞ்சையினுடைய உடலம் மைசீலியம் எனப்படும். மைசீலியமானது மெல்லிய இழைகள் போன்ற ஹைபாக்களால் ஆனது.
Ø  ஈஸ்ட்டு போன்ற பூஞ்சைகள் ஒரு செல் உயிரினங்களாகும்.

தாவரவியல் | மகரந்தச் சேர்க்கை


மகரந்தச் சேர்க்கை:
Ø  தன் மகரந்தச் சேர்க்கை என்பது ஆட்டோகாமி எனப்படும். பூவின் மகரந்தங்கள் அதே பூவில் உள்ள சூலகமுடியை சென்றடைவதற்கோ அதே தாவரத்தைச் சேர்ந்த மற்றொரு பூவில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு தன் மகரந்த சேர்க்கை எனப்படும்.
Ø  ஒரு பூவின் மகரந்தம் மற்றொரு தாவரத்தின் பூவில் உள்ள சூலகத்தை சென்றடைவதோ அல்லது அதே இனத்தைச் சேர்ந்த மற்றொரு தாவரத்தை சென்றடைவதோ அயல் மகரந்தச் சேர்க்கை அல்லது அல்லோகாமி எனப்படும்.
Ø  பெரும்பாலான இருபால் மலர்களில் தன் மகரந்தச் சேர்க்கையை விட அயல் மகரந்தச் சேர்க்கை பொதுவாக நடைபெறுகிறது.
Ø  அயல் மகரந்தச் சேர்க்கை விளைவாக உருவாகும் விதைகள் யாவும் முளைக்கும் திறன் மற்றும், திடமான தாவரங்களாக வளரும் தன்மையை பெற்றிருக்கும்.
Ø  விலங்குகளால் நடைபெறும் மகரந்தச் சேர்க்கை சூபில்லி எனப்படும். இத்தகைய மலர்கள் சூபில்லஸ் மலர்கள் எனப்படும்.
Ø  பூச்சிகளால் மகரந்தச் சேர்க்கை அடையும் தாவரங்களில் தெளிவாக வெளிப்படும் விதத்தில் மலர்கள் வண்ணத்தையும், நல்ல நறுமணத்தையும் பெற்றிருக்கும். பூவரசு முதலிய தாவரங்களில் இந்த இரண்டு பண்புகளும் உள்ளன.
Ø  காற்றினால் மகரந்தச் சேர்க்கை நடைபெறும் பூக்கள் அனிமோபிலஸ் மலர்கள் எனப்படும்.
Ø  னஹடிரில்லா, வாலிஸ்நீரியா போன்ற நீர் வாழ் தாவரங்களில் நீரின் வழி மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது. வாலிஸ் நீரியா நீரில் மூழ்கி வளரும் ஈரில்லத் தாவரம். இவற்றில் இலையானது ரிப்பன் வடிவத்தில் இருக்கும்.
Ø  இருபால் மலர்களில் மகரந்தத்தூள்களும், சூலகமும் ஒரே நேரத்தில் முதிர்வடைவதால் தன் மகரந்தச்சேர்க்கைக்கு வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment