Monday, 16 March 2015

ஒன்பதாம் வகுப்பு சமசீர்கல்வி தமிழ் வினா விடைகள்...

கடவுள் வாழ்த்து

உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அழகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவர் அன்னவர்க் கேசர ணாங்களே
- கம்பர்

சொற்பொருள்:

  • உளவாக்கல் – உண்டாக்குதல், படைத்தல்
  • நீக்கல் – அழித்தல்
  • நீங்கலா – இடைவிடாது
  • அலகிலா – அளவற்ற
  • அன்னவர் – அத்தகைய இறைவர்
  • சரண் – அடைக்கலம்

இலக்கண குறிப்பு:

  • யாவையும் – முற்றும்மை
  • ஆக்கல், நீக்கல், விளையாட்டு – தொழிற் பெயர்
  • அலகிலா – ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்

ஆசிரியர் குறிப்பு:

  • நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள தேரழுந்தூரில் கம்பர் பிறந்தார்.
  • இவர் ஏர் எழுபது, சிலை எழுபது, சரஸ்வதி அந்தாதி, சடகோபர் அந்தாதி, திருக்கை வழக்கம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.
  • இவர் குலோதுங்கச்சோழனின் அவைப் புலவராக விளங்கினார்.
  • திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப்பட்டவர்.
  • கவிச்சக்ரவர்த்தி என்றும் கல்வியில் பெரியவர் கம்பர் என்றும் போற்றப்பட்டார்.
  • இவரின் காலம் கி.பி.பனிரெண்டாம் நூற்றாண்டு.

நூல் குறிப்பு:

  • வடமொழியில் வால்மீகி முனிவர் எழுதிய இராமாயணத்தைத் தழுவித் தமிழில் கம்பர் எழுதியதே கம்பராமாயணம்.
  • கம்பர் இந்நூலுக்கு இட்ட பெயர் = இராமாவதாரம்.
  • இது பால காண்டம், அயோத்திய காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என ஆறு காண்டங்களை உடையது.

திருக்குறள்

சொற்பொருள்:

  • அகழ்வாரை – தோண்டுபவரை
  • தலை – சிறந்த பண்பு
  • பொறுத்தல் – பொறுத்துக்கொள்ளுதல்
  • இறப்பு – துன்பம்
  • இன்மை – வறுமை
  • ஒரால் – நீக்குதல்
  • மடவார் – அறிவிலிகள்
  • விருந்து – வீட்டிற்கு புதியவராய் வந்தவர்
  • நிறை – சால்பு
  • ஒறுத்தாரை – தண்டித்தவரை
  • போன்றும் – உலகம் அழியும்வரை
  • நோநொந்து – துன்பத்திற்கு வருந்தி
  • மிக்கவை – தீங்குகள்
  • தகுதியான் – பொறுமையால்
  • துறந்தார் – பற்றற்றவர்
  • இன்னா – தீய

இலக்கான குறிப்பு:

  • பொறுத்தல் – தொழிற்பெயர்
  • அகல்வார், இகழ்வார் – வினையாலணையும் பெயர்
  • மறத்தல், பொறுத்தல் – தொழிற்பெயர்
  • நன்று – குறிப்பு வினைமுற்று
  • விருந்து – பண்பாகு பெயர்
  • ஒரால், நீக்குதல் – தொழிற்பெயர்
  • நீங்காமை – எதிர்மறைத் தொழிற்பெயர்
  • ஒருத்தார் – வினையாலணையும் பெயர்
  • பொதிந்து – வினையெச்சம்
  • வையார் – வினைமுற்று
  • ஒருத்தார், பொறுத்தார் – வினையாலணையும் பெயர்
  • தற்பிறர் – ஏழாம் வேற்றுமைத் தொகை
  • செய்யினும் – இழிவு சிறப்பும்மை
  • நொந்து – வினையெச்சம்
  • அரண், திறன் – ஈற்றுப்போலிகள்
  • விடல் – அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று
  • இறந்தார் – வினையாலணையும் பெயர்
  • உண்ணாது – வினையெச்சம்

ஆசிரியர் குறிப்பு:

  • இவர் நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப்புலவர், நான்முகனார், மாதானுபாங்கி, பெருநாவலர் என்னும் சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுவார்.
  • இவரின் காலம் கி.மு.31ஆம் நூற்றாண்டு என்று கூறுவர்.

நூல் குறிப்பு:

  • திரு + குறள் = திருக்குறள்
  • திரு = செல்வம், சிறப்பு, அழகு, மேன்மை, தெய்வத்தன்மை எனப் பல பொருள் உண்டு.
  • குறள் = குறுகிய அடி உடையது.
  • இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என முப்பெரும் பிரிவுகளை கொண்டது.
  • அறம் 38 அதிகாரங்களாகவும், பொருள் 70 அதிகாரங்களாகவும், இன்பம் 25  அதிகாரங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
  • இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • இந்நூலை போற்றிப் பாராட்டிய பாடல்களின் தொகுப்பே திருவள்ளுவ மாலை.

திராவிட மொழிகள்

மொழிகள்:

  • தனக்கென தனிச் சிறப்பும், பல மொழிகள் தோன்றிவளர அடிப்படையாகவும் உள்ள மொழி = மூலமொழி
  • மூலமொழியில் இருந்து தோன்றி வளர்ந்த மொழிகள் = கிளைமொழிகள்.

இந்திய மானிடவியல் கணக்கெடுப்பு:

  • இந்தியாவில் மொத்தம் பனிரெண்டு மொழிக்குடும்பங்கள் உள்ளன.
  • அவற்றுள், 325 மொழிகள் பேசப்படுவதாக இந்திய மானிடவியல் கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது.

இந்தியமொழிக் குடும்பங்கள்:

  • இந்தியாவில் பேசப்படும் மொழிகள் அனைத்தையும் “இந்தோ-ஆசிய மொழிகள், திராவிட மொழிகள், ஆஸ்திரோ-ஆசிய மொழிகள், சீன-திபெத்திய மொழிகள்” என அடக்குவர்.
  • நம்நாட்டில் 1300க்கும் மேற்பட்ட மொழிகளும், அதன் கிளைமொழிகளும் பேசப்பட்டு வருகின்றன.

மொழிகளின் காட்சிசாலை;

  • மொழியியல் அறிஞர் ச.அகத்தியலிங்கம் இந்திய நாட்டை “மொழிகளின் காட்சிசாலை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

திராவிட மொழிக் குடும்பங்கள்:

தென்திராவிட மொழிகள்நடுத்திராவிட மொழிகள்வடதிராவிட மொழிகள்
தமிழ், மலையாளம், கன்னடம், குடகு, துளு, தோடா, கோத்தா, கொரகா, இருளாதெலுங்கு, கோண்டி, கோயா, கூயி, கூவி, கோலாமி, பர்ஜி, கதபா, கோண்டா, நாயக்கி, பொங்கோ, ஜதபுகுரூக், மால்தோ, பிராகுய்
திராவிட பெரு மொழிகள் = தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்

திராவிடம்:

  • திராவிடர் பேசிய மொழியே திராவிட மொழியாகும்.
  • திராவிடம் என்னும் சொல் திராவிடநாடு எனும் பொருளைத் தரும்.
  • திராவிடம் என்னும் சொல்லை முதலில் பயன்படுத்தியவர் = குமாரிலபட்டர்.
  • திராவிட மொழிகள், திராவிட இனம், திராவிட நாகரிகம் முதலிய சொற்றொடர்களில் திராவிடம் என்னும் சொல் பெயரடையாக வந்துள்ளது எனக் கால்டுவெல் கூறியுள்ளார்.
  • கால்டுவெல் திராவிடம் என்னும் சொல்லை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

கால்டுவெல் கூற்று:

  • தமிழையும் அதன் கிளைமொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளை ஒரு காலத்தில் தமிளியன்(tamilian) அல்லது தமுலிக்(tamulic) என்றழைத்தனர்.
  • அவற்றுள் தமிழ், மிகுந்த சிறப்பும் பழமையும் பெற்ற மொழியே எனினும், பல திராவிட மொழிகளில் அதுவும் ஒன்று.
  • எனவே, இவ்வினமொழிகள் அனைத்தையும் “திராவிட” எனும் சொல்லைத் தாம் கையாண்டதாகத் கால்டுவெல் கூறியுள்ளார்.

ஈராஸ் பாதிரியார் கூற்று:

  • திராவிட என்னும் சொல்லே தமிழ் எனும் சொல்லிலிருந்து உருவானது.
  • தமிழ் -> திரமிள -> திரவிட -> திராவிட என உருவாயிற்று எனக் கூறுகிறார் மொழியியல் அறிஞர் ஈராஸ் பாதிரியார்.
  • திராவிட மொழிகள் என்றாலே தமிழ் மொழியை தான் குறிக்கும் என்கிறார்.

தலைமைச் சிறப்பு:

  • திராவிட மொழிகள் அனைத்திற்கும் மூலமான மொழியை “முன்னைத் திராவிட மொழி, மூலத் திராவிட மொழி, தொன்மைத் திராவிட மொழி” எனப் பல்வேறு சொற்களால் குறிப்பர்.
  • இம்மூலமொழியாக முதன்முதலில் தனித்து வளர்ந்த மொழி தமிழ்.
  • மற்ற திராவிட மொழிகள் தமிழில் இருந்து பிறந்தவை.
  • என்பது விழுக்காடு அளவிற்குத் திராவிட மொளிக்கூறுகளைக் கொண்டுள்ள ஒரே திராவிட மொழி தமிழ்.

சிறுபஞ்சமூலம்

கணவனப்புக் கண்ணோட்டம் கால்வனப்புச் செல்லாமை
எண்வனப்பு இத்துணையாம் என்றுரைத்தல் – பண்வனப்புக்
கேட்டார்நன் றென்றல் கிளர்வேந்தன் தன்னோடு
வட்டான்நன் றென்றால் வனப்பு
- காரியாசான்

சொற்பொருள்:

  • கண்ணோட்டம் – இறக்கம் கொள்ளுதல்
  • எண்வனப்பு – ஆராய்சிக்கு அழகு
  • வேந்தன் – அரசன்

இலக்கணக்குறிப்பு:

  • கணோட்டம், செல்லாமை, உறைதல், என்றல் – தொழிற்பெயர்கள்
  • கேட்டார், வாட்டான் – வினையாலணையும் பெயர்

ஆசிரியர் குறிப்பு:

  • காரியாசான் மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணவர் எனச் சிறப்புப்பாயிரம் கூறுகிறது.
  • இவர் சமண சமயத்தை சார்ந்தவர்.
  • இவரும் கணிமேதவியாரும் ஒருசாலை மாணாக்கர்.

நூல் குறிப்பு:

  • இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • இந்நூலில் கடவுள் வாழ்த்துடன் 97 வெண்பாக்கள் உள்ளன.
கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி
  • இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் ஐந்து அறக்கருத்துகள் உள்ளன.

பாஞ்சாலி சபதம்

சொற்பொருள்:

  • எம்பி – என் தம்பி
  • மடப்பிடி – பாஞ்சாலி
  • கோமான் – அரசன்
  • நுந்தை – நும் தந்தை
  • அடவி – காடு
  • தடந்தோள் – வலியதோள்
  • மருங்கு – பக்கம்
  • கா – காடு
  • குலவு – விளங்கும்
  • பண்ணவர் – தேவர்
  • அரம்பையர் – தேவமகிளிர்
  • வீறு – வலிமை

இலக்கணக்குறிப்பு:

  • அழைத்தனன் – முற்றெச்சம்
  • மாநகர் – உரிச்சொற்றொடர்
  • சார்ந்தவர் – வினையாலணையும் பெயர்
  • நுந்தை – நும் தந்தை என்பதன் மரூஉ
  • அடவிமலையாறு – உம்மைத்தொகை
  • கடந்து – வினையெச்சம்
  • தடந்தோள் – உரிச்சொற்றொடர்
  • செறிந்து, பாய்ந்து – வினையெச்சம்
  • பாலாடையும் நறுநெய்யும் தேனும் – எண்ணும்மை
  • நீளமுடி, நன்செய், புன்செய் – பண்புத்தொகை
  • காத்தல் – தொழிற்பெயர்
  • தொல்லுலகு – பண்புத்தொகை
  • தாளமும் மேளமும் – எண்ணும்மை
  • பதமலர் – உருவகம்

ஆசிரியர் குறிப்பு:

  • சுப்ரமணிய பாரதியார், தற்போதைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் 11.09.1882 அன்று பிறந்தார்.
  • இவர்தம் பெற்றோர் சின்னசாமி – இலக்குமி அம்மையார்.
  • இவரின் துணைவியார் செல்லம்மாள்.
  • இவர் கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் முதலிய நூல்களை படைத்துள்ளார்.
  • ஞானரதம், சந்திரிகையின் கதை, தராசு முதலிய உரைநடை இலக்கியங்களை எழுதியுள்ளார்.
  • இவர் 11.12.1921 அன்று மறைந்தார்.

நூல் குறிப்பு:

  • பாஞ்சாலி சபதம் வியாசரின் பாரதத்தை தழுவி எழுதப் பெற்றது.
  • பாஞ்சாலி சபதம் இரு பாகங்கள் உடையது.
  • இது சூழ்ச்சிச்சருக்கம், சூதாட்டச் சருக்கம், அடிமைச் சருக்கம், துகிலுரிதல் சருக்கம், சபதச் சருக்கம் என ஐந்து சருக்கங்களையும், 412 பாடல்களையும் கொண்டது.

சிறப்பு:


  • பாரதியார் “பாட்டுக்கொரு புலவன், நீடுதுயில் நீக்கப் பாடி வந்த நிலா, தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி, தேசியக்கவி, மாகவி” என்றேல்லாம் புகப்பெற்றார்.
  • சுதேசமித்திரன், இந்திய முதலிய இதழ்களின் ஆசிரியராக இருந்தார்.

    இக்காலக் கவிதைகள்

    உரைநடைக் காலம்:

    • இருபதாம் நூற்றாண்டை “உரைநடைக் காலம்” என்பர்.
    • எனினும் கவிதை வடிவமும் கவினுற வளர்ந்து வந்தது.

    பாரதியார்:

    • பாரதியாரின் கவிதைகள் இருபதாம் நூற்றாண்டில் அரும்பிய மறுமலர்ச்சிக்கு வித்தாக இருந்தது.
    • மன்னர்களை மட்டுமே மகிழ்வித்து வந்த கவிதை மரபை மாற்றி, எளிய மக்களை நோக்கிக் கவிதைக் கருவியைத் திருப்பி அமைத்த பெருமை பாரதியைச் சாரும்.

    பாரதிதாசன்:

    • தமிழ், தமிழர், தமிழுணர்வு, சமுதாய மறுமலர்ச்சி, பெண்ணடிமை, திராவிட இயக்கச் சிந்தனை, பொதுவுடைமை முதலியவற்றை பாரதிதாசன் கவிதைகள் வெளிப்படுத்தின.
    • “எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
    • இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே”

    கவிமணி:

    • கவிமணியின் கவிதைகள் கற்போரைக் களிப்பில் ஆழ்த்துவன.
    • கல்லைப் பிசைந்து கனியாக்கும் செந்தமிழின் சொல்லை மணியாகத் தொடுத்வனும் நீதானோ, எனத் தாலாட்டு பாடியவர்.
    • “மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல
    • மாதவம் செய்திட வேண்டுமம்மா”
    • “சாலைகளில் பல தொழில்கள் பெருகவேண்டும்
    • சபைகளிலே தமிழ் எழுந்து முழங்கவேண்டும்”

    நாமக்கல் கவிஞர்:

    • இவரின் கவிதைகளில் காந்தியச் சிந்தனை அதிகம்.
    • “தமிழன் என்றோர் இனமுண்டு
    • தனியே அவற்கொரு குணமுண்டு”
    • “பாட்டாளி மக்களது பசிதீர வேண்டும்
    • பணமென்ற மோகத்தின் விசைதீர வேண்டும்”
    • கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
    • கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்”

    முடியரசன்:

    • இவரின் கவிதையில் பகுத்தறிவு நோக்கும், முற்போக்குச் சிந்தனையும் தமிழுணர்வும் அதிகம் காணலாம்.
    ஆங்கிலமோ பிறமொழியோ பயின்றுவிட்டால்
    அன்னைமொழி பேசுதற்கு நாணுகின்ற
    தீங்குடை மனப்போக்கர் வாழும்நாட்டில்
    தென்படுமோ மொழியுணர்ச்சி?

    சுரதா:

    • சுரதாவின் கவிதைகளில் புதிய உவமைகளைக் காணலாம்.
    • அவரி “உவமைக் கவிஞர்” என்று அழைப்பர்.
    • மறைமலையடிகளைப் பற்றி சுரதா பாராட்டுதல்,
    முல்லைக்கோர் காடுபோலும்
    முத்துக்கோர் கடலேபோலும்
    சொல்லுக்கோர் கீரன்போலும்
    தூதுக்கோர் தென்றல்போலும்
    கல்விக்கோர் கம்பன்போலும்
    கவிதைக்கோர் பரணர்போலும்
    வில்லுக்கோர் ஓரிபோலும்
    விளங்கினார், வென்றார், நின்றார்.

    வாணிதாசன்:

    • பாரதிதாசனைத் தொடர்ந்து இயக்கியின் அழகை படம்பிடித்துக் காட்டுவதில் வாணிதாசன் கவிதைகள் சிறந்து விளங்கின.

    மணிக்கொடி:

    • ந.பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன், கு.ப.இராசகோபாலன், க.நா.சுப்பிரமணியன் முதலியோர் தொடக்கத்தில் மணிக்கொடி என்னும் இதழில் புதுக்கவிதை எழுதினர்.

    எழுத்து:

    • எஸ்.வைதீஸ்வரன், தருமு சிவராமு, மணி, சி.சு.செல்லப்பா முதலியோர் எழுத்து என்னும் இதழில் புதுக்கவிதைப் படைத்தனர்.

    வல்லிக்கண்ணன்:

    • புதுகவிதை வரலாற்றில் வல்லிக்கண்ணன் பங்கு போற்றத்தக்கது.
    ஏழையின் குடிசையில்
    அடுப்பும் விளக்கும் தவிர
    எல்லாமே எரிகின்றன.
    என்பது இவரின் புதுக்கவிதையின் எளிய வடிவை காட்டும்.

    கண்ணதாசன்

    • முத்தையா என்ற இயற்பெயர் கொண்டவர்.
    • சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியில் பிறந்தார்.
    • பெற்றோர் = சாத்தப்பன், விசாலாட்சி
    • ஆட்டனத்தி ஆதிமந்தி, மாங்கனி, கல்லக்குடி மாகாவியம், ஏசுகாவியம் முதலியன அவர் படைத்த நெடுங்கவிதை நூல்கள்.
    • “இராசதண்டனை” என்பது கம்பர்-அம்பிகாபதி வரலாற்றை வைத்து அவர் படைத்த இனிய நாடகம்.
    • ஆயிரம் தீவு அங்கயற்க்கண்ணி, வேலங்குடி திருவிழா முதலான பல புதினங்களை அவர் படைத்துள்ளார்.
    • இவற்றின் சேரமான் காதலி என்ற புதினம் சாகித்திய அகாடமி பரிசை பெற்றுள்ளது.
    • தென்றல், முல்லை, கண்ணதாசன், கடிதம், தமிழ்மலர் முதலிய இதழ்கள் தொடங்கி, அவற்றின் ஆசிரியராக இருந்து பணியாற்றினார்.

    புறநானூறு

    சொற்பொருள்:

    • நிழற்றிய – நிழல் செய்த
    • துஞ்சான் – துயிலான்
    • மா – விலங்கு
    • நாழி – அளவுப்பெயர்
    • ஈதல் – கொடுத்தல்
    • துய்ப்போம் – நுகர்வோம்

    இலக்கணக்குறிப்பு:

    • வெண்குடை – பண்புத்தொகை
    • நாழி – ஆகுபெயர்
    • ஈதல் – தொழிற்பெயர்

    ஆசிரியர் குறிப்பு:

    • மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார்.
    • இவர் இறையனார் எழுதிய களவியலுக்கு உரை கண்டவர்.
    • பத்துப்பாட்டில் “திருமுருகாற்றுப்படை”, “நெடுநல்வாடை” எனும் இரு நூல்களை படைத்துள்ளார்.

    நூல் குறிப்பு:

    • புறம் + நான்கு + நூறு = புறநானூறு
    • புறப்பொருள் பற்றிய நானூறு பாடல்களைக் கொண்டது இந்நூல்.
    • இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
    • இந்நூலின் சில பாடல்களை ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

    குறுந்தொகை

    நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
    நீரினும் ஆரள வின்றே சாரல்
    கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
    பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே
    - தேவகுலத்தார்

    சொற்பொருள்:

    • நீர் – கடல்
    • கோல் – கொம்பு

    இலக்கணக்குறிப்பு:

    • நிலத்தினும், வானினும், நீரினும் – உயர்வு சிறப்பும்மை
    • கருங்கோல் – பண்புத்தொகை

    பிரித்தறிதல்:

    • ஆரளவு – அருமை+அளவு
    • கருங்கோல் – கருமை+கோல்
    • பெருந்தேன் – பெருமை+தேன்

    நூல் குறிப்பு:

    • குறுமை + தொகை = குறுந்தொகை
    • குறைந்த அடிகளால் பாடப்பெற்ற பாடல்களின் தொகுப்பே குறுந்தொகை.
    • இந்நூல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
    • இந்நூலை தொகுத்தவர் பூரிக்கோ.
    • பாரதம் பாடிய பெருந்தேவனார் இந்நூலுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடியுள்ளார்.

    கடற்பயணம்

    தமிழரின் கடற்பயணம்:

    • “திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்று ஔவையும், “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று கணியன் பூங்குன்றனாரும் கூறியுள்ளனர்.
    • தொல்காப்பியம், தமிழர்கள் பிற நாடுகளுக்கு கடற்பயணம் மேற்கொண்டதை “முந்நீர் வழக்கம்” எனக் குறிப்பிட்டுளார்.
    • தொல்காப்பிய பொருளதிகாரத்தில் இடம்பெற்றுள்ள “பொருள்வயிற் பிரிவு” விளக்குகிறது. இப்பிரிவு “காலில்(தரைவழிப் பிரிதல்) பிரிவு, களத்தில்(நீர்வழிப் பிரிதல்) பிரிவு” என இரு வகைப்படும்.

    யவனர்:

    • தமிழர்கள் கிரேக்கரையும் உரோமானியரையும் “யவனர்” என அழைத்தனர்.

    கப்பல் கட்டுதல்:

    • “கலம்செய் கம்மியர்” என ஒருவகைத் தொழிலாளர் தமிழகத்தில் இருந்தனர்.
    • அவர்களால் பெருங்கப்பல்கள் கட்டப்பட்டன.

    புறநானூறு கூறும் உவமை:

    • நான்கு பக்கமும் நீர் நிரம்பிய கழனிகள் உள்ளன. அதன் நடுவில் தனியாக மதிலோடு கூடிய அரசனது கோட்டை உள்ளது. அக்கோட்டையின் தோற்றமானது நடுக்கடலில் செல்லும் கப்பலுக்கு உவமையாகப் புறநானூற்றில் கூறப்பட்டுள்ளது.

    கடலைக் குறிக்கும் சொற்கள்:

    • ஆழி, ஆர்கலி, முந்நீர், வாரணம், பௌவம், பரவை, புணரி.

    மரக்கலத்தைக் குறிக்கும் சொற்கள்:

    • கப்பல், களம், கட்டுமரம், நாவாய், படகு, பரிசில், புனை, தோணி, தெப்பம், திமில், அம்பி, வங்கம், மிதவை, பஃறி, ஓடம்.

    பட்டினப்பாலை:

    • புகார் நகரத்தில் நிறுத்தப்பட்ட நாவாய்கள், அலைகளால் அலைப்புண்டு தறியில் கட்டப்பட்ட யானை அசைவதுபோல் அசைந்தன.
    • அவற்றின் உச்சியில் கொடிகள் அசைந்து ஆடின எனப் பட்டினப்பாலை கூறுகின்றது.

    முசிறி:

    • முசிறி சேரர் துறைமுகம்.
    • அங்குச் “சுள்ளி” என்னும் பெரிய ஆற்றில் யவனர்களின் மரக்கலங்கள், ஆற்றுத்துறைகள் கலங்கிப் போகும்படி வந்தி நின்றன.
    • யவனர்கள் பொன்னை சுமந்து வந்து அதற்கு ஈடாக மிளகை ஏற்றி சென்றனர் என்ற செய்தியை அகநானூறு கூறுகிறது.

    கொற்கை:

    • கொற்கை பாண்டிய துறைமுகம்.
    • இத்துறைமுகத்தில் முத்துக்குளித்தல் மிகச் சிறப்பாக நடந்ததை வெணிசு நாடு அறிஞர் மார்க்கோபோலோ கூறியுள்ளார்.
    • மதுரைக்காஞ்சியும் சிருபாணாற்றுப்படையும் கொற்கை முத்தின் சிறப்பை கூறியுள்ளன.
    • “விளைந்து முதிர்ந்த விழுமுத்து” என மதுரைக்காஞ்சி கூறுகிறது.

    காவிரிப்பூம்பட்டினம்:

    • இது சோழர்களின் துறைமுகம்.
    • இங்கு பெரும்பாலும் வாழ்ந்தவர்கள் வணிகர்கள்.
    • அங்கு சுங்கச்சாலையும் கலங்கரை விளக்கமும் இருந்தன.

    ஏற்றுமதி இறக்குமதி:

    • பழந்தமிழகத்தின் வணிகப் பொருள்களைப் பற்றிய குறிப்புகள் பட்டினப்பாலையும், மதுரைக்காஞ்சியும் கூறுகின்றது.
    • தமிழகப் பொருள்கள் சீனத்தில் விற்கப்பட்டன.
    • சீனத்துப் பட்டும் சருக்கரையும் தமிழகத்திற்கு இறக்குமதி ஆயின.
    • கரும்பு, அதியமானின் முன்னோர் காலத்தில் சீனாவில் இருந்து கொண்டு வந்து பயிரிடப்பட்டது.

    திருக்குறள்

    சொற்பொருள்:

    • செவிச்செல்வம் – கேள்விச்செல்வம்
    • தலை – முதன்மை
    • போழ்து – பொழுது
    • ஈயப்படும் – அளிக்கப்படும்
    • ஆவி உணவு – தேவர்களுக்கு வேல்வியின்போது கொடுக்கப்படும் உணவு
    • ஒப்பர் – நிகராவர்
    • ஒற்கம் – தளர்ச்சி
    • ஊற்று – ஊன்றுகோல்
    • ஆன்ற – நிறைந்த
    • வணங்கிய – பணிவான

    இலக்கணக்குறிப்பு:

    • வயிற்றுக்கும் – இழிவு சிறப்பும்மை
    • கேட்க – வியங்கோள் வினைமுற்று
    • இழுக்கல், ஒழுக்கம் – தொழிற்பெயர்கள்
    • ஆன்ற – பெயரெச்சம்
    • அவியினும் வாழினும் – எண்ணும்மை

    பிரித்தறிதல்:

    • சுவையுணரா = சுவை + உணரா
    • வாயுணர்வு = வாய் + உணர்வு
    • செவிக்குணவு = செவிக்கு + உணவு

    பொதுவான குறிப்புகள்:

    • திருக்குறளில் பத்து அதிகாரப் பெயர்கள் உடைமை என்னும் சொல்லில் அமைந்துள்ளன.
    • திருக்குறள் ஏழு சீர்களால் அமைந்த வெண்பாக்களைக் கொண்டது.
    • ஏழு என்னும் எண்ணுப்பெயர் எட்டுக் குறட்பாகளில் இடம்பெற்றுள்ளது.
    • அதிகாரங்கள் 133. இதன் கூட்டுத்தொகை ஏழு.
    • மொத்த குறட்பாக்கள் 1330. இதன் கூட்டுத்தொகை ஏழு.

    சீட்டுக்கவி

    சொற்பொருள்:

    • கந்துகம் – பந்து
    • கோணம் – வாட்படை
    • குந்தம் – சூலம்
    • கொடை – வேனிற்காலம்
    • பாடலம் – பாதிரிப் பூ
    • மா – மாமரம்
    • சடிலம் – சடை
    • கிள்ளை – கிலி
    • கந்தருவம், கந்துகம், கோணம், கொக்கு, கொடை, குந்தம், பாடலம், சடிலம், கிள்ளை – குதிரை

    இலக்கணக்குறிப்பு:

    • எழுதி, புரந்து – வினையெச்சம்
    • படித்த, தீர்த்த – பெயரெச்சம்
    • பாடாத, பறவாத, சூடாத – எதிர்மறைப் பெயரெச்சம்
    • விடல் – தொழிற்பெயர்

    ஆசிரியர் குறிப்பு:

    • அந்தக்கவி வீரராகவர் காஞ்சிபுரம் மாவட்டம் பூதூரில் பிறந்து பொன் விளைந்த கலதூரில் வாழ்ந்தவர்.
    • தந்தை = வடுகநாதர்.
    • இவர் பிறவியிலே கண் பார்வை அற்றவர்.
    • எனினும் கேள்வியறிவின் வாயிலாக கல்வி பயின்றார்.
    • இவர் ஏடுகள் எழுதாமல் தன் மனத்திலேயே எழுதிப் படித்தார் என அவரே கூறுகிறார்.
    • இலங்கை சென்று பரராசசேகர மன்னனை பாடி ஒரு யானை, போற்பந்தம், ஓர் ஊர் ஆகியவற்றைப் பரிசிலாகப் பெற்று ஊர் திரும்பினார்.

    படைத்த நூல்கள்:

    • திருக்கழுக்குன்றப் புராணம், திருக்கழுக்குன்ற மாலை, சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ், திருவாரூர் உலா, சந்திரவாணன் கோவை.

    நூல் குறிப்பு:

    • இப்பாடல் தனிப்பாடல் திரட்டு எனும் நூலில் இடம்பெற்றுள்ளது.
    • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த புலவர் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பே இந்நூல்.
    • இதில் 110 புலவர்கள் பாடிய 1113 பாடல்கள் உள்ளன.

    சீட்டுக்கவி:

    • புலவர், பெரும்பாலும் அரசர் முதலான கொடையாளர்களுக்குத் தாம் விரும்பும் பொருளைப் பெறவேண்டி, ஒலைச்சீட்டில் கவியாக எழுதி அனுப்புவர். அக்கவிதைக்கு சீட்டுக்கவி எனப் பெயர்.
    • இதற்கு ஓலைத்தூக்கு, ஓலைப்பாசுரம் என்னும் வேறு பெயர்களும் உண்டு.

      ஆனந்தரங்கர் நாட்குறிப்பு

      வரலாற்று ஆவணம்:

      • ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு ஓர் இலக்கியமாகவும், வரலாற்று ஆவணமாகவும் மதிக்கப் பெற்றது.

      இளமைக்காலம்:

      • ஆனந்தரங்கர் சென்னை பெரம்பூரில் பிறந்தவர்.
      • இவரின் தந்தை = திருவேங்கடம்
      • இவர் தன் மூன்றாம் வயதில் தன் தாயை இழந்தார்.
      • இவர் “எம்பார்” என்பவரிடம் கல்வி கற்றார்.

      புதுவைக்கு செல்லுதல்:

      • இவரின் தந்தை திருவேங்கடம், மைத்துனர் நைனியப்பரின் வேண்டுகோளுக்கு இணங்க புதுவையில் குடியேறினார்.
      • அங்கு அரசுப்பணியில் உதவியாளராகச் சேர்ந்து, நாளடைவில் திவானாகப் பதவி உயர்வு பெற்றார்.

      துபாசி:

      • ஆனந்தரங்கர் கல்வி கற்றபின்னர், பாக்குக் கிடங்கு நடத்தி வந்தார்.
      • “துய்ப்ளே” என்னும் ஆளுநரின் மொழிபெயர்ப்பாளர்(துபாசி) இறந்ததால், ஆனந்தரங்கர் அப்பணிக்கு அமர்த்தப்பட்டார்.

      ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு:

      • ஆனந்தரங்கர் துபாசியாகப் பணியாற்றிய காலத்தில், 1736ஆம் ஆண்டு முதல் 1761ஆம் ஆண்டு வரை ஏறத்தாழ 25 ஆண்டுகள் நாட்குறிப்பு எழுதியுள்ளார்.
      • தம் நாட்குறிப்புக்கு “தினப்படிச் செய்திக்குறிப்பு”, “சொஸ்த லிகிதம்” எனப் பெயரிட்டார்.

      வரலாற்றுச் செய்திகள்:

      • பிரெஞ்சுப்படை காரைக்காலைப் பிடிக்கச் சென்று தோல்வியடைந்தது, தில்லியின் மீது பாரசீகப் படையெடுப்பு, குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கிய செய்திகள், இலபூர்தொனோ கப்பல் பிரெஞ்சு நாட்டில்லிருந்து சென்றது, வெளிநாட்டுப் பயணிகள் வந்து சென்ற நிகழ்வுகள் முதலிய முக்கிய வரலாற்றுச் செய்திகள் இடம் பெற்றுள்ளது.
      • ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு வரலாற்றுக் கருவூலமாகத் திகழ்கிறது.

      வணிகச் செய்தி:

      • துறைமுக நகரங்களில் உள்ள மக்களின் வருவாய்க்கு அடிப்படையாய் அமைவது அங்கு வரும் கப்பல்களின் போக்குவரத்தே ஆகும்.
      • புதுச்சேரிக்கு கப்பல்கள் வந்த செய்தி கேட்டதும் மக்கள் மகிழ்தனர்.
      • அது குறித்து, “நாட்பட்ட திரவியம் மீண்டும் கிடைத்தாற் போலவும், மரணமுற்ற உறவினர்கள் உயிர்பெற்று எழுந்து வந்தது போலவும், அவரவர் வளவிலே கலியாணம் நடப்து போலவும், நீண்டநாள் தவங்கிடந்து புத்திர பாக்கியம் கிட்டினாற் ஒளவும், தேவாமிர்த்ததைச் சுவைத்துபோலவும் சந்தோஷித்தார்கள்; அதைக் காகிதத்தில் எழுத முடியாது” என்று குறிப்பிட்டுளார்.

      தண்டனைச் செய்தி:

      • நீதி வழங்கல், தண்டனை அளித்தல் முதலிய செய்திகளும் நாட்குறிப்பில் இடம் பெற்றுள்ளன.
      • திருட்டு கும்பலின் தலைவனுக்கு கடைத் தெருவில் தூக்கில் இடப்பட்டது என்ற செய்தி குறிகப்படுள்ளது.
      பண்பாட்டு நிலை:
      • ஆனந்தரங்கர், தம் நாட்குறிப்பில் தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான உறவு, பெரியவர்களை மதிக்கும் பண்பு, பெரியவர்களுக்கு வணக்கம் செய்தல், கோவில் திருவிழாக்கள், பலகை வழக்கங்கள், சடங்குகள் போன்றவற்றை குறித்துள்ளார்.

      ஆனந்தரங்கர் பெற்ற சிறப்புகள்:

      • முசபர்சங், ஆனந்தரங்கருக்கு மூவாயிரம் குதிரைகளை வழங்கி, அவருக்கு “மண்சுபேதார்” என்னும் பட்டம் வழங்கினார்.
      • பின்பு செங்கல்பட்டு கோட்டைக்கு தளபதியாகவும், பின்பு அம்மாவட்டம் முழுமைக்கும் ஜாகிர்தாராகவும் நியமித்தார்.
      • ஆளுநர் மாளிகைக்குள் பல்லக்கில் செல்லும் உரிமை அவருக்கு வழங்கப்பட்டது.
      • அவர் தங்கப் பிடி போட்ட கைத்தடி வைத்துக்கொள்ளவும் செருப்பணிந்து ஆளுநர் மாளிகைக்குள் செல்லவும் உரிமை பெற்றிருந்தார்.

      பெப்பிசு:

      • உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் முன்னோடி = பெப்பிசு
      • இந்தியாவின் பெப்பிசு = ஆனந்தரங்கர்
      • நாட்குறிப்பு வேந்தர் = ஆனந்தரங்கர்

      பிறமொழி சொற்கள்:

      • சொஸ்த = தெளிந்த அல்லது உரிமையுடைய
      • லிகிதம் = கடிதம் அல்லது ஆவணம்
      • வளவு = வீடு
      • துபாசி = இருமொழிப்புலமை உடையவர்(மொழிப்பெயர்ப்பாளர்)
      • டைஸ் என்னும் இலத்தின் சொல்லுக்கு நாள் என்பது பொருள்.
      • இச்சொல்லில் இருந்து டைரியம் என்னும் இலத்தின் சொல் உருவானது.
      • இச்சொல்லுக்கு நாட்குறிப்பு என்பது பொருள். இதிலிருந்து டைரி என்னும் ஆங்கிலச் சொல் உருவானது.

      பிற குறிப்புகள்:

      • அருணாச்சலக் கவிராயர் தம் இராமநாடகத்தைத் திருவரங்கத்தில் அரங்கேற்றிய பின்னர், மீண்டும் ஒருமுறை ஆனந்தரங்கர் முன்னிலையில் அரங்கேற்றினார்.
      • கே.கே.பிள்ளை, “ஆனந்தரங்கருடைய நாட்குறிப்புகள் அவரது காலத்தில் யாருமே புரிந்திராத அரியதொரு இலக்கியப் பணி” என்றார்.
      • “தான் நேரில் கண்டும் கேட்டும் அறிந்துள்ள செய்திகளைச் சித்திரகுப்தனைப் போல் ஒன்றுவிடாமல் குறித்து வைத்துள்ளார்” – வ.வே.சு

      ஆனந்தரங்கர் குறித்து வெளிவந்த இலக்கியங்கள்:

      • ஆனந்தரங்கர் கோவை = தியாகராச தேசிகர்
      • கள்வன் நொண்டிச் சிந்து
      • ஆனந்தரங்கர் பிள்ளைத்தமிழ் = அறிமதி தென்னகன்
      • ஆனந்தரங்கர் விஜயசம்பு = சீனிவாசக்கவி(வடமொழி)
      • ஆனந்தரங்கர் ராட்சந்தமு = கச்தூரிரங்கக்கவி(தெலுங்கு)

      மு.வரதராசனாரின் கடிதம்

      தம்பிக்கு என்ற கடிதத்தில் அன்புள்ள எழில் என்று தொடங்கி,
      • தமிழரின் ஒற்றுமை
      • தனி ஒருவர் உயர்வு இன உயர்வு ஆகாது
      • தமிழ்மொழி ஒன்றே தமிழரைப் பிணைந்து ஒற்றுமைப்படுத்தும்
      • ஆட்சிமொழி என்றால் சட்டசபை முதல் நீதிமன்றம் வரை தமிழ் வழங்க வேண்டும்.
      • கல்விமொழி என்றால் எவ்வகை கல்லூரிகளிலும் எல்லாப் பாடங்களையும் தமிழிலே கற்பிக்க வேண்டும்.
      • கடிதம், பணவிடை, விளம்பரப் பலகை, விற்பனைச் சீட்டு முதலியவை எல்லாம் தமிழில் எழுத வேண்டும்.
      • சாதிசமய வேறுபாடுகளை மறக்க கற்றுகொள்; மாறாக முடியாவிட்டால் புறக்கணிக்கக் கற்றுக்கொள்.
      • வெளிநாட்டுத் துணியை மறுப்பது போல தமிழ்நாட்டுக்கும் தமிழ்மொழிக்கும் நன்மை செய்யாத செய்தித்தாள்களை விலக்கு.
      • தமிழர் நடத்தும் கடைகளையும் தொழிற்கூடங்களையும் போற்று.
      • தமிழர் கடை தொலைவில் இருந்தாலும், விலை கூடுதலாக இருந்தாலும், ஏதேனும் குறை இருந்தாலும் அங்கேயே சென்று வாங்கு.
      • கூடிய வரையில் தமிழ்நாட்டில் தமிழ்த் தொழிலாளர்களால் செய்யப்பட்ட பொருள்களையே வாங்கு.
      • தமிழரிடையே பகையையும் பிரிவையும் வளர்க்கும் எந்தச் செயலையும் செய்யாதே, பேசாதே, எண்ணாதே.
      • கொள்கைகள், கட்சிகள், இயங்ககளைவிட நாட்டு மக்களின் நன்மையே பெரிது.
      • தலைமை உன்னைத் தேடி வந்தால் வரட்டும்; நீ அதைத் தேடி அலையாதே.
      • தொண்டுக்கு முந்து; தலைமைக்கு ஓய்ந்து
      • ஒவ்வொருவரும் ஆணையிடுவதற்கு விரும்பிகிறார். அடங்கி ஒழுகுவதற்கு யாரும் இல்லை. அதனால் தான் வீழ்ச்சி நேர்ந்தது.

      முத்தொள்ளாயிரம்

      சொற்பொருள்:

      • உய்ம்மின் – பிழைத்துக் கொள்ளுங்கள்
      • மலை – வளமை
      • வள் – நெருக்கம்
      • விசும்பு – வானம்
      • புரவு – புறா
      • நிறை – எடை
      • ஈர்த்து – அறுத்து
      • துலை – துலாக்கோல்(தராசு)
      • நிறை – ஒழுக்கம்
      • மேனி – உடல்
      • மறுப்பு – தந்தம்
      • ஊசி – எழுத்தாணி
      • மறம் – வீரம்
      • கனல் – நெருப்பு
      • மாறன் – பாண்டியன்
      • களிறு – யானை

      இலக்கணக்குறிப்பு:

      • மாமலை –உரிச்சொற்றொடர்
      • நெடுமதில் – பண்புத்தொகை
      • வாங்குவில் – வினைத்தொகை
      • உயர்துலை – வினைத்தொகை
      • குறையா – ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்
      • இலைவேல் – உவமைத்தொகை
      • மருப்பூசி, மார்போலை – உருவகம்
      • மாறன்களிறு – ஆறாம் வேற்றுமைத் தொகை

      பிரித்தறிதல்:

      • தந்துய்ம்மின் = தந்து +உய்ம்மின்
      • வில்லெழுதி = வில் + எழுதி
      • பூட்டுமின் = பூட்டு + மின்
      • மருப்பூசி = மறுப்பு + ஊசி
      • எமதென்று = எமது + என்று
      • மொய்யிலை = மொய் + இலை

      நூல் குறிப்பு:

      • மூவேந்தர்களைப் பற்றிய மூன்று தொள்ளாயிரம் பாடல்களை கொண்டது.
      • ஆயினும் இந்நூல் முழுமையாக கிடைக்கவில்லை.
      • “புறத்திரட்டு” என்னும் நூல் வாயிலாக 108 வெண்பாக்களும், பழைய உரைநூல்களில் மேற்கோளாக 22 வெண்பாக்களும் கிடைத்துள்ளன.
      • இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

      கலிங்கத்துப்பரணி

      சொற்பொருள்:

      • தீயின்வாய் – நெருப்பில்
      • சிந்தை – எண்ணம்
      • கூர – மிக
      • நவ்வி – மான்
      • முகில் – மேகம்
      • மதி – நிலவு
      • உகு – சொரிந்த(பொழிந்த)

      இலக்கணக்குறிப்பு:

      • வெந்து, உலர்ந்து, எனா, கூர – வினையெச்சம்
      • செந்நாய் – பண்புத்தொகை
      • கருமுகிலும் வெண்மதியும் – எண்ணும்மை
      • கருமுகில், வெண்மதி – பண்புத்தொகை
      • கடக்க, ஓடி, இளைத்து – வினையெச்சம்

      பிரித்தறிதல்:

      • வாயினீர் = வாயின் + நீர்
      • வெந்துலர்ந்து = வெந்து + உலர்ந்து
      • காடிதனை = காடு + இதனை
      • கருமுகில் = கருமை + முகில்
      • வெண்மதி = வெண்மை + மதி

      ஆசிரியர் குறிப்பு:

      • கலிங்கத்துப்பரணியை இயற்றியவர் செயங்கொண்டார்.
      • இவர் திருவாரூர் மாவட்டம் தீபங்குடியில் பிறந்தவர்.
      • இவர் முதல் குலோத்துங்கசோழனின் அரசவைப் புலவர்.
      • “பரணிக்கோர் சயங்கொண்டார்” எனப் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் பாராட்டியுள்ளார்.
      • இசையாயிரம், உலா, மடல் ஆகிய நூல்களையும் இயற்றி உள்ளார்.
      • இவரது காலம் கி.பி.பனிரெண்டாம் நூற்றாண்டு.

      நூல் குறிப்பு:

      • ஆயிரக்கணக்கான யானைகளைப் போரில் கொன்ற வீரனைப் புகழ்ந்து பாடும் இலக்கியத்திற்கு பரணி என்று பெயர்.
      • இது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
      • தமிழி தோன்றிய முதல் பரணி = கலிங்கத்துப்பரணி
      • கலிங்க மன்னன் ஆனந்தபத்மன் மீது முதல் குலோத்துங்கச் சோழன் போர்தொடுத்து வெற்றி பெற்றான். அவ்வெற்றியை பாராட்டி எழுதப்பட்ட நூல் இது.
      • இந்நூலில் 599 தாழிசைகள் உள்ளன.
      • ஒட்டக்கூத்தர் இந்நூலைத் “தென்தமிழ்த் தெய்வப்பரணி” எனப் புகழ்ந்துள்ளார்.
      ஆயிரம் யானை அமரிடை வென்ற
      மாணவ னுக்கு வகுப்பது பரணி
      - பன்னிரு பாட்டியல்
      • பேரறிஞர் அண்ணா, “எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டென்றால் அது கலிங்கத்துப்பரணியே” என்றார்.
      உலகளாவிய தமிழர்
      கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி
      - புறப்பொருள் வெண்பாமாலை
      • உலகில் உள்ள 235 நாடுகளில் ஏறத்தாழ 154 நாடுகளில் தமிழர்கள் உள்ளனர்.
      • இருபது நாடுகளில் இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர் வாழ்கின்றனர்.
      • சாதுவன் வணிகம் செய்யும் பொருட்டு கடல் கடந்து சென்ற குறிப்பு மணிமேகலையில் உள்ளது.
      • சிங்கப்பூர், மலேசியா, பினாங்குத் தீவு ஆகிய நாடுகளில் கோவில்கள் கட்டி ஆண்டுதோறும் திருவிழாக்களைச் சிறப்பாக நடத்தி வருகின்றனர்.
      • ரியூனியன் தீவில் வாழ்பவர்கள் பெரும்பாலும் தமிழர்களே.
      • இலங்கையில் வாழும் தமிழர்களில் 95 விழுக்காட்டினர் தொடக்கப் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை தமிழிலேயே கல்வி கற்கின்றனர்.
      • இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் தமிழ், ஆட்சிமொழியாகத் திகழ்கிறது.

      திரு.வி.க

      பிறப்பும் கல்வியும்:

      • சென்னைக்கு அருகே துள்ளம் என்னும் ஊரில் விருதாச்சலனார் – சினம்மையாரின் மகனாக 26.08.1883ஆம் நாள் பிறந்தார்.
      • சென்னை ராயப்பேட்டை வெஸ்லி பள்ளியில் படித்தார்.
      • கதிரைவேலனாரிடம் தமிழ் இலக்கியங்களையும் சைவ சித்தாந்த சாத்திரங்களையும் படித்தார்.

      தமிழ் பற்று:

      • “எங்கும் தமிழ், எதிலும் தமிழ்” என்பதை முழு மூச்சாக கொண்டார்.
      • வடமொழிச் சொற்களை கலவாமல் தூய தமிழிலே எழுதவும் பேசவும் செய்தார்.

      பிறமொழியறிவு:

      • தமிழை வளர்க்க பிற மொழியை வெறுக்க வேண்டும் என்பது பொருளல்ல என்றார்.
      • ஆங்கிலத்தில் மிக்க புலமை பெற்றிருந்தார்.
      • காந்தியடிகள் தமிழகம் வந்த போதெல்லாம் அவரின் மேடை பேச்சை மொழிபெயர்த்தார்.

      இளைஞர்களுக்கு அறிவுரை:

      • “இளைஞர்களே! தமிழுலகின் இழிந்த நிலை ஊறுங்கள்; ஓர்ந்து உங்கள் பொறுப்பை உணருங்கள்; தமிழ்த்தையைப் புதுப்போர்வையில் ஒப்பனை செய்து அரியாசனத்தில் அமர்த்த சூள்கொண்டு எழுங்கள்; எழுங்கள்; பழந்தமிழ் வீரத்துடன் எழுங்கள்” என்று அறைகூவல் விடுத்தார்.

      பேசுப்பணி:

      • “திரு.வி.க நடை” என்ற ஒரு தனி நடையை நடைமுறைப் படுத்தினார்.
      • பேசுவது போலவே எழுதுவது, எழுதுவது போலவே பேசுவது ஆகும்.
      • அறிஞர் அண்ணா உள்ளிட்ட அக்கால இளைஞர்களை தன் உணர்ச்சிமிகு பேச்சால் தம்பால் ஈர்த்தார்.

      எழுத்துப்பணி:

      • உரைநடை எழுதுவது எனது தொழில் என்று கூறினார்.
      • “அவருக்கு வாய்த்த மொழிநடை மலை எனத் தமிழுலகில் ஓங்கி உயர்ந்துள்ளது” என்று தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் பாராட்டி உள்ளார்.

      உரைநடை நூல்கள்:

      • மனித வாழ்கையும் காந்தியடிகளும்
      • பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணைநலம்
      • இமயமலை அல்லது தியானம்
      • முருகன் அல்லது அழகு
      • சைவத்திறவு
      • சைவத்தின் சமரசம்
      • கடவுட் காட்சியும் தாயுமானவரும்
      • இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம்
      • தமிழ்நாடும் நம்மாழ்வாரும்
      • நாயன்மார் வரலாறு
      • தமிழ்நூல்களில் பௌத்தம்
      • காதலா?முடியா?சீர்திருத்தமா?
      • என் கடன் பணிசெய்து கிடப்பதே
      • இந்தியாவும் விடுதலையும்
      • தமிழ்ச்சோலை
      • உள்ளொளி

      செய்யுள் நூல்கள்:

      • முருகன் அருள்வேட்டல்
      • திருமால் அருள்வேட்டல்
      • கிருத்துவின் அருள்வேட்டல்
      • அருகன் அருகே
      • உரிமை வேட்டல்
      • பொதுமை வேட்டல்
      • பொருளும் அருளும் அல்லது மார்க்சியமும் காந்தியடிகளும்

      இதழ்ப்பணி:

      • தேசபக்தன், நவசக்தி என்னும் இதழ்களின் வாயிலாகத் தொழிலாளர் முன்னேற்றம் பெறப் பாடுபட்டார்.

      தமிழ் வாழ்வினர்:

      • வயதாகி படுக்கையில் இருந்த போதும் “வளர்ச்சியும் வாழ்வும் அல்லது படுகைப் பிதற்றல்” என்னும் நூலை மு.வ உதவியுடன் வெளியிட்டார்.
      • அவர் மனைவி இறந்த போதும், “நான் தனியாக வாழவில்லை; தமிழோடு வாழ்கிறேன்” எனக் கூறியவர்.

        மணிமேகலை

        சொற்பொருள்:

        • ஆயம் – தோழியர் கூட்டம்
        • ஆசனம் – இருக்கை
        • நாத்தொலைவில்லை – சொல் சோர்வின்மை
        • யாக்கை – உடல்
        • பிணி நீங்கா – நீங்கா நோய்
        • பேதைமை – அறியாமை
        • செய்கை – இருவினை
        • உணர்வு – அறிவியல் சிந்தனை
        • அரு – உருவமற்றது
        • உறு – வடிவம்
        • வாயில் – ஐம்பொறிகள்
        • வேட்கை – விருப்பம்
        • பவம் – பயன் நோக்கிய செயல்
        • கொடு – கொம்பு
        • அலகில – அளவற்ற
        • தொக்க விலங்கு – விலங்குத்தொகுதி
        • குரலை – புறம் பேசுதல்
        • வெஃகல் – விரும்புதல்
        • வெகுளல் – சினத்தல்
        • சீலம் – ஒழுக்கம்
        • தானம் – கொடை
        • கேண்மின் – கேளுங்கள்
        • உய்ம்மின் – போற்றுங்கள்
        • உறைதல் – தங்குதல்
        • கூற்று – எமன்
        • மாசில் – குற்றமற்ற
        • புக்கு – புகுந்து
        • இடர் – இன்னல்

        இலக்கணக்குறிப்பு:

        • தேவியும் ஆயமும் – எண்ணும்மை
        • அருந்தவர், நல்வினை – பண்புத்தொகை
        • வாழ்க – வியங்கோள் வினைமுற்று
        • செய்தவம், வீழ்கதிர் – வினைத்தொகை
        • பெரும்பேறு – பண்புத்தொகை
        • பல்லுயிர், நல்வினை, தீவினை, பேரின்பம் – பண்புத்தொகை
        • ஆய்தொடி நல்லாய் – இரண்டாம் வெறுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
        • கம்மத்தீ – உருவகம்
        • பொல்லக்காட்சி – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

        பிரித்தறிதல்:

        • எழுந்தெதிர் = எழுந்து + எதிர்
        • அறிவுண்டாக = அறிவு + உண்டாக
        • இயல்பீராறு = இயல்பு + ஈறு + ஆறு
        • நன்மொழி = நன்மை + மொழி
        • எனக்கிடர் = எனக்கு + இடர்
        • நல்லறம் = நன்மை + அறம்

        ஆசிரியர் குறிப்பு:

        • மணிமேகலையின் ஆசிரியர் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்.
        • சாத்தன் என்பது இவரின் இயற் பெயர்.
        • இவர் திருச்சியில் உள்ள சீத்தலை என்னும் ஊரில் பிறந்து மதுரையில் வாழ்ந்தவர்.
        • தானிய வாணிகம் செய்தவர்.
        • தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்நூர்புலவன் என்று இளங்கோவடிகள் இவரை பாராட்டியுள்ளார்.
        • இவரது காலம் கி.பி.இரண்டாம் நூற்றாண்டு

        நூல் குறிப்பு:

        • இந்நூல் ஐம்பெரும்காபியங்க்களுள் ஒன்று.
        • சிலப்பதிகாரமும் மணிமேகலையும் ஒரே கதை தொடர்பு உடையவை.
        • இவை இரண்டும் “இரட்டை காப்பியங்கள்” என அழைக்கப்படும்.
        • இந்நூலுக்கு “மணிமேகலை துறவு” என்ற பெயரும் உண்டு.
        • இந்நூல் பௌத்த சமயச் சார்பு உடையது.
        • முப்பது காதைகள் கொண்டது. இருபத்தி நான்காவது காதை என்பது ஆபுத்திரன் நாடு அடைந்த காதை ஆகும்.

        உமர் கய்யாம் பாடல்கள்

        அன்பு சியின் அயலாரும்
        அண்டி நெருங்கும் உறவினராம்;
        அன்பு நீங்கின் உறவினரும்
        அகன்று நிற்கும் அயலரவாம்;
        தும்ப நோயை நீக்கிடுமேல்
        துவ்வா விடமும் அமுதமாகும்;
        துன்ப நோயை ஆக்கிடுமேல்
        தூய அமுதம் விடமாமே!

        சொற்பொருள்:

        • பகர்வது – சொல்வது
        • தெளிவீரே – தெளியுங்கள்
        • துவ்வா – நுகராத
        • அகன்று – விலகி
        • ஆழி – கடல்

        இலக்கணக்குறிப்பு:

        • நோக்கா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
        • நோக்கி – வினையெச்சம்
        • துவ்வா விடம் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

        ஆசிரியர் குறிப்பு:

        • கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை கன்னியாகுமரி மாவட்டம் தேரூரில் பிறந்தவர்.
        • இவரது பெற்றோர் = சிவதாணு, ஆதிலட்சுமி அம்மையார்.
        • இவர் உமர்கய்யாம் பாடல்களை தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார்.
        • உமர்கய்யாம் பதினொன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரசீக கவிஞர்.
        • இவரின் முழுப்பெயர் கியதுதின் அபுல்பாத் உமர்கய்யாம் என்பது.

        இயற்றிய நூல்கள்:

        • மலரும் மாலையும், மருமக்கள் வழி மான்மியம், குழந்தைச் செல்வம், ஆசிய ஜோதி

        நூல் குறிப்பு:

        • இந்நூல் இம்மை மறுமை பற்றி ரூபாயத் என்னும் பெயரில் உமர்கய்யாம் எழுதிய செய்யுளின் மொழிபெயர்ப்பு.
        • கவிமணி இதனை மொழிபெயர்த்துள்ளார்.
        • இதில் 115 பாடல்கள் உள்ளன.
        • ரூபாயத் என்பது நான்கடிச் செய்யுள்.

        உணவே மருந்து

        • தமிழர் மருத்துவத்தில் உணவு என்பது அணைத்து நோய்களையும் தீர்க்கக்கூடிய சஞ்சீவி மருந்தாக கருதப்படுகிறது.
        • பசியின் கொடுமையை “பசிப்பிணி என்னும் பாவி” என மணிமேகலை கூறுகிறது.
        • “உண்டி கொடுதோர் உயிர் கொடுத்தோரே” என மணிமேகலையும், புறநானூறும் கூறுகின்றன.
        • திருக்குறளில் மருந்து என்னும் அதிகாரத்தில் உணவே மருந்தாகும் தன்மையை திருவள்ளுவர் தெளிவாக கூறியுள்ளார்.
        • நம் நாட்டு சமையலுக்கு புழுங்கல் அரிசியே சிறந்தது.
        • நோய்க்கு முதல் காரணம் உப்பு.
        • “மீதூண் விரும்பேல்” என்றவர் ஔவை.

        நோய் நீக்கும் மூலிகைகள்

        துளசி:

        • துளசி செடியின் இலைகளை நீரில்இட்டு கொதிக்க செய்து ஆவி பிடித்தால் மார்புசளி, நீர்க்கோவை, தலைவலி நீங்கும்.
        • துளசி இலைகள் பூசினால் படை நீங்கும்.

        கீழ்க்காய்நெல்லி:

        • இதனை கீழாநெல்லி, கீழ்வாய்நெல்லி என்றும் கூறுவர்.
        • மஞ்சட் காமாலைக்கு கைகண்ட மருந்தாக பயன்படுகிறது.
        • இதனை கற்கண்டுடன் சேர்த்து உண்பதால் சிறுநீர்த் தொடர்பான நோய்கள் நீங்கும்.

        தூதுவளை:

        • இது செடி வகை இல்லை, இது கொடி வகையை சேர்ந்தது.
        • இக்கொடியில் சிறு முள்கள் உண்டு.
        • இதனை தூதுளை, சிங்கவல்லி என்றும் அழைப்பர்.
        • வள்ளலார் இதனை “ஞானப்பச்சிலை” என்று கூறுவார்.
        • இது குறள் வளத்தை மேம்படுத்தும், வாழ்நாளை நீடிக்கும்.

        குப்பைமேனி:

        • குப்பைமேனி, நச்சுக்கடிகளுக்கு நல்ல மருந்து.
        • இதனை “மேனி துலங்க குப்பைமேனி” என்று சிறபிப்பர்.

        கற்றாழை:

        • இது வறண்ட நிலத்தாவரம்.
        • இதனை “குமரி” என்பர்.
        • பெண்களின் கருப்பை சார்ந்த நோய்களை நீக்குவதால் “குமரி கண்ட நோய்க்கு குமரி கொடு” என்பர்.

        முருங்கை:

        • இதனை அரைத்து தடவினால் எலும்பு முறிவு விரைவில் கூடும்.
        • இரும்பு சத்து நிறைந்துள்ளதால் கூந்தலை வளரச் செய்வதில் பெரும் பங்கு உண்டு.

        கறிவேப்பிலலை:

        • இது சீதபேதி, நச்சு போன்றவற்றை சரிசெய்யும்.

        கரிசலாங்கண்ணி:

        • இரத்தசோகை, செரிமான கோளாறு, மஞ்சள் காமாலைக்கு சிறந்த மருந்து.
        • கண் பார்வையை தெளிவாக்கும்.
        • நரையை போக்கும்.
        • இதனை “கரிசாலை, கையாந்தகரை, பிருங்கராசம், தேகராசம்” என்று கூறுவர்.

        பிற மூலிகைகள்:

        • மணித்தக்காளிக் கீரை வாய்ப்புண்னையும், குடற்புண்ணையும் குணபடுத்தும்.
        • அகத்திக்கீரை பல் சார்ந்த நோய்களை குணமாக்கும்.
        • வல்லாரை நினைவாற்றலை பெருக்க உதவும்.

        திருக்குறள்

        சொற்பொருள்:

        • கடன் – கடமை
        • நாண் – நாணம்
        • ஒப்பரவு – உதவுதல்
        • வாய்மை – உண்மை
        • சால்பு – சான்றாண்மை
        • ஆற்றல் – வலிமை
        • மாற்றார் – பகைவர்
        • கட்டளை – உரைகல்
        • இனிய – நன்மை
        • திண்மை – வலிமை
        • ஆழி – கடல்
        • இருநிலம் – பெரிய நிலம்
        • பொறை – சுமை

        இலக்கணக்குறிப்பு:

        • என்ப – பலர்பால் வினைமுற்று
        • மேற்கொள்பவர் – வினையாலணையும் பெயர்
        • உள்ளததூஉம் – இன்னிசையளபடை
        • அன்று – குறிப்பு வினைமுற்று
        • கண்ணோட்டம் – தொழிற்பெயர்
        • கொல்லா, சொல்லா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
        • பணிதல் – தொழிற்பெயர்
        • ஆற்றுவார், மாற்றார் – வினையாலணையும் பெயர்
        • இன்மை, திண்மை – பண்புப்பெயர்
        • சான்றவர் – வினையாலணையும் பெயர்
        • இருநிலம் – உரிச்சொற்றொடர்

        இன்பம்

        கற்றவர் முன்தாம் கற்ற
        கல்வியைக் கூறல் இன்பம்
        வெற்றியை வாழ்வில் சேர்க்கும்
        வினைபல புரிதல் இன்பம்
        சிற்றினக் கயவ ரோடு
        சேராது வாழ்தல் இன்பம்
        பெற்றதை வழங்கி வாழும்
        பெருங்குணம் பெறுதல் இன்பம்.
        - சுரதா

        சொற்பொருள்:

        • இசைபட – புகழுடன்
        • கயவர் – கீழ்க்குணமுடையோர்

        இலக்கணக்குறிப்பு:

        • தளிர்க்கை – உவமைத்தொகை
        • பழந்தமிழ், சிற்றினம், பெருங்குணம் – பண்புத்தொகை
        • வழங்கி – வினையெச்சம்
        • கற்றல், பெறுதல், வாழ்தல் – தொழிற்பெயர்

        ஆசிரியர் குறிப்பு:

        • உவமை கவிஞர் சுரதா அவர்களின் இயற்பெயர் இராசகோபாலன்.
        • இவர் நாகை மாவட்டம் பழையனூரில் பிறந்தார்.
        • பெற்றோர் = திருவேங்கடம், செண்பகம்.
        • பாவேந்தர் பாரதிதாசன் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரை சுப்புரத்தினதாசன் என மாற்றிக்கொண்டார். அதன் சுருக்கமே சுரதா.

        படைப்புகள்:

        • தேன்மழை, துறைமுகம், சுவரும் சுண்ணாம்பும், சுரதாவின் கவிதைகள்

        சிறப்பு;

        • இவரின் தேன்மழை நூல் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கானப் பரிசை பெற்றுள்ளது.
        • இவர் கலைமாமணி பட்டத்தையும், தமிழக அரசின் பாவேந்தர் விருதையும் பெற்றுள்ளார்.

          பெருந்தலைவர் காமராஜர்

          புகழுரைகள்:

          • தன்னலமற்ற தலைவர்
          • கர்மவீரர்
          • கல்விக்கண் திறந்த முதல்வர்
          • ஏழைப்பங்காளர்

          இளமைப் பருவம்:

          • விருதுநகர் மாவட்டத்தில் குமாரசாமி, சிவகாமி இனையார்க்கு மகனாய் 19௦03ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 15ஆம் நாள் பிறந்தார்.
          • காமராசரின் தாத்தா நாட்டாண்மைக்காரர்.
          • அவருக்கு பன்னிரண்டு வயதிலேயே கல்வியில் நட்டமில்லாமல் போயிற்று.

          அரசியலில் ஈடுபாடு:

          • காமராசர் நாள்தோறும் செய்தித்தாள்களை படித்தும், அரசியல் கூட்டங்களில் தலைவர்களின் சொற்பொழிவுகளைக் கேட்டும் தம்முடைய அரசியல் அறிவை வளர்த்துக் கொண்டார்.
          • “மெய்கண்டான் புத்தகசாலை” என்ற நூல் நிலையத்திற்கு சென்று அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து திறமையாக பேசவும் கற்று கொண்டார்.
          • இளம் வயதிலேய காங்கிரசில் சேர்ந்தார்.
          • பதினோரு ஆண்டுகள் சிறையில் இருந்தார்.
          • அவரது தன்னலமற்ற உழைப்பைக் கண்டு தலைவர் சத்தியமூர்த்தி அவரை கட்சியின் செயலாளர் ஆக நியமித்தார்.
          • காமராசரின் அரசியல் குரு சத்தியமூர்த்தி.

          தலைவர்களை உருவாக்குபவர்:

          • 1939ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக் காங்கிரசுக் கட்சியின் தலைவர் ஆனார்.
          • 12 ஆண்டுகள் அப்பதவியில் இருந்தார்.
          • பலர் ஆட்சி அமைக்க இவர் காரணமாக இருந்ததால் இவர் “தலைவர்களை உருவாக்குபவர்” எனப் போற்றப்பட்டார்.

          முதலமைச்சர் காமராசர்:

          • 1954இல் இராஜாஜி முதலமைச்சர் பதவியில் இருந்து விலகியதும் காமராசர் அப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
          • 1963இல் தாமாக பதவி விலகும்வரை அப்பதவியில் திறம்படச் செயலாற்றினார்.
          • காமராசர் ஆட்சிக் காலத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் தொழில்துறை அமைச்சராகவும், சி.சுப்பிரமணியம் கல்விஅமைச்சராகவும் பணியாற்றினார்.

          தொழில் முன்னேற்றம்:

          • காமராசர் முதலமைச்சராக இருந்த போது இரண்டாவது, மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
          • கிண்டி, அம்பத்தூர், ராணிப்பேட்டை முதலிய இடங்களில் பெரிய தொழிற்பேட்டைகளும், மாவட்டந்தோறும் சிறிய தொழிற்பேட்டைகளும் அமைக்கப்பட்டன.
          • இவர் காலத்தில் கூட்டுறவு இயக்கம் சிறப்பாக நடைபெற்றது.
          • நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத் தொழிற்சாலை, இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை, கிண்டி அறுவைசிகிச்சைக் கருவித் தொழிற்சாலை, சர்க்கரை ஆலை, ஆவடி இரயில்வே வாகனத் தொழிற்சாலை, மேட்டூர் காகிதத் தொழிற்சாலை முதலியன இவரது காலத்தில் தொடங்கப்பெற்றன.

          கல்விப் புரட்சி:

          • காமராசர் காலத்தில் கட்டாயக் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டது.
          • “தெருதோறும் தொடக்கப்பள்ளி, ஊர் தோறும் உயர்நிலைப்பள்ளி” என்பதே அவரது நோக்கமாக அமைந்தது.
          • பள்ளி வேலைநாட்களை 180இல் இருந்து 200ஆக உயாத்தினார்.
          • தொடக்கப்பள்ளியில் மதிய உணவுத் திட்டம் இவரால் தொடங்கப்பட்டது.
          • ஈராண்டுகளில் பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் 133 நடத்தி, பல கோடி ரூபாய் மதிப்புள்ள நன்கொடைகள் பெற்று பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை பொருட்கள் வாங்கப்பட்டன.
          • மருத்துவக்கல்லூரி முதலான தொழிற்கல்லூரிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு வட்டியில்லாக் கடனளிக்க ஏற்பாடு செய்தார்.

          சமுக முன்னேற்ற திட்டங்கள்:

          • தஞ்சாவூர்ப் பண்ணையாள் பாதுகாப்புச் சட்டத்தை திருத்தி, சாகுபடி செய்யும் தொழிலாளிக்கு அறுபது விழுக்காடு பங்கு கிடைக்க வழிவகை செய்தார்.
          • நிலசீர்திருத்தம் இவரால் கொண்டுவரப்பட்டது.
          • நில உச்ச வரம்பு முப்பது ஏக்கர் எனக் குறைக்கப்பட்டது.
          • மக்கள் நலத்திட்டங்களில் ஓய்வூதியம் முக்கியமானது.

          காமராசர் திட்டம்:

          • 1962ஆம் ஆண்டு சீனப்படையெடுப்புக்கு பின், காங்கிரசுக் கட்சியின் செல்வாக்கு சரியத் தொடங்கியது.
          • கட்சியை வலுப்படுத்த மூத்த தலைவர்கள் அமைச்சர் பதவியில் இருந்து விலகி கட்சிப்பணியில் ஈடுபட வேண்டும் எனக் காமராசர் திட்டம் ஒன்றை கொண்டுவந்தார். அத்திட்டமே “காமராசர் திட்டம்” ஆகும்.

          அகில இந்திய காங்கிரசுத் தலைவர்:

          • புவனேஸ்வர் நகரில் 1963ஆம் ஆண்டில் கூடிய காங்கிரசு மாநாட்டில் காமராசர் அகில இந்தியக் காங்கிரசுத் தலைவராகப் பதவி ஏற்றார்.
          • லால் பகதூர் சாஸ்த்ரி, இந்திரா காந்தி போன்றோரை பிரதமர் பதவியில் அமர வைத்தார்.

          காமராசருக்கு செய்த சிறப்புகள்:

          • காமராசரக்கு நடுவண் அரசு “பாரதரத்னா விருது” அளித்துச் சிறப்பித்து, நாடாளுமன்றத்தில் இவருக்கு ஆளுயர வெண்கலச்சிலையை நிறுவியது.
          • தமிழக அரசு இவரின் பெயரால் “மதுரை காமராசர் பல்கலைக்கழகம்” எனப் பெயர் சூட்டியது.
          • கன்னியாகுமரியில் காமராசர் மணி மண்டபம் கட்டப்பட்டது.
          • சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் சிலை அமைத்து சிறப்பித்தது.
          • காமராசர் வாழ்ந்த சென்னை இல்லம் நினைவு இல்லமாக ஆக்கப்பட்டது.
          • அவரின் விருதுநகர் இல்லமும் அரசுடைமை ஆக்கி நினைவு இல்லமாக்கப்பட்டது.
          • தேனாம்பேட்டையில் காமராசர் அரங்கம் நிறுவப்பட்டது.
          • காமராசர் பிறந்த நாளான சூலை 15ஆம் நாள் ஆண்டுதோறும் “கல்வி வளர்ச்சி நாளாக” தமிழக அரசு அறிவித்துள்ளது.
          • இவரை “கல்விக் கண் திறந்தவர்” எனத் தமிழுலகம் போற்றுகிறது.

          மறைவு:

          • 1972ஆம் ஆண்டு காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் இரண்டாம் நாள் இவ்வுலக வாழ்வி நீத்தார்.

          நாட்டுப்புறப்பாடல்

          பாடலின் பொருள்:

          • மீனவர்களாகிய எங்களுக்கு விடிவெள்ளி தான் விளக்கு.
          • பரந்த கடலே பள்ளிக்கூடம்.
          • கடலே எங்களின் உற்ற தோழன்.
          • மீன்பிடி வலையே படிக்கும் நூல்.
          • கட்டுமரமே வாழும் வீடு.
          • காயும் கதிரே வீட்டுக்கூரை.
          • மேகமே குடை.
          • பிடிக்கும் மீன்களே பொருள்கள்.
          • இடியும் மின்னலும் பார்க்கும் கூத்து.
          • வெண்மணலே படுத்துறங்கும் பஞ்சு மெத்தை.
          • நிலவே முகம் பார்க்கும் கண்ணாடி.
          • மூச்சடக்கி நீந்துதலே வழிபாடு.
          • வணங்கும் தலைவர் பெருவானம்.

          சொற்பொருள்:

          • விரிகடல் – பரந்த கடல்
          • காயும் ரவிசுடர் – சுட்டெரிக்கும் சூரியக் கதிர்
          • யோகம் – தியானம்

          பெண்மை

          சொற்பொருள்:

          • உறுதி – உளஉறுதி
          • சொருபம் – வடிவம்
          • தரணி – உலகம்
          • தாரம் – மனைவி

          இலக்கணக்குறிப்பு:

          • அன்பும் ஆர்வமும் அடக்கமும் – எண்ணும்மை
          • இன்ப சொருபம் – உருவகம்

          ஆசிரியர் குறிப்பு:

          • கவிஞர் வெ. இராமலிங்கனார், நாமக்கல் மாவட்டம் மோகனூரில் பிறந்தார்.
          • பெற்றோர் = வெங்கடராமன்-அம்மணி அம்மாள்
          • தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர்.
          • இவருக்கு நடுவண் அரசு “பத்ம பூஷன்” விருது வழங்கிச் சிறப்பித்தது.
          • இவரின் காலம் கி.பி.1888 முதல் 1972 வரை.

          தில்லையாடி வள்ளியம்மை

          பெற்றோரும் பிறப்பும்:

          • வள்ளியம்மை தென்னாப்ரிக்காவில் உள்ள ஜோகன்ஸ்பர்க் என்னும் நகரில் பிறந்தார்.
          • இவரின் பெற்றோர் = முனுசாமி, மங்களம்.
          • இவரின் தாயார் பிறந்த ஊரான தில்லையாடியின் பெயரைக் கொண்டு தில்லையாடி வள்ளியம்மை என்று அழைக்கப்பட்டார்.

          அறப்போர்:

          • தென்னாப்ரிக்க நாட்டில் திருமணப்பதிவுச் சட்டப்படியும், கிறித்துவ மதச் சட்டப்படியும் நடைபெறாத திருமணங்கள் செல்லாது என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் 1913ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து காந்தியடிகள் தலைமையில் இந்தியர்கள் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
          • போராட்டத்தின் போது காந்தியடிகள் நிகழ்த்திய வீரம் செறிந்த உரை, சிறுமி வள்ளியம்மையின் மனதில் ஆழமாகப் பதிந்தது.
          • 1913ஆம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் 23ஆம் நாள் வால்க்ஸ்ரஸ்ட் என்னும் இடத்தில நடைபெற்ற அறப்போரில் வள்ளியம்மை கைது செய்யப்பட்டார்.
          • அவருக்கு தென்னாப்பிரிக்க நீதிமன்றம் 3 மாதம் கடுங்காவல் தண்டனை அளித்தது.

          சிறைவாழ்க்கை:

          • சிறையில் வள்ளியம்மைக்கு கல்லும் மண்ணும் கலந்த உணவே தரப்பட்டது.
          • அவரின் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
          • சிறையில் உயிருக்கு போராடிய நிலையில் விடுதலை செய்யப்பட்டார்.

          நாட்டுப்பற்று:

          • விடுதலை செய்யப்பட்ட வள்ளியம்மை தமது வீட்டில் படுத்த படுக்கையாக இருந்தார்.
          • இதனை அறிந்த காந்தியடிகள் அவரை காண வந்தார்.
          • “சிறைத்தண்டனைக்காக நீ வருந்துகிறாயா?” என்று காந்தியடிகள் அவரிடம் கேட்டார்.
          • அதற்கு வள்ளியம்மை, “இல்லை இல்லை மீண்டும் சிறை செல்லத் தயார்” என்று கூறினார்.
          • அத்துடன் இந்தியர்களின் நலனுக்காக எத்தகு இன்னல்களையும் ஏற்பேன் என்றார்.
          • உடல் நலம் குன்றிய வள்ளியம்மை 1913ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22ஆம் நாளன்று தமது 16ஆம் வயதில் மரணம் அடைந்தார்.

          காந்தியடிகளின் கருத்து:

          • “என்னுடைய சகோதரியின் மரணத்தை விடவும் வள்ளியம்மையின் மரணம் எனக்குப் பேரிடியாக இருந்தது” என்று காந்தியடிகள் மனம் வருந்தினார்.
          • “மாதர்களுக்கு அணிகலன்களாகத் திகழும் துன்பத்தைத் தாங்கும் மனவலிமை, தன்மானம், நல்லொழுக்கம் ஆகியவற்றிற்கு இலக்கணமாகத் திகழ்ந்தார். அவருடைய தியாகம் வீண் போகாது. சத்தியத்திற்காக உயிர் நீத்த அவருடைய உருவம் என் கண்முன் நிற்கிறது. நம்பிக்கை தான் அவரது ஆயுதம்” என்று வள்ளியம்மை குறித்து “இந்தியன் ஒப்பீனியன்” இதழில் காந்தியடிகள் எழுதியுள்ளார்.
          • தென்னாப்பிரிக்க வரலாற்றில் வள்ளியம்மையின் பெயர் என்றும் நிலைத்து நிற்கும் என்று காந்தியடிகள் “தென்னாப்பிரிக்கச் சத்தியாகிரகம்” என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

          அரசு செய்த சிறப்புகள்:

          • தில்லையாடியில் தமிழக அரசு அவரது சிலையை நிறுவி உள்ளது.
          • கோ-ஆப்-டெக்ஸ் என்றழைக்கப்படும் தமிழ்நாடு நெசவாளர் கூட்டுறவுச் சங்கம் சென்னையில் உள்ள தனது 600வது விற்பனை மையத்திற்கு “தில்லையாடி வள்ளியம்மை மாளிகை” என்று பெயர் சூட்டிப் பெருமைபடுத்தி உள்ளது.
          • சென்னை, வண்டலூர் உயிரியல் பூங்காவில் பிறந்த பென்புலிக்குட்டிக்கு தமிழக முதல்வர், தில்லையாடி வள்ளியம்மை நினைவாக “வள்ளி” எனப் பெயரிட்டார்.

          இராணி மங்கம்மாள்

          இராணி மங்கம்மாள்:

          • மதுரையை ஆண்டு வந்த சொக்கநாத நாயக்கரின் மனைவி இராணி மங்கம்மாள்.
          • இராணி மங்கம்மாளின் கணவர் இறந்த போது அவர் மகன் அரங்க கிருஷ்ணமுத்துவீரப்பன் இளம் வயதினனாக இருந்தான். அவனுக்கு துணையாக இருக்க வேண்டும் என்னும் கடமை உணர்வினால் இராணி மங்கம்மாள் உடன்கட்டை ஏறவில்லை.

          மகனுக்கு அரசும் அறிவுரையும்:

          • மங்கம்மாள், தனது மகன் அரங்க கிருட்டினமுத்துவீரப்பனுக்குத் திருமணம் செய்வித்த பின்னர் முடிசூட்டினார்.
          • “அரசாட்சியை அடக்கத்தோடும் தந்திரத்தோடும் நாம் நோக்கவேண்டும்; முன்கோபமும் அதன் விளைவும் அரசியலில் ஒருபோதும் வெற்றியைத் தராது. பகைவரை எதிர்கொள்ள எப்போதும் ஆய்த நிலையில் இருப்பதோடு மிகுந்த பொறுமையுடனும் செயல்பட வேண்டும்” என அறிவுரை கூறினார்.
          • முத்துவீரப்பன், “நேர்மையை காட்டிலும் உயர்ந்த தெய்வம் இல்லை” என்ற கொள்கையுடன் ஆட்சி புரிந்தான்.

          மங்கம்மாள் ஆட்சிப் பொறுப்பேற்றல்:

          • முத்துவீரப்பன் இறந்த சில நாட்களில் அவன் மனைவி சின்னமுத்தம்மாள் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்து, சில நாட்களில் அவரும் இறந்தார்.
          • கி.பி.1688ஆம் ஆண்டு பெயரன் விசயரங்கச் சொக்கநாதன் பெயரளவில் அரியணை ஏற்றப்பட்டான்.
          • பாட்டி மங்கம்மாள் காப்பாட்சியாளராக ஆட்சிப் பொறுப்பினை ஏற்றார்.

          முகலாயர்களுக்கு பணிதல்:

          • முகலாய பேரரசர் அவுரங்கசீப் தனது தக்கான நடவடிக்கை மேற்கொண்டிருந்த நேரம் மங்கம்மாள் பெரும் செல்வம் அவர்களுக்கு கொடுத்து தனது ஆட்சியை காப்ற்றிக்கொண்டார்.
          • முகலாயரின் உதவியோடு மராத்தியர்களிடம் இழந்த சில பகுதிகளை மீட்டார்.

          திருவிதாங்கூர் போர்:

          • தளபதி நரசயப்பர் தலைமையில் மங்கம்மாள் அனுப்பிய படை திருவிதாங்கூர் மன்னர் இரவிவர்மாவை தோற்கடித்து வெற்றி பெற்றனர்.

          தஞ்சைப் போர்:

          • தளபதி நரசய்ப்பர் தலைமையில் சென்ற படை தஞ்சை மராத்திய மன்னர் ஷாஜியை தோற்கடித்து, தஞ்சை அமைச்சர் பாலாஜி பண்டிதரிடம்  இருந்து பெரும் பொருள்களை பெற்றுவந்தது.

          மைசூர் போர்:

          • மைசூர் மன்னர் சிக்கதேவராயன் காவிரியின் குறுக்கே அணைகட்டிய பொது, அவரை மங்கம்மாள் எதிர்த்தார்.
          • மங்கம்மாளுக்கு துணையாக தஞ்சை மராட்டியர் உதவினர்.
          • அச்சமயம் பெரும் மழைப் பொழிவால் அணைகள் உடைந்தன. சிக்கல் தற்காலிகமாக முடிவடைந்தது.

          சமயக் கொள்கை:

          • ஒவ்வொருவரும் தாம் சிறந்ததாக கருதும் சமயத்தைக் கைக்கொண்டு வாழவிடுவதே தருமம் என்ற கொள்கையை மங்கம்மாள் பின்பற்றினார்.
          • சமயத் தொடர்பாக சிறை வைக்கப்பட்ட மெல்லோ பாதிரியாரை விடுதலை செய்து, போசேத் என்ற குருவைத் தம் அரசவையில் வரவேற்று விருந்தோம்பினார்.

          அறச்செயல்கள்:

          • மதுரையில் பெரிய அன்னச் சத்திரம் கட்டினார்.
          • இவர் பல சாலைகளை அமைத்தார். கன்னியாகுமரிக்கும் மதுரைக்கும் இடையே அமைந்த நெடுச்சாலை, “மங்கம்மாள் சாலை” எனப்படுகிறது.
          • ஆணித்திங்களில் “ஊஞ்சல் திருவிழா” நடத்தினார்.

          திருவிளையாடல்புராணம்

          சொற்பொருள்:

          • வையை நாடவன் – பாண்டியன்
          • உய்ய – பிழைக்க
          • இறந்து – பணிந்து
          • தென்னவன் குலதெய்வம் – சொக்கநாதன் (அ) சுந்தரபாண்டியன்
          • இறைஞ்சி – பணிந்து
          • சிரம் – தலை
          • மீனவன் – மீன் கொடியை உடைய பாண்டியன்
          • விபுதர் – புலவர்
          • தூங்கிய – தொங்கிய
          • பொற்கிழி – பொன்முடிப்பு
          • நம்பி – தருமி
          • பைபுள் – வருத்தம்
          • பனவன் – அந்தணன்
          • கண்டம் – கழுத்து
          • வழுவு – குற்றம்
          • சீரணி – புகழ் வாய்ந்த
          • வேணி – செஞ்சடை
          • ஓரான் – உணரான்
          • குழல் – கூந்தல்
          • ஞானப்பூங்கோதை – உமையம்மை
          • கற்றைவார் சடையன் – சிவபெருமான்
          • உம்பரார் பத்தி – இந்திரன்
          • நுதல் – நெற்றி
          • ஆய்ந்த நாவலன் – நக்கீரன்
          • காய்ந்த நாவலன் – இறைவன்

          இலக்கணக்குறிப்பு:

          • உரைத்து, இரந்து – வினையெச்சம்
          • சொல்லி, இறைஞ்சி – வினையெச்சம்
          • மகிழ்ச்சி – தொழிற்பெயர்
          • தூங்கிய, ஆய்ந்த – பெயரெச்சம்
          • நேர்ந்து – வினையெச்சம்
          • கொண்டு, வைத்து – வினையெச்சம்
          • தேரா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
          • புனைமலர் – வினைத்தொகை
          • பற்றுவான், அஞ்சான் – வினையாலணையும் பெயர்
          • குற்றம் – தொழிற்பெயர்
          • தேய்ந்த, பாய்ந்த, ஆய்ந்த, காய்ந்த – பெயரெச்சம்
          • விழுந்து – வினையெச்சம்
          • வம்மை – பண்புத்தொகை

          ஆசிரியர் குறிப்பு;

          • பரஞ்சோதி முனிவர் நாகை மாவட்டம் திருமறைக்காடு(வேதாரண்யம்) என்னும் ஊரில் பிறந்தவர்.
          • தந்தை – மீனாட்சி சுந்தர தேசிகர்
          • மதுரை நகரத்தார் வேண்டுகோளுக்கு இணங்க, திருவிளையாடல்புராணம் இயற்றினார்.
          • இந்நூலை சிவபெருமான் திருக்கோவிலின் எதிரே உள்ள அறுகால் பீடத்தில் அரங்கேற்றினார்.
          • இவர், திருவிளையாடல் போற்றிக்கலிவெண்பா, மதுரைப் பதிற்றுபத்துதந்தாதி ஆகிய நூல்களையும், வேதாரண்ய புராணம் என்னும் மொழிபெயர்ப்பு நூலையும் இயற்றினார்.

          நூல் குறிப்பு:

          • திருவிளையாடல் புராணம், கந்தபுராணத்தின் ஒரு பகுதியான ஆலாசிய மான்மியத்தை அடிப்படையாக கொண்டது.
          • இந்நூல் மதுரைக்காண்டம்(18 படலம்), கூடற்காண்டம்(30 படலம்), திருவாலவாய்க்காண்டம்(16 படலம்) என்னும் முப்பெரும் பகுதிகளை உடையது.
          • இந்நூலின் 3363 விருதப்பாக்கள் உள்ளன.
          • இந்நூலில் இறைவனின் 64 திருவிளையாடல்கள் கூறப்பட்டுள்ளன.
          • ந.மு.வேங்கடசாமி இந்நூலுக்கு உரை எழுதியுள்ளார்.

          வஞ்சகமாய் நெஞ்சமோடு மோதல்

          இலக்கணக்குறிப்பு:

          • மனக்குரங்கு – உருவகம்
          • நாடுநகர் – உம்மைத்தொகை
          • செம்பொன் – பண்புத்தொகை
          • மாடுமஆடும் – எண்ணும்மை

          ஆசிரியர் குறிப்பு:

          • பாஸ்கரதாஸ் மதுரை நகரில் பிறந்தவர்.
          • இவர் இசைப்புலமையுடன் நாடகப்புலமையும் பெற்றவர்.
          • இவரின் பாடல்களைக் கேட்ட காந்தியடிகள் இவரை பெரிதும் பாராட்டினார்.

          ஓய்வும் பயனும்

          அறிவியல் ஆய்வு செய்வாய் – நீ
          அன்றாடச் செய்தி படிப்பாய்!
          செறிவுறும் உன்றன் அறிவு – உளச்
          செழுமையும் வலிவும் பெறுவாய்!

          மருத்துவ நூல்கள் கற்பை – உடன்
          மனநூலும் தேர்ந்து கற்பாய்!
          திருத்தமெய்ந் நூல்கள் அறிவாய் – வருந்
          தீமைடயும் பொய்யும் களைவாய்!
          - பெருஞ்சித்திரனார்

          ஆசிரியர் குறிப்பு:

          • பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் இயற்பெயர் துரை.மாணிக்கம்
          • இவர் சேலம் மாவட்டம் சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர்.
          • பெற்றோர் = துரைசாமி, குஞ்சம்மாள்.
          • 10.03.1933 அன்று பிறந்த இவர், 11.06.1995ஆம் நாள் மறைந்தார்.
          • கனிச்சாறு, ஐயை, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, பள்ளிப்பறவைகள், நூறாசிரியம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.
          • தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய இதழ்கள் மூலம் தமிழ் உணர்வை ஊட்டினார்.

          எதிர்காலம் யாருக்கு?

          ஆசிரியர் குறிப்பு:

          • மீரா என்னும் பெயர் மீ.இராசேந்திரன் என்பதன் சுருக்கமே.
          • இவர் சிவகங்கையில் பிறந்தார்.
          • தாம் படித்த சிவகங்கை கல்லூரியில் பேராசிரியராகவும், முதல்வராகவும் பணியாற்றினார்.
          • மூன்றும்ஆறும், கோடையும் வசந்தமும், ஊசிகள், கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள், குக்கூ ஆகிய கவிதை நூல்களையும், வா இந்தப்பக்கம், மீரா கட்டுரைகள் ஆகிய கட்டுரை நூல்களையும் படைத்துள்ளார்.
          • தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு, பாவேந்தர் விருது, சிற்பி இலக்கிய விருது, தமிழ் சான்றோர் பேரவை விருது போன்ற பரிசுகளை வென்றுள்ளார்.

2 comments:

  1. அருமையான தகவல்! படிக்கும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள தாக அமையும் இதுபோன்ற பதிவுகளுக்கு மிக்க நன்றி !

    ReplyDelete