Monday, 16 March 2015

பத்தாம் வகுப்பு சமசீர்கல்வி தமிழ் வினா விடைகள்...

கடவுள் வாழ்த்து


மெய்தான் அரும்பி விதிர்விதிர்த் துன்விரை யார்கழற்கென்
கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பிஉள்ளம்
பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய போற்றிஎன்னும்
கைதான் நெகிழ விடேன்உடை யாய்என்னைக் கண்டுகொள்ளே
- மாணிக்கவாசகர்

சொற்பொருள்:

  • மெய் –உடல்
  • விதிவிதிர்த்து – உடல் சிலிர்த்து
  • விரை – மணம்
  • நெகிழ – தளர
  • ததும்பி – பெருகி
  • கழல் – ஆண்கள் காலில் அணியும் அணிகலன்
  • சயசய – வெல்க வெல்க

இலக்கணக்குறிப்பு:

  • விடேன் – தன்மை ஒருமை வினைமுற்று

ஆசிரியர் குறிப்பு:

  • சைவ சமயக்குரவர் நால்வரில் ஒருவர்.
  • திருவாதவூரில் பிறந்தவர். இவ்வூர் மதுரைக்கு அருகில் உள்ளது.
  • இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராக பணிப் புரிந்தார்.
  • திருப்பெருந்துறை இறைவனால் ஆட்கொள்ளப் பெற்றவர்.
  • இவரை “அலுத்து அடியடைந்த அன்பர்” என்பர்.
  • திருவாசகமும் திருகொவையாரும் இவர் அருளியவை.
  • இவர் எழுப்பிய கோவில், தற்போது “ஆவுடையார் கோவில்” என வழங்கப்படும் திருப்பெருந்துறையில் (புதுகோட்டை மாவட்டம்) உள்ளது.

நூல் குறிப்பு:

  • சைவத் திருமுறைகளில் எட்டாவது திருமுறை இவரின் திருவாசகமும் திருகோவையாரும் ஆகும்.
  • திருவாசகத்தில் 658 பாடல்கள் உள்ளன.
  • திருவாசகத்தை சிறப்பிக்க, “திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்” என்னும் தொடர் வழங்கலாயிற்று.
  • திருவாசகத்தை ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
  • சதகம் என்பது நூறு பாடல்களைக் கொண்ட நூலைக் குறிக்கும்.

ஜி.யு.போப்:

  • உலக வரலாற்றிலேயே மேதையான மாணிக்கவாசகரை விடப் புலமை, உழைப்பு, துன்பத்தைப் பொறுத்தல், இடையறா நிலையான பக்தி ஆகியவற்றுடன் நம் மனதை கவர்கின்றவர் யாரும் இல்லை” என்கிறார் ஜி.யு.போப்.

திருக்குறள்

சொற்பொருள்:

  • விழுப்பம் – சிறப்பு
  • ஓம்பப்படும் – காத்தல் வேண்டும்
  • பரிந்து – விரும்பி
  • தேரினும் – ஆராய்ந்து பார்த்தாலும்
  • குடிமை – உயர்குடி
  • இழுக்கம் – ஒழுக்கம் இல்லாதவர்
  • அழுக்காறு – பொறாமை
  • ஆகம் – செல்வம்
  • ஏதம் – குற்றம்
  • எய்துவர் – அடைவர்
  • இடும்பை – துன்பம்
  • வித்து – விதை
  • ஒல்லாவே – இயலாவே
  • ஓட்ட – பொருந்த
  • ஒழுகல் – நடத்தல்
  • கூகை – கோட்டான்
  • இகல் – பகை
  • திரு – செல்வம்
  • தீராமை – நீங்காமை
  • பொருதகர் – ஆட்டுக்கடா
  • சேருவர் – பகைவர்
  • சுமக்க – பனிக
  • கிழக்காந்தலை – தலைகீழ்(மாற்றம்)
  • எய்தற்கு – கிடைத்தற்கு
  • கூம்பும் – வாய்ப்பற்ற

இலக்கணக்குறிப்பு:

  • ஒழுக்கம் – தொழிற்பெயர்
  • காக்க – வியங்கோள் வினைமுற்று
  • பரிந்து, தெரிந்து – வினையெச்சம்
  • இழிந்த பிறப்பு – பெயரெச்சம்
  • கொளல் – அல் ஈற்றுத் தொழிற்பெயர்
  • உடையான் – வினையாலணையும் பெயர்
  • உரவோர் – வினையாலணையும் பெயர்
  • எய்தாப் பழி – ஈறு கேட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  • நல்லொழுக்கம் – பண்புத்தொகை
  • சொலல் – தொழிற்பெயர்
  • அருவினை – பண்புத்தொகை
  • அறிந்து – வினையெச்சம்

ஆசிரியர் குறிப்பு:

  • திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர்.
  • தமிழுலகம் இவரை முதற்பாவலர், தெய்வப்புலவர், செந்நாப்போதார், பொய்யில்புலவர், பெருநாவலர் முதலிய பெயர்களால் போற்றுகின்றது.
  • பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் பொது நெறி காட்டியவர்.
  • இவரின் காலம் கி.மு.31ஆம் நூற்றாண்டு என்பர்.
  • தமிழக அரசு தைத் திங்கள் இரண்டாம் நாள் திருவள்ளுவர் நாளாக அறிவித்து கொண்டாடுகிறது.

நூல் குறிப்பு:

  • திரு + குறள் = திருக்குறள்
  • உலகப் பொதுமறை எனப் போற்றப்படுகிறது.
  • இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • அறம், பொருள், இன்பம் என்னும் முப்பாலாகவும், ஒன்பது இயல்களையும், 133 அதிகாரங்களையும், 1330 குறட்பாக்களையும் கொண்டது.
  • “வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகம்” என்றும், “இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே” என்றும் பாவேந்தர் போற்றுகின்றார்.
  • மலையத்துவாசன் மகன் ஞானப்பிரகாசம் 1812 இல் திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்து தஞ்சையில் வெளியிட்டார்.

ஏலாதி

சொற்பொருள்:

  • வணங்கி – பணிந்து
  • மாண்டார் – மாண்புடைய சான்றோர்
  • நுணங்கிய நூல் – நுண்ணறிவு நூல்கள்
  • நோக்கி – ஆராய்ந்து

இலக்கணக்குறிப்பு:

  • நூல்நோக்கி – இரண்டாம் வேற்றுமைத்தொகை
  • பலியில்லா மன்னன் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

பிரித்தறிதல்:

  • வழியொழுகி = வழி + ஒழுகி

ஆசிரியர் குறிப்பு:

  • ஏலாதியை இயற்றியவர் கணிமேதாவியார்.
  • இவர் சமண சமயத்தை சார்ந்தவர்.
  • காலம் கி.பி. 5ஆம் நூற்றாண்டு.
  • இவர், திணைமாலை நூற்றைம்பது என்னும் நூலையும் இயற்றியுள்ளார்.

நூல் குறிப்பு:

  • இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • இந்நூல் சிறப்புப் பாயிரம், தற்சிறப்புப் பாயிரம் உட்பட 81 வெண்பாக்களைக் கொண்டுள்ளது.
  • ஏலம், இலவங்கம், சிறுநாவற்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றால் ஆன மருந்துக்கு ஏலாதி எனப் பெயர்.

உயர்தனிச் செம்மொழி

பாவலரேறு பெருஞ்சித்திரனார்:

  • “வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம்
    வேரூன்றிய மால்முதல் உயிர்மொழி”
என்று தமிழின் பெருமையைப் போற்றுகிறார் பெருஞ்சித்திரனார்.

செம்மொழியின் இலக்கணம்:

  • “திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி தமிழ்ச் செம்மொழியாம்” என்று பரிதிமாற்கலைஞர் செம்மொழிக்கு இலக்கணம் வகுத்துள்ளார்.

பாவாணர் கூற்று:

  • “தொன்மை, முன்மை, நுண்மை, திண்மை, எண்மை, ஒண்மை, இனிமை, தனிமை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, மும்மை, செம்மை, இயன்மை, வியன்மை என வரும் 16 செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி; அதுவே நம்மொழி” என்பார் பாவாணர்.

முஸ்தபாவின் செம்மொழி தகுதிப்பாடுகள்:

  • தொன்மை, பிறமொழித் தாக்கமின்மை, தாய்மை, தனித்தன்மை, இலக்கிய வளமும் இலக்கியச் சிறப்பும், பொதுமைப் பண்பு, நடுவுநிலைமை, பண்பாடு கலை பட்டறிவு வெளிப்பாடு, உயர்சிந்தனை, கலை இலக்கியத் தனித்தன்மை வெளிபாடு, மொழிக் கோட்பாடு எனப் 11 தகுதிகளை அறிவியல் தமிழறிஞர் முஸ்தபா வரையறுத்துள்ளார்.

தொன்மை:

  • முதல் மாந்தன் தோன்றிய இடம் குமரிக் கண்டம். அவன் பேசிய மொழி தமிழ் மொழியே என்பர்.
  • உலகம் தோன்றிய போதே தோன்றிய தமிழை, அதன் தொன்மையைக் கருத்து “என்றுமுள தென்தமிழ்” என்பார் கம்பர்.

பிறமொழித் தாக்கமின்மை:

  • பிறமொழி சொற்களை நீக்கினால் பல மொழிகள் இயங்காது.
  • அனால், தமிழ் ஒன்றே பிறமொழிச் சொற்களை நீக்கினாலும் இனிதின் இயங்கவல்லது.

தாய்மை:

  • தமிழ் மொழியானது திராவிட மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளுவம் முதலிய மொழிகளுக்குத் தாய்மொழியாகத் திகழ்கிறது.
  • தமிழ் மொழி பிராகுயி முதலான வடபுல மொழிகளுக்கும் தாய்மொழியாக விளங்குகிறது என்பார் கால்டுவெல்.
  • 1090 மொழிகளுக்கு வேர்ச்சொல்லையும், 109 மொழிகளுக்கு உறவுப்பெயர்களையும் தந்துள்ளது தமிழ்.

தனித்தன்மை:

  • இயல், இசை, நாடகம் என்னும் முப்பெரும் பிரிவுகளைத் கொண்டது தமிழ்.
  • தமிழர் அகம், புரம் என வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்துள்ளனர்.
  • திருக்குறள், மாந்தர் இனத்திற்கே வாழ்வியல் நெறிமுறைகளை வகுத்துள்ளது.

இலக்கிய வளம், இலக்கணச் சிறப்பு:

  • உலக இலக்கியங்களுள் முதன்மை பெற்றுள்ளவை சங்க இலக்கியங்கள்.
  • இவற்றின் மொத்த அடிகள் = 26350.
  • அக்காலத்தே இவ்வளவிற்கு “விரிவாக உருவாக்கப்பட்ட இலக்கியங்கள், உலகின் வேறு எம்மொழியிலும் இல்லை” என்பது உலக இலக்கியங்களை ஆய்ந்த “கமில்சுவலபில்” என்னும் செக் நாடு மொழியியல் அறிஞரின் முடிபு.
  • மாக்சுமுல்லர் என்னும் மொழி நூலறிஞரோ தமிழே மிகவும் பண்பட்ட மொழியென்றும், அது தனக்கே உரிய இலக்கியச் செல்வங்களைப் பெற்றிருக்கும் மொழியென்றும் பாராட்டி இருக்கின்றார்.
  • சங்க இலக்கியங்கள் “மக்கள் இலக்கியங்கள்” எனப்படும்.
  • “தமிழ் இலக்கணம் படிக்கப் படிக்கச் விருப்பதை உண்டாக்குவது” என்பார் கெல்லட்.
  • நமக்கு கிடைத்த இலக்கண நூல்களுள் மிகவும் பழமையானது தொல்காப்பியம்.
  • தொல்காபிய்யம் மூன்று இலக்கணங்களை கூறியுள்ளார். அவரின் ஆசிரியர் அகத்தியர் ஐந்து இலக்கணங்களை கூறியுள்ளார்.

பொதுமைப் பண்பு:

  • தமிழர் தமக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்தவர்கள்.
  • செம்புலப் பெயல்நீர்போல அன்புள்ளம் கொண்டவர்கள்.

நடுவுநிலைமை:

  • சங்க இலக்கியங்கள் இனம், மொழி, மதம் கடந்தவை.
  • இயற்கையோடு இணைந்தவை.
  • மக்கள் சிறப்புடன் வாழ ஏற்ற கருத்துக்களை மொழிபவை.

பண்பாடு, கலை பட்டறிவு வெளிப்பாடு:

  • சங்கப் படைப்புகள், “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல், யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம், பிறன்மனை நோக்காப் பேராண்மை” முதலிய பண்பாட்டு நெறிமுறைகளையும் வெளிப்படுத்திகிறது.

உயர் சிந்தனை:

  • “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என உலக மக்களை ஒன்றினைந்து உறவுகளாக்கிய உயர்சிந்தனை மிக்கது புறநானூறு.
  • “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” எனத் திருக்குறள் உலகுக்கு எடுத்துரைக்கிறது.

கலை இலக்கியத் தனித்தன்மை வெளிப்பாடு:

  • தமிழ்ச்சான்றோர் மொழியை, “இயல், இசை, நாடகம்” எனப் பிரித்து வளமடையச் செய்தனர்.
  • எளிய குடிமகனையும் குடிமகளையும் காப்பியத் தலைவர்களாக்கிக் காப்பியம் படைத்தனர்.

மொழிக் கோட்பாடு:

  • “இன்றைய மொழியியல் வல்லுநர்கள் பேணிப் பின்பற்றத்தக்க வழிமுறைகளைத் தொல்காப்பியம் கூறுகின்றது” என்பார் முனைவர் எமினோ.
  • ஒருமொழிக்கு 35 ஒலிகள் இருந்தாலே போதும் என்பர். ஆனால் தமிழோ 500 ஒலிகளைக் கொண்டுள்ளது.

செம்மொழி:

  • இவ்வருஞ்சிறப்புமிக்க தமிழைச் “செம்மொழி” என அறிவித்தல் வேண்டும் என்ற முயற்சி 1901இல் தொடங்கி 2004வரை தொடர்ந்தது.
  • நடுவண் அரசு 2004ஆம் ஆண்டு அக்டோபரில் தமிழைச் செம்மொழியாக அறிவித்தது.

பரிதிமாற் கலைஞர்

பிறப்பு:

  • சூரிய நாராயண சாஸ்திரி என்னும் தம் பெயரைப் பரிதிமாற்கலைஞர் எனத் தனித்தமிழாக்கிக் கொண்டவர்.
  • மதுரை அடுத்த விளாச்சேரியில் பிறந்தார்.
  • பெற்றோர் = கோவிந்தசிவனார், இலட்சுமி அம்மாள்.
  • தம் பெற்றோருக்கு மூன்றாவது மகனாக, 1870ஆம் ஆண்டு சூலைத் திங்கள் ஆறாம் நாள் பிறந்தார்.

கல்வி:

  • தந்தை கோவிந்த சிவனாரிடமே வடமொழி பயின்றார்.
  • மகாவித்துவான் சபபதியாரிடம் தமிழ் பயின்றார்.
  • சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் இளங்கலை பயின்றார்.
  • இளங்கலை தேர்வில் தமிழிலும் தத்துவத்திலும் பல்கலைக்கழகத்தில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார்.

இயற்றமிழ் மாணவர்:

  • தமிழ் பயிலும் ஆர்வம் மிக்க மாணவர்களுக்குத் தம்முடைய இல்லத்திலேயே தமிழ் கற்பித்ததுடன், அவர்களை “இயற்றமிழ் மாணவர்” எனப் பெயரிட்டு அழைத்தார்.

மதுரைச் தமிழ்ச்சங்கம்:

  • மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவ முயன்றவர்களுள் இவரும் ஒருவர்.
  • பாசுகரசேதுபதி தலைமையில் பாண்டித்துரை தேவர் மேற்பார்வையில் பரிதிமாற்கலைஞர், உ.வே.சாமிநாதர், இராகவனார் ஆகிய பேராசிரியர்களின் துணையோடு மதுரைத் தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்டது.

திராவிட சாஸ்திரி:

  • யாழ்பாணம் சி.வை.தாமோதரனார், பரிதிமாற்கலைஞரின் தமிழ்ப் புலமையும் கவிபாடும் திறனையும் கண்டு, “திராவிட சாஸ்திரி” என்னும் சிறப்புப் பட்டதை வழங்கினார்.

தனிப்பாசுரத்தொகை:

  • பரிதிமாற்கலைஞர், தாம் இயற்றிய “தனிப்பாசுரத்தொகை” என்னும் நூலில் பெற்றோர் இட்ட சூரியநாராயண சாஸ்திரி என்ற வடமொழிப் பெயரை மாற்றிப் பரிதிமாற்கலைஞர் எனத் தனித்தமிழ்ப் பெயரைச் சூட்டிக்கொண்டார்.
  • இந்நூலினை, ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

கம்பராமாயண உவமை:

  • பரிதிமாற் கலைஞர் சென்னைக் கிறித்துவ கல்லூரியில் படித்த பொது நடந்த நிகழ்வு.
  • கல்லூரி முதல்வரும் ஆங்கிலப் பேராசிரியருமான வில்லியம் மில்லர் என்பவர் டென்னிசன் இயற்றிய “ஆர்தரின் இறுதி” வ்ன்னும் நூலில் இருந்து ஒரு பாடலி சொல்லி அதில் படகின் துடுப்பு அன்னப்பறவைக்கு உவமையாக கூறப்பட்டது.
  • தமிழில் இது போன்ற உவமைகள் உண்டா என அவர் கேட்க, பரிதிமாற் கலைஞர் கம்பராமாயண குகப்படலத்தில் உள்ள “விடுநனி கடிது” என்னும் பாடலை பாடி பொருள் கூறினார்.

தமிழின் சிறப்பை உணர்த்தல்:

  • வடமொழியும் தமிழ்மொழியும் கலந்து எழுதுதல் என்பது, தமிழ்மணியோடு பவளத்தைப்போலச் செந்நிறம் உடையதான மிளகாய்ப் பலம் கலந்தது போன்ற பயனையே தந்தது என்பது பரிதிமாற்கலைஞரின் கருத்து.
  • தமிழ்த்தாயின் எழில் மிகுந்த உடலுக்கு, மனிபிரவாள நடை எரிச்சலைத் தான் தரும் என்பதனை உணர்ந்த பரிதிமாற் கலைஞர், வடசொல் கலப்பைக் கண்டித்தார்.

தமிழ்த்தொண்டு:

  • பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் தமிழை விலக்கி வடமொழியை கொண்டு வர முடிவுசெய்யப்பட்டது.
  • ஆனால் பரிதிமாற் கலைஞரின் உறுதியான எதிர்பால் பல்கலைக்கழகம் அம்முடிவை கைவிட்டது.

படைப்புகள்:

  • “ரூபாவாதி, கலாவதி” முதலிய நற்றமிழ் நாடகங்களை இயற்றினார்.
  • அவர் ரூபாவதி, கலாவதி என்னும் பெண்பால் வேடங்களும் புனைந்து நடித்தார்.
  • “சித்திரக்கவி” என்னும் நூலைப் படைத்தார்.
  • குமரகுருபரரின் “நீதிநெறிவிளக்கம்” நூலில் இருந்து 51 பாடல்களுக்கு உரை எழுதியுள்ளார்.

இதழ்ப் பணி:

  • மு.சி.பூர்ணலிங்கம் தொடங்கி வைத்த :ஞானபோதினி” என்னும் இதழைப் பரிதிமாற் கலைஞர் நடத்தினார்.
  • மும்மொழிப் புலமை உடையவர்.
  • மதுரைத் தமிழ்ச்சங்கத்தாரின் “செந்தமிழ்” இதழில் உயர்தனிச் செம்மொழி என்னும் தலைப்பில், தமிழின் அருமை பெருமைகளை விளக்கி அரியதொரு கட்டுரை வரைந்தார்.
  • தமிழ்மொழி “உயர்தனிச் செம்மொழி” என முதன்முதலாக நிலைநாட்டினார்.

மறைவு:


  • தமிழ் உள்ளங்கொண்டு அயராது தமிழ்த் தொண்டாற்றிய பரிதிமாற்கலைஞர் தமது 33 அகவையில் இயற்கை எய்தினார்.
  • நடுவண் அரசு பரிதிமாற்கலைஞர்க்கு அஞ்சல்தலை வெளியிட்டு சிறப்பித்துள்ளது.

    சிலப்பதிகாரம்

    சொற்பொருள்:

    • கொற்கை – பாண்டிய நாட்டின் துறைமுகம்
    • தென்னம் பொருப்பு – தென்பகுதியில் உள்ள பொதிகைமலை
    • பலியோடு படரா – மறநெறியில் செல்லாத
    • பசுந்துணி – பசிய துண்டம்
    • தடக்கை – நீண்ட கைகள்
    • அறுவற்கு இளைய நங்கை – பிடாரி
    • கானகம் – காடு
    • உகந்த – விரும்பிய
    • தாருகன் – அரக்கன்
    • செற்றம் – கறுவு
    • தேரா – ஆராயாத
    • புள் – பறவை
    • புன்கண் – துன்பம்
    • ஆழி – தேர்ச்சக்கரம்
    • படரா – செல்லாத
    • வாய்முதல் – உதடு

    இலக்கணக்குறிப்பு:

    • மடக்கொடி – அன்மொழித்தொகை
    • தேரா மன்னா, ஏகாச் சிறப்பின் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
    • தடக்கை – உரிச்சொற்றொடர்
    • புன்கண், பெரும்பெயர், அரும்பெறல் – பண்புத்தொகை
    • உகுநீர், சூழ்கழல், செய்கொல்லன் – வினைத்தொகை
    • அவ்வூர் – சேய்மைச்சுட்டு
    • வாழ்தல் – தொழிற்பெயர்
    • என்கால் என்பெயர், நின்னகர், என்பதி – ஆறாம் வேற்றுமைத்தொகை
    • புகுந்து – வினையெச்சம்
    • தாழ்ந்த, தளர்ந்த – பெயரெச்சம்
    • வருக, தருக, கொடுக – வியங்கோள் வினைமுற்று

    பிரித்தறிதல்:

    • எள்ளறு = எள் + அறு
    • புள்ளுறு = புள் + உறு
    • அரும்பெறல் = அருமை + பெறல்
    • பெரும்பெயர் = பெருமை + பெயர்
    • அவ்வூர் = அ + ஊர்
    • பெருங்குடி = பெருமை + குடி
    • புகுந்தீங்கு = புகுந்து + ஈங்கு
    • பெண்ணணங்கு = பெண் + அணங்கு
    • நற்றிறம் = நன்மை + திறம்
    • காற்சிலம்பு = கால் + சிலம்பு
    • செங்கோல் = செம்மை + கோல்

    ஆசிரியர் குறிப்பு;

    • இளங்கோவடிகள் சேரமரபினர்.
    • பெற்றோர் = இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், நற்சோனை.
    • தமையன் = சேரன் செங்குட்டுவன்
    • இவர் இளமையிலே துறவு பூண்டு குணவாயிற் கோட்டம் சென்று தங்கினார்.
    • சமய வேறுபாடற்ற துறவி.
    • பாரதியார் இவரை, “யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர்போல் இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை; உண்மை வெறும் புகழ்ச்சியில்லை” என்றார்.

    நூல் குறிப்பு:

    • சிலம்பு + அதிகாரம் = சிலப்பதிகாரம்
    • கண்ணகியின் சிலம்பால் விளைந்த கதையை முதன்மையாகக் கொண்டது ஆதலின், சிலப்பதிகாரமாயிற்று.
    • இக்காப்பியம் புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் என்னும் முப்பெரும் காண்டங்களையும் முப்பது காதைகளையும் உடையது.
    • புகார்க்காண்டம் = 10 காதை
    • மதுரைக்காண்டம் = 13 காதை
    • வஞ்சிக்காண்டம் = 7 காதை
    • இக்காப்பியம் “உரையிடை இட்ட பாட்டைச்செய்யுள்” என அழைக்கப்படுகிறது.
    • முதற் காப்பியம், முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், நாடகக் காப்பியம் எனச் சிலப்பதிகாரத்தைக் போற்றிப் புகழ்வார்.
    • “நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு” எனப் பாரதியார் புகழ்கிறார்.
    • வழக்குரைக் காதை மதுரைக்கான்டத்தின் பத்தாவது காதை.
    • “இசை நாடகமே” சிலப்பதிகாரக் கதையின் உருவம்.

    நூலெழுந்த வரலாறு:

    • சேரன் செங்குட்டுவன், சீத்தலைச்சாத்தனாரோடும் இளங்கோவடிகளோடும் மலைவளம் காணச் சென்றான்.
    • அங்கிருந்த மலைவாழ் மக்கள், “வேங்கை மரத்தின்கீழ் ஒரு பெண் தெய்வத்தைப் பார்த்தோம்” என்று கூற, உடனிருந்த பெரும்புலவர் சாத்தனார், ‘அப்பெண்ணின் வரலாற்றை யானறிவேன்” என்று கோவலன் கண்ணகி வரலாற்றைச் சுருக்கமாகக் கூறினார்.
    • அதனைக் கேட்ட இளங்கோவடிகள், “இக்கதையைச் சிலப்பதிகாரம் என்னும் பெயரால் யாம் இயற்றுவோம்” ஏறனு கூறினார்.
    • சாத்தனாரும், “அடிகள் நீரே அருளுக” என்றார்.

    நூற்கூறும் உண்மை:

    • அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்
    • உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்
    • ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்

    தமிழ் வளர்ச்சி

    உலகியலின் அடங்கலுக்கும் துறைதோறும் நூற்கள்
    ஒருத்தர்தயை இல்லாமல் ஊரறியும் தமிழில்
    சலசலென எவ்விடத்தும் பாய்ச்சிவிட வேண்டும்
    தமிழொளியை மதங்களிலே சாய்க்காமை வேண்டும்
    இலவசநூற் கழகங்கள் எவ்விடத்தும் வேண்டும்
    எங்கள்தமிழ் உயர்வென்று நாம்சொல்லிச் சொல்லித்
    தலைமுறைகள் பலகழித்தோம்; குறைகளைந்தோ மில்லை
    தகத்தகாயத் தமிழைத் தாபிப்போம் வாரீர்.
    - பாரதிதாசன்

    சொற்பொருள்:

    • தெளிவுறுத்தும் – விளக்கமாய் காட்டும்
    • சுவடி – நூல்
    • எளிமை – வறுமை
    • நாணிடவும் – வெட்கப்படவும்
    • தகத்தகாய – ஒளிமிகுந்த
    • சாய்க்காமை – அழிக்காமை
    • தாபிப்போம் – நிலைநிறுத்துவோம்

    இலக்கணக்குறிப்பு;

    • புதிது புதிது, சொல்லிச் சொல்லி – அடுக்குத்தொடர்
    • செந்தமிழ் – பண்புத்தொகை
    • சலசல – இரட்டைக்கிளவி

    பிரித்தறிதல்:

    • வெளியுலகில் = வெளி + உலகில்
    • செந்தமிழ் = செம்மை + தமிழ்
    • ஊரறியும் = ஊர் + அறியும்
    • எவ்விடம் = எ = இடம்

    ஆசிரியர் குறிப்பு;

    • பாவேந்தர் பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம்.
    • இவர் 1891ஆம் ஆண்டு ஏப்பிரல் 29ஆம் நால் புதுவையில் பிறந்தார்.
    • தந்தை கனகசபை, தாய் இலக்குமி.
    • இவர் பாவேந்தர், புரட்சிக்கவிஞர் எனச் சிறப்பிக்கபடுவார்.
    • குடும்ப விளக்கு, இருண்ட வீடு, தமிழியக்கம், பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு முதலியன இவர்தம் படைப்புகள்.

    பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகள்

    பாவேந்தரின் புகழ்மொழி:

    தொண்டு செய்து பழுத்த பழம்
    தூயதாடி மார்பில் விழும்
    மண்டைச் சுரப்பை உலகு தொழும்
    மனக்குகையில் சிறுத்தை எழும்
    எனப் பாவேந்தர் பெரியாரை புகழ்கிறார்.

    பெரியாரின் பெண்விடுதலை சிந்தனைகள்:

    • பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகள் இரண்டு வகை.
    • ஒன்று, அடிப்படைத் தேவைகள் = பெண்கல்வி, பெண்ணுரிமை, சொத்துரிமை, அரசுப்பணி
    • மற்றொன்று, அகற்றப்படவேண்டியவை = குழந்தைத் திருமணம், மணக்கொடை, கைம்மை வாழ்வு

    பெண்கல்வி:

    • பெண்கள் கல்வி கற்றாலொழிய சமூக மாற்றங்கள் ஏற்படாது என்றார்.
    • “அங்கள் பங்களைப் படிக்கச் வைக்க வேண்டும். அவர்களுக்கு உலகப் படிப்பும், ஆராய்ச்சிப் படிப்பும் தாராளமாய்க் கொடுக்க வேண்டும். நாட்டிலுள்ள கேடுகளில் எல்லாம் பெருங்கேடு பெண்களைப் பகுத்தறிவு அட்டர சீவன்களாய் வைத்திருக்கும் கொடுமை; இவ்விழிநிலை ஒழிக்கப்பட வேண்டும்” என்றார்.

    பெண்ணுரிமை:

    • “ஆணுக்குப் பெண் இளைப்பில்லை” என்று சிந்தித்தவர் பெரியார்.
    • பெண்கள் தத்தம் கணவனுக்கு மட்டுமே உழைக்கும் அடிமையாக இராமல், மனித சமுதாயத்திற்குத் தொண்டாற்றும் புகழ் பெற்ற பெண்மநிகலாக விளங்க வேண்டும்” என்று வலியுறித்தினார்.

    சொத்துரிமை:

    • பெண்களுக்கு சொத்துரிமை மறுக்கப்பட்டமையே அவர்களின் அடிமை வாழ்வுக்கு காரணம் என்று உணர்ந்தார்.
    • அதற்காகக் அவர்கள் போராடவும் கிளர்ச்சி செய்யவும் வேண்டுமெனக் கூறினார்.

    அரசுப்பணி:

    • அரசாங்கத்தின் அனைத்துத்துறைகளிலும் பெண்கள் பணியாற்றும் பொது நம் சமுதாயத்தில் புரட்சி ஏற்படும் என்றார்.

    குழந்தைமணம்:

    • குழந்தை திருமணம் பற்றி “சிற்றில் சிதைத்து விளையாடும் பருவத்தில் பெற்றோர் செய்த வேதனை விளையாட்டு” எனக்கூறி அதனை நீக்கப் பாடுபட்டார்.

    மணக்கொடை மறுப்பும் கைம்மை ஒழிப்பும்:

    • சமுதாயத்தில் முறையான அன்பும் தியாக உணர்ச்சியும் ஏற்பட்டால் தான், இம்மாதிரியான தீமைகள் ஒழிக்க இயலும். தமிழ்நாட்டு இளைஞர்கள், மாணவர்கள், பட்டதாரிகள் ஆகியோர் செக்குமாடுகளாக இல்லாமல், பந்தயக்குதிரைகளாக மாற வேண்டும்.
    • தாமே பாடுபட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்னும் உயர்ந்த எண்ணம், நம் இளைஞர்களிடையே வளரவேண்டும் என்றார்.
    • கணவனை இழந்தோர் மறுமணம் செய்துகொள்வதில் தீங்கில்லை என்றார்.

    ஒழுக்கம்:

    • ஒழுக்கமென்பதும் கற்பென்பதும் பெண்களுக்கு மட்டும் என்றில்லாமல் ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவாகும் என்றார்.
    • பெரியார், பெண்களே சமூகத்தின் கண்கள் என்று கருதியவர்.

    கம்பராமாயணம்

    சொற்பொருள்:

    • ஆயகாலை – அந்த நேரத்தில்
    • அம்பி – படகு
    • நாயகன் – தலைவன்
    • நாமம் – பெயர்
    • கல் – மலை
    • திரள் – திரட்சி
    • துடி – பறை
    • அல் – இருள்
    • சிருங்கிபேரம் – கங்கைகரையோர நகரம்
    • திரை – அலை
    • மருங்கு – பக்கம்
    • நாவாய் – படகு
    • நெடியவன் – இராமன்
    • இறை – தலைவன்
    • பண்ணவன் – இலக்குவன்
    • பரிவு – இரக்கம்
    • குஞ்சி – தலைமுடி
    • மேனி – உடல்
    • மாதவர் – முனிவர்
    • முறுவல் – புன்னகை
    • விளம்பல் – கூறுதல்
    • கார்குலாம் – மேகக்கூட்டம்
    • பார்குலாம் – உலகம் முழுவதும்
    • குரிசில் – தலைவன்
    • இருத்தி – இருப்பாயாக
    • நயனம் – கண்கள்
    • இந்து – நிலவு
    • நுதல் – நெற்றி
    • கடிது – விரைவாக
    • முரிதிரை – மடங்கிவிழும் அலை
    • அமலன் – குற்றமற்றவன்
    • இளவல் – தம்பி

    இலக்கணக்குறிப்பு:

    • போர்க்குகன் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை
    • கல்திரள்தோள் – உவமைத்தொகை
    • நீர்முகில் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை
    • இருந்தவள்ளல் – பெயரெச்சம்
    • வந்துஎய்தினான் – வினையெச்சம்
    • கூவா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
    • குறுகி, சேவிக்க – வினையெச்சம்
    • கழல் – தானியாகுபெயர்
    • அழைத்தி – முன்னிலை ஒருமை வினைமுற்று
    • வருக – வியங்கோள் வினைமுற்று
    • பணிந்து, வளைத்து, புதைத்து – வினையெச்சம்
    • இருத்தி – முன்னிலை ஒருமை வினைமுற்று
    • தேனும் மீனும் – எண்ணும்மை
    • மாதவர் – உரிச்சொற்றொடர்
    • அமைந்த காதல் – பெயரெச்சம்
    • தழீஇய – சொல்லிசை அளபெடை
    • கார்குலாம் – ஆறாம் வேற்றுமைத்தொகை
    • உணர்த்துவான் – வினையாலணையும் பெயர்
    • தீராக் காதலன் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
    • மலர்ந்த கண்ணன் – பெயரெச்சம்
    • இனிய நண்ப – குறிப்புப் பெயரெச்சம்
    • நெடுநாவாய் – பண்புத்தொகை
    • தாமரை நயனம் – உவமைத்தொகை
    • நனிகடிது – உரிச்சொற்றொடர்
    • நெடுநீர் – பண்புத்தொகை
    • என்னுயிர் – ஆறாம் வேற்றுமைத்தொகை
    • நன்னுதல் – பண்புத்தொகை
    • நின்கேள் – நான்காம் வேற்றுமைத்தொகை

    ஆசிரியர் குறிப்பு:

    • கம்பர் தேரழுந்தூரில் பிறந்தார்.
    • இவ்வூர், நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது.
    • கம்பரின் தந்தையர் ஆதித்தன்.
    • கம்பர் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்தவர்.
    • இவரைத் திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப வள்ளல் ஆதரித்தவர்.
    • காலம் கி.பி.பன்னிரெண்டாம் நூற்றாண்டு.
    • தம்மை ஆதரித்த வள்ளல் சடயப்பரை ஆயிரம் பாடல்களுக்கு ஒரு பாடல் எனப் பாடிச் சிறப்பித்துள்ளார்.
    • கம்பராமாயணம், சடகோபர் அந்தாதி, சிலை எழுபது, சரஸ்வதி அந்தாதி, திருக்கை வழக்கம் ஆகிய கம்பர் இயற்றிய நூல்கள்.
    • சயங்கொண்டார், ஒட்டக்கூத்தர், புகழேந்திப் புலவர் ஆகியோர் இவர் காலத்துப் புலவராவர்.
    • கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும், விருத்தமென்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன், கல்வியிற் பெரியவர் கம்பர் என்னும் தொடர்கள் கம்பரின் பெருமையை அறியலாம்.
    • “யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்” என்று பாரதியார் கம்பரைப் புகழ்ந்து பாடியுள்ளார்.

    நூல்குறிப்பு:

    • வான்மீகி முனிவர் வடமொழியில் எழுதிய இராமாயணத்தைத் தழுவிக் கம்பர் அதனைத் தமிழில் இயற்றினார்.
    • கம்பர் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம் எனப்பட்டது.
    • கம்பர் தாம் இயற்றிய நூலுக்கு இராமாவதாரம் எனப் பெயரிட்டார்.
    • கம்பராமாயணம் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என ஆறு காண்டங்களை உடையது.
    • காண்டம் என்பது பெரும்பிரிவையும் படலம் என்பது அதன் உட்பிரிவையும் குறிக்கும்.
    • இந்நூலின் சிறப்புக் கருதியும் திருக்குறளின் பெருமை கருதியும் இவ்விரு நூல்களையும் “தமிழுக்கு கதி” என்பர்.
    • குகப்படலம் அயோத்தியா காண்டத்தில் ஏழாவது படலம் ஆகும். இதனை கங்கைப் படலம் எனவும் கூறுவர்.

    அண்ணல் அம்பேத்கர்

    பிறப்பு:

    • மராட்டிய மாநிலத்தில் கொண்கன் மாவட்டத்தில் உள்ள அம்பவாடே என்னும் சிற்றூரில் 1891ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்கள் பதினான்காம் நாள் அம்பேத்கர்பிறந்தார்.
    • பெற்றோர் = இராம்ஜி சக்பால், பீமாபாய்.
    • செல்வம் நிறைந்த குடும்பத்தில் பதினான்காவது குழந்தையாகப் பிறந்தார்.
    • அவரின் இயற்பெயர் பீமாராவ் ராம்ஜி.
    • தந்தை அவருக்கு சூடிய பெயர் பீம்.

    கல்வி:

    • தன் ஆசிரியர் மீது கொண்ட பற்றின் காரணமாக தன் ஆசிரியர் பெயரான அம்பேத்கர் என்பதை தம் பெயராக ஆக்கிக் கொண்டார்.
    • அம்பேத்கர் 1908இல் எல்பின்ஸ்டன் பள்ளியில் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்தார்.
    • பரோடா மன்னர் பொருளுதவியுடன் 1912இல் பம்பாய் எல்பின்ஸ்டன் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
    • அமெரிக்காவில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 1915இல் முதுகலைப் பட்டமும் 1916இல் இலண்டனில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.
    • மும்பையில் சிறிதுகாலம் பொருளியல் பேராசிரியராக பணியாற்றினார்.
    • மீண்டும் இலண்டன் சென்று அறிவியல் முதுகலைப் பட்டமும் பாரிஸ்டர் பட்டமும் பெற்றார்.
    • அம்பேத்கர் இந்தியா திரும்பியபின் வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்டார்.

    முதல் உரிமைப்போர்:

    • 1927ஆம் ஆண்டு மார்ச்சுத் தங்கள் இருபதாம் நாள் அம்பேத்கர் மராட்டியத்தில் மகாத்துக் குளத்தில் நடத்திய தண்ணீர் எடுக்கும் போராட்டம் நடத்தினார்.

    விடுதலை உணர்வும் வட்டமேசை மாநாடும்:

    • இங்கிலாந்து சொல்வதற்கு எல்லாம் இந்தியா தலை அசைக்கும் என்பது தவறு; இந்நிலை எப்போதோ மாறிவிட்டது; இந்திய மக்களின் எண்ணங்களை நீங்கள் ஈடேற்ற வேண்டும் என்றார்.
    • 1930ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைப்பெற்ற வட்டமேசை மாநாட்டில் கலந்துக்கொண்டார்.
    • அம்மாநாட்டில், “அறைவயித்றுக் கஞ்சிக்கு அல்லற்படும் ஊமைகளின் உறுப்பினனாக நான் பேசுகிறேன்” என்று தனது கருத்தை தொடங்கினார்.
    • வெறும் எஜமான மாற்றத்தை நாங்கள் விரும்பவில்லை; எங்கள் கைகளில் அரசியல் வந்தால் ஒழிய, எங்கள் குறைகள் நீங்கா என மொழிந்தார்.

    சட்ட மாமேதை:

    • விடுதலைக்குப் பிறகு இந்திய அமைச்சரவையில் அண்ணல் அம்பேத்கரையும் இடம்பெறச் செய்யவேண்டும் என்று நேரு விரும்பினார்.
    • அம்பேத்கர் சட்ட அமைச்சரானார்.
    • இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வகுக்க எழுவர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
    • பலரும் செயல்படாமல் விலகினார். இறுதியில் அம்பேத்கர் ஒருவரே அந்த ஒப்பற்ற பணியைச் செய்து முடித்தார்.
    • 1950ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 26ஆம் நாள் இந்தியா முழுமையான குடியரசு நாடாகத் தன்னை அறிவித்துக் கொண்டது.

    கல்வி வளர்ச்சியில் அம்பேத்கர்:

    • “ஒவ்வொருவரும் முழுமனித நிலையை அடைய கல்வி, செல்வம், உழைப்பு ஆகிய மூன்றும் தேவைப்படுகிறது. செல்வமும் உழைப்பும் இல்லாத கல்வி களர்நிலம். உழைப்பும் கல்வியும் அட்டர செல்வம் மிருகத்தனம்” என்றார்.
    • கற்பித்தல், அறிவியல் முறைக்கு உகந்ததாக இருத்தல் வேண்டும்; விருப்புவெருப்பட்ற்ற முறையில் கற்பித்தல் நிகழ வேண்டும் என்றார்.
    • 1946ஆம் ஆண்டு, மக்கள் கல்விக்கழகத்தை தோற்றுவித்தார்.
    • மும்பையில் அவரின் அறிய முயற்சியால் உருவான சித்தார்த்தா உயர்கல்வி நிலையம் உருவாக்கப்பட்டது.

    பொருளாதார வல்லுநர்:

    • இவர் “இந்தியாவின் தேசிய பங்குவீதம்” என்ற நூலை எழுதினார்.
    • தொழில் துறையில் பொருளாதார வளர்ச்சிப் பெற புதுப்புதுக் கருத்துக்களைக் வெளியிட்டார்.

    இந்திய வரலாற்றின் புதிய பக்கங்கள்:

    • இந்திய நாட்டின் சாதி என்னும் இருளை அகற்ற வந்த அறிவுக்கதிர் அம்பேத்கர்.
    • சாதி என்பது எல்லாம் வல்ல ஒருவன் கட்டளையால் தோன்றியதன்று. குறிப்பிட்ட சில சூழ்நிலைக்கு ஆட்பட்ட மனித சமூக வாழ்வில் தானாகவே வேரூன்றிவிட்ட வளர்ச்சியாகும். சாதி களையப்பட வேண்டிய களை என்றார்.
    • சமூகத்தின் மாற்றத்திற்குச் சிந்தனை விதைகளைத் தூவுகின்ற புரட்சியாளர்களாலேயே இந்த வையகம் வாழ்கிறது என்றார்.
    • இந்தியப் பொருளாதார மேம்பாட்டிற்குச் சாதி என்பது, நன்மை தராது.இந்தியர்களின் நலத்திற்கும் மகிழ்ச்சிக்கும் சாதி என்னும் நோய் தீங்கு விளைவிக்கிறது. அது மக்களிடையே ஒருமைப்பாட்டைச் சீர்குலைத்துவிட்டது. இதனை அவர்கள் உணரும்படி செய்துவிட்டால் போதும்; அதுவே எனக்கு நிறைவு தரும்” என்றார்.

    அம்பேத்கரின் இலட்சிய சமூகம்:

    • அவர், “ஓர் இலட்சிய சமூகம் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது” என்றார்.
    • “சனநாயகத்தின் மறுப்பெயர் தான் சகோதரத்துவம்; சுதந்திரம் என்பது சுயோச்சையாக நடமாடும் உரிமை; உயிரையும் உடைமையையும் பாதுகாக்கும் உரிமை அது. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் வகையில் எல்லா மனிதர்களையும் ஒரே மாதிரியாக நடத்துவதே சமத்துவமாகும்” என்று, சனநாயகத்திற்கு அரியதொரு விளக்கம் தந்தார்.

    பெரியார் போற்றிய பெருந்தகை;

    • “அம்பேத்கர் உலகத் தலைவர்களுள் ஒருவர்; பகுத்தறிவுச் செம்மல், ஆராய்ச்சியின் சிகரம், மக்களின் மாபெரும் வழிகாட்டி, அப்பெருந்தலைவரைப்போல வேறு யாரையும் காணமுடியாது” என்று பெரியார் அவரை பாராட்டினார்.

    நேரு புகழுதல்:

    • “பகுத்தறிவுத் துறையில் அவருக்கு இணை அவரே. ஆசியக் கண்டத்திலேயே மிகப்பெரிய தனியாள் நூலகத்தை அமைத்த பெருமை இவரையே சேரும்” என்று நேரு அவரைப் புகழ்ந்தார்.

    இராஜேந்திர பிரசாத் புகழ்தல்:

    • “அண்ணல் அம்பேத்கர் தன்னலமற்றவர்; மிகவும் ஆர்வத்துடனும் விரைந்து தனியனாகச் செயல்பட்டவர். தமக்குக் கொடுக்கப்பட்ட பணியில் கருமமே கண்ணாக இருந்தவர்” என்று இராஜேந்திர பிரசாத் பாராட்டினார்.

    மறைவு:

    • நாட்டிற்காக அயராது உழைத்த அண்ணல் அம்பேத்கர் 1956ஆம் ஆண்டு திசம்பர்த் திங்கள் 6ஆம் நாள் புகழுடம்பு எய்தினார்.

    பாரத ரத்னா விருது:

    • இந்திய அரசு, பாரத ரத்னா(இந்திய மாமணி) என்னும் உயரிய விருதை அண்ணல் அம்பேத்கருக்கு 1990ஆம் ஆண்டு வழங்கிப் பெருமைப்படுத்தியது.

    நற்றிணை

    சொற்பொருள்:

    • அரி – நெற்கதிர்
    • சேறு – வயல்
    • யாணர் – புதுவருவாய்
    • வட்டி – பனையோலைப் பெட்டி
    • நெடிய மொழிதல் – அரசரிடம் சிறப்புப் பெறுதல்.

    இலக்கணக்குறிப்பு:

    • சென்ற வட்டி – பெயரெச்சம்
    • செய்வினை – வினைத்தொகை
    • புன்கண், மென்கண் – பண்புத்தொகை
    • ஊர – விளித்தொடர்

    பிரித்தறிதல்:

    • அங்கண் = அம் + கண்
    • பற்பல = பல + பல
    • புன்கண் = புன்மை + கண்
    • மென்கண் = மேன்மை + கண்

    ஆசிரியர் குறிப்பு:

    • மிளை என்னும் ஊரில் பிறந்தவராதலால், மிளைகிழான் நல்வேட்டனார் என்னும் பெயர் பெற்றார்.
    • இவர், ஐந்திணைகளைப் பற்றியும் பாடல் இயற்றியுள்ளார்.
    • இவர் பாடியனவாக் நற்றிணையில் நான்கு பாடலும் குறுந்தொகையில் ஒன்றாக ஐந்து பாடல் உள்ளன.

    நூல் குறிப்பு;

    • பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் சங்கநூல்கள்.
    • “நல்” என்னும் அடைமொழியை கொண்டு போற்றப்படுவது நற்றிணை.
    • இதில் ஐந்து தினைகளுக்குமான பாடல்கள் உள்ளன.
    • இதிலுள்ள பாடல்கள், ஒன்பது அடிச் சிற்றெல்லையும் பன்னிரண்டு அடிப் பேரெல்லையும் கொண்டவை.
    • இப்பாடல்களைத் தொகுத்தவர் பெயர் தெரியவில்லை.
    • தொகுப்பித்தவர் “பன்னாடு தந்த மாறன் வழுதி”.
    • இதில் நானூறு பாடல்கள் உள்ளன.
    • பாடினோர் இருநூற்றெழுபத்தைவர்.

      புறநானூறு

      சொற்பொருள்;

      • துகிர் – பவளம்
      • மன்னிய – நிலைபெற்ற
      • செய – தொலைவு
      • தொடை – மாலை
      • கலம் – அணி

      இலக்கணக்குறிப்பு:

      • பொன்னும் துகிரும் முத்தும் பவளமும் மணியும் – எண்ணும்மை
      • மாமாலை – உரிச்சொற்றொடர்
      • அருவிலை, நன்கலம் – பண்புத்தொகை

      பிரித்தறிதல்:

      • அருவிலை = அருமை + விலை
      • நன்கலம் = நன்மை + கலம்

      ஆசிரியர் குறிப்பு:

      • இப்பாடலாசிரியர் கண்ணகனார் கோப்பெருஞ்சோழனின் அவைக்களப் புலவர்.
      • கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்த பொது, பிசிராந்தையாரின் வருகைக்காகக் காத்திருந்தான்.
      • அப்போது அவருடன் இருந்தவர் கண்ணகனார்.
      • அவன் உயிர் துறந்தபொழுது மிகவும் வருந்தினார் கண்ணகனார்.

      நூல் குறிப்பு:

      • எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று புறநானூறு.
      • இது புறப்பொருள் பற்றிய நானூறு பாடல்களைக் கொண்டுள்ளது.

      பேச்சுக்கலை

      பேச்சுக்கலை:

      • நுண்ணிய நூல்பல கற்றவற்கே அமையத்தக்க அரியதொரு கலையே பேச்சுக்கலை.

      மேடைப்பேச்சில் நல்ல தமிழ்:

      • மேடைப்பேச்சில் நல்ல தமிழை கொண்டு மக்களை ஈர்த்தவர்கள் திரு.வி.க, அண்ணா, ரா.பி.சேதுபிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார், குன்றக்குடி அடிகளார்.

      பேச்சும் மேடைப்பேச்சும்:

      • பேச்சில் உணர்ந்ததை உணர்ந்தவாறு தெரிவித்தால் போதுமானது; ஆனால், மேடைப்பேச்சிலோ உணர்ந்ததனை உணர்த்தும் வகையிலும் தெரிவித்தல் வேண்டும்.
      • பேச்சில் கேட்கின்றவனைக் கேட்கின்றவனாகவே மதிக்கலாம். ஆனால், மேடைப்பேச்சிலோ கேட்கின்றவனை மதிப்பிடுவோனாக மதித்தல் வேண்டும்.

      பேச்சுக்கலையில் மொழியும் முறையும்:

      • மேடைப்பேச்சுக்கு கருத்துகளே உயிர்நாடி என்றாலும், அக்கருத்துக்களை வெளியிடும் மொழியும் முறையும் இன்றியமையா இடத்தைப் பெறுகின்றன.
      • கருத்தைக் விளக்க மொழி கருவியாக உள்ளது.

      முக்கூறுகள்:

      • பேசும் பொருளை ஒழுங்குமுறைக்குக் கட்டுப்படுத்திக் தொடக்கம், இடைப்பகுதி, முடிவு எனப் பகுத்துக் பேசுவதையே பேச்சுமுறை என்கிறோம்.
      • இதனை எடுத்தல், தொடுதல், முடிதல் எனவும் கூறலாம்.

      எடுத்தல்:

      • பேச்சை தொடங்குவது எடுப்பு.
      • தொடக்கம் நன்றாக இராவிட்டால் கேட்பவர்களுக்குப் பேச்சினை குறித்த நல்லெண்ணம் தோன்றாது.
      • சுருக்கமான முன்னுரையுடன் தொடங்க வேண்டும்.

      தொடுத்தல்:

      • தொடக்கவுரைக்குப் பிறகு, பொருளை விரித்துப் பேசும் முறை தொடுத்தல் எனப்படும்.
      • இடையிடையே சுவைமிக்க சொற்களும் குணமிக்க கருத்துகளும் பிணைத்துப் பேசுவதே தொடுத்தல் எனப்படும்.

      பேச்சின் அணிகலன்:

      • எண்ணங்களைச் சொல்லும் முறையால் அழகு படுத்துவதே அணி எனப்படும்.
      • கேட்போர் சுவைக்கத்தக்க உவமைகள், எடுத்துக்காட்டுகள், சொல்லாட்சிகள், பல்வேறு நடைகள், சிறுசிறு கதைகள் முதலியன அமையப் பேசுவதே சிறந்த பேச்சாகும்.

      உணர்த்தும் திறன்:

      • உணர்ச்சி உள்ள பேச்சே உயிருள்ள பேச்சாகும்.
      • பேச்சாளர், தாம் உணர்ச்சிவயப்படாது, கேட்போரின் உள்ளத்தில் தாம் விரும்பும் உணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பேசுதல் வேண்டும்.

      முடித்தல்:

      • பேச்சை முடிக்கும்போது தான், பேச்சாளர் தமது கருத்தை வற்புறுத்தவும் கேட்போர் மனதில் பதியுமாறு சுருக்கிக் கூறவும் கூடும்.
      • பேச்சின் சுருக்கத்தைக் கூறி முடித்தல், உணர்ச்சியைத் தூண்டும் முறையில் முடித்தல், பாராட்டி முடித்தல், பொருத்தமான கவிதையைக் கூறி முடிதல் என முடிக்கும் முறைகள் பல உள்ளன.

      பெரியபுராணம்

      சொற்பொருள்:

      காய்ந்தார் – நீக்கினார்மனை – வீடு
      ஆ – பசுமேதி – எருமை
      நிறைகோல் – துலாக்கோல்(தராசு)தடம் – தடாகம்
      மந்தமாருதசீதம் – குளிர்ந்த காற்றுடன் கூடிய நீர்சந்தம் – அழகு
      ஈறு – எல்லைகல்மிதப்பு – கல்லாகிய தெப்பம்
      புவனம் – உலகம்சூலை – கொடிய வயிற்றுநோய்
      தெருளும் – தெளிவில்லாதகரம் – கை
      கமலம் – தாமரைமிசை – மேல்
      திருநீற்றுக்காப்பு – திருநீறுநேர்ந்தார் – இசைந்தார்
      பொற்குருத்து – இளமையான வாழைக்குருத்துஒல்லை – விரைவு
      மல்லல் – வளமானஆம் – அழகிய
      வால் – கூரியஅரா – பாம்பு
      அல்லல் – துன்பம்அங்கை – உள்ளங்கை
      உதிரம் – குருதிமேனி – உடல்
      மறைநூல் – நான்மறைசேய் – குழந்தை
      பூதி – திருநீறுமெய் – உண்மை
      பணிவிடம் – பாம்பின் நஞ்சுசவம் – பிணம்

      இலக்கணக்குறிப்பு:

      செலவொழியா வலி – ஈறுகெட்ட எதிர்மறைப்  பெயரெச்சம்வழிக்கரை – ஆறாம் வேற்றுமைத்தொகை
      உறுவேனில் – உரிச்சொற்றொடர்நீர்த்தடம் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை
      பந்தர் – கடைப்போலிஅணைந்த வாகீசர் – பெயரெச்சம்
      பொங்குகடல் – வினைத்தொகைபெருமையறிந்து – இரண்டாம் வேற்றுமைத் தொகை
      அறிந்து, அடைந்து – வினையெச்சம்கரகமலம் – உருவகம்
      பொழிந்திழிய – வினையெச்சம்தேசம் – இடவாகு பெயர்
      வந்தவர் – வினையாலணையும் பெயர்நற்கரிகள், இன்னமுதம் – பண்புத்தொகை
      தாய்தந்தை – உம்மைத்தொகைமல்லலம் குருத்து – உரிச்சொற்றொடர்
      தீண்டிற்று – ஒன்றன்பால் வினைமுற்றுதுளங்குதல் – தொழிற்பெயர்
      பூதி சாத்த – இரண்டாம் வேற்றுமைத்தொகைஅங்கணர் – அன்மொழித்தொகை
      நோக்கி – வினையெச்சம்எழுந்து, சென்று – வினையெச்சம்
      பணிவிடம் – ஆறாம் வேற்றுமைத்தொகைகேளா – செய்யா என்னும் வாய்ப்பாடு வினையெச்சம்

      பிரித்தறிதல்:

      • செலவொழியா = செலவு + ஒழியா
      • வழிக்கரை = வழி + கரை
      • வந்தணைந்த = வந்து + அணைந்த
      • எம்மருங்கும் = எ + மருங்கும்
      • எங்குரைவீர் = எங்கு + உறைவீர்
      • கண்ணருவி = கண் + அருவி
      • உடம்பெல்லாம் = உடம்பு + எல்லாம்
      • திருவமுது = திரு + அமுது
      • மனந்தழைப்ப = மனம் + தழைப்ப
      • நற்கரிகள் = நன்மை + கறிகள்
      • இன்னமுது = இனிமை + அமுது
      • வாளரா = வாள் + அரா
      • அங்கை = அம் + கை
      • நான்மறை = நான்கு + மறை
      • பாவிசை = பா + இசை

      ஆசிரியர் குறிப்பு:

      • பெரியபுராணத்தை அருளியவர் சேக்கிழார்.
      • இவர் தற்போதைய காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் பிறந்தவர்.
      • இவரின் இயற்பெயர் அருண்மொழித்தேவர்.
      • இவர் அநபாயச்சோழனிடம் தலைமை அமைச்சராய்த் திகழ்ந்தவர்.
      • இவர் உத்தமசோழப் பல்லவர் என்னும் பட்டம் பெற்றவர்.
      • இவரைத் தெய்வச் சேக்கிழார் என்றும் தொண்டர்சீர் பரவுவார் என்றும் போற்றுவர்.
      • இவரின் காலம் கி.பி.பன்னிரெண்டாம் நூற்றாண்டு.

      நூல் குறிப்பு:

      • தனியடியார் அறுபத்துமூவரும், தொகையடியார் ஒன்பதின்மரும் ஆக எழுபத்திருவர் சிவனடியார் ஆவர்.
      • அவ்வடியார்களின் வரலாற்றைக் கூறுவதால், பெருமை பெற்ற புராணம் என்னும் பொருளில் “பெரியபுராணம்” என்னும் பெயர் பெற்றது.
      • இந்நூலுக்கு சேக்கிழார் இட்ட பெயர் “திருத்தொண்டர் புராணம்” என்பதாகும்.
      • தில்லை நடராசப்பெருமான், “உலகெலாம்” என்று அடியெடுத்த்துக் கொடுக்கப் பாடப்பெற்றதெனவும் கூறுவர்.
      • மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார், “பக்திச் சுவைநனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ” எனச் சேக்கிழார் பெருமானைப் புகழ்கிறார்.
      • உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியந்தான், “பெரியபுராணம்” என்பார் திரு.வி.க.

      திரைப்படக்கலை உருவான கதை

      திரைப்படத்தின் சிறப்பு:

      • உலகில் பல்வேறு மொழிகள் இருப்பினும், மக்கள் அனைவரும் எளிதில் புரிந்துக்கொள்ளும் உலகமொழி திரைப்படம்.
      • அது உதடுகளால் பேசும் மொழியன்று; உள்ளத்தால் பேசி, உணர்ச்சிகளால் உருவாகும் மொழி.

      திரைப்படத்தின் வரலாறு:

      • ஒளிப்படம் எடுக்கும் முறையை 1830ஆம் ஆண்டு கண்டுப்பிடித்த பின்னர், எட்வர்ட் மைபிரிட்சு என்ற ஆங்கிலேயர் முதலில் ஓடும் குதிரையை இயக்கப்படமாக எடுத்து வெற்றிபெற்றார்.
      • ஈஸ்ட்மன் என்பார் படச்சுருள் உருவாக்கும் முறையைக் கண்டுபிடித்தார்.
      • எடிசன், ஒருவர் மட்டும் பார்க்கும் படக்கருவியைக் கண்டுபிடித்தார்.
      • பிரான்சிஸ் சென்கின்சு என்ற அமெரிக்கர் 1894இல் ரிச்மண்ட் என்னுமிடத்தில் இயக்கப்படத்தைப் பலரும் பார்க்கும் வகையில் வடிவமைத்தார். புதிய படவீழ்த்திகள் உருவாக, இவருடைய கருத்துகளே அடிப்படையாக அமைந்தன.

      திரைப்படம்:

      • நடிப்பாற்றலை எடுத்துக்கூறிச் சில நேரங்களில் தாமே நடித்தும், காட்சிகள் அமைத்தும் படம் முடியும்வரை உழைக்கும் நுண்மாண் நுழைபுலம் உடையாரை இயக்குனர் என்பர்.
      • கதைப்படங்கள் மட்டுமின்றிக் கருத்துப்படங்கள், செய்திப்படங்கள், விளக்கப்படங்கள், கல்விப்படங்கள் எனப் பல வளர்ச்சி நிலைகளைத் திரைப்படத்துறை அடைந்துள்ளது.

      திரைப்படச்சுருள்:

      • திரைப்படம் எடுக்கப் பயன்படும் படச்சுருள் செல்லுலாய்டு என்னும் பொருளால் ஆனது.
      • படம் எடுக்கப் பயன்படும் சுருள், எதிர்ச்சுருள் எனப்படும்.

      படம்பிடிக்கும் கருவி:

      • இது ஒளிப்பதிவு செய்யப் பயன்படுகிறது.
      • படப்பிடிப்புக்கருவியில் ஓரடி நீளமுள்ள படச்சுருள் 16 படங்கள் வீதம் ஒன்றன்பின்ஒன்றாகத் தொடர்ச்சியாக எடுக்கப்படும்.

      ஒலிப்பதிவு:

      • நடிகர்களின் நடிப்பையும், பாடும் பாடல்களையும் உரையாடல்களையும் ஒலிப்பதிவு செய்வர்.

      திரைப்படக்காட்சிப் பதிவு:

      • ஒளிஒலிப்படக்கருவி என்னும் கருவி திரையரங்குகளில் திரைப்படம் காட்டப்பயன்படுகிறது.
      • இக்கருவியில் மேற்பக்கம் ஒன்றும், அடிப்பக்கம் ஒன்றுமாக வட்டமான இரு பெட்டிகள் இருக்கும்.

      கருத்துப்படம்:

      • கருத்துப்படம் அமைக்கத் தொடங்கியவர் “வால்ட் டிஸ்னி” என்பார் ஆவார்.
      • படங்களை எழுதுவதற்குப் பதிலாகப் பொம்மைகளைக் கொண்டும் படங்களைத் தயாரிக்கின்றனர்.

      பாரதரத்னா எம்.ஜி.இராமச்சந்திரன்

      • இலங்கையில் உள்ள கண்டியில் 1917ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 17ஆம் நாள் பிறந்தார்.
      • பெற்றோர் = கோபாலமேனன், சத்தியபாமா.
      • வறுமையின் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணம் நகருக்கு குடிபெயர்ந்தனர்.
      • அங்கு ஆணையடிப் பள்ளியில் படித்தார். வருமையின் காரணமாக படிப்பை தொடரமுடியவில்லை.
      • நாடகங்களில் நடித்து, திரைப்படத்துறையில் ஈடுபட்டுச் சிறுசிறு பாத்திரங்களில் நடித்துக் கதாநாயகனாக உயர்ந்தார்.
      • அறிஞர் அண்ணாவின் பேச்சாற்றல் இவரை மிகவும் கவர்ந்தது.
      • நடிப்பையும், அரசியலையும் தம் இரு கண்களாக கருதினார்.
      • மக்கள் அவரை, “புரட்சி நடிகர்” என்றும், “மக்கள் திலகம்” என்றும் போற்றினர்.
      • அறிஞர் அண்ணாவின் நெஞ்சம் கவர்ந்தவராக எம்.ஜி.ஆர். விளங்கியதனால், அவரை அறிஞர் அண்ணா, “இதயக்கனி” என்று போற்றினார்.
      • இவர் 1963ஆம் ஆண்டு, சென்னை மாநிலச் சட்டமன்ற மேலவை உறுப்பினர் ஆனார்.
      • 1967ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பரங்கிமலைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
      • 1972ஆம் ஆண்டில், தாமிருந்த இயக்கத்தில் இருந்து வெளியேறி புதிய கட்சியை தொடங்கினார்.
      • அவர் 1977ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெருவெற்றி பெற்று முதல்வராகப் பதவி ஏற்றார்.
      • 11 ஆண்டுகள் தமிழ்நாட்டின் முதல்வராகப் பணியாற்றினார்.
      • சென்னை பல்கலைக்கழகம் அவரது பணிகளைப் பாராட்டி, டாக்டர் பட்டம் வழங்கியது.
      • இந்திய அரசு, சிறந்த நடிகருக்கான பாரத் பட்டம் வழங்கியது.
      • மதிய உணவுத் திட்டத்தை சத்துணவு வழங்கும் திட்டம் ஆக மாற்றினார்.
      • 24.12.1987 ஆன்று இயற்கை எய்தினார்.
      • 1988ஆம் ஆண்டு இந்திய அரசு அவரின் மறைவுக்குப் பின் பாரதரத்னா விருது(இந்திய மாமணி) வழங்கியது.

      தமிழ்விடு தூது

      சொற்பொருள்:

      • அரியாசனம் – சிங்காதனம்
      • பா ஒரு நான்கு – வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா
      • வரம்பு – வரப்பு
      • ஏர் – அழகு
      • நார்கரணம் – மனம், புத்தி, சித்தம், அகங்காரம்.
      • நெறிநாலு – வைதருப்பம்(ஆசுகவி),கௌடம்(மதுரகவி),பாஞ்சாலம்(சித்திரகவி),மாகதம்(வித்தாரகவி)
      • நாற்பொருள் – அறம், பொருள், இன்பம், வீடு
      • சீத்தையர் – கீழானவர், போலிப்புலவர்
      • நாளிகேரம் – தென்னை

      இலக்கணக்குறிப்பு:

      • செவியறுத்து  - இரண்டாம் வேற்றுமைத்தொகை

      பிரித்தறிதல்:

      • நாற்கரணம் = நான்கு + கரணம்
      • காரணத்தேர் = கரணத்து + ஏர்
      • நாற்பொருள் = நான்கு + பொருள்
      • இளங்கனி = இளமை + கனி
      • விண்ணப்பமுண்டு = விண்ணப்பம் + உண்டு

      நூற்குறிப்பு:

      • தூது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
      • கலிவெண்பாவில் உயர்திணைப் பொருளையோ அஃறினைப்பொருளையோ தூது அனுபுவதாகப் பாடுவது தூது இலக்கியம்.
      • இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.                                                            

        தொன்மைத் தமிழகம்

        மனித நாகரிகத் தொட்டில்:

        • முதல் மாந்தன் தோன்றிய இலெமூரியாவை, “மனித நாகரிகத் தொட்டில்” என்பர்.

        சிலாபதிகாரப் பாடல்:

        • தமிழகம் இன்றுபோல் இல்லாமல், குமரிமுனைக்குத் தெற்கே இன்னும் விரிந்து, குமரிமலை, பஃறுளி ஆறு முதலியவற்றை உள்ளடக்கி இருந்தது.
        • இச்செய்தியைப் சிலப்பதிகாரப் பாடல் வரிகள் தெளிவாக உணர்த்தும்.
        பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
        குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள

        பாவேந்தர்:

        • புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன். தமிழின் பழமை சிறப்பினைப் பெருமிதம் பொங்கி கூறுவது
        திங்களோடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்க ளோடும்
        மங்குல்கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்

        வாணிகம்:

        • தமிழர்கள் அறத்தின் வழியே வாணிகம் செய்தார்கள்.
        • உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பொருள் ஈட்டினர்.

        கடல் வாணிகம்:

        • கிறித்து பிறப்பதற்கு முன்பே கிரேக்கம், உரோமாபுரி, எகிப்து ஆகிய நாடுகளுக்கு அரிசியும், மயில்தோகையும்,சந்தனமும் தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி செய்தனர்.
        • கி.மு.பத்தாம் நூற்றாண்டில் அரசன் சாலமனுக்கு யானைத் தந்தமும், மயில்தோகையும், வாசனைப் பொருள்களும் அனுப்பப்பட்டன.
        • தமிழர்கள் சாவகநாட்டுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர்.

        தனிநாயகம் அடிகளாரின் கூற்று:

        • தமிழ்சங்கம் இருந்தது என்ற மரபுச் செய்தி இடைவிடாது இர்ருந்து வருகிறது. இந்தியாவில் இத்தகைய மரபுச் செய்தி வேறெங்குமில்லை என்றார் தனிநாயகம் அடிகளார்.

        மொழித் தொன்மை:

        • “தமிழ்கெழு கூடல்” என புறநானூறு கூறுகிறது.
        • “தமில்வேலி” எனப் பரிபாடல் கூறுகிறது.
        • “கூடலில் ஆய்ந்த ஒன்தீந் தமிழின்” என் மணிவாசகம் கூறுகிறது.

        ஏற்றுமதியும் இறக்குமதியும்:

        • தமிழர்களின் ஏற்றுமதி இறக்குமதி பற்றி குறிப்பிடும் நூல்கள், பட்டினப்பாலையும், மதுரைக்காஞ்சியும்.
        • காவிரிப்பூம்பட்டினத் துறைமுகத்தில் பொருள்கள் மண்டியும் மயங்கியும் கிடந்ததனைப் பட்டினப்பாலை அடிகள் கூறுகிறது.
        நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
        காலின் வந்த கருங்கறி மூடையும்
        வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
        குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும் ....
        .... மயங்கிய நனந்தலை மறுகு.

        இசைக்கலை:

        • பண்டையக்காலத் தமிழர்களின் இசை சிறந்த இடத்தைப் பெற்றிருந்தது.
        • “நரம்பின் மறை” என்று தொல்காப்பியம் கூறுகிறது.
        • ஒப்பாரி என்பது, இவருக்கு ஒப்பார் ஒருவருமிலர் என்று இறந்தவரைப் பற்றிப் பாடுவது.
        • இன்றைய கருநாடக இசைக்குத் தாய் நம் தமிழிசையே.
        • “பண்ணொடு தமிழொப்பாய்” என தேவாரம் கூறுகிறது.
        • குழலினிது யாழினிது என்று இசைபோளியும் கருவிகளை வள்ளுவம் குறிக்கின்றது.

        உழவுத் தொழில்:

        • “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்” என்கிறது திருக்குறள்.
        • “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” எகிறது புறநானூறு.
        • உழவுக்கு சிறப்பு பெற்ற நிலம் மருதநிலம்.

        பழந்தமிழர் வாழ்வு:

        • அறத்தின் அடிப்படையில் தொடங்கியது தமிழர் வாழ்வு.
        • “களிறு எரிந்து பெயர்தல் காளைக்குக் கடனே” என்னும் புறப்பாடல், வீரத்தினை முதல் கடமையாக்கின்றது.
        • ஒக்கூர் மாசாத்தியார் என்ற பெண்பாற் புலவர், பெண்களின் வீரத்தினை பாடியுள்ளார்.

        தற்காலத் தொல்லியல் ஆய்வுகள்

        தொல்லியல்:

        • தொல்பழங்காலம் பற்றிய ஆய்வையே தொல்லியல் அல்லது தொல்பொருளியல் என்பர்.
        • தொல்லியலை ஆங்கிலத்தில், “ஆர்க்கியாலாஜி” எனக் குறிப்பிடுவர்.
        • மனிதன் நாடோடியாக வாழ்ந்த காலத்தில் இருந்து, வரலாற்றுக்கு முந்தைய காலம் வரை உள்ள காலத்தையே தொன்மைக்காலம் என்பர்.

        காவிரிப்பூம்பட்டினம்:

        • 1963ஆம் ஆண்டு இந்தியத் தொல்லியல் துறையினர் பூம்புகார் அருகில் உள்ள “கிழார்வெளி” என்னும் இடத்தில மேற்கொண்ட கடல் அகழ்வாய்வின் போது கி.மு.மூன்றாம் நூற்றாண்டை சார்ந்த கட்டட இடிபாடுகள் கிடைத்தன.
        • இந்த ஆய்வில் செங்கற்களால் கட்டப்பட்ட படகுத் துறை, அரைவட்டவடிவ நீர்த்தேக்கம், புத்தவிகாரம்(புத்த பிக்குகள் தங்குமிடம்), வெண்கலத்தால் ஆன புத்தர் பாதம் முதலிய எச்சங்கள் கிடைத்தன.
        • இவ்வாய்வு காவிரிப்பூம்பட்டினம் என்னும் நகரம் இருந்ததை உறுதி செய்தது.

        காசுகள்:

        • தருமபுரி, கரூர், மதுரை ஆகிய மாவட்டங்களில், கி.மு.மூன்றாம் நூற்றாண்டு முதல் பல்வேறு காலகட்டங்களைச் சார்ந்த தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு உலோகங்களால் செய்யப்பட்ட காசுகள் கண்டறியப்பட்டுள்ளன.
        • இவற்றின் ஒரு பக்கத்திலோ இரு பக்கங்களிலோ முத்திரைகள் பொறிக்கப்பட்டுள்ளன.
        • இக்காசுகளில் சூரியன் மலைமுகடு, ஆறு, காளை, ஸ்வஸ்திகம், கும்பம் முதலிய சின்னங்கள் முத்திரைகளாகப் பொறிக்கப்பட்டுள்ளன.

        முதுமக்கள் தாழிகள்:

        • பண்டைய காலத்தில் இறந்தோரை, அவர்கள் பயன்படுத்திய பொருள்களுடன் ஒரு தாழியிட்டுப் புதைக்கும் வழக்கம் இருந்தது.
        • இவ்வைகைத் தாழிகள், “முதுமக்கள் தாழிகள்” என்கிறோம்.
        • தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் 1876, 2003 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
        • கி.மு.300 முதல் கி.பி.300 வரையிலான காலகட்டங்களைச் சார்ந்த இத்தாழிகளில் இறந்தோரின் எலும்புகளுடன் தங்கத்தால் ஆன நெற்றிப்பட்டம், செம்பினால் ஆன ஆண், பெண் தெய்வ உருவங்கள், மற்றும் இரும்பினால் ஆன கத்திகள், விளக்குத் தாங்கிகள் முதலிய பொருள்களும் கிடைத்துள்ளன.

        திருக்குறள்

        சொற்பொருள்:

        மூத்த – முதிர்ந்தகேண்மை – நட்பு
        தேர்ந்து – ஆராய்ந்துநோய் – துன்பம்
        உறாஅமை – துன்பம் வராமல்பேணி – போற்றி
        தமர் – உறவினர்வன்மை – வலிமை
        தலை – சிறப்புசூழ்வார் – அறிவுடையார்
        செற்றார் – பகைவர்இல் – இல்லை
        தகைமை – தன்மைஏமரா – பாதுகாவல் இல்லாத
        மதலை – துணைஎள்ளுவர் – இகழ்வர்
        பொய்யா விளக்கம் – அணையா விளக்குஇருள் – பகை
        ஈனும் – தரும்தீதின்றி – தீங்கின்றி
        புல்லார் – பற்றார்உறுபொருள் – அரசு உரிமையால் வரும்பொருள்
        உல்குபொருள் – வரியாக வரும்பொருள்தெரு – பகை
        குழவி – குழந்தைசெவிலி – வளர்ப்புத்தாய்
        குன்று – மலைசெருக்கு – இறுமாப்பு

        இலக்கணக்குறிப்பு:

        அறனறிந்து – இரண்டாம் வேற்றுமைத்தொகைதிறனறிந்து – இரண்டாம் வேற்றுமைத்தொகை
        தேர்ந்து கொளல் – வினையெச்சம்கொளல் – அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று
        உற்றநோய் – பெயரெச்சம்உறாஅமை – செய்யுளிசை அளபெடை
        பெற்றியார் – வினையாலணையும் பெயர்கொளல் – தொழிற்பெயர்
        வன்மை – பண்புப்பெயர்ஒழுகுதல் – தொழிற்பெயர்
        சூழ்வார் – வினையாலணையும் பெயர்தக்கார் – வினையாலணையும் பெயர்
        துணையார் – வினையாலணையும் பெயர்இல்லை – குறிப்பு வினைமுற்று
        பகைகொளல் – இரண்டாம் வேற்றுமைத்தொகைபொய்யா விளக்கம் – ஈறுகெட எதிர்மறைப் பெயரெச்சம்
        அறனீனும் – இரண்டாம் வேற்றுமைத்தொகைவந்த பொருள் – பெயரெச்சம்
        திறன் – கடைப்போலிவாராப் பொருளாக்கம் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
        தன்ஒன்னார் – ஆறாம் வேற்றுமைத்தொகைவேந்தன் பொருள் – ஆறாம் வேற்றுமைத்தொகை
        ஈன்குழவி – வினைத்தொகைசெல்வச்செவிலி – உருவகம்
        குன்றேறி – ஏழாம் வேற்றுமைத்தொகைசெய்க – வியங்கோள் வினைமுற்று
        செறுநர் செருக்கு – ஆறாம் வேற்றுமைத்தொகைஒண்பொருள் – பண்புத்தொகை

        தேவாரம்

        சொற்பொருள்:

        இடர் – துன்பம்ஏமாப்பு – பாதுகாப்பு
        பிணி – நோய்நடலை – துன்பம்
        சேவடி –இறைவனின் செம்மையான திருவடிகள்நமன் – எமன்

        இலக்கணக்குறிப்பு:

        • நற்சங்கு – பண்புத்தொகை
        • வெண்குழை – பண்புத்தொகை
        • மலர்ச்சேவடி – உவமைத்தொகை
        • மீளா ஆள் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

        பிரித்தறிதல்:

        • பிநியறியோம் = பிணி + அறியோம்
        • எந்நாளும் = எ + நாளும்
        • நாமென்றும் = நாம் + என்றும்

        ஆசிரியர் குறிப்பு;

        • திருநாவுக்கரசர் திருவாமூரில் பிறந்தவர்.
        • பெற்றோர் = புகழனார், மாதினியார்.
        • இவரது தமக்கையார் திலகவதியார்.
        • இயற் பெயர் = மருணீக்கியார்
        • சிறப்பு பெயர்கள் = தருமசேனர், அப்பர், வாகீசர்.
        • இவரின் நெறி = தொண்டு நெறி
        • இவர் தாண்டகம் பாடுவதில் வல்லவர். அதனால் இவரை “தாண்டக வேந்தர்” எனப்படுவார்.
        • இவரது காலம் கி.பி.ஏழாம் நூற்றாண்டு.
        • திருவாமூர், கடலூர் மாவட்டம் பண்ணுருட்டியை அடுத்து உள்ளது.

        நூல் குறிப்பு:

        • தேவாரம் என்னும் சொல்லைத் தே+வாரம் எனப் பிரித்துத் தெய்வத்தன்மையை உடைய இசைப்பாடல்கள் என்று கூறுவர்.
        • தே+ஆரம் எனப் பிரித்து தெய்வத்திற்குச் சூட்டப்பெற்ற பாமாலை என்றும் கூறுவர்.
        • அப்பர் அருளிய பாடல்கள் நான்கு, ஐந்து, ஆறாம் திருமுறைகள்.

        தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள்

        விண்ணியல அறிவு:

        • உலகம் உருண்டை என்று பதினாறாம் நூற்றாண்டிற்கு பிறகே மேலை நாட்டினர் உறுதி செய்தனர்.
        • ஆன்மஇயல் ஏசும் திருவாசகம் விண்ணியலையும் பேசுகிறது
        அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
        அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
        ஒன்றனுக் கொன்று நின்றேழில் பகரின்
        நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன.
        • பெருவெடிப்புக் கொள்கையின்படி இப்பேரண்டம் விரிவடைந்து நிற்பதை இப்பாடல் ஆழமாக விளக்குகிறது.
        • உலகம் என்னும் தமிழ்ச்சொல் “உலவு” என்னும் சொல்லில் இருந்து பிறந்தது. உலவு என்பது சுற்றுதல் என்ற பொருளைத் தரும்.
        • ஞாலம் என்னும் சொல் “ஞால்” என்னும் சொல்லில் இருந்து பிறந்தது. இதன் பொருள் “தொங்குதல்”.
        • வானத்தில் காற்றில்லாப் பகுதி உண்டு எம்பதை தமிழர்கள் அறிந்திருந்தனர். இதனை “வறிது நிலைஇய காயமும்” என்னும் புறநானூறு வரி விளக்குகிறது.
        • “வலவன் ஏவா வானூர்தி” என்னும் புறநானூற்றுத் தொடரினால் தமிழர்கள் வானூர்தியை விண்ணில் செலுத்தி இருக்கலாம் என அறியப்படுகிறது.

        பொறியியல் அறிவு:

        • கரும்பை பிழிவதற்கு எந்திரங்கள் உருவாக்கப்பட்டிருந்தன.
        • இதனைத் “தீம்பிழி எந்திரம் பந்தல் வருத்த” என்னும் பதிற்றுபத்து வரிகள் குறிப்பிடும்.
        • நிலத்தில் இருந்து நீரை உறிஞ்சி இறைக்கும் ஆழ்துளைக் கிணறு, அக்காலத்தில் இருந்திருக்கலாம் என்பதனை, “அந்தக் கேணியும் எந்திரக் கிணறும்” என்னும் பெருங்கதை வரியின் வாயிலாக அறியமுடிகிறது.
        • பெருங்கதையில் வரும் எந்திர யானை கிரேக்கத் தொன்மத்தில் குறிப்பிடப்படும் “டிராய்” போருடன் இணைத்துப் பேசப்படும் எந்திரக்குதிரையுடன் ஒத்தது.

        கனிமவியல் அறிவு:

        • சிலப்பதிகாரம் பல்வகை மணிகளையும், அதன் தன்மைகளையும் விளக்குகிறது.
        • ஊர்கான் காதையில்,
        ஒருமைத் தோற்றத்து ஐவேறு வனப்பின்
        இலங்குகதிர் விடூஉம் நலங்கெழு மணிகளும்
        என்னும் இவ்வடிகள் ஐவகை மணிகளை விளக்குகிறது.

        மண்ணியல் அறிவு:

        • தமிழர், தம் வாழிடங்களை நிலத்தின் தன்மைக்கேற்ப பாகுபடுத்தியுள்ளனர். அவையே ஐவகை நிலங்கள். மேலும் செம்மண், களர்நிலம், உவர்நிலம் எனவும் பகுத்துள்ளனர்.
        • நிறத்தின் அடிப்படையில் செம்மண் நிலம் எனவும், சுவையின் அடிப்படையில் உவர்நிலம் எனவும், தன்மையின் அடிப்படையில் களர்நிலம் எனவும் நிலத்தைத் தமிழர் வகைப்படுத்தினர்.
        • செம்மண் நிலத்தை அதன் பயன் கருதிப் போற்றினர். இதனைச் “செம்புலப் பெயல் நீர்போல” என்னும் குறுந்தொகை வரி உணர்த்தும்.
        • உவர்நிலம், மிகுந்த நீரைப் பெற்றிருந்தும் பயன்தருவதில்லை. இதனை, “அகல்வயல் பொழிந்தும் உறுமிடத் துதவா உவர்நிலம்” என்னும் புறநானூறு வரிகள் விளக்குகிறது.
        • எதற்கும் பயன்படாத நிலம் களர்நிலம். இதனைப் “பயவாக் களரனையர் கல்லாதவர்” என்பார் திருவள்ளுவர்.

        அணுவியல் அறிவு:

        • ஔவை,”அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி’ என்று சொல்கிறார்.
        • “ஓர் அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன்” எனக் கம்பர் கூறுவார்.
        • இதன் மூலம் அணுச்சேர்ப்பும் அனுப்பிரிப்பும் பற்றிய கருத்துக்கள் அறியப்பட்டுள்ளது.

        நீரியல் அறிவு:

        • நீரியல் இயக்கமே உலகை வளப்படுத்துகிறது.
        • இதனை, திருவள்ளுவர் தன் குரலில் கூறியுள்ளார்.
        நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும் தடிந்தெழிலி
        தான்நல்கா தாகி விடின்

        மருத்துவ அறிவு:

        • “உடம்பார் அழியின் உயிரார் அழிவர்” என்பார் திருமூலர்.
        • திருவள்ளுவர் “மருந்து” என்னும் ஓர் அதிகாரத்தையே படைத்துள்ளார்.
        • இன்று பரவலாகப் பயின்று வரும் இயற்கை மருத்துவம் என்னும் மருந்தில்லா மருத்துவ முறையை, அன்றே நம் தமிழர் கண்டறிந்துள்ளனர்.
        மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
        அற்றது போற்றி உணின்

        அறுவை மருத்துவம்:

        • “உடம்பிடை தோன்றிற் றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி
        • அடல்உறச் சுட்டு வேறோர் மருந்தினால் துயரம் தீர்வர்” என்னும் கம்பரின் வாக்கு அறுவை மருத்துவத்தை மெய்ப்பிக்கின்றன.
        • மணிமேகலையின் தோழி சுதமதியின் தந்தையை மாடுமுட்டியதால், அவரின் குடல் சரிந்தது. சரிந்த குடலைப் புத்தத் துறவி சரிசெய்த செய்தியை மணிமேகலை எடுத்துரைக்கிறது.
        • “புல்லாகிப் பூடாய்” என்னும் திருவாசக வரிகள் பல்வகை உயிர்களின் பரிணாம வளர்ச்சியை விரிவாய் கூறுகின்றன.
        • “மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து ஈனமில் கிருமி செருவினில் பிழைத்தும்” எனத் தொடங்கும் பாடலடிகள் கருவியல் அறிவை நன்கு தெரிவிக்கின்றன.

          சீறாப்புராணம்

          சொற்பொருள்:

          தெண்டிரை – தெளிந்த அலைகள்கான் – காடு
          தடக்கரி – பெரிய யானைதிரள் – கூட்டம்
          தாரை – வழிஅடவி – காடு
          உழுவை – புலிகனல் – நெருப்பு
          வெள்ளெயிறு – வெண்ணிறப் பற்கள்வனம் – காடு
          வள்ளுகிர் – கூர்மையான நகம்மடங்கள் – சிங்கம்
          நிணம் – கொழுப்புகோடு – தந்தம்
          கிரி – மலைஉரும் – இடி
          தொனி – ஓசைமேதி – எருமை
          கவை – பிளந்தகேழல் – பன்றி
          எண்கு – கரடிமரை – மான்
          எழில் – அழகுபுயம் – தோள்
          இடர் – துன்பம்வேங்கை – புலி
          மாத்திரம் – மலைகேசரி – சிங்கம்
          புளகிதம் – மகிழ்ச்சிகவின் – அழகு
          பூதரம் – மலைதெரிசனம் – காட்சி
          திறல் – வலிமைபுந்தி – அறிவு
          மந்தராசலம் – மந்தரமலைசந்தம் – அழகு
          சிரம் – தலைசெகுதிடுவது – உயிர்வதை செய்வது
          உன்னி – நினைத்துதெளிந்தார் – தெளிவு பெற்றார்

          இலக்கணக்குறிப்பு:

          படர்ந்த தெண்டிரை – பெயரெச்சம்நதிப்பரப்பு – ஆறாம் வேற்றுமைத்தொகை
          தொழுது அறைகுவன் – வினையெச்சம்தடக்கரி – உரிச்சொற்றொடர்
          நெடுநீர் – பண்புத்தொகைபொருந்தி – வினையெச்சம்
          புடைத்து, நிமிர்ந்து – வினையெச்சம்கால் மடித்து – இரண்டாம் வேற்றுமைத்தொகை
          வெள்ளெயிறு – பண்புத்தொகைபெருங்கரி – பண்புத்தொகை
          முதிர்ந்தமேதி – பெயரெச்சம்பொதிந்தமெய் – பெயரெச்சம்
          செவிபுக – ஏழாம் வேற்றுமைத்தொகைநின்ற வேங்கை – பெயரெச்சம்
          செங்கதிர், பெருவரி – பண்புத்தொகைபூதரப்புயம் – உவமைத்தொகை
          வால்குழைத்து – இரண்டாம் வேற்றுமைத்தொகைபெருஞ்சிரம், தண்டளி – பண்புத்தொகை
          எழுந்து, புதைத்து, வணங்கி – வினையெச்சம்நனிமனம் – உரிச்சொற்றொடர்
          சிரமுகம் – உம்மைத்தொகைஉயிர்செகுத்து – இரண்டாம் வேற்றுமைத்தொகை
          புகுக – வியங்கோள் வினைமுற்றுமலரடி – உவமைத்தொகை
          நன்று நன்று – அடுக்குத்தொடர்கொலைப்புலி – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

          பிரித்தறிதல்:

          • பணிந்திவர் = பணிந்து + இவர்
          • சிரமுகம் = சிரம் + முகம்
          • பெருஞ்சிரம் = பெருமை + சிரம்
          • தண்டளிர்ப்பதம் = தண்மை + தளிர் + பதம்
          • திண்டிறல் = திண்மை + திறல்
          • எண்கினங்கள் = எண்கு + இனங்கள்
          • வீழ்ந்துடல் = வீழ்ந்து + உடல்
          • கரிக்கோடு = கரி + கோடு
          • பெருங்கிரி = பெருமை + கிரி
          • இருவிழி = இரண்டு + விழி
          • வெள்ளெயிறு = வெண்மை + எயிரு
          • உள்ளுறை = உள் + உறை
          • நெடுநீர் = நெடுமை + நீர்
          • அவ்வழி = அ + வழி
          • தெண்டிரை = தெண்மை + திரை

          ஆசிரியர் குறிப்பு:

          • சீறாப்புராணத்தை இயற்றியவர் உமறுப்புலவர்.
          • இவர் எட்டயபுரம் கடிகை முத்துப் புலவரின் மாணவர்.
          • அப்துல்காதிர் மரைக்காயர் என்ற வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளுக்கு இணங்க சீறாப்புராணம் இயற்றினார்.
          • நூல் முற்றும் முன்னரே சீதக்காதி மறைந்தார்.
          • அபுல்காசிம் என்ற வள்ளல் உதவியால் இந்நூல் நிறைவு பெற்றது.
          • இவர் எண்பது பாக்களால் ஆன முதுமொழிமாலை என்னும் நூலையும் படைத்துள்ளார்.
          • இவர் காலம் பதினேழாம் நூற்றாண்டு.

          நூல் குறிப்பு;

          • சீறா = வாழ்க்கை, புராணம் = வரலாறு.
          • இந்நூல் விலாதத்துக் காண்டம், நுபுவ்வத்துக் காண்டம், ஹிஜிரத்துக் காண்டம் என்னும் முப்பெரும் பிரிவுகளை கொண்டது.
          • 5027 விருதப்பாக்களால் ஆனது.

          காந்தியம்

          விளையும் பயிர்:

          • காந்தியடிகள் சிறுவனாக இருந்தப்போது கேட்ட குஜராத்தி பாடல் மூலம் அவருக்கு இன்னாசெய்யாமை(அஹிம்சை) என்னும் கருத்து அவருள் வேரூன்றியது.
          • “சிரவண பிதுர்பத்தி” என்னும் நாடக நூலைப் படித்தான் மூலம் பெற்றோரிடம் அன்பு செலுத்த வேண்டும் என்ற எண்ணம் அவருள் வந்தது.
          • அரிச்சந்திரன் நாடகம் பார்த்த பின் அவருக்கு பொய் பேசக்கூடாது என்ற எண்ணம் தோன்றியது.
          • இயேசுநாதரின் மலைச்சொற்பொழிவை பற்றிய நூலைப் படித்தப் பொது அதன் கருத்துகள் அவரிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தின.
          • பகவத் கீதையை படித்ததன் மூலம் மனவுறுதியைப் பெற்றார்.
          • ரஷ்ய அறிஞர் தால்சுதாய் எழுதிய “உன்னுள் இருக்கும் ஆண்டவனின் அரசு” என்னும் நூலில் “இன்னாசெய்தார்க்கும்” என்னும் திருக்குறளை மொழிபெயர்த்து எழுதியிருந்தார். அந்நூலினை படிக்கும் பொது திருக்குறள் மீதும், தமிழ் மீதும் பற்று ஏற்பட்டது.

          அறவழி விடுதலைப்போர்:

          • “மனிதனின் நோக்கம் உயர்ந்ததாகவும் தூய்மையாகவும் இருந்தால் மட்டும் போதாது. அதனை அடையும் வழிமுறைகளும் தூயமையானதாகப் பிறருக்குத் துன்பம் தராததாக இருக்கவேண்டும்” என்றார்.
          • “வன்முறையை வன்முறையால் வெல்ல நினைப்பது தீயைத் தீயால் அணைக்க முற்படுவது போன்றது” என்றார்.

          எளிமை ஒரு அறம்:

          • ஆசிரமத்தில் தாமே சமையல் செய்து அனைவருக்கும் கொடுத்தார்.
          • கழிப்பறை கழுவுதல் ஒரு கலை என்றார்.
          • எளிமையை ஒரு அறமாகவே போற்றினார்.
          • காந்தியடிகள் தமிழ்நாட்டிற்கு வந்த பொது, ஏழை உழவர்கள் வறுமையால் அரையாடை உடுத்தியத்தை கண்டு தாமும் அன்று முதல் மேலாடை அணிவதை நிறுத்திக்கொண்டார்.
          • அரையாடையுடன் இங்கிலாந்தில் நடந்த வட்டமேசை மாநாட்டில் கலந்துக்கொண்ட காந்தியடிகளை “அரை நிருவாணப் பக்கிரி” என்று ஏளனம் செய்தார் அப்போதைய இங்கிலாந்து பிரதமர் சர்ச்சில்.

          மனித நேயம்:

          • மனிதரோடு மனிதராக வாழ்ந்து மகாத்மாவாக உயர்ந்தவர்.
          • என்னைப் பொறுத்தவரை தேசாபிமானமும் மனிதாபிமானமும் ஒன்று தான் என்றார் காந்தியடிகள்.
          • நான் ஒரு தேசபக்தன். அதற்கு அடிப்படைக் காரணம் நான் மனிதனாக இருப்பதும், அதற்கு மேல் மனிதாபிமானியாக இருப்பதும் தான் என்றார்.
          • மனிதர் மொழியாலும் நாட்டாலும் உணர்தப்படுவதை காட்டிலும் மனிதத்தன்மையால் பிறருக்கு உணர்த்தப் படுவதே சிறந்து என்பார்.
          • “உலகோர் அனைவரும் குறிக்கோளுடைய மனிதராக இருந்தால், உலகமே ஒரு நல்ல சமுதாயமாக உருவாகும்” என்றார்.

          இன்னா செய்யாமை:

          • தென்னாப்ப்ரிகாவில் இந்தியர்களுக்கு எதிரான கறுப்புச் சட்டங்களைக்காந்தியடிகள் கொளுத்தியதால் சிறையில் அடைக்கப்பட்டார்.
          • சிறையில் சிறப்பாக ஒரு ஜோடி செருப்பை தைத்தார். அதனை தன்னை சிறையில் அடைத்த ஆளுநர் ஸ்மட்ஸ் என்பவருக்கு அளித்தார்.
          • அவரும் இவருக்கு விவிலியம் சார்ந்த இரு நூல்களை பரிசாக கொடுத்தார்.
          • ஸ்மட்ஸ், காந்தியடிகள் இறந்த பொது, அவர் கொடுத்த காலனியை தன் பூசை அறையில் வைத்து வணங்கி வருவதாக கூறினார்.

          இளைஞர்களின் கடமை:

          • நமது நாட்டிற்கே உரிய கிராமத் தொழில்களையும் நாட்டுப்புறக் கலைகளையும் வளர்க்க இளைஞர்கள் முன்வர வேண்டும் என்றார்.
          • “தன்னாட்டுப் பொருள் இயக்கமான சுதேசி இயக்கத்தை வளர்க்கும் கடமை இளைஞர்களுக்கே உரியது” என்றார்.
          • தீண்டாமைக் கொடுமையை வலுவுடன் எதிர்த்து நிற்குமாறு இளைஞர்களுக்கு அறிவுறுத்தினார்.

          கலித்தொகை

          சொற்பொருள்:

          • கிளை – சுற்றம்
          • நோன்றல் – பொறுத்தல்

          இலக்கணக்குறிப்பு;

          • ஒழுகுதல் – தொழிற்பெயர்
          • பொறுத்தல் – தொழிற்பெயர்

          பிரித்தறிதல்;

          • அன்பெனப்படுவது = அன்பு + எனப்படுவது
          • பண்பெனப்படுவது = பண்பு + எனப்படுவது

          ஆசிரியர் குறிப்பு:

          • நல்லந்துவனார் சங்க காலத்தவர்.
          • இவரை பற்றிய குறிப்புகள் கிடைக்கப்பெறவில்லை.
          • இவர் நெய்தல் கலியில் 33 பாடல்கள் பாடியுள்ளார்.
          • கலித்தொகையை தொகுத்தவர் இவரே.

          நூல் குறிப்பு:

          • இந்நூல் கலிப்பாவால் ஆனது.
          • இது நாடகப் பாங்கில் அமைந்துள்ளது.
          • இசையோடு பாடுவதற்கு ஏற்றது.
          • இந்நூலில் கடவுள் வாழ்த்தையும் சேர்த்து 150 பாடல்கள் உள்ளன.
          • கலிப்பா துள்ளல் ஓசை உடையது.
          • இந்நூலை “கற்றறிந்தோர் ஏத்தும் கலி” எனச் சிறப்பிப்பர்.

          நந்திக் கலம்பகம்

          சொற்பொருள்:

          • புயல் – மேகம்
          • பனண – மூங்கில்
          • பகரா – கொடுத்து
          • பொருது – மோதி
          • நிதி – செல்வம்
          • புனல் – நீர்
          • கவிகை – குடை

          இலக்கணக்குறிப்பு:

          • பொழிதருமணி – வினையெச்சம்
          • வருபுனல் – வினையெச்சம்
          • நிதிதருகவிகை – வினையெச்சம்

          நூல் குறிப்பு:

          • ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
          • பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மனை பாட்டுடைத் தலைவனாக கொண்டது இந்நூல்.
          • கலம்பக நூல்களில் இதுவே முதல் நூல்.
          • கலம்பகம் என்பது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
          • பலவகைப் பொருள்களைப் பற்றிப் பாடல்களைக் கலந்து இயற்றப்பெரும் நூல் கலம்பகம்.
          • கலம்பகம் பதினெட்டு உருபுகளை கொண்டது.

          நாலாயிரத் திவ்விய பிரபந்தம்

          மீன்நோக்கும் நீள்வயல்சூழ் வித்துவக்கோட் டம்மாஎன்
          பானோக்கா யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன்
          தானோக்கா தெத்துயரம் செய்திடினும் தார்வேந்தன்
          கோனோக்கி வாழுங் குடிபோன் றிருந்தேனே
          - குலசேகர ஆழ்வார்

          சொற்பொருள்:

          • மீன்நோக்கும் – மீன்கள் வாழும்
          • என்பால் – என்னிடம்
          • தார்வேந்தன் – மாலையணிந்த அரசன்
          • கோல்நோக்கி – செங்கோல் செய்யும் அரசனை நோக்கி

          இலக்கணக்குறிப்பு:

          • நோக்காய் – முன்னிலை ஒருமை வினைமுற்று
          • கோல்நோக்கி – இரண்டாம் வேற்றுமைத்தொகை
          • தார்வேந்தன் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
          • வாழும்குடி – பெயரெச்சம்

          பிரித்தறிதல்:

          • பற்றில்லேன் = பற்று + இல்லேன்
          • போன்றிருந்தேன் = போன்று + இருந்தேன்

          ஆசிரியர் குறிப்பு:

          • கேரள மாநிலத்தில் உள்ள திருவஞ்சைக்களத்தில் பிறந்தவர் குலசேகர ஆழ்வார்.
          • இராமபிரானிடம் பக்தி மிகுதியாக கொண்டதால், இவர் “குலசேகரப் பெருமாள்” எனவும் அழைக்கப்பட்டார்.
          • இவர் 12 ஆழ்வார்களுள் ஒருவர்.
          • இவர் இயற்றிய பெருமாள் திருமொழியில் 105 பாசுரங்கள் உள்ளன.
          • இவர் தமிழில் பெருமாள் திருமொழியும், வடமொழியில் முகுந்தமாலை என்னும் நூலையும் இயற்றியுள்ளார்.
          • குலசேகரர், திருவரங்கத்தின் மூன்றாவது மதிலைக் கட்டியதால், அதற்குக் குலசேகரன் வீதி என்னும் பெயர் இன்றும் வழங்கி வருகிறது.
          • இவரின் காலம் கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு.

          திருவருட் பிரகாச வள்ளலார்

          மறுமலர்சிக் காலம்:

          • பத்தொன்பதாம் நூற்றாண்டை தமிழின் மறுமலர்ச்சிக் காலம் என்பர்.
          • அக்காலத்தே புலவர் பெருமக்களாலும் சமூகச் சீர்திருத்தச் செம்மல்களாலும் போற்றப்படும் பெருஞ்சிறப்பை பெற்றவர் வள்ளலார்.

          வருவிக்க உற்றவர்:

          • கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டத்தில் உள்ள மருதூரில் 05.10.1823இல் இராமையா, சின்னம்மை இனையார்க்கு ஐந்தாவது மகவாக இராமலிங்கர் பிறந்தார்.
          • ஆலய அந்தணர் இவர் குழந்தையாக இருந்த பொழுது, இவரை “இறையருள் பெற்ற திருக்குழந்தை” என்று பாராட்டினார்.
          • “அகத்தே கறுத்துப் புறத்து வெளுத்து இருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்து” என இறைவன் தம்மை வருவிக்க உற்றதாகக் கூறுவார்.
          • இவர் சபாபதி என்பவரிடம் கல்வி கற்றார்.
          • ஒன்பது வயதிலேயே பாடல் புனையும் திறன் பெற்றிருந்தார்.

          உத்தம மனிதர்:

          • திகம்பர சாமியார், இவரை “ஓர் உத்தம மனிதர்” என்றார்.

          ஒருமையுணர்வு:

          • சென்னையில் உள்ள கந்தக்கோட்டத்து இறைவனை இராமலிங்கர் வணங்கி பாடிய பாடல்களின் தொகுப்பே “தெய்வமணிமாலை”.
          ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
          உத்தமர்தம் உறவு வேண்டும்
          உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
          உறவு கலவாமை வேண்டும்
          • இராமலிங்கர், “வடிவுடை மாணிக்கமாலை” என்னும் நூலையும், திருவெற்றியூர் சிவபெருமான் மீது “எழுந்தரியும் பெருமான் மாலை” என்னும் நூலையும் பாடினார்.

          புரட்சித் துறவி:

          • ஒருமைவாழ்வு, ஒருமையரசு, ஒருமையுலகம் காண விரும்பினார்.
          • ஆணும் பெண்ணும் சமம் என்றார்.
          ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்
          ஒருமையுளர் ஆகிஉலா கியல்நடத்தல் வேண்டும்
          சங்கடம் விளைவிக்கும் சாதியையும் மதத்தையும் தவிர்த்தேன்

          பசிப்பிணி மருத்துவர்:

          • “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று பயிர்வாடத் தாம் வாடினார்.
          • வடலூரில் “சத்திய தருமச்சாலை” நிறுவி அனைவர்க்கும் உணவளித்தார்.

          பேரின்ப வீட்டின் திறவுகோல்;

          • “உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்” என்றார் வள்ளலார்.
          • கடவுளின் பெயரால் உயிர் கொலை செய்வதனை அறவே வெறுத்தார்.
          • போரில்லா உலகை படைக்க விழைந்தார்.

          புதுநெறி கண்ட புலவர்:

          • ஆறு தொகுதிகள் கொண்ட இவரது பாடல்களைத் “திருவருட்பா” என மக்கள் போற்றுகின்றனர்.
          • இவர் உருவ வழிபாட்டை நீக்கி, ஒளி வழிபாட்டை மக்கள் பின்பற்றச் செய்தார்.
          • பாரதியார் இவரை “புதுநெறி கண்ட புலவர்” எனப் போற்றினார்.

          தமிழ்ப்பற்று:

          • தமிழ் மொழியே இறவாத நிலை தரும் என்றார்.
          • பயில்வதற்கும் அறிதற்கும் மிகவும் இலேசுடையதாய், பாடுவதற்கும் இனிமை உடைய மொழி என்றார்.

          இறைநிலை அடைதல்:

          • 1874ஆம் ஆண்டு தைப்பூசத் திருநாள் அன்று இறவாநிலை எய்தினார்.

          அயோத்திதாசப் பண்டிதர்

          தோற்றம்:

          • சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள, மக்கிமா நகரில், 1845ஆம் ஆண்டு மே திங்கள் இருபதாம் நாள் பிறந்தார்.
          • இவரின் தந்தையார் பெயர் கந்தசாமி.
          • இவரின் இயற்பெயர் = காத்தவராயன்.

          சிறப்பு:

          • இவர் தென்னிந்திய சீர்திருத்தத்தின் தந்தை எனப் போற்றப்படுகிறார்.

          குருவை போற்றிய குருமணி:

          • இவர் அயோத்திதாசர் என்பவரிடம் கல்வி கற்றார்.
          • இவர் சித்த மருத்துவமும் பயின்றார்.
          • தம் ஆசிரியர் பெயரையே தம் பெயராக ஆக்கிக்கொண்டார்.
          • அவரின் ஆசிரியர் எழுதிய கவிதையை, தாம் பிற்காலத்தில் தொடங்கிய “ஒரு பைசாத் தமிழன்” எனும் இதழில் வெளியிட்டார்.

          திருமணம்:

          • இவர் நீலகிரி மலைப்பகுதியில் வாழும் தொடர் இனப்பிரிவில் கலப்புத்திருமணம் செய்துக்கொண்டு பத்து ஆண்டுகள் இரங்கூன் சென்று வாழ்ந்தார்.

          புத்த நெறி:

          • இவர் புத்த நெறியால் கவரப்பட்டார்.
          • புத்த மதக் கருத்துக்களை எல்லோருக்கும் எடுத்துரைத்தார்.
          • தமக்குப் பிறந்த மகன்களுக்குப் பட்டாபிராமன், மாதவராம், சானகிராமன், இராசாராம் என்று பெயர் சூட்டினார்.
          • தம் மகள்களுக்கு அம்பிகதேவி, மாயாதேவி என்று பெயரிட்டார்.

          சமூகப் பணி:

          • இவர் மருத்துவர் என்றும் பண்டிதர் என்றும் அழைக்கப்பெற்றவர்.
          • எவரையும் சாதி பெயரை சொல்லி அழைப்பது தவறு என்றார்.
          • தாழ்த்தப்பட்டவர்களுக்குத் கல்வி வசதி, கல்வி உதவித்தொகை, கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசுவேலை போன்றவற்றை போராடி பெற்று தந்தார்.
          • தாழ்த்தப்பட்ட மக்களுக்காக சென்னையில் ஐந்து இடங்களில் “ஆல்காட் பஞ்சமர் பள்ளிகள்” தொடங்கினார்.

          இதழ்ப்பணி:

          • அன்றைய காலணா விலையில் “ஒரு பைசாத் தமிழன்” என்ற இதழை வெளியிட்டார்.
          • அது 19.06.1907 முதல் சென்னை இராயப்பேட்டையில் இருந்து புதன் தோறும் நான்கு பக்கங்களுடன் வெளிவந்தது.

          புதிய தீபாவளி:

          • எள்ளு செடியின் விதையில் இருந்து நெய் கண்டுபிடித்த திருநாளே தீபாவளி என்று புதிய விளக்கம் தந்தார்.
          • அதற்கு ஆதாரமாக ஜப்பான் நாட்டில் இன்றும் நுகர்பொருள் கண்டுபிடிப்புத் திருநாளாகத் தீபாவளி கொண்டாடப்படுகிறது என்றார்.

          இயற்றிய நூல்கள்:

          • “புத்தரது ஆதிவேதம்”(28 காதைகள், பாலி, ஆங்கிலம் ஆகிய மொழி துணையுடன் எழுதினார்).
          • இந்திரதேசத்து சரித்திரம.

          பிறப்பணி:

          • தமிழில் எழுத்து சீர்திருத்தம் செய்தார்.
          • திருவாசகத்திற்கு உரை எழுதியுள்ளார்.

          மறைவு:

          • “நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியது ஒன்றே. அதாவது, உங்களுடைய தருமமும் கருமமுமே உங்களைக் காக்கும்” என்றார்.
          • 1914ஆம் ஆண்டு மேமாதம் ஐந்தாம் நாள் மறைந்தார்.

          நிற்க நேரமில்லை


          இன்றிளைப் பாறுவம் என்றிருந்தால் – வழி
          என்னென்ன வாகுமோ ஓரிரவில்
          சென்றிளைப் பாறுக முற்றிடத்தே – தம்பி
          தேன்வந்து பாயும் உன் நெஞ்சிடத்தே!
          சாதனைப் பூக்களை ஏந்துமுன்னே – இங்கு
          நல்லசெடி இளைப் பாறிடுமோ?
          வேதனை யாவும் மறந்ததுபார் – செடி
          வெற்றி கொண்டேந்திய பூவினிலே
          - சாலை இளந்திரையன்

          சொற்பொருள்:

          • செத்தை – குப்பைகூளம்
          • இளைப்பாறுதல் – ஓய்வெடுத்தல்

          ஆசிரியர் குறிப்பு:

          • சாலை. இளந்திரையனின் பெற்றோர் இராமையா, அன்னலட்சுமி.
          • இவர் திருநெல்வேலி மாவட்டம் சாலைநயினார் பள்ளிவாசல் என்னும் இடத்தில பிறந்தார்.
          • தில்லிப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவாரக இருந்தார்.
          • உலகத்தமிழ் ஆராய்சிக் கழகம், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், தில்லித் தமிழ் எழுத்தாளர் சங்கம், உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் தோன்றக் காரணமாக இருந்தவர்.
          • 1991இல் “பாவேந்தர் விருதினை” பெற்றவர்.
          • காலம் = 06.09.1930 – 04.10.1998.

          நூல் குறிப்பு:

          • இப்பாடல் “பூத்தது மானுடம்” என்னும் கவிதைத் தொகுப்பில் இல்லது.
          • மேலும் இவர் புரட்சி முழக்கம், உரை வீச்சு போன்ற நூல்களை படைத்துள்ளார்.

          நூலகம்:

          • ஒரு மனிதன் ஆண்டுக்கு 2000 பக்கங்களாவது படித்தால் தான் அன்றாட உலக நடப்புகளைத் அறிந்த மனிதனாகக் கருதப்படுவான் என யுனெஸ்கோ கூறியுள்ளது.
          • கிரீஸ் நகர அரசுகளே முதன் முதலாக மக்களுக்கான நூல் நிலையங்களை அமைத்தன.
          • இந்தியாவில் உள்ள நூலகங்களில் கல்கத்தா தேசிய நூலகம் முதன்மையானது.
          • புத்தகச்சாலை, ஏடகம், சுவடியகம், சுவடிச்சாலை, வாசகசாலை, படிப்பகம், நூல்நிலையம், பண்டாரம் என நூலகம் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது.
          • ஆங்கிலத்தில் “லைப்ரரி” என்னும் சொல் நூலகத்தை குறிக்கின்றது.
          • இலத்தின் மொழியில் “லிப்ரா” என்னும் சொல்லிற்குப் புத்தகம் என்பது பெயர்.
          • இந்தியாவிலேயே முதன் முறையாகத் தமிழக அரசுத் தான் 1948ஆம் ஆண்டு சென்னை பொது நூலகச் சட்டத்தை இயற்றியது.
          • தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை “புத்தகப்பூங்கொத்து” என்னும் வகுப்பறை நூலகத் திட்ட்டத்தை தொடங்கியுள்ளது.
          • இந்திய நூலகத் தந்தை  = சீர்காழி சீ.இரா.அரங்கநாதன்.

No comments:

Post a Comment