Monday, 16 March 2015

ஏழாம் வகுப்பு சமசீர்கல்வி தமிழ் வினா விடைகள்...

திரு.வி.க

பண்ணினை இயற்கை வைத்த
பண்பனே போற்றி போற்றி
பெண்மையில் தாய்மை வைத்த
பெரியனே போற்றி போற்றி
வண்மையை உயிரில் வைத்த
வள்ளலே போற்றி போற்றி
உண்மையில் இருக்கை வைத்த
உறவனே போற்றி போற்றி
- திரு.வி.க

சொற்பொருள்:

  • பண் – இசை
  • வண்மை – கொடைத்தன்மை
  • போற்றி – வாழ்த்துகிறேன்

ஆசிரியர் குறிப்பு:

  • திரு.வி.கலியாணசுந்தரனார்(திருவாரூர் விருதாச்சலனார் மகனார் சுருக்கமே திரு.வி.க என்பது)
  • பெற்றோர் = விருதாச்சலனார் – சின்னம்மையார்
  • பிறந்த ஊர் = காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள துள்ளம்.
  •  இவ்வூர், தற்போது  தண்டலம் என அழைகப்படுகிறது. இவ்வூர் சென்னையை அடுத்துள்ள போரூருக்கு மேற்கே உள்ளது.

சிறப்பு:

  • இவர் தொழிலாளர் நலனுக்கும் பெண்கள் முன்னேற்றத்திற்கும் அயராது பாடுபட்டார்.
  • மேடைத்தமிழுக்கு இலக்கணம்  வகுத்தார்.
  • இவரின் தமிழ்நடையைப் போற்றித் “தமிழ் தென்றல்” எனச் சிறப்பிக்கபடுகிறார்.

படைப்புகள்:

  • மனித வாழ்கையும் காந்தியடிகளும்
  • பெண்ணின் பெருமை
  • தமிழ்த்தென்றல்
  • உரிமை வேட்கை
  • முருகன் அல்லது அழகு முதலியன

காலம்:

  • 26.08.1883 – 17.09.1953

நூல் குறிப்பு:

  • வாழ்த்துப் பகுதியில் இடம்பெற்றுள்ள இப்பாடல், திரு.வி.க இயற்றிய “பொதுமை வேட்டல்” என்னும் நூலில் “போற்றி” என்னும் தலைப்பில் இடம்பெற்றுள்ளது.
  • “தெய்வ நிச்சயம்” முதலாக “போற்றி” ஈறாக உள்ள நாற்பத்து நான்கு தலைப்புகளில், நானூற்று முப்பது பாக்களால் ஆனது இந்நூல்.

பணி:

  • இவர் சென்னை இராயப்பேட்டை வெஸ்லி பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.

திருக்குறள்

சொற்பொருள்:

  • புரை – குற்றம்
  • பயக்கும் – தரும்
  • சுடும் – வருத்தும்
  • அன்ன – அவை போல்வன
  • எய்யாமை – வருந்தாமல்
  • அகம் – உள்ளம்

ஆசிரியர் குறிப்பு:

  • திருவள்ளுவர் சுருங்க சொல்லி விளங்க வைப்பதில் வல்லவர்.

சிறப்பு பெயர்கள்:

  • நாயனார், முதற்பாவலர், நான்முகனார், மாதானுபாங்கி, செந்நாப்போதார், பெருநாவலர்

நூல் குறிப்பு:

  • மனிதன் மனிதனாக வாழ, மனிதன் மனிதனுக்குக் கூறிய அறவுரை தான் திருக்குறள்.
  • இந்நூல் அறத்துப்பால், பொருட்ப்பால், இன்பத்துப்பால் என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டது.
  • இதில், நூற்று முப்பது மூன்று அதிகாரங்கள் உள்ளன.
  • ஒவ்வோர் அதிகாரத்திற்கும் பத்துக் குறட்பாக்கள் என ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாக்கள் உள்ளன.
  • இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • இது 107 மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.

செம்மொழித் தமிழ்

உலக மொழிகள்:

  • உலகத்தில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன. அவற்றுள் பல பேச்சு மொழிகளே.
  • “எளிதில் பேசவும், எளிதில் பாடல் இயற்றவும் இயற்கையாக அமைந்தது தென்மொழியாகிய தமிழ் ஒன்றே” என்று வள்ளலார் அருள்கிறார்.

செம்மொழிகள்:

  • திருந்திய செவ்வியல்புகள் பொருந்திய மொழிகள் செம்மொழிகள் எனப்படும்.
  • கிரேக்கம், இலத்தின், சமஸ்கிருதம், சீனம், எபிரேயம், அரபு, ஈப்ரு ஆகியவற்றை செம்மொழிகள் எனப் பட்டியலிடுகிறார் மொழியியல் அறிஞர் ச.அகத்தியலிங்கம்.

திருக்குறள் பற்றி டாக்டர் கிரௌல்:

  • டாக்டர் கிரௌல், “ தமிழ்மொழி அழகான சித்திர வேலைப்பாடமைந்த வெள்ளித்தட்டு; திருக்குறள் அதில் வைக்கப்பட்டுள்ள தங்க ஆப்பிள்; தமிழ் என்னை ஈர்த்தது; குறளோ என்னை இழுத்தது” என்று மொழிந்து இன்புற்றார்.

தமிழின் தொன்மை:

  • உலகில் பழமையான நிலபகுதியான “குமரிக்கண்டத்தில்” தமிழ் தோன்றியதாக “தண்டியலங்கார” மேற்கோள் செய்யுள் கூறுகிறது.
“ஒங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
தன்னே ரிலாத தமிழ்”

தமிழின் மேன்மை:

  • தமிழ் மெல்லோசை மொழி, அதனாலேயே உலக முதன் மொழியாய்த் தோன்றியும் வழக்கொழியாமல் இன்றும் இளமை மாறாமல் கன்னித்தமிழாய் இருந்து வருகிறது.

தமிழ் மொழியின் தாய்மை:

  • பெற்றோரை குறிக்கும் “அம்மை, அப்பன்” என்னும் குமரிநாட்டுத்(நாஞ்சில் நாடு) தமிழ்ச்சொற்கள், வடமொழி உட்பட உலகப் பெருமொழிகள் பலவற்றிலும் வடிவு திரிந்து வழங்கி வருகின்றன.

தமிழ் மொழியின் தூய்மை:

  • “தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்குவது மட்டுமின்றித் தழைத்தோங்கவும் செய்யும்” என்று கூறினார் கால்டுவெல்.

தமிழ் மொழியின் செம்மை:

  • மொழிக்கு இலக்கான வரம்பும் சொற்களின் திருந்திய வடிவும் அவசியம். இவற்றை தமிழில் உள்ளது போல, வேறு எம்மொழியிலும் காண இயலாது. அதனாலேயே தமிழ், “செந்தமிழ்” எனப்பட்டது.

தமிழ் மொழியின் இயற்கை வளர்ச்சி:

“எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” - தொல்காப்பியம்
  • தமிழில் இடுகுறி பெயர்கள் குறைவு.
  • ஒருமை, பன்மை என்னும் இருவகை எண் மட்டுமே தமிழில் உண்டு.
  • வடமொழியில் ஒருமை, இருமை, பன்மையென மூவகை எண் உள்ளன.
  • தமிழில் உயிர்களுக்கு மட்டுமே பால்வேறுபாடு உண்டு; பொருள்களுக்குப் பால்வேறுபாடு இல்லை.

தமிழ் மொழியின் இலக்கண நிறைவு:

  • எல்லா மொழிகளும் “எழுத்துக்கும் சொல்லுக்கும் இலக்கணம் கூறும். ஆனால் தமிழ் அவற்றுடன் சேர்த்து வாழ்வியலுக்கான பொருள் இலக்கணத்தையும்” கூறுகிறது. அதனையும் “அகம், புறம்” என இருவகையாகப் பகுத்துள்ளது.

தமிழ் மொழியின் செய்யுள் சிறப்பு:

  • “கலிப்பா” முதலான செய்யுள் வகைகள் வேறு எம்மொழியிலும் இல்லை.

தமிழ் மொழியின் அணிச் சிறப்பு:

  • புலவர்கள் செய்யுளுக்குச் சிறப்புச் சேர்க்க “உவமை, உருவகம்” முதலிய நூற்றுக்கணக்கான அணிகளைப் பயன்படுத்தி பாடல்களை இயற்றியுள்ளார்கள்.

ஊரும் பேரும்

குறிஞ்சி நில ஊர்கள்:

மலை, கரடு, பாறை, குன்று, குறிச்சி, கிரி
  • மலையின் அருகே உள்ள ஊர்களுக்கு நாகமலை, ஆனைமலை, சிறுமலை, திருவண்ணாமலை, விராலிமலை, வள்ளிமலை எனப் பெயர்கள் உள்ளன.
  • ஓங்கியுயர்ந்த நிலபகுதி – மலை
  • மலையின் உயரத்தில் குறைந்தது – குன்று
  • குன்றின் உயரத்தில் குறைந்தது – கரடு, பாறை
  • குன்றை அடுத்துள்ள ஊர்கள் குன்றூர், குன்றத்தூர், குன்றக்குடி என வழங்கப்பெற்றன.
  • மலையைக் குறிக்கும் வடசொல், “கிரி” என்பதாகும். சிவகிரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோத்தகிரி என்பன மலையையொட்டி எழுந்த ஊர்பெயர்கள்.
  • குருச்சி, ஆழ்வார்க்குருச்சி, கல்லிடைக்குருச்சி, கள்ளக்குருச்சி என்ற பெயர்கள் எல்லாம் குறிஞ்சி நில ஊர்களே. குறிஞ்சி என்னும் சொல்லே மருவிக் குருச்சிஆயிற்று.

முல்லை நில ஊர்கள்:

காடு, புரம், பட்டி, பாடி
  • அத்தி(ஆர்) மரங்கள் சூழ்ந்த ஊர் “ஆர்க்காடு” எனவும், ஆல மரங்கள் நிறைந்த ஊர் “ஆலங்காடு” எனவும், களாச்செடிகள் நிறைந்த ஊர் “களாக்காடு” எனவும் பெயரிட்டனர்.
  • காட்டின் நடுவில் வாழ்ந்த மக்கள், அங்குத் திரியும் விலங்குகளால் தமக்கும், தம் கால்நடைகளுக்கும் ஊறு நேராவண்ணம் வேலி கட்டிப் பாதுகாத்தனர். அவ்வூர்கள் “பட்டி, பாடி” என அழைக்கப்பட்டன.(காளிப்பட்டி, கோவில்பட்டி, சிறுகூடல்பட்டி)

மருத நில ஊர்கள்:

ஊர், குடி, சோலை, பட்டி, குளம், ஏரி, ஊரணி
  • நிலவளமும், நீர்வளமும் பயிர்வலமும் செறிந்த மருதநிலக் குடியிருப்பும் “ஊர்” என வழங்கப்பட்டது.
  • ஆறுகள் பாய்ந்த இடங்களில் “ஆற்றூர்” என வழங்கப்பட்ட பெயர்கள் காலப்போக்கில் “ஆத்தூர்” என மருவியது.
  • மரங்கள் சூழ்ந்த பகுதிகளில் மரங்களின் பெயரோடு ஊர் பெயரை சேர்த்து வழங்கினர்.(கடம்பூர், கடம்பத்தூர், புளியங்குடி, புளியஞ்சோலை, புளியம்பட்டி).
  • குளம், ஏரி, ஊருணி ஆகிவற்றுடன் ஊர் பெயர்களில் இணைத்து வழங்கினர்.( புளியங்குளம், வேப்பேரி, பேராவூரணி).

நெய்தல் நில ஊர்கள்:

பட்டினம், பாக்கம், கரை, குப்பம்
  • கடற்கரை பேரூர்கள் “பட்டினம்” எனவும், சிற்றூர்கள் “பாக்கம்” எனவும் பெயர் பெற்றிருந்தன.
  • பரதவர் வாழ்ந்த ஊர்கள் “கீழக்கரை, கோடியக்கரை, நீலாங்கரை” எனப் பெயர் பெற்றிருந்தன.
  • மீனவர்கள் வாழும் இடங்கள் “குப்பம்” என்று அழைகப்படுகிறது.

திசையும் ஊர்களும்:

ஊர், பழஞ்சி
  • நாற்றிசைப் பெயர்களும் ஊர்களுடன் குறிக்கப்பெற்றன. ஊருக்கு கிழக்கே இருந்த பகுதியை “கீழூர்” எனவும், மேற்கே இருந்த பகுதியை “மேலூர்” எனவும் பெயரிட்டனர்.

நாயக்க மன்னர்கள்:

  • நாயக்க மன்னர்கள் தமிழகத்தை 72 பாளையங்களாக பிரித்து ஆட்சி செய்தனர்.
  • அவர்கள் ஊர்ப்பெயருடன் பாளையத்தை சேர்த்து வழங்கினர்.(ஆரப்பாளையம், மதிகோன்பாளையம், குமாரப்பாளையம், மேட்டுப்பாளையம்)

ஊர் பெயர்கள் மாறுதல்:

  • கல்வெட்டுகளில் காணப்படும் “மதிரை” மருதையாகி இன்று “மதுரை”யாக மாறியுள்ளது.
  • கோவன்புத்தூர் என்னும் பெயர் “கோயமுத்தூர்” ஆகி, இன்று “கோவை” ஆக மருவியுள்ளது.

புறநானூறு

நெல்லும் உயிரன்றே; நீரும்உயி ரன்றே;
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;
அதனால் யான்உயிர் என்பது அறிகை
வேன்மிகு தானை வேந்தர்க்குக் கடனே;
- மோசிகீரனார்

சொற்பொருள்:

  • அறிகை – அறிதல் வேண்டும்
  • தானை – படை
  • கடனே – கடமை

ஆசிரியர் குறிப்பு:

  • மோசிகீரனார், தென்பாண்டி நாட்டிலுள்ள “மோசி” என்னும் ஊரில் வாழ்தவர்.
  • “கீரன்” என்னும் குடிப்பெயரை உடையவர்.
  • உடல் சோர்வினால் அரசுக்குரிய முரசுக் கட்டிலில் உறங்கியபோது, “சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை” என்ற அரசனால் கவரிவீசப் பெற்ற பெருமைக்குரியவர்.
  • இவர் பாடிய பாடல்கள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகியவற்றுள் உள்ளன.

நூல் குறிப்பு:


  • புறம் + நான்கு + நூறு = புறநானூறு.
  • இந்நூல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
  • இது புறம் பற்றிய நானூறு பாடல்களின் தொகுப்பு.
  • புறம் என்பது மறம் செய்தலும் அறம் செய்தலும் ஆகும்.

    முதுமொழிக்காஞ்சி

    சொற்பொருள்:

    • ஆர்கலி – நிறைந்த ஓசையுடைய கடல்
    • காதல் – அன்பு, விருப்பம்
    • மேதை – அறிவு நுட்பம்
    • வண்மை – ஈகை, கொடை
    • பிணி – நோய்
    • மெய் – உடம்பு

    ஆசிரியர் குறிப்பு:

    • பெயர்: மதுரை கூடலூர் கிழார்
    • பிறந்த ஊர்: கூடலூர்
    • சிறப்பு: இவர் தம் பாடல்களை நச்சினார்க்கினியர் முதலிய நல்லுரையாசிரியர்கள் மேற்கோள்களாக கையாண்டுள்ளர்கள்.
    • காலம்: சங்க காலத்திற்குப்பின் வாழ்ந்தவர்.

    நூல் குறிப்பு:

    • முதுமொழிக்காஞ்சி என்பது காஞ்சித்திணையின் துறைகளுள் ஒன்று.
    • இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
    • இந்நூலை “அறவுரைக்கோவை” எனவும் கூறுவர்.
    • இந்நூலில் பத்து அதிகாரங்களும், அதிகாரத்திற்கு பத்துச் செய்யுள் வீதம் நூறு பாடல்களும் உள்ளன.

    மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்

    உ.வே.சா:

    • “யார் காப்பார் என்று தமிழன்னை ஏங்கிய பொது நான் காப்பேன் என்று எழுந்தவர் உ.வே.சா. அவரே அனைவராலும் “தமிழ்த்தாத்தா” என்று அழைக்கபடுபவர்.
    • உ.வே.சா.இன் ஆசிரியரே “மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்”.

    இளமையும் கல்வியும்:

    • மீனாட்சிசுந்தரனார் 1815ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் நாள் திருச்சி மாவட்டம் “எண்ணெய்க்கிராமத்தில்” பிறந்தார்.
    • பெற்றோர்: சிதம்பரம் – அன்னத்தாச்சியார்.
    • தமது தந்தையிடமே கல்வி கற்றார்.

    கல்வியே வாழ்க்கை:

    • மீனாட்சிசுந்தரனார் திருமணம் செய்துகொண்டு குடும்பத்துடன் “திரிசிரபுரத்தில்”(திருச்சி) வாழ்ந்தார்.
    • அவரை “திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரனார்” என்றே அழைப்பர்.
    • அவரிடம் “கல்வி கற்க வேண்டும்” என்ற வேட்கை தணியாததாக இருந்தது.
    • “கல்வியே வாழ்கை” என்று இருந்தவர்.

    தமிழ் கற்பித்தல்:

    • மீனாட்சிசுந்தரனார் சாதி, சமயம் பாராது அனைவருக்கும் கல்வி கற்பித்தார்.
    • குலாம்காதர் நாவலர், சவரிராயலு, தியாகராசர், சாமிநாதர் ஆகியோர், அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்.
    • இவர் சில காலம் திருவாவடுதுறையில் ஆதின வித்துவானாக பணியாற்றினார்.
    • திருவாவடுதுறையில் வாழ்ந்த காலத்தில் தான் உ.வே.சாமிநாதருக்கு ஆசிரியராக இருந்தார்.

    தமிழ்த் தொண்டு:

    • இவர், 80கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார்.
    • கோவில்களை பற்றிய “தலபுராணங்கள்” பல இயற்றியுள்ளார்.

    பண்பு நலன்கள்:

    • மீனாட்சிசுந்தரனார் அருங்குணமும் நிறைந்த புலமையும் தளராத நாவன்மையும் படைத்தவர்.
    • நகைச்சுவை உணர்வு மிக்கவர்.
    • ஒருமுறை அவரது நண்பர் ஆறுமுகம் என்பவர், தம்முடைய குடும்பத் தொடர்பாக கும்பகோணத்தில் ஒருவருக்குப் பத்திரம் ஒன்று எழுதிக்கொடுத்தார்.
    • அதில், சாட்சிக் கையொப்பமிட வந்த ஒருவருடைய இருப்பிடம் கும்பகோணத்தில் உள்ள சுண்ணாம்புக்காரன் தெரு என்பது. அதனை “நீற்றுக்காரத் தெரு” எனவும் வழங்குவர். இந்த இரண்டில் எதனைப் பெயருக்கு முன்னால் சேர்க்கலாம் என்று அவர் கேட்டபோது, மீனாட்சிசுந்தரனார் “இரண்டும் வேண்டாம், மூன்றாவது தெரு” என்று போட்டுவிடும் என்று சொன்னார். அதிலுள்ள நகைச்சுவை உணர்வை அனைவரும் அறிந்து மகிழ்ந்தனர். மூன்றாவது என்பது சுண்ணாம்பைக் குறிக்கும் ஒரு சொல்லாகும்.(வெற்றிலை + பாக்கு + சுண்ணாம்பு)

    நோய்க்கு மருந்து இலக்கியம்:

    • தனக்கு உடல்நிலை சரியில்லாத பொது சற்று ஓய்வெடுத்தல் நல்லதென்று மற்றவர் கூற, “நோய்க்கு மருந்து இலக்கியம்” என்று கூறினார்.

    மறைவு:

    • 01.02.1976 அன்று உலகவாழ்வை நீத்தார்.

    கோவூர்கிழார்:

    இளமைகாலம்:

    • பிறந்த ஊர்: உறையூருக்கு அருகிலுள்ள “கோவூர்”.
    • மரபு: வேளாளர் மரபு.

    பாடியவை:

    • நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, திருவள்ளுவமாலை ஆகியவற்றில் இவரின் 18 பாடல்கள் உள்ளன.

    அவைக்களத் தலைவர்:

    • நலங்கிள்ளி என்ற மன்னன் கோவூர்கிழாரின் புலமையை அறிந்து அவரை “அவைக்களத் தலைவர்” ஆகினான்.

    போரைத் தவிர்த்த புலவர்:

    • சோழர் மரபில் தோன்றிய நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் நெடுங்காலம் பகைமை இருந்து வந்தது.
    • நலங்கிள்ளி உறையூருக்கு அருகில் உள்ள ஆவூர்க்கோட்டையை முற்றுகையிட்டான்.
    • கோவூர்கிழார் நெடுங்கிள்ளியிடம் “நீ வீரனாக இருந்தால் போரிடு; அல்லது கோட்டையை ஒப்படைத்துவிடு; இரண்டில் எதையும் செய்யாமல் கோட்டை மதிலுக்குள் ஒடுங்கியிருப்பது நாணும் தன்மையுடையது” என்றர்.
    • கோவூர்கிழாரின் அறிவுரையை கேட்ட நெடுங்கிள்ளி ஆவூர்க்கோட்டையை விட்டு உறையூர் கோட்டைக்குசென்று கதவடைத்து கொண்டான்.
    • கோவூர்கிழார் நெடுங்கிள்ளியிடம், “நெடுங்கிள்ளியே! உன்னோடு போர் புரிய, கோட்டைக்கு வெளியே முற்றுகையிட்டிருப்பவன் பனம்பூ மாலையணிந்தசேரனும் அல்லன்; வேப்பம்பூ மாலையணிந்த பாண்டியனும் அல்லன்; சோழருக்குரிய அத்திமாலை அணிந்தவனே. உம் இருவருள் எவர் தோற்பினும் தோற்பது சோழர் குடியே’ என்றார்.
    • ஆதலால் “போரை ஒழிமின்” என்றார்.

    மலையமான் பிள்ளைகளை காத்தல்:

    • குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் புகார் நகரை தலைநகராகக் கொண்டு சோழநாட்டை ஆண்டு வந்தான். இவன் சிறந்த கவிஞன்.
    • கிள்ளிவளவனுக்கும், கடையேழு வள்ளல்களுள் ஒருவனான மலையமான் திருமுடிக்காரிக்கும் பெரும் பகை இருந்தது. கிள்ளிவளவன் காரியின் இரு பிள்ளைகளையும் கவர்ந்து வந்து யானை காலில் இடறிக் கொள்ள முடிவு செய்தான்.
    • கோவூர்கிழார் கிள்ளிவலவனிடம் சோழ முன்னோர்கள் பெருமை எடுத்துக்கூறி காரியின் இரு பிள்ளைகளையும் மீட்டார்.

    சிறை மீட்ட செம்மல்:

    • நலங்கிள்ளியை பாடி பரிசு பெற்ற இளந்தரையனார், நெடுங்கிள்ளியிடம் சென்று பாடினார்.
    • இளந்தத்தனாரை நலங்கிள்ளியின் ஒற்றன் என்று கருதிய நெடுங்கிள்ளி அவரை சிறையிலிட்டான்.
    • கோவூர்கிழார் நெடுங்கிள்ளியிடம் புலவர்களின் இயல்புகளை எடுத்துக்கூறி அவரை மீட்டார்.

    திரிகடுகம்

    இல்லர்க்கொன் றீயும்  உடைமையும், இவ்வுலகில்
    நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் – எவ்வுயிர்க்கும்
    துன்புறுவ செய்யாத தூய்மையும் இம்மூன்றும்
    நன்றறியும் மாந்தர்க் குள.
    - நல்லாதனார்

    சொற்பொருள்:

    • பால்பற்றி – ஒருபக்கச் சார்பு
    • சாயினும் – அழியினும்
    • தூஉயம் – தூய்மை உடையோர்
    • ஈயும் – அளிக்கும்
    • நெறி – வழி
    • மாந்தர் – மக்கள்
    • வனப்பு – அழகு
    • தூறு – புதர்
    • வித்து – விதை

    ஆசிரியர் குறிப்பு:

    • திரிகடுகத்தின் ஆசிரியர் நல்லாதனார்.
    • இவர் திருநெல்வேலி மாவட்டம் திருத்து என்னும் ஊரை சேர்ந்தவர்.
    • இவரைச், “செறுஅடுதோள் நல்லாதன்” எனப் பாயிரம் குறிப்பிடுவதால், இவர் போர்வீரராய் இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

    நூல் குறிப்பு:

    • திரிகடுகம், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
    • நூறு வெண்பாக்களை கொண்டது.
    • “சுக்கு, மிளகு, திப்பிலி” ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய மருந்துக்கு “திரிகடுகம்” எனப் பெயர்.
    • அதுபோல், திரிகடுகம் என்னும் இந்நூல், மூன்று கருத்துக்களை உள்ளடக்கி மனிதனின் மனமயக்கத்தை நீக்குகிறது.

    கணித மேதை இராமனுஜம்

    • பிறப்பு: 22.12.1887
    • ஊர்: ஈரோடு
    • பெற்றோர்: ஸ்ரீநிவாசன் – கோமளம்
    • இவர் பிறந்து மூன்று ஆண்டு வரை பேசும் திறன் இல்லாமல் இருந்தார்.
    • தனது தாயாரின் தந்தை ஊரான காஞ்சிபுரத்தில் திண்ணை பள்ளியில் படித்தார்.

    கும்பகோணம்:

    • இராமானுஜனின் தாத்தாவின் பணிநிமித்தம் “கும்பகோணம்” வந்ததால், பின்பு அவரின் கல்வி கும்பகோணத்தில் தொடர்ந்தது.

    பூஜ்யத்திற்கு மதிப்புண்டு:

    • ஒருமுறை வகுப்பில் அவரின் ஆசிரியர் “பூஜ்யத்திற்கு மதிப்பில்லை” என கூற, அதற்கு இராமானுஜன் பூஜ்யத்திற்கு மதிப்புண்டு என்று விளக்கி எடுத்துரைத்தார்.

    கார்:

    • 1880இல் இலண்டன் நகரில் “கார்” என்பவர் பதினைந்தாவது வயதிலேயே கணிதத்தில் சிறந்து விளங்கியதுப்போல, இவரும் சிறு வயதிலேயே கணிதத்தில் சிறந்து விளங்கினார்.

    எழுத்தர் பணி:

    • தந்தை ஸ்ரீனிவாசனின் முயற்சியால் இவருக்கு சென்னை துறைமுகத்தில் “எழுத்தர்” பணி கிடைத்தது.

    பெர்னௌலிஸ் எண்கள்:

    • தான் கண்டுபிடித்த தேற்றங்களையும், எடுகோள்களையும் கேள்விகளாகத் தொகுத்து இந்தியக் கணிதக் கழகப் பத்திரிக்கைக்குச் சென்னைத் துறைமுகத்தின் தலைமை பொறியாளர் ஃபிரான்சிஸ் ஸ்ப்ரிங் என்பார் மூலம் அனுப்பினார். “பெர்னௌலிஸ் எண்கள்” எனும் தலைப்பில் வெளியான அவரது கட்டுரை, மிகந்த வரவேற்பை பெற்றது.

    ஹார்டி & ஈ.எச்.நெவில்:

    • தமது கண்டுபிடிப்புகளை விரிவாக எழுதி இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பேராசிரியர் “ஹார்டி” என்பவருக்கு கடிதமாக அனுபினார். ஹார்டி, கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தின் இணைந்துள்ள திரிநிட்டி கல்லூரியின் பேராசிரியர் ஈ.எச்.நெவில் மூலம், அவரை இங்கிலாந்திற்கு வரவழைத்தார்.

    உதவித்தொகை:

    • இராமனுஜம், 18.04.1914 அன்று திரிநிட்டி கல்லூரியில் ஆராய்ச்சி மாணவராக சேர்ந்தார். அவருக்கு ஆண்டு ஒன்றிற்கு “60” பவுண்டு உதவித்தொகையாக வழங்கப்பட்டது. “ஹார்டி, லிட்டில்வுட்” இருவரும் கணிதத்தில் இரட்டை மாமேதைகளாக விளங்கினர்.

    ரோசர்ஸ் இராமானுஜன் கண்டுபிடிப்புகள்:

    • ஹார்டி, “ரோசர்ஸ் இராமானுஜன் கண்டுபிடிப்புகள்” என்ற தலைப்பில் இராமானுஜத்தின் வழிமுறைகளை நூலாக வெளியிட்டு அவருக்கு பெருமை சேர்த்தார்.

    எஃப்.ஆர்.ஸ் பட்டம்:

    • 1918ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவருக்கு எஃப்.ஆர்.ஸ் பட்டம் வழங்கப்பட்டது.

    ஹார்டியின் பரிந்துரை:

    • ஹார்டியின் பரிந்துரையின் பேரில் சென்னைப் பல்கலைகழகம் அவருக்கு 250 பவுண்டு தொகையை ஐந்து ஆண்டுக்குக் கொடுக்க முன்வந்தது. இராமானுஜம் 50 பவுண்டைத் தம் பெற்றோருக்கும் 200 பவுண்டை ஏழை எளிய மாணவர்களுக்கும் வழங்கி வருமாறு கடிதம் எழுதினார்.

    இராமானுஜன் எண்:

    • 1729 என்பதை இராமானுஜன் எண் என்பர்.

    மறைவு:

    • 26.04.1920 அன்று தன்னுடைய 33ஆம் வயதில் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

    பொதுவான குறிப்புகள்:

    • லிட்டில்வுட், இராமானுஜனை பற்றி “ஆய்வாலராக இல்லாவிட்டாலும் இராமானுஜன் குறைந்தபட்சம் ஒரு ஜாகோபி” என்றார்.(ஜாகோபி என்பவர் ஜெர்மனியை சேர்ந்த கணித மேதை, ஆய்லர் என்பவர் சுவிட்சர்லாந்தை சேர்ந்த இணையற்ற கணித மேதை).
    • இந்திரா காந்தி அவர்கள் இராமானுஜனை பற்றி, “கணிதத் திறமையால் விஞ்ஞான உலகினைப் பிரமிக்கச் செய்து வரலாற்றில் குறிபிடத்தக்க ஓர் இடத்தைப் பிற்ற பிறவிக் கணிதமேதை” என்றார்.
    • பேராசிரியர் ஈ.டி.பெல் என்பவர்,”இராமானுஜன் சாதாரண மனிதரல்லர். அவர் இறைவன் தந்த பரிசு” என்றார்.
    • இலண்டன் ஆளுநர் லார்ட்மென்ட் லண்ட் என்பவர் “இராமானுஜன் முதல் தரமான கணித மேதை” என்றார்.
    • பேராசிரியர் சூலியன் கக்சுலி என்பவர், “ இராமானுஜன் தான் இந்த 20ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய கணிதமேதை” என்றார்.
    • 22.12.1962 அன்று அவரது 75ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நடுவண் அரசு பதினைந்து காசு அஞ்சல்தலையை 2500000 வெளியிட்டது. வெளியிட்ட அன்றே அத்தனை அஞ்சல்தலைகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன.
    • 1971ஆம் ஆண்டு, பேராசிரியர் இராமனுஜம் அனைத்துலக நினைவுக்குழு சென்னையில் அமைக்கப்பட்டது.
    • 03.10.1972 அன்று அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி அவர்களால் இராமானுஜம் உயர் ஆராய்ச்சி நிறுவனம் திறந்து வைக்கப்பட்டது.
    • அவர் பணியாற்றிய சென்னைத் துறைமுகம் சார்பில் புதிதாக வாங்கிய குடிநீர்க் கப்பலுக்கு “சீனிவாச இராமானுஜம்” எனப் பெயர் சூட்டப்பட்டது.
    • அமெரிக்காவின் விசுகன்சீன் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் “ரிச்சர்டும் ஆஸ்கேயும்” இணைந்து 1984இல் அவரது மார்பளவு வெண்கலச் சிலையை இந்தியாவிற்கு கொண்டு வந்து வழங்கினர்.
    • கணித குறிப்புகள் அடங்கிய 3 குறிப்பேடுகளையும் ஆராய்சிக் கட்டுரைகளையும் விட்டுச் சென்றுள்ளார். அவரது குறிப்பேடுகளில் 3000 முதல் 4000 தேற்றங்களை 1957ஆம் ஆண்டு “டாடா” அடிப்படை ஆராய்ச்சி நிலையம், அப்படியே ஒளிப்படம் எடுத்து நூலாக வெளியிட்டது.

      தனிப்பாடல் - இரட்டுறமொழிதல்

      சொற்பொருள்:

      • சுழி – உடல்மீது உள்ள சுழி, நீர்ச்சுழி
      • துன்னலர் – பகைவர், அழகிய மலர்
      • சாடும் – தாக்கும், இழுக்கும்

      ஆசிரியர் குறிப்பு:

      • பெயர்: காளமேகப்புலவர்
      • பிறந்த ஊர்: கும்பகோணத்திற்கு அருகில் உள்ள “நந்திக்கிராமம்” எனவும், விழுப்புரம் மாவடத்தில் உள்ள “எண்ணாயிரம்” எனவும் கூறுவர்.
      • இயற்பெயர்: வரதன்
      • பணி: திருவரங்க மடைப்பள்ளியில் பணிபுரிந்தார். வைணவ சமயத்தில் இருந்து சைவசமயத்திற்கு மாறினார்.

      பெயர் காரணம்:

      • “கார்மேகம் போல்” கவிதை பொழியும் ஆற்றல் பெற்றதால், இவர் “காளமேகப்புலவர்” என அழைக்கப் பெற்றார். இவர், இருபொருள் அமைய நகைச்சுவையுடன் பாடுவதில் வல்லவர்.

      நூல் குறிப்பு:

      • புலவர் பலர், பல்வேறு சூழ்நிலைக்கு ஏற்ப அவ்வப்போது பாடிய பாடல்களின் தொகுப்பே “தனிப்பாடல் திரட்டு”. இதனை, இராமநாதபுரம் மன்னர் பொன்னுசாமி வேண்டுதலுக்கிணங்க, சந்திரசேகர கவிராசப் பண்டிதர் தமிழகம் முழுவதம் சென்று தேடித் தொகுத்தார்.

      கல்விக்கு எல்லை இல்லை

      கற்றதுகைம் மண்ணளவு கல்லா(து) உலகளவென்(று)
      உத்தர கலைமடந்தை ஓதுகிறாள் – மெத்த
      வெறும்பந் தயம்கூற வேண்டாம் புலவீர்
      எறும்புந்தன் கையால்எண் சாண்
      - ஔவையார்

      சொற்பொருள்:

      • கைம்மண்ணளவு – ஒரு சாண் எனவும் பொருள் கொள்வர்
      • மெத்த – மிகுதியாக
      • புலவீர் – புலவர்களே
      • கலைமடந்தை – கலைமகள்

      ஆசிரியர் குறிப்பு:

      • இங்கு குறிப்பிடும் ஔவையார், சங்க கால அவ்வையாருக்கு மிகவும் பிற்பட்டவர். கம்பர், ஓட்டகூதர், புகழேந்திப்புலவர் முதலிய புலவர்கள் இவர் காலத்தில் வாழ்ந்ததாகக் கூறுவர்.

      காந்தி கடிதம்

      • 1917ஆம் ஆண்டு புரோச் நகரில் நடைபெற்ற இரண்டாவது  கல்வி மாநாட்டில் காந்தியடிகள் நிகழ்த்திய தலைமை உரை, மாணவர்களக்கு ஏற்ற வானம் கடித வடிவில் அமைகப்பட்டுள்ளது.
      • பயிற்று மொழி பற்றிய நிறைவான முடிவிற்கு வருவதை பற்றிய நோக்கம்.
      • பயிற்றுமொழி குறித்து சிந்திக்காமல் கல்வி கற்பிப்பது, அடித்தளம் இல்லாமல் கட்டடத்தை எழுப்புவதை போன்றது என்கிறார்.
      • கவி இரவிந்த்ரநாத் தாகூரின் இர்பான இலக்கிய நடையின் உயர்விற்குக் காரணம் ஆங்கிலத்தில் அவருக்கு உள்ள அறிவு மட்டுமன்று, தம்முடைய தாய்மொழியில் அவருக்கு இருந்த பற்றும் தான்.
      • முன்சிராம் பேசும் பொது குழந்தைகள், ஆண்கள், பெண்கள் அனைவரும் மிகுந்த ஈடுபாட்டுடன் கேட்பதற்கு காரணம் அவர்தம் தாய்மொழி அறிவே.
      • மதன்மோகன் மாளவியாவின் ஆங்கில பேச்சு வெள்ளியைப்போல் ஒளிவிட்டாலும், அவரின் தாய்மொழிப் பேச்சு தங்கதிப் போன்று ஒழி வீசுகின்றது.
      • தாய்மொழியை வளமுறச் செய்வதற்கு தேவையானது, தங்கள் தாய்மொழியில் உள்ள அன்பும் மதிப்பும்தான்.
      • மக்கள் அறிவுள்ளவர்களாக இருந்தால், அவர்தம் மொழியும் அவ்வாறே அமையும்.
      • தாய்மொழியில் மூலம் நமக்குத் கல்வி அளிக்கப்பட்டிருந்தால் நம்மிடையே பல போஸ்களும் இராய்களும் தோன்றிஇருப்பார்கள்.
      • பள்ளிக்கூடம் வீட்டைப் போன்று இருக்க வேண்டும். குழந்தைக்கு வீட்டில் தோன்றும் எண்ணங்களுக்கும் பள்ளியில் ஏற்படும் எண்ணங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும்.
      • தாய்மொழியைக் கற்பித்தல் மொழியாக வைத்துக்கொண்டால், ஆங்கிலத்தில் அறிவைப் பெறுவது பாதிக்கப்படுமா, இல்லையா என்பதை பற்றி சிந்தனை செய்ய வேண்டியது இல்லை என்கிறார்.
      • தாய்மொழியில் அறிவை பெறுவதே சிறந்தது என்கிறார்.

      திருவாரூர் நான்மணிமாலை

      என்பணிந்த தென்கமலை ஈசனார் பூங்கோவில்
      முன்பணிந்த தெய்வ முனிவோர்கள் – அன்புஎன்னாம்
      புண்சுமந்தோம் நந்தி புடைத்தென்னார் புண்ணியனார்
      மண்சுமந்தார் என்றுருகு வார்.
      - குமரகுருபரர்

      சொற்பொருள்:

      • என்பணிந்த – எலும்பை மாலையாக அணிந்த
      • தென்கமலை – தெற்கில் உள்ள திருவாரூர்
      • பூங்கோவில் – திருவாரூர் கோவிலின் பெயர்
      • புண்ணியனார் – இறைவன்

      ஆசிரியர் குறிப்பு:

      • ஆசிரியர்: குமரகுருபரர்
      • பெற்றோர்: சண்முகசிகாமணிக் கவிராயர் – சிவகாமசுந்தரி அம்மையார்
      • ஊர்: திருவைகுண்டம்

      இயற்றிய நூல்கள்:

      • நீதிநெறிவிளக்கம், முத்துகுமாரசுவாமி பிள்ளைத்தமிழ், கந்தர்கலி வெண்பா, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக்கலம்பகம்.

      காலம்:

      • கி.பி.பதினாறாம் நூற்றாண்டு

      நூல் குறிப்பு:

      • திருவாரூர் + நான்கு + மணிமாலை = திருவாரூர் நான்மணிமாலை.
      • இது திருவாரூரில் எழுந்தருளியுள்ள தியாகராசர் மீது பாடப்பெற்ற நான்மணிமாலை எனப் பொருள்படும். நான்மணிமாலை என்பது தமிழில் வழங்கும் 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று. முத்து, பவளம், மரகதம், மாணிக்கம் என்னும் நால்வகையான மணிகளால் ஆனா மாலையைப் போன்று நால்வகையான பாடல்களால் (வெண்பா, கட்டளைக் கலித்துறை, ஆசிரிய விருத்தம், ஆசிரியப்பா) ஆனா நாற்பது செய்யுள்களை கொண்டது.

      மெய்பொருள் கல்வி

      கற்பிப்போர் கண்கொடுப் போரே! – அந்தக்
      கணக்காயர் உரையினில் இருசெவி சேரே!
      நற்பெயர் எடுத்திட வேண்டும்! – நாளும்
      நன்றாகப் படித்துநீ முன்னேற வேண்டும்!
      - வாணிதாசன்

      சொற்பொருள்:

      • பதுமை – உருவம்
      • மெய்பொருள் – நிலையான பொருள்
      • கணக்காயர் – ஆசிரியர்

      ஆசிரியர் குறிப்பு:

      • இயற்பெயர்: எத்திராசலு (எ) அரங்கசாமி
      • பெயர்: வாணிதாசன்
      • பிறந்த இடம்: புதுவையை அடுத்த வில்லியனூர்
      • பெற்றோர்: அரங்க திருக்காமு – துளசியம்மாள்

      சிறப்பு:

      • “கவிஞரேறு, பாவலர்மணி” என்னும் பட்டங்கள் பெற்றுள்ளார்.
      • தமிழகத்தின் “வேர்ட்ஸ் வொர்த்” என இவரைத் தமிழுலகம் புகல்கிறது.
      • உருசியா, ஆங்கிலம் முதலிய மொழிகளில் இவர் பாடல்கள் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.

      காலம்:

      • 22.07.1915 – 07.08.1974

      நூல் குறிப்பு:

      • கவிஞர் வாணிதாசன் தமிழ் உலகிற்குப் புனைந்து அளித்துள்ள “குழந்தை இலக்கியம்” என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது.

      தூங்கா நகர்

      மதுரை நகரின் சிறப்புப் பெயர்கள்:

      தூங்கா நகர், திருவிழா நகர், கோவில் நகர், பழம்பெரும் தமிழரின் நாகரீக தொட்டில், தென்னிந்தியாவின் ஏதென்ஸ், கூடல் நகர், ஆலவாய்

      மதுரை – பெயர்க்காரணம்:

      • “மதுரை” என்னும் சொல்லுக்கு “இனிமை” என்பது பொருள். தமிழும் மதுரையும் இனிமையின் இயல்பால் அமைந்தவை. மதுரை பற்றி புலவர்கள் கூறும் போதெலாம் தமிழோடு சேர்த்தே கூறினர்.

      புறநானூறு

      • தமிழ்கெழு கூடல்

      சிறுபாணாற்றுப்படை:

      “தமிழ்நிலை பெற்ற தாங்கறு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை”
      -சிறுபாணாற்றுப்படை(நல்லூர் நத்தத்தனார்)

      சிலப்பதிகாரம்:

      “ஓங்குசீர் மதுரை”
      “மதுரை மூதூர் மாநகர்”
      “தென்தமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரை”
      “மாண்புடை மரபின் மதுரை”
      “வானவர் உறையும் மதுரை”
      “பதியெழுவறியாப் பண்பு மேம்பட்ட மதுரை மூதூர்”

      தமிழகத்தின் சிறப்பு:

      சேரநாடு – வேழமுடைத்து
      சோழநாடு – சோறுடைத்து
      பாண்டியநாடு – முத்துடைத்து
      தொண்டைநாடு – சான்றோர் உடைத்து

      நான்மாடக்கூடல்:

      • மதுரைக்கு கூடல் எனவும், ஆலவாய் எனவும் வேறு பெயர்கள் உள்ளன.
      • நான்மாடக்கூடல் என்னும் பெயரே கூடல் என மருவி உள்ளது.
      • “திருவாலவாய், திருநள்ளாறு, திருமுடங்கை, திருநடுவூர்” ஆகிய நான்கு திருக்கோவில்கள் சேர்ந்தமையால், “நான்மாடக்கூடல்” என்னும் பெயர் வழங்கலாயிற்று என்பர்.
      • “கன்னிக்கோவில், கரியமால் கோவில், காளிக்கோவில், ஆலவாய்க் கோவில்” ஆகிய நான்கு திருக்கோவில்களும் மதுரைக்குக் காவலாக அமைந்தமையால், “நான்மாடக்கூடல்” என்னும் பெயர் வந்தது என்றும் கூறுவர்.

      பரஞ்சோதியார் கூற்று:

      • வருணன், மதுரையை அழிக்க ஏழு மேகங்களை அனுப்பினான். அதைப் பற்றி இறைவனிடம் பாண்டியன் முறையிட, இறைவன் நான்கு மேகங்களை மதுரையைக் காக்க அனுப்பினார். அந்நான்கும் நான்கு மாடங்களாக கூடி மதுரையைக் காத்தமையால் “நான்மாடக்கூடல்” என்னும் பெயர் ஏற்பட்டதாக பரஞ்சோதியார் கூறியுள்ளார்.

      அறிஞர்கள் கூற்று:

      • எந்நாட்டவரும் எவ்வூரினரும் வந்து கூடும் வளமான நகர் என்பதால், கூடல் எனப் பெயர் பெற்றதாக கூறுவர்.
      • சங்கம் வைத்துச் செந்தமிழை வளர்க்க, புலவர் எல்லோரும் கூடியதால், கூடல் என்னும் பெயர் ஏற்பட்டதாக அறிஞர் கூறுவர்.

      ஆலவாய் – திருவிளையாடற புராணம் கூற்று:

      • மதுரையை விரிவுபடுத்த எண்ணி, இறைவனிடம் அதன் எல்லையை வரையறுத்துத் தருமாறு வேண்டினான் பாண்டியன். இறைவன், தன் கையணியாகிய பாம்பிடம் எல்லையை வரையறுக்க ஆணையிட்டார். பாம்பு வாழை நீட்டி வலமாகத் தன் உடலை வளைத்தது. அவ்வாலைத் தனது வாயில் சேர்த்து மதுரையின் எல்லையை வகுத்துக் காட்டியது. அன்று முதல், மதுரைக்கு ஆலவாய் என்னும் பெயர் அமைந்ததாகத் “திருவிளையாடற்புராணம்” கூறுகிறது. ஆலவாய் என்பது ஆலத்தை(விடத்தை) உடைய பாம்பினைக் குறிக்கும்.

      வேறு காரணம்:

      • மதுரையில் எழுந்தருளிய ஈசன், ஆலமர நிழலில் வீற்றிருந்ததால் “ஆலவாய்” என்னும் பெயர் ஏற்பட்டதாக கூறுவர்.

      மருதை – மதிரை:

      • மருத மரங்கள் அடர்ந்த பகுதியாக இருந்தமையால் “ம்ஸ்ருதை” என வழங்கிய இடம், காலப்போக்கில் மதுரை என்றாகியதாம். கல்வெட்டில் “மதிரை” என்ற பெயர் காணப்படுகிறது.

      மதுரை நகரமைப்பு:

      • மதுரை நகரின் நடுவில் அண்ணல் கோவிலும் அதனைச் சுற்றி முறையாக ஒழுங்குற அமைந்த தெருக்களும் காண்பதற்குத் தாமரைப் பொகுட்டையும் அடுக்கடுக்கான இதழ்களையும் போன்று காட்சியளித்தன. இது அன்றைய தமிழர் நகரமைப்புக் கலையின் நுணுக்கத்தை உலகிற்குப் பறைசாற்றும் அடையாளமாகத் திகழ்கின்றன.

      மதுரை வீதிகளின் பெயர்கள்:

      அறுவை வீதி - ஆடைகள் விற்கும் கடைப்பகுதி
      கூலவீதி - தானியக்கடை
      பொன்வீதி - பொற்கடைகள்
      மன்னவர் வீதி - மன்னர் வாழும் பகுதி
      மறையவர் வீதி - அந்தணர் வீதி

      மதுரையின் மாண்பு:

      • சிவபெருமான் சுந்தரபாண்டியனாகவும் செவ்வேள் உக்கிரகுமாரப்பாண்டியனாகவும் உமையம்மை மலையத்துவசனக்கு மகளாகத் தோன்றித் தடாதகைப் பிராட்டியாகவும் மதுரையை ஆண்டனர்.
      • அரிமர்த்தன பாண்டியனக்கு அமைச்சராக மாணிக்கவாசகர் திகழ்ந்தார்.
      • திருஞானசம்பந்தர் கூன்பாண்டியன் காலத்தில் மதுரையில் மங்கையர்க்கரசி, குலச் சிறையார் உதவியுடன் சைவத்தைக் காத்தார்.

      திருமலை நாயக்கரின் திருப்பணிகள்:

      • திருமலை நாயக்கர் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டார்.
      • கோடை விடுதியான தமுக்கமும், குளிர்பூந்தடாகமாகிய பெரிய தெப்பக் குளமும், கலை நயத்தில் “தாஜ்மகாலை” ஒத்த “திருமலை நாயக்கர் மகாலை”யும் அமைத்து மதுரையை அழகுபடுத்தினார்.
      • மதுரையை “விழ மல்கு நகராக” மாற்றினார்.

      நிகழ்வுகள்:

      • பரஞ்சோதியாரின் திருவிளையாடற்புராணம் தருமிக்கு இறைவன் தண்டமிழ்ப் பாடல் தந்தமை பற்றிக் கூறுகிறது.
      • மதுரைச் சுற்றியுள்ள மலைகளில் வாழ்ந்த சமண முனிவர்களால் “நாலடியார்” இயற்றப் பெற்றது.
      • குமரகுருபரருக்கு மீனாட்சியம்மையே சிறுமியாக வந்து முத்துமணி மாலையைப் பரிசளித்தார்.

      நான்காம் தமிழ்ச்சங்கம்:

      • வள்ளல் பாண்டித்துரை தேவர், மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்தனர்.

      கோவலன் பொட்டல்:

      • சிலப்பதிகாரக் காப்பியத் தலைவன் கோவலன் கொலைக்களப்பட்ட இடம் “கோவலன் பொட்டல்” என்னும் பெயருடன் இன்றும் அப்பகுதி மக்களிடம் வழங்கப்படுகிறது.

      செல்லத்தம்மன் கோவில்:

      • கையில் சிலம்புடன் உட்கார்ந்திருக்கும் உருவச்சிலை அமைந்த கோவில், செல்லத்தம்மன் கோவிலாக இன்றும் மக்களால் வழிபடப்படுகிறது.

      பொதுவான குறிப்பு:

      • மீனாட்சியம்மன் கோவிலின் நான்கு கோபுரங்களுள் பழமையானது கிழக்குக் கோபுரம்; உயரமானது தெற்குக் கோபுரம். இது 16௦0.9 அடி உயரமும் 1511 சுதை உருவங்களும் .
      • மரம் பயன்படுத்தாமல் கட்டப்பட்டது நாயக்கர் மகால். இதன் ஒவ்வொரு தூணும் 82 அடி உயரமும் 19 அடி சுற்றளவும் கொண்டது.

        ஏர்முனை

        நெத்தி வேர்வை சிந்தினோமே முத்துமுத்தாக – அது
        நெல்மணியாய் விளைஞ்சிருக்குக் கொத்துக்கொத்தாக
        பக்குவமாய் அறுத்துஅதைக் கட்டுக்கட்டாக – அடிச்சுப்
        பதறுநீக்கித் குவிச்சு வைப்போம் முட்டுமுட்டாக!

        வளர்ந்துவிட்ட பருவப்பெண் போல்உனக்கு வெட்கமா? – தலை
        வளைஞ்சு சும்மா பாக்கிறியே தரையின்பக்கமா – இது
        வளர்ந்துவிட்ட தாய்க்குத் தரும்ஆசை முத்தமா? – என்
        மனைக்கு வாக்காத் திருக்கும் நீஎன் சொத்தம்மா
        -மருதகாசி

        சொற்பொருள்:

        • மாறி – மழை
        • சேமம் – நலம்
        • தேசம் – நாடு
        • முட்டு – குவியல்
        • நெத்தி – நெற்றி

        ஆசிரியர் குறிப்பு:

        • பெயர்: அ.மருதகாசி
        • பிறந்த ஊர்: திருச்சி மாவட்டத்தில் உள்ள மேலக்குடிகாடு
        • பெற்றோர்: அய்யம்பெருமாள் – மிளகாயி அம்மாள்
        • சிறப்பு: திரைக்கவித் திலகம்
        • காலம்: 13.02.1920 – 29.11.1989

        நூல் குறிப்பு:

        • “திரைக்கவித் திலகம் அ.மருதகாசி பாடல்கள்” என்னும் தளிப்பில் திரைக்கதைகளுக்கு எழுதிய பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளது.
        • அதில் உழவும் தொழிலும், தாலாட்டு, சமூகம், தத்துவம், நகைச்சுவை என்னும் தலைப்புகளில் பாடல்கள் வகைபடுத்தப் பட்டுள்ளது.

        பொங்கல் வழிபாடு

        “நீயன்றி மண்ணுண்டோ, விண்ணுண்டோ,
        ஒளியுண்டோ, நிலவுமுண்டோ,
        நீருண்டோ, என்னிடம் வாழ்த்துப் பொருளுமுண்டோ?
        கதிரவா கனிந்து வருவாய்! கரும்பு மனமும் இனிபாம் உயிரும்
        நின்னடி படைத்தது விட்டோம்
        கதிரவா! ஏற்று மகிழ்வாய்
        உயர்ந்தவா, உயிரின் முதலே!
        - ந.பிச்சமூர்த்தி

        சொற்பொருள்:

        • திரு – செல்வம்
        • கனகம் – பொன்
        • கோ – அரசன்
        • நிவேதனம் – படையல்அமுது
        • புரவி – குதிரை
        • கடுகி – விரைந்து

        ஆசிரியர் குறிப்பு:

        • இயற்பெயர்: ந. வேங்கட மகாலிங்கம்
        • புனைபெயர்: ந. பிச்சமூர்த்தி
        • ஊர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்
        • தொழில்: 1924 – 1938 வரை வழக்கறிஞர், 1938 – 1954 வரை கோவில் நிருவாக அலுவலர்.
        • எழுத்துப்பணி: கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள்.
        • காலம்: 15.08.1900 – 04.12.1976

        நூல் குறிப்பு:

        • ந. பிச்சமூர்த்தியின் கவிதை நூல்கள் இருபதாம் நூற்றாண்டின் தற்கால இலக்கியத் துறைக்குப் புதிய சிறப்புகளைச் சேர்த்திருக்கின்றன.
        • பாரதிக்குப் பின் கவிதை மரபில் திருப்பம் விளைவித்தவை இவரது படைப்புகள்.
        • “ந. பிச்சமூர்த்தி கவிதைகள்” என்னும் நூலில் 83 கவிதைகள் உள்ளன.

        நெசவு

        துணி நெய்ய பயன்படும் கருவிகள்:

        • அச்சுமரம், படைமரம், விழுதுகம்பு, குத்துக்கம்பி, ஓடம், ஊதுகுழல், பாவு.

        திரு.வி.க. வின் கூற்று:

        • பூவிலே சிறந்த பூ பருத்திப்பூ என்கிறார் திரு.வி.க.

        துணியை பளபளப்பாக்க:

        • நெய்த துணிகளை தேய்த்து பளபளப்பாக்கத் “தேய்ப்புக் கல்லைப்” பயன்படுத்துவர்.

        கலிங்கம்:

        • பாவுநூல் மற்றும் ஊடைநூல் இணைத்து கலிங்கம் என்னும் ஆடை உருவாகிறது.

        பிரபலமான ஆடைகள்:

        • காஞ்சி – பட்டாடைகள்
        • திருப்பூர் – பின்னலாடைகள்
        • மதுரை – சுங்குடி புடவைகள்
        • உறையூர் – கண்டாங்கி சேலைகள்
        • சென்னிமலை – பாய் விரிப்புகள்

        தமிழ் நாடக முன்னோடிகள்

        நாடகம்:

        • கண்ணுக்கும் காதுக்கும் மனத்துக்கும் இன்பம் பயக்கும் கலை நாடகக்கலை.
        • உணர்ச்சியை தூண்டி, உள்ளத்தில் புதைத்து கிடக்கும் அன்பையும் அறிவையும் வெளிப்படுத்தி மக்களைப் பண்படுத்தும் சிறந்த கலை நாடகம்.
        • சயந்தம், முறுவல், மதிவாணன் நாடகத்தமிழ், செயிற்றியம் முதலிய நாடக இலக்கான நூல்களின் பெயர்கள் மட்டுமே இப்போது கிடைக்கின்றன.
        • இடைக்காலச் சோழப் பேரரசர்கள் ஆதரவில் ஆலயங்களில் நாடங்கங்கள் நடத்தப் பெற்றுள்ளன என அறிகிறோம்.

        பரிதிமாற் கலைஞர்(1870 – 1903):

        தமிழ் நாடக பேராசிரியர்
        • உயர்தனிச் செம்மொழித் தகுதி தமிழுக்கே உண்டு என அக்காலத்திலேயே முழங்கியவர்.
        • சூரிய நாராயண சாஸ்திரி என்னும் தம் பெயரைத் தூய தமிழில் பரிதிமாற் கலைஞர் என மாற்றி அமைத்துக் கொண்டார்.
        • இவர், தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டே நாடகத் தொண்டாற்றினார்.
        • மேலைநாட்டு நாடக ஆசிரியர்களான ஷேக்ஸ்பியர், எப்சன், மோலியர் ஆகியோரைப் போன்று தமிழகத்தில் நாடகாசிரியர்கள் தோன்ற வேண்டும் எனப் பெரிதும் விழைந்தவர்.
        • ரூபாவதி, கலாவதி, மான்விஜயம் என்பது இவரின் நாடங்கங்கள்.
        ரூபாவதி, கலாவதி, மானவிஜயம், நாடகவியல்
        • இவர் வடமொழி, மேனாட்டு மரபுகளைத் தமிழ் நாடக மரபோடு இணைத்து “நாடகவியல்” என்னும் நூலைப் படைத்தார்.
        • இவரது “மானவிஜயம்” நாடகம், “களவழி நாற்பது” என்னும் இலக்கியத்தை அடிப்படையாக கொண்டு இயற்றப்பட்டது. சேரமான் கணைக்கால் இரும்போரையுடன் புலவர் பொய்கையாரும் இறந்துபடுகின்றார்; இவ்விருவர் இறப்பிற்கும் தானே காரணம் என்று எண்ணிய சோழன் செங்கணான்
        “மானப் பெருமையை மனக்கொண்டு அந்தோ
        ஈனப் பாரில் இருத்தல் வேட்டிலை
        உண்ணும் போழ்தினில் உன்னைத் கொன்றவன்
        செங்கணான் எனும்இச் சிறுமதி யுடையான்”
        • என்று புலம்பித் தன்னை மாய்த்துக்கொள்ளும் காட்சி, செந்தமிழ் நடைபயில, அவலச்சுவையை வெளிப்படுத்தும் இடமாகும்.

        சந்க்கரதாசு சுவாமிகள்(1867 – 1920):

        நாடகத்தமிழ் உலகின் இமயமலை, தமிழ்த் நாடக தலைமைஆசிரியர்
        • நாடகம் மக்களை மகிழ்விக்க வேண்டும் என்பதே சுவாமிகளின் முதல் நோக்கமாகும்.
        • எனவே, பாமர மக்களுக்குத் தெரிந்த பழங்கதைகளை நாடகமாக்கினார்.
        • நாடகத்தைச் சமுதாய சீர்திருத்தக் கருவியாகவும் கையிலெடுத்த சுவாமிகள், தம் நாடகங்கள் வாயிலாகப் பக்தி, ஒழுக்கம் ஆகியனவற்றை வலியுறுத்தி, மக்களுக்கு நல்லறிவு புகுட்டினார்.
        • சிறுவர்களைக் கொண்டு நாடகக் குழுக்களைத் தோற்றுவித்தார்.

        நாடகங்கள்:

        வள்ளி திருமணம், கோவலன் சரித்திரம், சதி சுலோச்சனா, இலவகுசா, பக்தப் பிரகலாதா, நல்லதங்காள், சதி அனுசுயா, வீர அபிமன்யு,
        • இவர் நாற்பது நாடகங்களை இயற்றியுள்ளார்.

        புத்தநெறி சுப்பிரமணியம் பாராட்டு:

        “துடிப்பிருக்கும் சங்கரதாசு எழுத்தில் எல்லாம்
        சுவைசொட்டும் சந்தநயம் தேய்ந்திருக்கும்”
        • என்று சுவாமிகளின் சந்தப்பாடல்களை பற்றி புகழ்கிறார்.

        சதி சுலோசனா:

        • சதி சுலோச்சனா நாடகத்தில் இந்திரசித்து, தன் நண்பனிடம் பூக்கள் பற்றிக் கேட்க,
        “பூவின் வேய்வறம் பலகோடி அதனை
        எவர் போதிப்பார் தேடி
        அப்பு கலப்பு பதிப்பு கொதிப்பு
        செப்பு அருப்பு இருப்பு நெருப்பு
        உப்பு உரப்பு கசப்பு புளிப்புஇத்தனை பூவிற்குமேல் இரவில் கண்விழிப்பு
        இயம்பிய மொழியெல்லாம் தமிழ்ப் புத்தகக் குறிப்பு”
        • என அடுக்குமொழி பகர்வது இவரது சந்த நடைக்குச் சான்றாகும்.

        கோவலன் சரித்திரம்:

        • இவர் இயற்றிய “கோவலன் சரித்திரம்” மதுரையில் அரங்கேறியபொழுது, காற்சிலம்பு விற்று வர நகருக்குப் போவதாகக் கோவலன் கூறக் கண்ணகியோ,
        “மாபாவியோர் கூடி வாழும் மாநகருக்கு
        மன்னா போகாதீர்”

        என்று பாடுவது போன்ற காட்சி. இதனால் அங்கு குழப்பம் ஏற்பட்டது.

        • சுவாமிகள் அவையினர் முன்பு, “மா என்பது அலைமகளையும், பா என்பது கலைமகளையும், வி என்பது மலைமகளையும் குறிக்கிறது” என்று திருவிளையாடல்புராணம் சான்று காட்டி விளக்கினார்.

        நடிப்புத் திறமை:

        • நல்ல உடற்கட்டும் எடுப்பான தோற்றமும் உடைய இவர் “எமன், இராவணன், இரணியன்” முதலிய வேதங்கள் புனைந்து மேடையில் நிற்கும் பொது பார்பவர்களுக்குக் கிலி அடிக்கும். இவர் எழுத்துத் திறமையோடு நடிப்புத் திறமையும் பெற்றிருந்தார்.

        பம்மல் சம்பந்தனார்(1875 – 1964):

        தமிழ் நாடகத் தந்தை, கலைஞர்
        • பம்மல் சம்பந்தனார் தனது 18வது வயதில் “சுகுணவிலாச சபையைத்” தொடினார்.
        • இவர் தேவையற்ற ஆடல் பாடல்களைக் குறைத்தார்.

        கலைஞர்:

        • பம்மல் சம்பந்தனார், கட்டுக்குலையாதக் நாடகக் குழுவை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார்.
        • அதனால், நாடகர்களால், “கலைஞர்” என மதிக்கப்பட்டார். இவர் நீதித்துறையில் பணியாற்றியவர்.

        நாடகங்கள்:

        • இவர் 94 நாடகங்களைத் படைத்துள்ளார்.
        மனோகரா, யயாதி, சிறுத்தொண்டன், கர்ணன், சபாபதி, பொன்விலங்கு, வாணிபுரத்து வீரன் (ஷேக்ஸ்பியர் நாடகங்களை தழுவி), விரும்பிய விதமே, அமலாதித்தியன்

        கேளிக்கை நாடகம், நையாண்டி நாடகம்:

        • இவர், நாடகக் காட்சிக்கேற்பத் திரைச்சீலைகளையும் பொருத்தமான ஓவியங்களையும் தொங்கவிடுமாறு வற்புறுத்தினார். இவர் கேளிக்கை நாடகம் என்ற வகையினையும், நாடக நையாண்டியினையும் தமிழ் நாடக உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார்.

        அடுக்குமொழிகள்:

        “போட்டும் புனைந்தழகாய்க் கட்டும்
        பீதாம்பரமாம் பட்டும்
        சோதி செய் பகட்டும்
        செயலைக் கண்டு கிட்டும் வருணிக்கும்
        பொழுது எனக்கு மட்டும்.

        சபாபதி நாடகம்:

        • இவரின் சபாபதி என்ற நாடகம் இன்றளவும் மறக்கமுடியாத நகைச்சுவை நாடகம் ஆகும்.
        • சபாபதி என்ற இந்நாடகம் படிக்கவும் பார்க்கவும் நகைச்சுவையை ஏற்படுத்தவல்லது.

        குறள் மாற்றுதல்:

        • குறள் வடிவத்தைத் தன் போக்கிற்கேற்ப மாற்றி எழுதுவார்.
        “சூதினும் சூதானது யாதெனில் சூதினும்
        சூதே சூதா னது”

        திருக்குறள்

        சொற்பொருள்:

        • கசடு – குற்றம்
        • நிற்க – கற்றவாறு நடக்க
        • உவப்ப – மகிழ
        • தலைக்கூடி – ஒன்று சேர்ந்து
        • ஏக்கற்று – கவலைப்பட்டு
        • கடையர் – தாழ்ந்தவர்
        • மாந்தர் – மக்கள்
        • ஏமாப்பு – பாதுகாப்பு
        • காமுறுவர் – விரும்புவர்
        • மாடு – செல்வம்

        முக்கூடற்பள்ளு

        சொற்பொருள்:

        • தத்தும் புனல் – அலையெறியும் நீரும்
        • கலிப்புவேளை – கருமார், கொல்லர், தட்டார் முதலியோர் செய்யும் தொழில்கள்
        • மதோன்மத்தர் – சிவபெருமான்

        ஆசிரியர் குறிப்பு:

        • இந்நூலின் ஆசிரியர் யாரெனத் தெரியவில்லை.
        • ஆயினும் நாடகப் பாங்கில் அமைந்த இந்நூலை இயற்றியவர் “என்னயினாப் புலவர்” எனச் சிலர் கூறுவர்.
        • சந்த நயம் மிக்க நூல்.
        • திருநெல்வேலி மாவட்ட பேச்சு வழக்கு அமைப்பில் வடிக்கப்பட்டுள்ளது.

        நூல் குறிப்பு:

        • நீர் நிறைந்த பள்ளமான சேற்று நிலத்தில் தொழில் செய்யும் பள்ளர்களை பற்றியது.
        • திருநெல்வேலியில் உள்ள “தன்பொருணை, சிற்றாறு, கோதண்டராம ஆறு” ஆகிய மூன்று ஆறுகளும் கூடும் இடம் “முக்கூடல்” ஆகும்.
        • முக்கூடலை “ஆசூர் வடகரை நாடு” என்றும் அழைப்பர்.
        • இதன் தென்பகுதியில் உள்ளது “சீவல மங்கைத் தென்கரை நாடு”.
        • தென்கரை நாட்டில் “மருதசீர்” வீற்றிருக்கும் ஊர் மருதூர்.
        • முக்கூடலில் வாழும் பள்ளி மூத்த மனைவி, மருதூரில் வாழும் பள்ளி இளைய மனைவி.
        • இருவரையும் மணந்து திண்டாடும் பள்ளனின், வாழ்க்கை வளத்தை கூறுகிறது இந்நூல்.

        இயற்கை வேளாண்மை

        இயற்கை வேளாண்மை கூறுகள்= 6:

        • உழுதல், விதைத்தல், தொழு உரமிடுதல், நீர் பாய்ச்சுதல், களை எடுத்தல் மற்றும் காதல்.

        நிலத்தை உழுதல்:

        • விதைக்கும் முன் நிலத்தை பண்பட உழுதல் வேண்டும்.
        • ஒரு பலம் எடையுள்ள மண்ணைக் கால் பலம் எடை அளவிற்கு உலரும் வரை உழுதிட வேண்டும்.

        வள்ளுவர் நிலத்தை உழுவதை பற்றி,

        “தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
        வேண்டாது சாலப் படும்”

        நன்செய், புன்செய்:

        • நீர்வளம் மிக்கது நன்செய். இதில் நெல், கரும்பு, வாழை பயிரிடுவர்.
        • நீர்வளம் குறைந்த பகுதி புன்செய். இதனை “வானம் பார்த்த பூமி” என்பர். இனிலம் பருவமழையை நம்பியே இருக்கும். இதில் கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சாமை போன்றவை விளையும்.

        நல்ல விதையை தேர்ந்தெடுத்தல்:

        • நெல்விதையை முதலில் நாற்றங்காலில் விதைத்து 21 முதல் 25 நாட்கள் வரை வளர்த்து பின்னர், அதை பறித்து பண்படுத்தப்பட்ட சேற்று நிலத்தில் நடுவர்.
        • பின்னர் முறையாக நீர் பாய்ச்சி களை எடுக்க வேண்டும்.

        பயிர் இடையே இடைவெளி:

        நெல்லுக்கு – நண்டோட
        கரும்புக்கு – ஏரோட
        வாழைக்கு – வண்டியோட
        தென்னைக்கு – தேரோட

        இயற்கை உரம்:

        இலைதழை+ஆட்டுஎரு+மாட்டுஎரு+கடலைப்பிண்ணாக்கு+வெப்பம்பிண்ணாக்கு+இழுவைபிண்ணாக்கு

        அங்கக வேளாண்மை:

        • இயற்கை வேளாண்மையை “அங்கக வேளாண்மை” என்றும் அழைப்பர்.

        பஞ்ச கவ்வியம்:

        கோமயம்+சாணம்+பால்+தயிர்+நெய்

        தழை உரம்:

        சணப்பு+அவுரி+கொளுஞ்சி+தக்கைப்பூண்டு

        களையெடுத்தல்:

        • களையெடுத்தல் பற்றி திருவள்ளுவர்,
        “ ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
        நீரினும் நன்றதன் காப்பு

        தனிப்பாடல்

        “இம்பர்வான் எல்லைஇரா மனையே பாடி
        என்கொனர்ந்தாய் பாணாநீ என்றால் பாணி
        வம்பதாம்க ளபமென்றேன் பூசும் என்றாள்
        மாதங்கம் என்றேன்யாம் வாழ்ந்தே மென்றாள்
        பம்புசீர் வேழமென்றேன் தின்னு மென்றாள்
        பகடென்றான் உழுமென்றாள் பழனத் தன்னைக்
        கம்பமா என்றேன்நற் களியாம் என்றாள்
        கைம்மாஎன் றேன்சும்மா கலங்கி னாளே!”
        - அந்தக்கவி வீரராகவர்

        சொற்பொருள்:

        • களபம், மாதங்கம், வேழம், பகடு, கம்பமா, கைம்மா – யானை
        • களபம் – சந்தனம்
        • மாதங்கம் – பொன்
        • வேழம் – கரும்பு
        • பகடு – எருது
        • கம்பமா – கம்பு மாவு

        ஆசிரியர் குறிப்பு:

        • பிறந்த ஊர்: காஞ்சிபுரம் மாவட்டம்
        • வாழ்ந்த ஊர்: களத்தூர்
        • தந்தை: வடுகநாதர்
        • சிறப்பு: சீட்டுக்கவி பாடுவதில் வல்லவர்.
        • காலம்: 17ம் நூற்றாண்டு
        • நூல்கள்: சந்திரவாணன் கோவை, சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ், சேயூர்க் கலம்பகம், திருக்கழுக்குன்றப் புராணம்.

        நூல் குறிப்பு:

        • இப்பாடல், “தனிப்பாடல் திரட்டு” என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.
        • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த  புலவர் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பே இந்நூல்.
        • இதில் 110 புலவர்கள் பாடிய 1113 பாடல்கள் உள்ளன.

        தமிழகத்தின் அன்னிபெசன்ட்

        அறிஞர் அண்ணா:

        • அறிஞர் அண்ணா அவர்களால் “தமிழகத்தின் அன்னிபெசன்ட்” எனப் புகழப்பட்டவர்.

        இளமை காலம்:

        • மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் 1833ஆம் ஆண்டு பிறந்தார்.
        • தேவதாசி குடியில் பிறந்தார்.
        • தேவதாசி குடும்பத்தில் பிறந்த பெண்களுக்கு ஆடலும் பாடலும் உரியன. ஆனால், இவரது பெற்றோர் அவருக்கு அவற்றைக் கற்றுத்தர மறுத்தால், இவரின் குடும்பத்தை அவ்வினத்தார் ஒதுக்கி வைத்தனர்.
        • வறுமையின் காரணமாக அம்மையாரின் தந்தை கிருஷ்ணசுவாமி மகளையும், மனைவியையும் விட்டு சென்றார்.
        • அம்மையாரின் தாயார் இவருக்கு ஐந்து வயதாகும் பொது பத்து ரூபாய்க்கு தேவதாசி ஒருவரிடம் விற்றுவிட்டார்.

        சுயம்பு:

        • தனக்கு இசையும், நாட்டியமும் கற்றுத்தந்த சுயம்பு என்பவரை மணந்தார்.
        • சுயம்பு, அம்மையாரின் அணைத்து போராட்டங்களுக்கும் துணைப் புரிந்தார்.

        முதல் போராட்டம்:

        • 1917இல் தனது முதல் போராட்டத்தை மயிலாடுதுறையில் தொடங்கினார்.
        • அதேவதாசி முறையை எதிர்த்து போராட்டம் நடத்தினார்.

        காந்தி மீது பற்று:

        • அம்மையார் காந்தியடிகள் மீது மிகுந்த பற்று வைத்திருந்தார்.
        • ஆங்கிலேயர்களின் தடை உத்தரவு காரணமாக தான் பேசாமல் தனது கருத்துக்களை “கரும்பலகையில்” எழுதி வெளிப்படித்தினார்.

        மூவர்ணக் கொடி ஆடை:

        • காந்தி இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்டு, இந்திய திரும்பியவுடன் கைது செய்யப்பட்டார்.
        • அம்மையார் மூவர்ணக் கோடியை ஆடையாக உடுத்தினார்.

        குடிசையில் வாழ்தல்:

        • காந்தியத்தை ஏற்போர் குடிசையில் வாழ வேண்டும் என காந்தியடிகள் கூறியதை அடுத்து, அம்மையார் தனது ஓட்டு வீட்டை விட்டு குடிசையில் குடியேறினார்.
        • அக்குடிலின் வெளியே, கரும்பலகையில் “காதர் அணிந்தவர்கள், உள்ளே வரவும்” என எழுதி இருந்தார்.

        மொழிப்போர் பேரணி:

        • 1938ஆம் ஆண்டு நடந்த மொழிப்போர் பேரணியில் உறையூர்(திருச்சி) முதல் சென்னை வரை 42 நாள், 577 மைல் நடைபயணம் மேற்கொண்டார்.
        • இன்நடைப்பயணத்தின் பொது 87 பொதுக்கூட்டங்களில் உரையாற்றினார்.
        • அப்பேரணியில் நடந்து வந்த ஒரே பெண் அம்மையார் மட்டுமே.

        விடிவெள்ளி:

        • அம்மையார், பெண் உரிமைக்குப் பாடுபட்ட விடிவெள்ளியாகத் திகழ்ந்தார்.
        • பொதுவாழ்வில் 50 ஆண்டுகள் ஈடுபட்டுத் தனது 80 வயதில் 27.06.1962 அன்று இவ்வுலக வாழ்வை நீத்தார்.

        திருமண உதவித் திட்டம்:

        • 1989ஆம் ஆண்டு மூவலூர் அம்மையாரின் நினைவைப் போற்றும் வகையில், அவரது பெயரால் ஏழைப் பெண்களுக்கான திருமண உதவித் திட்டத்தினை தமிழக அரசு வழங்கி வருகிறது.

        அம்மானை

        ஆசிரியர் குறிப்பு:

        • திருச்செந்திற்கலம்பகம் என்னும் நூலை எழுதியவர் சுவாமிநாத தேசிகர்.
        • இவரை ஈசான தேசிகர் என்றும் அழைப்பர்.
        • தந்தை = தாண்டவமூர்த்தி
        • கல்வி கற்றது = மயிலேறும் பெருமாள்
        • இவர் திருவாவடுதுறை ஞானதேசிகராகிய அம்பலவாண தேசிகமூர்த்திக்கு தொண்டராய் இருந்தார்.

        நூல் குறிப்பு:

        • திருச்செந்திற்கலம்பகம் என்னும் இந்நூல் 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
        • கலம்பகம் = கலம் + பகம் (களம் = 12, பகம் = 6, கலம்பகம் = 18)
        • கலம்பகம் 18 உருபுகளை கொண்டது.

          சீவக சிந்தாமணி

          சொற்பொருள்:

          • விண் – வானம்
          • வரை – மலை
          • முழவு – மத்தளம்
          • மதுகரம் – தேன் உண்ணும் வண்டு

          ஆசிரியர் குறிப்பு:

          • திருதக்கதேவர் சோழர் குலத்தில் பிறந்தவர்.
          • இவர் சமண சமயத்தை சார்ந்தவர்.
          • இவர் பாடிய மற்றொரு நூல் “நரி விருத்தம்” ஆகும்.

          நூல் குறிப்பு:

          • ஐம்பெரும்காப்பியங்களுள் ஒன்று இநூல்.
          • இன்நூலின் கதை தலைவன் சீவகன்.
          • அவன் பெயரை இணைந்துச் சீவக சிந்தாமணி எனப் பெயர் பெற்றது.
          • இந்நூலுக்கு மணநூல் என்னும் வேறு பெயரும் உண்டு.

          எங்கள் தமிழ்

          சொற்பொருள்:

          • கதி – துணை
          • பேறு – செல்வம்
          • நனி – மிகுதி(மிக்க)
          • தரம் – தகுதி
          • புவி – உலகம்

          ஆசிரியர் குறிப்பு:

          • இயற்பெயர்: கனக சுப்புரத்தினம்
          • பாரதியார் மீது கொண்ட பற்றினால் பாரதிதாசன் என மாற்றி அமைத்துக்கொண்டார்.
          • பெற்றோர்: கனகசபை – இலக்குமியம்மாள்
          • கல்வி: தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகியவற்றில் புலமை மிக்கவர்.
          • இயற்றியவை: குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, சேர தாண்டவம், இருண்ட வீடு, தமிழச்சியின் கத்தி, பிசிராந்தையார், குருஞ்சித் திட்டு, அழகின் சிரிப்பு, தமிழியக்கம் முதலியன.
          • காலம்: 29.04.1891 – 21.04.1964

          உழவின் சிறப்பு

          “மேழி பிடிக்கும்கை வேல்வேந்தர் நோக்கும்கை
          ஆழி தரித்தே அருளும்கை – சூழ்வினையை
          நீக்கும்கை என்றும் நிலைக்கும்கை நீடுழி
          காக்கும்கை காராளர் கை
          - கம்பர்

          சொற்பொருள்:

          • மேழி – கலப்பை, ஏர்
          • வேந்தர் – மன்னர்
          • ஆழி – மோதிரம், சக்கரம், கடல்
          • காராளர் – மேகத்தை ஆளுகின்றவர்களாகிய உழவர்.

          ஆசிரியர் குறிப்பு:

          • இயற்பெயர் = கம்பர்
          • பிறந்த ஊர் = தேரழுந்தூர், மயிலாடுதுறைக்கு அண்மையில் உள்ளது.
          • தந்தை பெயர் = ஆதித்தன்
          • போற்றியவர் = சடையப்ப வள்ளல்
          • இயற்றிய நூல்கள் = கம்பராமாயணம், சடகோபர் அந்தாதி, ஏரெழுபது, சரஸ்வதி அந்தாதி, திருக்கை வழக்கம்
          • சிறப்பு = கல்வியில் பெரியவர் கம்பர், கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்.
          • காலம் = 12ஆம் நூற்றாண்டு

          ஓவியக்கலை

          ஓவியம்:

          • எல்லைகளையெல்லாம் கடந்து எங்கும் பரந்து வாழும் மக்கள் மனங்களைக் கொள்ளை கொண்டு வியக்க வைக்கும் விந்தை மொழி ஓவியம்.
          • காண்பவரைக் கவர்ந்திழுத்து உள்ளங்களைத் தன்வயப்படுத்தும் உயர்ந்த கலை ஓவியக்கலை.

          கோட்டோவியங்கள்:

          • சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த மக்கள் மலைக்குகைகளிலும் பாறைகளிலும் கோட்டோவியங்கள் வரைந்தனர்.
          • தமிழகத்தில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் (மான், போர் செய்தல், விலங்கு வேட்டை ஆகியவற்றை குறிக்கும்) குகை ஓவியங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

          கண்ணெழுத்து:

          • தமிழ் நாட்டில் சங்க காலத்திற்கு முன்னரே ஓவியங்கள் வரையப்பட்டன.
          • தாம் வரைந்த ஓவியங்களை முதலில் “கண்ணெழுத்து” என்றே வழங்கினர்.

          “எழுத்து”:

          • எழுத்து என்பதற்கு ஓவியம் என்றும் பொருள் உண்டு என பரிபாடலும், குறுந்தொகையும் கூறுகின்றன.

          கோட்டோவியங்கள்:

          • ஓவியம் வரைவதற்கு நேர்கோடு, கோணக்கோடு, வளைகோடு முதலியன அடிப்படை.
          • இவ்வாறு வரையப்படுபவை “கோட்டோவியங்கள்” எனப்படும்.

          நடுகல் வணக்கம்:

          • தொல்காப்பியம் நடு கல் வணக்கம் பற்றிக் கூறுகிறது.
          • நடுகல்லில் போரில் வீரமரணம் எய்திய வீரனது உருவம், பெயர், பெருமைக்குரிய செயல் முதலியவற்றைப் பொரிக்கும் பழக்கம் இருந்தது.

          ஓவியக்கலையின் வேறுபெயர்கள்:

          ஓவ, ஓவம், ஓவியம், சித்திரம், படம், படாம், வட்டிகைச் செய்தி

          ஓவியக் கலைஞனின் வேறு பெயர்கள்:

          ஓவியர், ஓவியப்புலவன், கண்ணுள் வினைஞன், சித்திரகாரர், வித்தக வினைஞன், வித்தகர், கிளவி வல்லோன்

          நச்சினார்கினியர் இலக்கணம்:

          • நச்சினார்க்கினியர் தம் உரையில் ஓவியருக்கு, “நோக்கினார் கண்ணிடத்தே தம் தொழில் நிறுத்துவோர்” என இலக்கணம் வகுத்துள்ளார்.

          ஓவியக் குழுக்கள்:

          • ஓவிய கலைஞர் குழுவை “ஓவிய மாக்கள்” என்று அழைத்தனர்.
          • ஆண் ஓவியர் = சித்திராங்கதன்
          • பெண் ஓவியர் = சித்திரசேனா

          சிலப்பதிகாரம்:

          • ஆடல் மகள் மாதவி, “ஓவியச் செந்நூல் உரை நூற்கிடக்கையும் கற்றுத்துறை போகப் பொற்கொடி மடந்தையாக இருந்தனள்” எனச் சிலம்பு பகிர்கிறது.

          வரைகருவிகள்:

          • வண்ணம் தீட்டும் கோல் தூரிகை, துகிலிகை, வட்டிகை எனப்பட்டது.
          • வண்ணங்கள் குழப்பும் பலகைக்கு “வட்டிகைப் பலகை” எனப் பெயர்.

          வரைவிடங்கள்:

          • ஓவியம் வரையப்பட்ட இடங்கள் = சித்திரக்கூடம், சித்திரமாடம், எழுதுநிலை மண்டபம், எழுதொளில் அம்பலம்
          • இறை நடனம் புரிவதற்கே “சித்திர சபை” ஒன்றை ஏற்படுத்தி உள்ளனர்.

          புறநானூறு:

          “ஓவத்தனைய இடனுடை வனப்பு”
          - புறநானூறு
          • இவ்வாறு வீட்டின் அழகை ஓவியத்திற்கு ஒப்ப வைத்துக் கவிஞர் போற்றுகிறார்.

          ஓவிய எழினி:

          • நாடகமேடைகளில் பல வண்ணங்களில் கவின்மிகு காட்சிகள் தீட்டப்பட்ட திரைச்சீலைகள் தொங்குகினவற்றை “ஓவிய எழினி” கொண்டு அறிகிறோம்.

          புனையா ஓவியம்:

          • வண்ணம் கலக்காமல் கரித்துண்டுகளால் வடிவம் மட்டும் வரைவதைப் புனையா ஓவியம் என்பர்.
          • இன்றும், இது மென்கோட்டு ஓவியமாக நடைமுறையில் உள்ளது.

          நெடுநல்வாடை:

          • ஆடு முதலான 12 இராசிகளையும், விண்மீன்களையும் வரைந்த செய்தி, நெடுநல்வாடை கூறுகிறது.

          தமிழரின் ஓவிய மரபு:

          • ஓவியங்களில் “நிற்றல், இருத்தல், கிடத்தல்” ஆகிய மனித இயல்புகளையும்
          • “வீரம், சாந்தம், சினம், வியப்பு, உவகை” ஆகிய மெய்ப்பாடுகளையும்
          • “உத்தமம், மத்திமம், அதமம், தசதாளம், நவதாளம், பஞ்சதாளம் முதலிய அளவுகளையும் வலியுறுத்துவது தமிழருக்கே உரிய ஓவிய மரபுகளாக விளங்குகின்றன.

          மகேந்திரவர்மப் பல்லவன்:

          • சங்கக் காலத்தில் செழித்திருந்த ஓவியக்கலை இடைக்காலத்தில் சிதைந்து மறைந்துபோகத் தொடங்கியது.
          • மறைந்து கொண்டிருந்த ஓவியக்கலைக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டியவர்கள் பல்லவர்கள்.
          • 7ஆம் நூற்றாண்டில் தமிழகத்தை ஆண்ட முதலாம் மகேந்திரவர்மப் பல்லவன் சிறந்த ஓவியன்.
          • கல்வெட்டுகள் இவனைச் “சித்திரகாரப்புலி” எனப் புகழ்கின்றன.
          • “தட்சிணசித்திரம்” என்னும் ஓவிய நூலுக்கு இம்மன்னன் உரை எழுதியுள்ளான்.

          சித்தன்னவாசல் – ஓவியக் கருவூலம்:

          • திருநந்திக்கரையில் சேரர் கால ஓவியங்கள் கிடைத்துள்ளன.
          • புதுக்கோட்டைக்கு அருகே சித்தன்னவாசல் என்னும் குகைக்கோவில் ஓவியங்கள் ஓவியக் கருவூலமாக வைத்து போற்ற தக்கது.
          • கி.பி.9ஆம் நூற்றாண்டில் “அவனிப சேகர ஸ்ரீவல்லபன்” என்ற பாண்டிய மன்னன் காலத்தில், மதுரை ஆசிரியர் “இளம்கௌதமன்” இவ்வோவியங்களை வரைந்தார் என கல்வெட்டுகள் கூறுகிறது.

          சோழர் கால ஓவியங்கள்:

          • சோழர்கால வனப்புமிக்க ஓவியங்களைத் தஞ்சைப் பெரியகோவிலில் காணலாம்.
          • அதில் கவின்மிகு கயிலைகாட்சி உள்ளது.

No comments:

Post a Comment