இராமலிங்க அடிகள்:
ஆசிரியர் குறிப்பு:
- இராமலிங்க அடிகளார் “திருவருட்பிரகாச வள்ளலார்” என்னும் சிறப்பு பெயர் பெற்றவர்.
- கடலூர் வட்டம் மருதூரில் பிறந்தவர்.
- பெற்றோர்: இராமையா – சின்னம்மையார்
- காலம்: 5.10.1823 – 30.01.1874
நூல்கள்:
- ஜீவகாரூன்ய ஒழுக்கம்
- மனுமுறை கண்ட வாசகம்
- இவர் பாடல்கள் அனைத்தும் “திருவருட்பா” எனத் தொகுக்கப்பட்டுள்ளன.
சிறப்பு:
- சமரச சன்மார்க்க நெறியை வழங்கினார்.
- மத நல்லிணக்கத்திற்கு “சன்மார்க்க சங்கம்”, உணவளிக்க “அறச்சாலை”, அறிவு நெறி விளங்க “ஞான சபை” நிறுவினார்.
திருக்குறள் - அன்புடைமை
சொற்பொருள்:
- புன்கணீர் = துன்பம் கண்டு பெருகும் கண்ணீர்
- என்பு = எலும்பு
- வழக்கு = வாழ்க்கை நெறி
- நண்பு = நட்பு
- மறம் = வீரம், கருணை
- என்பிலது = எலும்பில்லாதது(புழு)
பிரித்து எழுதுக:
- அன்பகத்தில்லா = அன்பு + அகத்து + இல்லா
- வன்பாற்கண் = வன்பால் + கண்
ஆசிரியர் குறிப்பு:
- இவரின் காலம் கி.மு. 31 என்று கூறுவார்.
- இதை தொடக்கமாக கொண்டே திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.
சிறப்பு பெயர்:
- தெய்வப்புலவர், நாயனார், செந்நாப்போதர்
நூல் குறிப்பு:
- இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என மூன்று பெரும் பிரிவுகளை உடையது.
- 133 அதிகாரங்கள் உள்ளன.
- அதிகாரத்திற்கு 10 குறட்பாக்கள் வீதம் 1330 குறட்பாக்கள் உள்ளன.
- இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
திருக்குறளின் வேறு பெயர்கள்:
- உலக பொதுமறை, முப்பால், தமிழ்மறை
திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடும் முறை:
- கிறித்து ஆண்டு(கி.பி) + 31 = திருவள்ளுவர் ஆண்டு
- 2014 + 31 = 2045
உ.வே.சா
- உ.வே.சா ஓலைசுவடி வேண்டி ஒருவரிடம் உரையாடிய நிகழ்ச்சி நடைபெற்ற இடம் ஈரோடு மாவட்டம் கொடுமுடி.
- ஊர் = திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுறம்
- இயற்பெயர் = வேங்கடரத்தினம்
- ஆசிரியர் = மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
- அவரின் ஆசிரியர் வைத்த பெயர் = சாமிநாதன்
- உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகனான சாமிநாதன் என்பதன் சுருக்கமே “உ.வே.சா”
- இவரின் தந்தை = வேங்கடசுப்பையா
- காலம் = 19.02.1855 முதல் 28.04.1942
- 1942இல் உ.வே.சா நூல்நிலையம் சென்னை பெசன்ட் நகரில் தொடங்கப்பட்டது.
- உ.வே.சா நினைவு இல்லம் உத்தமதானபுரத்தில் உள்ளது.
- உ.வே.சா அவர்களின் தமிழ்ப் பணிகளை வெளிநாட்டு அறிஞர்களான ஜி.யு.போப், சூழியல் வின்சோன் ஆகியோர் பெரிதும் பாராட்டியுள்ளனர்.
- நடுவண் அரசு 2006ம் ஆண்டு அஞ்சல் தலை வெளியிட்டது.
கடைசிவரை நம்பிக்கை
- இச்சிறுகதை அரவிந்த் குப்தா எழுதிய “டென் லிட்டில் பிங்கர்ஸ்” என்ற தொகுப்பில் உள்ளது.
- சடகோ சசாகி, 11 வயது சிறுமி.
- ஜப்பானில் ஹிரோஷிமாவிக்கு அருகில் பெற்றோருடன் வசித்து வந்தாள்.
- அணுகுண்டு வீச்சால் ஏற்பட்ட கதிர்வீச்சின் காரணமாக சடகோவிற்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது.
- சடகோவின் தோழி சிசுகோ.
- தோழி சிசுகோ, சடகோவிடம் காகிதத்தால் செய்யப்பட்ட கொக்குகள் ஆயிரம் செய்தால் நோய் குணமாகும் என்றாள்.
- ஜப்பானியர் வணங்கும் பறவை, கொக்கு.
- காகிதத்தால் உருவங்கள் செய்யும் கலையை ஜப்பானியர் “ஒரிகாமி” என்று கூறுவர்.
- 1955, அக்டோபர் 25ம் நல்ல சடகோ இறந்தாள்.
- மொத்தம் 644 காகித கொக்குகள் உருவாக்கி இருந்தாள்.
- சடகோவின் தோழிகள் கூடி மீதமுள்ள 356 காகித கொக்குகள் செய்து எண்ணிகையை ஆயிரம் ஆக்கினர்.
- சடகோவிற்காக அவள் தோழிகள் பொதுமக்களிடம் நிதி திரட்டி நினைவாலயம் கட்டினர். அதனுள் சடகோவிற்கு சிலை எழுப்பினர்.
- அதன் பெயர் “குழந்தைகள் அமைதி நினைவாலயம்”.
- நினைவாலயத்தில் எழுதப்பட்ட வாசகம்,
“இது எங்கள் கதறல்! இது எங்கள் வேண்டுதல்! உலகத்தில் அமைதி வேண்டும்” |
நாலடியார்
சொற்பொருள்:
- அணியர் = நெருங்கி இருப்பவர்
- என்னாம் = என்ன பயன்?
- சேய் = தூரம்
- செய் = வயல்
- அனையார் = போன்றோர்
நூல் குறிப்பு:
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
- நானூறு பாடல்களை கொண்டது.
- “நாலடி நானூறு” என்ற சிறப்பு பெயர் உடையது.
- சமண முனிவர்கள் பலர் பாடிய தொகுப்பு நூல் இது.
பாரத தேசம்
சொற்பொருள்:
- வண்மை = கொடை (வன்மை = கொடுமை)
- உழுபடை = விவசாய கருவிகள்
- தமிழ்மகள் = ஔவையார்
பாடல் குறிப்பு:
- சாதி இரண்டொழிய வேறில்லை என்றவர் ஔவையார்.
- தமிழ்மகள் எனப்படுபவர் ஔவையார்.
ஆசிரியர் குறிப்பு:
- காலம்: 11.12.1882 – 11.09.1921
- “பாட்டுக்கொரு புலவன் பாரதி” என்றவர் கவிமணி.
பறவைகள் பலவிதம்
- திருநெல்வேலி மாவட்டம் கூத்தன்குளத்தில் மக்கள் பட்டாசு வெடிப்பதில்லை, ஏனென்றால் அங்கு கூடும் பறவைகள் பயந்து விடாமல் இருக்கவே.
- உலகம் முழுவதும் இருந்து பல நாட்டுப் பறவைகள் வந்து தங்கி இருக்கும் இடத்திற்குப் பெயர் தான் “பறவைகள் சரணாலயம்”
- அதிக பணி அல்லது அதிக வெயிலின் காரணமாக பறவைகள் ஒரு இடத்தை விட்டு மற்றொரு இடத்திற்கு பறந்து செல்வது “வலசை போதல்” என்பர்.
- பறவைகள் நமக்கு பருவகால மாற்றத்தை உணர்த்துகின்றன.
- ஒரு நாட்டில் பழம் தின்றுவிட்டு, மற்றொரு நாட்டில் எச்சமிடுவதன் காரணமாக அங்கு மரம், செடி, கொடி போன்றவை உருவாக பறவைகள் காரணமாகின்றன.
- வயல்வெளிகளில் பயிர்களைத் தாகும் பூச்சிகள், வண்டுகளைப் பறவைகள் தின்று, விவசாயிகளுக்கு உதவுகின்றன.
- நம் நாட்டில் ஏறத்தாழ 2400 வகை பறவைகள் உள்ளன.
- பறவைகள் ஐந்து வகையாக பிரிப்பர்.
- தேனை குடித்து வாழும் பறவைகள்
- பழத்தை உண்டு வாழும் பறவைகள்
- பூச்சியை தின்று வாழும் பறவைகள்
- வேட்டையாடி உண்ணும் பறவைகள்
- இறந்த உடல்களை உண்டு வாழும் பறவைகள்.
- பூநாரையானது நிலத்திலும் அதிக உப்புத் தன்மையுள்ள நீரிலும் வாழக்கூடியது. கடும் வெப்பத்தையும் எதிர்கொள்ளும் தன்மை கொண்டது.
- சமவெளி மரங்களில் வாழும் சில பறவைகள்:
- மஞ்சள் சிட்டு, செங்காகம், சுடலைக்குயில், பனங்காடை, தூக்கணாங்குருவி.
- நீர்நிலைகளில் வாழும் சில பறவைகள்:
- கொக்கு, தாழைக்கோழி, பவளக் காலி, ஆற்று உள்ளான், முக்குளிப்பான், நாரை, அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், ஊசிவால் வாத்து.
- மலைகளில் வாழும் சில பறவைகள்:
- இருவாச்சி, செந்தலைப் பூங்குருவி, மின்சிட்டு, கருஞ்சின்னான், நீலகிரி நெட்டைகாலி, பொன்முதுகு மரங்கொத்தி, சின்னக்குறுவான், கொண்டாய் உலவாரன், இராசாளிப் பருந்து, பூமன் ஆந்தை.
- தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயம் = 13
பாம்புகள்
- பாம்புகள் ஊர்வன வகையை சார்ந்தவை.
- சில பாம்புகள் குட்டிபோடும், பெரும்பாலானவை குஞ்சி பொரிப்பன.
- பாம்பினம் உலகில் மனித இனம் தோன்றுவதற்கு பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது.
- உலகம் முழுவதும் 2750 வகை பாம்புகள் உள்ளன. இந்தியாவில் 244 வகை பாம்புகள் உள்ளன.
- 52 வகை பாம்புகளில் மட்டுமே நச்சுத்தன்மை வாய்ந்தவை.
- பாம்பு பால் குடிக்காது. அவை விழுங்குகிற எலி, தவளைகள் உடம்பில் உள்ள நீர்ச்சத்தே அதற்கு போதும்.
- பாம்பானது, தான் பிடிக்கும் இரையை கொள்ளவும், செரிமானத்திற்காகவும் தான் தன்னுடைய எச்சிலில் நஞ்சு வைத்துள்ளது.
- பாம்புகளுக்கு காது கேட்காது. அவை தரையில் ஏற்படும் அதிர்வுகளை உணர்ந்து செயல்படும்.
- வயலிலுள்ள எலிகளை பாம்பு அழிப்பதால், பாம்புகளை “விவசாயிகளின் நண்பன்” என்று அழைக்கப்படும்.
- பாம்பு கடித்தவுடன் கடிபட்ட இடத்தை அசையாமல் வைத்து, கட்டுபோட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
- இந்தியாவிலுள்ள இராஜநாகம் தான் உலகிலேயே மிக நீளமான நஞ்சுள்ள பாம்பு. 15 அடி நீளமுடையது. கூடுகட்டி வாழும் ஒரே வகை பாம்பு இது. இராஜநாகம் மற்ற பாம்புகளையும் உணவாக்கி கொள்ளும்.
- ஒரு பாம்பை கொன்றால், அதன் இணைபாம்பு பழி வாங்கும் என்று சொல்வதுண்டு. இது உண்மையன்று. கொள்ளப்பட்ட ஒருவகை வாசனைத் திரவியம் மற்றப் பாம்புகளையும் அந்த இடம் நோக்கி வரவழைக்கிறது. பழிவாங்க, பாம்புகள் வருவதில்லை.
- பாம்பு தன் நாக்கை அடிகடி வெளியே நீட்டும். சுற்றுபுரத்தின் வாசனையை அறிந்து கொள்ளத் தான் பாம்பு அவ்வாறு செய்கிறது.
- நல்ல பாம்பின் நநஞ்சு கோப்ராக்சின் (cobrozincobrozin) எனும் வலி நீக்கி மருந்து தயாரிக்க பயன்படுகிறது.
- இந்திய அரசு வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் 1972இன்படி, தோலுக்காகப் பாம்புகள் கொள்ளபடுவதைத் தடுக்க சட்டம் நிறைவேற்றி உள்ளது.
நான்மணிக்கடிகை
சொற்பொருள்:
- மடவாள் = பெண்
- தகைசால் = பண்பில் சிறந்த
- உணர்வு = நல்லெண்ணம்
நூல் குறிப்பு:
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
- கடிகை என்றால் அணிகலன்(நகை)
- நான்கு மணிகள் கொண்ட அணிகலன் என்பது இதன் பொருள்.
- ஒவ்வொரு பாட்டுக்கும் நான்கு அறக்கருத்துக்களை கூறுகின்றன.
ஆசிரியர் குறிப்பு:
- பெயர் = விளம்பிநாகனார்
- விளம்பி என்பது ஊர்பெயர், நாகனார் என்பது புலவரின் இயற்பெயர்.
ஆராரோ ஆரிரரோ
- தாளில் எழுதாமல் பிறர் பாடுவதை கேட்டு பாடுவது “நாட்டுப்புற பாடல்”.
- எழுதப்படாத வாய்வழியாக பரவுகிற கதைகள் “வாய்மொழி இலக்கியம்” என்பர்.
- கானாப் பாடல், கடலுக்கு சென்று மீன்பிடிக்கும் மீனவர்கள் பாடும் பாடலும் நாட்டுப்புற பாடலே.
- நாட்டுப்புற பாடலை பல வகைகளாக பிரிப்பர்
- தாலாட்டு பாடல்கள், விளையாட்டுப் பாடல்கள், தொழில் பாடல்கள், சடங்குப் பாடல்கள், கொண்டாடப் பாடல்கள், வழிபாட்டுப் பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள்.
வீரச்சிறுவன்
- ஜானகிமணாளன் எழுதிய “அறிவை வளர்க்கும் அற்புதக்கதைகள்” என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்ட சிறுகதை இது.
- பதினைந்து வயதுள்ள சிறுவன் குதிரையை அடக்கினான். அச்சிறுவனே விவேகானந்தர்.
- விவேகானந்தரின் இயற்பெயர் = நரேந்திரதத்.
- புரட்சி துறவி = வள்ளலார்
- வீரத் துறவி = விவேகானந்தர்
இசையமுது
சொற்பொருள்:
- புனல் = நீர்
- பொடி = மகரந்தப் பொடி
- தழை = செடி
- தலையா வெப்பம் = பெருகும் வெப்பம்/குறையா வெப்பம்
- தழைத்தல் = கூடுதல், குறைதல்
ஆசிரியர் குறிப்பு:
- புரட்சி கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் புகழப்படுபவர் பாரதிதாசன்.
- இயற் பெயர் = கனகசுப்புரத்தினம்
- பாரதியின் கவிதையின் மீது கொண்ட காதலால் தம்முடைய பெயரை பாரதிதாசன் என மாற்றிக்கொண்டார்.
நூல்கள்:
- பாண்டியன் பரிசு
- அழகின் சிரிப்பு
- குடும்ப விளக்கு
- காலம்:29.04.1891 – 21.04.1964
பழமொழி நானூறு
சொற்பொருள்:
- ஆற்றவும் = நிறைவாக
- தமவேயாம் = தம்முடைய நாடே ஆகும்
- ஆறு = வழி, நதி, ஓர் எண்
- உணா = உணவு
- அரையன் = அரசன்
பிரித்து எழுதுக:
- நாற்றிசை = நான்கு + திசை
- ஆற்றுணா = ஆறு + உணா
நூல் குறிப்பு:
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
- நானூறு பாடல்களை கொண்டது.
- ஒவ்வொரு பாடலிலும் ஒரு பழமொழி உண்டு.
- “ஆற்றுணா வேண்டுவது இல்” என்பதற்கு “கற்றவனுக்கு கட்டுச்சோறு வேண்டாம்” என்பது பொருள்.
ஆசிரியர் குறிப்பு:
- இந்நூலின் ஆசிரியர் = முன்றுறை அரையனார்.
- முன்றுறை என்பது ஊர்பெயர்.
- அரையன் என்ற சொல் அரசனைக் குறிக்கும்.
- முன்றுறை என்ற ஊரை ஆண்ட அரசனாக இருக்கலாம் அல்லது அரையன் என்பது புலவரின் குடிபெயராக இருக்கலாம்.
மகள் இந்திராவிற்கு நேரு எழுதிய கடிதம்
- நேரு இந்திரா காந்திக்கு 1922 முதல் 1964 வரை, மொத்தம் 42 ஆண்டுகள் கடிதம் எழுதினார்.
- இந்திரா காந்தி, மேற்கு வங்காளத்தில், சாந்தி நிகேதன் என்னுமிடத்தில் உள்ள தாகூரின் விஸ்வபாரதி கல்லூரியில் படித்தார்.
- நேரு கடிதம் எழுதியது உத்திராஞ்சல் மாநில அல்மோரா மாவட்ட சிறையில் இருந்து. நாள்: 22.02.1935
- நேரு படித்தது இங்கிலாந்தில் உள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்தில்.
- புத்தகம் வாசிப்பதை கடமையாகவோ, கட்டயப்படுதவோ கூடாது என்கிறார் நேரு.
- மேலும் நேரு, பிளோட்டோவின் புத்தகங்கள் சுவையானவை, சிந்தனையை தூண்டுபவை என்றும் கூறுகிறார். சுருக்கமாகவும், வாசிக்க எளிதாகவும் இருக்கும் கிரேக்க நாடகங்கள் நம் ஆர்வத்தை தூண்டும் என்றும் கூறுகிறார். காளிதாசரின் சாகுந்தலம் நாடகம் படிக்க வேண்டிய நூல் என்றும் கூறுகிறார்.
- டால்ஸ்டாயின் “போரும் அமைதியும்” என்ற நாவல், உலகில் மிகச் சிறந்த நூல்களில் ஒன்று எனவும், பெர்னார்ட்ஷாவின் நூல்கள் வாசிக்க தகுந்தவை என்றும் கூறுகிறார்.
- நேருக்கு மிகவும் பிடிதமானவார் ஆங்கில சிந்தனையாளரும் கல்வியாளருனுமான பெட்ராண்ட் ரஸ்ஸல்.
- புத்தக படிப்பு என்பது 1000 முகங்கள் கொண்ட வாழ்கையை புரிந்து கொள்ள பயன்படும் என்கிறார்.
- கேம்ப்ரிட்ஜ் – இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழகம்
- சேக்ஸ்பியர் – ஆங்கில நாடக ஆசிரியர்
- மில்டன் – ஆங்கில கவிஞர்
- பிளேட்டோ – கிரேக்கச் சிந்தனையாளர்
- காளிதாசர் – வடமொழி நாடக ஆசிரியர்
- டால்ஸ்டாய் – ரஷ்ய நாடு எழுத்தாளர்
- பெர்னார்ட் ஷா – ஆங்கில நாடக ஆசிரியர்
- பெட்ரண்ட ரஸ்ஸல் – சிந்தனையாளர், கல்வியாளர்
- அல்மோரா சிறை – உத்தராஞ்சல் மாநிலத்தில் உள்ளது
- கிருபளானி – விஸ்வபாரதியில் பணிபுரிந்த ஒரு பேராசிரியர்
சித்தர் பாடல்
சொற்பொருள்:
- வெய்ய வினை – துன்பம் தரும் செயல்
- வேம்பு – கசப்பான சொற்கள்
- வீறாப்பு – இறுமாப்பு
- பலரில் – பலருடைய வீடுகள்
- கடம் – உடம்பு
பிரித்து எழுதுக:
- பலரில் – பலர் + இல்(வீடுகள்)
பாடல் குறிப்பு:
- சுமார் நானூறு ஆண்டுகளுக்குமுன் தமிழகத்தில் காடு மலைகளில் வாழ்ந்தவர்கள் சித்தர்கள்.
- பாம்பாட்டி சித்தர், குதம்பை சித்தர், அழுகுணி சித்தர் என்பன எல்லாமே காரணப்பெயர்கள்.
- கடுவெளி சித்தர் என்பவர் உருவ வழிபாடு செய்யாமல் வெட்டவெளியையே கடவுளாக வழிபட்டவர்.
தாகம்
கவிதை தரும் செய்தி:
- யாருடைய சுதந்திரத்தையும், உரிமையும் அடக்குமுறையால் கட்டுப்படித்திவிட முடியாது என்னும் கருத்தை சொல்கிறது.
ஆசிரியர் குறிப்பு:
- “கவிகோ” என்று அலைகபடுபவர் அப்துல் ரகுமான்.
- புதுக்விதை புனைவதில் புகழ்பெற்றவர்.
- இவரின் “ஆலாபனை” என்னும் நூல், நடுவண் அரசின் சாகித்ய அகாடமி விருது பெற்றது.
எழுதிய நூல்:
- சுட்டுவிரல், பால்வீதி, நேயர் விருப்பம், பித்தன்.
பெரியார்
- பெற்றோர் = வெங்கட்டப்பர் – சின்னத்தாயம்மாள்
- இயற் பெயர் = இராமசாமி
- ஊர் = ஈரோடு
- “பகுத்தறிவாளர் சங்கம்” தொடங்கினார்.
- பிறப்பினால் வரும் மேல்சாதி – கீழ்சாதி என்னும் வேறுபாடுகளை அகற்றி, மக்கள் அனைவரும் “மனித சாதி” என்னும் ஓரினமாக எண்ண வேண்டும் என்றார்.
- கேரளாவில் “வைக்கம்” என்ற ஊரில் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவில் சுற்றுத் தெருவில் நடப்பதற்கு தடை இருந்தது. அதை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றதால் “வைக்கம் வீரர்” எனப்பட்டார்.
- தாய்மார்கள் இராமசாமிக்கு “பெரியார்” என்று பட்டம் வழங்கினார்கள்.
- பெண் விடுதளிக்கு முதல் படியாக பெண்கள் எல்லோரும் கல்வி கற்க வேண்டும் என்பதி பெரியார் வலியுறுத்தினார்.
- 17.09.1879 இல் பிறந்து, 24.12.1973 இல் மறைந்த பெரியார், தம் வாழ்நாளில் 8600 நாட்கள், 13,12,000 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து, 10700 கூட்டங்களில் 21400 மணிநேரம் மக்களுக்காக உரையாற்றி சமூகத் தொண்டாற்றினார்.
- 1970ம்ஆண்டு சமூகச் சீர்திருத்த செயல்பாடுகளுக்காக ஐக்கிய நாடுகள் அவையின் “யுனெஸ்கோ விருது” பெரியாருக்கு வழங்கப்பட்டது.
- நடுவண் அரசு 1978 ம் ஆண்டு பெரியாரின் உருவம் பொறித்த அஞ்சல்தலையை வெளியிட்டு சிறப்பித்துள்ளது.
புறநானூறு
சொற்பொருள்:
- ஒன்றோ – தொடரும் சொல்
- அவல் – பள்ளம்
- மிசை – மேடு
- நல்லை – நன்றாக இருப்பாய்
நூல் குறிப்பு:
- புறநானூறு = புறம் + நான்கு + நூறு
- எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
- புலவர் பலர் இயற்றிய பாடல்களின் தொகுப்பு.
- எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் சங்க நூல்களாம்.
- சங்க இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை உடையது.
- தமிழர்களின் வரலாறு, பண்பாடு ஆகியவற்றை அறிய உதவும் நூலாக புறநானூறு திகழ்கிறது.
ஆசிரியர் குறிப்பு:
- ஔவையார் சங்கப்புலவர்.
- அதியமானின் நண்பர்.
- அறிய நெல்லிக்கனியை அதியமானிடம் பெற்றவர்.
- சங்க கால பெண் கவிஞர்களுள் மிகுதியான பாடலை பாடியவர்.
- சங்கப்பாடல் பாடிய ஔவையாரும், ஆத்திச்சூடி பாடிய ஔவையாரும் ஒருவர் அல்லர்; வேறு வேறானவர்.
திண்ணையை இடித்து தெருவாக்கு
ஆசிரியர் குறிப்பு:
- திருவண்ணாமலை மாவட்டம் குவளையில் பிறந்தவர்.
- புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, தாராபாரதி கவிதைகள் போன்ற நூல்களை எழுதியுள்ளார்.
- தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார்.
- இவரை “எழுச்சி கவிஞர்” என்பர்.
- காலம்: 26.02.1947 – 13.05.2000
தேசியம் காத்த செம்மல்
பிறப்பும் வளர்ப்பும்:
- இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் என்னும் ஊரில் 1908ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 30ம் நாள் பிறந்தவர் முத்துராமலிங்க தேவர்.
- பெற்றோர் = திரு உக்கிரபாண்டி தேவர் – திருமதி இந்திராணி அம்மையார்.
- இஸ்லாமிய பெண்மணி ஒருவர் தாயாகி பாலூட்டி வளர்த்தார்.
- ஆசிரியர் = குறைவற வாசித்தான் பிள்ளை.
கல்வி:
- கமுதியில் உள்ள தொடக்கப்பள்ளிலும், பின்பு பசுமலை உயர்நிலைப்பள்ளியிலும், பின்பு ஐக்கிய கிறித்துவப் பள்ளியிலும் படித்தார். இராமநாதபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் பொது, அங்கு ப்ளேக் நோய் பரவியதால் இவரின் கல்வி நின்றது.
பொதுத்தொண்டில் நாட்டம்:
- 32 சிற்றூர்களில் தமக்குச் சொந்தமாக இருந்த நிலங்களை உழுபவர்களுக்கு பங்கிட்டு கொடுத்தார்.
- சமபந்தி முறைக்கு ஊக்கம் அளித்தார்.
- குற்றப்பரம்பரை என்று ஒதுக்கி வைக்கப்பட்ட மக்களுக்காக போராடினார்.
சாதியை பற்றி:
- “சாதியையும் நிறத்தையும் பார்த்து மனிதனை மனிதன் தாழ்வுபடுத்துவது பெருங்கொடுமை; ஆண்டவன் மனித குலத்தைத்தான் படைதானே தவிரச் சாதியையும் நிறத்தையும் அல்ல; சாதியையும் நிறமும் அரசியலுக்குமில்லை, ஆன்மீகத்திற்கும் இல்லை.
நேதாஜி:
- முத்துராமலிங்கர், வங்கச் சிங்கமான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களை தம் அரசியல் வழிகாட்டியாக கொண்டார்.
வாய்பூட்டு சட்டம்:
- விடுதலை போர் கடுமையாக இருந்த நாள்களில் ஆங்கில அரசு, வட இந்தியாவில் திலகருக்கும், தென்னிந்தியாவில் தேவருக்கும் வாய்பூட்டு சட்டம் போட்டது.
தேசியம் காத்த செம்மல்:
- முத்துராமலிங்க தேவரை “தேசியம் காத்த செம்மல்” என்று திரு.வி.க பாராட்டினார்.
அரசியல் வாழ்க்கை:
- முத்துராமலிங்கர் ஐந்து முறை தேர்தலில் போட்டியிட்டு ஐந்து முறையும் வெற்றி பெற்றார்(1937, 1946, 1952, 1957, 1962).
- தொகுதிக்கு செல்லாமலே வெற்றி பெற்றார்.
சிறந்த பண்பாளர்:
- “தெய்வீகம், தேசியம்” ஆகிய இரண்டையும் இரு கண்களாகப் போற்றியவர்.
- “வீரம் இல்லாத வாழ்வும், விவேகமில்லாத வீரமும் வீணாகும்” என்று கூறினார்.
பாராட்டு பெயர்கள்:
- வேதாந்த பாஸ்கர், பிரணவ கேசரி, சன்மார்க்க சண்ட மாருதம், இந்து புத்த சமய மேதை.
மனிதனின் மனநிலை:
- “பனை மரத்தில் இருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு, வயல் வரப்பில் வழுக்கி விழுந்து இறந்தவனும் உண்டு” என்று இறப்பின் நிலை பற்றி கூறியுள்ளார்.
- மனிதனின் மனநிலையை “இருள், அருள், மருள், தெருள்” என குறிப்பிடுகிறார்.
மறைவு:
- 55 ஆண்டுகள் வாழ்ந்து 1963ம் அக்டோபர் 30இல் தம் பிறந்தநாள் அன்றே இயற்கை எய்தினார்.
சிறப்பு:
- முத்துராமலிங்க தேவரின் விருப்பத்திற்கு இணங்க 06.09.1939 அன்று நேதாஜி மதுரைக்கு வருகை தந்தார்.
- நடுவண் அரசு 1995ம் ஆண்டு முத்துராமலிங்க தேவரின் அஞ்சல்தலையை வெளியிட்டு சிறப்பித்தது.
- முத்துராமலிங்க தேவர் தம் சொத்துக்கள் முழுவதையும் 17 பாகங்களாகப் பிரித்து, ஒரு பாகத்தை மட்டும் தனக்கு வைத்துகொண்டு மீதி 16 பாகங்களையும் 16 பேர்களுக்கு இனாம் சாசனமாக எழுதி கொடுத்தார்.
திருக்குறள்
சொற்பொருள்:
- ஈரம் – அன்பு
- அளைஇ – கலந்து
- படிறு – வஞ்சம்
- அமர் – விருப்பம்
- முகன் – முகம்
- துவ்வாமை – வறுமை
- நாடி – விரும்பி
- இனிதீன்றல் – இனிது + ஈன்றல்
செய்யும் தொழிலே தெய்வம்
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களை “மக்கள் கவிஞர்” என்று அழைப்பர்.
- இவர் பிறந்த ஊர் பட்டுக்கோட்டை அருகே உள்ள “செங்கப்படுத்தான்காடு”.
- காலம்: 13.04.1930 – 08.10.1959
கல்லிலே கலைவண்ணம்
- கும்பகோணத்திற்கு தென்புறம் பாயும் அரிசிலாற்றின் தென்கரையில் அமைந்துள்ள ஊர் தாராசுரம்.
- இங்குள்ள ஐராவதிஸ்வரர் கோயில் 800 ஆண்டுகளுக்கு முன் இரண்டாம் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்டது.
கோவிலில் உள்ள சிற்பங்கள்:
- முப்புரம் எரித்தவன்(திரிபுராந்தகன்) கதை ஒரு சிற்பம்.
- யானையை வதம் செய்து, அதன் தோலைத் தன் மீது உடுதிகொள்ளும் ஈசனின் யானை உரி போர்த்தவர்(கஜசம்ஹாரமூர்த்தி) கதை ஒரு சிற்பம்.
- அடிமுடி தேடவைக்கும் அண்ணாமலையார்(லிங்கோத்பவர்) கதை மற்றொரு சிற்பம்.
- கோவிலின் நுழைவாயிலில் அமைந்த 7 கருங்கற் படிகள் “சரிகமபதநி” எனும் 7 நாதப்படிகளாக வடிக்கப்பட்டுள்ளன.
கார்ல் சாகன் கூற்று:
- தாராசுரம் கோவிலின் கூம்பிய விமானத் தோற்றமும், அதற்குக் கீழே இருபுறமும் யானைகளும் குதிரைகளும் பூட்டிய இரதம்போல் அமைந்த மண்டபமும் வான்வெளி இரகிசியத்தை காட்டுவதாக வானவியல் அறிஞர் கார்ல் சாகன் கூறுகிறார்.
- தஞ்சை அரண்மனைக்கு சொந்தமான இக்கோவில் தற்போது மத்தியத் தொல்பொருள் துறையினர் பாதுகாத்து வருகின்றனர். இதை மரபு அடையாளச்சின்னமாக யுனெஸ்கோஅறிவித்துள்ளது. இக்கோவிலை “கலைகளின் சரணாலயம்” என்றே கூறலாம்.
சாதனை பெண்மணி மேரிகியூரி
- கியூரி அம்மையார் 1867ம் ஆண்டு போலந்து நாட்டில் வறுமையான குடும்பத்தில் ஐந்தாவது குழந்தையாக பிறந்தார்.
- தனது மூத்த சகோதரியின் விருப்பமான மருத்துவ கல்வி பயில்வதை நிறைவேற்றுவதற்காக குழந்தைகளுக்குச் சிறப்புப் பாடம் சொல்லிக் கொடுத்ததும், தாதி போல் பணிவிடைகள் செய்தும் பொருளீட்டி உதவினார்.
- மேரிக்கு போலந்தில் அறிவியல் கல்வி மறுக்கப்பட்டதால், பிரான்ஸ் நாட்டிற்கு சென்று அறிவியல் கல்வி பயின்றார்.
- அறிவியல் மேதை பியுரிகியூரியை, மேரி திருமணம் செய்துகொண்டார்.
- அவருடன் சேர்ந்து அறிவியல் ஆராய்சியில் ஈடுபட்டார்.
- மணவாழ்க்கையில் மனநிறைவுடன் ஒரு பெண் குழந்தயை பெற்றெடுத்தார்.
- இடைவிடாத ஆராச்சியின் பயனாக, கணவன், மனைவி இருவரும் முதலில் பொலோனியும் என்னும் பொருளை கண்டுபிடித்தனர். அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் இடைவிடாது ஆராய்ச்சி செய்து ரேடியம் என்னும் பொருளை கண்டுப்பிடித்தனர். இவ்விரண்டு அறிய கண்டுபிடிப்புகளுக்காக மேரி கியூரிக்கும் அவர் கணவருக்கும் 1903ம் ஆண்டு “நோபல் பரிசு” வழங்கப்பட்டது.
- இவரின் கண்டுபிடிப்பைப் தனியார் நிறுவனம் ஒன்று 50 இலட்சம் டாலர்களுக்கு விலைக்கு வாங்க முன் வந்த போதும் தனது அறிவியல் கண்டுபிடிப்பை அறிவியல் உலகிற்கே கொடையாக கொடுத்தார்.
- மேலும் அவருக்கு இரண்டாவது முறையாக 1911ஆம் ஆண்டு ரேடியத்தின் அணு எடையை கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது.
- மேரி கியூரி 1934இல் இயற்கை எய்தினார்.
- கியூரியின் இறப்பிற்குப்பின் அவர் மகள் ஐரினும், மருமகன் சாலிட் கியூரியும் தொடர்ந்து அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுச் செயற்கை கதிர்வீச்சுப் பற்றிய வேதியியல் ஆராய்சிக்காக 1935ம் ஆண்டு நோபல் பரிசினை பெற்றனர்.
- ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மூன்று முறை நோபல் பரிசு பெற்ற இச்சாதனை இன்றுவரை முறியடிக்கப்படவில்லை.
தனிப்பாடல்
சொற்பொருள்:
- இரட்சித்தானா? – காப்பாற்றினானா?
- அல்லைத்தான் – அதுவும் அல்லாமல்
- பதுமத்தான் – தாமரையில் உள்ள பிரமன்
- குமரகண்ட வலிப்பு – ஒருவகை வலிப்பு நோய்
- குரைகடல் – ஒலிக்கும் கடல்
நூல் குறிப்பு:
- புலவர்கள், அவ்வப்போது பாடிய பாடல்களை “தனிப்பாடல் திரட்டு” என்னும் நூலக தொகுத்துள்ளனர்.
- பெரும்பாலான பாடல்கள் இருநூறு முதல் முந்நூறு ஆண்டுகளுக்குள் பாடப்பட்டவை.
- இராமச்சந்திரக் கவிராயர் துன்பத்தையும், நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர்.
அந்த காலம் இந்த காலம்
ஆசிரியர் குறிப்பு:
- உடுமலை நாராயண கவி தமிழ்த் திரைப்படப்பாடல் ஆசிரியரும், நாடக எழுத்தாளரும் ஆவார்.
- சமுதாயப் பாடல்களை எழுதிச் சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பியவர்.
- “பகுத்தறிவு கவிராயர்” என தமிழக மக்களால் அழைக்கப்பட்டவர்.
- காலம்: 25.09.1899 – 23.05.1981
தயக்கம் இன்றித் தமிழிலேயே பேசுவோம்
- டிவி – தொலைக்காட்சி
- ரேடியோ – வானொலி
- டிபன் – சிற்றுண்டி
- டீ – தேநீர்
- கரண்ட் – மின்சாரம்
- டெலிபோன் – தொலைபேசி
- ஃபேன் – மின்விசிறி
- சேர் – நாற்காலி
- லைட் – விளக்கு
- டம்ளர் – குவளை
- சைக்கிள் – மிதிவண்டி
- பிலாட்பாரம் – நடைப்பாதை
- ஆபிஸ் – அலுவலகம்
- சினிமா – திரைப்படம்
- டைப்ரைட்டர் – தட்டச்சுப்பொறி
- ரோடு – சாலை
- பிளைட் – விமானம்
- பேங்க் – வங்கி
- தியேட்டர் – திரைஅரங்கு
- ஆஸ்பத்திரி – மருத்துவமனை
- கம்ப்யூட்டர் – கணினி
- காலேஜ் – கல்லூரி
- யுனிவர்சிட்டி – பல்கலைகழகம்
- டெலஸ்கோப் – தொலைநோக்கி
- தெர்மோமீட்டர் – வெப்பமானி
- இன்டர்நெட் – இணையம்
- இஸ்கூல் – பள்ளி
- சயின்ஸ் – அறிவியல்
- மைக்ரோஸ்கோப் – நுண்ணோக்கி
- நம்பர் – எண்
நாடும் நகரமும்
நாடு:
- நாடு என்ற சொல் ஆதியில் மக்கள் வாழும் நிலத்தை குறிப்பதற்கு வழங்கப்பட்டது.
- மூவேந்தர்களின் ஆட்சிக்குட்பட்ட தமிழ்நாட்டின் பகுதிகள் அவரவர் பெயராலேயே சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு என்று அழைக்கப்பட்டன.
- நாளடைவில் முந்நாடுகளின் உட்பிரிவுகளும் “நாடு” என்று அழைக்கப்பட்டன. கொங்கு நாடு, தொண்டை நாடு முதலியன இதற்குச் சான்றாகும்.
- முன்னாளில் முரப்புநாடு என்பது பாண்டி மண்டலத்தைச் சேர்ந்த நாடுகளுள் ஒன்று. இப்பொழுது அப்பெயர் பொருநை யாற்றின் கரையிலுள்ள ஒரு சிற்றூரின் பெயராக நிலவுகின்றது. அதற்கு எதிரே ஆற்றின் மறுகரையிலுள்ள மற்றொரு சிற்றூர் வல்லநாடு என்னும் பெயருடையது.
- சோழநாட்டில் மாயவரத்திற்கு அணித்தாகவுள்ள ஓரூர் கொரநாடு என்று அளிக்கபடுகிறது. கூர்ரைநடு என்பது கொரநாடு என்று மருவிற்று. பட்டுகோட்டை வட்டத்தில் கானாடும், மதுரங்க வட்டத்தில் தென்னாடும் உள்ளன.
நகரம்:
- சிறந்த ஊர்கள், நகரம் என்னும் பெயாரால் வழங்கும். ஆழ்வார்களின் சிறந்த நம்மாழ்வார் பிறந்த இடம் குருகூர் என்னும் பழம்பெயரை துறந்து, ஆழ்வார்த் திருநகரியாகத் திகழ்கிறது.
- பாண்டிநாட்டிலுள்ள விருதுப்பட்டி, வர்த்தகத்தால் மேம்பட்டு இன்று விருதுநகராக விளங்குகிறது.
- இக்காலத்தில் தோன்றும் புத்தூர்களும் நகரம் என்னும் பெயரையே பெரிதும் நாடுவனவாகத் தெரிகின்றன.
சென்னை:
- திருமயிலைக்கு அருகேயுள்ள திருவல்லிக்கேணி, முதல் ஆழ்வார்களால் பாடப்பெற்றது. அவ்வூரின் பெயர் அல்லிக்கேணி என்பதாகும். அல்லிக்கேணி என்பது அல்லிக்குளம். அங்கே பெருமாள் கோவில் கொண்டமையால் திரு என்னும் அடைமொழி சேர்ந்து திருவல்லிக்கேணி ஆயிற்று.
புரம்:
- “புரம்” என்னும் சொல், சிறந்த ஊர்களை குறிப்பதாகும். ஆதியில் காஞ்சி என்று பெற்ற ஊர் பின்னர் “புரம்” என்பது சேர்ந்து காஞ்சிபுரம்ஆயிற்று. பல்லவபுரம்(பல்லாவரம்), கங்கைகொண்ட சோழபுரம், தருமபுரம் போன்றவை மேலும் சில எடுத்துக்காட்டுகளாகும்.
பட்டிணம்:
- கடற்கரையில் உருவாகும் நகரங்கள் “பட்டிணம்” எனப் பெயர் பெரும். காவிரிப்பூம்பட்டிணம், நாகபட்டிணம், காயல்பட்டிணம், குலசேகரபட்டிணம், சதுரங்கப்பட்டிணம் ஆகியவை “பட்டிணம்” எனப் பெயர் பெற்ற ஊர்களாகும்.
பாக்கம்:
- கடற்கரைச் சிற்றூர்கள் “பாக்கம்” எனப் பெயர் பெரும். கோடம்பாக்கம், மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், சேப்பாக்கம் இப்படிப் “பாக்கம்” எனப் பெயர் பெற்ற ஊர்களைக் குறிப்பிடலாம்.
புலம்:
- “புலம்” என்னும் சொல் நிலத்தைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக மாம்புலம், தமரைபுலம், குரவைபுலம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
குப்பம்:
- நெய்தல் நிலத்தில் அமைந்த வாழ்விடங்கள் “குப்பம்” என்னும் பெயரால் அழைக்கப்படும். காட்டுக்குப்பம், நொச்சிக்குப்பம் ஆகியவற்றை குறிப்பிடலாம்.
ஆசிரியர்:
- சொல்லின் செல்வர் எனப்படும் ரா.பி.சேதுபிள்ளை அவர்களின் “ஊரும் பேரும்” என்ற நூலின் இருந்து எடுக்கப்பட்டது.
குற்றாலக் குறவஞ்சி
சொற்பொருள்:
- வானரங்கள் – ஆண் குரங்குகள்
- மந்தி – பெண் குரங்குகள்
- வான்கவிகள் – தேவர்கள்
- காயசித்தி – இறப்பை நீக்கும் மூலிகை
- வேணி – சடை
- மின்னார் – பெண்கள்
- மருங்கு – இடை
நூல் குறிப்பு:
- இந்நூலின் முழுப்பெயர் திருக்குற்றாலக் குரவஞ்சி.
- ஆசிரியர், திருகூட ராசப்பக் கவிராயர் ஆவார்.
- குறவஞ்சி என்னும் இலக்கிய வகையைச் சார்ந்தது இந்நூல்.
மரமும் பழைய குடையும்
சொற்பொருள்:
- கோட்டு மரம் – கிளைகளை உடைய மரம்
- பீற்றல் குடை –பிய்ந்த குடை
ஆசிரியர் குறிப்பு:
- அழகிய சொக்கநாதப் புலவர் திருநெல்வேலி மாவட்டத்தில் தச்சநல்லூரில் பிறந்தவர்.
- இவரின் காலம் கி.பி.19 ஆம் நூற்றாண்டு.
நூல் குறிப்பு:
- ஒரு சொல்லோ தொடரோ இருபொருள் தருமாறு பாடுவது “சிலேடை” எனப்படும்.
- இதனை “இரட்டுறமொழிதல்”(இரண்டு + உற + மொழிதல்) என்றும் கூறுவர். இரண்டு பொருள்படப் பாடுவது
No comments:
Post a Comment