தமிழ் இலக்கியம் | முக்கிய வினா விடைகள்
தமிழ் இலக்கியம் | முக்கிய வினா விடைகள்
• ஓவியக் கலைக்கு மற்ற பெயர்கள்: ஓவு, ஓவம், ஓவியம், சித்திரம்,
படம், படாம், வட்டிகைச் செய்தி.
• ஓவியக் கலைஞர்களின் மற்ற பெயர்கள்: ஓவியர், ஓவியப்புலவன், கண்ணுள் வினைஞன், சித்திரக்காரர், வித்தக வினைஞன், வித்தகர், கிளவி வல்லோன்.
• ஓவியக் கலைஞரின் குழுவின் பெயர் - ஓவிய மாக்கள்; ஆண் ஓவியர் - சித்திராங்கதன், பெண் ஓவியர் - சித்திரசேனா.
• ஓவியம் வரையும் இடம்: சித்திரக்கூடம், சித்திரமாடம், எழுதுநிலை மண்டபம், எழுதெழில் அம்பலம்.
• அகராதி என்னும் சொல் தற்போதைய வழக்கில் அகரமுதலி என வழங்கப்படுகிறது.
• தமிழ் அகரமுதலி வரலாற்றில் செம்பாதி இடத்தைப்பெறும் சொற்பொருள் துறை நூல்கள்
நிகண்டுகளாகும்.
• நிகண்டுகளின் பழமையானது - சேந்தன் திவாகரம்.
• சேந்தன் திவாகரத்தின் ஆசிரியர் - திவாகரர்.
• மொத்த நிகண்டுகளின் எண்ணிக்கை - 25
• நிகண்டுகளின் சிறப்பானது - சூடாமணி நிகண்டு
• சூடாமணி நிகண்டுவை இயற்றியவர் - மண்டலப்புருடர்
• வீரமாமுனிவர் தொகுத்த சதுரகாதியே தமிழில் தோன்றிய முதல் அகரமுதலி.
• சதுரகாதி வெளிவந்த ஆண்டு - கி.பி.1732.
• சதுரகாதியில் பெயர், பொருள், தொகை, தொடை என நான்கு வகைகளில் தனித்தனியாகப் பொருள்
விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
• தமிழ் - இலத்தீன் அகராதி, இலத்தீன் - தமிழ் அகராதி, தமிழ் - பிரெஞ்சு அகராதி, பிரெஞ்சு - தமிழ் அகராதி, போர்த்துக்கீசிய - இலத்தின் தமிழ் அகராதி ஆகிய அகர முதலிகளை உருவாக்கியவர்
வீரமாமுனிவர்.
• தமிழ் - தமிழ் அகராதி லெவி - ஸ்பால்டிஸ் என்பவரால் வெளியிடப்பட்டது.
• அபிதான கோசம் என்பது தமிழ்க் கலைக்களஞ்சியங்களின் முன்னோடி ஆகும். இது 1902ஆம் ஆண்டு வெளியானது.
• அபிதான சிந்தாமணி - இலக்கியச் செய்திகளோடு
அறிவியல் துறைப் பொருள்களையும், முதன்முதலாகச் சேர்த்து விளக்கம் தந்து 1934ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதை தொகுத்து
வெளியிட்டவர் சிங்காரவேலனார்.
• பொது அறிவு, உளவியல், புவியியல், புள்ளியியல், வரலாறு, வானவியல் முதலிய துறைகளுக்கு கலைச்சொல்
அகரமுதலிகள் 1960ஆம் ஆண்டு
தொகுக்கப்பட்டன. மணவை முஸ்தபா அறிவியல் சார்ந்த துறைவாரியான கலைச்சொல்
அகரமுதலிகளைத் தொகுத்து வெளியிட்டார்.
• அறிவியல் கலைச்சொல் களஞ்சியம் 1991ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
No comments:
Post a Comment