Friday, 20 March 2015

தமிழ் இலக்கியம் | செய்யுள்

தமிழ் இலக்கியம் | செய்யுள்


பதினெண்கீழ்க்கணக்கு:
•    நாலடியார் நூல்களுள் ஒன்று
•    மொத்தம் 400 பாடல்களைக் கொண்டது.
•    நாலடி நானூறு என்பது இதன் சிறப்புப் பெயர்.

முதுமொழிக்காஞ்சி
•    ஆசிரியர்  - மதுரைக் கூடலூர்கிழார்
•    பிறந்த ஊர் - கூடலூர்
•    நூல் குறிப்பு - காஞ்சித் திணையின் துறைகளுள் ஒன்று
•    இந்நூலின் வேறொரு பெயர் - அறவுரைக்கோவை
•    மொத்தம் பத்து அதிகாரங்கள் உண்டு. நூறு பாடல்களால் ஆனது.
•    திரிகடுகம் - நல்லாதனார் (ஆசிரியர்), திருநெல்வேலி மாவட்டம் திருத்து என்னும் ஊரில் பிறந்தவர்.

இரட்டுற மொழிதல்
•    ஆசிரியர்: காளமேகப் புலவர்.
•    பிறந்த ஊர் - கும்பகோணத்திற்கு அருகில் உள்ள நந்திக் கிராமம் எனவும், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள எண்ணாயிரம் எனவும் கூறுவர்.
•    இயற்பெயர் - வரதன்

நான்மணிக்கடிகை
•    இது பதினென்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
•    கடிகை என்றால் அணிகலன்
•    நூலாசிரியர் பெயர் - விளம்பிநாகனார்
•    விளம்பி என்பது ஊர்ப்பெயர் ; நாகனார் என்பது புலவரின் இயற்பெயர்.

பழமொழி நானூறு
•    பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
•    நானூறு பாடல்களைக் கொண்ட நூல் இது
•    ஆசிரியர் பெயர் - முன்றுறை அரையனார். முன்றுறை என்பது ஊர்ப்பெயர், அரையன் என்ற சொல் அரசனைக் குறிக்கும்.

காவடிச்சிந்து
•    ஆசிரியர் - அண்ணாமலையார்
•    ஊர் - திருநெல்வேலி மாவட்டத்துச் சென்னிகுளம்
•    பெற்றோர் - சென்னவர், ஓவு அம்மாள்.
•    நூல்கள் - காவடிச்சிந்து, வீரை அந்தாதி, கோமதி அந்தாதி, வீரைப்பிள்ளைத் தமிழ்.
•    காலம் - 1861 - 1890

இனியவை நாற்பது
•    ஆசிரியர் பெயர் - பூதஞ்சேந்தனார்
•    ஊர் - மதுரை
•    காலம் - கி.பி. இரண்டாம் நூற்றாண்டு
•  இவர் எழுதிய நூல் - இனியவை நாற்பது - இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. நன்மைதரும் இனிய கருத்துகளை நாற்பது பாடல்களில் தொகுத்துரைப்பதால் இனியவை நாற்பது எனப் பெயர்பெற்றது. இந்நூலின் ஒவ்வொரு பாடலும் மூன்று அல்லது நான்கு நற்கருத்துகளை இனிமையாகக் கூறும்.

தேம்பாவனி
•    ஆசிரியர் பெயர் - வீரமாமுனிவர்
•    இயற்பெயர் - கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி
•    பெற்றோர் - கொண்டல் போபெஸ்கி - எலிசபெத்
•    பிறந்த ஊர் - இத்தாலி நாட்டில் காஸ்திக்கிளியோன்
•    அறிந்த மொழிகள் - இத்தாலியம், இலத்தீன், கிரேக்கம், எபிரேயம், தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம்.
•    தமிழ்க் கற்பித்தவர் - மதுரைச் சுப்பிரதீபக் கவிராயர்.
•    இயற்றிய நூல்கள் - ஞானோபதேசம், பரமார்த்த குரு கதை சதுரகராதி, திருக்காவலூர்க்க கலம்பகம், தொன்னூல் விளக்கம்.
•    காலம் - 1680 - 1747

நளவெண்பா
•    பெயர் - புகழேந்திப் புலவர்
•    ஊர் - தொண்டை நாட்டின் பொன் விளைந்த களத்தூர் (காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருங்களத்தூர்)
•    சிறப்பு - வரகுணப் பாண்டியனின் அவைப் புலவர்
•    ஆதரித்த வள்ளல் - சந்திரன் சுவர்க்கி
•    காலம் - கி.பி. பன்னிரெண்டாம் நூற்றாண்டு. கம்பரும், ஒட்டக்கூத்தரும் இவர் காலத்தில் வாழ்ந்தவர்கள்
•   இவர் எழுதிய நூல் - நளவெண்பா. நளனது வரலாற்றை வெண்பாக்களால் கூறும் நூல். சுயம்வர காண்டம், கலித்தொடர் காண்டம், கலிநீங்கு காண்டம் என மூன்று காண்டங்களைக் கொண்டது. இதில் நானூற்று முப்பத்தொரு வெண்பாக்கள் உள்ளன.

No comments:

Post a Comment