Friday, 20 March 2015

தமிழ் பிளஸ்டூ அனைத்து செய்யுள் பாடங்களின் முக்கிய வினா விடை குறிப்புகள்

தமிழ் | பிளஸ்டூ அனைத்து செய்யுள் பாடங்களின் முக்கிய வினா விடை குறிப்புகள்

1.வாழ்த்து
1. கம்பர் காலத்தில் வாழ்ந்த புலவர்களுள் ஒருவர் - ஒட்டக்கூத்தர்.
2. 'ஒன்றேயென்னின்..' அமைந்துள்ள காண்டம் - யுத்த காண்டம்.
3. தமிழரசி குறவஞ்சியின் பாட்டுடைத்தலைவன் - முருகன்.
4. சோழ நாட்டுத் திருவழுந்தூரில் பிறந்தவர் - கம்பர்.
5. 'கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது' பாடியவர் - வெ.இராமலிங்கனார்.
6. வரதநஞ்சையப்பிள்ளை இயற்றிய குறவஞ்சி - தமிழரசி குறவஞ்சி.
7. உப்புச்சத்தியாக்கிரகத்தில் சிறைத்தண்டனை பெற்றவர் - வெ.இராமலிங்கனார்.
8. நாமக்கல் கவிஞருக்கு நடுவணரசு அளித்த விருது - பத்மபூஷண்.
9. வெ.இராமலிங்கனார் பிறந்த ஊர் - மோகனூர்.
10. இராமலிங்கனார் எக்கலையில் வல்லவர்? - ஓவியக்கலையில்.
11. கற்றோரால் 'புலவரேறு' எனப்பட்டவர் - வரதநஞ்சையப்பிள்ளை.
12. கம்பரை ஆதரித்தவர் - சடையப்ப வள்ளல்.
13. தமிழரசி குறவஞ்சியின் பாட்டுடைத்தலைவன் கோயில் உள்ள இடம் - சுவாமிமலை.
14. கம்பர் எதில் பெரியவர் - கல்வியில்.
2. தொகை நூல்கள்
15. புறம், புறப்பாட்டு என வழங்கப் பெறுவது - புறநானூறு.
16. புறநானூற்றின் திணைகள் - 11.
17. தமிழரின் வாழ்வியல் சிந்தனைக் கருவூலம் - புறநானூறு.
18. புறநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ள துறைகள் - 65.
19. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று - பரிபாடல்.
20. மணிமிடைப்பவளத்தில் உள்ள பாடல்கள் - 180.
21. அகநானூற்றுப்பாக்களின் அடிவரையறை - 13 அடி முதல் 31 அடி வரை.
22. நற்றிணையைத் தொகுப்பித்தவன் - பன்னாடு தந்த பாண்டியன் மாறன்வழுதி.
23. நற்றிணைப்பாக்களின் அடிவரையறை - 9 அடி முதல் 12 அடிவரை.
24. கபிலரை 'வாய்மொழிக்கபிலர்' என்று போற்றியவர் - நக்கீரர்.
25. குறுந்தொகைக்குக் கடவுள் வாழ்த்து பாடியவர் - பாரதம் பாடிய பெருந்தேவனார்.
26. அகப்புறப் பாடல்களைக் கொண்ட நூல் - பரிபாடல்.
27. அகநானூற்றில் 1,3 என ஒற்றைப்படையாக வரும் திணை - பாலைத்திணை.
28. ' அஞ்சிலோதி' - இலக்கணக்குறிப்பு - அன்மொழித்தொகை.
29. 'பராய்க்கடன்' என்றால் - வேண்டிக்கொள்ளுதல்.
30. 4 அடிச்சிறுமையும் 8 அடிப்பெருமையும் உடைய நூல் - குறுந்தொகை.
31. அகநானூற்றுக்கு வழங்கும் வேறுபெயர் - நெடுந்தொகை.
32. குறுந்தொகையில் உள்ள மொத்தப் பாடல்கள் - 402.
33. சங்கப்பாடல்கள் பலவும் எந்த இலக்கண நூலுக்கு இலக்கியங்களாய்த் திகழ்கின்றன - தொல்காப்பியம்.
34. ஐங்குறுநூறைத் தொகுத்தவர் - கூடலூர் கிழார்.
3. திருக்குறள்
35. குறட்பா என்பது - ஈரடி வெண்பா.
36. அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்கள் - 38.
37. திருக்குறளில் அமைந்துள்ள இயல்கள் - 9.
38. திருவள்ளுவராண்டின்படி திருவள்ளுவர் வாழ்ந்த காலம் - கி.மு. 31.
39. பொருட்பாலின் இயல்கள் - அரசியல், அங்கவியல், ஒழிபியல்.
40. திருக்குறளின் பெருமையை உணர்த்துவது - திருவள்ளுவமாலை.
41. ' வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே' என்றவர் - பாரதிதாசன்.
42. பொருட்பாலில் உள்ள அதிகாரங்கள் - 70.
43. பொறுமைக்குச் சான்றாக வள்ளுவர் கூறுவது - பூமி (நிலம்).
44. அறத்துப்பாலில் உள்ள குறள்கள் - 380.
45. 'உத்தரவேதம்' எனப்பெயர்பெற்றது - திருக்குறள்.
46. மாதானுபங்கி என புலவர்களால் பாராட்டப்படுபவர் - திருவள்ளுவர்.
4. தொடர்நிலைச்செய்யுள்
47. சிலப்பதிகாரத்தில் உள்ள காண்டங்கள் - 3.
48. சிலப்பதிகார உரையாசிரியருள் ஒருவர் - அரும்பத உரைகாரர்.
49. சிலப்பதிகாரத்திற்கு வழங்கும் சிறப்புப்பெயர்களில் ஒன்று - உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்.
50. சிலப்பதிகாரத்தின் உட்பிரிவு - காதை.
51. 'தேனிலே ஊறிய செந்தமிழின் - சுவைதேறும் சிலப்பதிகாரம்' என்று பாராட்டியவர் - கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை.
52. வரி என்பது - இசைப்பாடல்.
53. தாம் இயற்றிய இராமகாதைக்குக் கம்பர் இட்ட பெயர் - இராமவதாரம்.
54. கம்ப நாடகத்தின் யாப்பு வண்ணங்களுக்குக் கூறப்படும் கணக்கீடு - 96.
55. கம்பராமாயணத்திலுள்ள காண்டங்களின் எண்ணிக்கை - 6.
56. உத்தரகாண்டத்தைப் பாடியவர் - ஒட்டக்கூத்தர்.
57. சுந்தர காண்டம் இராமாயணத்தில் - 5ஆம் காண்டம்.
58. 'சுந்தரன்' என்ற பெயரால் இராமாயணத&##3021;தில் வழங்கப்படுபவர் - அனுமன்.
59. 'சிறிய திருவடி' என்று அழைக்கப்படுபவர் - அனுமன்.
60. தனயை என்ற சொல்லின் பொருள் - மகள்.
61. இராமன் கொடுத்ததாகச் சீதையிடம் அனுமன் காட்டியது - கணையாழி.
62. சீதை தன்னை மீட்டுச் செல்ல வேண்டி விதித்த காலம் - ஒரு திங்கள்.
63. வீரமாமுனிவரின் தாய்நாடு - இத்தாலி.
64. கொன்ஸ்டான் என்னும் சொல்லுக்குப் பொருள் - அஞ்சாதவன்.
65. வீரமாமுனிவர் தொகுத்த அகராதி - சதுரகராதி.
66. திருக்குறளின் அறத்துப்பால் மற்றும் பொருட்பாலை வீரமாமுனிவர் மொழிபெயர்த்தது - இலத்தீன் மொழியில்.
67. தேம்பாவணி நூலின் பாட்டுடைத் தலைவர் - சூசை மாமுனிவர்.
68. கிறித்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம் - தேம்பாவணி.
69. ' நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்' என்றவர் - இளங்கோவடிகள்.
70. 'நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்' எனப்பாராட்டியவர் - பாரதியார்.
71. ' தைரியநாத சுவாமி' என்று அழைக்கப்படுபவர் - வீரமாமுனிவர்.
72. சிலப்பதிகாரம் - பொருள் - சிலம்பினால் அதிகரித்த கதை.
73. ' மருகி' என்பதன் பொருள் - மருமகள்.
74. தேம்பாவணியில் உள்ள காண்டங்கள் - 3.
75. ' தொன்னூல் விளக்கம்' நூலை எழுதியவர் - வீரமாமுனிவர்.
76. 'சேரதாண்டவம்' நூலின் ஆசிரியர் - பாரதிதாசன்.
77. யாருடைய வேண்டுகோளின்படி சிலப்பதிகாரம் பாடப்பட்டது? - சீத்தலைச்சாத்தனார்.
78. கம்பராமாயணக் காப்பியம் எவ்வகை நூல்? - வழிநூல்.
79. பாவேந்தர் வேற்றுநாட்டைச் சேர்ந்த எந்தப்புலவரோடு ஒப்பிடப்படுகிறார்? - இரசூல்கம்சதோவ்.
5. சிற்றிலக்கியங்கள்
80. உள்ளுறை உவமத்தில் உவமிக்கப்படும் கருப்பொருள் 'இது'வாக அமையக் கூடாது - தெய்வம்.
81. 'கவிப்பேரரசர்' எனப்படுபவர் - கம்பர்.
82. கவிச்சக்கரவர்த்தி, கவிராட்சசன் என்றழைக்கப்படுபவர் - ஒட்டக்கூத்தர்.
83. 'திவ்விய கவி' என்றழைக்கப்படுபவர் - பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்.
84. தமிழில் தோன்றிய முதல் கலம்பகம் - நந்திக்கலம்பகம்.
85. 'புலன்' என்னும் இலக்கிய வகை - பள்ளு.
86. 18 உறுப்புகளால் பாடப்படும் சிற்றிலக்கியம் - கலம்பகம்.
87. 'பிரபந்தம்' என்னும் வடசொல் உணர்த்தும் பொருள் - நன்கு கட்டப்பட்டது.
88. முக்கூடற்பள்ளுக்குரிய பாவகை - சிந்துப்பா.
89. 'சொற்றொடர்நிலை' என்று வழங்கப்படுவது - அந்தாதி.
90. 'சிற்றிலக்கியங்கள் 96' என்று பட்டியலிடும் நூல் - சதுரகராதி.
91. உலாவிற்குரிய பாவகை - கலிவெண்பா.
92. மதுரைக்கலம்பகத்தின் ஆசிரியர் - குமரகுருபரர்.
93. 'தக்கயாகப்பரணி' எழுதியவர் - ஒட்டக்கூத்தர்.
94. குமரகுருபரர் 'இருகண்'களாகப் பாவித்தது - தமிழையும், தெய்வத்தையும்.
95. 'சிற்றிலக்கியங்களின் இலக்கணம்' கூறும் நூல் - பாட்டியல் நூல்கள்.
96. கதம்பம் என்பதே கலம்பகம் என்றானது எனக்கூறியவர் - உ.வே.சா.
97. சைவ, வைணவங்களை ஒருங்கிணைக்கும் இலட்சியம் கொண்ட நூல் - முக்கூடற்பள்ளு.
6. மறுமலர்ச்சிப்பாடல்கள்
98. பாரதிதாசனின் இயற்பெயர் - சுப்புரத்தினம்.
99. பாரதிதாசன் சாகித்திய அகாடமிப் பரிசுபெற்ற நூல் - பிசிராந்தையார்.
100. பாரதிதாசன் வெளியிட்ட இதழ் - குயில்.
101. 'வாழ்வினிற் செம்மையைச் செய்பவள் நீயே' என்ற பாடலைத் தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்ற அரசு - புதுவைஅரசு.
102. வடமொழியில் பாரதம் பாடியவர் - வியாசர்.
103. பாஞ்சாலி சபதத்தில் உள்ள சருக்கங்கள் - 5.
104. 'நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல்' என்றவர் - பாரதியார்.
105. 20ஆம் நூற்றாண்டின் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் - பாரதியார்.
106. செந்தமிழைச் செழுந்தமிழாகக் காண விரும்பியவர் - பாரதிதாசன்.
107. பிரெஞ்சுக் குடியரசுத்தலைவரால் 'செவாலியர்' விருதுபெற்றவர் - வாணிதாசன்.
108. கவிஞரேறு, பாவலர்மணி முதலிய பட்டங்கள் பெற்றவர் - வாணிதாசன்.
109. சுரதா தமிழ்வளர்ச்சித்துறையின் பரிசு பெற்ற நூல் - தேன்மழை.
110. தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் 'தமிழன்னை விருது' பெற்றவர் - அப்துல் ரகுமான்.
111. 'உவமைக்கவிஞர்' எனப்படுபவர் - சுரதா.
112. நல்லாசிரியருக்கான டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருதுபெற்றவர் - தாரா பாரதி.
113. ‘பாரதியின் கவிதா மண்டலத்தைச் சார்ந்த சுப்புரத்தினம்’ என்று பாரதியாரால் அறிமுகப்படுத்தப்பட்டவர் -பாரதிதாசன்.
114. பாரதிதாசனிடம் தொடக்கக்கல்வி பயின்றவர் - வாணிதாசன்.
115. 'பாவேந்தர் நினைவுப்பரிசு' பெற்ற முதற்பாவலர் - சுரதா.
116. உவமைக்கவிஞர் சுரதாவின் இயற்பெயர் - இராசகோபாலன்.
117. தமிழகத்தின் 'வேர்ட்ஸ்வர்த்' எனப்படுபவர் - வாணிதாசன்.
118. 'கல்லாரைக் காμங்கால் கல்விநல்காக் கசடர்க்குத் தூக்குமரம் அங்கே உண்டாம்' எனப்பாடியவர் -பாரதிதாசன்.
119. இரட்டைக்கிளவி போல் இணைந்தே வாருங்கள் பிரிந்தால் பொருளில்லை எனப்பாடியவர் - சுரதா.
120. 'பாரதி' என்ற சொல்லின் பொருள் - கலைமகள்.
121. 'இமயம் எங்கள் காலடியில்' நூலின் ஆசிரியர் - ஆலந்தூர் கோ.மோகனரங்கன்.
122. 'தமிழ் - பிரெஞ்சு கையகரமுதலி' வெளியிட்டவர் - வாணிதாசன்.
123. 'பால்வீதி' நூலின் ஆசிரியர் - அப்துல்ரகுமான்.
124. மாலைக்காலத்தை வருணித்தவர் - பாரதியார்.
125. 'மறுமலர்ச்சிப்பாடல்களின் உயிர்நாடி' - மானுடம் பாடும்நெறி.
7. வழிபாட்டுப்பாடல்கள்
126. 'கிறித்துவக் கம்பர்' என்றழைக்கப்பட்டவர் - ஹெச். ஏ. கிருஷ்ணப்பிள்ளை.
127. 'சின்னச்சீறா' நூலை எழுதியவர் - பனுஅகமது மரைக்காயர்.
128. சுந்தரர் தேவாரம் - 7 ஆம் திருமுறை.
129. ஆழ்வார்களின் திவ்வியப்பிரபந்தத்திற்கு உரை எழுதியவர் - பெரியவாச்சான் பிள்ளை.
130. கடிகை முத்துப்புலவரின் மாணவர் - உமறுப்புலவர்.
131. வழிபாட்டுப்பாடலில் திருமாலைப் பாடியவர் - குலசேகராழ்வார்.
132. 'தம்பிரான் தோழர்' என்றழைக்கப்பட்டவர் - சுந்தரர்.
133. 'பில்கிரிம்ஸ் பிராகிரஸ்' நூலை எழுதியவர் - ஜான்பனியன்.
134. உமறுப்புலவர் எழுதிய நூல் - சீறாப்புராணம்.
135. இரட்சண்ய யாத்திரிகத்துள் இடையிடையே அமைந்த இசைப்பாடல்களின் பெயர் - தேவாரம்.
136. இறைவன் ஆவணங்காட்டி சுந்தரரை ஆட்கொண்ட ஊர் - திருவெண்ணெய்நல்லூர்.
137. 'நீலகேசி' என்னும் நூலின் ஆசிரியர் - ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

No comments:

Post a Comment