தமிழ் இலக்கணம் | சொற்கள்
சொற்கள்:
• சொற்கள் நான்கு வகைப்படும் ; இயற்சொல், திரிசொல்,
திசைச்சொல், வடசொல்
• மற்றவர்களுக்கும் பொருள் புரியும் சொல் இயற்சொல் எனப்படும் எ.டு. தீ, காடு, மரம்.
• பெயர் இயற்சொல், வினை இயற்சொல் என
இயற்சொல் இரண்டு வகைப்படும்.
• காற்று, நிலவு, ஞாயிறு, பலகை - பெயர் இயற்சொற்கள்
• படித்தான், தூங்கினான்,
வந்தான் - வினை
இயற்சொற்கள்
• பொருள் தெரியாத ஆனால், கற்றவர்களுக்கு மட்டுமே புரியும் சொற்கள் - திரி சொல் எனப்படும்.
• பீலி, உகிர், ஆழி - திரி சொல்லிற்கான எடுத்துக்காட்டுகள்.
(பீலி -மயில் தோகை, உகிர் - நகம்,
ஆழி - கடல், சக்கரம்).
• பெயர் திரிசொல், வினைத் திரிசொல்
என திரிசொல் இரண்டு வகைப்படும்.
• எயிறு, வேய், மடி, நல்குரவு - பெயர்த் திரிசொல் (எயிறு - பல், வேய் - மூங்கில், மடி - சோம்பல், நல்குரவு - வறுமை).
• வினவினான், விளித்தான்,
நோக்கினார் - வினை
திரிசொல் (வினவினான் - கேட்டான், விளித்தான் - அழைத்தான், நோக்கினார் - பார்த்தார்).
• தமிழ்நாட்டைச் சூழ்ந்துள்ள பிறபகுதிகளிலிருந்து தமிழில் வழங்கும் சொற்கள்
திசைச் சொற்கள் எனப்படும். எடுத்துக்காட்டு; கேணி, பெற்றம் (கேணி - கிணறு, பெற்றம் -பசு).
தொகை
நிலைத்தொடர்கள்:
• வேற்றுமைத் தொகை, வினைத் தொகை,
பண்புத் தொகை, உவமைத் தொகை, உம்மைத் தொகை, அன்மொழித் தொகை என தொகை நிலைத்தொடர்கள் ஆறு
வகைப்படும்.
• பெயர்ப்பொருளை வேறுபடுத்திக் காட்டும் உறுப்புக்கு வேற்றுமை உருபு எனப்பெயர்.
• வேற்றுமைகள் எட்டு வகைப்படும். இதில் முதல் வேற்றுமைக்கும் எட்டாம்
வேற்றுமைக்கும் உருபு இல்லை. மற்ற ஆறுக்கும் உருபுகள் உண்டு. அவை ஐ,ஆல், கு, இன், அது, கண்.
• இரு சொற்களுக்கிடையே இவ்வேற்றுமை உருபு மறைந்து வருவதை வேற்றுமைத் தொகை
என்கிறோம்.
• எடுத்துக்காட்டுகள்: பால் பருகினான் - இரண்டாம் வேற்றுமைத்தொகை (பால் +ஐ+
பருகினான் - இங்கு ஐ என்னும் உருபு
மறைந்துள்ளது).
• தலை வணங்கினான் - மூன்றாம் வேற்றுமைத் தொகை (தலை +ஆல்+ வணங்கினான்).
• வேலன் மகன் - நான்காம் வேற்றுமைத் தொகை
(வேலன் +கு+மகன்).
தொகா
நிலைத்தொடர்கள்:
• எழுவாய்த்தொடர், விளித்தொடர், வினைமுற்றுத் தொடர், பெயரெச்சத் தொடர், வினையெச்சத் தொடர், வேற்றுமை தொகாநிலைத் தொடர், இடைச்சொற்றொடர், உரிச்சொற்றொடர், அடுக்குத்தொடர் என தொகா நிலைத்தொடர்கள் ஒன்பது
வகைப்படும்.
• கபிலன் வந்தான் - இதில் கபிலன் என்னும் எழுவாயைத் தொடர்ந்து வந்தான் என்னும்
பயனிலை வந்துள்ளதால், இது
எழுவாய்த்தொடர்.
• கதிரவா வா - இது விளித்தொடர்
• கண்டேன் சீதையை - வினைமுற்று முதலில் வந்து பெயரைத் தொடர்கிறது. அதனால்,
இது வினைமுற்றுத் தொடர்.
• விழுந்த மரம் - விழுந்த என்னும் எச்சவினை மரம் என்னும் பெயர்ச்சொல்லோடு
முடிவதால் இது பெயரெச்சத் தொடர்.
• வந்து போனான் - வந்து என்னும் எச்சவினை போனான் என்னும் வினைமுற்றைக்கொண்டு
முடிந்துள்ளதால், இது வினையெச்சத்
தொடர்.
• வீட்டைக் கட்டினான் - இத்தொடரில் ஐ என்னும் வேற்றுமை உருபு வெளிப்படையாக
வந்துள்ளதால், இது வேற்றுமைத்
தொகா நிலைத்தொடர் எனப்படும்.
• மற்றொன்று - மற்று + ஒன்று. மற்று என்னும் இடைச்சொல்லை அடுத்து ஒன்று என்னும்
சொல் தொடர்ந்து வந்ததால் அது இடைச்சொற்றொடர் எனப்படும்.
• மாமுனிவர் - இத்தொடரில் மா என்பது உரிச்சொல். இதைத் தொடர்ந்து முனிவர் என்னும்
சொல் வந்துள்ளதால் இது உரிச்சொற்றொடர்.
• வாழ்க வாழ்க வாழ்க - ஒரே சொல் இங்கு பலமுறை அடுக்கி வந்துள்ளதால் இது
அடுக்குத்தொடர்.
இரண்டாம் வேற்றுமை உருபு
• இதனை செயப்படுபொருள் வேற்றுமை எனவும் வழங்குவர்.
• ஆக்கல், அழித்தல்,
அடைதல், நீத்தல், ஒத்தல், உடைமை ஆகிய அறுவகைப் பொருள்களில் வரும்.
• வளவன் பள்ளியைக் கட்டினான் - ஆக்கல்
• சோழன் பகைவரை அழித்தான் - அழித்தல்
• தேன்மொழி கோயிலை அடைந்தாள் - அடைதல்
• குழகன் சினத்தை விடுத்தான் - நீத்தல்
• கயல்விழி குயிலைப் போன்றவள் - ஒத்தல்
• கண்ணன் செல்வத்தை உடையவன் - உடைமை
மூன்றாம் வேற்றுமை உருபுகள்
• ஆல், ஆன், ஒடு, ஓடு என பல பொருள்களில் இது வரும்
• ஆல், ஆன் உருப்புகள்
கருவி கருத்தா ஆகிய இருபொருள்களிலும் வரும். கருவி முதற்கருவி, துணைக்கருவி என இருவகைப்படும்.
• நாரால் கயிறு திரித்தான் (முதற் கருவி காரியமாக மாறி அதுவாகவே இருப்பது)
கையால் கயிறு திரித்தான்.
• துணைக்கருவி (காரியம் செயல்படும்வரை துணையாக இருப்பது) இதேபோல் கருத்தாவும்
இயற்றுதல், கருத்தா, ஏவுதல் கருத்தா என இருவகைப்படும்.
• கோயில் அரசனால் கட்டப்பட்டது என்பது ஏவுதல் கருத்தா (தான் செய்யாமல் பிறரைச்
செய்ய வைப்பது).
நான்காம்
வேற்றுமை உருபுகள்
• கொடை, பகை, நட்பு, தகவு, அதுவாதல், பொருட்டு,
முறை, எல்லை எனப் பல பொருள்களில் வரும்.
• புலவர்க்குப் பரிசு கொடுத்தார் - கொடை
• நோய்க்குப் பகை மருந்து - பகை
• பாரிக்கு நண்பர் கபிலர் - நட்பு
• வீட்டுக்கு ஒரு பிள்ளை - தகுதி
• வளையலுக்குப் பொன் - அதுவாதல்
• கூலிக்கு வேலை - பொருட்டு
• அனிதாவுக்கு மகன் அன்பரசு - முறை
• திருத்தணிக்கு வடக்கு வேங்கடம் - எல்லை
ஐந்தாம்
வேற்றுமை உருபு
• இல், இன், இவை தம்மை ஏற்ற பெயர்ப்பொருளை நீங்கல், ஒப்பு, எல்லை, ஏதுப் பொருள்களாக வேறுபடுத்தும்.
• தலையின் இழந்த மயிர் - நீங்கல்
• பாலின் நிறம் கொக்கு - ஒப்பு
• சென்னையில் மேற்கு வேலூர் - எல்லை
• அறிவில் மிக்கவர் ஔவை - ஏது
• இருந்து, நின்று, விட, காட்டிலும் என்பன ஐந்தாம் வேற்றுமைக்குரிய சொல்லுருபுகள்
ஆகும்.
• வேலன் ஊரிலிருந்து வந்தான் - இருந்து
• கயல்விழி என்னைவிடப் பெரியவள் - விட
• தமிழைக்காட்டிலும் ச&##3009;வையான மொழி உண்டா? - காட்டிலும்
ஆறாம்
வேற்றுமை உருபு:
• அது, ஆது என்பன
ஒருமைக்கும், அ என்பது
பன்மைக்கும் வரும். இவ்வுருபுகள் கிழமைப் (உரிமை) பொருளில் வரும்.
• எடுத்துக்காட்டுகள்: எனது வீடு, எனது நூல், தை, மாசி எனத் தமிழ்
மாதங்கள் பன்னிரெண்டு.
• ஆறாம் வேற்றுமைக்கு ‘உடை’ய என்பது
சொல்லுருபாக வரும்.
• எடுத்துக்காட்டுகள்: என்னுடைய வீடு, நண்பனுடைய சட்டை.
ஏழாம்
வேற்றுமை உருபுகள்:
• கண், கால், மேல், கீழே, இடம், இல்.
• மணியில் ஒலி - இல்
• வீட்டின்கண் பூனை - கண்
• அவனுக்கு என் மேல் வெறுப்பு - மேல்
• பெட்டியில் பணம் உள்ளது - இல்
எட்டாம்
வேற்றுமை உருபு:
• விளிவேற்றுமை என்பது எட்டாம் வேற்றுமை எனப்படும்.
• படர்க்கைப் பெயரை முன்னிலைப் பெயராக்கி அழைக்க இவ்வேற்றுமை பயன்படுகிறது. இதனை
விளி வேற்றுமை என வழங்குவர். எடுத்துக்காட்டு; கண்ணா வா!, கிளியே பேசு!
No comments:
Post a Comment