Friday, 20 March 2015

தமிழ் | பத்தாம் வகுப்பு - முக்கிய குறிப்புகள்

தமிழ் | பத்தாம் வகுப்பு - முக்கிய குறிப்புகள் - ஏலாதி

  • திருக்குறளைப் போற்றிப் பாடப்படும் நூல் திருவள்ளுவமாலை
  • திருக்குறள் குறள் வெண்பாக்களால் ஆன நூலாகும்.
  • இணையில்லா முப்பாலுக்கு இந்நிலத்தே எனப் பாடியவர் பாரதிதாசன்
  • ஏலாதி பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • கணிமேதாவியாரின் காலம் சங்கம் மருவிய காலம்.
  • மருந்துப் பொருள்களால் அமையப்பெற்ற இரு நூல்கள் திரிகடுகம், ஏலாதி
  • இளங்கோவடிகள் சேர நாட்டைச் சேர்ந்தவர்.
  • நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்று பாடியவர் பாரதியார்.
  • குடும்ப விளக்கு பாரதிதாசன் படைத்த குறுங்காவியங்களுல் ஒன்று
  • ஆறு காண்டங்களைக் கொண்ட நூல் கம்பராமாயணம்.
  • சரசுவதி அந்தாதி கம்பர் இயற்றிய நூல்களுள் ஒன்று.
  • கம்பரைப் புரந்தவர் சடையப்ப வள்ளல்.
  • “நல்” என்னும் அடைமொழி பெற்ற நூல் நற்றிணை.
  • பன்னாடு தந்த மாறன் வழுதி நற்றிணையைத் தொகுப்பித்தவர்.
  • நற்றிணை எட்டுத் தொகை நூல்களைச் சார்ந்தது.
  • சேக்கிழார் பெருமான் அருளியது பெரியபுராணம்.
  • தம் வீட்டில் உள்ள அனைத்துப் பொருள்களுக்கும் திருநாவுக்கரசர் எனப் பெயர் சூட்டியவர் அப்பூதியடிகளார்
  • பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ எனப்பாடியவர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்.
  • திறனறிந்து தேர்ந்து கொள்ள வேண்டியவர் மூத்த அறிவுடையார்.
  • அரியவற்றுள் எல்லாம் அரிது பெரியாரைப் பேணித்தமராக் கொளல்.
  • முதலில்லார்க்கு ஊதியம் இல்லை
  • திருநாவுக்கரசர் காலம் கி.பி.7 ஆம் நூற்றாண்டு.
  • “நாமார்க்கும் குடியல்லோம் என்னும் பாடல் பாரதியாரை “அச்சமில்லை அச்சமில்லை எனப்பாடத்தூண்டியது.
  • சீறாப்புராணம் மூன்று காண்டங்களைக் கொண்டது.
  • “கேழல்” என்பதன் பொருள் பன்றி
  • கலித்தொகை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
  • நெய்தல் கலியைப் பாடியவர் நல்லந்துவனார்.
  • போற்றாரைப் பொறுத்தல் என்பது பொறை எனப்படும்.
  • நந்திக் கலம்பகம் 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
  • “பணை” என்னும் சொல்லின் பொருள் மூங்கில்.
  • பெருமாள் திருமொழியில் நூற்றைந்து பாசுரங்கள் உள்ளன.
  • குலசேகராடிநவார் பாடல் திருவியற்பா தொகுப்பில் உள்ளது.
  • மாணிக்க வாசகர் பிறந்த ஊர் திருவாதவூர்.
  • மாணிக்க வாசகர் பாடல்கள் எட்டாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளன.
  • மாணிக்க வாசகர் கட்டிய கோவில் திருப் பெருந்துறையில் உள்ளது.
  • மாணிக்க வாசகர் அரிமர்த்தன பாண்டிய மன்னரிடம் தலைமையமைச்சராகப்பணியாற்றினார்.
  • ஜி.யு போப் திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.
  • திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்.
  • திருக்குறள் இலத்தீன், கிரேக்கம், ஆங்கிலம் முதலான உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
  • திருக்குறளில் 133 அதிகாரங்களும் 1330 குறட்பாக்களும் உள்ளன.
  • ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எடீநுதுவர் எடீநுதாப் பழி
  • இரட்டைக் காப்பியங்கள் என்பன சிலப்பதிகாரமும் மணிமேகலையும் ஆகும்.
  • நற்றிணை ஒன்பதடிச் சிற்றெல்லையும் பன்னிரண்டு அடி பேரெல்லையும் கொண்ட நூல்.
  • “அரி” என்னும் சொல்லின் பொருள் நெற்கதிர்.
  • போலிப் புலவர்களைத் தலையில் குட்டுபவர் அதிவீரராமபாண்டியன்.
  • போலிப் புலவர்களின் தலையை வெட்டுபவர் ஒட்டக்கூத்தர்.
  • அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள்.
  • திருநாவுக்கரசரின் தமக்கையார் திலகவதியார் ஆவார்.
  • திருநாவுக்கரசர் அருளிய பாடல்கள் தேவாரம் என அழைக்கப்படுகிறது.
  • சீறாப் புராணத்தை இயற்றியவர் உமறுப்புலவர்.
  • உமறுப்புலவரை ஆதரித்த வள்ளல் அப்துல்காதிர் மரைக்காயர் என்ற வள்ளல் சீதக்காதி
  • தார் வேந்தன் கோல் நோக்கி வாழும் குடி போன்றிருந்தேனே.
  • உலகத் தமிடிநப பண்பாட்டு இயக்கம் தோன்றக் காரணமானவர் சாலை இளந்திரையன்.
  • நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் திருவாய்மொழி குலசேகரர் பாடியதாகும்.
  • ஈஸ்ட்மன் - படச்சுருள்
  • எடிசன் - ஒருவர் மட்டும் பார்க்கும் படக்கருவி
  • எட்வர்டுமைபிரிட்சு - இயக்கப்படம்
  • வால்ட் டிஸ்னி - கருத்துப்படம்
  • சத்திய சோதனை - காந்தியடிகள்
  • பகவத்கீதை - இந்து சமய நூல்
  • திருக்குறள் - திருவள்ளுவர்
  • பைபிள் - கிறித்துவ சமய நூல்
  • வினையே ஆடவர்க்குயிர் - குறுந்தொகை
  • முந்நீர் வழக்கம் மகடூ உவோடில்லை - தொல்காப்பியர்
  • உடம்பை வளர்த்தேன்; உயிர் வளர்த்தேனே - திருமூலர்
  • கைத்தொழில் ஒன்றைக்கற்றுக்கொள் - நாமக்கல் கவிஞர்.


தமிழ் | பத்தாம் வகுப்பு - முக்கிய குறிப்புகள்-பேரறிஞர் அண்ணா

1. பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி எனக் கூறியவர் பாவாணர்
2. இன்றைய மதுரையில் மூன்றாம் தமிழ்ச் சங்கம் இருந்தது
3. அரசின் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பணியாற்றும் போது நம் சமுதாயத்தில் தலைகீழ் புரட்சி ஏற்படும் என்றவர் பெரியார்
4. பெண் அடிமை ஆனதற்கு உரிய காரணங்களுள் ஒன்று சொத்துரிமை இல்லாமை
5. 1918இல் மும்பையில் அம்பேத்கர் சிறிது காலம் பொருளியல் பேராசிரியராகப் பணியாற்றினார்.
6. அம்பேத்காருக்கு இந்திய அரசு வழங்கிய விருது பாரத ரத்னா
7. நுண்ணிய நூல் பல கற்றவர்க்கே அமைந்த அரிய கலை பேச்சுக்கலை
8. மேடைப் பேச்சில் மக்களை ஈர்த்தவர் பேரறிஞர் அண்ணா
9. பண்ணொடு தமிழொப்பாய் எனத் தொடங்கும் பாடல் இடம் பெறும் நூல் தேவாரம்
10. உலகம் என்ற தமிடிநச் சொல் உலவு என்ற சொல்லின் அடியாகப் பிறந்தது.
11. தமிழர்கள் நிலத்தை ஐந்து வகையாகப் பிரித்துக் காட்டியிருக்கிறார்கள்.
12. காந்தியடிகள் சிரவணபிதுர்பத்தி நாடகத்தைப் பார்த்து உண்மையே பேச வேண்டும் என்று உறுதி பூண்டார்.
13. பகைவனிடமும் அன்பு காட்டு எனக் கூறிய நூல் பைபிள்
14. அறநெறியாகப் போற்றப்பட வேண்டியவை அன்பு, அருள்
15. ‘உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்’ எனத் தொடங்கும் பாடல் இடம் பெற்றுள்ள நூல் பெரியபுராணம்
16. வள்ளலாரின் இயற்பெயர் இராமலிங்கர்
17. பெரும்பாலான பணிகளுக்கு அடிப்படைத் தகுதி பன்னிரெண்டாம் வகுப்பு
18. விரல்கள் பத்தும் மூலதனம் என்னும் பாடலின் ஆசிரியர் தாராபாரதி
19. தமிழர்களிடம் இன்று பரவியுள்ள பெருநோய் மணக்கொடை
20. சரிந்த குடலைப் புத்தத் துறவியர் சரி செய்தசெய்தியை எடுத்துரைக்கும் நூல் மணிமேகலை
21. தமிழர் மனித வாடிநவை அகம் புறம் எனப் பிரித்தனர்.
22. குமரிக் கண்டத்தில் தோன்றிய முதல் மனிதன் பேசிய மொழி தமிழ்.
23. தமிழ் மிகவும் பண்பட்ட மொழியெனக் கூறிய மொழியியல் அறிஞர் மாக்சுமுல்லர் ஆவார்.
24. சிலப்பதிகாரம் முத்தமிழ்க் காப்பியம் என்று அழைக்கப்படுகிறது.
25. பெரியார் சமூக முரண்களை எதிர்த்தவர்;மூடக்கருத்துகளை முட்டறுத்தவர்.
26. வெறும் பேச்சுக்கும் மேடைப் பேச்சுக்கும் வேறுபாடு உண்டு.
27. பேச்சு முடிவில் சுருக்கத்தைக் கூறி கருத்தை நிலைநாட்டி முடிக்க வேண்டும்.
28. நடிப்பாற்றல் மிக்கவரையும் நடிப்புக் கலையைக் கற்றுத்தருபவரையும் இயக்குநர் என அழைப்பர்.
29. படப்பிடிப்புக் கருவியை நகர்த்தும் வண்டியில் பொருத்துவதும் உண்டு.
30. இயங்கும் படங்களைப் பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கும்.
31. இலெமூரியாவை மனித நாகரிகத் தொட்டில் என்பர்.
32. தனக்குவமையில்லா ஒரு தனிஇனம் தமிழ் இனம்.
33. அனைத்தையும் இழப்பினும் உண்மையை இழக்கிலேன் எனக் கூறியவர் அரிச்சந்திரன்.
34. திருக்குறளை மொழி பெயர்த்த உருசிய அறிஞர் தால்சுதாய்.
35. இராமலிங்கர் சத்திய தருமச்சாலையை நிறுவிய இடம் வடலூர்.
36. இராமலிங்கர் தமிடிந மொழியை இறவாத நிலை தரும் என்று கருதினார்.
37. சங்க காலத்தில் பெண்கள் கடல் கடந்து செல்லக் கூடாது.
38. நாள்தோறும் கல்வியில் புதுப்புதுத்துறைகள் உண்டாக்கிக் கொண்டிருக்கின்றன.
39. காவலர், இராணுவம் போன்ற பணிகளுக்கு உடற்கூறு தேர்வும், எழுத்துத் தேர்வும் உண்டு.


1 comment: