Monday, 16 March 2015

அடைமொழியால் குறிக்கப்பெறும் - சான்றோர்

அடைமொழியால் குறிக்கப்பெறும் - சான்றோர்

திருவள்ளுவர்
  • நாயனார்
  • தேவர்(நச்சினார்க்கினியர்)
  • முதற்பாவலர்
  • தெய்வப்புலவர்(இளம்பூரனார்)
  • நான்முகன்
  • மாதானுபாங்கி
  • செந்நாப்போதார்
  • பெருநாவலர்
  • பொய்யில் புலவன்(மணிமேகலை காப்பியம்)
சீத்தலைச் சாத்தனார்
  • தண்டமிழ் ஆசான்
  • சாத்தன் நன்னூற்புலவன்
திருத்தக்கதேவர்
  • திருத்தகு முனிவர்
  • திருத்தகு மகாமுனிவர்
  • தேவர்
நச்சினார்கினியர்
  • உச்சிமேற்கொள் புலவர் நச்சினார்கினியர்
  • தமிழ்மல்லி நாதசூரி
செயங்கொண்டார்
  • கவிச்சக்ரவர்த்தி
ஒட்டக்கூத்தர்
  • கவிராட்சசன்
  • கவிச்சக்ரவர்த்தி
  • காளக்கவி
  • சர்வஞ்சக் கவி
  • கௌடப் புலவர்
கம்பர்
  • கவிச்சக்ரவர்த்தி
  • கவிப் பேரரசர்
காளமேகப்புலவர்
  • வசை பாட காளமேகம்
  • வசைகவி
  • ஆசுகவி

பன்னிருதிருமுறை

திருஞானசம்பந்தர்
  • ஆளுடையபிள்ளை(இயற்பெயர்)
  • திருஞானம் பெற்ற பிள்ளை
  • காழிநாடுடைய பிள்ளை
  • ஆணைநமதென்ற பெருமான்
  • பரசமயகோளரி
  • நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தம்(சுந்தரர்)
  • திராவிட சிசு(ஆதிசங்கரர் தம்முடைய சௌந்தர்ய லகரி என்னும் நூலில்)
  • இன்தமிழ் ஏசுநாதர்
  • சத்புத்திரன்
  • காழி வள்ளல்
  • முருகனின் அவதாரம்
  • கவுணியர்
  • சந்தத்தின் தந்தை
  • காழியர்கோன்
  • ஞானத்தின் திருவுரு
  • நான் மறையின் தனித்துணை
  • கல்லாமல் கற்றவன்(சுந்தரர்)
திருநாவுக்கரசர்(இறைவன் அளித்த பெயர்)
  • மருள்நீக்கியார்(இயற் பெயர்)
  • தருமசேனர்(சமண சமயத்தில் இருந்த பொழுது)
  • அப்பர்(ஞானசம்பந்தர்)
  • வாகீசர்
  • தாண்டகவேந்தர்
  • ஆளுடைய அரசு
  • திருநாவுக்கரசர்(இறைவன் அளித்த பெயர்)
  • சைவ உலகின் செஞ்ஞாயிறு
சுந்தரர்
  • வன்தொண்டர்
  • தம்பிரான் தோழர்
  • சேரமான் தோழர்
  • திருநாவலூறார்
  • ஆலாலசுந்தரர்
  • ஆளுடைய நம்பி
மாணிக்கவாசகர்
  • திருவாதவூரார்
  • தென்னவன் பிரம்மராயன்
  • அழுது அடியடைந்த அன்பர்
  • வாதவூர் அடிகள்
  • பெருந்துறைப் பிள்ளை
  • அருள் வாசகர்
  • மணிவாசகர்
திருமூலர்
  • முதல் சித்தர்
  • தமிழ் சித்தர்களின் முதல்வர்
  • சுந்தரன்
  • நாதன்
காரைக்கால் அம்மையார்
  • அம்மை
சேரமான் பெருமான் நாயனார்
  • பெருமாக்கோதையார்
  • கழறிற்றறிவார்
நம்பியாண்டார் நம்பி
  • தமிழ் வியாசர்
சேக்கிழார்
  • அருண்மொழித்தேவர்(இயற்பெயர்)
  • உத்தம சோழப் பல்லவன்
  • தொண்டர் சீர் பரவுவார்
  • தெய்வப்புலவர்
  • இராமதேவர்
  • மாதேவடிகள்

நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம்:

நாத முனிகள்
  • பெரிய முதலியார்
திருமழிசையாழ்வார்
  • பக்தி சாரார்
  • சக்கரத்தாழ்வார்
பெரியாழ்வார்
  • விஷ்ணு சித்தர்(இயற் பெயர்)
  • பட்டர் பிரான்
  • பிள்ளைத்தமிழ் இலக்கியத்தின் முன்னோடி
  • கிழியறுத்த ஆழ்வார்
  • புதுவை மன்னன்
  • வேயர்தங்குலத்து துதித்த விஷ்ணுசித்தன்
ஆண்டாள்
  • கோதை(பெரியாழ்வார் இட்ட பெயர்)
  • சூடிக்கொடுத்த சுடர்க்கொடி
  • நாச்சியார்
  • ஆண்டாள்
குலசேகர ஆழ்வார்
  • கொல்லிக் காவலன்
  • கூடல் நாயகன்
  • கோழிக்கோ
தொண்டரடிப்பொடியாழ்வார்
  • விப்ர நாராயணர்(இயற் பெயர்)
திருமங்கையாழ்வார்
  • கலியன்(இயற் பெயர்)
  • கலிநாடன்
  • கலிகன்றி
  • அருள்மாரி
  • பரகாலன்
  • குறையலாளி
  • மங்கையர் கோன்
  • மங்கை வேந்தன்
  • ஆறு அங்கம் கூறிய ஆதிநாடன்
  • ஆறு அங்கம் கூறிய அறிநாடன்
நம்மாழ்வார்
  • சடகோபர்
  • நம்மாழ்வார்
  • பராங்குசர்
  • மாறன்
  • ஆறு அங்க பெருமான்
  • குருகைக்காவலன்
  • வகுளாபரணன்
  • தமிழ் மாறன்
  • வேதம் தமிழ் செய்த மாறன்
  • காரிமாறன்
  • வைணவத்து திராவிட சிசு

பிற்கால ஆசிரியர்கள்:

தஞ்சை வேதநாயக சாத்திரியார்
  • ஞானதீபக் கவிராயர்
  • அண்ணாவியார்
பிள்ளை பெருமாள் ஐயங்கார்
  • அழகிய மணவாளதாசர்
  • தெய்வக்கவிஞர்
  • திவ்வியகவிஞர்
மனோன்மணியம் சுந்தரனார்
  • ராவ்பகதூர்
  • தமிழ் செய்யுள் நாடக இலக்கியத்தின் தந்தை
வானமாமலை
  • தமிழ் நாட்டுப்புற பாடலின் தந்தை
பாரதியார்
  • புதுக் கவிதையின் முன்னோடி
  • பைந்தமிழ்த் தேர்பாகன்(பாவேந்தர்)
  • சிந்துக்குத் தந்தை(பாவேந்தர்)
  • நீடு துயில் நீக்கப் பாடிவந்த நிலா(பாவேந்தர்)
  • காடு கமழும் கற்பூரச் சொற்கோ(பாவேந்தர்)
  • பாட்டுக்கொரு புலவன் பாரதி(கவிமணி)
  • தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி
  • தேசியக்கவி
  • விடுதலைக்கவி
  • அமரக்கவி
  • முன்னறி புலவன்
  • மகாகவி
  • உலககவி
  • தமிழ்க்கவி
  • மக்கள் கவிஞர்
  • வரகவி
பாரதிதாசன்
  • புரட்சிக்கவிஞர்(அறிஞர் அண்ணா)
  • பாவேந்தர்
  • புதுவைக்குயில்
  • பகுத்தறிவு கவிஞர்
  • தமிழ்நாட்டு இரசுல் கம்சதேவ்
  • இயற்க்கை கவிஞர்
நாமக்கல் கவிஞர்
  • நாமக்கல் கவிஞர்
  • காந்தியக் கவிஞர்
  • ஆஸ்தானக் கவிஞர்
  • காங்கிரஸ் புலவர்
  • புலவர்(விஜயராகவ  ஆச்சாரியார்)
  • இராமலிங்கம்பிள்ளை(இயற் பெயர்)
கவிமணி
  • கவிமணி(சென்னை மாகாணத் தமிழ் சங்கத்தின் தலைவர் உமாமகேசுவரனார்)
  • குழந்தை கவிஞர்
  • தேவி
  • நாஞ்சில் நாட்டு கவிஞர்
  • தழுவல் கவிஞர்
முடியரசன்
  • கவியரசு(குன்றக்குடி அடிகளார்)
  • தமிழ்நாட்டு வானம்பாடி(அறிஞர் அண்ணா)
வாணிதாசன்
  • புதுமைக் கவிஞர்
  • பாவலரேறு
  • பாவலர்மணி
  • தமிழ்நாட்டுத் தாகூர்(மயிலை சிவமுத்து)
  • தமிழ்நாட்டு வோர்ட்ஸ்வொர்த்
  • ரமி(புனைப் பெயர்)
சுரதா
  • உவமைக் கவிஞர்(ஜெகசிற்பியன்)
  • கவிஞர் திலகம்(சேலம் கவிஞர் மன்றம்)
  • தன்மானக் கவிஞர்(மூவேந்தர் முத்தமிழ் மன்றம்)
  • கலைமாமணி(தமிழக இயலிசை நாடக மன்றம்)
  • கவிமன்னர்(கலைஞர் கருணாநிதி)
கண்ணதாசன்
  • கவியரசு
  • கவிச்சக்ரவர்த்தி
  • குழந்தை மனம் கொண்ட கவிஞர்
  • காரை முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், துப்பாக்கி, ஆரோக்கியசாமி(புனைபெயர்கள்)
உடுமலை நாராயண கவி
  • பகுத்தறிவு கவிராயர்
பட்டுக்கோட்டை கலயானசுன்தரம்
  • மக்கள் கவிஞர்
  • பொதுவுடைமை கவிஞர்
  • பாமர மக்களின் கவிஞர்
மருதகாசி
  • திரைக்கவித் திலகம்
ந.பிச்சமூர்த்தி
  • சிறுகதையின் சாதனை
  • புதுக்கவிதையின் முன்னோடி
  • தமிழ் புதுக்கவிதை இயக்கத்தின் தோற்றுநர்
  • புதுக்கவிதையின் முதல்வர்
  • புதுக்கவிதை இயக்கத்தின் விடிவெள்ளி
  • ரேவதி, பிச்சு, ந.பி(புனைப் பெயர்)
சி.சு.செல்லப்பா
  • புதுக்கவிதைப் புரவலர்
தருமு சிவராமு
  • பிரமிள், பானுசந்திரன், அரூப்சிவராம்(புனை பெயர்கள்)
அப்துல் ரகுமான்
  • இவர், “மரபுக் கவிதையின் வேர் பார்த்தவர்; புதுக்கவிதையில் மலர் பார்த்தவர்” எனப் பாராட்டப்படுபவர்
  • கவிக்கோ
  • விண்மீன்கள் இடையே ஒரு முழுமதி
  • வானத்தை வென்ற கவிஞன்
  • சூரியக் கவிஞன்
  • தமிழ்நாட்டு இக்பால்
கல்யாண்ஜி
  • கல்யாணசுந்தரம்(இயற்பெயர்)
  • வண்ணதாசன்(புனை பெயர்)
ரங்கநாதன்
  • ஞானக்கூத்தன்(புனை பெயர்)
ஆலந்தூர் மோகனரங்கன்
  • கவி வேந்தர்

No comments:

Post a Comment