வரலாறு | +2 முக்கிய சட்டம்,போர்,உடன்படிக்கை
ஒழுங்கு முறைச் சட்டம் (1773)
• வணிகக்குழுவின் அலுவலர்களை ஒழுங்குபடுத்த ஏற்படுத்தப்பட்ட முதல் சட்டம் இதுவே.
• இங்கிலாந்து பிரதமர் “நார்த் பிரபு” இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இச்சட்டத்தை 1773-ல் கொண்டுவந்தார்.
• இச்சட்டத்தால் வணிக குழுவில் இருந்த முறை கேடுகள் நீக்கப்பட்டன.
• வங்க ஆளுநர் “தலைமை ஆளுநராக” பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
• இந்தியாவில் உச்ச நீதிமன்றம் கல்கத்தாவில் ஏற்படுத்தப்பட்டது.
பிட் இந்திய சட்டம் (1784)
• ஒழுங்கு முறைச்சட்டத்தில் இருந்த குறைகளை நீக்க கொண்டுவரப்பட்டது.
• 1784-ல் இங்கிலாந்து பிரதமர் “இளைய பிட்” கொண்டுவந்தார்.
• இதனால் இச்சட்டம் “பிட் இந்திய சட்டம்” என புகழப்படுகிறது.
• இதனால் இங்கிலாந்தில் 6 உறுப்பினர் கொண்ட “கட்டுபாட்டு வாரியம்” ஏற்படுத்தப்பட்டது.
ஸ்ரீரங்கப்பட்டிணம் உடன்படிக்கை (1792)
• மூன்றாம் மைசூர் பேரின் முடிவில் திப்பு சுல்தானுக்கும், காரன்வாலிசுக்கும் இடையே ஏற்பட்ட உடன்படிக்கை.
• தோல்வியடைந்த திப்பு சுல்தான் தனது ஆட்சியின் பாதி பகுதியை பிரிட்டிஷாருக்கு விட்டுக் கொடுத்தார்.
• போர் இழப்பீட்டுத் தொகை 3 கோடி ரூபாய்க்கு பிணையாக திப்புவின் “இரு புதல்வர்கள்”ஆங்கிலேயரிடம் விடப்பட்டனர்.
• இதனால் மைசூரின் புகழ் மங்கியது.
சகௌலி உடன்படிக்கை (1816)
• கூர்க்கர்களுக்கு எதிரான பிரிட்டிஷாரின் நேபாள போரின் முடிவில் ஏற்பட்டது “சகௌலி உடன்படிக்கை” ஆகும்.
• நேபாள படை “தளபதி அமர் சிங் தபா” சரணடைந்தார்.
• தராய், குமான், கார்வால், சிம்லா பிரிட்டிஷார் பெற்றனர்.
• மலைவாழிடங்களான சிம்லா, முசூரி, நைனிடால், ராணிகட் போன்றவை பிரிட்டிஷார் வசமாகியது.
மங்களூர் உடன்படிக்கை (1784)
• இரண்டாம் மைசூர் போரின் முடிவில் திப்பு சுல்தானுக்கும், ஆங்கிலேயருக்கும் இடையே ஏற்பட்டது.
• போரில் இரு தரப்பினரும் கைப்பற்றிய பகுதிகள் திரும்ப பெறப்பட்டது.
• இதனால் போர் கைதிகள் இருதரப்பிலும் விடுவிக்கப்பட்டனர்.
இந்தியாவின் அறிவுப்பட்டயம் (அ) 1854-ல் “சர் சார்லஸ் உட் கல்வி அறிக்கை”.
• டல்ஹவுசி ஆட்சியில் “சர் சார்லஸ் உட்கல்வி” அறிக்கையை 1854-ல் நடைமுறைப்படுத்தினார்
• 1854-ல் உட் கல்வி அறிக்கை “ இந்தியாவின் அறிவுப்பட்டயம்” என கருதப்படுகிறது.
• தொடக்க கல்வி இடைநிலைக்கல்வி, உயர்கல்வி ஆகியவற்றில் கல்வி வளர்ச்சிக்கு வித்திட்டது.
• கல்வி துறைகள் சீரமைக்கப்பட்டன.
• பம்பாய், கல்கத்தா, சென்னையில் பல்கலைக்கழகங்கள் 1857-ல் ஏற்படுத்தப்பட்டன.
நாட்டு மொழி செய்தித்தாள்கள் சட்டம் (1878)
• லிட்டன்பிரபுவால் 1878-ல் நாட்டுமொழி செய்தித்தாள் சட்டம் இயற்றப்பட்டது.
• இந்திய நாட்டு மொழி செய்தித்தாள்கள், ஆங்கிலேயருக்கு எதிராக ஏதும் பிரசுரிக்கப்பட மாட்டாது என உறுதிமொழியை பதிப்பாளர் வழங்க வேண்டும்.
• இச்சட்டம் இந்திய பத்திரிக்கைகளின் சுதந்திரத்தை நசுக்கியது.
• இச்சட்டத்தை மீறும் செய்தித்தாள்களின் அச்சகங்கள், சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ரோகில்லாப்போர் (1774)
• மராட்டிய பகுதிகளுக்கும், அயோத்திக்கும் இடையே இருந்த ஒரு சிறிய அரசு ரோகில்கண்ட்
• இதன் மக்கள் ரோகில்லர்கள் என அழைக்கப்பட்னர்.
• இதன் ஆட்சியாளர் “ஹபிஸ் ரகமத்கான்”
• 1772-ல் அயோத்தி நவாப்புடன் பாதுகாப்பு உடன்படிக்கை மேற்கொண்டனர்.
• அயோத்தி நவாப்புக்கு உடன்படிக்கையின்படி கட்டணம் தர மறுத்ததால்
• வாரன்ஹேஸ்டிங்ஸ் உதவியுடன் ரோகில்கண்ட்டை அயோத்தியுடன் இணைத்தார் நவாப்
கெடுபிடிப#3021;போர்
• அமெரிக்கா, ரஷ்யா இடையே ஏற்பட்ட பதட்டமான உறவுமுறையே கெடுபிடிப்போர்
• கெடுபிடிப்போர் என்ற சொல்லை முதல் பயன்படுத்தியவர் பெர்னார்ட் பருச்
• சோவியத் யூனியன் சிதைவுக்கு பிறகு கெடுபிடிப்போர் முடிவுக்கு வந்தது.
இரயத்வாரி முறை.
• சர்தாமஸ் மன்றோ, சென்னையில் அறிமுகப்படுத்திய வரிவசூல்முறையே “இரயத்வாரி முறை”.
• இதில் குடியானவரே நிலத்தின் உடைமையாளராக கருதப்பட்டார்.
• குடியானவர்களே நேரடியாக அரசாங்கத்திற்கு வரி செலுத்த வேண்டும்.
• நிலவரி 20 முதல் 40 ஆண்டுகளுக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
• ஜமீன்தாரர்கள் போன்ற இடைதரகர் இல்லை.
பர்தா முறை
• 19 மற்றும் 20 நூற்றாண்டுகளில் பர்தா அணியும் வழக்கத்திற்கு எதிராக குரல்கள் எழுந்தன.
• தென்னிந்தியாவில் இவ்வழக்கம் பெருமளவு இல்லை.
• குடியானவர்களிடையே இந்த வழக்கம் கடுமையானதாக இல்லை.
• காலப்போக்கில் எந்த சட்டமும் இயற்றப்படாமலேயே இவ்வழக்கம் மறைந்து போயிற்று.
இந்திய தேசிய காங்கிரஸ் (1885).
• ஆலன் ஆக்டேவியன் ஹியூம் என்பவர் “இந்திய தேசிய காங்கிரஸ்” தோன்ற முயற்சிகள் எடுத்தார்.
• 1885-ல் பம்பாயில் முதல் கூட்டம் நடைபெற்றது.
• டபுள்யூ சி.பானர்ஜி முதல் கூட்டத்திற்கு தலைமை வகித்தார்.
• இந்தியா முழுவதிலும் இருந்து 72 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்
• வங்க பிரிவினை எதிர்ப்பு போராட்டம் சுதேசி இயக்கமாக வளர்ந்தது.
• சுதேசி இயக்கம் ஒரு அரசியல், பொருளாதார இயக்கமாகும்.
• அரசுபணி, நீதிமன்றங்கள், பள்ளிகள், கல்லூரிகள் புறக்கணித்தல் மற்றும் அந்நிய பொருட்களை வாங்க மறுத்தல்
• சுதேசி பொருட்களை வாங்க ஆதரித்தன.
வங்கப்பிரிவினை (1905)
• 1905-ல் கர்சன் நிர்வாக வசதிக்காக வங்காளத்தை இரண்டாகப் பிரித்தார்.
• புதியதாக உருவாக்கப்பட்ட கிழக்கு வங்காளத்தில், அஸ்ஸôம், டாக்கா, ராஜாகாட், சிட்டகாங் போன்ற பகுதிகள் அல்ங்கி இருந்தன.
• வங்களாத்தில் இந்துக்களையும், முஸ்லீம்களையும் பிளவுபடுத்துவதா இது அமைந்தது.
• இதனால் நாடு முழுவதும் வங்க பிரிவனைக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றன.
• இதனால் இந்திய தேசிய இயக்கம் வலுப்பட்டது.
சூரத் பிளவு (1907)
• 1907 சூரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் காங்கிரஸ் இரண்டாக பிளவுபட்டது.
• இதுவே சூரத் பிளவு எனப்பட்டது இதில் தீவிரவாதிகள், மிதவாதிகள் என இரு பிரிவாக பிரிந்தனர்.
• திலகர் தலைமையில் தீவிரவாதிகள் மாநாட்டை விட்டு வெளியேறினர்.
• அரசியலமைப்பு ரீதியாக சுயராஜ்யம் பெறப்பட வேண்டும் என்ற மிதவாதிகளின் கருத்தை தீவிரவாதிகள் ஏற்கவில்லை
ஜாலியன்வாலாபாக் படுகொலை (1919)
• இந்திய விடுதலை பேராட்டத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது ஜாலியன் வாலாபாக் படுகொலை.
• ரௌலட் சட்டத்தை எதிர்த்து பஞ்சாபில் 1919 ஏப்ரல் 13. பைசாகி அறுவடை திருநாளன்றுஜாலியன் வாலாபாக் பூங்காவில் நடைபெற்ற படுகொலையாகும்.
• இப்படுகொலைக்கு காரணமான ஆங்கில படை தளபதி டயர்.
• இதில் 379 பேர் கொல்லப்பட்டனர். 1137 பேர் படுகாயம் அடைந்தனர்.
பசுமைப் புரட்சி
• உணவு உற்பத்தியில் தன்னிறைவை எட்டுவதற்காக இந்தியாவில் பசுமை புரட்சி தொடங்கப்பட்டது.
• 1965-ல் லால்பகதூர் சாஸ்திரியும், உணவு அமைச்சர் சி.சுப்பிரமணியம்
• 1966-ல் இந்திராகாந்தியும் வேளாண்மை உற்பத்தி பெருக்க முயற்சி செய்தார்கள்.
• பசுமை புரட்சி என்ற சொல்லை அமெரிக்காவை சேர்ந்த டாக்டர் வில்லியம் காட் முதன் முதல் பயன்படுத்தினார்.
பஞ்சசீலம்.
• இந்தியாவின் அயலுறவுக் கொள்கையை வடிவமைத்தவர் நேரு
• கெடுபிடிப்போர் காலத்தில் அணிசேரா இயக்கத்தை வடிவமைத்தார்.
• பஞ்சசீலம் என்ற சமாதான சகவாழ்வுக்கான ஐந்து கொள்கைகளை வெளியிட்டார்.
வெர்சேல்ஸ் உடன்படிக்கை.
• முதல் உலகப் போர் முடிவில் நேச நாடுகள் ஜெர்மனியுடன் செய்த உடன்படிக்கை வேர்சேலஸ் உடன்படிக்கை.
• இதன்படி முதல் உலகப்போருக்கு காரணம் ஜெர்மனி என்ற குற்றம் சாட்டப்பட்டது போர் இழப்புக்கு 660 மில்யன்
பவுண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டன.
• ஜெர்மனி இதனை திணிக்கப்பட்ட உடன்படிக்கை என்றும் அவமான உடன்படிக்கை என நினைத்தது.
• பன்னாட்டு அமைப்பு உருவாக ஒரு சட்டபிரிவு வெர்சேல்ஸ் உடன்படிக்கையில் இடம் பெற்றது.
காஷ்மீர் பிரச்சனை
• இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்குமிடையே பூசல்கள் ஏற்பட காஷ்மீர் சிக்கலே காரணம்
• இது ஐ.நா. அவையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
• காஷ்மீர் பிரச்சனைக்கு அமைதியான நிரந்தர தீர்வை எதிர் நோக்கியுள்ளது.
உலக வர்த்தக மையம் (டபுள்யூ. டி.ஓ.)
• 1944-ல் பிரிட்டனின் உட்ஸ் மாநாட்டிலேயே உலக வர்த்தக மையத்தின் வரலாறு தொடங்குகிறது.
• இது ஒரு பான்னாட்டு வணிக அமைப்பு
• காட் எனப்படும் வணிக மற்றும் வர்த்தக மையத்தின் தலைமையகம் ஜெனீவாவில் உள்ளது.
• இதில் 149 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
No comments:
Post a Comment