தமிழ் இலக்கணம் : நிரல் நிறையணி.
விளக்கம்:
பெயரையோ,வினையையோ ஒரு வரிசைப்பட நிறுத்தி அவற்றோடுதொடர்புடையவற்றை பின்னர் அவ்வரிசை படக்கூறுவது நிரல்நிறையணிஎனப்படும்.
எடுத்துக்காட்டு:
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
பாடலில் உள்ள அணிக்கான பொருத்தம்.
இப்பாடலில் அன்பையும்,அறனையும் ஒரு வரிசைப்படி நிறுத்தி,
அதற்கு தொடர்புடைய பொருள் கொண்ட பண்பையும்,பயனையும்
அடுத்த வரிசையில் நிறுத்தி பொருத்தமாகப் பொருள் காணப்பட்டுள்ளது.
இன்னும் விளக்கமாக உங்களுக்கு புரியும்படி சொல்லவெண்டுமென்றால்,ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....என்ற பாடலில்
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்.....
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்....
இந்தப் பாடலில் குடையை முதல் வரியில் கூறிவிட்டு,அதற்குத் தொடர்பானமழையை அடுத்த வரியில் பொருத்தமாக நிறுத்தி பொருள்காணப்பட்டுள்ளது.
பழைய பாடலில் இன்னொரு எடுத்துகாட்டு..
பொன்னெழில் பூத்தது புதுவானில்..
வெண்பனி தூவும் நிலவே நில்...
வானத்தை பற்றி முதல் வரியில் கூறிவிட்டு,அடுத்த வரியில் அதற்குதொடர்பான நிலவை இணைத்து பொருத்தமாக கூறப்பட்டுள்ளது.
இந்த நிரல்நிறையணி 2 வகைப்படும்.
1.நேர் நிரல் நிறையணி
2.எதிர் நிரல் நிறையணி.
No comments:
Post a Comment