Tuesday, 24 November 2015

இலக்கணம் 8 9 வகுப்பு கேள்விகள்

இலக்கணம் 8 9 வகுப்பு கேள்விகள்




௧.           வல்லின மெய்யின் மேல் ஊர்ந்த உகரங்களின் பெயர் 
                அ). குற்றியலுகரம்    ஆ). குற்றியலிகரம்  இ). முற்றியலுகரம்
௨            நெடில் தொடர் குற்றியலுகரம் .......
                அ).ஈரெழுத்த்து சொல்லாகவே வரும்  ஆ).மூன்றெழுத்து சொல்லாக வரும்
                ஈ). மூன்றுக்கும் மேற்பட்ட சொல்லாக வரும்.
௩.           முற்றியலுகரத்திற்கு எ.கா

                அ). காணு,உண்ணு, உறுமு   ஆ)சங்கு,மஞ்சு,நண்டு   இ)கொய்து ,சார்பு,மூழ்கு
௪.           பீலி ,உகிர்,ஆழி  ஆகியவை
                அ) வினைசொல்  ஆ) வடசொல் இ) திரிசொல்
௫.           இடக்கரடக்கல், மங்கலம்,குழுவுக்குறி இம்மூன்றும்
                அ) இலக்கணப்போலி ஆ) மரூஉ இ) தகுதிவழக்கு
௬.           பெயரெச்ச விகுதி மறைந்தும் காலம் காட்டும் இடை நிலையும் சேர்ந்து             வருவது
                அ) பண்புத்தொகை ஆ) வினைத்தொகை இ) உவமைத்தொகை
.           உவமைதொகை புறத்‌து பிறந்த அன்மொழித் தொகைக்கு எ.கா :
                அ) தேன்மொழி பேசினாள் ஆ) மரம் ஆடியது இ) காற்று வீசியது
.           இடைச்சொற்த்தொடருக்கு ஒரு எ.கா:
                அ) வந்து போனான் ஆ) விழுந்தமரம் இ) மற்ரோன்று
..          அடை மொழியாய் குறிப்புப் பொருளில் வருவது
                அ) இரட்டைக்கிளவி ஆ) இராட்டுற மொழிதல் இ) அடுக்குத்தொடர்
௧௦.        சரியானதை தேர்ந் தெடு :
                அ) ஒரு ஊர்        ஆ) ஓர் ஊர்         இ) ஒரு ஊர்ல
௧௧.      ஆன், ஒடு, ஓடு என்பன.
                அ) மூன்றாம் வேற்றுமை உருபு
                ஆ) ஆறாம் வேற்றுமை உருபு
                இ) ஏழாம் வேற்றுமை உருபு
௧௨.      வேலையின் நிமித்தம், கார்த்‌தி கண்விழித்தார்  - இதில் நிமித்தம் என்பது 
                அ) 4 ஆம் வேற்றுமை சொல்லுருபு
                ஆ) 5 ஆம் வேற்றுமை சொல்லுருபு
                 இ) 6 ஆம் வேற்றுமை சொல்லுருபு 
௧௩.      ஆறாம் வேற்றுமை உரிமைப் பொருளில் வருவது
                அ) கூலிக்கு வேலை
                 ஆ) ஐப்பசி கார்த்திகை என தமிழ் மாதங்‌கள் 12
                 இ) பெட்‌டியில் பணம் உள்ளது
௧௪.      உடம்படு மெய் எனக்குறிக்கப்படும் எழுத்‌துக்கள்
                அ) வ,ஈ                 ஆ) வ்,ய்               இ) இ,ஈ,ஐ
௧௫.      உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே
                அ) நன்னூல்   ஆ) அகத்தியம்   இ) தண்டியலங் காரம் 
௧௬.      நாடா கொன்றோ காடா கொன்றோ
                அவலா கொன்றோ மிசையா கொன்றோ - இது
                அ) கலிப்பா    ஆ) வஞ்சிப்பா    இ) ஆசிரியப்பா
௧௭.      ஊருணி நீர் நீறைந் தற்றே உலகவாம்
                இதில் தற்றே எனும் சொல்
                அ) உவமை ஆ) உவம உருபு இ) உவமேயம்
௧௮.      உவமானத்தின் தன்மையை உவமேயத்தில் ஏற்‌றிக் கூறுவது
                அ) உவமையணி ஆ) உருவகஅணி இ) இயல்பு நவிற்சிஅணி
௧௯.      ஐகாரத்திற்கு இகரமும் , ஒளகாரத்திற்கு உகரமும் இன எழுத்தாக வருவது
                அ) ஒற்றளபெடை ஆ) அளபெடை இ) உயிரளபெடை
௨௦.        கீழுள்ளவற்றுள் இசைநிறையளபெடை எது ?
                அ) விடாஅ         ஆ) படுப்பதூஉம்            இ) தழீஇ
௨௧.      ஒரு குறிலை அடுத்தும் , இருக்குறிள்களை அடுத்தும் செய்யுளில் இனிய ஓசை                 வேண்டிஅளபெடுப்பது
                அ) செய்யுளிசைஅளபெடை ஆ) ஒற்றளபெடை இ) இன்னிசைஅளபெடை
௨௨.      ஒலி எழுவதற்கு துணைசெய்யும் உறுப்புகளை __________ என்கிறோம்
                அ) காற்றறை   ஆ) ஒலிப்புமுனை   இ) ஒலிஉறுப்பு 
௨௩.      யாழ் கேட்டு மகிழ்ந்தேன் - என்பது
                அ) காரியாவாகு பெயர்
                ஆ) கருத்தாவாகு பெயர்
                இ) கருவியாகு பெயர்
௨௪.      ஏ   கீர    இங்கே    வா    - என்பது
                அ) இடவாகு பெயர்
                ஆ) தானியாகு பெயர்
                இ) சொல்லாகு பெயர்
௨௫.      அடிதோறும் 4 சீர்களைப் பெற்று வருவது
                அ) நேரடி ஆ) நெடிலடி இ) சிந்தடி
௨௬.      சிறு துளி பெரு வெள்ளம் - இது
                அ) இயைபுத் தொடை   ஆ) எதுகைத்தொடை   இ) முரண் தொடை
௨௭.      வெண்பாவின் ஈற்றுச்சீரின் வரும் வாய்ப்பாட்டின் படி குலம் என்பதன் வாய்ப்பாடு
                அ) மலர்               ஆ) காசு                இ) நாள்
௨௮.      வல்லினம் மிகும் இடத்தைத் தெர்ந்தெடு
                அ) எது தங்கம்   ஆ) அங்கு சென்றான்   இ) இரவுபகல்
௨௯.      பல அடிகளிலும் உள்ள சொற்களை மாற்றிப் பொருள் கொள்வது
                அ) மொழி மாற்றுப் பொருள்கோள்
                ஆ) கொண்டு கூட்டுப் பொருள்கோள்
                இ) அடி மறி மாற்றுப் பொருள்கோள்
௩௦.        சுரையாடி அம்மி மிதப்ப என்ற வரியை சுரைமிதப்ப அம்மி ஆழ என மாற்றி பொருள்                 கொள்வது
                அ) நிரல் நிறைப் பொருள்கோள்
                ஆ) மொழி மாற்றுப் பொருள்கோள்
                இ) கொண்டு கூட்டுப் பொருள்கோள்
௩௧.      உவமையை உருவகமாக்கு - பவளவாய்
                அ) வாய்ப்பவளம்
                ஆ) பவளம் போன்ற வாய்
                இ) வாய்போன்றப்பவளம்
௩௨.      இலக்கண முறைப்படி குற்றமெனினும் இலக்கண ஆசிரியர்களால் குற்றமன்று என    ஏற்கும் காரணப் பொருள்
                அ) அமைதி
                ஆ) வேறுபாடு
                இ) உவகை
௩௩.      வழூ எத்தனை வகைப்படும் ?
                அ) 7                       ஆ) 6                      இ) 8
௩௪.      கீழ்கண்டவற்றுள் எதிர்மறை இடைநிலைகள்
                அ) த் , ட் , ற்.                        ஆ) இல் , அல் , ஆ                           இ) ப் , வ்
௩௫.      கீழ்கண்டவற்றுள் சாரியை அல்லாதது எது
                அ) அல்                ஆ) ஆன்              இ) அர்
௩௪.      கீழ்கண்டவற்றுள் சரியான எண்ணுப் பெயரை தேர்ந்தெடு - ௩௦
                அ) 31                     ஆ) 30                    இ) 33
௩௭.      தான் என்னும் படர்க்கை ஒருமைப் பெயர் வேற்றுமை உருபேற்கும் போது எவ்வாறு  மாறும்
                அ) தன்                 ஆ) நான்              இ) அவன்
௩௮.      ஈற்றுச்சீர்   ஏகாரத்தில்    முடிவது
                அ) ஆசிரியப்பா               ஆ) வெண்பா    இ) வஞ்சிப்பா
௩௯.      பெயர்ச் சொல்லையும் வினைச் சொல்லையும் சார்ந்து வருவது
                அ) சந்தி               ஆ) சாரியை                        இ) இடைநிலை
௪௦.        இருபெயருட்டு பண்புத்தொகையை தேர்ந்தேடு
                அ) கண்ணீர் பூக்கள்         ஆ) இளமைக்காலம்                      இ) வாழ்க்கை படகு
௪௧.      சீரிலோ ,அடியிலோ இறுதி எழுத்து ஒன்றி வருவது
                அ)அளபெடை   ஆ) முரண்தொடை  இ)இயைபுத்தொடை
௪௨.    விரைவு, கோபம், மகிழ்ச்சி,அச்சம் ஆகிய பொருள்களின் காரணமாய் வருவது
                அ) அடுக்குத்தொடர்      ஆ) இரட்டைகிளவி       இ) இரட்டுர மொழிதல்
௪௩.      பொற்றோடி வந்தாள்  என்பது
                அ) வினைத்தொகை       ஆ) அன்மொழித்தொகை    இ) வினையால்அணையும்பெயர்
௪௪.      தாமரை முகம் என்பது
                அ) உவமை        ஆ) உருவகம்     இ) பண்புத்தொகை
௪௫.      பொருள் முன்னும் உவமைப் பின்னும் வருவது
                அ) உருவகம்      ஆ) உவமைத்தொகை    இ) உவமைஉருபு
௪௬.      மூடுபனி என்பது 
                 அ) வினைத்தொகை                      ஆ) உம்மைத்தொகை                       இ) உவமை
௪௭.      உரியப்பொருளை தேர்ந்தெடு - கொண்டல்
                அ) மதில்             ஆ) அகழி            இ) மேகம்
௪௮.      முற்று எத்தனை சீர்களில் வரும்
                அ) 1 , 3 , 4 சீர்களில் வரும்
                ஆ) 1 , 2 ,3 ,4 சீர்களில் வரும்
                இ) 1 ,2 ,4 சீர்களில் வரும்
௪௯.      குறில் , நெடில் இணைந்து ஒற்றுடன் வருவது
                அ) நேரசை         ஆ) நிறையசை                  இ) ஓரசை
௫௦.        நேர் , நிரை, நேர் என்பது
                அ) கூவிளங்காய்              ஆ) கருவிளங்காய்           இ) புளிமாங்காய்




                                                விடைகள் 
            அ). குற்றியலுகரம்   
            அ).ஈரெழுத்த்து சொல்லாகவே வரும் 
            அ). காணு,உண்ணு, உறுமு   
            இ) திரிசொல்
            இ) தகுதிவழக்கு
            ஆ) வினைத்தொகை
            அ) தேன்மொழி பேசினாள்
            இ) மற்ரோன்று
            அ) இரட்டைக்கிளவி
௧௦         ஆ) ஓர் ஊர்
௧௧       அ) மூன்றாம் வேற்றுமை உருபு
௧௨       அ) 4 ஆம் வேற்றுமை சொல்லுருபு
௧௩       ஆ) ஐப்பசி கார்த்திகை என தமிழ் மாதங்‌கள் 12
௧௪       ஆ) வ்,ய்
௧௫       அ) நன்னூல்   
௧௬       இ) ஆசிரியப்பா
௧௭       ஆ) உவம உருபு
௧௮       ஆ) உருவகஅணி
௧௯       இ) உயிரளபெடை
௨௦         அ) விடாஅ
௨௧       ஆ) ஒற்றளபெடை
௨௨       ஆ) ஒலிப்புமுனை   
௨௩       இ) கருவியாகு பெயர்
௨௪       ஆ) தானியாகு பெயர்
௨௫       அ) நேரடி
௨௬       இ) முரண் தொடை       
௨௭       அ) மலர்
௨௮       ஆ) அங்கு சென்றான்   
௨௯       ஆ) கொண்டு கூட்டுப் பொருள்கோள்
௩௦         ஆ) மொழி மாற்றுப் பொருள்கோள்
௩௧       அ) வாய்ப்பவளம்
௩௨       இ) உவகை
௩௩       அ) 7
௩௪.      ஆ) இல் , அல் , ஆ
௩௫.      இ) அர்
௩௬       ஆ) 30
௩௭       அ) தன்
௩௮       இ) வஞ்சிப்பா
௩௯       ஆ) சாரியை
௪௦         ஆ) இளமைக்காலம்
௪௧       இ)இயைபுத்தொடை
௪௨       அ) அடுக்குத்தொடர்
௪௩       ஆ) அன்மொழித்தொகை    
௪௪       அ) உவமை
௪௫       அ) உருவகம்
௪௬       அ) வினைத்தொகை
௪௭       இ) மேகம்
௪௮       ஆ) 1 , 2 ,3 ,4 சீர்களில் வரும்
௪௯       ஆ) நிறையசை 
௫௦         அ) கூவிளங்காய்

No comments:

Post a Comment