Tuesday, 24 November 2015

குரூப் 4 ஏழம் வகுப்பு இலக்கணம் பாகம் 2

குரூப் 4 ஏழம் வகுப்பு இலக்கணம் பாகம் 2

இடுகுறிபெயர்  காரணப்பெயர் என்றால் என்ன


1முன்னோர்கள் எவ்வித காரணமும் இன்றி ஒரு பொருளுக்கு வைத்த பெயர் இடுகுறி பெயர்கள் உதாரணம் மண் மரம் மலை காடு

2காரணத்துடன் ஒரு பொருளுக்கு பெயர் வைத்தால் அது காரணப்பெயர்கள் நான்கு கால்களை உடையதால் அது நாற்காலி இவ்வாறு காரணத்துடன் பெயர் வைத்தால் அது காரணப்பெயர்


இதில் பொதுப்பெயர் சிறப்பு பெயர்கள் என்று  2 உண்டு 


 இடுகுறிப்பெயர்கள்  
குழப்பம் எதுவும் வராது எளிமையாக புரியும் படி சொல்கிறேன் இடுகுறி பெயர்கள் மட்டும் மனதில் வையுங்கள் இதில் மரம் என்பது இடுகுறிபெயர்கள் ஏன் என்றால் முன்னோர்கள் எந்த ஒரு காரணமும் இன்றி இந்த பெயர் வைத்துள்ளனர் சரி தென்னை மரம் மாமரம் இவற்றிற்கு எதுவும் காரணம் உள்ளதா இல்லை அப்படி என்றால் இவையும் இடுகுறிப்பெயர்கள் தான் சற்று புரியும் படி சொன்னால் மரம் என்படு இடுகுறி பொதுப்பெயர் மாமரம் தென்னை மரம் என்றால் இடுகுறி சிறப்பு பெயர்கள்  

மாமரம் தென்னை மரம் பலா மரம் இதில் எந்த காரணமும் இல்லை அதாவது முன்னோர்கள் எந்த காரணத்தாலும் வைக்கவில்லை அதனால் இவை இடுகுறி பெயர்கள் தான் மரம் என்பது பொதுவாக அனைத்து மரங்களையும் மரம் என்பதால் அவை இடுகுறி பொதுப் பெயர் மாமரம் தென்னை மரம் என்பதால் இவை இடுகுறி சிறப்பு பெயர்கள்
  
காரண  பெயர்
சரி அடுத்து பார்ப்போம் காரணப்பெயர் இதில் பறவை என்பத காரணப்பெயர் ஏன் என்றால் பறக்கிறதால் இதில் கிளி மயில் புறா அனைத்தும் அடங்கும் இவை காரணப் பொதுப் பெயராகும் மரம் கொத்தி என்றால் மரத்தை கொத்துவதால் சிறப்பு பெற்று இந்த பெயர் வந்துள்ளதால் இவை இடுகுறி சிறப்பு பெயர் ஆகும் 

1 comment:

  1. Athu kaarana sirappu peyar varatha (maram kothi paravai)

    ReplyDelete