Tuesday, 31 March 2015

இராமலிங்க அடிகள்

இராமலிங்க அடிகள்

வாழ்க்கைக் குறிப்பு:

  • கடலூர் வட்டம் மருதூரில் பிறந்தவர்.
  • பெற்றோர்: இராமையா – சின்னம்மையார்
  • மனைவி = மட்டுவார்குழலி
  • ஆசிரியர் = சபாபதி
  • காலம் = 5.10.1823 – 30.01.1874

சிறப்பு பெயர்:

  • இசைப் பெரும்புலவர்
  • அருட்ப்ரகாச வள்ளலார்
  • சன்மார்க்க கவிஞர்
  • புதுநெறி கண்ட புலவர்(பாரதியார்)
  • புரட்சித் துறவி
  • ஓதாது உணர்ந்த அருட்புலவர்
  • ஓதாது உணர்ந்த பெருமான்
  • பசிப்பிணி மருத்துவர்

படைப்புகள்:

  • சிவநேச வெண்பா
  • நெஞ்சறிவுறுத்தல்
  • மகாதேவமாலை
  • இங்கிதமாலை
  • மனுமுறை கண்ட வாசகம்
  • ஜீவகாருண்ய ஒழுக்கம்
  • திருவருட்பா(6 பிரிவு, 5818 பாடல்கள்)
  • வடிவுடை மாணிக்க மாலை
  • தெய்வமணிமாலை
  • எழுந்தரியும் பெருமான் மாலை
  • உண்மை நெறி
  • மனுநீதிச்சோழன் புலம்பல்

கட்டுரை:

  • ஜீவகாருண்யம்
  • வந்தனை செய்முறையும் பயனும்
  • விண்ணப்பம்
  • உபதேசம்
  • உண்மைநெறி

பதிப்பித்த நூல்கள்:

  • ஒழிவில் ஒடுக்கம்
  • தொண்டை மண்டல சதகம்
  • சின்மயா தீபிகை

குறிப்பு:

  • 1865இல் சன்மார்க்க சங்கம் தொடங்கினார்
  • 1867இல் சத்திய தருமசாலை தொடங்கினார்
  • 1876இல் சித்தி வளாகம்
  • 1872இல் சத்திய ஞானசபை
  • இவரின் வழிபாடு கடவுள் = முருகன்
  • இவரின் வழிபாடு குரு = திருஞானசம்பந்தர்
  • இவர் பின்பற்றிய நூல் = திருவாசகம்
  • இவரின் மந்திரம் = அருட்பெருஞ்சோதி
  • இவரின் கோட்பாடு = ஆன்மநேய ஒருமைப்பாடு
  • இவரின் கொள்கை = ஜீவகாருண்யம்
  • நால்வகை பாக்களில் பாடல் இயற்றும் திறம் பெற்றிருந்தார்
  • தம் கொள்கைகெனத் தனிக்கொடி கண்டவர். அது மஞ்சள், வெள்ளை நிறம் உடையது
  • சைவராகப் பிறந்தும் திருமாலையும் போற்றியவர், இவ் வழக்கத்தை தொடங்கி வைத்தவர்
  • இவர் சித்தர்களில் ஒருவராக போற்றப்படுகிறார்
  • தமிழ் இலக்கியத்துள் மிகப்பெரிய ஆசிரிய விருத்தம் பாடியவர். 192 சீர் ஆசிரிய விருத்தம்
  • தமிழ் இலக்கியதுள்ளே அடி எண்ணிகையில் பெரிய ஆசிரியப்பா பாடியவர், 1596 அடிகள்
  • இவருக்கு திருஅருட் பிரகாச வள்ளலார் எனப் பெயரிட்டவர் = தொழுவூர் வேலாயுத முதலியார்
  • இவ பாடலைத் தொகுத்தவர் = தொழுவூர் வேலாயுத முதலியார்
  • இவர் பாடல்களுக்குத் திருவருட்பா என்று பெயரிட்டவர் = தொழுவூர் வேலாயுத முதலியார்
  • இவர் பாடல்களை ஆறு திருமுறைகளாக வகுத்தவர் = தொழுவூர் வேலாயுத முதலியார்
  • இவர் பாடல்களை முதலில் பதிப்பித்தவர் = தொழுவூர் வேலாயுத முதலியார்
  • இவர் பட்டை “மருட்பா” என்றவர் = ஆறுமுக நாவலர்
  • இவைகளின் மறுப்புக்கு மறுப்புத்தந்து அருட்பா தான் என நிறுவியவர் = செய்குத்தம்பி பாவலர்
  • 1874ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் நாள் நடு இரவில் தன் அன்பர்களிடம் விடை பெற்றுத் தன் குடிசையில் சென்று தாளிட்டு கொண்டு இயற்கை எய்தினார். அவரின் மரணம் இன்றுவரை விடை காண முடியாத புதிராகவே உள்ளது
  • இறைவனை தலைவனாகவும் தம்மை தலைவியாகவும் பாவித்துப் பாடல்கள் பல புனைந்துள்ளார். “இங்கிதமாலை” இத்தகைய நூலாகும்
  • தண்ணீர் கொண்டு விளக்கு எரித்த போன்ற அற்புதங்கள் நிகழ்த்தியவர்
  • உருவ வழிபாட்டை நீக்கி, ஒளி வழிபாட்டை உண்டாக்கினார்

மேற்கோள்:

  • அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை
  • அப்பாநான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்
  • மேடையில் வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே
  • ஒத்தாரும் தாழ்ந்தாரும் உயர்ந்தாரும் எவரும்
    ஒருமை உளராகி உலகியல் நடத்தல் வேண்டும்
  • அம்பலப் பாட்டே அருட்பாட்டு
    அல்லாதார் பாட்டெல்லாம் மருட்பாட்டு
  • உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார்
    உறவு கலவாமை வேண்டும்
  • வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்
  • பசித்திரு, தனித்திரு, விழித்திரு
  • வான் கலந்த மாணிக்க வாசக
  • கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே
  • கண்மூடி பழக்கம் எல்லாம் மண்மூடி போக

சமுதாயத்தொண்டு - பெரியார்-பெருந்தலைவர் காமராஜர்-முத்துராமலிங்க தேவர்-அண்ணல் அம்பேத்கர்

சமுதாயத்தொண்டு - பெரியார்

  • பெற்றோர் = வெங்கட்டப்பர் – சின்னத்தாயம்மாள்
  • இயற் பெயர் = இராமசாமி
  • ஊர் = ஈரோடு
  • “பகுத்தறிவாளர் சங்கம்” தொடங்கினார்.
  • பிறப்பினால் வரும் மேல்சாதி – கீழ்சாதி என்னும் வேறுபாடுகளை அகற்றி, மக்கள் அனைவரும் “மனித சாதி” என்னும் ஓரினமாக எண்ண வேண்டும் என்றார்.
  • கேரளாவில் “வைக்கம்” என்ற ஊரில் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவில் சுற்றுத் தெருவில் நடப்பதற்கு தடை இருந்தது. அதை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றதால் “வைக்கம் வீரர்” எனப்பட்டார்.
  • தாய்மார்கள் இராமசாமிக்கு “பெரியார்” என்று பட்டம் வழங்கினார்கள்.
  • பெண் விடுதளிக்கு முதல் படியாக பெண்கள்  எல்லோரும் கல்வி கற்க வேண்டும் என்பதி பெரியார் வலியுறுத்தினார்.
  • 17.09.1879இல் பிறந்து, 24.12.1973இல் மறைந்த பெரியார், தம் வாழ்நாளில் 8600 நாட்கள், 13,12,000 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து, 10700 கூட்டங்களில் 21400 மணிநேரம் மக்களுக்காக உரையாற்றி சமூகத் தொண்டாற்றினார்.
  • 1970ம்ஆண்டு சமூகச் சீர்திருத்த செயல்பாடுகளுக்காக ஐக்கிய நாடுகள் அவையின் “யுனெஸ்கோ விருது” பெரியாருக்கு வழங்கப்பட்டது.
  • நடுவண் அரசு 1978ம் ஆண்டு பெரியாரின் உருவம் பொறித்த அஞ்சல்தலையை வெளியிட்டு சிறப்பித்துள்ளது.

பெருந்தலைவர் காமராஜர்

புகழுரைகள்:

  • தன்னலமற்ற தலைவர்
  • கர்மவீரர்
  • கல்விக்கண் திறந்த முதல்வர்
  • ஏழைப்பங்காளர்

இளமைப் பருவம்:

  • விருதுநகர் மாவட்டத்தில் குமாரசாமி, சிவகாமி இனையார்க்கு மகனாய் 19௦03ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 15ஆம் நாள் பிறந்தார்.
  • காமராசரின் தாத்தா நாட்டாண்மைக்காரர்.
  • இவருக்கு பன்னிரண்டு வயதிலேயே கல்வியில் நட்டமில்லாமல் போயிற்று.

அரசியலில் ஈடுபாடு:

  • காமராசர் நாள்தோறும் செய்தித்தாள்களை படித்தும், அரசியல் கூட்டங்களில் தலைவர்களின் சொற்பொழிவுகளைக் கேட்டும் தம்முடைய அரசியல் அறிவை வளர்த்துக் கொண்டார்.
  • “மெய்கண்டான் புத்தகசாலை” என்ற நூல் நிலையத்திற்கு சென்று அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து திறமையாக பேசவும் கற்று கொண்டார்.
  • இளம் வயதிலேய காங்கிரசில் சேர்ந்தார்.
  • பதினோரு ஆண்டுகள் சிறையில் இருந்தார்.
  • அவரது தன்னலமற்ற உழைப்பைக் கண்டு தலைவர் சத்தியமூர்த்தி அவரை கட்சியின் செயலாளர் ஆக நியமித்தார்.
  • காமராசரின் அரசியல் குரு சத்தியமூர்த்தி.

தலைவர்களை உருவாக்குபவர்:

  • 1939ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக் காங்கிரசுக் கட்சியின் தலைவர் ஆனார்.
  • 12 ஆண்டுகள் அப்பதவியில் இருந்தார்.
  • பலர் ஆட்சி அமைக்க இவர் காரணமாக இருந்ததால் இவரை “தலைவர்களை உருவாக்குபவர்” எனப் போற்றப்பட்டார்.

முதலமைச்சர் காமராசர்:

  • 1954இல் இராஜாஜி முதலமிச்சர் பதவியில் இருந்து விலகியதும் காமராசர் அப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
  • 1963இல் தாமாக பதவி விலகும்வரை அப்பதவியில் திறம்படச் செயலாற்றினார்.
  • காமராசர் ஆட்சிக் காலத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் தொழில்துறை அமைச்சராகவும், சி.சுப்பிரமணியம் கல்விஅமைச்சராகவும் பணியாற்றினார்.

தொழில் முன்னேற்றம்:

  • காமராசர் முதலமைச்சராக இருந்த பொது இரண்டாவது, மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
  • கிண்டி, அம்பத்தூர், இறநிபெட்டை முதலிய இடங்களில் பெரிய தொழிற்பேட்டைகளும், மாவட்டந்தோறும் சிறிய தொழிற்பேட்டைகளும் அமைக்கப்பட்டன.
  • இவர் காலத்தில் கூட்டுறவு இயக்கம் சிறப்பாக நடைபெற்றது.
  • நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத் தொழிற்சாலை, இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை, கிண்டி அறுவைசிகிச்சைக் கருவித் தொழிசாலை, சர்க்கரை ஆலை, ஆவடி இரயில்வே வாகனத் தொழிற்சாலை, மேட்டூர் காகிதத் தொழிற்சாலை முதலியன இவரது காலத்தில் தொடங்கப்பெற்றன.

கல்விப் புரட்சி:

  • காமராசர் காலத்தில் கட்டாயக் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டது.
  • “தெருதோரும் தொடக்கப்பள்ளி, ஊர் தோறும் உயர்நிலைப்பள்ளி” என்பதே அவரது நோக்கமாக அமைந்தது.
  • பள்ளி வேலைநாட்களை 180இல் இருந்து 200ஆக உயாத்தினார்.
  • தொடக்கப்பள்ளியில் மதிய உணவுத் திட்டம் இவரால் தொடங்கப்பட்டது.
  • ஈராண்டுகளில் மபள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் 133 நடத்தி, பல கொடி ரூபாய் மதிப்புள்ள நன்கொடைகள் பெற்று பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை பொருட்கள் வாங்கப்பட்டன.
  • மருத்துவக்கல்லூரி முதலான தொழிற்கல்லூரிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு வட்டியில்லாக் கடனளிக்க ஏற்பாடு செய்தார்.

சமுக முன்னேற்ற திட்டங்கள்:

  • தஞ்சாவூர்ப் பண்ணையாள் பாதுகாப்புச் சட்டத்தை திருத்து, சாகுபடி செய்யும் தொழிலாளிக்கு அறுபது விழுக்காடு பங்கு கிடைக்க வழிவகை செய்தார்.
  • நிலசீர்திருத்தம் இவரால் கொண்டுவரப்பட்டது.
  • நிலா உச்ச வரம்பு முப்பது ஏக்கர் எனக் குறைக்கப்பட்டது.
  • மக்கள் நலத்திட்டங்களில் ஓய்வூதியம் முக்கியமானது.

காமராசர் திட்டம்:

  • 1962ஆம் ஆண்டு சீனப்படையெடுப்புக்கு பின், காங்கிரசுக் கட்சியின் செல்வாக்கு சரியத் தொடங்கியது.
  • கட்சியை வலுப்படுத்த மூத்த தலைவர்கள் அமைச்சர் பதவியில் இருந்து விலகி கட்சிப்பணியில் ஈடுபட வேண்டும் எனக் காமராசர் திட்டம் ஒன்றை கொண்டுவந்தார். அத்திட்டமே “காமராசர் திட்டம்” எனப்படும்.

அகில இந்திய காங்கிரசுத் தலைவர்:

  • புவனேஸ்வர் நகரில் 1963ஆம் ஆண்டில் கூடிய காங்கிரசு மாநாட்டில் காமராசர் அகில இந்தியக் காங்கிரசுத் தலைவராகப் பதவி ஏற்றார்.
  • லால் பகதூர் சாஸ்த்ரி, இந்திரா காந்தி போன்றோரை பிரதமர் பதவியில் அமர வைத்தார்.

காமராசருக்கு செய்த சிறப்புகள்:

  • காமராசரக்கு நடுவண் அரசு “பாரதரத்னா விருது” அளித்துச் சிறப்பித்து, நாடாளுமன்றத்தில் இவருக்கு ஆளுயர வெண்கலச்சிலையை நிறுவியது.
  • தமிழக அரசு இவரின் பெயரால் “மதுரை காமராசர் பல்கலைக்கழகம்” எனப் பெயர் சூட்டியது.
  • கன்னியாகுமரியில் காமராசர் மணி மண்டபம் கட்டப்பட்டது.
  • சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் சிலை அமைத்து சிறப்பித்தது.
  • காமராசர் வாழ்ந்த சென்னை இல்லம் நினைவு இல்லமாக ஆக்கப்பட்டது.
  • அவரின் விருதுநகர் இல்லமும் அரசுடைமை ஆக்கி நினைவு இல்லமாக்கப்பட்டது.
  • தேனாம்பேட்டையில் காமராசர் அர்னகம் நிறுவப்பட்டது.
  • காமராசர் பிறந்த நாளான சூலை 15ஆம் நாள் ஆண்டுதோறும் “கல்வி வளர்ச்சி நாளாக” தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • இவரை “கல்விக் கண் திறந்தவர்” எனத் தமிழுலகம் போற்றுகிறது.

மறைவு:

  • 1972ஆம் ஆண்டு காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் இரண்டாம் நாள் இவ்வுலக வாழ்வி நீத்தார்.

முத்துராமலிங்க தேவர்

பிறப்பும் வளர்ப்பும்:

  • இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் என்னும் ஊரில் 1908ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 30ம் நாள் பிறந்தவர் முத்துராமலிங்க தேவர்.
  • பெற்றோர் = திரு உக்கிரபாண்டி தேவர் – திருமதி இந்திராணி அம்மையார்.
  • இஸ்லாமிய பெண்மணி ஒருவர் தாயாகி பாலூட்டி வளர்த்தார்.
  • ஆசிரியர் = குறைவற வாசிதான் பிள்ளை.

கல்வி:

  • கமுதியில் உள்ள தொடகபல்லியிலும், பின்பு பசுமலை உயர்நிலைப்பள்ளியிலும், பின்பு ஐக்கிய கிறித்துவப் பள்ளியிலும் படித்தார். இராமநாதபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் பொது, அங்கு ப்ளேக் நோய் பரவியதால் இவரின் கல்வி நின்றது.

பொதுத்தொன்டில் நாட்டம்:

  • 32 சிற்ற்ரோர்களில் தமக்குச் சொந்தமாக இருந்த நிலங்களை உழுபவர்களுக்கு பங்கிட்டு கொடுத்தார்.
  • சமபந்தி முறைக்கு ஊகம் அளித்தார்.
  • குற்றப்பரம்பறை என்று ஒதுக்கி வைக்கப்பட்ட மக்களுக்காக போராடினார்.

சாதியை பற்றி:

  • “சாதியையும் நிறத்தையும் பார்த்து மனிதனை மனிதன் தாழ்வுபடுத்துவது பெருங்கொடுமை; ஆண்டவன் மனித குலத்தைத்தான் படைதானே தவிரச் சாதியையும் நிறத்தையும் அல்ல; சாதியையும் நிறமும் அரசியலுகுமில்லை, ஆன்மீகத்திற்கும் இல்லை.

நேதாஜி:

  • முத்துராமலிங்கர், வங்கச் சிங்கமான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களை தம் அரசியல் வழிகாட்டியாக கொண்டார்.

வாய்பூட்டு சட்டம்:

  • விடுதலை போர் கடுமையாக இருந்த நாள்களில் ஆங்கில அரசு, வட இந்தியாவில் திலகருக்கும், தென்னிந்தியாவில் தேவருக்கும் வாய்பூட்டு சட்டம் போட்டது.

தேசியம் காத்த செம்மல்:

  • முத்துராமலிங்க தேவரை “தேசியம் காத்த செம்மல்” என்று திரு.வி.க பாராட்டினார்.

அரசியல் வாழ்க்கை:

  • முத்துராமலிங்கர் ஐந்து முறை தேர்தலில் போட்டியிட்டு ஐந்து முறையும் வெற்றி பெற்றார்(1937, 1946, 1952, 1957, 1962).
  • தொகுதிக்கு செல்லாமலே வெற்றி பெற்றார்.

சிறந்த பண்பாளர்:

  • “தெய்வீகம், தேசியம்” ஆகிய இரண்டையும் இரு கண்களாகப் போற்றியவர்.
  • “வீரம் இல்லாத வாழ்வும், விவேகமில்லாத வீரமும் வீணாகும்” என்று கூறினார்.

பாராட்டு பெயர்கள்:

  • வேதாந்த பாஸ்கர், பிரணவ கேசரி, சன்மார்க்க சண்ட மாருதம், இந்து புத்த சமய மேதை.

மனிதனின் மனநிலை:

  • “பனை மரத்தில் இருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு, வயல் வரப்பில் வழுக்கி விழுந்து இறந்தவனும் உண்டு” என்று இறப்பின் நிலை பற்றி கூறியுள்ளார்.
  • மனிதனின் மனநிலையை “இருள், அருள், மருள், தெருள்” என குறிப்பிடுகிறார்.

மறைவு:

  • 55 ஆண்டுகள் வாழ்ந்து 1963ம் அக்டோபர் 30இல் தம் பிறந்தநாள் அன்றே இயற்கை எய்தினார்.

சிறப்பு:

  • முத்துராமலிங்க தேவரின் விருப்பத்திற்கு இணங்க 06.09.1939 அன்று நேதாஜி மதுரைக்கு வருகை தந்தார்.
  • நடுவண் அரசு 1995ம் ஆண்டு முத்துராமலிங்க தேவரின் அஞ்சல்தலையை வெளியிட்டு சிறப்பித்தது.
  • முத்துராமலிங்க தேவர் தம் சொத்துக்கள் முழுவதையும் 17 பாகங்களாகப் பிரித்து, ஒரு பாகத்தை மட்டும் தனக்கு வைத்துகொண்டு மீதி 16 பாகங்களையும் 16 பேர்களுக்கு இனாம் சாசனமாக எழுதி கொடுத்தார்.

அண்ணல் அம்பேத்கர்

பிறப்பு:

  • மராட்டிய மாநிலத்தில் கொண்கன் மாவட்டத்தில் உள்ள அம்பவாடே என்னும் சிற்றூரில் 1891ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்கள் பதினான்காம் நாள் அம்பேத்கர்பிறந்தார்.
  • பெற்றோர் = இராம்ஜி சக்பால், பீமாபாய்.
  • செல்வம் நிறைந்த குடும்பத்தில் பதினான்காவது குழந்தையாகப் பிறந்தார்.
  • அவரின் இயற்பெயர் பீமாராவ் ராம்ஜி.
  • தந்தை அவருக்கு சூடிய பெயர் பீம்.

கல்வி:

  • தன் ஆசிரியர் மீது கொண்ட பற்றின் காரணமாக தன் ஆசிரியர் பெயரான அம்பேத்கர் என்பதை தம் பெயராக ஆக்கிக் கொண்டார்.
  • அம்பேத்கர் 1908இல் எல்பின்ஸ்டன் பள்ளியில் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்தார்.
  • பரோடா மன்னர் பொருளுதவியுடன் 1912இல் பம்பாய் எல்பின்ஸ்டன் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
  • அமெரிக்காவில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 1915இல் முதுகலைப் பட்டமும் 1916இல் இலண்டனில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.
  • மும்பையில் சிறிதுகாலம் பொருளியல் பேராசிரியராக பணியாற்றினார்.
  • மீண்டும் இலண்டன் சென்று அறிவியல் முதுகலைப் பட்டமும் பாரிஸ்டர் பட்டமும் பெற்றார்.
  • அம்பேத்கர் இந்தியா திரும்பியபின் வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்டார்.

முதல் உரிமைப்போர்:

  • 1927ஆம் ஆண்டு மார்ச்சுத் தங்கள் இருபதாம் நாள் அம்பேத்கர் மராட்டியத்தில் மகாத்துக் குளத்தில் நடத்திய தண்ணீர் எடுக்கும் போராட்டம் நடத்தினார்.

விடுதலை உணர்வும் வட்டமேசை மாநாடும்:

  • இங்கிலாந்து சொல்வதற்கு எல்லாம் இந்தியா தலை அசைக்கும் என்பது தவறு; இந்நிலை எப்போதோ மாறிவிட்டது; இந்திய மக்களின் எண்ணங்களை நீங்கள் ஈடேற்ற வேண்டும் என்றார்.
  • 1930ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைப்பெற்ற வட்டமேசை மாநாட்டில் கலந்துக்கொண்டார்.
  • அம்மாநாட்டில், “அறைவயித்றுக் கஞ்சிக்கு அல்லற்படும் ஊமைகளின் உறுப்பினனாக நான் பேசுகிறேன்” என்று தனது கருத்தை தொடங்கினார்.
  • வெறும் எஜமான மாற்றத்தை நாங்கள் விரும்பவில்லை; எங்கள் கைகளில் அரசியல் வந்தால் ஒழிய, எங்கள் குறைகள் நீங்கா என மொழிந்தார்.

சட்ட மாமேதை:

  • விடுதலைக்குப் பிறகு இந்திய அமைச்சரவையில் அண்ணல் அம்பேத்கரையும் இடம்பெறச் செய்யவேண்டும் என்று நேரு விரும்பினார்.
  • அம்பேத்கர் சட்ட அமைச்சரானார்.
  • இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வகுக்க எழுவர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
  • பலரும் செயல்படாமல் விலகினார். இறுதியில் அம்பேத்கர் ஒருவரே அந்த ஒப்பற்ற பணியைச் செய்து முடித்தார்.
  • 1950ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 26ஆம் நாள் இந்தியா முழுமையான குடியரசு நாடாகத் தன்னை அறிவித்துக் கொண்டது.

கல்வி வளர்ச்சியில் அம்பேத்கர்:

  • “ஒவ்வொருவரும் முழுமனித நிலையை அடைய கல்வி, செல்வம், உழைப்பு ஆகிய மூன்றும் தேவைப்படுகிறது. செல்வமும் உழைப்பும் இல்லாத கல்வி களர்நிலம். உழைப்பும் கல்வியும் அட்டர செல்வம் மிருகத்தனம்” என்றார்.
  • கற்பித்தல், அறிவியல் முறைக்கு உகந்ததாக இருத்தல் வேண்டும்; விருப்புவெருப்பட்ற்ற முறையில் கற்பித்தல் நிகழ வேண்டும் என்றார்.
  • 1946ஆம் ஆண்டு, மக்கள் கல்விக்கழகத்தை தோற்றுவித்தார்.
  • மும்பையில் அவரின் அறிய முயற்சியால் உருவான சித்தார்த்தா உயர்கல்வி நிலையம் உருவாக்கப்பட்டது.

பொருளாதார வல்லுநர்:

  • இவர் “இந்தியாவின் தேசிய பங்குவீதம்” என்ற நூலை எழுதினார்.
  • தொழில் துறையில் பொருளாதார வளர்ச்சிப் பெற புதுப்புதுக் கருத்துக்களைக் வெளியிட்டார்.

இந்திய வரலாற்றின் புதிய பக்கங்கள்:

  • இந்திய நாட்டின் சாதி என்னும் இருளை அகற்ற வந்த அறிவுக்கதிர் அம்பேத்கர்.
  • சாதி என்பது எல்லாம் வல்ல ஒருவன் கட்டளையால் தோன்றியதன்று. குறிப்பிட்ட சில சூழ்நிலைக்கு ஆட்பட்ட மனித சமூக வாழ்வில் தானாகவே வேரூன்றிவிட்ட வளர்ச்சியாகும். சாதி களையப்பட வேண்டிய களை என்றார்.
  • சமூகத்தின் மாற்றத்திற்குச் சிந்தனை விதைகளைத் தூவுகின்ற புரட்சியாளர்களாலேயே இந்த வையகம் வாழ்கிறது என்றார்.
  • இந்தியப் பொருளாதார மேம்பாட்டிற்குச் சாதி என்பது, நன்மை தராது.இந்தியர்களின் நலத்திற்கும் மகிழ்ச்சிக்கும் சாதி என்னும் நோய் தீங்கு விளைவிக்கிறது. அது மக்களிடையே ஒருமைப்பாட்டைச் சீர்குலைத்துவிட்டது. இதனை அவர்கள் உணரும்படி செய்துவிட்டால் போதும்; அதுவே எனக்கு நிறைவு தரும்” என்றார்.

அம்பேத்கரின் இலட்சிய சமூகம்:

  • அவர், “ஓர் இலட்சிய சமூகம் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது” என்றார்.
  • “சனநாயகத்தின் மறுப்பெயர் தான் சகோதரத்துவம்; சுதந்திரம் என்பது சுயோச்சையாக நடமாடும் உரிமை; உயிரையும் உடைமையையும் பாதுகாக்கும் உரிமை அது. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் வகையில் எல்லா மனிதர்களையும் ஒரே மாதிரியாக நடத்துவதே சமத்துவமாகும்” என்று, சனநாயகத்திற்கு அரியதொரு விளக்கம் தந்தார்.

பெரியார் போற்றிய பெருந்தகை;

  • “அம்பேத்கர் உலகத் தலைவர்களுள் ஒருவர்; பகுத்தறிவுச் செம்மல், ஆராய்ச்சியின் சிகரம், மக்களின் மாபெரும் வழிகாட்டி, அப்பெருந்தலைவரைப்போல வேறு யாரையும் காணமுடியாது” என்று பெரியார் அவரை பாராட்டினார்.

நேரு புகழுதல்:

  • “பகுத்தறிவுத் துறையில் அவருக்கு இணை அவரே. ஆசியக் கண்டத்திலேயே மிகப்பெரிய தனியாள் நூலகத்தை அமைத்த பெருமை இவரையே சேரும்” என்று நேரு அவரைப் புகழ்ந்தார்.

இராஜேந்திர பிரசாத் புகழ்தல்:

  • “அண்ணல் அம்பேத்கர் தன்னலமற்றவர்; மிகவும் ஆர்வத்துடனும் விரைந்து தனியனாகச் செயல்பட்டவர். தமக்குக் கொடுக்கப்பட்ட பணியில் கருமமே கண்ணாக இருந்தவர்” என்று இராஜேந்திர பிரசாத் பாராட்டினார்.

மறைவு:

  • நாட்டிற்காக அயராது உழைத்த அண்ணல் அம்பேத்கர் 1956ஆம் ஆண்டு திசம்பர்த் திங்கள் 6ஆம் நாள் புகழுடம்பு எய்தினார்.

பாரத ரத்னா விருது:

  • இந்திய அரசு, பாரத ரத்னா(இந்திய மாமணி) என்னும் உயரிய விருதை அண்ணல் அம்பேத்கருக்கு 1990ஆம் ஆண்டு வழங்கிப் பெருமைப்படுத்தியது.

தமிழ்த்தொண்டு - அகரமுதலி வரலாறு

தமிழ்த்தொண்டு - அகரமுதலி வரலாறு

அகராதி:

  • அகரம் + ஆதி =அகராதி
  • ஒரு மொழியில் உள்ள எல்லாச் சொர்களையும் அகரவரிசையில் அமையும்படி ஒருசேரத் தொகுத்து விளக்கும் நூலை அகராதி என்பர்.
  • அகராதி என்னும் சொல் தற்போது அகரமுதலி என வழங்கப்படுகிறது.

நிகண்டுகள்:

  • தமிழ் அகரமுதலி வரலாற்றில், செம்பாதி இடத்தைப்பெறும் சொற்பொருள் துறை நூல்கள் நிகண்டுகளாம்.
  • நிகண்டுகளில் பழமையானது = திவாகரர் எழுதிய சேந்தன் திவாகரம்.
  • நிகண்டுகளில் சிறப்பானது = மண்டலபுருடர் இயற்றிய சூடாமணி நிகண்டு.

அகரமுதலி:

  • திருமூலரின் திருமந்திரத்தில் “அகராதி” என்னும் சொல் முதன்முதலாக இடம் பெற்றுள்ளது.

அகராதி நிகண்டு:

  • நிகண்டுகளில் ஒன்றான “அகராதி நிகண்டில்” அகராதி என்ற சொல் அடைமொழியாக அமைந்துள்ளது.
  • இந்நூலே அகரமுதலிகள் தோன்றுவதற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
  • இந்நூலில் சொற்களின் முதல் எழுத்துக்கள் மட்டுமே அகரவரிசையில் அமைந்திருந்தன.

சதுரகராதி:

  • வீரமாமுனிவரின் சதுரகராதியே தமிழில் தோன்றிய முதல் அகரமுதலி.
  • இது கி.பி.1732ஆம் ஆண்டு வெளிவந்தது.
  • சதுர் என்பதற்கு நான்கு என்று பொருள்.
  • பெயர், பொருள், தொகை, தொடை என நான்கு வகைகளில் தனித்தனியாக பொருள் விளக்கம் இருந்தது.
  • வீரமாமுனிவர் தமிழ்-இலத்தின் அகராதி, இலத்தின்-தமிழ் அகராதி, தமிழ்-பிரெஞ்சு அகராதி, பிரெஞ்சு-தமிழ் அகராதி, போர்த்துகீசிய-தமிழ்-பிரெஞ்சு அகராதி வெளியிட்டார்.

சங்க அகராதி:

  • “தமிழ்-தமிழ் அகராதி” ஒன்று லேவி-ஸ்பாடிஸ் என்பவரால் வெளியிடப்பட்டது.
  • யாழ்பாணம் கதிரைவேலனாரால் “தமிழ்ச்சொல் அகராதி” வெளியிடப்பட்டது. இதனை “சங்க அகராதி” எனவும் அழைப்பர்.
  • இதில் சொல்லின் மூலம் தருதல், மேற்கோள் அமைதல் எனும் மரபு பின்பற்றப்பட்டுள்ளது.

பிற அகரமுதலிகள்:

  • குப்புசாமி என்பவர் “தமிழ்ப் பேரகராதி” வெளியிட்டார்.
  • இராமநாதன் என்பவர் படங்களுடன் கூடிய ஓர் அகரமுதலியை வெளியிட்டார். இந்நூல் “இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அகராதி” எனும் பெயருடன் வந்தது.
  • வின்சுலோ என்பவர் “தமிழ்-ஆங்கிலப் பேரகராதி” வெளியிட்டார்.

பவானந்தர்:

  • பவானந்தர் என்பார் 1925ஆம் ஆண்டு “தற்காலத் தமிழ்ச்சொல் அகராதியும்”, 1937ஆம் ஆண்டு “மதுரைத் தமிழ்ப் பேரகராதியும்” வெளியிட்டார்.

சண்முகம்:

  • மு.சண்முகம் என்பவரால் “தமிழ்-தமிழ் அகரமுதலி” 1985ஆம் ஆண்டு தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் மூலம் வெளியிடப்பட்டது

தமிழ் லெக்சிகன்:

  • இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்த மிகப்பெரிய அகரமுதலி “சென்னைப் பல்கலைக்கழக அகராதி”.
  • இது நன்கு திட்டமிட்டு முழுமையாக உருவாக்கப்பட்டது.
  • இவ்வகரமுதலி “தமிழ் லெக்சிகன்” என்னும் பெயரில் ஆறு தொகுதிகளாக வெளிவந்தது.

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி:

  • 1985ஆம் ஆண்டு “தேவநேயபாவாணர்”யின் “செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி”யின் முதல் தொகுதி வெளிவந்தது.
  • இரண்டாவது தொகுதி 1993ஆம் ஆண்டு வெளியானது.
  • ஒவ்வொரு சொல்லின் சொற்பிறப்பும், இனமொழிச் சொற்களுக்கான குறிப்பும், பதிப்பின் இறுதியில் தரப்பட்டுள்ளன.
  • படங்களுடன் வேலி வந்த இரண்டாவது அகரமுதலி இதுவேயாகும்.

கணினி உதவியுடன் அகரமுதலி:

  • முழுமையாக கணினி உதவியுடன் உருவாக்கப்பட்டு வெளிவந்த முதல் அகரமுதலி “கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி”.
  • விளக்கச் சொற்களோடு வெளிவந்த முதல் அகரமுதலி இதுவே.

கலைக்களஞ்சியம்:

  • தமிழ்க் கலைக்களஞ்சியங்களின் முன்னோடி = அபிதான கோசம்.
  • இது 1902ஆம் ஆண்டு இலக்கியப் புராண இதிகாசச் செய்திகளைக்கொண்டு வெளிவந்தது.
  • இது இலக்கியக் களஞ்சியம் ஆக திகழ்கிறது.

அபிதான சிந்தாமணி:

  • 1934ஆம் ஆண்டு இலக்கியச் செய்திகளோடு, அறிவியல் துறைப் போருகளையும் முதன் முதலாகச் சேர்த்து விளக்கம் தந்து வெளிவந்தது = அபிதான சிந்தாமணி.
  • இதனை சிங்காரவேலனார் தொகுத்து வெளியிட்டார்.

தமிழ் வளர்ச்சி கழகம்:

  • தமிழ் வளர்ச்சி கழகம் முறையான “முதல் கலைக்களஞ்சியத்தை” தொகுத்து வெளியிட்டது.
  • இது பத்து தொகுதிகளை உடையது.
  • இக்கழகம் குழந்தைகள் கலைக்களஞ்சியம், நாடகக் கலைக்களஞ்சியம், இசுலாமிய கலைக்களஞ்சியம் முதலிய பல கலைக்களஞ்சியங்களை வெளியிட்டது.

கலைச்சொல் அகரமுதலி:

  • காலைக்கதிர் நிறுவன முயற்சியால் பொதுஅறிவு, உளவியல், புவியியல், புள்ளியல், வரலாறு, வானவியல் முதலிய துறைகளுக்கும் கலைச்சொல் அகரமுதலிகள் 1960ஆம் ஆண்டு தொகுக்கக்ப்பட்டன.
  • மணவை முஸ்தபா அறிவியல் சார்ந்த துறைவாரியான கலைச்சொல் அகரமுதலிகளைத் தொகுத்து வெளியிட்டார்.
  • அறிவியல் கலைச்சொல் களஞ்சியம் 1991ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

தேவநேயபாவாணர்

வாழ்க்கைக் குறிப்பு:

  • ஊர் = திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோயில் அருகே புத்தூர்
  • பெற்றோர் = ஞானமுத்து, பரிபூரணம் அம்மையார்

சிறப்பு பெயர்:

  • செந்தமிழ்ச் செல்வர்(தமிழக அரசு)
  • செந்தமிழ் ஞாயிறு(பறம்புமலை பாரி விழாவினர்)
  • மொழி ஞாயிறு(தென்மொழி இதழ்)

படைப்புகள்:

  • இயற்றமிழ் இலக்கணம்(முதல் நூல்)
  • கட்டுரை வரைவியல் என்னும் உரைநடை இலக்கணம்
  • ஒப்பியல் மொழி நூல்
  • திராவிடத்தாய்
  • சொல்லாராய்ச்சிக் காட்டுரை
  • உயர்தரக் கட்டுரை இலக்கணம்
  • பழந்தமிழ் ஆட்சி
  • முதல் தாய்மொழி
  • தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்
  • தமிழர் திருமணம்
  • இசைத்தமிழ் கலம்பகம்
  • பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்
  • தமிழ் வரலாறு
  • வடமொழி வரலாறு
  • தமிழர் வரலாறு
  • தமிழ் கடன் கொடுத்து தழைக்குமா?
  • இன்னிசைக்கோவை
  • திருக்குறள் தமிழ் மரபுரை
  • தமிழர் வேதம்
  • வேர்ச்சொல் கட்டுரைகள்
  • மண்ணில் வின் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை
  • தமிழ் இலக்கிய வரலாறு
  • செந்தமிழ்க் காஞ்சி(பாடல் தொகுப்பு)
  • இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?
  • மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும்(இறுதி கட்டுரை)

குறிப்பு:

  • உலக முதல் மொழி தமிழ்; திராவிட மொழிகளின் தாய் மொழி தமிழ் என்ற இவர்தம் கொள்கையை நிலைநாட்ட வாழ்நாள் முழுவதும் முயன்றார்
  • உலகத் தமிழ் கழகம் தொடங்கினார்
  • மன்னிப்பு உருதுச் சொல்; பொறுத்துக்கொள்க என்பது தமிழ்ச் சொல் என்றவர்
  • தமிழை வடமொழி வல்லான்மையில் இருந்து மீட்கவே இறைவன் தன்னை படைத்ததாக கூறியவர்

சிறப்பு:

  • அறிஞர் அண்ணா = பாவாணர் தமிழ்மொழிக்கும் நாட்டுக்கும் இடைவிடாத நற்தொண்டாற்றி நம் அனைவரின் நிலையினையும் உயர்த்தியவர், அவருடைய புலமை தெளிவும் துணிவும் மிக்கது
  • மறைமலை அடிகளின் தனித்தமிழ்க் கொள்கையை நாடு முழுக்க பரப்பியவர்

 

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

வாழ்க்கை குறிப்பு:

  • இயற் பெயர் = துரை மாணிக்கம்
  • ஊர் = சேலம் மாவட்டம் சமுத்திரம்
  • பெற்றோர் = துரைசாமி, குஞ்சம்மாள்

சிறப்பு பெயர்:

  • பாவலரேறு
  • தற்கால நக்கீரர்

படைப்பு:

  • கொய்யாக்கனி
  • ஐயை
  • பாவியக் கொத்து
  • எண்சுவை எண்பது
  • மகபுகுவஞ்சி
  • அறுபருவத்திருக்கூத்து
  • கனிச்சாறு
  • நூறாசிரியம்
  • கற்பனை ஊற்று
  • உலகியல் நூறு பள்ளிப்பறவைகள்

இதழ்:

  • தென்மொழி
  • தமிழ்ச் சிட்டு
  • தமிழ் நிலம்

குறிப்பு:

  • உலக தமிழ் முன்னேற்ற கலகத்தை தொடங்கினார்
  • மொழி ஞாயிறு தேவநேயபாவாணரின் கொள்கைகளைப் பரப்பும் தலை மாணாக்கர்

ஜி.யு.போப்

வாழ்க்கை குறிப்பு:

  • பெயர் = ஜியார்ஜ் யுக்ளோ போப் என்று அழைக்கப்படும் ஜி.யு.போப்
  • பிறந்த ஊர் = பிரான்ஸ் நாட்டின் எட்வர்ட் தீவு
  • பிறப்பு = கி.பி.1820ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் தேதி
  • பெற்றோர் = ஜான் போப், கேதரின் போப்

சிறப்பு பெயர்:

  • தமிழ் பாடநூல் முன்னோடி
  • வேத சாஸ்திரி

படைப்புகள்:

  • தமிழ் செய்யுட் கலம்பகம்
  • Extracts from Puranaanooru to Purapporul venbaamaalai
  • Elementary Tamil Grammar
  • The Lives of Tamil Saints

இதழ்:

  • Royal Asiatic Quarterly
  • The Indian Magazine
  • Siddhantha Deepika

மொழிப்பெயர்ப்பு நூல்கள்:

  • திருக்குறள்
  • நாலடியார்
  • திருவாசகம்
  • சிவஞான போதம்
  • புறநானூறு(சில பாடல்கள்)
  • புறப்பொருள் வெண்பா மாலை(சில பாடல்கள்)

குறிப்பு:

  • இவருக்கு தமிழ் கற்ப்பித்தவர் = இராமானுஜ கவிராயர்
  • இவர் 19ஆம் வயதில் தமிழகம் வந்தார்
  • இவரின் திருவாசக மொழிப்பெயர்ப்பு மிகச் சிறப்பானது
  • “திருக்குறளை ஏசுநாதரின் இதயஒலி, மலை உபதேசத்தின் எதிரொலி” எனப் புகழ்ந்தவர்
  • Elementary Tamil Grammar என்ற இலக்கண நூலை எழுதியுள்ளார். இது திரு.வி.க பபடித்த முதல் இலக்கண நூல்
  • தம் கல்லறையில் “தமிழ் மாணவன்” என்று பொரிக்க வேண்டும் என்றவர்
  • இவர் ஒவ்வொரு ஆங்கிலப் புத்தாண்டு அன்றும் புறநானூற்றுப் பாடல் ஒன்றை மொழிப்பெயர்க்கும் வழக்கம் கொண்டிருந்தார்

சிறப்பு:

  • ஜூலியன் வில்சன் = “இருவினை கடந்த செல்வன் இசைத்த வாசகத்தை எல்லாம் வரு விளையாட்டாற் போலும் மறுமொழி யதனில் வைத்தீர்

வீரமாமுனிவர்

வாழ்க்கைக் குறிப்பு:

  • பெயர் = வீரமாமுனிவர்
  • இயற்பெயர் = கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி
  • பெற்றோர் = கொண்டல் போபெஸ்கி, எலிசபெத்
  • பிறந்த ஊர் = இத்தாலி நாட்டில் காஸ்திக்கிளியோன்
  • அறிந்த மொழிகள் = இத்தாலியம், இலத்தின், கிரேக்கம், எபிரேயம், தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம்
  • தமிழ்க் கற்பித்தவர் = மதுரைச் சுப்ரதீபக் கவிராயர்
  • சிறப்பு = முப்பதாம் வயதில் தமிழகம் வந்து தமிழ் பயின்று காப்பியம் படைத்தமை.
  • காலம் = 1680-1747

சிறப்பு பெயர்:

  • தமிழ் சிறுகதையின் முன்னோடி
  • தமிழ் உரைநடையின் தந்தை
  • எள்ளல் இலக்கிய வழிகாட்டி
  • உரைநடை இலக்கிய முன்னோடி
  • செந்தமிழ் தேசிகர்
  • மொழிபெயர்ப்பு துறையின் வழிக்காட்டி
  • வீரமாமுனிவர்(மதுரை தமிழ் சங்கம்)
  • தமிழ் அகராதியின் தந்தை
  • ஒப்பிலக்கண வாயில்
  • தொகுப்புப்பணியின் வழிகாட்டி

காப்பியம்:

  • தேம்பாவணி(கிறித்தவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம்)

சிற்றிலக்கியம்:

  • திருக்காவலூர் கலம்பகம்
  • கித்தேரி அம்மாள் அம்மானை
  • அடைக்கல நாயகி வெண்பா
  • அன்னை அழுங்கல் அந்தாதி
  • கருணாகரப் பதிகம்

உரைநடை:

  • வேதியர் ஒழுக்கம்
  • வேத விளக்கம்
  • பேதகம் மறத்தல்
  • லூதர் இனதியல்பு
  • ஞானக் கண்ணாடி
  • வாமணன் கதை

இலக்கணம்:

  • தொன்னூல் விளக்கம்(“குட்டித் தொல்காப்பியம்” என்பர்)
  • கொடுந்தமிழ் இலக்கணம்
  • செந்தமிழ் இலக்கணம்

மொழிபெயர்ப்பு:

  • திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் இரண்டையும் இலத்தின் மொழியில் மொழிபெயர்த்துள்ளார்

அகராதி:

  • சதுரகராதி(தமிழின் முதல் அகராதி)
  • தமிழ்-இலத்தின் அகராதி
  • போர்த்துகீசியம்-தமிழ்-இலத்தின் அகராதி

ஏளன இலக்கியம்:

  • பரமார்த்த குரு கதை(தமிழின் முதல் ஏளன இலக்கியம்)

தொகுப்பு:

  • தமிழ் செய்யுள் தொகை

குறிப்பு:

  • எழுத்து சீர்திருத்தம் செய்து, சில குறில் எழுத்துக்களையும் நெடில் எழுத்துக்களையும் வேறுபடுத்தி மாற்றம் செய்தார்
  • ஐந்திலக்கண நூலான “தொன்னூல் விளக்கம்” என்னும் இலக்கண நூலை படைத்தார். இதன் சிறப்பு கருதி இந்நூலை “குட்டித் தொல்காப்பியம்” என்பர்
  • சதுரகராதி என்னும் அகராதி நூலை வெளியிட்டு பிற்கால அகராதி நூல்களுக்கெல்லாம் வழிகாட்டினார்
  • தேம்பாவணி காப்பியத்திற்கு வீரமாமுனிவரே உரை வடித்துள்ளார்
  • திருச்சியை ஆண்ட சந்தா சாகிப்பிடம் திவானாக பணி புரிந்தார்
  • இவர் மறைந்த இடம் = அம்பலகாடு
  • தனது பெயரை முதலில் “தைரியநாதர்” என மாற்றிக்கொண்டார்

சிறப்பு:

  • கவியோகி சுத்தானந்த பாரதி = சாரமாம் தேம்பாவணியினைத் தொடினும், தமிழ் மனம் கமழும் என்கரமே
  • கவியோகி சுத்தானந்த பாரதி = தமிழ் மாலைகளில் ஒரு வாடாத கற்பகமாலை காணப்படுகிறது. அதுவே தேம்பாவணி என்னும் பெருங் காப்பிய மாலை
  • திரு பூர்ணலிங்கம் பிள்ளை = இது சீவக சிந்தாமணிக்கு இணையான காவியமாகும்
  • கால்டுவெல் = தமிழ் இலக்கியத்தில் தலை சிறந்த நான்கு காவியங்களுள் தேம்பாவணியும் ஒன்று
  • ரா.பி.சேதுபிள்ளை = தேம்பாவணி தமிழ் அன்னையின் கழுத்தில் வாடாத மாலையாகத் திகழ்கின்றது. காவலூர்க் கலம்பகம் கதம்ப மாலையாகக் காட்சியளிக்கிறது; தொன்னூல் பொன்னூலாக இலங்குகின்றது; சதுரகராதி முத்தாரமாக மிளிர்கிறது; வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகிறார்

தமிழ்ப்பணி - உ.வே.சா-தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்

தமிழ்ப்பணி - உ.வே.சா

வாழ்க்கைக்குறிப்பு:

  • இயற் பெயர் = வேங்கடரதினம்
  • பெற்றோர் = வேங்கடசுப்பையா, சரஸ்வதி அம்மையார்
  • ஊர் = திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுரம்
  • ஆசிரியர் = மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்
  • இசை ஆசிரியர் = சோமசுந்தர பாரதியார்
  • காலம் = 19.02.1855 முதல் 28.04.1942

சிறப்பு பெயர்கள்:

  • “தமிழ்த் தாத்தா”(கல்கி)
  • மகாமகோபாத்தியாய(சென்னை ஆங்கில அரசு)
  • குடந்தை நகர் கலைஞர்(பாரதி)
  • பதிப்பு துறையின் வேந்தர்
  • திராவிட வித்ய பூஷணம்(பாரத தருமா மகா மண்டலத்தார்)
  • தட்சினாத்திய கலாநிதி(சங்கராச்சாரியார்)
  • டாக்டர்(சென்னைப் பல்கலைக்கழகம்)

படைப்புகள்:

  • மீனாட்சிசுந்தரம் பிள்ளை சரித்திரம்
  • புதியதும் பழையதும்
  • கண்டதும் கேட்டதும்
  • நினைவு மஞ்சரி
  • என் சரிதம்(வாழ்க்கை வரலாறு)
  • மணிமேகலை கதை சுருக்கம்
  • உதயணன் கதை சுருக்கம்
  • சிலப்பதிகாரக் கதைச் சுருக்கம்
  • திருக்குறளும் திருவள்ளுவரும்
  • மத்தியார்ச்சுன மான்மியம்
  • புத்தர் சரித்திரம்
  • தியாகராச செட்டியார் சரித்திரம்
  • நல்லுரைக்கோவை
  • சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும்

கவிதை நூல்கள்:

  • கயர்கண்ணிமாலை
  • தமிழ்ப்பா மஞ்சரி

குறிப்பு:

  • இவரின் ஆசிரியர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார் இவருக்கு இட்ட பெயர் = சாமிநாதன்
  • உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகனான சாமிநாதன் என்பதன் சுருக்கமே “உ.வே.சா”
  • குடந்தை, சென்னை போன்ற இடங்களில் உள்ள அரசினர் கலைக் கல்லோரிகளில் பேராசிரியராக பணி புரிந்தார்
  • இவர் தமிழ் கற்றது = சடகோப அய்யங்காரிடம்
  • இவரை பதிப்பு துறையில் ஈடுபட வைத்தவர் = சேலம் இராமசாமி முதலியார்
  • இவரின் நெருங்கிய நண்பர் = தியாகராஜா செட்டியார்
  • இவருக்கு சங்க இலக்கியங்களை அறிமுகம் செய்தவர் = சேலம் இராமசாமி செட்டியார்
  • இவர் பதிபித்த முதல் நூல் = வேனுலிங்க விலாசச் சிறப்பு
  • இவர் பதிபித்த முதல் காப்பியம் = சீவக சிந்தாமணி
  • இவர் பதிபித்த மொத்த நூல்கள் = 87
  • தம் வீட்டிற்கு நண்பரின் பெயரை வைத்தவர் = தியாகராச விலாசம்
  • இவர் மறைந்த இடம் = திருக்கழுக்குன்றம்

சிறப்பு:

  • தமிழில் முதன்முதலில் டாக்டர்(மதிப்பில்) பட்டம் பெற்றவர் இவரே
  • சென்னை பல்கலைக்கழகம் இவருக்கு D.Litt பட்டம் வழங்கியது
  • 1942இல் உ.வே.சா நூல்நிலையம் சென்னை பெசன்ட் நகரில் தொடங்கப்பட்டது.
  • ஆங்கில அரசினரால் இவருக்கு “மகாமகோபாத்தியாய” பட்டம் வழங்கப்பட்டது
  • இவர் பணியாற்றிய மாநிலக் கல்லூரியில் இவருக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது. மேலும் மதுரை தல்லாகுளம் அருளுமிகு பெருமாள் கோயில் முன்புறமும் உள்ளது
  • உ.வே.சா நினைவு இல்லம் உத்தமதானபுரத்தில் உள்ளது.
  • உ.வே.சா அவர்களின் தமிழ்ப் பணிகளி வெளிநாட்டு அறிஞர்களான ஜி.யு.போப், சூழியல் வின்சோன் ஆகியோர் பெரிதும் பாராட்டியுள்ளனர்.
  • நடுவண் அரசு 2006ம் ஆண்டு அஞ்சல் தலை வெளியிட்டது.
  • பாரதியார் இவரை,
குடந்தை நகர்க் கலைஞர் கோவே
பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும்
காலமெல்லாம் புலவர் வாயில்
துதியறிவாய் எவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய்
சிறப்பின்றித் துலங்குவாயே
  • செல்லின் வாயில் சென்ற தமிழை மீட்டுக் காத்த தமிழ் தாத்தா என்பர்
  • ஏட்டில் புதைந்து கிடந்த தமிழை நாடறியச் செய்த பெருமை இவரையே சாரும்

தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்

வாழ்க்கைக் குறிப்பு:

  • ஊர் = சென்னை சிந்திரிப் பேட்டை
  • தந்தை = பொன்னுசாமி கிராமணி

சிறப்பு பெயர்:

  • பல்கலைச் செல்வர்(திருவாவடுதுறை ஆதீனம்)
  • பன்மொழிப் புலவர்(குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம்)
  • பெருந்தமிழ் மணி(சிவபுரி சன்மார்க்க சபை)
  • நடமாடும் பல்கலைக்கழகம்(திரு.வி.க)
  • இலக்கிய வித்தகர்

நூல்கள்:

  • வள்ளுவரும் மகளிரும்
  • அன்பு முடி
  • கால்டுவெல் ஒப்பிலக்கணம்
  • தமிழா நினைத்துப்பார்
  • நீங்களும் சுவையுங்கள்
  • வள்ளுவர் கண்ட நாடும் காமமும்
  • பிறந்தது எப்படியோ?
  • கானல்வரி
  • சமணத்தமிழ் இலக்கிய வரலாறு
  • கல்விச் சிந்தனைகள்
  • தமிழ் மணம்
  • தமிழும் பிற பண்பாடும்
  • வாழும் கலை
  • தமிழ் மொழி வரலாறு
  • மொழியியல் விளையாட்டுக்கள்
  • பத்துப்பாட்டு ஆய்வு

ஆங்கில நூல்கள்:

  • A History of Tamil Language
  • A History of Tamil Literature
  • Philosophy of Thiruvalluvar
  • Advaita in Tamil
  • Tamil – A Bird’s eye view

குறிப்பு:

  • இவர் தமிழ் வித்துவான் தேர்வில் மாநிலத்தில் முதல் மாணவராக வெற்றிப் பெற்றார்
  • சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆனார்
  • அரிஜனங்களுக்கு இரவுப்பள்ளி தொடங்கினார்
  • மொழியியல் துறையை மொழியியல் உயராய்வு மையமாக மாற்றினார்
  • சிகாகோ பல்கலைக்கழகத்தில் தமிழ்க் கல்வி தொடங்கிய பொது அங்குத் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார்
  • இவர் பத்மபூஷன் விருதும், கலைமாமணி விருதும் பெற்றுள்ளார்

சி.இலக்குவனார்

வாழ்க்கைக் குறிப்பு:

  • இயற் பெயர் = இலட்சுமணன்
  • ஊர் = தஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்துள்ள வாயமைமேடு
  • பெற்றோர் = சிங்காரவேலு தேவர், இரத்தினம் அம்மாள்

புனைப் பெயர்:

  • தொல்காப்பியன்

படைப்பு:

  • எழிலரசி
  • மாணவர் ஆற்றுப்படை
  • அண்ணாவிற்குப் பாவியல் வாழ்த்து
  • அமைச்சர் யார்?
  • எல்லோரும் இந்நாட்டு அரசர்
  • தமிழ் கற்பிக்கும் முறை
  • வள்ளுவர் வகுத்த அரசியல்
  • வள்ளுவர் கண்ட இல்லறம்
  • பழந்தமிழ்
  • தொல்காப்பிய ஆராய்ச்சி விளக்கம்
  • இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல்
  • கருமவீரர் காமராசர்
  • A brief study of Tamil words
  • The Making of Tamil Grammar

தன் வரலாறு நூல்:

  • எனது வாழ்க்கைப் போர்

குறிப்பு:

  • இலட்சுமணன் என்ற தம் பெயரை சாமி சிதம்பரனார் இலக்குவணன் என் மாற்றிக் கொண்டார்
  • இவர் தமிழாசிரியராகப் பணி புரிந்தவர்
  • இவர் தமிழ் பாதுக்காப்புக் கழகம் தொடங்கினார்
  • தொல்காப்பியத்தில் மிகுத்த ஈடுபாடு கொண்டவர். அதனால் “தொல்காப்பியன்” என்ற புனை பெயரை வைத்துக்கொண்டார்
 

உரைநடை- மறைமலையடிகள்-ரா.பி.சேதுப்பிள்ளை-திரு.வி.க

உரைநடை - மறைமலையடிகள்

குறிப்பு:

  • இயற் பெயர் = சாமி வேதாசலம்
  • ஊர் = நாகை மாவட்டம் காடம்பாடி
  • பெற்றோர் = சொக்கநாதப் பிள்ளை, சின்னம்மா அம்மையார்
  • மகள் = நீலாம்பிகை அம்மையார்

வேறு பெயர்கள்:

  • தனித்தமிழ் மலை
  • தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை
  • தனித்தமிழ்த் இலக்கியத்தின் தந்தை
  • தன்மான இயக்கத்தின் முன்னோடி
  • தமிழ் கால ஆராய்ச்சியின் முன்னோடி

புனைப்பெயர்:

  • முருகவேள்

உரைநடை நூல்கள்:

  • பண்டைத் தமிழரும் ஆரியரும்
  • மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்
  • வேளாளர் யாவர்
  • சைவ சமயம்
  • தமிழர் மதம்
  • அம்பலவாணர் கூத்து
  • தமிழ்த்தாய்
  • தமிழ்நாட்டவரும் மேல்நாட்டவரும்
  • அறிவுரைக் கொத்து
  • மக்கள் 100 ஆண்டுகள் வாழ்வது எப்படி?
  • மரணத்தின் பின் மனிதனின் நிலை
  • சோமசுந்தரக் காஞ்சியாக்கம்
  • தென்புலத்தார் யார்?
  • சாதி வேற்றுமையும் போலிச் சைவமும்
  • தொலைவில் உணர்த்தல்
  • Ancient and modern tamil poets

செய்யுள் நூல்கள்:

  • திருவெற்றியூர் முருகர் மும்மணிக்கோவை
  • சோமசுந்தரக் காஞ்சி

ஆய்வு நூல்கள்:

  • முல்லைப்பாட்டு ஆராய்ச்சி
  • பட்டினப்பாலை ஆராய்ச்சி
  • சிவஞான போத ஆராய்ச்சி
  • குறிஞ்சிப்பாட்டு ஆராய்ச்சி
  • திருக்குறள் ஆராய்ச்சி

நாடகம்:

  • சாகுந்தலம்(மொழிப்பெயர்ப்பு)
  • குமுதவல்லி
  • அம்பிகாபதி அமராவதி

நாவல்:

  • கோகிலாம்பாள் கடிதங்கள்
  • குமுதினி அல்லது நாகநாட்டு இளவரசி

இதழ்:

  • அறிவுக்கடல்(ஞானசாகரம்)
  • The ocean of wisdom

குறிப்பு:

  • தமிழ், ஆங்கிலம், வடமொழி என மும்மொழியிலும் வல்லவர்
  • சைவத்தையும் தமிழையும் தம் உயிராக கொண்டவர்
  • சென்னை கிறித்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியவர்
  • சாமி வேதாசலம் என்ற தன் வடமொழி பெயரை மறைமலை அடிகள் என தமிழில் மாற்றிக் கொண்டார்
  • “ஞானசாகரம்” என்ற இதழுக்கு “அறிவுக்கடல்” என்று பெயர் மாற்றம் செய்து நடத்தினார்
  • “சிறுவர்க்கான செந்தமிழ்” என்ற தலைப்பில் பாடநூல்களையும் வரைந்துள்ளார்.
  • அடிகளின் “அறிவுரைக் கொத்து” என்ற நூலே “கட்டுரை” என்ற தமிழ்ச் சொல்லையும், கட்டுரை எழுதும் முறைகளையும் மாணவர்களிடையே பரப்பிற்று
  • இவர் சைவ சித்தாந்த மகா சமாஜம், சமரச சன்மார்க்க சங்கம் போன்றவற்றை ஏற்படுத்தினார்

சிறப்பு:

  • “தனித்தமிழ் இயக்கம்” தோற்றுவித்தவர்
  • திரு.வி.க = மறைமலை ஒரு பெரும் அறிவுச் சுடர்; தமிழ் நிலவு; சைவ வான்; தென்னாடு பன்னெடுங்காலம் தன்னை மறந்து உறங்கியது. அவ்வுறக்கம் போக்கிய பெருமை அடிகளாருக்கே சேரும்
  • சங்க இலக்கியங்களை மக்களிடையே பரப்பியவர்

பரிதிமாற்கலைஞர்

வாழ்க்கைக்குறிப்பு:

  • இயற் பெயர் = சூரிய நாராயண சாஸ்திரி.
  • ஊர் = மதுரை அடுத்துள்ள விளாச்சேரி
  • பெற்றோர் = கோவிந்தசிவனார், இலட்சுமி அம்மையார்.
  • தம் பெற்றோருக்கு மூன்றாவது மகனாக,1870ஆம் ஆண்டு சூலைத் திங்கள் ஆறாம் நாள் பிறந்தார்..

சிறப்பு பெயர்கள்:

  • தமிழ் நாடக பேராசிரியர்
  • திராவிட சாஸ்திரி(சி.வை.தாமோதரம்பிள்ளை)
  • தனித் தமிழ் நடைக்கு வித்திட்டவர்

படைப்புகள்:

  • ரூபாவதி அல்லது காணாமல் போன மகள்(நாடக நூல்)
  • கலாவதி(நாடக நூல்)
  • மானவிசயம்(நாடக நூல், களவழி நாற்பது தழுவல்)
  • பாவலர் விருந்து
  • தனிப்பாசுரத் தொகை
  • தமிழ் மொழி வரலாறு
  • நாடகவியல்(நாடக இலக்கண நூல்)
  • சித்திரக்கவி
  • மதிவாணன்(புதினம்)
  • உயர்தனிச் செம்மொழி(கட்டுரை)
  • சூர்பநகை(புராண நாடகம்)
  • முத்ராராட்சசம் என்ற வடமொழி நூலை தமிழில் மொழிப்பெயர்த்துள்ளார்
  • தமிழ் புலவர் சரித்திரம்
  • தமிழ் வியாசகங்கள்(கட்டுரை தொகுப்பு)

இதழ்:

  • ஞானபோதினி
  • விவேக சிந்தாமணி

குறிப்பு:

  • சென்னை கிறித்துவக் கல்லோர்ரியில் தமிழ் பேராசிரியராகப் பணி புரிந்தவர்
  • மறைமலை அடிகளின் ஆசிரியர்
  • சோனட் என்ற 14 அடி ஆங்கிலப் பாட்டைப் போன்று பல பாடல்கள் எழுதி “தனிப்பாசுரத்தொகை” என்னும் நூலை வெளியிட்டார்
  • “அங்கம்” என்ற நாடக வகைக்கு மானவிசயம் என்ற நாடக நூலை படைத்தார்
  • சி.வை.தாமோதரப் பிள்ளையின் வேண்டுகோளுக்கு இணங்க “மதிவாணன்” என்ற புதினம் படைத்தார்

சிறப்பு:

  • சூரிய நாராயண சாஸ்திரி என்ற தம் பெயரை தனிப்ப்பசுரத் தொகை என்னும் நூலை வெளியிடும் போது பரிதிமாற் கலைஞர் என மாற்றிக் கொண்டார்
  • இவரின் தனிப்பாசுரத் தொகை என்னும் நூலினை ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்
  • இவரின் தமிழ்ப்புலமையும் கவிபாடும் திறனையும் கண்டு சி.வை.தாமோதரம்பிள்ளை இவருக்கு “திராவிட சாஸ்திரி” என்ற பட்டம் வழங்கினார்.
  • உயர்தனிச் செம்மொழி(classical language), தகுந்தவை தங்கி நிற்றல்(survival of the fittest) என்ற கலைச் சொற்களைப் படைத்தவர்
  • முதன் முதலில் தமிழை உயர்தனிச் செம்மொழி என அறிவித்தவர்

ந.மு.வேங்கடசாமி நாட்டார்

வாழ்க்கைக் குறிப்பு:

  • ஊர்            = தஞ்சாவூர் நடுக்காவிரி
  • பெற்றோர்      = முத்துசாமி நாட்டார், தைலம்மாள்
  • முதலில் வைத்த பெயர் சிவப்பிரகாசம், பின் வேண்டுதலால் வைத்த பெயர் வேங்கடசாமி

படைப்புகள்:

  • வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சி
  • கபிலர்
  • நக்கீரர்
  • கள்ளர் சரித்திரம்
  • கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும்
  • சோழர் சரித்திரம்
  • கட்டுரைத் திரட்டு

உரைகள்:

  • ஆத்திசூடி
  • கொன்றைவேந்தன்
  • பரஞ்சோதியாரின் திருவிளையாடற்புராணம்
  • சிலப்பதிகாரம்
  • மணிமேகலை
  • அகநானூறு
  • தண்டியலங்காரம்

குறிப்பு:

  • பகலில் வேளாண்மையும் செய்தும்,  இரவில் தமிழ்க் கல்வியும் கற்றார்
  • இவருக்கு “நநாவலர்” பட்டம் வழங்கப்பட்டுள்ளது
  • இவருக்கு கற்கோயில் எடுக்கப்பட்டது
  • பிறமொழிச் சொற்களுக்கு நேரான தமிழ்ச் சொற்களை வழக்கத்தில் கொண்டு வந்த முதல் அறிஞர் இவரே
  • மதுரைத் தமிழ் சங்கத்தில் முதன் முதலில் தங்கத் தோடா பரிசை பெற்றவர்

ரா.பி.சேதுப்பிள்ளை

வாழ்க்கைக்குறிப்பு:

  • ஊர்            = நெல்லை மாவட்டம் ராசவல்லிபுரம்
  • பெற்றோர்      = பெருமாள் பிள்ளை, சொர்ணத்தம்மாள்

சிறப்புபெயர்கள்:

  • சொல்லின் செல்வர்
  • செந்தமிழுக்கு சேதுபிள்ளை

படைப்புகள்:

  • தமிழின்பம்(சாகித்ய அகாடமி விருது பெற்ற முதல் தமிழ் நூல்)
  • ஊரும் பேரும்
  • செந்தமிழும் கொடுந்தமிழும்
  • வீரமாநகர்
  • வேலும் வில்லும்
  • திருவள்ளுவர் நூல் நயம்
  • சிலப்பதிகார நூல் நயம்
  • தமிழ் விருந்து
  • தமிழர் வீரம்
  • கடற்கரையிலே
  • தமிழ்நாட்டு நவமணிகள்
  • வாழ்கையும் வைராக்கியமும்
  • இயற்கை இன்பம்
  • கால்டுவெல் ஐயர் சரிதம்
  • Tamil words and their significance

பதிப்பித்தவை:

  • திருக்குறள் எல்லீஸ் உரை
  • தமிழ் கவிதைக் களஞ்சியம்
  • பாரதி இன்கவித் திரட்டு

குறிப்பு:

  • இவர் அடிப்படையில் வழக்கறிஞர்
  • சென்னை பல்கலைகழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியர்
  • எதுகை மோனை அமையப் பேசவும் ஏலதவும் வல்லவர்

திரு.வி.க

வாழ்க்கைக்குறிப்பு:

  • திரு.வி.கலியாணசுந்தரனார்(திருவாரூர் விருதச்சல்னார் மகனார் சுருக்கமே திரு.வி.க என்பது)
  • பெற்றோர் = விருதச்சலனார் – சின்னம்மையார்
  • பிறந்த ஊர் = காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள துள்ளம்.
  • இவ்வூர், தற்போது தண்டலம் என அழைகப்படுகிறது. இவ்வூர் சன்னியை அடுத்துள்ள போரூருக்கு மேற்கே உள்ளது.

சிறப்பு பெயர்கள்:

  • தமிழ்த்தென்றல்
  • தமிழ் முனிவர்
  • தமிழ் பெரியார்
  • தமிழ்ச்சோலை
  • தமிழ் புதிய உரைநடையின் தந்தை
  • தமிழ் மேடைப்பேச்சின் தந்தை
  • தொழிலாளர் தந்தை
  • பேனா மன்னருக்கு மன்னன்(பி.ஸ்ரீ.ஆச்சாரியார்)
  • இக்காலத் தமிழ்மொழி நடையாளர்
  • தமிழ் வாழ்வினர்

கற்றல்:

  • தமிழ் கற்றது = யாழ்ப்பாணம் கதிரைவேற் பிள்ளையிடம்
  • சித்தாந்த சாத்திரம் கற்றது = மகாவித்துவான் தணிகாசல முதலியாரிடம்
  • இலக்கியம் கற்றது = மறைமலை அடிகளிடம்
  • சமய அறிவு பெற்றது = பாம்பன் சுவாமிகளிடம்

உரைநடை நூல்கள்:

  • முருகன் அல்லது அழகு
  • தமிழ்ச்சோலை
  • உள்ளொளி
  • மேடைத்தமிழ்
  • சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து
  • மனித வாழ்கையும் காந்தியடிகளும்
  • பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணைநலம்
  • தமிழ்த் தென்றல்
  • சைவத்திறவு
  • இந்தியாவும் விடுதலையும்
  • சைவத்தின் சமரசம்
  • கடவுட் காட்சியும் தாயுமானவரும்
  • நாயன்மார்கள்தமிழ்நாடும் நம்மாழ்வாரும்
  • இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம்
  • தமிழ் ந்நோல்களில் பௌத்தம்
  • காதலா? முடியா?சீர்திருத்தமா?
  • என் கடன் பணி செய்து கிடப்பதே
  • இமயமலை அல்லது தியானம்
  • இளமை விருந்து
  • பொருளும் அருளும் அல்லது மார்க்சியமும் காந்தியும்
  • வளர்ச்சியும் வாழ்வும் அல்லது படுக்கை பிதற்றல்

செய்யுள்:

  • முருகன் அருள் வேட்டல்
  • கிறித்துவின் அருள் வேட்டல்
  • உரிமை வேட்கை
  • திருமால் அருள் வேட்டல்
  • சிவன் அருள் வேட்டல்
  • புதுமை வேட்டல்
  • பொதுமை வேட்டல்
  • அருகன் அருகே
  • கிறித்து மொழிக்குறள்
  • இருளில் ஒளி
  • இருமையும் ஒருமையும்
  • முதுமை உளறல்

பயண நூல்:

  • எனது இலங்கை செலவு

இதழ்:

  • நவசக்தி
  • தேசபக்தன்

குறிப்பு:

  • பெரியபுராணத்திற்கு குறிப்புரை எழுதியுள்ளார்
  • திருக்குறளின் முதல் 10 அதிகாரங்களுக்கு விரிவுரை அளித்துள்ளார்
  • சென்னை வெஸ்லி பள்ளியில் தமிழாசிரியராகப் பனிப் புரிந்தார்
  • இவரின் சொற்பொழிவுகள் எல்லாம் “தமிழ்த்தென்றல்” என்ற தலைப்பில் தொகுத்து வெளியிடப்பட்டது
  • இவரின் பத்திரிக்கைத் தலையங்கம் எல்லாம் தொகுத்து “தமிழ்ச்சோலை” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது
  • இவரின் மேடைபேச்சுகள் எல்லாம் “மேடைத்தமிழ்” என்ற தளிப்பில் வெளியிடப்பட்டது
  • இவரின் செய்யுள் நூல்கள் எல்லாம் “அருள் வேட்டல்” என்ற தலைப்பில் தொகுத்து வெளியிடப்பட்டது

சிறப்பு:

  • இந்தியாவிலிலேயே முதன் முதலாக சென்னையில் தொழிலாளர் சங்கத்தைத் தொடங்கினார்
  • திரு.வி.க நடை என்று கூறும் அளவிற்கு தனி நடையை உரைநடையில் கொண்டவர்
  • அடுக்குத் தொடர்கள், வியங்கோள் அமைப்பு, வியப்புத் தொடர்கள், மரபுச் சொற்கள், கவிதை வரிகள், வினாவிடைப் பாங்கு, மேடைப் பேச்சுநடை, புதிய சொல்லாக்கம் ஆகியன இவர் தம் உரைநடையின் தனித்தன்மையாகும்
  • பி.ஸ்ரீ.ஆச்சார்யா = பேனா மன்னருக்கு மன்னன். அவர் சிறந்த பக்தன். அவர் சாகவில்லை. ஏனெனில் பக்தனைக் கண்டு சாவுதான் செத்துப் போகிறது. அவர் வாழ்ந்து வந்த புதுப்பேட்டை விலாசம் தான் மாறியிருக்கிறது. புது விலாசம் மக்கள் உள்ளம்
  • “பிரயாணம்” என்ற சொலுக்கு பதிலாக “செலவு” என்ற சொல்லை பயன்படுத்தியவர்
  • எத்துறை பற்றியும் இன்தமிழில் பேசவும் எழுதவும் முடியும் என நிறுவியவர் இவரே
  • திரு.வி.காவின் இலக்கிய வாரிசுகள் = மு.வ, கல்கி

வையாபுரிப்பிள்ளை

வாழ்க்கைக்குறிப்பு:

  • ஊர் = திருநெல்வேலி சிக்கநரசையன் என்னும் சிற்றூர்
  • பெற்றோர் = சரவணப் பெருமாள் பிள்ளை, பாப்பம்மாள்
  • ஆசிரியர் = கணபதி ஆசிரியர்
  • தமிழ் கற்றது = மறைமலை அடிகளிடம்

நூல்கள்:

  • கம்பன் திருநாள்
  • மாணிக்கவாசகர் காலம்
  • பத்துப்பாட்டின் காலநிலை
  • பவணந்தி காலம்
  • வள்ளுவர் காலம்
  • கம்பர் காலம்
  • அகராதி நினைவுகள்
  • அகராதி வேலையில் சில நினைவுகள்
  • இலக்கிய மண்டபக் கட்டுரைகள்

நாவல்:

  • ராசி

கவிதை நூல்கள்:

  • என் செல்வங்கள்
  • என் செய்வேன்
  • மெலிவு ஏன்
  • விளையுமிடம்
  • என்ன வாழ்க்கை
  • பிரிவு
  • என்ன உறவு

உரைகள்:

  • திருமுருகாற்றுப்படை
  • சிறுகதை மஞ்சரி
  • இலக்கிய மஞ்சரி
  • திராவிட மொழிகளின் ஆராய்ச்சி
  • இலக்கிய சிந்தனை
  • தமிழின் மறு மலர்ச்சி
  • இலக்கிய உதயம்
  • இலக்கிய தீபம்
  • இஅல்க்கிய மணிமாலை
  • கம்பன் காவியம்
  • இலக்கணச் சிந்தனைகள்
  • சொற்கலை விருந்து
  • சொற்களின் சரிதம்

பதிப்பித்த நூல்கள்:

  • திருமந்திரம்
  • கம்பராமாயணம்
  • நாமதீப நிகண்டு
  • அரும்பொருள் விளக்க நிகண்டு
  • தொல்க்காப்பியம் இளம்பூரனார் உரை
  • தொல்காப்பியம் நச்சினார்க்கினியர் உரை
  • தினகர வெண்பா
  • பூகோள விலாசம்
  • புறத்திரட்டு
  • எட்டுத்தொகை
  • பத்துப்பாட்டு
  • சீவக சிந்தாமணி
  • சீறாப்புராணம்
  • விரலி விடு தூது

ஆங்கில நூல்கள்:

  • History and tamil lexicography
  • Life in the Ancient City of Kaverippumpattinam
  • Manikkavacakar
  • History of Tamil Language and Literature

குறிப்பு:

  • திருவனந்தபுரம் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்
  • சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதியின் பதிப்பாசிரியராக நியமிக்கப்பட்டார்
  • இவருக்கு அகராதிப் பணிக்காக “ராவ் சாகிப்” பட்டம் வழங்கப்பட்டது