Tuesday, 24 November 2015

குரூப் 4 ஏழம் வகுப்பு இலக்கணம் பாகம் 2

குரூப் 4 ஏழம் வகுப்பு இலக்கணம் பாகம் 2

இடுகுறிபெயர்  காரணப்பெயர் என்றால் என்ன


1முன்னோர்கள் எவ்வித காரணமும் இன்றி ஒரு பொருளுக்கு வைத்த பெயர் இடுகுறி பெயர்கள் உதாரணம் மண் மரம் மலை காடு

2காரணத்துடன் ஒரு பொருளுக்கு பெயர் வைத்தால் அது காரணப்பெயர்கள் நான்கு கால்களை உடையதால் அது நாற்காலி இவ்வாறு காரணத்துடன் பெயர் வைத்தால் அது காரணப்பெயர்


இதில் பொதுப்பெயர் சிறப்பு பெயர்கள் என்று  2 உண்டு 


 இடுகுறிப்பெயர்கள்  
குழப்பம் எதுவும் வராது எளிமையாக புரியும் படி சொல்கிறேன் இடுகுறி பெயர்கள் மட்டும் மனதில் வையுங்கள் இதில் மரம் என்பது இடுகுறிபெயர்கள் ஏன் என்றால் முன்னோர்கள் எந்த ஒரு காரணமும் இன்றி இந்த பெயர் வைத்துள்ளனர் சரி தென்னை மரம் மாமரம் இவற்றிற்கு எதுவும் காரணம் உள்ளதா இல்லை அப்படி என்றால் இவையும் இடுகுறிப்பெயர்கள் தான் சற்று புரியும் படி சொன்னால் மரம் என்படு இடுகுறி பொதுப்பெயர் மாமரம் தென்னை மரம் என்றால் இடுகுறி சிறப்பு பெயர்கள்  

மாமரம் தென்னை மரம் பலா மரம் இதில் எந்த காரணமும் இல்லை அதாவது முன்னோர்கள் எந்த காரணத்தாலும் வைக்கவில்லை அதனால் இவை இடுகுறி பெயர்கள் தான் மரம் என்பது பொதுவாக அனைத்து மரங்களையும் மரம் என்பதால் அவை இடுகுறி பொதுப் பெயர் மாமரம் தென்னை மரம் என்பதால் இவை இடுகுறி சிறப்பு பெயர்கள்
  
காரண  பெயர்
சரி அடுத்து பார்ப்போம் காரணப்பெயர் இதில் பறவை என்பத காரணப்பெயர் ஏன் என்றால் பறக்கிறதால் இதில் கிளி மயில் புறா அனைத்தும் அடங்கும் இவை காரணப் பொதுப் பெயராகும் மரம் கொத்தி என்றால் மரத்தை கொத்துவதால் சிறப்பு பெற்று இந்த பெயர் வந்துள்ளதால் இவை இடுகுறி சிறப்பு பெயர் ஆகும் 

Tnpsc group 4 Syllabus ல் உள்ள பாடப்பகுதி யில் இன்றைய இலக்கணப்பகுதி

Tnpsc group 4 Syllabus ல் உள்ள பாடப்பகுதி யில் இன்றைய இலக்கணப்பகுதி

வேர்ச்சொல்லை கண்டறிதல் என்ற தலைப்பில் 2 முதல் 5 வினாக்கள் வரை இடம் பெற வாய்ப்பிருக்கிறது,

வேர்ச்சொல்:

# வேர்ச்சொல் என்றால் Root என பொருள்படும்

# பகு பதத்தின் பகுதியாக இருக்கும்

# வேர்ச்சொல்லை பிரிக்க முடியாது


# எநத ஒரு சொல்லையும் ஏவல் அல்லது கட்டளையாக மாற்றினால் வருவது வேர்ச்சொல்.  எனவே தான் கட்டளை வாக்கியங்கள் பொதுவாக வேர்ச்சொல்லில் முடிவடைகின்றது

எடுத்துக்காட்டுகள்:

நடித்தான் - நடி
உண்டான்- உண்
கண்டான்- காண்
அறிந்தான்- அறி

வேர்ச்சொல்லிற்கு மேலும் சில எடுத்துக்காட்டுகள் :
கடி, இடி, முடி, வாழ், வனை, கொய், செய், உழு, எழு

இதற்கும் மேலாக வேர்ச்சொல்லை கணண்டறிய எளிமையான  வழி :

டு, ல், ற, டி, று. ழ். ய், ரி, ள், கு, பு, ள, சு  என்று முடிவது பொதுவாக வேர்ச்சொல் ஆகும்,  வேர்ச்சொல் இரண்டு அல்லது மூன்று எழுத்தில் அமையும

குரூப் 4 தமிழ் இலக்கணம் பாகம் 4 ஏழாம் வகுப்பு வினைமுற்று பெயரச்சம் வினையச்சம்

குரூப் 4 தமிழ் இலக்கணம் பாகம் 4 ஏழாம் வகுப்பு வினைமுற்று பெயரச்சம் வினையச்சம்

 வினைச்சொல் இருவகை ஒன்று வினைமுற்று 2 எச்சவினை

வினைமுற்று

பெயர் சொல் வினைச்சொற்கள் பற்றி பார்த்திருக்கிறோம் இவற்றில் வினைச்சொல் என்பது ஒரு செயலை குறிக்கும் உதாரணமாக வந்தான் சென்றான் என்பது போல்  இவற்றில் அந்த வினை முற்று பெற்றால் அவை வினைமுற்று எனப்படும்

உதாரணமாக ராமன் வந்தான் இவற்றில் வந்தான் என்று அந்த செயல் முற்று பெற்றுள்ளதால் இவை வினைமுற்று ஆகும். இவற்றில் வந்தான் என்பது இறந்தகால வினைமுற்று வருவான் எதிர்காலம் வருகின்றான் நிகழ்காம் என முக்காலங்களிலும் வினைமுற்றும் தினை பால் எண் இடம் ஆகியவற்றையும் காட்டும் வரும்

எச்சவினை 

எச்சவினை 1 பெயரச்சம் 2 வினையச்சம் என இருவகைப்படும்

ஒரு செயல் முற்று பெறவில்லை என்னால் அவை  எச்சவினை எனப்படும்

பெயரச்சம்
என்பது  ஒரு பெயரைக் கொண்டு முடியும் முற்றுப் பெறாத வினைச்சொல்லே பெயரச்சம் ஆகும். இதுவும் முக்காலத்தில் வரும்
உதாரணமாக தீபாவளி வெடியை வைத்துக் கொள்வோம்
வெடித்த வெடி வெடி என்ற பெயர்ச்சொல் இவற்றில் உள்ளது வெடித்த என்று இந்த வினை முற்று பெறவில்லை  இவ்வாறு முற்று பெறாமல் ஒரு பெயரை கொண்டு முடிந்தால் அது பெயரச்சம் ஆகும்

வினையச்சம்

நடந்து சென்றான் இவற்றில் நடந்து என்ற வினை முற்று பெறாமல் சென்றான் என்ற வினைமுற்றுடன் வந்துள்ளது. இவ்வாறு வினை முற்று பெறாமல் வந்தால் அவை வினையச்சம் ஆகும்  நடந்து செல்வான் நடந்து செல்கிறான் என இவையும் முக்காலங்களில் வரும்

எளிதாக கண்டுபிடிப்பது எப்படி

வந்த, சென்ற, நடந்த ,ஓடிய, பறந்த ,இவற்றில் அ என்ற ஒலி இறுதியில் வருகிறது இவை பெயரச்சம் என எழுதி விடலாம் வந்த(த்+அ)

நடந்து, சென்று, நடந்து, ஓடி ,பறந்து, இப்படி உ,இ என்ற ஒலி இறுதியில் வந்தால் அவை வினையச்சம் என்று எழுதி விடலாம் நடந்து(த்+உ)

இந்த எளிதாக கண்டறியும் முறை அனைத்திற்கும் பயன்தாராது எனவே இந்த முறை அல்லாமல்  நல்ல புத்தகங்களை வாங்கி அறியுங்கள் 

குரூப் 4 தமிழ் இலக்கணம் பாகம் 5 ஏழாம் வகுப்பு வேற்றுமை தொகை அடைமொழி

குரூப் 4 தமிழ் இலக்கணம் பாகம் 5 ஏழாம் வகுப்பு வேற்றுமை தொகை அடைமொழி

வேற்றுமை 8 வகைப்படும் முதல்வேற்றுமை இரண்டாம் வேற்றுமை மூன்றாம் வேற்றுமை நான்காம் வேற்றுமை ஐந்தாம் வேற்றுமை ஆறாம் வேற்றுமை ஏழாம் வேற்றுமை எட்டாம் வேற்றும் இவற்றில் முதல் மற்றும் எட்டாம் வேற்றுமைக்கு உறுபு கிடையாது

முதல் வேற்றுமை எழுவாய் வேற்றுமை இதற்கு தனி உறுபு கிடையாது வினைப் பயனிலை பெயர்ப் பயனிலை வினாப் பயனிலை என மூன்று பயனிலையை கொண்டு முடியும்


இரண்டாம் வேற்றுமை இதன் உறுபு ஐ ஆகும் சீதையை கண்டேன் இவற்றில் ஐ என்பது மறைந்த வருகிறது
  
ராஜா புத்தகத்தை படித்தான் இவற்றில் ராஜ என்பது எழுவாய் புத்தகத்தை படித்தான் என பெயர் செல்லை ஐ உறுபு வந்து செய்யப்படும் பொருளாக வேறுபடுத்தி காட்டுவது இரண்டாம் வேற்றுமை

புத்தகம் என்பது பெயர்ச்சொல் இதனுடன் ஐ சேர்ந்து புத்தகத்தை என செய்யப்படும் பொருளாக வேறுபடுத்தி காட்டுவது இரண்டாம் வேற்றுமை எளிதாக புரியவேண்டுமானல் பெயர் சொல்லின் பொருளை செய்யப்படும் பொருளாக வேறுபடுத்தி காட்டுவது இரண்டாம் வேற்றுமைத் தொகை எனப்படும்

மூன்றான் வேற்றுமை தொகை இவற்றின் உருபு ஆல் ஆன் ஓடு, ஒடு, உடன்என வரும் தங்கம் கொல்லனால் செய்யப்பட்டது இவற்றில் ஆல் என வருவது மூன்றாம் வேற்றுமை

தந்தையோடு தாய் வந்தாள் இவற்றில் ஓடு வந்துள்ளத தாய்யொடு மகள் வந்தால் இவற்றில் ஒடு வந்துள்ளது தந்தையுடன் தம்பியும் வந்தான் இவற்றில் உடன் எனும் உருவு வந்துள்ளது இப்படி வந்தால் இவை மூன்றாம் வேற்றுமை தொகை 
துாங்குயான் ஓங்கு நடை இவற்றில் ஆன் வந்துள்ளது

நான்காம் வேற்றுமை உருபு கு என்ற எழுத்து வரும் அரசர் புலவர்க்கு பரிசு வழங்கினார் இவற்றில் புலவர்க்கு என்பதில் கு வந்துள்ளது இவை நான்காம் வேற்றுமை

ஐந்தாம் வேற்றுமை இல் இன்
கொடையில் சிறந்தவர் பாரி இந்தியாவின் தெற்கு எல்லை குமரி இவற்றில் ஐந்தாம் வேற்றுமை இல் இன் வந்துள்ளது

ஆறாம் வேற்றுமை அது ராமனது வீடு, எனது புத்தகம் இவற்றில் அது என்று உருபு வந்துள்ளது இவை ஆறாம் வேறுமை

7 ம் வேற்றுமை கண், உள், மேல் கீழ் எனபன உருபுகள் பெட்டிக்குள் பணம் இருக்கிறது இவற்றில் உள் வந்துள்ளது கூரையின்மேல் சேவல் உள்ளது இவற்றில் மேல் உள்ளது கட்டிலின் கீழ் நாய் படுத்துள்ளது இவற்றில் கீழ் என்று உள்ளது ராமனின்கண் இவற்றில் கண் இப்படி வரும் உருபு 7 ம் வேற்றுமை    
  
 8 ம் வேற்றுமை விளி வேற்றுமை கந்தா வா! இவற்றில் கந்தன் என்பது தா என நீண்டு ஒலிக்கிறது அதாவது பெயர் சொல் சில மாற்றங்களுடன் வரும் இவை விளி வேற்றுமை பொதுவாக விளி வேற்றுமை இறுதியில் ! ஆச்சர்ய குறி வரும் வந்தால் ஓரளவு 8 ம் வேற்றுமை என முடிவு பன்னலாம் உதாரணம் கண்ணா வா! இவ்றில் கண்ணன் வா என்பதில் பெயர் செல் சில மாற்றம் பெற்று நீண்டு ஒலித்து கண்ணா வா! என வருகிறத இவை 8 ம் வேற்றுமை இவற்றிற்கு உருபு இல்லை

கலைச்செல்வன்______முரித்தான் (கிளை) 2 பாடம் ______படிக்கப்பட்டது (இராமன்) 3 பாடல் எழுதிய ______ பரிசு கிடைத்தது(புலவர்) 4 செம்மொழி மாநடு _______பெருமையை எடுத்துரைத்தது (தமிழ்) 5 இது _______ சட்டை(கபிலன்) 6__ இலக்குமி பாடுகிறாள்.(மேடை) விடையளிக்க  


 அடைமொழி

கருமேகம் இவற்றில் கருப்பு என்பது அடை மொழி மேகம் பலவகையாக இருக்கலாம் ஒரு குறிப்பிட்ட அடைமொழியுடன் கூறுவது அவற்றை பிரித்துஅறிய முடியும் இவை அடை மொழி எனப்படும் வென்னிலா இவற்றில் வென்மை என வரும் இவை அடைமொழி

அடைமொழி இருவகை இனமுள்ள அடைமொழி இனமில்ல அடைமொழி
வென்னிலவு கருங்காக்கை செங்ககதிரேன் இவை இனமுள்ள அடைமொழி கருநிலவு வென்காக்கை கருங்கதிரேன் என கூறுவது இனமில்லா அடைமொழி    

குரூப் 4 ஏழாம் வகுப்பு இலக்கணம் பாகம் 6 மூவகை போலி பகுபதம் பகாபதம் அணி இலக்கணம்

குரூப் 4 ஏழாம் வகுப்பு இலக்கணம் பாகம் 6 மூவகை போலி பகுபதம் பகாபதம் அணி இலக்கணம்

போலி இவை மூன்று வகைப்படும் முதற்போலி இடைப்போலி கடைப்போலி

ஒரு சொல்லின் முதல் எழுத்து மாறுபட்டாலும் அதன் பொருள் மாறுபடாது இருப்பின் அது முதற் போலி ஆகும். எடு மஞ்சு -மைஞ்சு என வருவது ம-மை ஆக மாறிவிட்டது இவ்வாறு முதல் எழுத்து மாறிவருவது முதற் போலிஆகும்

ஒரு சொல்லின் இடையில் உள்ள எழுத்து மாறினாலும் பொருள் மாறுபடாது இருப்பது இடைபோலி ஆகும் எடு முரசு-முரைசு என மாறுபடுகிறத


கடை போலி என்பது இறுதி எழுத்து மாறுபட்டாலும் பொருளில் மாறுபாடு ஏற்படாதது இது கடை போலி ஆகும் எகா அறம்-அறன்

இது போக முற்று போலி உள்ளது ஐந்து-அஞ்சு என அனைத்து எழுத்துக்கள் மாறினாலும் பொருள் மாறமல் வருவது முற்றுபோலி ஆகும்

போலி என்பது ஒரு எழுத்து எழுத்து எங்கு மாறுபட்டாலும் அதன் பொருள் மாறாதது அகம் என்றால் உள்ளம் அகன்என்று திருவள்ளுவர் ஒரு குறளில் 7 ம் வகுப்பில் கூறியுள்ளார் அதுபோல முகம் என்பதற்கு முகம் என்று கூறியுள்ளார் பாருங்கள் இவ்வாறு பொருள் மாறாமல் கூறுவது போலி    

பகுபதம் பகா பதம்

பதம் சொல் மொழி கிளவி இவை அனைத்தும் ஒன்றை தான் குறிக்கும்

ஓரெழுத்து தனித்து நின்று பொருள் தந்தால் அது ஓரெழுத்து ஒரு மொழி எகா ( பூ தை ) ஒரெழுத்து ஒருமொழி 42 உள்ளது 

 சொற்கள் தொடர்ந்து வந்து பொருள் தருவது தொடர்மொழி  

ஒரு சொல்லை பிரித்தால் பொருள் தந்தால் அது பகுபதம் பிரித்தால் பொருள் தாரவிட்டால் அது பகா பதம்

நட வா போ நில் இவற்றை பிரித்தால் பொருள் தராது இவை பாகாபதம்

பகுபதம் பிரித்தால் பொருள்தரும்   பகுபத உறுப்புகள் 6 உள்ளது பகுதி விகுதி இடைநிலை,சந்தி  சாரிகை விகாரம் என உள்ளது  

அணி என்பது அழகு என்று பொருள் படும் இவை பலவகை உள்ளது செய்யுள்களை அழகுபடுத்த புலவர்கள் அணியை கையாண்டார்கள் இவற்றில் இயல்பு நாவிற்சி உயர்வு நாவிற்சி அணி என இரண்டு உள்ளது இயல்பாய் இருப்பதை இயல்பாய் கூறுவது இயல்பு நாவிற்சி அணி மலை விண்ணை தொடும் என மலையின் உயரத்தை வின்வெளி அளவுக்கு உயர்வாக கூறுவது உயர்வு நாவிற்சி அணி 

குரூப் 4 இலக்கணம் 8 ம் வகுப்பு குற்றியலுகரம் குற்றியலிகரம் முற்றியலுகரம்

 குரூப் 4 இலக்கணம் 8 ம் வகுப்பு குற்றியலுகரம் குற்றியலிகரம் முற்றியலுகரம்

குற்றியலுகரம்

 குறுமை +இயல்+உகரம் குற்றியலுகரம் உ என்ற ஓசை உடைய உகரம் குற்றியலுகரம்

குறிள் எழுத்துக்கு 1 மாத்திரை 
நெடில் எழுத்துக்கு 2 மாத்திரை

இவற்றில் உ குறிள் இவற்றிற்கு 1 மாத்திரை இவற்றில் 1 மாத்திரையின் அளவு வல்லின எழுத்துக்ளுடன் சேரும்போது அவை அரைமாத்திரையாக இந்த உ ஒலிக்கும் . இப்படி குறுகிய ஓசை உடைய உகரம் குற்றியலுகரம் ஆகும் 
  
வல்லினம் கசடதபற 
மெல்லினம் ஙஞனநமண 
இடையினம் யரலவளழ


இவற்றில் வல்லின மெய்கள் எழுத்துக்களின் மேல் ஊர்ந்து வரும் உகரம் குற்றியலுகரம் குசுடுதுபுறு எனப்படும்

1 உதாரணம்  நாகு காசு ஆடு மாது கோபு

நாகு இவற்றில் உள்ள எழுத்துக்கள் இதில் நா என்பது நா உயிர் மெய் நெட்டெழுத்து அதாவது ந்+ஆ=நா இவை நெடில் இதனுடன் கு எனும் குற்றியலுகரம் சேர்ந்து வந்துள்ளது இப்படி வருவது நெடில் தொடர் குற்றியலுகரம் இவை பொதுவாக இரண்டு எழுத்துக்கள் தான் வரும்

அதோ போல் ஆடு இவற்றில் ஆ உயிர் நெட்டெழுத்து இவற்றை தொடர்ந்து வரும் உகரம் ட்+உ=டு என வருவதால் இவை நெடில் தொடர் குற்றியலுகரம்


2 ஆய்த தொடர் குற்றிய லுகரம் என்பது எஃகு கஃகு ஆய்த எழுத்தை தொடர்ந்து வந்தால் ஆய்த தொடர் குற்றிய லுகரம்

3 வன்தொடர்(வல்லினத் தொடர்) மென் தொடர்(மெல்லின தொடர்) இடைத்தொடர்(இடையின தொடர்) குற்றிய லுகரம் பற்றி பார்ப்போம் 


வல்லினதொடர் குற்றிய லுகரம் சுக்கு கச்சு பட்டு இவற்றில் மேற்காணும் எழுத்துக்களில்  கசடதபற எனும் வல்லின எழுத்துக்கள்  உள்ளன இப்படி  வல்லின  மெய் எழுத்துக்களை தொடர்ந்து  வரும் குற்றியலுகரம் வன்றொடர் குற்றிய லுகரம் அல்லது வல்லினத் தொடர் குற்றியலுகரம் 

 சங்கு மஞ்சு நண்டு சந்து இவற்றில் முதல் இரண்டு எழுத்துக்களை பார்க்க வேண்டும் மூன்றாவது எழுத்து அவை வல்லின எழுத்துக்களாக(கு,சு,டு) இருந்தால் தான் அது குற்றிய லுகரமே அதனால் முதல் 2 எழுத்துக்களை பாருங்கள் இவை மெல்லின எழுத்துக்கள் அப்படிஎன்றால் இது மென்தொடர் குற்றிய லுகரம் அல்லது மெல்லின தொடர் குற்றியலுகரம்

கொய்து சார்பு மூழ்கு இவற்றில் இடை எழுத்தை மட்டும் பாருங்கள் ய்,ர்,பு இவை இடையினம் எனவே இவை இடையின குற்றியலுகரம் முதல் எழுத்து இறுதி எழுத்து எப்படி வேண்டுமானலும் வந்திருந்தாலும் இடை எழுத்தை மட்டும் பாருங்கள் இடையினத்தை அடுத்து வரும் உகரம் இடைத் தொடர் குற்றியலுகரம் அல்லது இடையின தொடர் குற்றிய லுகரம்

4 உயிர் தொடர் குற்றியலுகரம்
 பாலாறு அரசு அழகு இவை உயிர் தொடர் குற்றியலுகரம்
சரி பாலாறு இவை என்ன குற்றியலுகரம் உயிர் தொடர் குற்றியலுகரம்
எப்படி ப்+ஆ=பா , ல்+ஆ=லா, ற்+உ=று  இவற்றில் பா வல்லின எழுத்து லா என்ற எழுத்து இடையின எழுத்து இப்படி இரண்டு எழுத்தும் கலந்து வந்து மூனறாவதாக ஒரு எழுத்து வல்லினமாக அதான் குற்றியலுகரம்(று) வந்தால்(ஓ ஆ )எனும் உயிர் எழுத்தை தொடர்ந்து வருவதால் அவை உயிர் தொடர் குற்டிறிய லுகரம் எனலாம் 

உயிர்தொடரில்  பாலாறு இவற்றில் பா வல்லினம் லா இடையினம் இப்படிதான் இடையின எழுத்தில் கொய்து ( கொ வல்லினம் ய் இடையினம்) என்பது வந்துள்ளதை கவனிப்பீர் அப்படி என்றால் பாலாறு எப்படி உயிர்தொடர் என்றால் அங்கு இடையின மெய் எழுத்து வந்துள்ளதை கவனித்தால் இதன் வேறுபாடு புரியும் 


குற்றியலிகரம்

குற்றியலுகரம் தனது ஒலியில் இருந்து எப்படி 1 ல் இருந்து அரை மாத்திரையாக குறைந்து ஒலித்ததோ அப்படியே இவையும் குறைந்து ஒலிக்கும்

நிலைமொழி வரும் மொழி பற்றி தெரிந்து கொள்ளுங்கள் அப்போது தான் புரியும்
வீடு இவை என்ன குற்றியலுகரம் நெடில் தொடர் குற்றியலுகரம்

சரி வீடியாது வீடு நிலைமொழி அதற்கு வரும அடுத்த சொல் வரும் மொழி
யாது வருமொழி
வீடு இவற்றில் டு என்பது குற்றியலுகரம் வீடு என்பது நெடில் தொடர் குற்றியலுகரம் யாது என்பது இதனுடன் சேர்த்தால் எப்படி மாறுகிறது வீடியாது என்று மாறுகிறது உள்ளே நிகழ்ந்த மாற்றம் என்ன 

நிலைமெழி உகரம் வரும் மொழி இகரமாக மாறுவது குற்றியலிகரம்
அதேபோல் மியா என்ற சொல் வரும் மொழியாக வந்தால் அவையும் குற்றியலிகரம் ஆகும் கேன்மியா

குற்றியலிகரம் எடுத்துக்காட்டு= நாகியாது வீடியாது  

முற்றியலுகரம்     
குற்றியலுகரம் குற்றியலிகரம் தனக்கு உரிய மாத்திரையில் இருந்து குறைந்து ஒலிக்கும் 1 மாத்திரையில் இருந்து அரை மாத்திரையாக ஆனால் இவை குறைந்து ஒலிக்காது தனக்குரிய மாத்திரையில் ஒலிப்பது முற்றியலுகரம் 

பசு இவை என்ன 
பாசு என்று கொடுத்தால் நீங்கள் 2 எழுத்து இருக்கு நெடில் தொடர் குற்றியலுகரம் என்று போடுவீற்கள் ஆனால் இங்கு பசு என்று உள்ளது இவை வேறு குற்றியலுகரமும் இல்லை குற்றியலிகரமும் வரவில்லை அப்படி என்றால் இவை முற்றச்சம் என்று எளிதாக கூறிவிடலாம் 

காணு இவை என்ன  

சரி இதில் குசுடுதுபுறு வரவில்லை இப்படி வந்தால் இவை கண்னை மூடிக்கொண்டு முற்றியலுகரம் என்று போடலாம் மேலும் தங்கள் கருத்துக்களை இங்கு பதியவும் 
எழு தள்ளு உழு இவையும் முற்றியலுகரங்களே

தமிழ் இலக்கணம் : நிரல் நிறையணி.

தமிழ் இலக்கணம் : நிரல் நிறையணி.

விளக்கம்:
பெயரையோ,வினையையோ ஒரு வரிசைப்பட நிறுத்தி அவற்றோடுதொடர்புடையவற்றை பின்னர் அவ்வரிசை படக்கூறுவது நிரல்நிறையணிஎனப்படும்.
எடுத்துக்காட்டு:
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

பாடலில் உள்ள‌ அணிக்கான பொருத்தம்.

இப்பாடலில் அன்பையும்,அறனையும் ஒரு வரிசைப்படி நிறுத்தி,
அதற்கு தொடர்புடைய பொருள் கொண்ட பண்பையும்,பயனையும்
அடுத்த வரிசையில் நிறுத்தி பொருத்தமாகப் பொருள் காணப்பட்டுள்ளது.

இன்னும் விளக்கமாக உங்களுக்கு புரியும்படி சொல்லவெண்டுமென்றால்,ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....என்ற பாடலில்

அன்பெனும் குடையை நீட்டுகிறாய்.....
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்....

இந்தப் பாடலில் குடையை முதல் வரியில் கூறிவிட்டு,அதற்குத் தொடர்பானமழையை அடுத்த வரியில் பொருத்தமாக நிறுத்தி பொருள்காணப்பட்டுள்ளது.

பழைய பாடலில் இன்னொரு எடுத்துகாட்டு..
 பொன்னெழில் பூத்தது புதுவானில்..
வெண்பனி தூவும் நிலவே நில்...

வானத்தை பற்றி முதல் வரியில் கூறிவிட்டு,அடுத்த வரியில் அதற்குதொடர்பான நிலவை இணைத்து பொருத்தமாக கூறப்பட்டுள்ளது.
இந்த நிரல்நிறையணி 2 வகைப்படும்.
1.நேர் நிரல் நிறையணி

2.எதிர் நிரல் நிறையணி.