Tuesday, 24 November 2015

பெயரெச்ச மரபுகள்

பெயரெச்ச மரபுகள்


செய்யும் என்னும் வாய்பாட்டுச் சொற்கள் இடைப்பகுதி, இறுதிப்பகுதி திரிந்து வருதலும், குறிப்புமுற்று பெயரெச்சமாதலும், எதிர்மறைப் பொருளில் பெயரெச்சம் வருதலும், பெயரெச்சம் அடுக்கி வருதலும், பெயரெச்சத்தில் இடைப்பிறவரலும் ஆகிய பெயரெச்ச மரபுகள் குறித்து இனிக் காண்போம்.

 செய்யும் என்னும் வாய்பாடு - இடைதிரிதல்
செய்யும் என்னும் வாய்பாட்டில் அமையும் பெயரெச்சத்தின் இடையிலுள்ள உகரம் தான் ஊர்ந்துவரும் மெய்யுடன் சேர்ந்து கெடுவதும் உண்டு.
(எ.கா)போகும் போது-போம்போது
ஆகும் பொருள்-ஆம்பொருள்
கூவும் குயில்-கூங்குயில் (கூம்குயில்)
போகும், ஆகும், கூவும் எனும் சொற்களில் இடையில் வரும் குவ்வும் வுவ்வும் (கு = க்+உ, வு = வ்+உ) கெட்டன.
செய்யும் என்னும் வாய்பாட்டுச் சொற்களில் இடம்பெறும் ‘கு’, ‘வு’ என்னும் உயிர்மெய்கள் மட்டுமே இவ்வாறு கெடுவனவாகும். ஏனைய உயிர்மெய்கள் இங்ஙனம் கெடுவதில்லை. ‘பாடும் பாட்டு’ என்பது (‘டு’ என்னும் உயிர்மெய் கெட்டு) ‘பாம் பாட்டு’ என வருவதில்லை.
 செய்யும் என்னும் வாய்பாடு - இறுதி திரிதல்
செய்யும் என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சத்தின் இறுதியாகிய ‘உம்’ விகுதி, செய்யுளில் ‘உந்து’ எனத் திரிந்து வருவதும் உண்டு.
(எ.கா)தெண்கடல் திரைமிசைப் பாயுந்து
நீர்க்கோழி கூப்பெயர்க்குந்து
 குறிப்பு வினைமுற்று பெயரெச்சமாதல்
குறிப்பு வினைமுற்று, சில இடங்களில் தன்னை அடுத்துவரும் பெயருக்கு உரிய பெயரெச்சமாக மாறுபட்டுப் பொருள்படுவதும் உண்டு. வடிவத்தால் குறிப்பு வினைமுற்றாக இருப்பினும், பொருளால் பெயரெச்சமாக அமையும்.
(எ.கா)
வெந்திறலினன் விறல்வழுதியொடு
இங்கு, ‘வெந்திறலினன் ஆகிய விறல்வழுதி எனப் பொருள்பட்டு, குறிப்பு வினைமுற்று பெயரெச்சமானது.
எதிர்மறைப் பெயரெச்சம்
பெயரெச்சம், நிகழ்ச்சி நடத்தலாகிய உடன்பாட்டுப் பொருளில் வருவதை இதுவரையில் கண்டோம். நிகழ்ச்சி நடவாமையாகிய எதிர்மறைப் பொருளில்வரும் தன்மையும் பெயரெச்சத்திற்கு உண்டு.
இது, காலம் காட்டுவதில்லை. முக்காலத்திற்கும் பொதுவானதாக அமையும்.
(எ.கா)பெய்யாத மழை
சொல்லாத சொல்
வீசாத தென்றல்
பெய்+ஆ+த்+அ - பெய்யாத. இதில் உள்ள 'ஆ' என்பது எதிர்மறை இடைநிலை. 'அ' பெயரெச்ச விகுதி.
• ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
எதிர்மறைப் பெயரெச்சத்தில் வரும் அகர விகுதி, தான் ஊர்ந்துவரும் தகர மெய்யுடன் (த்) சேர்ந்து மறைந்து வருவது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் எனப்படும்.
(எ.கா)பெய்யா மழை
பேசாப் பேச்சு
உலவாத்தென்றல்
பெய்யாத, பேசாத, உலவாத என வரவேண்டியன, (த்+அ=த) த என்ற ஈறு மறைந்து பெய்யா, பேசா, உலவா என வந்தன.
பெயரெச்சம் அடுக்கி வருதல்
ஒவ்வொரு பெயரெச்சமும் ஒவ்வொரு பெயரைக் கொண்டு முடிவது முறை. ஆனால், ஒன்றுக்கு மேற்பட்ட பெயரெச்சங்கள் அடுக்கி வந்து, இறுதியில் உள்ள எச்சம் கொண்டு முடியும் பெயரையே ஏனைய எச்சங்களும் கொண்டு முடிவதும் உண்டு.
தெரிநிலைப் பெயரெச்சம், குறிப்புப் பெயரெச்சம் ஆகிய இரண்டுமே அடுக்கி வருவனவாகும்.
(எ.கா)தெரிநிலைப் பெயரெச்சம்-கற்ற கேட்ட பெரியார்
குறிப்புப் பெயரெச்சம்-நெடிய பெரிய மனிதர்
பெயரெச்சத்தில் இடைப் பிறவரல்
பெயரெச்சத்திற்கும், அது கொண்டுமுடியும் பெயர்ச் சொல்லுக்கும் இடையில், பொருள் பொருத்தம் உடையனவாக வரும் பிறசொற்களும் ஏற்றுக் கொள்ளப்படும். இது இடைக்கிடப்பு அல்லது இடைப் பிறவரல்எனப்படும்.
(எ.கா)வந்த மன்னன் - வந்த வடகாசி மன்னன்
கொல்லும் யானை - கொல்லும் காட்டுள் யானை

வடகாசி, காட்டுள் என வந்தவை இடைப் பிறவரலாகும்.

தன்மைப் பன்மை வினைமுற்று

தன்மைப் பன்மை வினைமுற்று

உண்டோம் நாங்கள்
நடக்கிறோம் நாங்கள்
உண்டோம், நடக்கிறோம் எனும் வினைமுற்றுகள் ஒருமை அல்ல, பன்மை என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். பன்மையில் இவை உயர்திணையா அஃறிணையா? இவை இருதிணைக்கும் பொதுவானவை.
உண்டோம், நடக்கிறோம் என உயர்திணைப் பொருள்களும் பேசலாம்; ஆடுமாடுகள் போன்ற அஃறிணைப் பொருள்கள் பேசுவதாகவும் இலக்கியம், கதை படைக்கலாம். தன்மை ஒருமை வினைமுற்று ஆண்பால், பெண்பால், அஃறிணை ஒருமை ஆகிய மூன்றுக்கும் பொதுவாக இருப்பதை முன்பு கண்டோம். அதுபோலவே தன்மைப் பன்மையும் உயர்திணை அஃறிணை ஆகிய இரண்டுக்கும் பொதுவாக வரும். அதாவது பலர்பால் பன்மைக்கும் (உயர்திணைப் பொருள்கள்) பலவின்பால் பன்மைக்கும் (அஃறிணைப் பொருள்கள்) தன்மைப் பன்மை வினைமுற்று பொதுவாக வரும்.
தன்மை ஒருமை வினைமுற்றைப் போலத் தன்மைப் பன்மை வினைமுற்றும் செயல், காலம், செயல் செய்தவர் என்ற மூன்றைக் குறிக்கும்
(1)வினைப் பகுதி-செயலை உணர்த்தும்
(2)காலங்காட்டும் இடைநிலை-காலம் உணர்த்தும்
(3)விகுதி-செயல் செய்தவர் அல்லது செய்தவைகளைக் குறிக்கும்.
(எ.கா)
உண்டோம் உண்+ட்+ஓம்
உண் - வினைப்பகுதி
ட் - இறந்தகாலம் காட்டும் இடைநிலை
ஓம் - விகுதி

2.3.1 தெரிநிலை வினைமுற்று
தன்மைப் பன்மைத் தெரிநிலை வினைமுற்று, காலத்தை வெளிப்படையாகக் காட்டும்.
(எ.கா)
பிறந்தோம்-இறந்த காலம்-த்இடைநிலை
வாழ்கிறோம்-நிகழ் காலம்-கிறுஇடைநிலை
படிப்போம்-எதிர் காலம்-ப்இடைநிலை
இவ்வாறு இடைநிலைகள் அமைந்த தன்மைப்பன்மை வினைமுற்றுகளே தெரிநிலை வினைமுற்றுகள் ஆகும்.
இவ்வினைமுற்றுச் சொற்களில் தன்மைப் பன்மையை உணர்த்துவன விகுதிகளாகும். இன்றைய தமிழில் ‘ஓம்’ என்னும் விகுதியே தன்மைப் பன்மையைக் குறிக்க மிகுதியாகப் பயன்படுகிறது. ஆனால் பழங்காலத்தில், இந்த ‘ஓம்’ விகுதி குறிக்கும் பொருளில் அம், ஆம், எம், ஏம் ஆகிய விகுதிகளும் பயன்பட்டுள்ளன. (உண்டனம், உண்டாம், உண்டனெம், உண்டேம்) இவை எல்லாச் சொற்களுக்கும் ‘உண்டோம்’ என்பதுதான் பொருள்.
தன்மைப் பன்மையில் தெரிநிலை வினைமுற்றுகள் இவ்வாறு வரும் எனப் பார்த்தோம். அடுத்து, குறிப்பு வினைமுற்றுகள் பற்றிக் காண்போம்.

2.3.2 குறிப்பு வினைமுற்று
தன்மை ஒருமைக் குறிப்பு வினைமுற்றுப் பற்றி முன்பு கண்டவற்றை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். பன்மை வினைமுற்றுக்கும் அவ்விலக்கணம் பொருந்தும். பேசுபவரின் குறிப்பு அல்லது தொடரில் உள்ள குறிப்புக் கொண்டு குறிப்பு வினை முற்றின் காலம் இன்னது என உணரலாம்.
நல்லோம் யாம்’ என்பது சூழ்நிலையை ஒட்டி நாம் நேற்று நல்லோம், நாம் இன்று நல்லோம், நாம் நாளை நல்லோம் எனப்பொருள் தரும். இவ்வாறு வருவது தன்மைப் பன்மைக் குறிப்பு வினைமுற்று.
தெரிநிலை வினைமுற்றுச் சொற்களில் தன்மைப் பன்மைக்குக் கூறப்பெற்ற ஐந்து விகுதிகளும் குறிப்பு வினைமுற்றுச் சொற்களிலும் வரும்.
நல்லோம்யாம்-ஓம்விகுதி
நல்லம்யாம்-அம்விகுதி
நல்லாம்யாம்-ஆம்விகுதி
நல்லெம்யாம்-எம்விகுதி
நல்லேம்யாம்-ஏம்விகுதி
இன்றைய வழக்கில் இருப்பது ‘ஓம்’ விகுதி மட்டுமே.

உவமையால் விளக்கப்படும் பொருள்

உவமையால் விளக்கப்படும் பொருள்:

  • கறையான் புற்றெடுக்கக் கருநாகம் குடி புகுந்தது போல் = அத்துமீறல்
  • அச்சில் வார்த்தாற் போல் = ஒரே சீராக
  • அவளை நினைத்து உரலை இடித்தாற் போல் = கவனம்
  • அரை கிணறு தாண்டியவன் போல் = ஆபத்து
  • இடி விழுந்த மரம் போல் = வேதனை
  • உமையும், சிவனும் போல் = நெருக்கம், நட்பு
  • ஊமை கண்ட கனவு போல் = தவிப்பு, கூற இயலாமை
  • எட்டாப்பழம் புளித்தது போல் = ஏமாற்றம்
  • ஏழை பெற்ற செல்வம் போல் = மகிழ்ச்சி
  • கயிரற்ற பட்டம் போல் = தவித்தல், வேதனை
  • கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் = துன்பம், வேதனை
  • தொட்டனை தூறும் மணற்கேணி = அறிவு
  • உடுக்கை இழந்தவன் கைபோல் = நட்பு, உதவுதல்
  • நீரின்றி அமையாது உலகெனின் = ஒழுக்கம் இராது, ஒழுக்கு
  • தோன்றின் புகழோடு தோன்றுக = தோன்றாமை நன்று
  • வரையா மரபின் மாரி போல் = கொடுக்கும் தன்மை
  • பகல்வெல்லும் கூகையைக் காக்கைப் போல் = எளிதில் வெல்லுதல்
  • ஒருமையுள் ஆமை போல் = அடக்கம்
  • ஊருணி நீர் நிறைதல் = செல்வம்
  • மருந்தாகி தப்பா மரம் = தீர்த்து வைத்தல்
  • செல்வற்கே செல்வம் தகைத்து = அடக்கம்
  • பாராங்கல் மீது விழும் மழைநீர் போல் = சிதறிப்போதல்
  • மடவார் மனம் போல் = மறைந்தனர்
  • அகழ்வாரை தாங்கும் நிலம் போல் = பொறுமை, பொறுத்தல்
  • அத்தி பூத்தாற் போல் = அறிய செல்வம்
  • அனலில் இட்ட மெழுகு போல் = வருத்தம், துன்பம்
  • அலை ஓய்ந்த கடல் போல் = அமைதி, அடக்கம்
  • அழகுக்கு அழகு செய்வது போல் = மேன்மை
  • அடியற்ற மரம் போல் = துன்பம், விழுதல், சோகம்
  • இஞ்சி தின்ற குரங்கு போல் = துன்பம், வேதனை
  • இடி ஓசை கேட்ட நாகம் போல் = அச்சம், மருட்சி, துன்பம்
  • இழவு காத்த கிளி போல் = ஏமாற்றம், நினைத்தது கை கூடாமை
  • உயிரும் உடம்பும் போல் = ஒற்றுமை, நெருக்கம், நட்பு
  • உள்ளங்கை நெல்லிக்கனி போல் = தெளிவு
  • ஊசியும் நூலும் போல் = நெருக்கம், உறவு
  • எலியும் பூனையும் போல் = பகை, விரோதம்
  • எரிகின்ற நெய்யில் எண்ணெய் ஊற்றினார் போல் = வேதனையைத் தூண்டுதல்
  • ஒருநாள் கூத்திற்கு மீசை சிரைத்தாற் போல் = வெகுளித்தனம், அறியாமை
  • கல்லுப்பிள்ளையார் போல் = உறுதி, திடம்
  • சுதந்திர பறவை போல் = மகிழ்ச்சி, ஆனந்தம்
  • கடல் மடை திறந்தாற் போல் = விரைவு, வேகம்
  • கடலில் கரைத்த பெருங்காயம் போல் = பயனற்றது, பயனின்மை
  • கடன் பட்டான் நெஞ்சம் போல் = மனவருத்தம், கலக்கம்
  • காட்டாற்று ஊர் போல் = அழிவு, நாசம்
  • கிணற்றுத் தவளை போல் = அறியாமை, அறிவின்மை
  • கிணறு வேட்ட பூதம் பிறந்தது போல் = அதிர்ச்சி, எதிர்பாரா விளைவு
  • குன்று முட்டிய குருவி போல் = வேதனை, துன்பம், சக்திக்கு மீறிய செயல்
  • குடடி போட்ட பூனை போல் = பதட்டம், அழிவு, துன்பம்
  • சாயம் போன சேலை போல் = பயனின்மை
  • சூரியனை கண்ட பணி போல் = மறைவு, ஓட்டம்

PGTRB TNPSC TET வாக்கிய வகைகள்

PGTRB TNPSC TET வாக்கிய வகைகள்

கருத்து வகையில் வாக்கியங்கள் நான்கு வகைப்படும். அவை:
1) செய்தி வாக்கியம்
2) கட்டளை வாக்கியம்
3) வினா வாக்கியம்

4) உணர்ச்சி வாக்கியம்
செய்தி வாக்கியம் என்பது, கூற வந்த செய்தியைத் தெளிவாகக்
கூறுவதாகும்.
(எ.டு)  திருவள்ளுவர் திருக்குறளை எழுதினார்.
கட்டளைவாக்கியம் என்பது, முன்னால் நிற்பவரை ஒரு செயலைச் செய்ய ஏவுவதாகும்.
(எ.டு) திருக்குறளைப் படி
வினா வாக்கியம் என்பது, ஒருவரிடம் ஒன்றை வினவுவதாக அமைவதாகும்.
(எ.டு.) திருக்குறளை எழுதியவர் யார்?
உணர்ச்சி வாக்கியம் என்பது, வியப்பு, அச்சம் முதலிய உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதாக அமைவதாகும்.
(எ.டு) என்னே ! திருக்குறளின் பொருட் சிறப்பு.

வாக்கியங்களை அமைப்பு வகையில் மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை,
1) தனி வாக்கியம்
2) தொடர் வாக்கியம்
3) கலவை வாக்கியம்
தனி வாக்கியம் என்பது, ஓர் எழுவாயோ பல எழுவாய்களோ பெற்று ஒரு பயனிலையைக் கொண்டு முடிவதாகும்.
(எ.டு.)
பாரி வந்தான்.
பாரியும் கபிலனும் வந்தனர்.
தொடர் வாக்கியம் என்பது, ஒன்றுக்கு மேற்பட்ட பயனிலைகளைப் பெற்றுவரும் வாக்கியமாகும்.
(எ.டு.) தமிழரசி போட்டியில் பங்கேற்றாள்; வெற்றி பெற்றாள்; பரிசு பெற்றாள்.
கலவை வாக்கியம் என்பது, முற்றுத் தொடராக அமைந்த ஒரு முதன்மை வாக்கியமும் எச்சத் தொடர்களாக அமைந்த பல துணை வாக்கியங்களும் கலந்து வரும் வாக்கியமாகும்.
(எ.டு.)
தமிழ் இலக்கியங்களை ஆழ்ந்து கற்று, அதன்வழி நடந்து, வாழ்க்கையில் முன்னேற அனைவரும் முயல வேண்டும்.
வாக்கியங்களில் வினைகள், முற்றாகவோ எச்சமாகவோ இடம்பெறுகின்றன. அவ்வினைகளின் அடிப்படையில் அவற்றைப் பெற்று வரும் வாக்கியங்கள் பெயர் பெறுகின்றன. இவ்வாக்கியங்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
1) உடன்பாட்டு வினை / எதிர்மறை வினை வாக்கியங்கள்
2) செய்வினை / செயப்பாட்டு வினை வாக்கியங்கள்
3) தன்வினை / பிறவினை வாக்கியங்கள்
1) உடன்பாடு / எதிர்மறை வினை வாக்கியங்கள் 
இவ்வகை வாக்கியங்களில் இடம்பெறும் வினைகள் உடன்பாட்டில் உள்ளனவா எதிர்மறையில் உள்ளனவா என்பதைக் கொண்டு இவ்வாக்கியங்கள் பெயர் பெறுகின்றன.
(எ.டு.)
உடன்பாட்டு வினை-காந்தியை அனைவரும் அறிவர்.
எதிர்மறை வினை-காந்தியடிகளை அறியாதார் இலர்.

2) செய்வினை / செயப்பாட்டுவினை வாக்கியங்கள்
இவ்வகை வாக்கியங்களில் இடம்பெறும் வினைகள் செய்வினைக்கு உரியனவா செயப்பாட்டுக்கு உரியனவா என்பதைக் கொண்டு இவ்வாக்கியங்கள் பெயர்பெறுகின்றன.
(எ.டு.)
செய்வினை-பேகன் போர்வை அளித்தான்.
செயப்பாட்டுவினை-பேகனால் போர்வை அளிக்கப்பட்டது.
3) தன்வினை / பிறவினை வாக்கியங்கள்
இவ்வகை வாக்கியங்களில் இடம்பெறும் வினைகளை எழுவாயே செய்கிறதா அல்லது தான் வினையாற்றாமல் பிறரை அவ்வினை செய்யத் தூண்டுகிறதா என்பதைக் கொண்டு இவ்வாக்கியங்கள் பெயர் பெறுகின்றன.
(எ.டு.)
தன் வினை-பாரி உண்டான்
பிற வினை-பாரி உண்பித்தான்

முதல் வாக்கியத்தில் பாரி என்னும் எழுவாய் உண்ணும் செயலைச் செய்வதால் அது தன்வினை வாக்கியமாகிறது.
இரண்டாம் வாக்கியத்தில் உண்ணும் செயலை வேறு யாரோ செய்ய எழுவாய் துணைசெய்வதாக உள்ளதால் அது பிறவினை வாக்கியமாகிறது.

தமிழில் உள்ள தொகைச் சொற்கள்

தமிழில் உள்ள தொகைச் சொற்கள்

இருமை        -    இம்மை, மறுமை
இருவினை    -    நல்வினை, தீவினை
இருதிணை    -    உயர்திணை, அஃறிணை
இருசுடர்        -    ஞாயிறு, திங்கள்
ஈரெச்சம்        -    வினையெச்சம், பெயரெச்சம்
மூவிடம்        -    தன்மை,முன்னிலை, படர்க்கை
முந்நீர்        -    ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர்
முப்பால்        -    அறத்துப்பால், பொருட்பால்,   காமத்துப்பால்
முத்தமிழ்    -    இயற்றமிழ், இசைத்தமிழ்,  நாடகத்தமிழ்
முக்காலம்    -    இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்
மூவேந்தர்    -    சேரன், சோழன், பாண்டியன்
முக்கனி    -    மா, பலா, வாழை
நான்மறை    -    ரிக், யசூர், சாம, அதர்வணம்

நாற்குணம்    -    அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு
நாற்படை    -    தேர், யானை, குதிரை, காலாள்
நாற்றிசை    -    கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, நாற்பால்

தமிழ் இலக்கணம் - உரிச்சொல்

தமிழ் இலக்கணம் - உரிச்சொல்

உரிச்சொல் என்பதை உரி + சொல் எனப் பிரித்துப் பார்க்க வேண்டும். உரி என்பது உரிய (உரிமை) என்ற பொருளைத் தருவதாகும். உரிச்சொல் எதற்கு உரியது என்றால் செய்யுளுக்கு உரியதாகும். உரிச்சொற்கள் பெரும்பாலும் பேச்சு வழக்கில் பயின்று வராத சொற்களாகும்.

உரிச்சொல் பெயருக்கும் வினைக்கும் உரியசொல் என்றும் கூறுவார்கள். உரிச்சொல் பெயருக்கும் வினைக்கும் அடையாக வருவதோடு அவற்றின் பண்பையும் விளக்கி நிற்கும்.
உரிச்சொல்லின் பொது இலக்கணம்

உரிச்சொல்லின் பொது இலக்கணத்தை நன்னூலார்

பல்வகைப் பண்பும் பகர்பெயர் ஆகி
ஒரு குணம் பலகுணம் தழுவிப் பெயர் வினை
ஒருவா செய்யுட்கு உரியன உரிச்சொல்

என்று (நூற்பா 442) குறிப்பிடுகின்றார்.

1. உரிச்சொல் என்பது பல்வேறு வகைப்பட்ட பண்புகளையும் உணர்த்தும் பெயர் ஆகும்.
2. ஒரு சொல் ஒரு பண்பை உணர்த்தலாம்; ஒரு சொல் பல பண்புகளையும் உணர்த்தலாம்.
3. உரிச்சொல், பெயர்ச் சொற்களோடும் வினைச் சொற்களோடும் சேர்ந்து அவற்றின் பண்பை உணர்த்த வரும்.
4. உரிச்சொல் செய்யுளுக்கு உரிய சொல்லாக வரும்.

எடுத்துக்காட்டு:

நனி பேதை    

நனி எனும் உரிச்சொல் பேதை எனும் பெயர்ச்சொல்லோடு சேர்ந்து வந்தது.
நனி = மிகுதி,
பேதை = அறிவற்றவன்

சாலத் தின்றான்    

சால எனும் உரிச்சொல் தின்றான் எனும் வினைச்சொல்லோடு சேர்ந்து
வந்தது.

சால = மிகவும்

மல்லல் ஞாலம்    
   
மல்லல் எனும் உரிச்சொல் வளம் எனும் ஒரு பண்பை உணர்த்தும்

கடி மலர்    

கடி எனும் உரிச்சொல் முறையே மணம் மிக்க மலர்,

கடி நகர்    

நகர் காவல் மிக்க நகர் எனப் பல பண்புகளை உணர்த்துகிறது.
உரிச்சொல் உணர்த்தும் பண்புகள்

உரிச்சொல் உணர்த்தும் பண்புகள் இரண்டு ஆகும்.

அவை : 1.     குணப் பண்பு     2. தொழிற் பண்பு

உரிச்சொல் பலவேறு பண்புகளை உணர்த்தும் என முன்னர்க்
கண்டோம். அவற்றுள் பொருளின் பண்புகளை உணர்த்துவது
குணப்பண்பு ஆகும்.

எடுத்துக்காட்டு:

மாதர் வாள் முகம்

இங்கு மாதர் எனும் உரிச்சொல் விருப்பம் எனும் குணத்தை
உணர்த்துகிறது.

(மாதர்= விரும்பத்தக்க, வாள் முகம் = ஒளிமிக்க முகம்)

இமிழ் கடல் = இங்கு இமிழ் எனும் உரிச்சொல் ஒலித்தல்
எனும் தொழிற்பண்பை உணர்த்துகிறது.

Friday, 20 November 2015

கிராம நிர்வாக அலுவலர் தேர்வு வினா விடைகள்

கிராம நிர்வாக அலுவலர் தேர்வு வினா விடைகள்

 
முதன் முதலாக எத்தனை கிராம நிர்வாக அலுவலர்கள் மாநில அளவில் நியமிக்கப்பட்டனர்?
12,506

கிராம நிர்வாக அலுவலர் பதவி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைக் குழுவின் கட்டுப்பாட்டில் எப்பொழுது வந்தது?
12.12.1980

எந்த அரசு ஆணையின் படி கிராம நிர்வாக பணி தமிழ்நாடு  அரசுப் பணியாளக் தேர்வாணையிக் குழுவின் கட்டுப்பாட்டில் வந்தது?
அரசு ஆணை எண் 2747


கிராம நிர்வாக அலுவலர்களின் தகுதியாக அரசு நிர்ணயம் செய்த தகுதி எது?
எஸ். எஸ். எல். சி தேர்ச்சி

அதற்கான அரசு ஆணை என்ன?
அரசு ஆணை எண் - 1287

கிராமத் தலையாரி மற்றும் வெட்டியான் நிர்க்கட்டி போன்றோர் எப்போது நிரந்தர பணியமைப்பின் கீழ் கொண்டு வரப்பட்டு கிராம உதவியாளர்கள் என்ற பணியிடங்கள் தோற்று விக்கப்படடன? 
6.7.1995

கிராம உதவியாளர்கள் என்ற பணி எந்த ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது?
1995-ல்

கிராம உதவியாளர்களின் பணி எந்த ஆண்டு வரையறுக்கப்பட்டது?
17.6.1998

கிராம நிர்வாக அலுவலர்கள் எங்கு தங்கிப் பணியாற்ற வேண்டும்?
பொறுப்புக் கிராமத்தில்

கிராமக் கணக்குகள் எங்கு வைத்துப் பராமரிக்க வேண்டும்?
கிராம நிர்வாக அலுவலகத்தில்

பயிராய்வு எப்போது செய்ய வேண்டும்?
ஒவ்வொரு மாதமும்

பிறப்பு இறப்புக் கணக்குப் பராமரிப்பது யாருடைய பணி?
கிராம நிர்வாக அலுவலர்

வாக்களர் பட்டியல் திருத்தம் குறித்த விபரங்களை யாருக்கு அளிக்க வேண்டும்?
வட்டாட்சியர்

கிராம நிர்வாக அலுவலர் நாட்குறிப்பு பராமரிக்க வேண்டும் எனக் கூறும் அரசு ஆணை எண் யாது?
அரசு ஆணை எண் 212 (29.4.1999)

கிராம நிர்வாக அலுவலகத்தில் எத்தனை மணியிலிருந்து  கட்டாயமாக இருக்க வேண்டும்?
10.00 மணிமுதல் 12 மணி வரை

கிராம நிர்வாக அலுவலர்கள் பணி மற்றும் கடமைகள் பற்றிய அரசாணை எது?
எண் 581 நாள் (3-4-1987)

கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற சிட்டா மற்றும் அடங்கல் நகல் யாரிடம் பெற வேண்டும்?
கிராம நிர்வாக அலுவலரிடம்

பிறப்பு இறப்பு பதிவேட்டைப் பராமரிப்பவர் யார்?
கிராம நிர்வாக அலுவலர்

இருப்புப்பாதை கண்காணிப்பிற்கு யார் ஏற்பாடு செய்ய வேண்டும்?
கிராம நிர்வாக அலுவலர்

கிராம ஊழியர்களின் சம்பளப் பட்டியல் தயாரிக்கும் பொறுப்பு யாருடையது?
கிராம நிர்வாக அலுவலர்

கால்நடைச் சாவடிகளின் கணக்கு யாரால் பராமரிக்கப்படுகிறது?
கிராம நிர்வாக அலுவலர்

கிராம அதிகாரியின் மிக முக்கியமான கடமை எது?
நில ஆக்கிரமிப்புக்களைத் தடுப்பது மற்றும் மேல் அலுவலர்களுக்கு தெரிவித்து உடனடி நடவடிக்கை எடுப்பது.