Thursday, 4 June 2015

TNPSC பொது அறிவு வினா-விடைகள்-4


TNPSC பொது அறிவு வினா-விடைகள்-4

1. உலகப்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம்பெறாத வீரர்
ரோகித் சர்மா

2. ஸ்பெக்ட்ரம் அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்த நீதிபதி
சிவராஜ்.வி.பாட்டீல்

3. சமீபத்தில் எந்த நாட்டில் அதிபருக்கு எதிராக மக்கள் புரட்சியில் ஈடுபட்டுள்ளனர்?
எகிப்து

4. மத்திய விமான போக்குவரத்து அமைச்சராக புதிதாக பொறுப்பேற்றுள்ளவர்
வயலார் ரவி

5. ஆஸி., ஓபன் டென்னிஸ் 2011 பெண்கள் ஒற்றையர் சாம்பியன் வென்றவர்?
கிளைஸ்டர்ஸ்

6. புதுச்சேரி காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய முன்னாள் முதல்வர் யார்?
ரங்கசாமி

7. எந்த மைதானத்தில் நடைபெறவிருந்த உலககோப்பை போட்டி மாற்றப்பட்டது?
ஈடன் கார்டன் மைதானம் 


8. குடியரசு தினத்தையொட்டி தேசிய கொடி ஏற்றுவதில் சர்ச்சைக்கு உள்ளான இடம்
லால்சவுக்

9. ஏ.ஆர்.ரஹ்மான் மீண்டும் ஆஸ்கருக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள படம்
127 ஹவர்ஸ்

10. நிரூபமா ராவ் எதற்காக அண்மையில் இலங்கை அதிபரை சந்தித்தார்
மீனவர் பிரச்னை

11. கிரிக்கெட்டில் இந்தியா எந்த ஆண்டு உலககோப்பை வென்றது
1983

12. ஒட்டக சிவிங்கி எந்த அறிவியல் குடும்பத்தைச் சேர்ந்தது
ஜிராபிடே

13. மகாத்மா காந்தி நினைவு தினம்
ஜனவரி 30

14. சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி
எம்.ஒய்.இக்பால்

15. தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் (2010)
பூங்கோதை

TNPSC பொது அறிவு வினா-விடைகள்-III

TNPSC பொது அறிவு வினா-விடைகள்-III

1.நிகற்புகம் எனப்படுவது எத்தனை ?
2.அருணகிரிநாதர் எந்த ஊரில் அவதரித்தார் ?
3.கம்பளிக்காக வளர்க்கப்படும் அடுகளுக்கு பெயர் என்ன ?
4.உலக அமைதிக்கான நோபல் பரிசு யாரால் சிபாரிசு
 செய்யப்படுகிறது ?
5.’கருடா’ என்ற பெயர் கொண்ட விமானசேவை எந்த நாட்டில்
 இருந்து இயங்குகிறது ?

6.வெங்காயத்தில் அதிகமுள்ள வைட்டமின் எது ?

7.மனிதனைப்போல் தலையில் வழுக்கை விழும் குரங்கு எது ?
8.முதல் மோட்டார் ரோடுரோலர் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது?
9.’செலினியம் செல்’ என்ற போட்டோ முறையை
  கண்டுபிடித்தவர் யார் ?
10.உயிரியல் கவிஞர் என்றழைக்கப்படுபவர் யார் ?
பதில்கள்:
1.100 கோடி, 2.திருவண்ணாமலை,3.மரினோ,
4.நார்வே அரசு,5.இந்தோனேஷியா,6.வைட்டமின் ‘பி’,
7.ஆண் குரங்கு,8.இங்கிலாந்து,9.1எர்னஸ்ட் வெர்னர்
10.சர் ஜெகதீஸ் சந்திர போஸ்.
------------------------------------------
1.திருவள்ளுவரின் மனைவி பெயர் என்ன ?
2.செஞ்சிக்கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது ?
3.ஜப்பான் மீது வீசப்பட்ட முதல் அணுகுண்டு எது ?
4.ஆப்கானிஸ்தானின் தலைநகரம் எது ?
5.இந்திய தேசியக்கொடியில் காவி நிறம் எதைக் குறிக்கின்றது ?
6.’நிக்கல்’ உலோகத்தை கண்டறிந்தவர் யார் ?
7.போர்ஸின் கோபுரம் எங்குள்ளது ?

8.அயோடின் நம் உடலில் எந்தெந்த இடத்தில் உள்ளது ?
9.’சகமா’ எனப்படும் அகதிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் ?
10.’தி கைடு ‘ என்ற நூலின் ஆசிரியர் யார் ?
பதில்கள்:
1.வாசுகி, 2.விழுப்புரம், 3.லிட்டில்பாய்,
4.காபூல்,5.தியாகம், 6.கிரான்ஸ்டட்,7.நாங்கிங்,
8.தைராக்ஸின்,9.பங்காளதேஷ்,10.கே.ஆர்.நாராயணன்
------------------------------------
1.இந்தியாவின் ’மாக்கிய வெல்லி’என்று அழைக்கப்பட்டவர் யார்?
2.எகிப்திய நாகரிகம் எங்கு தோன்றியது ?
3.அசோகரின் கல்வெட்டுக்கள் பெரும்பாலும் எந்த எழுத்துக்களில்
 எழுதப்பட்டிருக்கின்றன ?
4.ஒரு மின்னலின் சராசரி நீளம் என்ன ?
5.பாம்புகளே இல்லாத கடல் எது ?
6.பென்சில் தயாரிக்கப்பயன்படும் மூலப்பொருட்கள் எவை ?
7.காளான்களில் எத்தனை வகைகள் உள்ளது ?
8.கங்கையும் யமுனையும் கூடும் இடம் எது ?
9.ஒருவர் மிகக்குறைந்த ஒலியை எங்கு கேட்க முடிகிறது ?
10.மக்கள் தொகையில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக
  உள்ள மாநிலம் எது ?
பதில்கள்:
1.சாணக்கியர்,2.நைல் நதிக்கரையில்,3.பிராமி,4.6 கி.மீ,
5.அட்லாண்டிக் கடல்,6.  காரியம் , களிமண், மரக்கூழ்,
7.70 ஆயிரம் வகைகள்,8.அலகாபாத்,9.பாலைவனத்தில்,
10.கேரளா.

TNPSC பொது அறிவு வினா-விடைகள்-II

TNPSC பொது அறிவு வினா-விடைகள்-II

1.முதன் முதலில் பத்மஸ்ரீ விருதை பெற்றவர் யார் ?

2.கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் யார் ?

3.சூரிய உதயத்தை முதலில் பார்ப்பவர்கள் யார் ?

4.இந்தியாவில் வருமானவரி எந்த ஆண்டு வந்தது ?

5.பூமி சூரியனுக்கு அருகில் இருக்கும் நாள் எது ?

6.கங்கை உற்பத்தி ஆகும் இடம் எது ?

7.அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது ?

8.கலர் பிலிம் ரோலை கண்டுபிடித்தவர் யார் ?

9.செயற்கை மழையை உண்டாக்கியவர்கள் ?

10.மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுதப்பயிற்சி
   அளிக்கும் நாடு எது ?

பதில்கள்:
1.அன்னை தெரசா, 2.கெப்ளர், 3.ரஷ்யர்கள்,4.1860, 5.ஜனவரி 3, 6.கோமுகம், 7.எருசேலம் நாட்டில்,
8.லிக்னோஸ்,9.இர்வின் லாங்மூர்,10.ஜப்பான்.
--------------------------------------------
1.உலகில் அதிக அளவு சிலைவடிக்கப்பட்ட மனிதர் யார் ?
2.மில்லினியம் டோன் எங்குள்ளது ?
3.உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது ?
4.பைசா கோபுரம் எதனால் கட்டப்பட்டது ?
5.லில்லி பூக்களை உடைய நாடு எது ?
6.பகவத்கீதை எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது?
7.யானையின் கர்ப்பக்காலம் எத்தனை மாதம் ?
8.சோகத்தை குறிக்கும் ராகம் எது ?
9.நதிகள் இல்லாத நாடு எது ?
10.சாணத்திலிருந்து என்ன வாயு கிடைக்கிறது ?

பதில்கள்:
1.லெனின்,2.கிரீன்விச்,3.கரையான்,4.சலவைக்கல்,5.கனடா,
6.55 மொழிகளில்,7.22 மாதம்,8.முகாரி, 9.சவூதி அரேபியா,
10.மீத்தேன்.
------------------------------------------
1.இந்தியாவிலுள்ள பாட்னாவின் பழைய பெயர் என்ன ?
2.திமிங்கலத்தின் உடலின் எவ்வளவு இரத்தம் இருக்கும் ?
3.சீனாவின் புனித விலங்கு எது ?
4.மாம்பழத்தின் பிறப்பிடம் எது ?
5.ஜப்பானியரின் தேசிய உடையின் பெயர் என்ன ?
6.தங்கப்போர்வை நிலம் எது ?
7.தென் ஆப்பிரிக்காவுக்கு எத்தனை தலைநகர்கள் உண்டு ?
8.கிரிக்கெட் மட்டை எந்த மரத்தால் தயாரிக்கப்படுகிறது ?
9.போக்குவரத்து காவலர்களே இல்லாத நாடு எது ?
10.சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் யார் ?
பதில்கள்:
1.பாடலிபுத்திரம்,2.8 ஆயிரம் லிட்டர்,3.பன்றி,4.இந்தியா,
5.கிமோனா,6.ஆஸ்திரேலியா,7.மூன்று,8.வில்லோ மரம்,
9.நீயூசிலாந்து,10.பிட்மேன்.
------------------------------------------
1.திருக்குறளில் எந்த அதிகாரம் இரண்டு முறை வருகிறது ?
2.இந்தியாவின் தேசிய மரம் எது ?
3.முதல் தமிழ் பத்திரிகை எது ?
4.தமிழில் வெளிவந்த முதல் செய்தித்தாள் எது ?
5.இந்தியாவின் முதல் பெண்கவர்னர் யார் ?
6.தமிழகத்தின் முதல் பெண்கவர்னர் யார் ?
7.இந்தியாவில் விண்வெளி ஆய்வகம் எங்குள்ளது ?
8.இந்தியாவின் தேசிய காலண்டர் எது ?
9.PIN Code என்பதன் விரிவாக்கம் என்ன ?
10.இந்தியாவிற்கு வாஸ்கோடாகாம எந்த ஆண்டு வந்தார் ?

பதில்கள்:
1.குறிப்பறிதல்,2.ஆலமரம்,3.சிலோன் கெஜட்,4.சுதேசமித்திரன்,
5.சரோஜினி அரிச்சந்திரன்,6.பாத்திமா பீவி,7.பெங்களூர்,
8.சகாப்தம்,9.Postal Index Code,10.1498 -ல்.
---------------------------------------------
1.கபடி விளையாட்டு தோன்றிய இடம் எது ?
2.சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர் ?
3.உலகிலேயே அதிகமாக சினிமா தயாரிக்கும் நாடு எது ?
4.டென்மார்க் நாட்டின் தேசியப்பறவை எது ?
5.பிரிட்டனை அதிக காலம் ஆண்டவர் யார் ?
6.திட்டக்கமிஷனின் தலைவர் யார் ?
7.இந்தியக் கப்பல் தொழிற்சாலை எங்குள்ளது ?
8.ஐரோப்பிய கண்டத்தின் ஏழ்மையான நாடு எது ?
9.கணினி தயாரிப்பில் முதலிடத்தில் இருக்கும் நாடு எது ?
10.பிரதமரும் மந்திரிகளும் இல்லாத நாடு எது ?

பதில்கள்:
1.இந்தியா,2.வன்மீகம்,3.இந்தியா,4.வானம்பாடி,
5.விக்டோரியா மகாராணி,6.பிரதமர்,7.விசாகப்பட்டினம்,
8.அல்பேனியா,9.அமெரிக்கா,10.சுவிட்சர்லாந்து.
------------------------------------------------
1.முகம்மது நபிகள் பிறந்த இடம் எது ?
2.குறைந்த வயதில் பத்மஸ்ரீ விருது பெற்றவர் யார் ?
3.ஆக்டோபஸுக்கு எத்தனை இதயங்கள் ?
4.சர்வதேச உணவுப்பொருள் எது ?
5.காகமே இல்லாத நாடு எது ?
6.எரிமலை இல்லாத கண்டம் எது ?
7.கிறிஸ்துமஸ் மரத்துக்கு என்ன பெயர் ?
8.உடலில் இரத்தம் பாயாத பகுதி எது ?
9.தமிழ்நாட்டின் மரம் எது ?
10.முதன்முதலில் நினைவு அஞ்சல்தலை வெளியீட்ட நாடு எது?

பதில்கள்:
1.மெக்கா, 2.விஸ்வநாதன் ஆனந்த், 3.மூன்று,
4.முட்டைகோஸ்,5.நீயூசிலாந்து, 6.ஆஸ்திரேலியா,
7.SPRUCE, 8.கருவிழி,9.பனைமரம்,10. பெரு.
------------------------------------------
1.காந்திஜி உருவம் பொறித்த அஞ்சல் அட்டையை முதலில்
 வெளியீட்ட நாடு எது ?
2.தமிழ்நாட்டின் மலர் எது ?
3.உலகின் அகலமான நதி எது ?
4.உலகின் 17 பல்கலைகழங்களில் டாக்டர் பட்டம் பெற்ற
 ஒரே இந்தியர் யார் ?
5.திருப்பூர் குமரன் பிறந்த ஊர் எது ?
6.ஒளி செல்லும் வேகத்தை கண்டுபிடித்த விஞ்ஞானி யார் ? 
7.தக்காளியின் பிறப்பிடம் ?
8.மிகச்சிறிய கோள் எது ?
9.விவசாயம் முதலில் எங்கு தொடங்கப்பட்டது ?
10.குறைந்த நேரத்தில் சூரியனை சுற்றி வரும் கோள் எது ?

பதில்கள்:
1.போலந்து, 2.செங்காந்தள் மலர், 3.அமேசான்,
4.டாக்டர். இராதாகிருஷ்ணன்,5.சென்னிமலை, 6.ரோமர்,
7.அயர்லாந்து, 8.புளூட்டோ,9.தாய்லாந்து,10.மெர்குரி.
---------------------------------
1.ஒரு தேனீயால் எத்தனை முறை கொட்ட முடியும் ?
2.மின்தடையை கண்டுபிடித்தவர் யார் ?
3.முகப்பவுடரை கண்டுபிடித்த நாடு எது ?
4.கிரிக்கெட் விளையாட்டு எங்கு தோன்றியது ?
5.கனநீரை கண்டுபிடித்தவர் யார் ?
6.வெப்பநிலை மானியை கண்டுபிடித்தவர் யார் ? 
7.சட்டையை கண்டுபிடித்தவர்கள் யார் ?
8.முதல் இரும்பு கப்பலைச் செய்தவர் யார் ?
9.மெர்குரி விளக்குகள் எந்த ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது?
10.காந்த துருவங்களை கண்டுபிடித்தவர் யார் ?

பதில்கள்:
1.ஒரே ஒரு முறை, 2.ஓம், 3.இத்தாலி,4.இங்கிலாந்து,
5.யூரி, 6.சிக்ஸ், 7.எகிப்து நாட்டவர்கள்,
8.வில்கின்சன்,9.1912-ல்,10.ரோஸ்.
---------------------------------------
1.தீப்பெட்டியை கண்டுபிடித்தவர் யார் ?
2.தாய்லாந்தின் பழைய பெயர் என்ன ?
3.கழுதை பந்தையம் நடக்கும் இந்திய மாநிலம் எது ?
4.கலீலியோ எந்த ஆண்டு தெர்மா மீட்டரை கண்டுபிடித்தார் ?
5.மாரத்தான் ஓட்டப்பந்தையம் எத்தனை மைல் தூரத்தை
  கடப்பதாகும்?
6.ஆயிரங்கால் மண்டபம் எந்த ஆண்டு கட்டப்பட்டது ?
7.காற்று நகரம் என்று எதை அழைக்கிறோம் ?
8.ஒலிம்பிக் கொடி எந்த ஆண்டில் அறிமுகமானது ?
9.தடுக்கப்பட்ட நகரம் எது ?
10.நைஜீரியா நாட்டில் எத்தனை மொழிகள் உள்ளது ?

பதில்கள்:
1.லேண்ட் டார்ம், 2.சயாம், 3.ராஜஸ்தான்,4.1593,
5.26 மைல், 6.கி.பி.1560, 7.சிக்காகோ,
8.1920,9.லரசா,10.420 மொழிகள்.
--------------------------------
1.இந்தியாவின் மிக உயர்ந்த விருது என்ன ?
2.விண்வெளியில் வைரம் தயாரித்த முதல் நாடு எது ?
3.ஒமன் தலைநகரம் எது ?
4.பள்ளிக்கூடத்தை முதன் முதலில் உருவாக்கியவர்கள் யார் ?
5.சிப்பியில் முத்து விளைய எத்தனை ஆண்டுகள் ஆகும் ?
6.ஜப்பானின் சுதந்திர தினம் எந்த நாள் ?
7.ஜனவரி ஆண்டின் தொடக்கமாக எப்போது சேர்க்கப்பட்டது ?
8.இத்தாலியின் தலை நகர் எது ?
9.இந்தியாவின் முதல் சபாநாயகர் யார் ?
10.தெனிந்தியாவின் உயரமான சிகரம் எது ?

பதில்கள்:
1.பாரத ரத்னா, 2.ஜப்பான், 3.மஸ்கட்,4.ரோமானியர்கள்,
5.15 ஆண்டுகள், 6.ஏப்ரல் 29 -ம் தேதி, 7.1752-ல்,
8.ரோம்,9.ஜீ.வீ.மாவ்லங்கர்,10.ஆனை முடி.

TNPSC பொது அறிவு வினா-விடைகள்-I


TNPSC பொது அறிவு வினா-விடைகள்-I

1.கார் திருட்டில் முதலிடம் வகிக்கும் நாடு எது ?
2.சிரிக்க வைக்கும் வாயு எது ?
3.உலகின் முதல் எலெக்ட்ரானிக் கம்ப்யூட்டரின் பெயர் என்ன?
4.ரஷ்ய நாணயத்தின் பெயர் ?
5.உலகின் மிகப் பழமையான மியூசியம் எது ?
6.ஒரு குதிரைத்திறன் என்பதின் மதிப்பு என்ன ?
7.முதலில் விமானத்தை கடத்தியவர்கள் யார் ?
8.ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் கம்ப்யூட்டர் எது ?
9.தண்டியாத்திரை எதற்காக நடத்தப்பட்டது ?

10.தங்கத்தின் வேதியல் பெயர் என்ன ?
பதில்கள்:

1.அமெரிக்கா,2.நைட்ரஸ் ஆக்ஸைடு,3.இனியாக்,4.ரூபிள்,
5.ஆஸ்மோலியன், 6.746 வோல்ட்ஸ்,7.சீனர்கள் (1948),
8.எட்சாக்,9.உப்புவரியை எதிர்த்து,10.அயூரியம்.
----------------------------------------------
1.புகழ் பெற்ற லைலா மஜ்னு காதல் காவியத்தின் ஆசிரியர் யார்?
2.ஆகஸ்ட் 15 -ம் தேதி விடுதலை பெற்ற மற்றொரு நாடு எது ?
3.சீனாவின் முக்கிய பத்திரிகையின் பெயர் என்ன ?
4.பாரதீப் துறைமுகம் எந்த மாநிலத்தில் உள்ளது ?
5.மிகவும் வேகமாக ஓடக்கூடிய மிருகம் எது ?
6.இங்கிலாந்து ஒலிபரப்பு நிலையமான பி.பி.சி எப்போது
  ஆரம்பிகப்பட்டது ?
7.பழமையான உரோமின் காலண்டர் எத்தனை மாதங்களை
  கொண்டுள்ளது ?
8.கால்பந்தாட்டம் எப்போது ஒலிம்பிக்-ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது?
9.பாரதிதாசனின் எந்த நூலுக்கு சாகிதியஅகடமி விருது
  வழங்கப்பட்டது?
10.எக்ஸ்ரே -வை கண்டுபிடித்தவர் யார் ?
பதில்கள்:
1.நிஜாமி,2.தென்கொரியா,3.பீபிள்ஸ் டெய்லி,4.ஓரிஸ்ஸா,
5. சிறுத்தை : 70 மைல், 6.1922,7.10 மாதம்,
8.1900 ஆண்டு,9.பிசிராந்தையார்,10.W.C.ரான்ட்ஜன்.
-------------------------------------------
1.இஞ்சியில் எந்த பாகம் உணவிற்கு பயன்படுகிறது ?
2.கோழி குஞ்சு பொரிக்க எத்தனை நாட்கள் அடைகாக்கும் ?
3.தொழுநோய் ஏற்படுவதற்கு காரணமான கிருமி எது ?
4.பாரதியாரின் அரசியல் குரு யார் ?
5.யுவான் சுவாங் எத்தனை ஆண்டுகள் இந்தியாவில் தங்கி
  இருந்தார் ?
6.பேருந்து போக்குவரத்து முதலில் எந்த நாட்டில்
   தொடங்கப்பட்டது ?
7.பாரதரத்னா விருது முதலில் யாருக்கு வழங்கப்பட்டது ?
8.இந்தியாவில் உச்சநீதிமன்றத்தின் அமைவிடம் எது ?
9.நிதிக்கமிஷன் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை
  நியமிக்கப்படுகிறது ?
10.”அரசியல் “ என்ற நூலை எழுதியவர் யார் ?
பதில்கள்:
1.தண்டுக் கிழங்கு,2.21 நாட்கள்,3.பாக்டீரியா,4.பாலகங்காதர
  திலகர்,5.10 ஆண்டுகள், 6.பிரான்ஸ் -1819,7.ராஜாஜி,
8.டெல்லி,9.5 ஆண்டு,10.அரிஸ்டாட்டில்.
----------------------------------------
1.இந்தியாவின் உயரமான நீர்வீழ்ச்சி எது ?
2.நட்சத்திரங்களில் ஒளிமிக்கது எது ?
3.நோபல் பரிசை ஏற்படுத்தியவர் யார் ?
4.அணுவை பிளந்து காட்டியவர் ?
5.சுத்தமான இரத்தத்தை எடுத்துச் செல்பவை எவை ?
6.யூதர்களின் புனித நூல் எது ?

7.மனித மூளையை எத்தனை எலும்புகள் பாதுகாக்கின்றன?
8.மனித உடலின் மிக கடினமான பகுதி எது ?
9.சூரிய அடுப்பில் பயன்படுத்தப்படும் ஆடி எது ?
10.கண்ணீர் சுரப்பிக்கு என்ன பெயர் ?
பதில்கள்:
1.கெர் சோப்பா, 2.சிரியஸ், 3.ஆல்ஃபிரட் நோபல்,
4.ரூதர் போர்டு, 5.தமனிகள், 6.டோரா, 7.8 எலும்புகள்,
8.பல்,9.குழி ஆடி,10.லாச்ரிமல் கிளாண்டஸ்.

நோபல் பரிசு:

நோபல் பரிசு:

உலகின் மிக உயர்ந்த விருது. 1901 ஆம் ஆண்டு முதல் சமாதானம் உட்பட ஆறு துறைகளில் வழங்கப்படுகிறது. ஆண்டு தோறும் டிசம்பர் 10 ஆம் தேதி வழங்கப்படும்.

ரைட் லைவ்லி ஹுட் விருது:

மாற்று நோபல் பரிசாக போற்றப்படுகிறது. சுற்றுப்புறச் சூழல் ஆய்வுக்கும், பாதுகாப்புக்கும் பாடுபடும் விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படுவது. பரிசு ஒரு இலட்சம் டாலர்.


காந்தி அமைதிப் பரிசு:

காந்திய வழியில் வன்முறை இன்றி போராடி வெற்றி பெறும் சமாதானக் காவலர்களுக்கு இந்திய அரசு வழங்கும் சர்வதேச அமைதி விருது. காந்திஜியின் 125 ஆவது பிறந்த நாளான 1995 இல் நிறுவப்பட்ட விருது. பரிசுத் தொகை ரூ. ஒரு கோடி.


இந்திரா காந்தி அமைதி மற்றும் வளர்ச்சி விருது:

இந்திய அரசு வழங்கும் சர்வதேச சமாதான விருது.


சர்வதேச புரிதிறனுக்கான ஜவஹர்லால் நேரு விருது:

இந்தியன் கவுன்சில் ஃபார் கல்சுரல் ரிலேஷன்ஸ் வழங்கும் விருது இது. சர்வதேச அளவில் அனைத்து நாடுகளையும் நல்ல விதத்தில் புரிந்து கொண்டு சமாதானப் பணியில் ஈடுபடும் மனிதர்களுக்கு வழங்கப்படுகிறது. பரிசு ரூ. 15 இலட்சம்.

ஐ.நா. சுற்றுச்சூழல் விருது:

சர்வதேச அளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பாடுபடும் மனிதர்களுக்கு ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பு வழங்கும் விருது. பரிசு இரண்டு இலட்சம் டாலர்.


உல்ஃப் பரிசு (Wolf Prize): 

இசைப் பணிக்கான சர்வதேச விருது


உலக உணவு விருது: 

உலக மக்களுக்கு தரமான உணவு வகைகளைக் கண்டுபிடித்துத் தரும் மனிதர்களுக்கு பிலிப்பைன்ஸைச் சேர்ந்த சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனம் வழங்கும் விருது. பரிசு இரண்டு இலட்சம் டாலர்.


காமன்வெல்த் பிராந்திய எழுத்தாளர் விருது:

காமன்வெல்த் பகுதிகளைச் சேர்ந்த சிறந்த எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் விருது. பரிசு 1000 டாலர்.


ஒலிம்பிக் ஆர்டர் விருது:

ஒலிம்பிக் விளையாட்டு வளர்ச்சிக்கு தனிச் சிறப்புடன் பாடுபடுபவர்களுக்கு ஒலிம்பிக் கமிட்டி வழங்கும் விருது. இந்த விருதைப் பெற்ற ஒரே இந்தியர் முன்னாள் இந்திய ஒலிம்பிக் கமிட்டி தலைவர் பா. சிவந்தி ஆதித்தன்.


புலிட்சர் விருது:

சர்வதேச அளவில் பத்திரிகைத்துறையில் சிறந்த ரிப்போர்ட், புகைப்படம் போன்றவற்றுக்கு வழங்கப்படும் அமெரிக்க விருது.


ஒலாப் பால்மே பரிசு:

பொது நலச் சேவையில் ஈடுபடும் மனிதர்களுக்கு வழங்கப்படும் விருது. பரிசு 16 ஆயிரம் டாலர்.


டெம்பிள்டன் பரிசு:

சமயம் மற்றும் ஆன்மீகம் மூலம் சர்வதேச ஒற்றுமைக்குப் பாடுபடுபவர்களுக்கு வழங்கப்படுவது. பரிசு 1.2 மில்லியன் டாலர்.


யூதாண்ட் விருது:

நாடுகளுக்கிடையே நேச உறவுகளை வளர்க்கும் சிறந்த மனிதர்களுக்கு வழங்கப்படும் விருது. ஐ.நா. பொதுச் செயலாளராக பணியாற்றிய யூதாண்ட் நினைவாக வழங்கப்படுகிறது.


ஜெஸ்ஸி ஒவன்ஸ் விருது:

சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சர்வதேச விருது.


கலிங்கா விருது: 

விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்களின் தனிப்பட்ட சேவைக்கு யுனெஸ்கோ வழங்கும் விருது. பரிசு 1000 பவுண்ட்.


மக்சாஸே விருது:

ஆசியாவின் நோபல் என சிறப்பிக்கப்படுகிறது. பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரமோன் மக்சாஸேயின் நினைவாக வழங்கப்படுகிறது. சிறந்த குறிக்கோளுக்காக நேர்மையுடன் போராடிப் பாடுபடுபவர்களைத் தேர்ந்தெடுத்து கௌரவிப்பது இந்த விருதின் நோக்கமாகும். பரிசு 30,000 டாலர்.

மகாத்மா காந்தி உலக அமைதி விருது:

சமாதான வழியில் பாடுபடுபவர்களுக்கு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள காந்தி பவுண்டேஷன் வழங்கும் விருது. பரிசு ஒரு இலட்சம் டாலர்.


புக்கர் பரிசு:

சிறந்த இலக்கியத்திற்காக, பிரிட்டன் வழங்கும் பரிசு. 1997 இல் அருந்ததிராய் எனும் இந்தியப் பெண் எழுத்தாளர் இவ்விருதைப் பெற்றார்.

தமிழ் இலக்கிய வரலாற்று வினாவிடைகள்

தமிழ் இலக்கிய வரலாற்று வினாவிடைகள்

1.    குட்டிக் கந்தபுராணம் எனப்படுவது?
கந்தர் கலிவெண்பா

2.    குட்டித் தொல்காப்பியம் எனப்படுவது?
இலக்கண விளக்கம்

3.    குட்டித் திருவாசகம் எனப்படுவது?
திருக்கருவைப் பதிற்றுப் பத்தாந்தாதி

3.    சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கை எவ்வளவு? 96


4.    ஓரடியில் நீதியை உரைக்கும் நூல்கள் எவை?
ஆத்திசூடி, கொன்றைவேந்தன், வெற்றிவேற்கை, முதுமொழிக்காஞ்சி

5.    நறுந்தொகை என அழைக்கப்படும் நூல் எது?
வெற்றிவேற்கை

6.    எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும் - இவ்வரி இடம் பெறும் நூல் எது?
வெற்றிவேற்கை

7.    வெற்றிவேற்கையின் ஆசிரியர் யார்? வெற்றிவேற்கையை எவ்வாறு அவர் குறிப்பிடுகிறார்?
ஆதிவீரராம பாண்டியர்-நறுந்தொகை என குறிப்பிடுகிறார்

8.    வெற்றிவேற்கையில் இடம் பெறும் சிறப்பான வரிகள்கள் சில:
    “கல்விக்கு அழகு கசடற மொழிதல்”
    “செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல்”
    “அறிஞர்க்கு அழகு கற்றுணர்ந்து அடங்கல்”
    “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே”
    “நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை”
    “கொடுங்கோல் மன்னர் வாழும் நாட்டில் கடும்புலி வாழும் காடு நன்றே”
    “வழியே ஏகுக வழியே மீளுக”

9.    உலகநீதியின் ஆசிரியர் யார்?
உலகநாதர்

10.    உலகநீதியில் இடம் பெறும் சிறப்பான வரிகள்கள் சில:
    ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
    மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம்
    மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்
    கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்
    மூத்தோர் சொல் வார்த்தைதனை மறக்க வேண்டாம்

11.    நீதிநெறி விளக்கத்தின் ஆசிரியர் யார்?
    குமரகுருபரர்

12.    சிறுவயதிலேயே இறையருள் பெற்ற அருட்கவி யார்?
    குமரகுருபரர்

13.    காந்தியடிகளுக்கு மிகவும் பிடித்தமான தமிழ்ப்பாட்டு எது?
    நீதி நெறிவிளக்கத்தில் இடம் பெறும் “நீரில் குமிழி இளமை நிறைசெல்வம்.....” எனத்தொடங்கும்  பாடல். தமிழகம் வந்த போது காந்தியடிகள் இப்பாடலில் இடம் பெறும்

    “நீரில் எழுத்தாகும் யாக்கை” வரியை தன் கைப்பட எழுதி மோ.க.காந்தி என தமிழில் தன் கையொப்பம் இட்டு கொடுத்துள்ளார்.

14.    கற்பனைக் களஞ்சியம் எனப் போற்றப்படுபவர் யார்?
    சிவப்பிரகாசர்

15.    நன்னெறியின் ஆசிரியர் யார்?
    கற்பனைக் களஞ்சியம் சிவப்பிரகாசர்

16.    அறநெறிச்சாரத்தின் ஆசிரியர் யார்?
    முனைப்பாடியார் (சமணர்)

17.    அருட்கலச்செப்பு எனும் நூலைப் பின்பற்றி எழுதப்பட்ட நூல் எது?
    அறநெறிச்சாரம்

18.    “ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்” எனக்கூறியவர் யார்?
    நல்வழிப்பாடலில் ஒளவையார் கூறுகிறார்

19.    நட்டான் என்பதன் பொருள் என்ன?
    நண்பன்

20.    ஒளவையார் எழுதிய நூல்களில் குறிப்பிடத்தக்க நூல்கள் எவை?
    நீதிநூல்கள்: ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை (வாக்குண்டாம்) நல்வழி, கல்வியொழுக்கம்
    பக்தி  நூல் : விநாயகர் அகவல் 
    தத்துவ நூல் : ஒளவைக்குறள்

21.    ஆத்திசூடி என்பதன் பொருள் என்ன?
    ஆத்திப்பூமாலையை சூடிய சிவபெருமான்

22.    ஆத்திசூடியில் ஒளவையார் கூறிய அமுத மொழிகள் சில...
    அறம் செய விரும்பு, ஆறுவது சினம், மனம் தடுமாறேல்,  துன்பத்திற்கு இடங்கொடேல், நுண்மை நுகரேல் (சிற்றுண்டிகளை எப்போதும் சாப்பிட்டுக்கொண்டே இருக்காதே)

23.    கொன்றைவேந்தனில் ஒளவையார் கூறிய அமுத மொழிகள் சில...
    அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்,
    தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
    தாயின் சிறந்த ஒரு கோயிலும் இல்லை,
    திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு
    இல்லறம் அல்லது நல்லறம் அன்று,
    மூத்தோர் சொல்லும் வார்த்தை அமிர்தம்
    ஏவா மக்கள் மூவா மருந்து,
    உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு,
    பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்
    குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை

24.    வாக்குண்டாம் என அழைக்கப்படுவது?
    மூதுரை

25.    நெல்லுக்கு இறைத்தநீர் வாய்க்கால் வழி ஓடிப்
    புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - இவ்வரி இடம் நூல் எது?
    மூதுரை

26.    “பாலும் தெளித்தேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்”
    “சங்கத் தமிழ் மூன்றும்தா” எனக் கூறியவர்?
    ஒளவையார் (நல்வழி)

27.    “ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய் இருநாளுக்கு ஏல் என்றால் ஏலாய்” எனக்கூறியவர் யார்?
    நல்வழிப்பாடலில் ஒளவையார் கூறுகிறார்.

28.    கல்வியொழுக்கத்தின் ஆசிரியர் யார்?
    ஒளவையார்

29.    அஞ்சு வயதில் ஆதியை ஓது
    ஊமை என்பவர் ஓதாதவரே
    ஏழை யென்பவர் எழுத்தறியாவர்
    கண்ணில்லாதவன் கல்லாதவனே
    தீரக் கற்றவன் தேசிகன் ஆவான்

30.    கடல்கோளும் கரையானும் அழித்தது போக எஞ்சிய தமிழ்நூல்கள் எவை?
    சங்க நூல்கள் 

இந்திய அரசியலமைப்பு பற்றிய முக்கிய குறிப்புகள்

இந்திய அரசியலமைப்பு பற்றிய முக்கிய குறிப்புகள் | Indian Constitution in tamil

இந்திய அரசியலமைப்பு பற்றிய முக்கிய குறிப்புகள் - பகுதி 1

இந்தியா  இறையாண்மையுள்ள (Sovereign), சமதர்ம (Socialist), சமயச்சார்பற்ற  (Secular), மக்களாட்சிக் (Democratic)  குடியரசு (Republic).
இறையாண்மை என்பது இந்தியாவின் உள்நாட்டு, வெளிநாட்டு விஷயங்களில் பிற நாடுகள் தலையிடாவண்ணம் இந்தியா பெற்றுள்ள சுதந்திரமான ஆற்றலைக் குறிக்கும்.
ஏழை, பணக்காரர் வேறுபாடின்றி கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் அனைவரும் சமவாய்ப்பு பெறுவதே சமதர்மம்.
அரசு எந்த மதத்தையும் சார்ந்ததல்ல என்பதே சமயச்சார்பின்மை.
உலகின் மிகப் பெரிய எழுதப்பட்ட அரசமைப்பான இந்திய அரசமைப்பு 395 உறுப்புகளைக் (Articles ) கொண்டது.
முகவுரை (Preamble), 22 பகுதிகள் (Parts), 12 அட்டவணைகள் (Schedules) கொண்டது.
மாறிவரும் காலத்திற்கேற்ப இந்திய அரசமைப்பு 98 முறைகள் (2013 வரை) திருத்தப்பட்டுள்ளது.

இந்திய அரசமைப்பு வரலாறு

இந்தியர்களுக்கு அரசமைப்பு எழுதும் ஆற்றல் இல்லை என்ற லார்ட் பிர்ஹன்வுட்டின் சவாலுக்கு எதிராக, 1928-ல் நேருவின் அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்தியாவுக்கென தனி அரசியல் அமைப்புச் சட்டம் என்ற கருத்தை முன்வைத்தவர் எம்.என்.ராய்.
நேரு அறிக்கை (1928) மோதிலால் நேருவால் தயாரிக்கப்பட்டது.
நேரு அறிக்கையில் இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து கோரப்பட்டது.
டொமினியன் அந்தஸ்து என்பது பிரிட்டிஷ் மேலாதிக்கத்துக்கு உட்பட்ட சுயாட்சி.
ஜவஹர்லால் நேரு, நேதாஜி போன்றோர் முழு விடுதலை கோரலாம் என்றார்கள்.
முழு விடுதலைத் தீர்மானத்தை, 1929-ல் கொண்டு வரலாம் என்றார் காந்திஜி.
அமைச்சரவை தூதுக்குழு (1946) அறிவுரைப்படி இந்திய அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்டது.
அமைச்சரவை தூதுக்குழுவின் தலைவராக இருந்தவர் சர் பெத்திக் லாரன்ஸ்.
அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
டாக்டர் அம்பேத்கர் மகாராஷ்ட்ராவிலிருந்து அரசியல் நிர்ணய சபைக்குத் தேர்ந்தெடுக்கபட்டார்.
ரசியல் நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராக இருந்தவர் சச்சிதானந்த சின்ஹா.
அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் டிசம்பர் 9, 1946-ல் நடைபெற்றது.
அரசியல் நிர்ணய சபையின் நிரந்தரத் தலைவராக ராஜேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார் .
அரசியலமைப்புக்கான குறிக்கோள் தீர்மானம் ஜனவரி 22, 1947-ல் நேருவால் முன்மொழியப் பட்டது.
அரசமைப்புச் சட்ட வரைவுக்குழுத் தலைவர் டாக்டர் அம்பேத்கர்.
அரசமைப்புச் சட்டம் 1948 பிப்ரவரியில் தயாரானது.
அரசமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள் நவம்பர் 26, 1949.
அரசமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாளே இந்திய சட்ட தினம்.
அரசமைப்புச் சட்டம் செயல்படுத்தப்பட்ட நாள் ஜனவரி 26, 1950.
அரசமைப்புச் சட்டம் செயல்படுத்தப்பட்ட நாளே இந்திய குடியரசு தினம்.
அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்கள் 299 பேர்.
2 ஆண்டுகள் 11 மாதம் 18 நாட்கள் அரசியல் அமைப்பு சபை கூடி விவாதித்து அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கியது.
இந்திய அரசமைப்பு சட்டத்தை வடிவமைத்தவர் அம்பேத்கர் என்பது அனைவரும் அறிந்ததே. அரசமைப்புச் சட்டத்தை தன் கைப்பட முழுவதுமாக எழுதியவர் பிரேம் பெஹாரி நரேன் சக்ஸேனா. அரமைப்பு சட்டத்தை எழுதி முடிக்க ஆறு மாத காலம் ஆனது.
அரசமைப்புச் சட்ட கையெழுத்துப் பிரதிகள் புகைப்படமாக்கப்பட்டு டேராடூனில் உள்ள இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் வைக்கப்பட்டுள்ளது.
1950 ஜனவரி 26-ஆம் நாள் இந்திய குடியரசு மலர்ந்தபோது அரசியல் அமைப்பு சபை நாடாளுமன்றமாக மாறியது, அதன் தலைவர் இந்திய குடியரசுத்தலைவரானர் 50 ஆண்டுகளுக்குப் பின் எம்.என்.வெங்கடாசலய்யா தலைமையில் அரசியலமைப்புச் சட்ட செயல்பாடு பற்றி அறிய குழு அமைக்கப்பட்டது.